Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idhayathirkku Ilakkanamillai
Idhayathirkku Ilakkanamillai
Idhayathirkku Ilakkanamillai
Ebook402 pages4 hours

Idhayathirkku Ilakkanamillai

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

புரிதலுடன் கிடைக்கும் கணவன், மனைவி உறவு கடவுள் அளித்த வரம். அந்த வரத்தைப் போற்றிப் பேணி காப்பதும், அன்றி, பாழக்கிக் கொள்வதும் நம் கையில் தான் உள்ளது. ஈஸ்வர் - மான்சா அதைப் புரிந்து கொண்டனரா? விடையை அறிந்துகொள்ள இதயத்திற்கு இலக்கணமில்லையுடன் பயணியுங்கள்.

Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580148107496
Idhayathirkku Ilakkanamillai

Read more from Shenba

Related to Idhayathirkku Ilakkanamillai

Related ebooks

Reviews for Idhayathirkku Ilakkanamillai

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idhayathirkku Ilakkanamillai - Shenba

    https://www.pustaka.co.in

    இதயத்திற்கு இலக்கணமில்லை

    Idhayathirku Ilakkanamillai

    Author:

    ஷெண்பா

    Shenba

    For more books

    https://www.pustaka.co.in/home/author/shenba

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt.  Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved.  This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 52

    அத்தியாயம் 53

    அத்தியாயம் 54

    அத்தியாயம் 55

    அத்தியாயம் 56

    1

    எங்கெங்கு காணினும் பச்சைப் பசேலென்ற வளமையுடன் வளர்ந்து நின்ற காப்பித் தோட்டத்தின் முகட்டில் நின்றுகொண்டு, விண்ணைத்தொடும் முயற்சியில் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த மரங்கள், மலையை வருடிச் செ ல்லத் தாழ்ந்திருந்த மேகக்கூட்டங்கள், சில்லென்று உடலை நடுக்கிய குளிர்காற்று, ஆசையுடன் தழுவிச் செல்லும் பனி என அத்தனையையும் பார்க்கப் பார்க்க திகட்டவில்லை அவனுக்கு.

    பனிபடர்ந்து உயர்ந்து நிற்கும் இமயமலைத் தொடரைப் பார்த்தால், அதன் கம்பீரமான அழகு மனத்தைக் கொள்ளை கொள்ளும். ஆனால், எங்கு திரும்பினாலும் பசுமையைப் போர்த்திக்கொண்டிருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலையின் குளுமை, கண்ணை மட்டுமல்லாமல் மனத்தையும் கவர்ந்து விடும். இறைவனின் படைப்பில் அனைத்துமே அழகுதான் என எண்ணிக்கொண்டே, அத்தனை அழகையும் தன் கேமிராவில் படம்பிடித்துக் கொண்டிருந்தான் ஈஸ்வர்.

    தூரத்தில் தெரிந்த மலை உச்சியில் தவழ்ந்து வந்த வெண்மேகக்கூட்டத்தின் நடுவே பறந்து கொண்டிருந்த பறவைகளைத் தன் கேமிராவில் சிறைப்பிடிக்க, லென்சை ஸூம் செய்தவனின் கேமிராக் கண்களில் தானாக வந்து சிக்கினாள் அவள்.

    காமிராவிலிருந்து கண்ணை விலக்கியவனுக்கு வரிவடிவாகத் தெரிந்த அவளின் உருவம், லென்சின் உதவியுடன் தெளிவாகத் தெரிந்தது. ஏரிக்கரையின் அருகே, கரும்பச்சை நிற சல்வாரில், இழுத்துப் பின்னிய ஜடையுடன்... ஒரு சிற்பம் போல கைகட்டி, பாறையின் மீது சாய்ந்து நின்றிருந்தவளின் தளிர் மேனி குளிரில் லேசாக நடுங்கிக்கொண்டிருக்க, இரண்டு கைகளையும் சூடுபறக்கத் தேய்த்து, கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.

    ஆஹா ஓஹோ’ என ஆராதிக்கும்படியான பேரழகி இல்லை அவள். ஆனால் நிச்சயம் அழகிதான். கோவிலில் சுடர்விடும் தீபத்தின் ஒளியைப் போல, சொல்ல வொண்ணா அமைதியான அழகு. ஆனால், அந்த ஆராய்ச்சிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளியவனின் கலைக் கண்ணோட்டத்தில் அவளும் ஒரு ஓவியமாகத் தெரிய, அவளது ஒவ்வொரு அசைவையும் புகைப் படமாக்கிக் கொண்டிருந்தான் அவன்.

    சற்று நேரத்தில் அவனைக் கடந்து சென்று மறைந்த வெண்பனிக் கூட்டத்தோடு, அவளும் அவனது கண்களிலிருந்து மறைந்து போனாள். சுற்றும் முற்றும் பார்த்தவன் அவளைக் காணாததால் தோள்களைக் குலுக்கிக்கொண்டு, கேமிராவைத் தோளில் மாட்டிக்கொண்டு, தன் ஜீப்பை நோக்கி நடந்தான்.

    ‘ஹப்பா... என்ன குளுமை! ஒரு ‘ஷாலை’யாவது கொண்டு வந்திருக்கலாம்! ‘ குளிரில் நடுங்கிய உடலின் நடுக்கத்தை குறைத்துக்கொள்ள, மார்பின் குறுக்காகக் கைகளை இறுகக் கட்டிக்கொண்டவள், விரைவாக வந்து விடலாமென்று செயல்படுத்திய தன் மடத்தனத்தை நினைத்து மனத்திற்குள் புலம்பிக் கொண்டே, வீட்டை நோக்கி நடையை எட்டிப்போட்டாள். ஆனாலும் அவளது மனம் குடகு மலையின் அழகை வியந்துகொண்டே தான் இருந்தது.

    பின்வாசல் வழியாக வீட்டினுள் நுழைந்தவள், அங்கு நிலவிய இளஞ்சூட்டில் சற்று இலகுவானாள். ஆனால், அடுத்த நொடியே அவளது நாசியைத் தாக்கிய சிகரெட் நாற்றம் இருமலை வரவழைத்தது. மூக்கை மூடிக்கொண்டு இருமியபடியே ஹாலுக்குள் பிரவேசித்தவள், அங்கிருந்த புதியவனைக் கண்டதும் அப்படியே நின்றாள். தன்னைக் கண்ட தந்தையும் சற்றுத் தடுமாறுவது போல தோன்றியது அவளுக்கு.

    உதட்டில் பொருத்திய சிகரெட்டுடன், சிறிதுகூட லஜ்ஜையே இல்லாமல் தன்னை விழுங்குவதைப் போலப் பார்ப்பவனை, முதல் பார்வையிலேயே அவளுக்குப் பிடிக்காமல் போனது. கண்களைத் தவிர, மற்ற இடங்களில் மேய்ந்த அவனது பார்வையைக் கண்டவளின் முகம் அருவருப்பில் சுருங்கியது.

    மகளின் முகமாற்றத்தைக் கண்டுகொண்ட தேவராஜன், அந்தப் புதியவனிடம்,சார், இவள் தான் என் மகள் மானசா. லீவில் வந்திருக்கா என கடமைக்கு அறிமுகப்படுத்தினார்.

    ஓ! என அலட்சியமாகப் புகையை வெளியேற்றி யவன்,உங்களுக்கு இவ்வளவு அழகான பொண்ணு இருக்கான்னு சொல்லவேயில்லையே! என விகாரமாகச் சிரித்தான்.

    அ...து என இழுத்தார் தேவராஜன்.

    அவனின் பார்வையும், பேச்சும் பிடிக்காமல் நிதானமாக,மன்னிக்கணும். உங்க வீட்டில் நீங்க இஷ்டப்படி இருந்துக்கலாம்; ஆனால் அடுத்தவங்க வீட்டுக்குப் போகும்போது, இப்படி சிகரெட் பிடிக்காதீங்க! எனப் பட்டெனச் சொல்ல,மானசா, நீ உள்ளே போ! என்ற தேவராஜனின் குரல் பதட்டத்துடன் வந்தது.

    பரவாயில்லை! என கை நீட்டி அவரைத் தடுத்தவன்,கொஞ்சம் வெந்நீர் கிடைக்குமா? என அவளிடம் கேட்க,ம்...! என்றபடி முறைப்புடன் சமையலறைக்குச் சென்றாள்.

    அவள் சென்றதும்,தப்பா நினைச்சிக்காதீங்க சார்! அவள் கொஞ்சம் பட்டுபட்டுன்னு பேசற டைப்.

    ஓ! இண்ட்ரஸ்ட்டிங் என வியந்து கூறியவன்,ம்ம், ஃபைல் கேட்டேனே தேவராஜன் என்றான்.

    இதோ கொண்டு வரேன் சார் என்றவர் மாடிக்கு விரைந்தார்.

    அவரது தலை மறைந்ததும் சமையலறைக் குள் நுழைந்து மானசாவை நெருங்க, அதற்கு முன்பே வந்த சிகரெட் நாற்றம் அவன் வருவதை எச்சரிக்க, சட்டென்று விலகி நின்று அவனை முறைத்தாள்.

    அலட்சியமாகச் சிகரெட்டைப் பற்களில் கடித்தபடி,என்னை உனக்குப் பிடிக்கலை இல்ல? ஆனால் எனக்கு உன்னை ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கே! என்ன செய்றது? என்றபடி அவளை பார்வையால் அளவெடுத்தான். அவளோ சற்றும் அசராமல், நேருக்கு நேராக அவனைப் பார்த்தாள்.

    ம், பயந்து ஓடுவேன்னு நினைத்தேன்; பரவா யில்லை, தைரியமாக நிக்கிற! இந்தத் திமிர் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்தத் திமிரையும், அழகையும் எப்படிக் கையாளணும்னு எனக்கு நல்லாத் தெரியும்! என்றவன் மேலும் என்னென்ன பேசியிருப்பானோ? அதற்குள் தேவராஜன் ஹாலில் அவனைக் காணாமல்,சார்...! என்று தேடிக்கொண்டு கலவரத்துடன் சமையலறை வாசலுக்கே வந்துவிட்டார்.

    அவரைப் பார்த்தவன் சிரித்துக்கொண்டே,உங்க மகளோடு பேசிக் கொண்டிருந்தேன் தேவராஜன், ரொம்ப டென்ஷனாகாதீங்க! என்றபடி அவரது தோளில் கைபோட்டு அணைத்தபடி,உங்க பொண்ணு ரொம்ப அழகா இருக்கா! என்று சொல்லிவிட்டுச் செல்ல, தகிக்கும் விழிகளுடன் சமையலறை வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் மானசா.

    அவனை வழியனுப்பிவிட்டு உள்ளே வந்தவர், மகளின் முகத்தைத் தயக்கத்துடன் பார்த்தார்.சார் எங்க சின்ன முதலாளிம்மா அவர் என்று தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டு, அங்கிருந்து நகர முயன்றவரை தடுத்தவள்,

    அப்பா! அவர் உங்க முதலாளியாக இருந்தாலும் சரி, முதலாளியோட மகனாக இருந்தாலும் சரி, இப்படிப்பட்ட ஆட்களை வீட்டுக்கெல்லாம் கூட்டிக்கொண்டு வராதீங்க! என்ற கோபமாகச் சொல்லிவிட்டுச் செல்லும் மகளையே பார்த்துக் கொண்டு நின்றார்.

    தன்னறைக்குச் சென்றவளுக்கு ஏனோ தன் தந்தையின் தடுமாற்றம் புதிதாக, புரியாத புதிராக இருந்தது. அதே சமயம் மனத்திற்குள் ஒரு இனம் புரியாத பயமும் எழுந்தது. அவளது பார்வை சுவற்றில் மாட்டியிருந்த அன்னையின் புகைப்படத்தில் பதிந்தது. உதட்டில் உறைந்த புன்னகையுடன், நிர்மலமான முகத்துடன் தன்னைப் பார்த்துச் சிரித்த அன்னையின் புகைப்படத்தில் முகத்தை வைத்துச் சாய்ந்து கொண்டாள்.

    ‘அம்மா! எல்லா நேரத்திலும் நீங்க தான் என் கூடவே துணையாக இருக்கீங்க. இங்கே நடப்பது எல்லாமே, எனக்கு ஏனோ பயத்தைத் தான் கொடுக்குது. ஏன்னு எனக்குச் சொல்லத் தெரியலை! ஆனா... எனக்கு அப்பா வேணும்மா! ‘ என மௌனமாக வேண்டிக் கொண்டவளின் கண்களிலிருந்து கண்ணீர் தாரையாக வழிந்தது.

    தெய்வமாகிவிட்ட அந்தத் தாயின் கனிவான பார்வை, ‘நான் உன்னோடு இருக்கிறேன் மானும்மா! ‘ எனச் சொல்லாமல் சொல்வது போல இருந்தது.

    ***

    மடிக்கேரியிலிருந்து, தலைக் காவிரிக்குச் செல்லும் வழியிலிருந்த ‘கிரீன் வேலி எஸ்டேட் அண்ட் ஹோம் ஸ்டே’ (எணூஞுஞுண ஙச்டூடூதூ உண்tச்tஞு - ஏணிட்ஞு ண்tச்தூ) எனப் பெயர் பொறிக்கப்பட்டிருந்த, அழகிய சிறிய பங்களாவின் முன்னே சர்ரென வந்து நின்றது ஜீப். டிரைவர் சீட்டிலிருந்து துள்ளிக் குதித்து இறங்கிய ஈஸ்வர், வீட்டின் பக்கவாட்டிலிருந்த, ‘போர்ட்டிகோ’வில் நின்றிருந்த காரைக் கண்டதும் இன்னும் உற்சாகமானான்.

    இரண்டிரண்டு படிகளாகக் கடந்து ஏறியவன்,அம்மா...! என பாசத்துடன் அழைத்தபடி வீட்டினுள் நுழைந்தான்.

    சோஃபாவில் அமர்ந்திருந்த சௌந்தரபாண்டியன், மகனின் குரலைக் கேட்டதும், படித்துக் கொண்டிருந்த பேப்பரிலிருந்து தலையை உயர்த்தி,வாய்யா! என்றவர், விஜயா! உன்பிள்ள வந்தாச்சு பாரு!" என்றார் உற்சாகத்துடன்.

    ஐயா! என மரியாதையுடன் தன் தந்தையின் கரத்தைப் பற்றிக்கொண்டவனின் தோளில் தட்டி,என்னய்யா, எப்படி இருக்க? என்று கம்பீரக் குரலில் விசாரித்தார்.

    எனக்கென்னங்கையா! நல்லா இருக்கேன். சொல்லியிருந்தா நானே மைசூர் வந்திருப்பேனே! என்றான் பணிவுடன்.

    ஏன்டா தம்பி, பெத்த புள்ளையைப் பாக்க, நாங்க வரக்கூடாதா? என அமர்த்தலாகக் கேட்க, புன்னகை யுடன் தலை கோதினான் ஈஸ்வர்.

    அடடடடா! வந்ததும் ஆரம்பிச்சிட்டீங்களா உங்க வம்பை என்றபடி வந்த விஜயா ஆதூரத்துடன் மகனைப் பார்த்தவர்,இளைச்சிட்டியே கண்ணு என ஆசையுடன் மகனைத் தடவிப் பார்த்துக் கொண்டார்.

    பத்தே நாளில் உன் புள்ளை இளைச்சிட்டானாக்கும் என கிண்டலாக சௌந்தரபாண்டியன் முணுமுணுக்க, ஈஸ்வர் சிரிப்புடன் அன்னையைப் பார்த்தான்.

    என்னம்மா எப்படியிருக்கீங்க? சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கீங்க என்றபடி அன்னை அமர்ந்த சோஃபாவின் கைப்பிடியில் அமர்ந்து கொண்டான்.

    எனக்கென்னப்பா... மனசுக்கு நிறைவா வாழ்க்கை, வீட்டுக்கு கட்டுப்பட்ட பிள்ள, நிம்மதியா இருக்கேன். என்னவோ உன்னை உடனே பார்க்கணும்னு இருந்தது அதான் கிளம்பி வந்துட்டோம். ஏம்ப்பா! இருக்குற ஓய்வு நாள்ல விச்ராந்தியா கொஞ்சம் படுத்து கெடக்கக் கூடாதா? இன்னைக்கும் காமிராவும் கையுமா படம் எடுக்க அலைஞ்சியா? என்றபடி மகனின் தோளில் தொங்கிக் கொண்டிருந்த காமிராவை வாங்கிக்கொண்டார்.

    உனக்கு பிடிச்ச டிஃபன் செய்து வச்சிருக்கேன். ஆறிப்போறதுக்குள்ள நீ கைகால் கழுவிட்டு சாப்பிடவா என்றதும்,

    இதோ பத்தே நிமிஷம்... என்றவன் மாடியிலிருந்த தன் அறைக்கு ஓடினான். மகனை வாஞ்சையுடன் தொடர்ந்தது அந்த அன்புத் தாயின் பார்வை.

    பேச்சும், சிரிப்புமாக மாலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு சௌந்தரபாண்டியன், அலுவலக அறையில் அமர்ந்து மகனிடம் பேசிக்கொண்டிருக்க, விஜயா, இரவு உணவு தயாரிக்க ஆயத்தமானார்.

    இரவு உணவிற்காக டைனிங் ஹாலில் வந்தமர்ந்த பின்னும்,ஏன்டா ஈஸ்வரா! நம்ம எஸ்டேட் புள்ளைங்க படிக்க பள்ளிக்கூடம் கட்டணும்னு எஞ்சினியர்கிட்ட பிளான் போடச் சொன்னியே அது முடிஞ்சிதா? என்று கேட்டார் சௌந்தரபாண்டியன்.

    முடியற கட்டத்துல இருக்குங்கையா. மாடல் லாப்டாப்பில் இருக்கு இதோ கொண்டு வரேன் என எழுந்தவனின் தோளைப் பற்றி அமரவைத்தார் விஜயா.

    சாப்பிடும் போதும் வேலையைப் பத்திதான் பேசணுமா? என சலித்துக்கொண்டவர்,ரெண்டு பேரும் சாப்பிட தவிர வேற எதுக்கும் வாயை திறக்கக்கூடாது. திறந்தா தெரியும் சேதி! என அதட்டினார்.

    சாப்பிடவாவது வாயைத் திறக்கலாம்னு சொன்னியே சந்தோஷம் என்ற கணவரை, ஹும்...! என அசிரத்தையுடன் பார்த்தார்.

    மகனின் தட்டிலிருந்த மூன்றாவது தோசையும் காலியாகிவிட, ஹாட்பாக்கிலிருந்து மேலும் இரண்டு தோசைகளை அவனது தட்டில் அடுக்கினார்.

    ப்ளீஸ் போதும்மா. இப்போவே முக்கால் வயிறு நிரம்பி போச்சு. இதையும் சேர்த்து சாப்பிட்டால் கூட ரெண்டு ரௌண்ட் ஜாகிங் போகணும்.

    நீ தோளில் மாட்டிக்கிட்டு அலையற கேமராவைத் தூக்கவாவது தெம்பு வேண்டாமா? சாப்பிடு என கட்டளையிடும் குரலில் சொன்னவர், புதினாத் துவையலையும், காரச் சட்டினியையும் மகனின் தட்டில் அள்ளி வைத்தார்.

    கம்பீரத்துடன் அதிகாரமாக ஒலித்த அந்தக் குரலின் பின்னணியிலிருக்கும் தாய்ப்பாசத்தை புரிந்துக்கொண்டு புன்னகையுடன் உண்ணத் தொடங்கியவனுக்கு, பார்த்துப் பார்த்து பரிமாறினார்.

    ஹும்! என பொய்யாய் பெருமூச்சுவிட்ட சௌந்தரபாண்டியன்,சொல்றதை கேட்டுச் சாப்பிடுடா மகனே. இதெல்லாம் அம்மா கையால சாப்பிடுற வரைக்கும்தான். கல்யாணமாகி பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டா கொஞ்ச நாளைக்குத் தான் இந்த சவரட்சனையெல்லாம் நடக்கும். நாளைக்கே பிள்ளையோ, பொண்ணோ வந்துட்டா புருஷனெல்லாம் ரெண்டாம்பட்சம் தான். அளவு கிண்ணத்தில் சாப்பாடு, அளந்து ஊத்துற சாம்பார்ன்னு ஆகிடும் நிலைமை! என்றவர் விடாமல்என்னை மாதிரியே என சோகமாகச் சொல்ல, ஈஸ்வர் சிரித்துக் கொண்டான்.

    இப்போ என்னவாம் உங்க அப்பாவுக்கு! வாரமெல்லாம் அவருக்குத் தானே செய்யறேன். என்னைக்கோ ஒரு நாளைக்கு என் பிள்ளைக்கு பொங்கிப் போட்டு பரிமாறுவது அவருக்கு கண்ணை உறுத்துதாமா? எப்போ பாரு ஏதாவது சொல்லிகிட்டு... வளர்ற பிள்ளையை அப்படியே வச்ச கண்ணு வாங்காம பார்க்கறது, சாப்பிட எதாவது சொல்றதுன்னு விவஸ்தைக் கெட்ட மனுஷன் என கடுகடுத்தார்.

    இதப்பாருடா...! இவங்க பார்த்தா அது பாசமாம். அதுவே நாங்க பார்த்தா கண்ணு பட்டுடுமாம். நல்லா இருக்கே உங்க வீட்டு நியாயம். அதோட வளர்ற புள்ளைன்னு வெளியே போய் சொல்லிவைக்காதே. அவன் இந்த எஸ்டேட்டுக்கே முதலாளி. அவனுக்குத் தான் எல்லாம் தெரியும்னு கேட்டுக் கேட்டுச் செய்றவங்க எல்லாம், இவன் குழந்தை புள்ளைன்னு நினைச்சிக்கப் போறாங்க! எனச் சிரிக்க, விஜயா அசராமல் ஒரு பார்வை பார்த்துவிட்டு,க்கும்... என்று தோளில் இடித்துக் கொண்டு சென்றார்.

    மகனிடம் திரும்பியவர்,உங்க அம்மாவுக்கு கொழுப்ப பார்த்தியா. வூட்டுக்காரன்னு கொஞ்சமாவது மரியாதை இருக்குதான்னு. புருஷனுக்கு அடங்காதவள மருமக வந்து அடக்கப்போறா பாரு என்றார்.

    அச்சச்சோ! ஐயா, என்னை ஏன் இந்த வம்பில் மாட்டி விடுறீங்க? என அலறினான்.

    பார்த்துக்கிட்டே இரு... மருமக வந்துதான் உங்க அம்மாவுக்கு மூக்கணாங்கயிறு போடப்போறா. அப்போ இந்தக் கிழவி இப்படித் துள்ளுறாளா! இல்லை... குழையறாளான்னு! பார்க்கலாம்... என மகனின் காதில் கிசுகிசுத்தார்.

    அப்படியெல்லாம் நடக்கவே போறதில்லை. எங்க அம்மாவை நல்லா புரிஞ்சிகிட்ட பொண்ணுதான் இந்த வீட்டு மருமக என்றவன் கை கழுவ எழுந்துச் சென்றான்.

    நீங்க இன்னுமா சாப்பிட்டு முடிக்கலை? என சமையலறையிலிருந்து விஜயாவின் குரல் கேட்க,முடிஞ்சிது விஜயா, கை அலம்பப் போறேன்... என பதில் கொடுத்த தந்தையைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

    2

    மனத்திலிருந்த குழப்பத்தினாலோ இல்லை புதிய இடமாக இருந்ததாலோ என்னவோ, மானசாவிற்கு அதிகாலையிலேயே விழிப்பு தட்டிவிட்டது. குளிர் வாட்டி எடுத்தது. கட்டிலில் கவிழ்ந்து படுத்தவள், கண்ணாடி ஜன்னலின் திரைச்சீலையை சற்று ஒதுக்கிவிட்டுப் பார்த்தாள். அந்தகாரமான இருட்டில் நிழலாகத் தெரிந்த மலைமுகடுகளும், காற்றில் அசைந்த மரங்களும் கூட சற்று பயத்தைக் கொடுத்தது. சுவற்றுக் கோழி பின்னணி இசையாக ‘க்ரிட் க்ரிட்’ என சப்தமெழுப்பி, அவளது பயத்தைக் கூட்டியது.

    கண்களை மூடியவளுக்கு உறக்கம் வரவில்லை. எழுந்து அன்னையின் புகைப்படத்தை வணங்கியவள், ஸ்வெட்டரை எடுத்து போட்டுக் கொண்டு, ரஜாயை மடித்து வைத்தாள். மரப்பலகையால் ஆன படிக்கட்டில் ஓசைவராமல் மெல்ல இறங்கி, சமையலறைக்குள் நுழைந்தாள்.

    தண்ணீரைக் கொதிக்கவைத்து, ஃபில்டரில் காஃபித் தூளைப் போட்டபின் அதில், கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றினாள். அராபிக்கா காஃபியின் வாசம், அந்த அதிகாலை நேரக் குளிருக்குச் சுகமாக இருக்க, ஆழ்ந்து அதன் மணத்தை நுகர்ந்தாள். அதற்குள், அடுப்பில் வைத்த பால் கொதித்துவிட, சர்க்கரை கலந்து நுரை பொங்க ஆற்றி, தேவையான அளவு டிகாஷனைக் கலந்து எடுத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றாள்.

    ஜன்னல் திரைச்சீலைகளை விலக்கிவிட்டு கட்டிலில் அமர்ந்தவள் வெளியே பார்த்தாள். மெல்ல பொழுது புலர தொடங்கியதன் அறிகுறியாக மிதமான வெளிச்சம் பரவத் தொடங்கியது. இரவின் கருமையில் அச்சுறுத்திய மரங்களெல்லாம், ஆதவனின் ஆதிக்கத்தால், பசுமைக் காட்சிகளாக கண்முன்னே விரிந்தன. அதிசயத்துடன் பார்த்தவளின் உடலில் உற்சாகம் தொற்றிக்கொண்டது. வேகமாக எழுந்து பால்கனி கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். ஆகாயத்திலிருந்து இறங்கிவந்த மேகங்கள், அவளை ஆசையுடன் தழுவிச் சென்றன.

    ‘இத்தனை அற்புதமான இடத்தையும், அனுபவத் தையும் இத்தனை ஆண்டுகள் இழந்திருக்கிறோம். எல்லாம் அப்பாவால் தான்’ என்று சிறு கோபம்கூட தந்தையின் மீது எழுந்தது. கூடவே, ‘எல்லாம் எனக்காகத் தானே! அம்மா இருந்திருந்தால் நிச்சயம் அப்பா இப்படி விட்டிருப்பாரா? அம்மா இறந்து பதினேழு வருடங்களாகியும் எனக்காகத் தானே அவர் வேறு கல்யாணம் செய்து கொள்ளவில்லை. என் செல்ல அப்பா! ‘ என தந்தையைச் செல்லமாக கொஞ்சிக் கொண்டாள்.

    சட்டென முன்தினம் நடந்ததெல்லாம் நினைவுக்கு வர மனத்தில் லேசாக வருத்தமும் உண்டானது. ‘சின்ன முதலாளியாம் சின்ன முதலாளி! அவன் மீசையும், குறுந்தாடியும். ஆடுமாதிரி’ என நினைத்துக்கொண்டே திரும்பியவள், வீட்டின் பக்கவாட்டிலிருந்த வேலிப் படலைத் தாண்டி தழைகளை மேய்ந்துக் கொண்டிருந்த பழுப்புவண்ண ஆடு கண்ணில்பட்டது. இரண்டையும் இணைத்துப் பார்த்து சிரிசிரியென சிரித்தாள்.

    அம்மாடி மானசா...! என உரக்க ஒலித்த தந்தையின் குரலைக் கேட்டதும்,வரேன்ப்பா... என்றபடி கீழே இறங்கிச் சென்றாள்.

    வேகமாக இறங்கி வந்த மகளின் முகத்தில் தெரிந்த சிரிப்பைக் கண்டதும், அந்தப் புன்னகை அவரையும் தொற்றிக் கொண்டது.என்னம்மா காலையிலேயே இவ்வளவு சந்தோஷம், உன் முகத்தில்?

    அதுவாப்பா! எல்லாம் உங்க சின்ன முதலாளியை நினைத்துத் தான் என்றபடி சமையலறைக்குள் நுழைந்தவள், பாலை அடுப்பில் ஏற்றினாள்.

    தேவராஜனின் முகம் சட்டென்று மாறியது. அவனை ஆட்டுடன் ஒப்பிட்டு திட்டிக் கொண்டிருந்ததையும், அந்த நேரம் உண்மையாகவே ஆடு ஒன்றைக் கண்டதையும் சொல்லியபடி, காஃபியைக் கலந்து தந்தையிடம் கொடுத்தாள்.

    புன்னகைத்தபடி மகளிடமிருந்து காஃபியை வாங்கிக் கொண்டாலும், தந்தையின் முகமாறுதலை கவனிக்கத் தவறவில்லை.

    அன்றைய ஆங்கில நாளிதழின் தலையங்கத்தை மேலோட்டமாக படித்துவிட்டு தந்தையிடம் கொடுத்தவள், சப்ளிமெண்ட்ரியை எடுத்துக்கொண்டு வராண்டா ஊஞ்சலில் அமர்ந்து, படிக்க ஆரம்பித்தாள். சற்று நேரத்தில் வழக்கமான வேலைகள் துவங்கிவிட, அதில் மூழ்கிப் போனாள். அலுவலகத்திற்கு கிளம்பிய தந்தைக்கு காலை உணவு தயாரித்து கொடுத்ததோடு, மதிய உணவையும் சேர்த்து கட்டிக் கொடுத்தாள்.

    தனியா எங்கேயும் போகாதேம்மா; வீட்டிலேயே இரு. நான் வர எட்டு மணியாகிடும். வீட்டைப் பூட்டிக்கோ பத்திரம் என பலமுறை திரும்ப திரும்ப சொல்லிவிட்டு, அலுவலகம் கிளம்பினார். வீட்டை ஒழுங்குபடுத்திவிட்டு, தன் மொபைல் போனை எடுத்துக்கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு பக்கத்து வீட்டிற்குச் சென்றாள்.

    ஊரிலிருந்து வந்த மறுநாளே தந்தை இல்லாத நேரமாகப் பார்த்து அவர்களிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டிருந்ததாள். தனக்குத் தெரிந்த அறைகுறை கன்னடத்திலும், நன்கு தெரிந்த ஆங்கிலத்திலும், அவர்களிடம் பழக அவளுக்குச் சற்று எளிதாக இருந்தது. ஊரைச் சுற்றிப் பார்க்க சைக்கிள் தான் வசதி, வேண்டுமானால் தங்கள் மகளின் சைக்கிளை எடுத்துக்கொண்டு செல்லச் சொல்லியிருந்ததால் அதை வாங்கச் சென்றாள்.

    அருகில் இருக்கும் இடங்களைக் கேட்டுக் கொண்டு, சைக்கிளுடன் புறப்பட்டாள். சாலை குறுகியும், சற்று பழுதாகியும் கரடுமுரடாக இருந்தது. ‘அவ்வப்போது நேரம் காலம் இல்லாமல் பெய்யும் மழையும், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவதால் நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி சென்று வருவதாலும் பாதையை பராமரிக்க முடியவில்லையோ’ என எண்ணிக்கொண்டே மெதுவாக சென்றாள்.

    பத்துநிமிட சாலைப் பயணத்திற்குப் பிறகு, தெரிந்த குறுகிய பாதை வழியாக நுழைந்தாள். சுற்றிலும் பரவியிருந்த காஃபி செடிகளில் கொத்து கொத்தாக பச்சை, லேசான இளம் சிவப்பு என காஃபிக் கொட்டைகள் செழித்து வளர்ந்திருந்தன. ஏகாந்தத்தையும், இயற்கை யையும் ரசித்தபடி சென்றவளின் நாசியைத் திடீரென மசாலாவின் மணம் தாக்கியது.

    சுற்றும் முற்றும் பார்த்தவள், ஒரு மரத்தருகே வந்து நின்றாள். சுண்டைக்காய் அளவு, பச்சை வண்ணத்தில் கொத்தாக தொங்கிய காய் ஒன்றைப் பறித்து உறித்தவள்,ஹய்! லவங்கம்... அதான் மசாலா வாசமா! என உற்சாகமாக குரல் கொடுத்தபடி விரல்களை முகர்ந்தாள். சுத்தமான லவங்கத்தின் வாசம் ஒருவித பூரிப்பைக் கொடுத்தது.

    சைக்கிளைத் தள்ளியபடியே சென்றவள், சலசலவென சப்தம் வர, சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு, சப்தம் வந்த திசையை நோக்கி நடந்தாள். சிறு பூந்தோட்டம் ஒன்றும், அதையடுத்து அழகிய சிற்றோடையும் இருந்தது. காற்றில் அசைந்தாடிய பூக்கள், அவளைத் தலையசைத்து அழைப்பது போலிருந்தது. கதிரவனின் ஆதிக்கம் அங்கே இல்லாததால், முன்னிரவில் வந்து சென்ற பனித்துளியின் மிச்சம் இன்னும் இருந்தது.

    பூக்களைச் சுற்றி ரீங்கரமிட்டுத் திரியும் வண்டுகளும், வண்ணத்துப்பூச்சிகளும், சலசலக்கும் சிற்றோடையின் அழகும் சற்று நேரம் அவளை செயலிழக்கச் செய்தது. மெல்ல தன்னுணர்வுக்கு வந்தவள், துள்ளிக் குதித்து சிறுகுழந்தை போல ஆர்ப்பரித்தாள். செருப்பை கழற்றி விட்டு ஓடை நீரில் கால் பதித்தாள். உள்ளங்காலில் பரவிய குளிர், உச்சந்தலை வழியாக வெப்பம் வெளியேருவது அப்பட்டமாகத் தெரிந்தது.

    உடலில் பரவிய குளிர்ச்சியில் சிலிர்த்துப் போனாள். அடியில் பாறைகள் சில இடங்களில் வழுக்கியதைப் பொருட்படுத்தாமல், முழங்கால் அளவு நீரில் நடந்து, ஓடையின் நடுவில் சென்று நின்றாள். இரு கைகளையும் அகல விரித்து, கண்களை மூடிக்கொண்டு,

    "சிலுசிலுவென குளிர் அடிக்குது அடிக்குது

    சிறுஅரும்புகள் மணம் வெடிக்குது வெடிக்குது

    மரம்விட்டு வரம் வந்து மரங்கொத்திப் பறவைகள்

    மனம்விட்டுச் சிரிக்கிறதே..."

    என சப்தமாக பாடிவிட்டு சிரிப்போடு கண்களைத் திறந்தவள், தனக்கு நேரெதிரே கரையில் அடர்ந்த செடிகளுக்கிடையிலிருந்து, கழுத்தில் காமெராவுடன் வந்தவனைக் கண்டதும், திகைத்துப் போனாள்.

    அவனோ! புன்னகையுடன் வியப்பும் ஒருசேர தன்னைப் பார்ப்பதைக் கண்டதும் என்னவோ போலாகி விட்டது. மெல்ல ஒவ்வொரு அடியாக பின்னோக்கி நடந்தவள், கவனமின்றி வழுக்குப் பாறை மீது கால்பதிக்க, சர்ரென வழுக்கித் தடுமாறி நீரில் விழுந்தாள். வலதுகை முட்டி பாறையில் சிராய்த்துக்கொள்ள,ஆ! அப்பா என்று வலிதாங்காமல் கத்தினாள்.

    ஓ! வெரி சாரி மேடம்... என அவசரமாக தண்ணீரில் இறங்கியவன் வலியுடன்

    Enjoying the preview?
    Page 1 of 1