Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ninnai Saranadainthean Part - 2
Ninnai Saranadainthean Part - 2
Ninnai Saranadainthean Part - 2
Ebook453 pages5 hours

Ninnai Saranadainthean Part - 2

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

'வாழ்க்கை, இருபுறமும் கூர்முனைகளைக் கொண்ட வாளாக, மதுவை நெருக்கிக் கொண்டிருக்கிறது. ஒன்று, அவள் இதிலிருந்து மீண்டு வரவேண்டும். இல்லையெனில், விதியின் கரங்களில் இருக்கும் வாளுக்கு இரையாக வேண்டும். அவளது மன திடமும், தன்னம்பிக்கையும் மட்டுமே அவளை மீட்டுக் கொண்டுவர முடியும்' இதன்மூலம் மதுவும், சித்தார்த்தும் எதிரும் புதிருமாக மாற காரணம் என்ன? தீபக் மதுவின் வாழ்க்கைக்கு செய்ய நினைக்கும் தியாகம் என்ன? மது அதை ஏற்றுக்கொள்வாளா? இனி நாமும் மதுவின் வாழ்வியல் போராட்டத்துடன்...

Languageதமிழ்
Release dateMay 14, 2022
ISBN6580148107487
Ninnai Saranadainthean Part - 2

Read more from Shenba

Related to Ninnai Saranadainthean Part - 2

Related ebooks

Reviews for Ninnai Saranadainthean Part - 2

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ninnai Saranadainthean Part - 2 - Shenba

    https://www.pustaka.co.in

    நின்னைச் சரணடைந்தேன் பாகம் – 2

    Ninnai Saranadainthean Part – 2

    Author:

    ஷென்பா

    Shenba

    For more books

    https://www.pustaka.co.in/home/author/shenba

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 44

    அத்தியாயம் – 45

    அத்தியாயம் – 46

    அத்தியாயம் – 47

    அத்தியாயம் – 48

    அத்தியாயம் – 49

    அத்தியாயம் - 50

    அத்தியாயம் – 51

    அத்தியாயம் – 52

    அத்தியாயம் – 53

    அத்தியாயம் - 54

    அத்தியாயம் - 55

    அத்தியாயம் - 56

    அத்தியாயம் - 57

    அத்தியாயம் - 58

    அத்தியாயம் - 59

    அத்தியாயம் - 60

    அத்தியாயம் - 61

    அத்தியாயம் – 62

    அத்தியாயம் - 63

    அத்தியாயம் - 64

    அத்தியாயம் - 65

    அத்தியாயம் - 66

    EPILOGUE - II

    EPILOGUE - II

    அத்தியாயம் – 44

    இரவின் துணையோடு, ரூஃப் கார்டனில் அமர்ந்து வானத்தை வெறித்தபடி யோசனையில் மூழ்கியிருந்த சித்தார்த்தின் எதிரில் வந்து அமர்ந்தாள் சுபா.

    என்ன சித்தார்த்! எந்தக் கோட்டையைப் பிடிக்க இந்த யோசனை? என்றாள் புன்னகையுடன்.

    சலிப்புடன், மச்... என்றான்.

    ஓஹ்! மதுமிதாவோட மனக்கோட்டையைப் பிடிக்கவா!

    நான் எவ்வளவு முட்டாள்தனமா நடந்துக்கிட்டு இருக்கேன் சுபா. ரெண்டு, மூணு முறை அவளை டெல்லியில் பக்கத்தில் இருந்தும் பார்க்க முடியாமல் போச்சு. ராஜேஷ் முதலில் மதுவைப் பற்றிச் சொல்லும் போது, நான் இந்த அர்ஜுன்னு நினைக்கவே இல்ல. அவன் இறந்து ரெண்டு வருஷம் ஆகப்போகுது. ஆனாலும், அவளோட மனசுல இன்னும் அவன் வாழ்ந்துகிட்டு இருக்கான். அப்போ அவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் எவ்வளவு அண்டர்ஸ்டாண்டிங் இருந்திருக்கணும் என்ற தம்பியை வியப்புடன் பார்த்தாள்.

    நீயும் தானேடா அவளை உன் உயிரா காதலிக்கிற என்றாள் ஆறுதலாக.

    என்ன காதலிச்சி என்ன சுபா? எனக்கு அவள் மேல நம்பிக்கை இல்லாமல் போச்சே. இந்தக் கடவுளுக்குக் கண்ணே இல்லைன்னு சொல்றது உண்மைதானோன்னு தோணுது. அர்ஜுனையும், மதுவையும் ஒண்ணு சேர்த்து வச்சிருக்கலாம். அந்த வருத்தம் என் ஒருத்தனோட போயிருக்கும். இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தி, என் மதுவை ரொம்பவே அழ வச்சிட்டானே என்று விரக்தியுடன் சொன்னான்.

    ம்ம்... அர்ஜுன் இறந்தது எல்லோருக்குமே அதிர்ச்சி தான். அதுக்காக நடந்ததையே நினைச்சி நீ கவலைப்படாதேடா. நாளைக்கு அறுபதாம் கல்யாணத்துக்கு அழைக்க, மது வீட்டுக்குப் போறோம். நீயும் வரியா? என்றாள்.

    எனக்கும் அவளைப் பார்க்கணும்னு ஆசை தான். ஆனா, நான் வந்தா வீணா பிரச்சனை வரும். ஈவ்னிங் தான் பெரிசா அவகிட்ட சேலஜ்ஜெல்லாம் செய்துட்டு வந்திருக்கேன். இன்னைக்கே என்னை என்னவோ வில்லனைப் பார்ப்பது மாதிரி தான் பயத்தோட பார்த்தா என்றவன் கண்களில் வேதனை தெரிந்தது.

    அதைக் கேட்டு அவள் சிரிக்க, சிரிக்காதே சுபா! நானே வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கேன். அவளோட சம்மதத்தை எப்படி வாங்கறதுன்னே தெரியலை என்றான் கவலையுடன்.

    டோன்ட் வொர்ரி பிரதர் நடப்பதெல்லாம் நன்மைக்கே. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும். நாளைக்கு மதுகிட்ட, நீ ரொம்ப விசாரிச்சதா சொல்லட்டுமா? என்று கிண்டலாகக் கேட்டாள்.

    இரு கைகளையும் உயர்த்தி ஒரு பெரிய கும்பிடு போட்டு, அம்மா தாயே! நீ உன் திருவாயை மூடிக்கிட்டு இரு. வந்த வேலை முடிந்ததும் மூட்டையைக் கட்டிக்கிட்டு கிளம்பு. இருக்கும் பிரச்சனையை, தீராத பிரச்சனையா மாத்திட்டுப் போய்டாதே என்றான்.

    சிரிப்பை அடக்கிக்கொண்டு பெருந்தன்மையாகச் சொல்வது போல, ஏதோ, நீ ரொம்பப் பீலிங்ஸ்ல இருக்கியேன்னு சொன்னேன். என்னவோ என்னை இந்தத் துரத்து துரத்துற? என்றாள்.

    நீ ஒண்ணும் சொல்ல வேணாம். நாளைக்கு மது வீட்டுக்குப் போனீங்களா... இன்வைட் செய்தீங்கலான்னு கிளம்பி வந்துட்டே இருக்கணும். அங்கே போய் அவளைப் பரிதாபமா பார்க்கற வேலை எல்லாம் வேண்டாம். நீ என்னோட அக்கான்னு தெரிஞ்சி போச்சு. இனியும், அவள் உன்கிட்டப் பழைய மாதிரி பேசுவாளான்னே சந்தேகம் தான் என்று அவன் சொல்லிக்கொண்டிருக்க, அதைக் கேட்டபடியே வந்தாள் மீரா.

    அடடடடா... என்ன ஒரு பாசம்! அவளைக் கொஞ்சங்கூட விட்டுகொடுக்க மாட்டேன்றீங்களே சித்தார்த். அவளுக்காக இவ்வளவு பார்க்கறீங்க... ஆனா, அவ உங்களைப் புரிஞ்சிக்கவே இல்லையே? என்றாள்.

    மது என்னோட பாதி அண்ணி. அவளுக்காக நான்தான் பார்க்கணும். அவள் பட்டக் கஷ்டமெல்லாம் முடிஞ்சி போச்சு. இனி, அவளோட வாழ்க்கைல சந்தோஷம் மட்டும்தான் இருக்கணும். அதுக்காக என்ன முடியுமோ கண்டிப்பா செய்வேன். என்னை அவளுக்குப் புரிய வைப்பேன் என்று உறுதியோடு சொன்னான்.

    மீரா, பெருமையுடன் சித்தார்த்தைப் பார்த்தாள். ஆல் த பெஸ்ட் கொழுந்தனாரே! நாங்க எல்லோரும் உங்க பக்கம் தான். மது உங்க பக்கம் சாயத்தான் போறா. அதுக்கு என்னோட அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என்று சித்தார்த்தின் கையைப் பிடித்துக் குலுக்கினாள்.

    அவனும் சிரித்துக்கொண்டே தலையைக் கோதிக்கொண்டான்.

    அன்று வெள்ளிக்கழமை. காலையில் கோவிலுக்குச் சென்று வந்த மது, நிதானமாக சமைத்து விட்டு காலை உணவை முடித்துக்கொண்டு, பூக்களைச் சரமாகத் தொடுத்தபடி அமர்ந்திருந்தாள்.

    விமலா மெதுவாக, என்ன மது இன்னைக்கு ஆபீஸ் போகலையா? நேத்தோட உன் லீவ் முடிஞ்சிருக்குமே? என்றார் கேள்வியுடன்.

    அவளும் இந்தக் கேள்வியை எதிர்பார்த்தே காத்திருந்தாள். அதனால் தயங்காமல், இல்லம்மா! திங்கட்கிழமைலயிருந்து போகலாம்னு இருக்கேன் என்று தலையை நிமிராமலே சொல்லிவிட்டுப் பூவை, பூவைத் தொடுத்துக் கொண்டிருந்தாள். வாய் அவர்களுக்குப் பதில் சொன்னாலும், மனம் அவர்களிடம் தேவை இல்லாமல் பொய் சொல்கிறோமே என்று வருந்தியது.

    எதையுமே கண்களைப் பார்த்துப் பேசுபவள் நேருக்கு நேராகப் பார்க்காமல் பேசியதிலிருந்தே, ‘இனி, ஆபீஸ் போக விருப்பம் இல்லை’ என்பதை புரிந்துக்கொண்டனர். அவர்கள் அதையும் எதிர்பார்த்தே இருந்தனர்.

    தீபக்கின் திருமணத்திற்கு முன்பே இனி, அந்த அலுவலகத்துக்குச் செல்லக்கூடாது என்று முடிவெடுத்து அதன்படி வேறு வேலைக்கு விண்ணப்பித்து போனிலும், அடுத்த கட்டமான ஆன்லைன் இண்டர்வியூவிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு, வேலையில் சேர அனுமதி கடிதத்திற்காக காத்திருக்கிறாள்.

    எப்படியும் வேலைக்குப் போய்ச் சேர பதினைந்து நாட்கள் இருக்கிறது. அதுவரை என்ன செய்வது? என்று யோசித்தவள், ‘இப்போதைக்கு விஷயத்தை வீட்டில் சொல்ல வேண்டாம். பதினைந்து நாட்களும் ஸ்ரீராமின் ஹோமிற்குச் சென்று வரலாம். புது வேலையில் சேர்ந்த பின், வீட்டில் சொல்லிக்கொள்ளலாம். இப்போது சொன்னால் ஏன்? எதற்கு? என்ற பல கேள்விகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்’ என்று முடிவெடுத்திருந்தாள்.

    அம்மா! நான் ஹோம் வரைக்கும் போயிட்டு வரட்டுமா? என்று அனுமதி கேட்டாள்.

    போயிட்டுவாம்மா. நேரத்தோடு வந்திடு என்றார்.

    சரிம்மா என்றவள் ஹாலில் மாட்டியிருந்த அர்ஜுனின் படத்திற்குப் பூவைப் போட்டுவிட்டு மெல்ல அந்தப் போட்டோவை வருடியபடி நின்றிருந்தாள்.

    வாங்க வாங்க என்ற குரல் அவளை நினைவுல்கிற்கு வரவழைத்தது. யார் வந்திருப்பது என்று திரும்பிப் பார்த்தவள், ஹரி, ஆதி, மீரா, சுபா நால்வரும் நின்றிருப்பதைப் பார்த்ததும் ஒரு கணம் எதுவும் தோன்றாமல் அப்படியே நின்றிருந்தாள்.

    அவளது தயக்கத்தைக் கண்ட ஹரி, என்ன மதுமிதா எப்படி இருக்க? என்று விசாரித்தார்.

    சாரி, வாங்க உட்காருங்க. நான் நல்லாயிருக்கேன். நீங்க எல்லோரும் எப்படியிருக்கீங்க? என்று விசாரித்தவள், இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய தடுமாற்றத்தை மறைக்க கிச்சனுக்குச் சென்றாள்.

    ஹாலில் இருந்தவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். சுபா, சித்தார்த்தின் அக்கா என்று தெரிந்ததும் சந்துருவும், விமலாவும் ஆச்சரியம் அடைந்தனர். பிறகு ஆண்களின் பேசும் வேறு திசையில் செல்ல, பெண்களின் பேச்சு வேறு புறமும் சென்றது.

    மதுவின் மனமோ, ‘இவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள்?’ என்று யோசித்தபடியே காஃபியுடன் ஹாலுக்கு வந்தாள்.

    காஃபியை கொடுத்துவிட்டு நின்றிருந்தவளை, உட்கார் மது என்றாள் மீரா.

    என்ன மது ஆபீஸ் போகலையா? என்று சுபா கேட்டதும், இல்ல... லீவ் எக்ஸ்ட்டர்ன் பண்ணியிருக்கேன் என்றவளை மீராவின் விழிகள் குறுகுறுவென அளவெடுத்துக் கொண்டிருப்பதைக் கவனித்த மதுவிற்கு, அங்கே அமர்ந்திருப்பதே சங்கடமாக இருந்தது.

    ‘சுபா, தன்னைப் பற்றி வீட்டில் அனைவரிடமும் சொல்லி இருப்பாளோ’ என்ற எண்ணமே அவளை அமைதி இல்லாமல் செய்தது.

    குங்குமம் எடுத்துக்கோம்மா! என்ற சுபாவின் குரல் அழைக்கும் வரை யோசனையில் இருந்தவள் எழுந்து குங்குமம் எடுத்துக்கொண்டு சுபாவைப் பார்த்தாள். சிரித்துக்கொண்டே அவளது நெற்றியில் குங்குமத்தைச் சரியாக வைத்தாள் சுபா.

    மீராவும், ஆதியும் தாம்பூலத்துடன் பத்திரிகையை வைத்துக் கொடுத்து, அனைவரும் கட்டாயம் வரவேண்டும் என்று அழைத்தனர். அதுவரை குழம்பிக்கொண்டிருந்த மதுவிற்கு அவர்கள் வந்த காரணம் தெரிந்ததும், சற்று நிம்மதியானது.

    மதுவின் போன் ஒலிக்க, எக்ஸ்கியூஸ்மீ என்று கேட்டுக்கொண்டு எழுந்து சென்றாள். போனில், "கிளம்பிட்டேன்…, கெஸ்ட் வந்திருக்காங்க..., வந்திடுவேன்… என்று பேசிவிட்டு வந்தாள்.

    சுபா மதுவிடம், எங்கேயாவது வெளியே போகணுமா மது? நீ கிளம்பறதுன்னா கிளம்பு என்றாள்.

    பரவாயில்லை. நான் மெதுவா போய்க்கிறேன் என்றாள்.

    சுபா ஏதோ பேச விரும்புகிறாள், என்று புரிந்துக்கொண்ட விமலா, நீ கிளம்பு மது. போய்ட்டு நேரத்தோடு வந்திடு என்று சொல்ல, வேறு வழியில்லாமல் கிளம்பினாள்.

    அவள் கிளம்பி சென்றதும், என்னம்மா! மது இப்போ எப்படியிருக்கா? என்றாள் சுபா.

    அப்படியே தான் இருக்கா சுபா! நடுவில் ஆள் கொஞ்சம் மாறினா மாதிரி இருந்ததுன்னு, நாங்ககூடக் கொஞ்சம் சந்தோஷமா இருந்தோம். ஆனா, இப்போ திரும்பவும் உள்ளுக்குள்ளே சுருண்டுகிட்டா என்றார் கண்கள் கலங்க.

    கவலைப்படாதீங்க அம்மா! எங்க அம்மா, அப்பாவுக்கும் கூட எல்லா விஷயமும் தெரியும். அவங்களுக்கும் மது எங்க வீட்டு மருமகளா வர்றதுல பூரண சம்மதம். என் தம்பி, அவளை நல்லபடியா பார்த்துப்பான். நீங்க, மதுகிட்டப் பேசி எப்படியாவது சம்மதம் வாங்குங்க என்றாள்.

    அவள் இருக்கற மனநிலைக்கு இனி, ஆபீஸ் போவாளான்னே சந்தேகம் தான் சுபா என்றாள் மீரா.

    நாங்களும் அதைத் தான் நினைக்கிறோம். அவளும், எதுவும் சொல்லல; நாங்களும் கேட்கல. இப்போ கூட, ஸ்ரீராமோட ஹோமுக்குப் போறேன்னு கிளம்பிப் போயிருக்கா என்றார் சந்திர சேகர்.

    ஹரி, யாரு? நம்ம அர்ஜுனோட ஃப்ரெண்ட் ஸ்ரீராமா? என்றார்.

    சந்துரு, ஆமாம் அங்கே தான் போயிருக்கா என்றதும், இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு எழுந்து வெளியே சென்றார் ஹரி.

    சித்தார்த்தின் எண்ணுக்கு அழைத்து, சித்தார்த்! என் ரூம்ல ஒரு ப்ளூ கலர் சூட்கேஸ் இருக்கும். அதை நான் சொல்லும் இடத்தில் கொடுத்துட்டு வர முடியுமா? நாம போனாதான் நல்லா இருக்கும் என்றார்.

    அவனும், ஃப்ரீயா தான் மாமா இருக்கேன். அட்ரஸ் அனுப்பிடுங்க என்றவன், சரி, இப்பவே கிளம்பறேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.

    மைத்துனனுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு, உள்ளே சென்றார் ஹரி ப்ரசாத். சிறிதுநேரம் பழைய கதைகளைப் பேசிவிட்டு, மீண்டும் சஷ்டியப்த பூர்த்திக்கு அழைத்துவிட்டுக் கிளம்பினார்கள்.

    மதுமிதா ஹோமிற்குச் சென்று சேர்ந்த போது, ஸ்ரீராம் எங்கேயோ வெளியே சென்றிருப்பதாக அங்கிருந்தவர் சொல்ல, சரி நான் குழந்தைங்க கூட பேசிக்கிட்டு இருக்கேன். அண்ணா வந்ததும் சொல்லுங்க என்றவள், குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த அறைக்குச் சென்றாள். அவளைக் கண்டதும் குழந்தைகள் ஆர்ப்பரிப்புடன் வரவேற்க, அவர்களுடன் தானும் ஒருத்தியாக ஐக்கியமானாள்.

    சற்றுநேரத்தில் ஸ்ரீராம் வந்தது, அவள் வந்திருப்பதைத் தெரிவித்தனர். அவளைத் தேடிச் சென்றவன், அவள் குழந்தைகளுடன் சேர்ந்து பாட்டுப் பாடுவதைக் கண்டவன், அவளை அழைக்காமல் திரும்பிவிட்டான்.

    ஸ்ரீராமிடம் அவனைப் பார்க்க யாரோ வந்திருப்பதாகச் சொல்லி விசிட்டிங் கார்டை கொடுத்தனர். கார்டில் இருந்த சித்தார்த், சிருஷ்டி மல்டிமீடியா என்ற பெயரைப் பார்த்ததும், எழுந்து வெளியில் வந்தவன், ஹலோ மிஸ்டர். சித்தார்த்! நான் ஸ்ரீராம் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவனை உள்ளே அழைத்துச் சென்றான்.

    என்ன விஷயமா வந்திருக்கீங்க? என்று ஆராய்ச்சியுடன் கேட்டான் ஸ்ரீராம்.

    மிஸ்டர்.ஹரி பிரசாத் சீஃப் கமெண்டர் இன் ஏர் ஃபோர்ஸ்… அவர் என்னோட அக்கா வீட்டுக்காரர். அவர் இந்தப் பாக்ஸை உங்கட்ட கொடுத்திடச் சொன்னார் என்றான்.

    சற்று இயல்பானவன், ஓ! தேங்க்யூ சோ மச். சார்கிட்ட சில புக்ஸ் கேட்டிருந்தேன். அதைத் தான் வாங்கி அனுப்பியிருக்கணும். ரொம்பத் தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடுங்க. நான் அப்புறம் போன் செய்து பேசறேன் என்றான்.

    சற்று நேரம் அந்த ஹோமைப் பற்றி விசாரித்த சித்தார்த், தன்னுடைய செக் புக்கை எடுத்து எழுதிக்கொண்டிருந்த போது, என்னைச் சீக்கிரம் வரச்சொல்லிட்டு, நீங்க எங்கேண்ணா போய்ட்டீங்க? என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தவள், அங்கே சித்தார்த்தைக் கண்டதும் திகைத்துப் போனாள்.

    சித்தார்த் ஆனந்தத்திலும்; மதுமிதா அதிர்ச்சியிலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, ஸ்ரீராம் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.

    வா மது என்று ஸ்ரீராம் அழைத்ததும், வேறு வழியின்றி உள்ளே சென்றாள்.

    அங்கே ஒருவன் இருப்பதைக் கண்டுகொள்ளாமல், அண்ணா! நான் கிளம்பறேன். நீங்க ப்ரோக்ராமுக்குத் தேவையானதை செய்துடுங்க. மீதியை நான் போன் செய்து கேட்டுக்கறேன் என்றாள்.

    சித்தார்த்தின் பார்வை, விலகாமல் அவளிடமே நிலைத்திருந்தது. அவனது கண்களில் தெரிந்த ஆர்வத்தையும், காதலையும் ஸ்ரீராம் கவனிக்க தவறவில்லை.

    அதேநேரம் மதுவின் விலகலையும் மனதில் குறித்துக்கொண்டான். ஆனால், அவளுக்கே புரியாத ஒன்று, ஸ்ரீராமுக்குப் புரிந்தது.

    மது! இந்தப் புக்ஸை லைப்ரரியில் கொஞ்சம் அரேஞ் பண்ணிடேன் என்று சித்தார்த் கொண்டுவந்த பாக்ஸைக் கொடுக்க, வாங்கிக்கொண்டவள், சித்தார்த்தை ஒரு ஓரப்பார்வைப் பார்த்துவிட்டுச் சென்றாள்.

    அவள் அங்கிருந்து சென்றதும் செக்கை ஸ்ரீராமிடம் கொடுத்தவன், இனி, ஒவ்வொரு மாசமும் என்னோட காண்ட்ரிபியூஷன் உங்களுக்கு வந்து சேர்ந்திடும். உங்களுக்கு ஏதாவது தேவைன்னாலும் ஒரு ஃப்ரெண்டா என்னைக் கேட்கலாம் என்றவன் கிளம்ப, ஸ்ரீராமும் கார் வரை சென்று வழியனுப்பி வைத்தான்.

    லைப்ரரியின் ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் மதுமிதா. அவ்வளவு நேரம், ‘அவன் எதற்காக வந்தான்? எங்கே போனாலும் என்னைத் தொடர்ந்து வருவதே இவனுக்கு வேலையாய் போயிற்று’ என்று திட்டிக்கொண்டிருந்தவள், அவன் கிளம்பிச் செல்வதைப் பார்த்து, ‘தன்னிடம் ஒன்றுமே சொல்லாமல் கிளம்புகிறானே!’ என்று அவளது மனம் தவித்தது. ஆனால், அந்தத் தவிப்பைக் கூட அவளால் உணர முடியவில்லை.

    திடீரென கதவைத் தட்டும் சப்தம் கேட்டதும், தனது உணர்வுகளில் இருந்து விடுபட்டவளாகத் திரும்பிப் பார்த்தாள். "மது! காஃபி சாப்பிடுவோமா! என்ற ஸ்ரீராமைப் பார்த்து சரி என்றாள்.

    அந்தக் காம்பௌண்டிலேயே இருந்த தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றவன், நுரை ததும்ப இரு கோப்பைகளில் ஃபில்டர் காஃபியுடன் வந்தான்.

    தேங்க்யூண்ணா! என்றாள் முறுவலுடன்.

    ஒரு மிடறு பருகியவன், மது! நான் நேரடியா விஷயத்துக்கு வரேன் என்றவனை ஆழ்ந்து பார்த்தாள். உன் லைஃபைப் பத்தி என்ன முடிவு செய்திருக்க? என்று கேட்டான்.

    புரியாமல், நீங்க என்ன கேட்க வரீங்கன்னு எனக்குப் புரியல? என்றாள்.

    உன் கல்யாணத்தைப் பத்தி என்ன முடிவு செய்திருக்க? என்று கேட்டதும், பதில் சொல்லாமல் விரலால் கப்பின் விளிம்பில் வட்டம் போட்டுக் கொண்டிருந்தாள். நான் கேட்ட கேள்விக்கு ஒண்ணுமே சொல்லல என்றான்.

    பதில் சொல்லணும்னு தோணல என்றாள் சிறு எரிச்சலுடன்.

    சொல்லணும்னு தோணலையா... இல்ல, என்ன சொல்றதுன்னு தெரியலையா? என்றான் விடாமல்.

    சற்றுக் கோபத்துடன், உங்களுக்கு எப்படித் தோணுதோ, அப்படியே வச்சிக்கோங்க என்றாள்.

    எதுக்கு இவ்வளவு கோபம்? நான் என்ன தப்பா கேட்டுட்டேன்?

    எனக்குத் தெரியும். யார் என்ன சொல்லியிருப்பாங்க… இத்தனை நாளா இல்லாம, திடீர்னு இன்னைக்கு நீங்க இந்தக் கேள்வியைக் கேட்கக் காரணம் சித்தார்த்ன்னு எனக்குப் புரியுது. அதைக் கூடப் புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு, நான் சின்னக் குழந்தை இல்ல.

    மது! நீ தேவையே இல்லாம யோசிக்கிற. சித்தார்த் உன்னைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட என்னிடம் பேசவே இல்லை. நானா தான் உன்னைக் கேட்கறேன். இப்போ, நீ சொல்றதைப் பார்த்தா, இதில் என்னவோ விஷயம் இருக்குப் போல என்றான் அவளைக் கூர்ந்து பார்த்தபடி.

    ‘நானே உளறிவிட்டேனோ!’ என்றெண்ணி உதட்டைக் கடித்துக்கொண்டாள்.

    மது! அர்ஜுன் உன்னைக் கல்யாணம் செய்து, கடைசிவரை உன்னோடு வாழ்ந்திருந்தால் எவ்வளவோ நல்லா இருந்திருக்கும். ஆனா, அது நடக்காத விஷயமா முடிஞ்சி போச்சு. உனக்குச் சின்ன வயசு. நீ ஒண்ணும் எல்லாத்தையும் ஆண்டு அனுபவித்த, நூத்துக் கிழவி இல்ல. உனக்கும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வரணும்னா. நீ ஏன் ஒரு கல்யாணம் செய்துக்கக் கூடாது? அர்ஜுனோட கடைசி ஆசையும் அதானே? அவனோட ஆத்மாவும் அதைத் தான் எதிர்பார்க்கும் என்றபோதே ஸ்ரீராமின் குரல் கம்ம, மதுவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

    தன்னைச் சுதாரித்துக்கொண்ட ஸ்ரீராம், நீ ஏன் சித்தார்த்தை... என்று ஆரம்பித்ததும், நோ, நோ... என்று வேகமாக மறுத்தாள்.

    மது வீணா பிடிவாதமா இருக்காதே. இந்தச் சித்தார்த் உன்னை ரொம்பவே நேசிக்கிறான். அவன் உன்னைப் பார்த்த அந்தப் பார்வையிலேயே தெரியுது. நிதானமா யோசி மது... உனக்காக, உன்னைச் சேர்ந்தவங்களோட சந்தோஷத்துக்காக... நல்ல முடிவா எடு. எனக்குத் தெரிந்து, சித்தார்த் இஸ் வெரி குட் சாய்ஸ் என்றான்.

    அவள் எதுவும் சொல்லாமல் எழுந்தாள். நான் கிளம்பறேன் அண்ணா! நான், என் மன நிம்மதிக்காக அடிக்கடி இங்கே வந்து போறது, உங்களுக்குப் பிடிக்கலன்னா நேராவே சொல்லிடுங்க. இப்படி என் கல்யாணத்தைப் பற்றிப் பேசி, நான் இங்கே வருவதைத் தடுத்து நிறுத்தப் பார்க்காதீங்க என்று அழுத்தமான குரலில் மொழிந்துவிட்டுச் சென்றாள்.

    ஸ்ரீராம், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

    அத்தியாயம் – 45

    வீட்டிற்கு வந்த பிறகும், அவளது கோபம் கொஞ்சமும் குறையவில்லை. அவள் வீட்டிற்கு வந்து சேரும் முன்பே ஸ்ரீராம் விமலாவிற்குப் போன் செய்து, நடந்த அனைத்தையும் சொல்லி இருந்தான். ஆதங்கத்துடன் கணவரிடம் அதைப் பகிர்ந்து கொண்டார் விமலா.

    அவள் மனசுல என்னதான் நினைச்சிக்கிட்டு இருக்கா? வரட்டும். நான் எல்லாத்தையும் பேசிடப்போறேன். இனியும், அவளா மனசு மாறுவான்னு காத்துக்கிட்டு இருக்க முடியாது என்று கோபமாகச் சொன்னார் விமலா.

    விமலா! கோபப்பட்டு உன் உடம்பைக் கெடுத்துக்காதே. ஸ்ரீராம் தான் சொன்னானே விட்டுப் பிடிக்கச் சொல்லி... என்றார்.

    இதுக்கு மேல என்னத்த விட்டு பிடிக்கிறது? இதுக்கு மேலயும் பொறுமையா எப்படியிருக்க முடியும்? நானும் இப்போ மாறுவா, அப்போ சம்மதிப்பான்னு எவ்வளவு நாளைக்குக் காத்துட்டு இருக்க முடியும். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னு, நான் வேண்டாத தெய்வம் இல்ல. அதை, என்னைக்குப் புரிஞ்சிக்க போறா? நமக்கு மட்டும், என் பிள்ளை போனதுல வருத்தம் இல்லயா? என்று அழுதார்.

    இங்கே பார்… கோபத்துல ஏதாவது வார்த்தையை விட்டுடாதே. அவன் நமக்குப் பிள்ளை. ஆனா, அவளுக்கு? ஆறே மாசம் பழகினவனுக்காக, தன்னோட வாழ்க்கையைத் தொலைச்சிட்டு நிக்கிறா. மனசால நொந்து போயிருக்கவளை உயிரோட கொன்னுடுற மாதிரி எதுவும் பேசிடாதே என்றவர் கலங்கிய விழிகளைத் துடைத்துக் கொண்டார்.

    அவளை மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க, நாம கொடுத்து வச்சிருக்கணும். எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும். அவளும் புரிஞ்சிக்குவா விமலா! முடிஞ்சி போனது வாழ்க்கை இல்ல. இனி, நடக்கப் போவது தான் நிஜம்ன்னு அவளுக்குப் புரியும். நீ அமைதியா இரு என்றார் ஆறுதலுடன்.

    ஆட்டோவிலிருந்து இறங்கியவள், கோபத்துடன் கேட்டை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள். இத்தனை நாட்களில் அவளது முகத்தில் இப்படி ஒரு கோபத்தைக் கண்டதில்லை.

    விருட்டென செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே வந்தவள், ஹாலில் அமர்ந்திருந்தச் சந்துருவைப் பார்த்தும் ஒரு கணம் தயங்கினாள். அடுத்த நொடியே முகத்தை இயல்பாக மாற்றிக்கொண்டு, அப்பா! சாப்பிட்டீங்களா? மாத்திரை போட்டாச்சா? அம்மாவும் மாத்திரை எடுத்துக்கிட்டாங்களா என்று வாஞ்சையுடன் கேட்டவளைப் பார்த்த சந்துருவின் கண்கள் பாசத்தை வெளிப்படுதின. நாங்க சாப்பிட்டோம். மாத்திரையும் போட்டாச்சி என்றார்.

    அம்மா எங்கே? என்றதற்கு, தூங்கிட்டு இருக்காம்மா! நீ ஈவ்னிங் தான் வருவேன்னு சொன்ன... மதியமே வந்துட்ட என்று கேட்டதும், தலைவலி... அதான் என்றவள், விமலாவின் அறைக்குச் சென்று அவர் தூங்குவதை எட்டிப் பார்த்தாள்.

    நீ சாபிட்டியாம்மா? என்றவரின் குரலுக்கு, பசி இல்லப்பா! என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

    அவள் செல்வதையே பார்த்திருந்த சந்துரு, ‘எங்களுக்காக இப்படிப் பார்த்துப் பார்த்துச் செய்கிறாயே, உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும் என்று நாங்கள் நினைப்பது தவறா? அதை நீ என்று புரிந்துகொள்வாய்?’ என்று வருந்தியபடியே அர்ஜுனின் படத்தைப் பார்த்தார். ‘இப்படி ஒரு பொண்ணு கூட வாழ, உனக்குக் கொடுத்து வைக்கலையே’ என்றவருக்கு துக்கத்தில் நெஞ்சை அடைப்பது போலிருந்தது.

    அறைக்கு வந்தவள், ஸ்ரீராம் கேட்ட கேள்விக்குத்தான் தேவை இல்லாமல் அவனை எடுத்தெறிந்து பேசியதை நினைத்து வருந்தினாள். இது எல்லாவற்றிற்கும் காரணம் அந்த சித்தார்த் தான்’ என்று கோபம் முழுதும் அவன் மீது திரும்பியது. அடுத்துவந்த இரு நாள்களும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தாள்.

    திங்கட்கிழமை கிளம்பி ஹோமிற்குச் சென்றவளுக்கு, ஸ்ரீராமின் முகத்தைப் பார்ப்பதற்கே தயக்கமாக இருந்தது. இருந்தாலும், செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஸ்ரீராமின் எதிரில் சென்று நின்றாள். அவளைப் பார்த்துச் சிரித்தவன், சாதாரணமாகப் பேச வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். அந்த வாரம் வேகமாக விரைய ராஜேஷும், தீபக்கும் தங்கள் ஹனிமூனை முடித்துக்கொண்டு வீடுவந்து சேர்ந்தனர்.

    ஈஸ்வரன், சந்துருவிடம் பேசி, ஞாயிற்றுக்கிழமை சித்தார்த் வீட்டு விசேஷத்திற்குத் தங்கள் வீட்டிலிருந்தே சென்றுவிடலாம் என்று முடிவு செய்திருந்தனர். மூவரும் சனிக்கிழமை அன்றே கொட்டிவாக்கம் வந்துவிட்டனர்.

    மறுநாள் காலையில் மது குளித்துவிட்டு வெளியில் வந்த போது, அனைவரும் எங்கேயோ செல்லத் தயாராகிக் கொண்டிருப்பது தெரிந்தது.

    சுடிதாரில் நின்றுகொண்டிருந்த மதுவைப் பார்த்து, என்ன கிளம்பாம சுடிதார்ல நின்னுட்டிருக்க? என்றாள் மேகலா.

    எங்கே கிளம்பணும் என்று புரியாமல் கேட்டவளிடம், ஏன்டி! நீ இந்த உலகத்தில் தான் இருக்கியா? இன்னைக்குச் சித்தார்த் வீட்ல விசேஷம்ன்னு தெரியாது? அதுக்குப் போறதுக்குத் தானே இங்கே வந்தே என்றாள்.

    அப்போதுதான், ‘அவர்கள் வந்து சென்றபின், தான் அந்த அழைப்பிதழைப் பார்க்கவே இல்லை என்றும், அதற்காகத் தான் இங்கே வந்திருப்பதாகக் கூட யாரும் சொல்லவில்லையே’ என்ற எண்ணமும் வந்தது.

    நான் வரல. நீங்க எல்லோரும் போய்ட்டு வாங்க என்றவள் அறைக்குள் செல்ல, மேகலா வித்யாவை அழைத்தாள்.

    கழுதைக்கு ஆகற மாதிரி, இருபத்தி மூணு வயசாகுது. இப்போதான் கார்ட்டூன் புக் படிச்சிக்கிட்டு இருக்கா. எழுந்து கிளம்பி வாடி. நாங்க எல்லோரும் தயாராகிவிட்டோம் என்று அதட்டலாகச் சொன்னாள் வித்யா.

    என்ன ரெண்டு பேரும் சேர்ந்து வந்து திட்டினா கிளம்பிடுவேனா? கிளம்பினவங்க எல்லோரும் போயிட்டு வாங்க. நான் வரலை என்றாள் பிடிவாதமாக.

    பைத்தியமாடி நீ! அவங்க அவ்வளவு தூரம் வீடு தேடி வந்து அழைச்சிட்டுப் போயிருக்காங்க. நீ என்னடான்னா வரலைன்னு சட்டம் பேசிகிட்டு இருக்க. சரி அவங்களுக்காக வேண்டாம். உங்க அண்ணனுக்காக வா என்றாள் வித்யா.

    என்னை ஏன் கட்டாயபடுத்துறீங்க? என் மனதுக்குப் பிடிக்காத எந்த விஷயத்தையும் செய்யமாட்டேன்னு தெரியும் இல்ல? என்று காட்டமாக கூறினாள்.

    ‘இவகிட்ட இப்படிப் பேசினால் சரிபடாது’ என்று எண்ணிய மேகலா, தெரியுமடீ நீ ஏன் வரமாட்டேன்னு சொல்றதற்கு என்ன காரணம்னு எனக்குப் புரிஞ்சி போச்சி என்றாள் கிண்டலாக.

    என்னடி புரிஞ்சிகிட்ட சொல்லேன். நானும் நீ புரிந்துகொண்ட விஷயத்தை தெரிந்து கொள்கிறேன் என்று எரிச்சலுடன் சொன்னாள்.

    நீ உன் மனசுல எதை வச்சிக்கிட்டு வரமாட்டேன்னு பிடிவாதமா இருக்கேன்னு சொன்னா மட்டும் நீ ஒத்துக்கவா போற... ஆனாலும் சொல்றேன் கேட்டுக்கோ. உனக்குச் சித்தார்த் மேல ஒரு ஈடுபாடு வந்திடுச்சி. உன்னைப் பார்த்து நீயே பயப்படுற. அதான் அவங்க வீட்டுக்குப் போகணும்னு சொன்னதும், உன்னால் வர முடியல... என்ற மேகலாவை முறைத்தாள்.

    விட்டா பேசிக்கிட்டே போற. உனக்குப் பிடிக்காத ஒருத்தரோட பேரைச் சொல்லுன்னு சொன்னா, யோசிக்காம சித்தார்த்ன்னு சொல்வேன். என் மனசுல எந்த விகல்பமும் இல்ல என்றாள் ஆத்திரத்துடன்.

    அவளது பதிலில் இருவரும் திகைத்து நின்றனர். இவளுக்குச் சித்தார்த் மேல் இவ்வளவு வெறுப்பா? சித்தார்த்தின் நல்ல மனத்தை இவள் எப்போது புரிந்து கொள்வாள்? ஏற்கெனவே, அவன் மீது கோபமாக இருந்தவளை மேலும் தூண்டிவிட்டோமோ!’ என்று எண்ணிய மேகலா, உன் மனசுல எந்த விகல்பமும் இல்லன்னு நாங்க எப்படி நம்பறது? என்றாள்.

    நீங்க நம்புனா நம்புங்க. நம்பாட்டா போங்களேன் என்று வெறுப்போடு சொன்னாள்.

    சந்தேகம்னு உன் பேர்ல வந்துடுச்சி. அது தவறுன்னு நீ தானே எங்களுக்குப் புரிய வைக்கணும். நிரூபிங்க மேடம். அப்போ நான் ஒத்துக்கறேன் என்றாள்.

    அதை மறுக்க நினைத்தவள், யோசனையுடன் ஊஞ்சலில் இருந்து எழுந்தாள்.

    ‘இவ்வளவு தூரம் கேட்கும் போது, நான் போகாமல் இருந்தால் தான் பிரச்சனை. சொன்னது போலப் போய்விட்டு வந்தால், நாளைக்குச் சித்தார்த் பற்றி என்னிடம் பேசுவதற்கு யோசிப்பார்கள்’ என்ற எண்ணத்தோடு, சரி வரேன் என்றாள்.

    அடுத்த அரைமணி நேரத்தில் அனைவரும் சித்தார்த் வீட்டிற்குச் சென்று சேர்ந்தனர். வரவேற்பில் நின்றிருந்தவன், அவளைக் கவனித்துவிட்டான். வெண்பட்டு நிறப் புடவையில் கால் முளைத்த மேகமாக நடந்து வருபவளைப் பார்த்துத் தன்னை மறந்தான். அந்த அழகை தன் இதயத்தில் கல்வெட்டாகப் பதித்துக் கொண்டான்.

    வீட்டிலிருந்து கிளம்பும்போது இருந்த அவளது கோப மனநிலை மாறி, ஒருவிதமான தவிப்பும், படபடப்புமே மிஞ்சி இருந்தது. அமைதியாக வந்து கொண்டிருந்தவள் வரவேற்பில் பட்டு வேட்டிச் சட்டையில் நின்றிருந்த சித்தார்த்தை விழியகலாமல் பார்த்தாள்.

    நேத்ராவின் அழைப்பு அவளைத் திசை திருப்ப, அவளைப் பார்த்து அழகாகப் புன்னகை புரிந்தாள். பெரியவர்களை வணங்கி வரவேற்றவன், ராஜேஷ், தீபக்கின் கைகளை பற்றி குலுக்கிவிட்டு இருவரையும் அழைத்து சென்றான். ஆண்கள் அனைவரும் தனியாக சென்று அமர்ந்துக்கொள்ள, நேத்ரா மற்றவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

    ஜீவா, ரமேஷ், சுரேஷ் நின்று பேசிக்கொண்டிருந்தவர்களின் கவனம், உள்ளே வந்தவர்களின் மீது சென்றது.

    ரமேஷ் ஆச்சரித்துடன், மது வரமாட்டான்னு நினைச்சேன். வந்திருக்காளே! என்றான்.

    அவ வரமட்டேன்னு சொன்னா யார் விடுவா? கூட்டிக்கிட்டு வந்திருப்பாங்க என்று சொல்லிக்கொண்டே திரும்பியவன், மதுவின் பார்வை தன் மீது சற்று எரிச்சலுடன் விழுவதைக் கவனித்துவிட்டு, ஐயோ என்னைத்தான் பார்க்கறா. நான் போய்ப் பேசிட்டு வரேன் என்று புன்னகையுடன் அவளருகில் சென்றான்.

    என்ன மது எப்படியிருக்கே? நல்லாயிருக்கியா?

    Enjoying the preview?
    Page 1 of 1