Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sakiye Sagiye
Sakiye Sagiye
Sakiye Sagiye
Ebook607 pages4 hours

Sakiye Sagiye

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

வாழ்க்கை என்பது வரம்! அதை வளமாக்கிக் கொள்வதும், சிறுமைப்படுத்திக் கொள்வதும் நம் கையில்தான் இருக்கிறது. குறிப்பாக, உறவுகளைக் கட்டிக் காப்பதில் பெண்களின் பங்கே முதன்மையானது. இல்லற வாழ்கையின் எந்தச் சூழ்நிலையிலும் பொறுமையும், நிதானமுமே கைகொடுக்கும். வலிமையான மனப்பிணைப்பு மட்டுமே ஒருவர், மற்றவரைப் புரிந்து கொள்ள வழிவகுக்கும்.

பெண் என்பவள் மனைவியாக மட்டுமல்ல, ஒரு நல்ல தோழியாகவும் இருக்கவேண்டும். அதை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதே “சகியே! சஹியே!”

Languageதமிழ்
Release dateAug 20, 2022
ISBN6580148108790
Sakiye Sagiye

Read more from Shenba

Related to Sakiye Sagiye

Related ebooks

Reviews for Sakiye Sagiye

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sakiye Sagiye - Shenba

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சகியே சஹியே

    Sakiye Sagiye

    Author:

    ஷெண்பா

    Shenba

    For more books

    https://www.pustaka.co.in/home/author/shenba

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் – 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் – 18

    அத்தியாயம் – 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 23

    அத்தியாயம் - 24

    அத்தியாயம் – 25

    அத்தியாயம் – 26

    அத்தியாயம் – 27

    அத்தியாயம் - 28

    அத்தியாயம் – 29

    அத்தியாயம் - 30

    அத்தியாயம் - 31

    அத்தியாயம் - 32

    அத்தியாயம் - 33

    அத்தியாயம் - 34

    அத்தியாயம் - 35

    அத்தியாயம் – 36

    அத்தியாயம் - 37

    அத்தியாயம் - 38

    அத்தியாயம் - 39

    அத்தியாயம் - 40

    அத்தியாயம் – 41

    அத்தியாயம் - 42

    அத்தியாயம் – 43

    அத்தியாயம் – 44

    அத்தியாயம் – 45

    அத்தியாயம் - 46

    அத்தியாயம் - 47

    அத்தியாயம் - 48

    அத்தியாயம் - 49

    அத்தியாயம் - 50

    அத்தியாயம் – 51

    அத்தியாயம் - 52

    அத்தியாயம் - 53

    அத்தியாயம் - 54

    அத்தியாயம் - 55

    அத்தியாயம் - 56

    அத்தியாயம் - 57

    அத்தியாயம் - 58

    அத்தியாயம் - 59

    அத்தியாயம் - 60

    அத்தியாயம் - 61

    அத்தியாயம் – 62

    அத்தியாயம் – 63

    அத்தியாயம் – 1

    பொண்ணு, மாப்பிள்ளைக்குக் கொடுக்க பால், பழம் எடுத்து வச்சாச்சா சுகுணா?

    வச்சிட்டேன் அண்ணி!

    ஏண்டீ வர்ஷா... ஆரத்தி கரைச்சி வைக்கச் சொன்னேனே, வச்சியா?

    வச்சிட்டேன் அத்தை!

    இந்த ஸ்ரீராம் எங்கே போனான்? மாப்பிள்ளை வரும்போது அவன் இருக்கணும்னு தெரியாதா? என்றவர், பிரபா! மாடி ரூமை அலங்காரம் பண்ணிட்டியா...? எனக் குரல் கொடுத்தார்.

    வீட்டிலிருக்கும் அத்தனைப் பேரையும், தமது வெண்கலக் குரலில் அதட்டி உருட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்த தமக்கையைப் பார்த்துக் கொண்டே, வீட்டிற்குள் நுழைந்தார் கணேசன்.

    அவருக்கு மட்டுமல்ல, அந்த வீட்டிலிருந்த அத்தனைப்பேருக்குமே, பரிமளத்தின் குணம் பழகிப்போன ஒன்று.

    ஏன்டா தம்பி! போனோமா வந்தோமான்னு இருக்கறதில்ல... வீட்ல போட்டது போட்டபடி இருக்கு. நான் ஒருத்தி இல்லன்னா இந்த வீட்ல யாருக்கும் எதையெதை எப்பப்போ செய்யணுங்கறது கூட தெரியமாட்டேங்குது...

    வீட்டிற்குள் நுழைந்த தம்பியையும் ஒரு அதட்டல் போட்டுவிட்டு, முடியாமல் சோஃபாவில் அமர்ந்தார் பரிமளம்.

    சும்மா உன்னை வருத்திக்காதேக்கா! எது எது நடக்கணுமோ சரியாத்தான் நடந்துட்டு இருக்கு என்றார்.

    அவ்வளவுதான்... பரிமளத்திற்கு வந்ததே கோபம்.

    ‘அப்போ நான் வேணும்னே கத்திட்டு இருக்கேனா? ஆம்பிள்ள உனக்கு என்ன தெரியும், வீட்ல இருக்க வேலையைப் பத்தி, பொண்ணும், மாப்பிள்ளையும் மருவீட்டுக்கு வராங்களேங்கற நினைப்பு கொஞ்சங்கூட இல்லாம, நீ ஒரு பக்கம் வெளியே போயிட்ட... உன் புள்ள அவன் எங்கேயோ கிளம்பிப் போயிட்டான். இருக்கற வேலையை யார் பாக்கறது?’

    கணேசனுக்குக் கண்ணைக் கட்டியது. ‘தான் வாயை வைத்துக்கொண்டு அமைதியாக இருந்திருக்கலாம்’ என்று தமக்கையின் விஷயத்தில் எப்போதும் போல இப்போதும் அவருக்கு ஞானோதயம் கடைசியில்தான் வந்தது.

    என்ன பேசுவதென்று தெரியாமல் விழித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.

    அப்பா! அவர் உங்களை கொஞ்சம் மேலே வரச்சொன்னார் சொல்லிவிட்டு தந்தையைப் பார்த்து ரகசியச் சிரிப்பு சிரித்தாள் வர்ஷா.

    இதோ வரேண்டா என்றவர், வேட்டியை மடித்துக் கட்டியபடி மாடியை நோக்கி நடந்தார்.

    அத்தை! அம்மா உங்களை வந்து ஒருமுறை எல்லாம் சரியாயிருக்கான்னு கொஞ்சம் பார்க்கச் சொன்னாங்க என்றாள்.

    இதுக்கும் நான்தான் வரணுமா... நொடித்துக்கொண்டே எழுந்தாலும், பரிமளத்தின் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்.

    ம், எல்லாம் சரியாயிருக்கு. ஆரத்தித் தட்டையும், தேங்காவையும் இப்படி முன்னால கொண்டுவந்து வை. அப்படியே கணேசனை இந்தப் பூசணிக்காயைச் சுத்தி உடைச்சிடச் சொல்லு. ஊர் கண்ணெல்லாம் என் குழந்தை மேலதான். ரெண்டு நாள் ஆகிடுச்சி அவளைப் பார்த்து. அத்தை அத்தைன்னு இதோ, இந்த முந்தானையைப் பிடிச்சிட்டே சுத்தி வருவா. இனி யாரு இப்படில்லாம்... என் கண்ணுலயே நிக்கிறா...

    கலங்கிய விழிகளைத் துடைத்துக் கொண்டே தனது அறைக்குள் சென்று அமர்ந்துகொள்ள, சுகுணா அவரைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.

    ஹூட்ஸ்! என்று பெருமூச்சை உதிர்த்துவிட்டு மேடிட்டிருந்த வயிற்றைப் பிடித்தபடி, ஆயாசத்துடன் சோஃபாவில் சாய்ந்தாள் வர்ஷா.

    இரண்டு வீட்டிற்கு முன்பாகவே பைக்கின் எஞ்சினை நிறுத்தி, சப்தமில்லாமல் வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தினான் ஸ்ரீராம்.

    பூனைபோல அடிமேல் அடி வைத்து வந்தவன், தலையை மட்டும் உள்ளே நுழைத்து, வீட்டைச் சுற்றி ஒரு பார்வை பார்த்தான். பரிமளத்தின் புலம்பல் ஒலி மட்டுமே கேட்டது அவனுக்கு.

    சோஃபாவில் கண்களை மூடி அமர்ந்திருந்த தங்கையை, ஸ்... வர்ஷி! என்றழைத்தான்.

    திரும்பிப் பார்த்தவள், என்னண்ணா நீ? காலைல வெளியே போன... இந்த நேரத்துக்குத் திரும்பி வர. அத்தை உன்னைப் பார்த்தாங்க, அவ்ளோதான் நீ... என்றாள் இரகசியக் குரலில்.

    ஆஹ்ஹ்! ஓயாம ரேடியோ ஜாக்கி மாதிரி பேசாதே. ஹிட்லர் எங்கே? என்று இரகசியக் குரலில் கேட்டான்.

    அவங்க ரூம்ல இருக்காங்க...

    ஹப்பா! என்று நிம்மதி பெருமூச்சு விட்டவன், உள்ளே வந்தவன், அத்தையின் அறையை எட்டிப் பார்த்தவன், என்னாச்சு என்பது போலத் தங்கையைப் பார்த்தான்.

    ரெண்டு நாளா கல்யாண வீட்டையே கதிகலங்க வச்ச ஹிட்லர் எதுக்கு அழறாங்க?

    அவங்களோட செல்லப் பொண்ணுக்குக் கல்யாணமாகி மாப்பிள்ளை வீட்ல விட்டுட்டுவந்து ரெண்டுநாள் ஆகிடுச்சாம்...

    இருக்கற இடம் தெரியாமல் இருக்கற உனக்காக அழுதாலும் பரவாயில்ல, இந்த மாதிரி பத்து அத்தையை ஒன்னா சமாளிப்பா அவள். அவளுக்காகவா அழறாங்க? பலத்த யோசனையுடன் கேட்பதைப் போன்ற பாவனையுடன் கேட்டான்.

    சின்னதுலயிருந்தே அவங்களோட செல்லமாச்சே... அதான் தோளைக் குலுக்கினாள் வர்ஷா.

    உண்மைதான். நான்கூட இனிமே யார்கூடச் சண்டை போடுறதுன்னு தெரியாமல் தவிச்சிட்டு இருக்கேன். ஆஃபீஸ்லயிருந்து வந்தா எவ்ளோ எண்டர்டெயின்மெண்டா இருக்கும் தெரியுமா? பரிதாபமாகச் சொன்னான்.

    சீக்கிரமா நீயும் கல்யாணம் பண்ணிக்கோண்ணா! அண்ணி வந்துட்டா நீ சண்டை போட வெளியே ஆள் தேட வேணாம் என்று சொல்லிச் சிரித்தாள் வர்ஷா.

    ஹூக்கும். சஹானா கல்யாணத்துல கூட என்னடா ஸ்ரீராம் ரூட் கிளியரா? ஜமாய்ன்னு ஆளாளுக்குச் சொன்னாங்க. இதுல யாருன்னே தெரியாத ரெண்டு மாமிங்க ஜாதகத்தையே கொண்டுவந்து நீட்டினாங்க. ஆனா, உன்னைத் தவிர யாருக்குமே எனக்குக் கல்யாணம் பண்ணனும்ங்கற ஐடியா இல்ல போலிருக்கே... என்று கவலையும், சலிப்புமாகத் தாடையைத் தடவிக் கொண்டான்.

    உனக்கென்னடா இருபத்தெட்டு வயசுதானே ஆகுது. இன்னும் ஒரு வருஷம் போகட்டும். வர்ஷா குழந்தைக்கும் ஒரு ஆறேழு மாசமாகிடும். சஹானாவும் ஒரு குழந்தையைப் பெத்துட்டானா, நானும் கொஞ்சம் ஃப்ரீ ஆகிக்குவேன்... மகனுக்குப் பதில் சொன்னார் அங்கு வந்த சுகுணா.

    இதென்ன அநியாயமா இருக்கு? எனக்குக் கல்யாணம் செய்றதுக்கும். இவங்களோட வம்சவிருத்திக்கும் என்ன கனெக்ஷன்? ஒண்ணுமே புரியலையேடா நாராயணா! புலம்பினான் ஸ்ரீராம்.

    எனக்குத்தான் இருபத்தேழு வயசுலயே கல்யாணத்தைப் பண்ணிட்டாங்க. நீயாவது கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இரேன்டா. என்று மைத்துனனுக்கு இலவச ஆலோசனையை அள்ளி வழங்கியபடி அங்கே வந்தான் பிரபாகர்.

    அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளை. அத்தை பரிமளத்தின் ஒரே தவப்புதல்வன்... ஸ்ரீராமின் உற்ற நண்பன் என்று பிரபாகருக்குப் பல அவதாரங்கள்.

    ஏன் இப்போ சீக்கிரம் கல்யாணம் செய்ததுல நீங்க எதுல குறைஞ்சிட்டீங்களாம்...? கோபத்துடன் கேட்டாள் வர்ஷா.

    அதானே... விடாதே வர்ஷா கேளு... என்று தங்கையை மேலும் தூண்டிவிட்டான் ஸ்ரீராம்.

    ‘ஏன்டா டேய்!’ என்பதைப் போல அவனை முறைத்த பிரபா, அதுக்கில்ல வர்ஷி! சீக்கிரம் கல்யாணம் செய்துகிட்டா, நிறைய பொறுப்புகள் வந்திடும்னு சொல்றேம்மா இவனுக்கு ஏற்கெனவே விளையாட்டுப் புத்தி ஜாஸ்தி இல்லயா... அதுக்குத்தான் சொன்னேன் சமாளிப்பாகச் சொன்னான் அவன்.

    அட்றா அட்றா அடிச்சி விடு... யாரு உன்னைக் கேட்கறது சிரிப்புடன் சொன்னான் ஸ்ரீதர்.

    ம்ம்... என்று உதட்டைச் சுழித்த மனைவியை, ஆசையுடன் பார்த்தான் பிரபாகர்.

    இருவரையும் மாறிமாறிப் பார்த்த ஸ்ரீராம், டேய்! அடங்குங்கடா! ஒரு வயசுப் பையனைப் பக்கத்துல வச்சிகிட்டு, இதுங்க அடிக்கிற கூத்து இருக்கே... தாங்கலடா சாமி! என்று சப்தமாகப் புலம்பினான்.

    டேய் ஸ்ரீராம்! இதுதான் நீ ஒருமணி நேரத்தில் வர்ற இலட்சணமா...? கேட்டுக்கொண்டே அங்குவந்த அத்தையைப் பார்த்ததும், ஐயைய்யோ! என்று ஒரே தாவாகத்தாவிக் குதித்து மாடிக்கு ஓடினான் அவன்.

    நான் மாடிக்கு வரமாட்டேங்கற தைரியமா... நல்ல நாளாச்சேன்னு பாக்கறேன்... உனக்கு இருக்கு ஒரு நாளைக்குப் பாரு...

    பரிமளம் தனிஆவர்த்தனம் செய்து கொண்டிருக்க, சுகுணா சிரிப்புடன் அங்கிருந்து சென்றார்.

    அண்ணனின் அவஸ்தையைப் பார்த்து வர்ஷா குளுங்கிச் சிரிக்க, பிரபா தலையைத் தடவிக்கொண்டு சிரித்தான்.

    என்னடி சிரிப்பு வேண்டியிருக்கு? வேலையெல்லாம் முடிஞ்சிதில்ல... கொஞ்ச நேரம் போய்ப் படு, சஹானா வரும்போது, நீ எழுந்து வந்தா போதும் மருமகளிடம் அதட்டலாகக் கூறியவர், ஏன்டா! அவள் முகம் சோர்ந்து போயிருக்கே... பார்த்து என்னன்னு கவனிக்கக்கூடாதா? எப்பப்பாரு பேச்சு, சிரிப்பு... அவளை ரூமுக்குக் கூட்டிட்டுப் போ என்று மகனுக்குக் கட்டளையிட்டார்.

    சரிம்மா! என்றவன், வா வா என்று புன்னகையுடன் அவளை அழைத்துச் சென்றான்.

    சோஃபாவில் அமர்ந்தவரது பார்வை, ஹாலில் மாட்டியிருந்த சஹானாவின் போட்டோவில் பதிந்தது. அவரது உதடுகள் இறுக்கம் தளர்ந்து மெல்லப் புன்னகைத்தது.

    அத்தியாயம் - 2

    தென்காசியை நோக்கிச் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த அந்தக் காரின் தோற்றமே சொல்லிவிடும், அதன் விலை லட்சக்கணக்கில் என்று.

    புஷ்பக விமானத்தில் செல்வது போல சாலையில் மிதந்து கொண்டிருந்த அந்த வாகனம், அதில் பயணித்துக் கொண்டிருந்த சஹானாவின் மனமோ இறக்கை இல்லாமல் பறந்து கொண்டிருந்தது.

    ‘இன்னும் பத்தே நிமிடங்கள்... தனது பிறந்தவீட்டு மனிதர்களுடன் இருக்கப்போகிறோம்’ என்ற நினைவே தித்தித்தது அவளுக்கு.

    மனத்தின் பரபரப்பு அவளது முகத்தில் பிரதிபலித்தது. அருகிலிருந்த அவளது கணவன் பிரபு புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.

    விட்டா காருக்கு முன்னாடி நீ பறந்து போயிடுவ போல... என்றான் கேலியாக.

    திரும்பிப் பார்த்து நாணத்துடன் புன்னகைத்தவள், இதைச் சொன்னா உங்களுக்குப் புரியாது. பெண்ணா பிறந்து கல்யாண ஆகி புகுந்த வீட்டுக்குப் போன பிறகு, முதன்முதல்ல அம்மா வீட்டுக்கு வரும் பெண்களுக்கு மட்டும்தான் இது புரியும் என்றாள்.

    டிரைவர் அண்ணா! கார் ஏசியை நிறுத்திட்டு, கண்ணாடியை இறக்கிவிட்டுடுங்க, எங்க ஊர் க்ளைமேட்டுக்கு ஏசியே தேவையில்லை என்றாள்.

    சரிங்கம்மா... என்றார் டிரைவர்.

    அடேங்கப்பா ஊர் பெருமை தாங்கலையே... கிண்டலாகச் சொன்னான் பிரபு.

    இதையும் சொன்னா புரியாது. அனுபவிங்க... நீங்க திரும்பி சென்னைப் போகவே யோசிப்பீங்க...

    அது மட்டும் நடக்காது, இந்த ஊர் வேணா எனக்குப் பிடிச்சிப் போகலாம்... சென்னையை விட்டு நானாவது வர்றதாவது... என் உயிரே அங்கேதான் இருக்கு...

    அதான் தெரியுமே. கல்யாணமான மறுநாளே, ஆஃபீஸூக்குப் போன ஆள்தானே நீங்க. அத்தை சரியாத்தான் சொன்னாங்க. அவனை எந்த அளவுக்கு வீட்ல கட்டிப்போட்டு வைக்க முடியுதோ அதைச் செய். இல்லனா இவன் வீடு தங்கமாட்டான்னு சொன்னது சரியாயிருக்கு என்றாள்.

    அத்தையும், மருமகளும் கூட்டணி அமைக்கறீங்களா? இது எனக்கு நல்லதில்லயே...

    உங்களுக்கு எல்லாமே வேடிக்கைதான் என்றவள், இதோ, இதுதான் நாங்க படிச்ச ஸ்கூல். இந்தப் பக்கம் போய் லெஃப்ட்ல திரும்பினா, அப்பாவோட ஆஃபீஸ். இதுதான் காசி விஸ்வநாதர் கோயில், அப்படியே ஒரு கும்பிடு போட்டுக்கோங்க. நாளைக்குக் காலைல கோயிலுக்கு வரலாம். தனது இயல்பை மீறி படபடத்துக் கொண்டே வந்தாள் சஹானா.

    ‘இரண்டு நாட்களாக அளந்து அளந்து பேசியவள், இன்று இத்தனைக் குதூகலத்துடன் வாய் ஓயாமல் பேசுகிறாளே!’ என்று எண்ணிக்கொண்ட பிரபுவிற்குப் புன்னகை அரும்பியது.

    ***

    "சுகுனா! ஆரத்தியை இப்படி வச்சிடு... அவங்க எந்த நேரமும் வரலாம். பிரபாகரும், ஸ்ரீராமும் வந்தாங்களா?"

    வந்தாச்சு அத்தை! வந்தாச்சு என்றபடி ஓடி வந்தான் ஸ்ரீராம்.

    இங்கே பாரு ஸ்ரீ! பிரபாகரை பேர் சொல்லிக் கூப்பிடுறா மாதிரி, சின்னவரையும் கூப்பிடாதே புரியுதா?

    முதல்ல அவர் இருக்கும் போது நீங்க, இவனைப் பேர் சொல்லிக் கூப்பிடாதீங்க. சஹி வீட்டுக்காரர் தப்பா நினைச்சிக்கப் போறார் என்று அத்தையை மடக்கினான் ஸ்ரீராம்.

    அதென்னடா சஹி வீட்டுக்காரர், மாப்பிள்ளைன்னு சொல்லுடா. கழுதைக்கு ஆகற மாதிரி வயசாகுது. இன்னும் எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்கணுமா உனக்கு?

    வயசாகுதுன்னு தெரியுது... எனக்குக் கல்யாணம் பண்ணனும்னு மட்டும் தோணல உங்களுக்கு... வேண்டுமென்றே தனது கல்யாணப் பேச்சைத் துவக்கினான் அவன்.

    அவனுக்குத் தெரியும் தனது திருமணப் பேச்சை எடுத்தால் அத்தை எப்படி ரியாக்ஷன் கொடுப்பார் என்று. மொத்த வீட்டையும் அடக்கியாளும் தனது ஹிட்லர் அத்தையை உசுப்பேத்திப் பார்ப்பதில், அவனுக்குத் தனிச் சந்தோஷம்.

    இருடா! சஹானா ஊருக்குக் கிளம்பிப் போகட்டும். அப்புறம் இருக்கு உனக்கு... என்றார் எரிச்சலுடன்.

    அவர் ஏன் அப்படிச் சொல்கிறார் என்று அவனுக்கு மட்டுமல்ல அந்தக் குடும்பத்துக்கே தெரியுமாதலால் அனைவரும் சப்தமில்லாமல் சிரித்துக்கொண்டனர்.

    அதேநேரம் வாசலில் கார் வந்து நிற்கவும், சுகுணாவும், வர்ஷாவும் ஆரத்தியுடன் அங்கு விரைய, பரிமளம் கதவருகில் நின்று கண்ணீர் மல்க எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தார்.

    சம்பிரதாயங்கள் முடிந்து உள்ளே வந்த மணமக்கள், பூஜையறைக்குச் சென்று வணங்கிவிட்டு ஹாலில் வந்து அமர்ந்தனர்.

    அதுவரை தனது கண்களில் படாத அத்தையைத் தேடினாள் சஹானா.

    அத்தை எங்கேம்மா?

    அவங்க ரூம்ல இருக்காங்கடா. நீ கொஞ்சநேரம் உட்கார்ந்திரு... வருவாங்க என்றார்.

    என்னம்மா இதெல்லாம்... சலித்துக் கொண்டவள், ஏங்க என்னோடு கொஞ்சம் வாங்களேன் என்று கணவனையும் சேர்த்து அழைத்துக்கொண்டு, அத்தையின் அறைக்குச் சென்றாள்.

    அத்தை! திஸ் இஸ் டூ மச். உங்க பொண்ணு வந்திருகேன். வந்து வரவேற்க மாட்டீங்களா? என்றாள் கோபத்துடன்.

    அதுடா... என்று தயங்கினார் பரிமளம்.

    அத்தை இது ரெண்டாயிரத்துப் பதினைந்து இன்னும் இந்த மூடநம்பிக்கையெல்லாம் பார்த்துகிட்டு. வாங்க... நீங்கதான் எங்களை முதல்ல ஆசீர்வாதம் பண்ணணும் என்றவள் கால்களில் விழ, பரிமளம் நெகிழ்த்து போனார்.

    பிரபுவும் காலைத் தொட்டு வணங்க, பரிமளம் புளங்காகிதம் அடைந்தார்.

    ம்ஹூம்... அசுவாரசியத்துடன் தலையை அசைத்தான் ஸ்ரீராம்.

    என்னடா? - பிரபாகர்.

    ஹிட்லர் க்ளீன்போல்ட், ஏற்கெனவே, நம்ம சைட் வீக்காயிருக்கு. சின்ன மாப்பிள்ளையும், அந்த குரூப்ல சேர்ந்துட்டா ரொம்ப வீக் ஆகிடுமே...

    இதை நான் யோசிக்கவே இல்லயேடா... என்ற பிரபாவை கடுப்புடன் பார்த்தான்.

    உனக்கெங்க உன் பொண்டாட்டிகிட்ட ஈன்னு பல்லைக் காட்டவே உனக்கு நேரம் சரியாயிருக்கு என்று பிரபாகரின் காலை வாரினான் ஸ்ரீ.

    என் பொண்டாட்டிகிட்ட தானே பல்லைக் காட்றேன். அடுத்தவன் பொண்டாட்டியைப் பார்த்தா சிரிக்கிறேன் என்றான் கோபத்துடன்.

    ஓ! உனக்கு அந்த ஐடியா வேற இருக்கா? வர்ஷி! இங்கே வாயேன்... என்று குரல் கொடுத்தான்.

    டேய்! வாயை வச்சிட்டு சும்மாயிருக்கமாட்ட? இல்லாததும் பொல்லாததும் அவகிட்ட எதாவது சொல்லிடுவ. அவள் மூஞ்சியைத் தூக்கி வச்சிகிட்டு, என் உயிரை எடுப்பா என்று கடுகடுத்தான்.

    யாரு உயிரை எடுக்கறது...? கேட்டுக்கொண்டே அங்கு வந்தாள் வர்ஷா.

    அது... பிரபாகர் ஆரம்பிக்கும் போதே இடைபுகுந்தான் ஸ்ரீராம்.

    வேற யாரு? நீதான். கூடப்பிறந்த அண்ணன்கிட்டயே இப்படிச் சொல்றான். நான் அப்போவே சொன்னேன். இந்தப் படுபாவிய கல்யாணம் செய்துக்காதன்னு. நீதான் அப்பா கிழிச்ச கோட்டைத் தாண்டமாட்டேன்னு, இவனைக் கட்டிகிட்ட. இன்னைக்கு இப்படிப் பேச்சு வாங்கிக்கிற... தேவையா இதெல்லாம்?

    அவன் பேசி முடிக்கும் வரை இமைக்காமல் அவனையே பார்த்த வர்ஷா,  திரும்பிக் கணவனைப் ஒரு பார்வை பார்த்தாள்.

    அவனோ, போலி பயத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். கீழுதட்டை அழுந்த கடித்தவள், கடவுளே! என்பதுபோல சலித்துக் கொண்டாள்.

    ‘உங்க ரெண்டு பேருக்கும்தான் வேற வேலையில்ல. எனக்குமா இல்ல? கூட்டுச் சேர்ந்துகிட்டு, என்னைக் கலாய்க்கறீங்களா? இன்னொருமுறை என்னைக் கூப்பிட்டுப் பாருங்க சொல்றேன்’ என்று பல்லைக் கடித்தாள்.

    மிஞ்சி மிஞ்சிப் போனா, என்னடா பண்ணுவாங்க...? - ஸ்ரீராம்.

    என்ன பண்ணுவாங்க...? ஆர்வத்துடன் கேட்டான் பிரபாகர்.

    எனக்கு ஒருவேளை சாப்பாடு போட மாட்டாங்க. நான் ஹோட்டலுக்குப் போய்த் தேவையானதைச் சாப்பிட்டுக்குவேன்...

    மாப்பிள்ளைங்கற மரியாதைக்கு, எனக்குச் சாப்பாடு போட்டுடுவாங்க. ஆனா, உன் தங்கச்சி என்னை ரூமுக்குள்ள சேர்க்கமாட்டா. அதனால நானும்... என்றதும், என்னது? என்று வேகமாக இடைபுகுந்தாள் வர்ஷா.

    மொட்டை மாடியில் படுத்துக்குவேன்னு சொல்லவந்தேன். எதையுமே முழுசா கேட்க மாட்டியா நீ? என்ற கணவனைச் சுட்டெரிப்பது போலப் பார்த்தாள்.

    ரெண்டு பேரும் திருந்தவேமாட்டீங்க. ஒத்தையா ஊருக்குப் போய்க் கஷ்டப்பட்டாதான், என் அருமை தெரியும் சிடுசிடுத்துவிட்டுச் சென்றாள் வர்ஷா.

    பின்னே, சும்மா அங்கேயிருந்து நாங்க என்ன பண்றோம்னு எட்டிஎட்டிப் பார்த்துட்டு இருந்தா இப்படித்தான்... என்ற ஸ்ரீராம், இன்னைக்கு வர்ஷாவோட கோட்டா ஓவர். இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு. அடுத்த பிராஜெக்ட் சின்ன மாப்பிள்ளை... என்றான் ஸ்ரீராம்.

    அத்தியாயம் - 3

    ஐவரின் சிரிப்புச் சப்தமும் அந்த வீட்டையே அதிர வைத்துக் கொண்டிருந்தது. மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

    எப்பவுமே அத்தை இப்படித்தான் உங்களை மிரட்டிட்டே இருப்பாங்களா? சிரித்துக்கொண்டே கேட்டான் பிரபு.

    அவங்க எனக்கு தான் அத்தை. உங்களுக்கு பெரியம்மா! திருத்தினாள் சஹானா.

    ஓகே பெரியம்மா! என்றான் அவன் இலகுவாக.

    எங்க அத்தை எப்பவுமே அப்படித்தான். அதுவும் எங்க கல்யாண நேரத்துல, அண்ணன் பண்ணின வேலையைப் பார்த்ததிலிருந்து அது ரெண்டு மடங்கா மாறிடுச்சு... அடக்கமட்டாமல் வர்ஷா சிரிக்க, சஹானாவும் இணைந்து கொண்டாள்.

    அதென்னது அப்படி ஒரு விஷயம்?

    "அது ஒண்ணும் இல்ல மாப்பிள்ளை... இவங்க கல்யாண நேரத்துல என்னை ஆஃபீஸ்லயிருந்து நார்த்ல இருக்கற ரீஜினல் ஆஃபிஸுக்கு ட்ரெயினிங் அனுப்பினாங்க. முடிச்சிட்டு வரும்போது மெயின் ஆஃபீஸ்ல என்னோட வேலைப் பார்த்த ஒரு லேடி இங்கேயிருக்க எங்க பிரான்ச் ஆஃபீஸுக்கு வந்தாங்க.

    அவங்க வந்தது ஆஃபீஸ் வேலைக்கு. நம்ம வீட்டுப் பின்போர்ஷன்லயே பேயிங்கெஸ்டா தங்கிகிட்டாங்க. ஆனா, அவங்க வந்ததில் இருந்தே, அத்தை என்னை உர்ருன்னு பார்த்துகிட்டு நோட்டம் விடுறதையே வேலையா வச்சிட்டிருந்தாங்க.

    நானும் மூணு, நாலு நாள் பார்த்தேன்... அதுக்குமேல, தாங்க முடியல, ஒருநாள் நைட் அவங்க ஆஃபீஸ் விஷயமா எங்கிட்ட பேச என்னை வரச்சொல்லி கூப்பிட்டாங்கன்னு நான் போனேன். இந்த அத்தை விடாம ஃபாலோ பண்ணி வந்தாங்க போல எனக்கு தெரியாது.

    அந்தநேரம் பார்த்து, பவர்கட் ஆகிடுச்சி... மெழுகுவர்த்தி ஏத்திவச்சி வேலை பார்த்துட்டு இருந்தோம். அத்தைக்கு ஏற்கெனவே கொஞ்சம் பார்வை கம்மி. இதுல கரண்ட் வேற இல்ல... அத்தைக்கு நாங்க உட்கார்ந்திருந்தது தெரியல. ஆனா, சுவத்துல தெரிஞ்ச நிழலைப் பார்த்து, எங்களைத் தப்பா நினைச்சிட்டாங்க.

    வேலையை முடிச்சிட்டு நான் என் ரூமுக்குப் போன கொஞ்ச நேரத்துல இவங்க பின்னாலயே வந்து குடும்ப மானம், கௌரவம் அதுஇதுன்னு ஒரு பத்து நிமிஷத்துக்கு லெக்சர் கொடுக்க, எனக்கு என்னடா இதுன்னு யோசனை...

    கடைசில அந்தப் பொண்ணு நம்ம குடும்பத்துக்கு வேணாம்டா. பார்க்க வெண்ணை பொம்மை மாதிரி நல்லாத்தான் இருக்கா. அதுக்காக நம்ம குடும்பத்துல இதெல்லாம் பழக்கமில்லடா. உனக்கு ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க. அவங்களை நினைச்சிப்பாருன்னு போட்டாங்க பாருங்க... எனக்குச் சிரிப்புத்தான் வந்தது.

    ஆனா, அத்தை முன்னால சிரிச்சா... எல்லாமே தெரிஞ்சிடும். அதனால் அத்தையை அப்படியே ஃபாலோ பண்ணி நானும், இதுவரைக்கும் இல்லனா இனி பழகிக்கங்க... நான் முடிவு பண்ணிட்டேன்னு, ஒரு குண்டைத் தூக்கிப் போட்டேன். அவ்வளவுதான் சோகமா ஒரு லுக்கு விட்டுட்டே வெளியே போனாங்க பார்க்கணுமே...

    ரெண்டுநாள் யாருக்கும் தெரியாம என்கிட்ட பேசறதும், நான் மறுக்கறதுமாவே இருந்தது. ஒருநாள் ரொம்பக் கோபமா அவங்க பேச, நான் மானசீகமா அந்த மேடம்கிட்ட ஒரு மன்னிப்பைக் கேட்டுகிட்டு, சடார்னு எங்க அத்தை கால்ல விழுந்துட்டேன்.

    எங்க அத்தை பதறிப் போயிட்டாங்க. நான் நிதானமா, இனி ஒண்ணுமே பண்ண முடியாது அத்தை... அந்தப் பொண்ணு மூணுமாசம் கர்ப்பம்னு ஒரு பிட்டைப் போட்டேன்..." என்றவன் நிறுத்திவிட்டு அமைதியாக இருந்தான்.

    பெரியம்மா... என்ன சொன்னாங்க? ஆர்வத்துடன் கேட்டான் பிரபு.

    அம்மா சொல்ற நிலைமைலயா இருந்தாங்க... இவன் போட்ட போடுல, அவங்க மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க என்று சிரித்தான் பிரபாகர்.

    என்னங்க இப்படிச் சிரிக்கிறீங்க...? - பிரபு.

    இன்னைக்குச் சிரிக்கிறாருங்க அன்னைக்கு இவரோட முகத்தைப் பார்த்திருக்கணுமே... சொல்லிவிட்டுச் சிரித்தாள் வர்ஷா.

    அப்புறம் என்னதான் ஆச்சு?

    எங்க அப்பா, அண்ணனை அடிக்காம விட்டது பெரிய பாக்கியம். அப்படி ஒரு திட்டு வாங்கிகிட்டாங்க... - சஹானா.

    மயக்கம் தெளிஞ்சி எழுந்தவங்க திரும்பப் புலம்ப ஆரம்பிக்க, அம்மா சமாதானம்பண்ணி விளக்கினாங்க. ஏன் அத்தை நான் அந்த ஊருக்குப் போயே ரெண்டு மாசம்தான் ஆச்சு. மூணு மாசம் கர்ப்பம்னு சொல்றேன்... இதுக்குப் போய் வீட்டையே கலக்கிட்டியேன்னு சொன்னதும், வந்தது பார் அவங்களுக்குக் கோபம்... என்று சிரித்தான்.

    அதுலயிருந்து நான் என் கல்யாணப் பேச்சை எடுத்தாலே... அத்தை டெரர் ஆகிடுவாங்க... என்றான்.

    மாடியில் ஒலித்த சிரிப்புச் சப்தத்தைக் கேட்ட பரிமளம் சந்தோஷத்துடன் புன்னகைத்துக் கொண்டார்.

    நான்கூட ரொம்பப் பெரிய இடமா இருக்கே, நமக்கு ஒத்துவருமான்னு நினைச்சேன். ஆனா, என் குழந்தை நல்ல இடத்துலதான் போய்ச் சேர்ந்திருக்கா. அந்தக் காசி விஸ்வநாதன் என்னைக்கும் எங்க குழந்தைகளோட இந்தச் சந்தோஷத்தை நிலைச்சிருக்க செய்யணும் என்று மனமுருக வேண்டிக்கொண்டார்.

    "ஆமாங்க அண்ணி! சஹியோட மாமியார் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க. சம்மந்திதான் கொஞ்சம் வெடுக்குன்னு இருக்கார். ஆனா, சஹி அதையெல்லாம் சமாளிச்சிக்குவா. கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்குப் போகக்கூடாதுன்னு சொன்னதுதான் அவளுக்குக் கொஞ்சம் சங்கடமா இருந்தது.

    ஆனா, அவங்கவீட்டு வேலையை மேற்பார்வை பார்த்துக்கவே இவளுக்குச் சரியாயிருக்கும் போல" வியப்புடன், அதில் மகளுக்குக் கிடைத்திருக்கும் வளமான வாழ்க்கையை நினைத்தும் அவருக்கு மிகுந்த சந்தோஷம்.

    மணியாகுதே சுகுணா! வர்ஷாவைக் கூப்பிடு... என்றார் பரிமளம்.

    நானே வந்துட்டேன் அத்தை! சஹி டைனிங்ல இருக்கா என்றாள்.

    ***

    பால் சொம்புடன் அவள் அறைக்குள் நுழைந்தபோது, பிரபு அலங்கரித்த கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தான். அறையின் அலங்காரத்தைப் பார்த்தவள் மெல்லச் சிரித்துக் கொண்டாள்.

    எதுக்கு இப்படி ஒரு சிரிப்பு?

    எவ்வளவுதான் முன்னேறினாலும், சில விஷயங்கள்ள நாம இன்னும் அப்படியேதான் இருக்கோம் இல்ல. கல்யாணமாகி மூணு நாள் ஆகியாச்சி, இன்னும் இந்தச் சடங்கு சம்பிரதாயமெல்லாம் நம்மள... விடறமாதிரி தெரியலையே.

    சிலதையெல்லாம் என்னைக்குமே விடமுடியாது...

    எதையெல்லாம்...

    அதைச் சொன்னா உனக்குப் புரியாது... என்றவன் விளக்கை அணைத்தான்.

    கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாமே... தயக்கத்துடன் ஒலித்தது அவளது குரல்.

    ரெண்டு நாளா அதைத்தானே செய்துட்டு இருக்கோம் பேசினாலும், தனது காரியத்தில் கண்ணாக இருந்தான்.

    அவனது கரத்தை விலக்கியவள், ரெண்டு நாளா பேசறோம். ஆனா, அது என்னைப் பத்தியும், என் குடும்பத்தைப் பத்தியும் மட்டுமா தானேயிருக்கு. உங்களைப் பத்தி எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க, கேட்டாலும், போகப்போகத் தெரியும்னு சொல்றீங்க சற்று சலிப்பும், எரிச்சலுமாகவே சொன்னாள்.

    கேட்டுத் தெரிஞ்சிக்கிறதைவிட பார்த்தும், பழகியும் தெரிஞ்சிக்கறது பெட்டர். உன்னைப் பத்திக்கூட நானா எதுவும் கேட்கலையே. நீயா சொன்ன. அதையும் நான் தடுக்காம கேட்டுகிட்டேன் இல்லையா? உன்னோட உணர்வுகளுக்கு நான் மரியாதை கொடுத்ததைப் போல, என்னோட உணர்வுகளை நீயும் மதிக்கணும். இது நியாயமான எதிர்பார்ப்புதானே...

    சஹானாவால் இதற்கு ஆம் என்பதைத் தவிர வேறு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

    அவளது மௌனத்தை, அவன் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டான்.

    ஜன்னல் வழியாக கசிந்த நிலவு வெளிச்சம். அந்த அறையை நிறைத்திருந்தது.

    நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்த கணவனைப் பார்த்தவளுக்கு, எதுவுமே புரியவில்லை. நன்றாக பேசுகிறான், பழகுகிறான். தன்னிடம் மட்டும் அல்ல... தனது குடும்பத்தினரிடமும் அவன் பழகுவதைக் குறை சொல்லவே முடியாது.

    ஆனால், இந்த மூன்று நாள்களாக புரிந்தும் புரியாமலிருந்த விஷயம், இப்போதுதான் அவளுக்கு விளங்கியது. ‘அவன் தன்னிடம் முழு ஈடுபாட்டுடன் இருக்கிறானா?’ இல்லை என்றே தோன்றியது.

    ‘இது உண்மையா? இல்லை, தனது மனக்குழப்பத்தினால் விளைந்த எண்ணமா?’ அவளால் தெளிவான முடிவிற்கு வர இயலவில்லை.

    ஆரம்பத்திலிருந்தே அவளுக்கு இந்தத் திருமண பேச்சில் சற்று அதிருப்தியாகத்தான் இருந்தது. உறவு முறையில் ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தபோது, அங்கு வந்திருந்த பிரபுவின் அன்னை அவளைப் பார்த்துவிட்டு, தெரிந்தவர்கள் மூலமாக வீட்டில் வந்து பேசினார்கள்.

    இரண்டு மூன்று வரன்கள் வந்திருக்க, ‘பிரபுவிற்குத்தான் கொடுக்க வேண்டும்... தனது தங்கைக்கு எல்லாவிதத்திலும், அவன்தான் பொறுத்தமானவன்’ என்று ஸ்ரீராம் ஒற்றைக்காலில் நின்றான்.

    அப்பாவிற்குக்கூட, ‘பெரிய இடமாக இருக்கிறதே’ என்ற தயக்கம். அதோடு அப்போதுதான் பி.எட் முடித்துவிட்டு ஒரு பள்ளியில் இரண்டு மாதங்களாக அவள் வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள்.

    ஆனால், மாப்பிள்ளை வீட்டில் போட்ட முதல் கட்டளையே திருமணத்திற்குப் பின் வேலைக்குப் போகக்கூடாது. தங்களது குடும்பத்தையும், மகனையும் பார்த்துக் கொண்டால் போதும் என்றனர்.

    ஆரம்பத்தில் யோசித்த குடும்பத்தினரை, ஸ்ரீராம்தான் பேசிப்பேசிக் கரைத்தான். அம்மாவும் சம்மதம் சொல்லிவிட, அப்பா சஹானாவிடம் பேசினார்.

    ஆரம்பத்தில் தயங்கியவள், பின்னர் சம்மதித்தாள். பெற்றவர்களது சந்தோஷத்திற்காக என்றாலும், அவளுக்கும் பிரபுவை மிகவும் பிடித்திருந்தது.

    அவளுக்குள் இருந்த கற்பனைக்கு முழுவடிவம் கொடுத்தது போலிருந்தான் அவன். சந்தோஷத்துடன் திருமணத்திற்குத் தலையாட்டினாள்.

    அவள் எதிர்பார்த்ததைப் போலத் திருமணமாகி இந்த இரண்டு நாள்களில், அவன் நடந்து கொள்ளவேயில்லை என்று புரிந்தது. அவனாக அவளிடம் பேசுவதே இல்லை. அப்படிப் பேசினாலும், அது ஏதோ கடமைக்காக என்பதை இப்போது தெளிவாக உணர முடிந்தது.

    திருமணமான தம்பதிகளுக்குள் இருக்கும் இயல்பான எந்த நெருக்கத்தையும், அவன் காட்டவில்லை. ஆசையுடன் அவளிடம் பேசவில்லை... வேண்டுமென்றே அவளைச் சீண்டவில்லை.

    யோசிக்க யோசிக்க அவளுக்குத் தலை வலித்தது. ஏனோ, தான் தவறு செய்துவிட்டதைப் போலொரு எண்ணம், தனக்குள் தோன்றுவதை அவளால் தாங்கமுடியவில்லை.

    தூங்கலையா நீ? அரைத்தூக்கத்தில் கேட்டவன், அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்தான்.

    சஹானாவின் கனவுகள் அத்தனையும், அவனது இரும்புப் பிடிக்குள் சிக்கி, நொறுங்கிக் கொண்டிருந்தது.

    அத்தியாயம் - 4

    ஈரத்தலையைத் துவட்டியபடி தூரத்தில் தெரிந்த மலைமுகடுகளை வெறித்துக் கொண்டிருந்தாள் சஹானா.

    இரவு முழுவதும் தூக்கமில்லாததால் கண்கள் கோவைப் பழமாகச் சிவந்திருந்தன.

    ஹாய் புதுப்பொண்ணு! பின்னாலிருந்து தோள்களைப் பற்றிக்கொண்டு சிரித்த வர்ஷாவைப் பார்த்துச் சிரித்தாள்.

    தங்கையிடம் தெரிந்த மாற்றத்தை, அவளது கண்கள் சுலபமாக அடையாளம் கண்டுகொண்டன. இரகசியமாகப் புன்னகைத்துக் கொண்டாள்.

    தமக்கையின் பார்வை வீச்சில் சஹானாவின் முகம் லேசாக சிவந்தது.

    இன்னைக்குக் குற்றாலம் போகலாமான்னு, உங்க அத்தான் கேட்டுட்டு வரச் சொன்னாரு. நீ இருக்கற நிலைமையைப் பார்த்தா... வர்றா மாதிரி தெரியலயே என்றாள் குறும்புடன்.

    அவர் தூங்கிட்டு இருக்கார். எழுந்ததும் கேட்டுச் சொல்றேங்கா! என்றாள்.

    ம், நீங்களும் குடும்ப இஸ்திரி ஆகிட்டீங்க... என்று கலகலத்த சகோதரியைப் பார்த்து முறுவலித்தாள்.

    கொண்டுவந்த காஃபியை அவளிடம் கொடுத்துவிட்டு, சிறிதுநேரம் தங்கையுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

    சரி சஹி! நான் போய் அம்மாவுக்கு ஹெல்ப் பண்றேன். நீ கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்துக்கோ. எட்டரை மணிக்கு மேலே நீ வந்தா போதும்.

    தங்கையின் கன்னத்தைத் தடவிக் கொடுத்துவிட்டுக் கீழே சென்றாள்.

    மேலும் சற்றுநேரம் அங்கேயே நின்றிருந்த சஹானா, நேரமாவதை உணர்ந்து அறைக்குச் சென்றாள்.

    உள்ளே நுழைந்ததுமே, கதவு தாளிடப்படும் சப்தம் கேட்டுத் திரும்பியவள் நிலை தடுமாறிப் போனாள்.

    கணவனின் கையணைப்பில் திமிறியவள், என்னதிது காலங்கார்த்தால... அவனிடமிருந்து விலக முயன்றாள்.

    காலங்கார்த்தால ஒரு புது அனுபவம். நீயும் வருவ, வருவன்னு எவ்வளவு நேரம் வெயிட் பண்றது? சொல்லிக்கொண்டே, அவளது கூந்தலில் வாசம் பிடித்தான்.

    ம், சூப்பர் வாசனை. என்ன ஷாம்பூ?

    இது சீயக்காய். அத்தைக்கு ஷாம்பு யூஸ் பண்றதெல்லாம் பிடிக்காது. வீட்ல தயார்பண்ற சீயக்காய்தான் என்று விளக்கம் சொன்னவள், காஃபி கொண்டு வரட்டுமா? எனக் கேட்டாள்.

    நான் காலைல காஃபியெல்லாம் சாப்பிடுறதில்ல உதடுகளால், அவளது கன்னத்தை உரசினான்.

    கூச்சத்துடன், இது எத்தனை நாளா? என்றாள்.

    இன்னைலயிருந்து தான். ஒன்லி ஸ்பெஷல் சாக்லேட் டிரிங்க் என்றவன், அவளது இதழ்களை நோக்கி முன்னேறினான்.

    சிரமத்துடன் தன்னிடமிருந்து அவனைப் பிரித்து விலக்கியவள், மேல் மூச்சு வாங்க தள்ளாடினாள்.

    பாரு. எப்படித் தடுமாறுற! இதுக்குத்தான் உன்னை இறுக்கமா பிடிச்சிட்டிருந்தேன் என்று அவளை நெருங்கினான்.

    ஐயோ! கிட்டவராதீங்க கோயிலுக்கு வேற போகணும். நான் ஏற்கெனவே குளிச்சிட்டேன் என்று பின்னாலேயே விலகினாள்.

    அதனால என்ன? நான்தான் இருக்கேன் இல்ல, டோண்ட்வொர்ரி என்று அவளை அணைத்தான்.

    ப்ளீஸ்! கெஞ்சலாகச் சொன்னவளது விழிகளிரண்டும், அவனது முகத்தைப் பார்க்கத் தயங்கின.

    சரி, அப்போ என்னைப் பிரபுன்னு கூப்பிடு...

    மாட்டேன்... என்றாள் பிடிவாதமாக.

    அப்போ நானும் விடமாட்டேன் அவனும் அழுத்தமாகச் சொன்னான்.

    எங்க அம்மா வீட்ல இதெல்லாம் பழக்கமில்ல... அம்மா காதுல இது விழுந்ததுனா நான் அவ்வளவுதான் சிறுகுழந்தையாக சிணுங்கினாள்.

    அம்மா எதிர்ல வேணாம். தனியாயிருக்கும் போது கூப்பிடு சொல்லிக்கொண்டே அவளது நெற்றியை முட்டினான்.

    இப்போதைக்கு அவனிடமிருந்து தப்பித்தால் போதுமென்று எண்ணி, ம் என்றாள்.

    அப்போ கூப்பிடு...

    நாளைலயிருந்து...

    நன்றே செய், அதை இன்றே செய் என்றான்.

    ‘சொல்லாவிட்டால் அவன் பிடிவாதமாக இப்படியே இருப்பான்’ என்று புரிந்துகொண்டவளாக, ப்...பிர...பு! என்றாள்

    சோ நைஸ்! என்று சிரித்தவன், இப்போ என் முகத்தைப் பார்த்துச் சொல்லு என்று, நெஞ்சில் புதைந்திருந்த அவளது முகத்தைப் பற்றி நிமிர்த்தினான்.

    ஹூம்! இப்போ தானே சொன்னேன்...

    ஒன் மோர் டைம். ப்ளீஸ்! என்றான் காதலுடன்.

    அவனது கண்கள் வெளிப்படுத்திய காதலில் கரைந்தவளாக, பிரபு! என்றாள்.

    தேங்க்யூ டார்லிங்! என்றவன், அவளது இதழ்களைச் சிறை செய்தான்.

    இப்போ உன் குழப்பமெல்லாம் தீர்ந்துச்சா...

    அவர்களிருந்த சூழ்நிலை அவளை எதையும் யோசிக்கவிடவில்லை.

    ம் என்று புன்னகைத்தாள்.

    தட்ஸ்குட்... என்றவனது வலிமையான கரங்களுக்கிடையில், அவளது பூவுடல் பாந்தமாக அடங்கிப் போனது.

    பிரபுவுடன் பேசிக்கொண்டே மாடியிலிருந்து இறங்கி வந்தவள், தன்னைக் கண்டதும் நமுட்டுச் சிரிப்புச் சிரித்த தமக்கையைப் பார்த்துப் போலியாக கோபம் கொண்டாள்.

    அக்கா! சும்மா இருக்கமாட்டியா? இரகசியக் குரலில் தமக்கையிடம் கிசுகிசுத்தாள்.

    சரி... சரி என்றாளே தவிர, அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டுதான் இருந்தாள் வர்ஷா.

    சஹானாவுக்குமே, வந்த சிரிப்பை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

    அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, மாப்பிள்ளை! பிள்ளைங்க எல்லாம் குற்றாலம் போயிட்டு வரலாம்னு பிரியப்படுறாங்க. நீங்க ரெஸ்ட் எடுக்கறதுன்னா எடுத்துக்கோங்க. இல்லனா... என்றார் கணேசன்.

    நோ பிராப்ளம் தாராளமா போய்ட்டு வரலாம் மாமா! இதைவிட்டா நான் எப்போ இங்கே வருவேன்னு எனக்கே தெரியாது என்றான்.

    என்ன மாப்பிள்ளை இப்படிச் சொல்றீங்க? கவலையுடன் கேட்டார் சுகுணா.

    அது... அவரோட பிஸினஸ் அப்படிம்மா! கவலைப்படாதீங்க மாசத்துக்கு ஒருமுறை அவரை இங்கே கூட்டிட்டு வர்றது என் பொறுப்பு என்றாள்.

    திரும்பி அவளைப் பார்த்த பிரபு அர்த்தத்துடன் சிரித்துக் கொண்டான்.

    அத்தியாயம் - 5

    பெரியவர்கள் மூவரும் சிறியவர்கள் ஐவரை மட்டும் வழியனுப்பிவிட்டு மீதமிருந்த வேலைகளை கவனிக்கலாயினர்.

    முதலில் காசி விஸ்வநாதரை தரிசித்துவிட்டு, சற்றுநேரம் பிரகாரத்தில் அமர்ந்திருந்தனர்.

    ஈவ்னிங் டைம்ல இங்கே வரணும். காத்து சும்மா அள்ளிட்டுப் போகும் என்றான் பிரபாகர்.

    ஆமாம். நாங்க ஸ்கூல் படிக்கும் போதெல்லாம் வீட்டுலயிருந்து நடந்தே வந்திடுவோம். சென்னைல இருக்கவங்களுக்கு எப்படி பீச்சோ, எங்க தென்காசிக்காரங்களுக்கு இந்தக் கோயில் என்றாள் வர்ஷா.

    கடல் காத்துகூட கொஞ்ச நேரத்தில் உடம்பை கசகசன்னு ஆக்கிடும். ஆனா, இந்தக் காத்து மூலிகைக் காத்து, நம்ம மைண்டையே ஃப்ரெஷ் ஆக்கிடும் என்றான் ஸ்ரீராம்.

    பிரபு திரும்பி மனைவியின் முகத்தைப் பார்த்தான்.

    அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

    "நீ என்ன எதுவுமே பேசாமல் அமைதியா இருக்க? நேத்து உங்க ஊரைப் பத்தி அவ்வளவு பெருமையோட

    Enjoying the preview?
    Page 1 of 1