Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyiril Un Peyar Ezhuthugiren
Uyiril Un Peyar Ezhuthugiren
Uyiril Un Peyar Ezhuthugiren
Ebook284 pages2 hours

Uyiril Un Peyar Ezhuthugiren

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

கட்டுக்கடங்காத காட்டாற்று வெள்ளமாய் நெறிமுறை இல்லாமல் தன் விருப்பப்படி வாழும் நாயகன், நெஞ்சை வருடும் பூந்தென்றலாய் வரும் நாயகி, அதனால் நாயகன் வாழ்வில் வரும் மாற்றம் என இருவருக்குள்ளும் நிகழும் சுவாரஸ்யமான சம்பவமே “உயிரில் உன் பெயர் எழுதுகிறேன்

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580148107491
Uyiril Un Peyar Ezhuthugiren

Read more from Shenba

Related to Uyiril Un Peyar Ezhuthugiren

Related ebooks

Reviews for Uyiril Un Peyar Ezhuthugiren

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyiril Un Peyar Ezhuthugiren - Shenba

    https://www.pustaka.co.in

    உயிரில் உன் பெயர் எழுதுகிறேன்

    Uyiril Un Peyar Ezhuthugiren

    Author:

    ஷெண்பா

    Shenba

    For more books

    https://www.pustaka.co.in/home/author/shenba

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt.  Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம்- 1

    அத்தியாயம்- 2

    அத்தியாயம்- 3

    அத்தியாயம்- 4

    அத்தியாயம்- 5

    அத்தியாயம்- 6

    அத்தியாயம்- 7

    அத்தியாயம்- 8

    அத்தியாயம்- 9

    அத்தியாயம்- 10

    அத்தியாயம்- 11

    அத்தியாயம்- 12

    அத்தியாயம்- 13

    அத்தியாயம்- 14

    அத்தியாயம்- 15

    அத்தியாயம்- 16

    அத்தியாயம்- 17

    அத்தியாயம்- 18

    அத்தியாயம்- 19

    அத்தியாயம்- 20

    அத்தியாயம்- 21

    அத்தியாயம்- 22

    அத்தியாயம்- 23

    அத்தியாயம்- 24

    அத்தியாயம்- 1

    சூரியன் தன் இளங்கதிர்கள் மூலம் வெளிச்சத்தை பூமியில் பரப்ப, காலை புத்துணர்ச்சியில் புள்ளினங்கள் தங்கள் கூட்டைவிட்டு வெளியே பறக்க, சற்று தூரத்தில் சலசலவென ஓடும் அந்த அழகிய சிறு ஓடை அதில் முனிவனை போல ஒற்றைக்காலில் தவமிருந்த கொக்குகள் என அந்த இயற்கை அழகுகொஞ்சிய கிராமத்திற்கு வந்த பஸ்ஸில் விழிகளை மூடி ஜன்னலில் சாய்ந்து அமர்ந்திருந்த ஸ்வேதா வண்டி நின்றதை உணர்ந்து மெல்ல கண்களை திறந்தவள் பூங்குளம் என்ற பெயர்ப்பலகையை பார்த்துதான் இறங்கவேண்டிய ஊர் என்றுணர்ந்து தன் உடமை சகிதம் இறங்கியவளை சுற்றுப்புற அழகு மனதை கொள்ளைகொள்ள தன் பிரச்சனைகளை மறந்து மனம் பூரித்து நின்றாள்.

    குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா என் அருகிலிருந்த கடையிலிருந்து ஒலித்த பாடல் அவளை நிகழ்வுலகிற்கு கொண்டுவந்தது. அம்மா அடிக்கடி பாடும் பாட்டு. வாழ்க்கையே குறையாகிபோன அம்மாவிற்கு இந்த பாட்டு ரொம்பவே பிடிக்கும் என என்னும்போதே இப்போது அந்த அம்மா இல்லையே என்று எண்ணியவளின் கண்களில் ஈரம் கசிந்தது. கண்களை மூடி தன்னை நிலைப்படுத்திக்கொண்டவள் அந்த கடையை நோக்கி நடக்கும்போதே ஸ்வேதாவின் அருகில் கார் ஒன்று வந்து நின்றது.

    காரிலிருந்து இறங்கியவன், நீங்க தானே சென்னையிலிருந்து வரும் ஸ்வேதா

    ஆமாம் என தலையசைத்தாள்.

    அபிராமி அம்மா உங்களை அழைத்துவரச்சொன்னார்கள் என கார் கதவை திறந்துவிட்டான். பத்து நிமிட கார் பயணத்திற்கு பிறகு, 'நந்தவனம்' என்று கருப்பு பலகையில் பொன்னிற எழுத்துக்கள் மின்னிய அந்த பெரிய வீட்டின் உள்ளே சென்று நின்றது. இருபுறமும் தோட்டமும், மரங்களுமாக அந்த இடமே நந்தவனமாக காட்சி அளித்தது. உள்ளே வாம்மா என்ற டிரைவரின் குரல் அழைக்கவும் அவரை தொடர்ந்து உள்ளே சென்றாள்.

    இங்கே உட்காரும்மா இதோ வருகிறேன் என்ற டிரைவர் உள்ளே சென்று யாரையோ அழைத்து வந்தார். அவரை பார்த்ததும் ஸ்வேதா எழுந்து நின்றாள்.

    அம்மா உள்ளே பூஜை ரூம்ல இருக்காங்க. கொஞ்சம் நேரம் உட்கார்ந்து இரு வந்துவிடுவார்கள். நீ முகம் கழுவ வேண்டும் என்றால் அந்த அறைக்கு போய் கழுவிக்கொள் என சொல்ல ஸ்வேதா நன்றி கூறிவிட்டு அந்த அறைக்கு சென்றவள் தன் முகத்தை கழுவிக்கொண்டு வந்தாள்.

    உள்ளே சென்றவர் ஸ்வேதாவிற்கு குடிக்க காபி கொண்டுவந்து கொடுக்க நன்றி கூறி பெற்றுக்கொண்டவள் காபியை குடித்து முடித்துவிட்டு உட்கார்ந்து இருக்க பிடிக்காமல் கண்களை சுழலவிட்டாள். அவள் பக்கத்தில் இருந்த டீபாயில் கம்பளி நூற்கண்டு சிக்காக இருக்க அதை எடுத்தவள் பொறுமையாக அதன் சிக்கலை எடுத்துவிட்டு முடிக்கவும், பூஜை முடித்துக்கொண்டு அபிராமி அம்மாள் வர சரியாக இருந்தது.

    நடுத்தர வயதில் அங்குமிங்கும் வெள்ளிக்கம்பிகளாக நரை ஓட மெல்லிய சரிகை இட்ட காசிபட்டில் பாந்தமாக இருந்தவரை கண்டதும் தன்னால் மரியாதை எழ எழுந்து நின்ற ஸ்வேதா இருக்கைகளை கூப்பி வணக்கம் மேடம் என்றாள்.

    உயரமாக, நீள கூந்தலுடன் எந்த அலங்காரமும் இல்லாமல் புன்னகையை மட்டும் சுமந்து கொண்டிருந்த போதும் தனி அழகோடு விளங்கியவளை பார்த்ததும் அபிராமிக்கு முகத்தில் ஒரு திருப்தியான புன்னகை மலர்ந்தது.

    உட்கார் ஸ்வேதா என்றவர் தானும் அவள் அருகில் அமர்ந்தார். மதர் உன்னை பற்றி சொன்னார்கள். நீ ரொம்ப பொறுமையான, பொறுப்பான பொண்ணு என்று அதை இப்போ நேரிலும் பார்த்துவிட்டேன் என்று சொல்லியபடி நூற்கண்டை பார்த்தார்.

    நான் உன்னை பற்றி எதுவும் கேட்க போவது இல்லை. நீ இங்கேயே தங்கிக்கொள்ளலாம். உன்னுடைய வேலை தினம் எனக்கு வரும் போன்காலை குறித்துவைத்து சொல்லவேண்டும். வரவு செலவு கணக்கை எழுதிவைக்கணும். என்கூட பேசணும், சிரிக்கணும், நான் வெளியில் போகும் போது நீயும் என்னோடு வரணும். சரியா என்றார். வார்த்தைகள் அழுத்தம் திருத்தமாக அதிகாரமாக வந்தபோதும் அதில் அன்பும் அக்கறையும் கலந்தே காணப்பட்டது.

    ஸ்வேதா புன்னகையுடன் தலையாட்ட நீ போய் குளித்துவிட்டு வா ஸ்வேதா. பலகாரம் சாப்பிடலாம் என்றவர் உள்ளே திரும்பி, மீனாட்சி ஸ்வேதாவுக்கு அவளோட ரூமை காட்டு என்றதும் உள்ளிருந்து வந்த மீனாட்சி ஸ்வேதாவை அவளது அறைக்கு அழைத்து சென்றார்.

    குளித்துவிட்டு வந்தவளுடன் அமர்ந்து அபிராமியும் சேர்ந்து காலை உணவை முடித்தார். சிறிது நேரம் அவளுடன் பொதுவாக பேசிக்கொண்டிருந்தவர் அவள் முகத்தில் சோர்வு தெரிய, நீ கொஞ்சம் நேரம்படுத்து எழுந்திரு ஸ்வேதா. ரயில் பயணம், பஸ் பயணம் ரெண்டும் சேர்ந்து நீ களைப்பாக தெரிகிறாய். அத்தோடு உன்னுடைய வேலையை இரண்டு நாட்கள் கழித்து தொடங்கலாம்.

    சரிங்க மேடம் என்றவளை பார்த்து, என்னை அம்மான்னே கூப்பிடும்மா. இதை உன் வீடாக நினைத்துக்கொள், உனக்கு என்ன வேண்டுமோ தயங்காமல் கேள் என்றதும், சரிங்கம்மா என்னும் போதே அவள் கண்கள் கலங்க சமாளித்தவள் தன் அறைக்கு வந்து சேர்ந்தாள். தான் ஒரு பாதுகாப்பான இடத்தில் தான் இருக்கிறோம் என்ற நம்பிக்கையுடன் தன் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை நினைக்க பிடிக்காமல் கண்களை மூடிபடுத்தவள் நீண்ட நாட்களுக்கு பிறகு நிம்மதியாக உறங்கினாள்.

    மெல்ல கண்களை திறந்தவள் கடிகாரத்தை பார்த்து பதறி எழுந்தாள். இப்படியா அசந்து தூங்கினேன் என எண்ணிக்கொண்டே மெத்தையை பார்த்தவள் ஒரு மனிதனை இந்த சொகுசு எப்படி மாற்றிவிடுகிறது. தான் ஹோமில் இருந்த இருப்பென்ன, இப்போது இருப்பதென்ன? பட்டுமெத்தை சொகுசு இல்லை என்றாலும் ஓரளவுக்கு நல்ல நிலையிலே இருந்திருக்கிறாள். ஆனால் இன்று ஒரே நாளில் உடல் இப்படி பழகிவிடுமா என்ன? என எண்ணியவளின் காதில் ரெண்டு நாள் இதுபோல சொகுசா வாழ்ந்தாபோதும் பிறகு அந்த சொகுசுக்காக ஏதும் செய்ய நினைப்பாய் என்ற குரல் காதில்விழ அருவருப்புடன் முகத்தை சுளித்தாள். இனி இந்த மெத்தை சுகத்துக்கு உடலை பழக்ககூடாது என்ற முடிவுடன் முகத்தை கழுவிக்கொண்டு வேகமாக இறங்கிவந்தாள்.

    டைனிங் ஹாலில் தனக்காக காத்திருந்த அபிராமியை கண்டதும் சாரிம்மா, அசந்து தூங்கிவிட்டேன். எனக்காகவா நீங்க இன்னும் சாப்பிடாமல் உட்கார்ந்து இருக்கீங்க?

    அதனால் என்ன? என்றவர் மீனாட்சியையும் சாப்பிட அழைக்க ஸ்வேதா அதிசயமாக அபிராமியை பார்த்தாள்.

    என்ன ஸ்வேதா பார்க்கிறாய்? இங்கே எல்லோரும் சரிசமம்தான். வா நீயும் உட்கார் என்றவர், கீழே தரையில் பாயை விரித்து மூவரும் உட்கார்ந்தனர். வாழை இலை போட்டு மல்லிகை பூப்போல உதிரி உதிரியான சாதத்தை போட்டு நெய்யும் பருப்பும் வைக்க, அந்த அனுபவமே ஸ்வேதாவிற்கு அதிசயமாக இருந்தது.

    தனக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்க காரணமான மதரை நினைத்துக்கொண்டாள். இத்தனை ஆடம்பரமான உணவு இல்லாவிட்டாலும், எளிய உணவும், ஆனால் அதுவே சரிவிகித உணவாகவும், இருக்க இடமும், உடுத்த உடையும் கிடைக்ககாரணமா இருந்த மதரை நினைத்து கண்கள் கலங்கியது. ஆனால் நீ எக்காரணம் கொண்டும் போன் செய்ய வேண்டாம், உன்னை நானே தொடர்பு கொள்கிறேன் என சொல்லி இருந்ததால் அவருடைய அழைப்பையும் எதிர்பார்த்து காத்திருந்தாள்.

    உணவுக்கு பிறகு மூவரும் வராண்டாவில் அமர்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். மீனாட்சியின் குடும்பமே அபிராமியிடம் தான் வேலை செய்கிறது என்றும், மீனாட்சியின் தம்பி டிரைவர் முத்து, மீனாட்சியின் கணவர் தோட்ட வேலை மற்றும் மேல் வேலைகளை பார்த்துக்கொள்கிறார்கள் என்று சொல்லி அனைவரையும் அழைத்து அறிமுகப்படுத்தினார்.

    முத்து வள்ளியின் குழந்தையை பார்த்ததும் ஸ்வேதாவிற்கு அள்ளி அணைத்து கொஞ்ச வேண்டும்போல தோன்றியது. துருதுருவென சுழன்ற திராட்சை விழிகளும், குண்டு கன்னங்களும், பொக்கை வாய் திறந்து சிரித்த சிரிப்பும் ஸ்வேதாவை மயங்கவைக்க பொங்கிய சந்தோஷத்துடன் தன் இரு கைகளையும் குழந்தையை நோக்கிநீட்ட குழந்தையும் சிரிப்புடன் ஸ்வேதாவிடம் தாவியது.

    குழந்தையை தூக்கி இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டவள் உன்னை போல குழந்தையாகவே இருந்துவிட்டால் என் வாழ்க்கையும் தடுமாறாமல் சென்றிருக்குமே என் எண்ணியவளுக்கு, ச்சே இனி இதெல்லாம் நினைக்கவேகூடாது என எண்ணிக்கொண்டாலும், அது முடியுமா என சந்தேகமும் அவளுக்கு எழுந்தது. குழந்தைலேசாக சிணுங்க தூக்கிகொண்டு கீழே வந்தாள்.

    அபிராமி சிறிது நேரம்படுத்து உறங்க, ஸ்வேதா காலையில் நன்றாக தூங்கிவிட்டதால் மதியம் தன் அறையில் நின்று ஜன்னல் வழியாக தெரிந்த தோட்டத்தை ரசித்துக்கொண்டு இருந்தாள். அவளின் பார்வை அந்த அறையின் வசதியும் சொகுசையும் பார்க்கபார்க்க மீண்டும்மீண்டும் பழைய நினைவே அவளை ஆட்டிப்படைக்க இப்படியே அமர்ந்திருந்தால் சரியாகவராது என்று எண்ணியவள் எழுந்து ஹாலில் இருந்த பொருட்களை துடைத்து வைத்தாள். ஷெல்பில் இருந்த புத்தகங்களை தேதிவாரியாக அடுக்கி வைத்தாள்.

    தூங்கி எழுந்து வந்த அபிராமி ஒரே பார்வையில் இருந்த மாற்றத்தை கண்டுக்கொண்டு புன்னகைத்துக்கொண்டே ஸ்வேதாவை அழைத்தார். அப்போது தான் தலையைவார ஆரம்பித்தவள் விரித்த கூந்தலுடன் ஓடி வந்தாள். மயில் தோகைபோல அடர்ந்து நீண்டிருந்த கூந்தலை பார்த்த அபிராமி, தலைவாரிக்கொண்டு இருந்தாயா? வா நானே உனக்கு தலைவாரிவிடுகிறேன் என சொல்ல தயங்கியவளை பரவாயில்லை வா என்று அழைத்து தலைவாரிவிட்டார். அம்மாவின் அன்புக்கு ஏங்கி தவித்தவள் அபிராமியின் செய்கையில் நெக்குருகி கண்களில் ஈரம் சேர நெகிழ்ந்து போனாள்.

    ஸ்வேதா அங்கிருந்து சென்றதும் அபிராமி அருகில் வந்த மீனாட்சியிடம், வீட்டில் ஒரு பொண்ணு இருந்தாலே அந்த வீடு நிறைந்து இருக்கு இல்லையா மீனாட்சி?

    அதை ஆமோதித்த மீனாட்சி, சீக்கிரமே நம்ம தம்பிக்கு ஒரு நல்ல பொண்ணாபார்த்து கல்யாணம் செய்து வைங்க அம்மா அப்போதான் இப்படி அடிக்கடி வெளிநாடு, பிஸ்னெஸ் என்று சுத்தாமல் தம்பியும் வீட்டோடு அடங்கி இருப்பார்

    அபிராமி சிரித்துக்கொண்டே, ஆமாம் அவனுக்கு முதலில் ஒரு கால்கட்டை போட்டு லகானை அவ கைல கொடுத்தாதான் அவனும் கொஞ்சம் அடங்கி இருப்பான். ஊரிலிருந்து அவன் வந்ததும் பிடிபிடித்து கல்யாணம் செய்து கொள்கிறாயா? இல்லையா? என்று கேட்டுவிட வேண்டியது தான் என்றார்.

    இரவு போன் செய்த மதரிடம் தான் நன்றாக இருப்பதாகவும், தன்னை ஒரு மகள்போல அபிராமி பார்த்துக்கொள்வதாகவும் சொன்னவள் மதருக்கு நன்றி கூறிவிட்டு வந்தாள். எழுந்தவள் விளக்கை நிறுத்திவிட்டு கதவை மூடிக்கொண்டு தன் அறைக்கு சென்றவள் ஒரு பெட்ஷீட்டை எடுத்து கீழே விரித்து, படுத்ததும், மனதில் இருந்த சந்தோஷம், பாதுகாப்பு உணர்வு, வயிறார உண்ட மயக்கம், மீதமிருந்த பயண அலுப்பு எல்லாம் சேர்ந்து உறக்கத்தில் ஆழ்த்தியது.

    அத்தியாயம்- 2

    ஸ்வேதா அந்த வீட்டிற்குவந்து முழுதாக ஒரு மாதம் ஓடிவிட்டது. தன் இயல்பான பொறுமையாலும், அன்பான குணத்தாலும் அனைவரிடமும் ஒட்டிக்கொண்டாள். இங்கு வந்த இத்தனை நாட்களில் அந்த வீட்டின் நடப்பை நன்கு புரிந்துக்கொண்டாள். வீட்டில் வேலையும் பெரிதாக இல்லை. அபிராமி அம்மாவைபற்றி அவர் மூலமாகவும் மீனாட்சி மூலமாகவும் ஓரளவு தெரிந்துக்கொண்டாள்.

    அபிராமியின் ஒரே பெண் குழந்தை சிறுவயதிலேயே இறந்துவிட்டதாகவும், அதை அடுத்து சில வருடங்களிலேயே அவரது கணவரும், அவர்களின் பாட்னரும் நண்பருமான விஸ்வநாதனுடன் காரில் செல்லும்போது விபத்தில் இருவரும் இறந்துவிட அபிராமி அம்மாள் மனதளவில் ஓய்ந்து போய்விட்டார்.

    அப்போது விஸ்வநாதனின் தம்பி அபிராமிக்கு துணையாக இருந்து அவர்களின் தொழிலையும் சேர்த்து கவனித்துக்கொள்வதாகவும், அதை இன்றுவரை வெற்றிகரமாக நடத்தி, ஆண்டுதோறும் லாபத்தில் வரும் பணத்தில் பாதியை அபிராமியிடம் மொத்த கணக்குவழக்கையும்காட்டி செட்டில் செய்துவிடுவான் என்றும் சொன்னார். இரண்டு மாதத்திற்கொருமுறை தவறாமல் வந்துவிடுவான். இப்போது வெளிநாடு சென்றிருக்கிறான் என அனைத்தையும் ஸ்வேதாவிடம் பகிர்ந்துக்கொண்டார்.

    ஸ்வேதாவிற்கு அபிராமியின் கதையை கேட்டு மனதில் ஏற்பட்ட சுணக்கம் பிஸ்னஸ் பார்ட்னரின் தம்பி தூணாக தாங்கியதை அறிந்து அந்த நல்லவனுக்கு தன் மனதார நன்றி சொல்லவேண்டும் என்று தோன்றியது.

    யாரை அவள் ஆவலுடன் சந்திக்க இருந்தாளோ தன் நன்றியை சொல்ல வேண்டும் என்று காத்திருந்தாளோ அவனை சந்திக்கும் நாளும் விரைவிலேயே வந்தது. ஆனால் அது அதிர்ச்சியையும், இடியையும் ஒன்றாக சேர்த்து அவள் தலையில் இறக்கபோவது தெரியாமல் அவன் வரவை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

    ***

    அன்று காலை எழுந்து வந்தவளை அழைத்த அபிராமி, ஸ்வேதா இன்னும் ரெண்டு நாளில் தம்பிவரான். நீயும், மீனாட்சியும் டவுனுக்கு சென்று இந்த லிஸ்ட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம், வாங்கி வந்துவிடுங்கள். முத்துவை அழைத்து கார் எடுத்துக்கொண்டு போங்கள் என்றவர் பணத்தையும், லிஸ்ட்டையும் ஸ்வேதாவிடம் கொடுத்தார்.

    ஸ்வேதா கிளம்பி சென்ற அரைமணி நேரத்தில் கறுப்பு நிற பி.எம்.டபுள்யு கார் நந்தவனத்திற்குள் நுழைந்தது. கார் வந்துநிற்கும் ஓசை கேட்டு வாசலுக்கு வந்த அபிராமியை பார்த்து, ஹலோ அக்கா, ஹவ் ஆர் யு? என்று புன்னகைத்தான்.

    சுந்தர்... என்னடா திடீர்னுவரேன்னு சொன்ன ரெண்டு நாளைக்கு முன்னாலேயே வந்து நிக்கிற? ஆச்சர்யத்துடன் கேட்டார்.

    ஷூவை கழற்றி வைத்தவன், ஏன்? ஏன்? நான் சொல்லிவிட்டு தான் வர வேண்டுமா? என் அக்கா வீட்டுக்கு வர நான் யாரிடம் பர்மிஷன் வாங்கணும்? என கேட்டுக்கொண்டே ஊஞ்சலில் தாவி அமர்ந்தான். யாரும் உனக்கு பர்மிஷன் கொடுக்க வேண்டாம்ப்பா இது உன் வீடு, நீ எப்போவேணும்னாலும் வரலாம் போகலாம் என்றார் சிரித்துக்கொண்டே.

    ஆர்வத்துடன் வீட்டை சுற்றி பார்வையை ஒட்டியவன், ம்ம்... என்ன வீடெல்லாம் ரொம்ப மாறி இருக்கு கிச்சன் பக்கம் எட்டி பார்த்தவன், அபி மீனாட்சி அக்காகிட்ட சொல்லி சூடா ஒரு கப் டிகிரி காபி கொண்டுவர சொல்லேன் குடித்துவிட்டு தெம்பா மத்த வேலை பார்க்கலாம் என்றான்.

    இன்னைக்கு உன் தலையெழுத்து, நீ என் கையால் தான் காபி குடித்துஆக வேண்டும். மீனாட்சியும் சேர்ந்துதான் வெளியே போய் இருக்காங்க

    அச்சச்சோ ஒரு பத்து நாள் நல்ல சாப்பாடு சாப்பிடலாம் என்று வந்தால், வந்த உடனேயே என்னை இப்படி ஒரு இக்கட்டில் மாட்டிவிட்டாயே கடவுளே இது நியாயமா? உன் காப்பியை குடிச்சிட்டு நான் என்ன ஆவேன்னு எனக்கு தெரியாது? அப்படி ஒரு ரிஸ்க்கையும் நான் எடுக்க விரும்பவில்லை என்றவன், அபிராமியிடம் திரும்பி, சோ அபி நீ இங்கயே உட்கார் உனக்கும் சேர்த்து நானே காபி போட்டுக்கொண்டு வருகிறேன். மறந்தும் நீ கிச்சன் பக்கம் வந்துவிடாதே என்றவன் சொன்னபடியே இருவருக்கும் காபி எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தான்.

    ஒருவாய் குடித்த அபிராமி, சும்மா சொல்ல கூடாதுடா சுந்தர், நல்லாவே காபி போட்டிருக்கிறாய். பிரமாதம். சமையலும் நல்லா செய்வியா? என்றார்.

    வேற வழி என்னை மாதிரி பாச்சுலர் என்ன செய்வது? சமையல்காரன் சமைத்து போடுவதை ஒரு உப்புசப்பில்லாமல் அந்த சாப்பாட்டை எத்தனை நாளைக்கு சாப்பிடுவது? என சிரித்தான்.

    இன்னும் இப்படியே எவ்வளவு நாளைக்கு இருப்பாய். காலாகாலத்தில் ஒரு கல்யாணம் செய்துக்கொள். அப்புறம் இந்த பிரச்சினையே இல்லை பாரு

    என்ன பிரச்சனை இல்லை அவளுக்கும் சேர்த்து நான்தான் சமைக்கணும் என்றான் வேண்டுமென்றே.

    உனக்கு எதுக்குடா இந்த தலையெழுத்து? நீ சரின்னு சொல்லு உனக்கு பொருத்தமா ஒரு பொண்ணை நான் உனக்கு பார்த்து வைக்கிறேன். நீ ராஜா மாதிரி ஆபீஸ் வீடுன்னு இருக்கலாம்

    இப்போவே எனக்கு நானே ராஜா நானே மந்திரி எந்த பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன். விட்டா இங்கே இருந்து போகும்போது எனக்கு கல்யாணம் செய்து ஜோடியாதான் அனுப்புவீங்கபோல. இந்த விளையாட்டுக்கு நான் வரலை என சொல்லிக்கொண்டே தன் அறைக்கு சென்றான்.

    குளித்துவிட்டு வந்தவன் மதிய உணவை முடித்துக்கொண்டு, அக்கா நான் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு வருகிறேன் என தன் அறைக்கு சென்று கதவை மூடிவிட்டு லாப்டாப்பை திறந்தான். தலையை ஒருபுறமாக சாய்த்து சிரித்தபடி நின்றிருந்தவளின் போட்டோவை பார்த்து அர்த்தமாக ஒரு சிரிப்பு சிரித்தவன், ரோஜா இதழ்களை வருடி ஸ்வீட்டி என சொல்லி முத்தமிட்டுவிட்டு படுக்கையில் வீழ்ந்தான்.

    மாலை மீனாட்சியும் ஸ்வேதாவும் வீட்டுக்கு வந்து இறங்கினர். வாங்கிய பொருட்கள், அதற்கான பில்லையும் அபிராமியிடம் கொடுத்தவள் மீதி பணத்தையும் கொடுத்தாள். பின்னர் வரவு செலவு

    Enjoying the preview?
    Page 1 of 1