Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uravanai En Uyirae
Uravanai En Uyirae
Uravanai En Uyirae
Ebook252 pages2 hours

Uravanai En Uyirae

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

மனதார நினைக்கும் செயல் நடக்கும் போது, மனதார செய்யும் நேசம் நிறைவேறாதா?

தன்னை விபத்தில் இருந்து காத்த ரேகாவே தன் வாழ்க்கை என நினைக்கிறான் பிரபாகர். பிரபாகரின் தாயை பார்த்துக் கொள்ள வருகிறாள் கஸ்தூரி. பிராபகருக்கும் தனக்கும் இடையில் உள்ள சம்பந்தம் தெரிய வந்த பின், அவனை மனமாற நேசிக்கிறாள் கஸ்தூரி.

பிரபாகருக்கும் கஸ்தூரிக்கும் இடையே உள்ள சம்பந்தம் என்ன? இவர்களில் யாருக்கு இடையில் உள்ளது இறைவன் போட்ட முடிச்சு? அது இறைவனின் முடிச்சா இல்லை மனிதனின் முயற்சியா?

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580145007137
Uravanai En Uyirae

Read more from Uma Nathan

Related to Uravanai En Uyirae

Related ebooks

Reviews for Uravanai En Uyirae

Rating: 5 out of 5 stars
5/5

4 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uravanai En Uyirae - Uma Nathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உறவானாய் என் உயிரே

    Uravanai En Uyirae

    Author:

    உமா நாதன்

    Uma Nathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/uma-nathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    உயிரே - 1

    உயிரே - 2

    உயிரே - 3

    உயிரே - 4

    உயிரே - 5

    உயிரே - 6

    உயிரே - 7

    உயிரே - 8

    உயிரே - 9

    உயிரே - 10

    உயிரே - 11

    உயிரே - 12

    உயிரே - 13

    உயிரே - 14

    உயிரே - 15

    உயிரே - 16

    உயிரே - 17

    உயிரே - 18

    உயிரே - 19

    உயிரே - 20

    உயிரே - 21

    உயிரே - 22

    உயிரே - 23

    உயிரே - 24

    உயிரே - 25

    உயிரே - 26

    உயிரே - 27

    உயிரே - 28

    உயிரே - 29

    உயிரே - 30

    உயிரே - 31

    உயிரே - 32

    உயிரே - நிறைவு

    உயிரே - 1

    சில்லென்ற பனிப்பொழிவோடு அழகாய் விடிந்தது ஏற்காடு மலைப்பிரதேசம். அதிகாலையில் எழுந்துக்கொள்ள அடம்பிடிக்கும் குழந்தைபோல மேகப் போர்வைக்குள் ஒளிந்துக்கொண்டு வெளிவராமல் உறங்கிக் கொண்டிருந்தான் கதிரவன். போர்வையின் உள்ளே இருந்து கண்களை மட்டும் வெளியே காட்டுவதை போல கதிரவனின் கதிர்கள் இங்கும் அங்கும் சிதறி இருந்தது.

    அந்த அதிகாலை வேலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக பொருட்களை எடுத்து வரும் பால்காரர், பேப்பர்காரர், காய்கறி விற்பவர் தவிர, ஒன்றிரண்டு பேர்கள் மட்டுமே தென்பட்டனர். அப்படியொரு அமைதியான காலை பொழுதில் டப…டப… என்ற சப்தத்துடன் ஒரு ஆட்டோ அந்த பெரிய கேட்டின்முன் வந்துநின்றது.

    ‘முல்லை எஸ்டேட்’ என்று சலவை கல்லில் பொரிக்கப்பட்ட பிரம்மாண்ட மதில் சுவர், அந்த கேட்டின் இரு பக்கமும் பரந்து விரிந்து இருந்தது. வெளியே இருந்த அமைதியான சூழலுக்கு மாறாக கேட்டின் உள்ளே அந்த நேரத்திலேயே ஆட்கள் வேலை செய்யும் சத்தம் கேட்டது.

    கேட்டில் இருந்த சிறிய ஜன்னல் வழியாக அங்கே வந்து நிற்கும் ஆட்டோவை குழப்பத்துடன் பார்த்தான் அந்த எஸ்டேட்டின் காவலாளி. அவன் குழப்பதிற்கும் காரணம் இருந்தது. அந்த கேட்டின் வழியாக பெரிய பெரிய கார்கள் மட்டுமே வரும். மேலும் அங்கு பணிபுரிபவர்கள் வந்து போவதற்கு வேறு வழி இருக்கிறது. அதனால் அந்த கேட்டின்முன் ஏன் அந்த ஆட்டோ வந்துள்ளது என்று பார்த்தான். வழித்தவறி இங்கே வந்தது என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் முல்லை எஸ்டேட் அந்த மலைப் பிராந்தியத்திலேயே பிரசத்திப்பெற்ற இடம்.

    முதலாளியின் கார் வரும் நேரம் அது. அந்த சமயத்தில் இந்த ஆட்டோ இருந்தால் கோபப்படுவார் என்ற பயத்தில் அந்த ஆட்டோவை போகச் சொல்லவந்த காவலாளி அந்த ஆட்டோவில் இருந்து இறங்கிய பெண்ணைப் பார்த்து ஒரு நொடி நின்றான்.

    ஒரு சிலரை நாம் பார்த்தால், திரும்ப பார்க்க வேண்டும் என்று தோன்றும். அதற்கு அதீத அழகு இருக்க வேண்டும் என்பது இல்லை. முகத்தில் ஒரு வசீகரம் நம்மை மறந்து அதை ரசிக்க வைக்கும். அப்படி ஒரு பாந்தமான முகத்துடன் இறங்கிய அந்தப் பெண்ணைப் பார்த்தபடி அந்த காவலாளி நின்ற அந்த சில நொடிகளில், ஆட்டோவில் இருந்து ஒரு ட்ராவல் பேக்கை இறக்கி வைத்துவிட்டு, ஆட்டோவிற்கு பணம் கொடுத்து அனுப்பி இருந்தாள் அவள். தன்னிலை வந்து யார் என்று கேட்கும்முன் அந்த ஆட்டோ சரேலென்று திரும்பி சென்றுவிட்டது. நேரத்திற்கு சென்றால் இன்னுமொரு சவாரி கிடைக்கலாமே.

    முதலாளியை பார்க்க அப்பாயின்ட்மென்ட் இருப்பதாக சொன்ன பெண்ணை ஒரு நிமிடம் சந்தேகத்துடன் பார்த்தான். அந்த விடிகாலையில் யாரையும் அவர் பார்த்ததில்லை. காவலாளியின் முகத்தில் தெரிந்த பாவத்தை பார்த்து லேசாக முகம் சிவந்த அந்தப்பெண், ஒன்பது மணிக்குத்தான் அப்பாயின்ட்மென்ட் இருப்பதை கூறினாள். யார், என்ன என்ற விவரம் கேட்டுக்கொண்டு, உள்ளே காவலாளி கூண்டில் இருந்த இன்டர்காமில் யாரிடமோ பேசினான். பின்னர் அவளிடம் வந்து, உள்ளே செல்லுமாறு கூறியவன், டிராவல் பேக்கை அந்த கூண்டில் வைத்துவிட்டு செல்லுமாறு கூற, அந்தப் பெண் ஒரு நிமிடம் தயங்கினாள்.

    சார் தான் கூறினார் மேடம். என்றவுடன், வேறுவழி இல்லாமல் பேக்கை கொடுத்துவிட்டு, கைப்பையுடன் காவலாளி காட்டிய பாதையில் நடந்து சென்றாள். கேட்டிற்கும் உள்ளே இருந்த அந்த பிரம்மாண்ட பங்களாவிற்கும் இடையே ஒரு கிலோமீட்டர் தூரமேனும் இருக்கும். அந்த இடைப்பட்ட தூரத்தில் பரந்து விரிந்த புல்வெளியும், அழகான பூச்செடிகளும் நிறைந்த தோட்டத்தில் ஆங்காங்கே ஆட்கள் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர். ஒரு பெண் அவர்களுக்கு சூடாக காபியோ, டீயோ கொடுப்பதை பார்த்தாள். அந்த குளிரான நேரத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு சூடான பானம் எவ்வளவு தேவை என்பதை உணர்ந்து கொடுக்கும் அந்த எஸ்டேட் முதலாளியின் மனதை நினைத்து அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

    திலகர் அய்யா சரியான இடத்தில்தான் வேலைக்கு அனுப்பி இருக்கிறார் என்று அவள் மனதில் தோன்றியது. கஸ்தூரிபாய் ஆசிரமம் என்ற அனாதை ஆசிரமம் நடத்துபவர்தான் திலகர். அந்த ஆசிரமத்தில் வளர்ந்த ஒரு பெண்தான் அவளும். ஆசிரமத்தின் பெயரான ‘கஸ்தூரி’ என்ற பெயர் கொண்டதாலோ என்னவோ திலகர் அய்யாவிற்கு இவளின்மீது சொந்தப் பெண்போல பிரியம் அதிகம். கல்லூரி படிப்பு முடித்தவுடன், ஆசிரமித்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பது அங்கே உள்ள விதி. அதுபோல பட்டபடிப்பு முடித்தவுடன் அவளும் வெளியேற வேண்டிய நேரமும் வந்தது. அந்த சமயத்தில்தான் திலகர் அய்யா இந்த வேலையை ஏற்பாடு செய்து தந்தார். கண்டிப்பாக ஒரு நல்ல இடத்திற்கு அவர் அனுப்புவார் என்று தெரிந்தாலும் ஒரு இனம்புரியாத பதட்டம் அவளுக்கு இருந்தது. இப்பொழுது அங்கு இருந்த சூழ்நிலை அவளுக்கு ஒரு அமைதியை தந்தது. அந்த அமைதி தந்த புன்னகையுடன் மெல்ல உள்ளே நடந்து சென்றாள்.

    அந்த தோட்டத்தில் அன்று பூத்த ரோஜாவினை போன்ற முகத்துடன் புன்னகை பொழிய நடந்து சென்றவளை அங்கு வேலை செய்து கொண்டிருந்த அனைவருமே ஒருமுறைக்கு இருமுறை பார்ப்பதை உணராமலே நடந்து அந்த பங்களாவை அடைந்தாள். வாயிலை அடைந்தவள் உள்ளே செல்லலாமா? வேண்டாமா? என்ற தயக்கத்துடன் நிற்க, அப்போது நடுத்தரவயது மனிதர் ஒருவர் உள்ளிருந்து வெளியே வந்தார்.

    வாங்கம்மா. செக்யூரிடி சொன்னார். உள்ளே வந்து உட்காருங்க. என்று உள்ளே அழைத்துப் போனார்.

    அகன்று விரிந்த படிகளை தாண்டிச் சென்றால் பெரிய அறை அவளை வரவேற்றது. பிரவுன் நிற சோபாக்கள் ‘ப’ வடிவில் இருந்தது. நடுவே ஒரு கண்ணாடி டீபாய். ஆசிரமத்தில் அவள் இருந்த அறையைவிட இந்த அறை பெரிதாக இருந்தது. ஆனால் அது ஹால் மாதிரி தெரியவில்லை. வீட்டிற்கு வருபவர்களை சந்திக்கும் அறை போன்று தெரிந்தது.

    இங்க உக்காருங்கம்மா. என்று கூறிவிட்டு உள்ளே சென்றார்.

    அங்கே அமர்ந்தவள் அந்த அறையை சுற்றி வேடிக்கை பார்த்தாள். அங்கங்கே பூச்செடிகள், ஓவியங்கள் என்று அலங்காரப்படுத்தி இருந்தாலும், எதுவும் கண்ணை உருத்தும் விதமாகவோ, பணம் இருக்கும் காரணத்திற்காக கன்னா பின்னாவென்று அளவிற்கு அதிகமாகவோ அங்கே இல்லை. அளவாக, திருத்தமாக இருந்த அறையை பார்க்கும்போது அந்த வீட்டின் உரிமையாளர்களை பற்றிய மரியாதை அதிகமானது.

    அனைத்தையும்விட கண்களையும், கருத்தையும் இழுத்தது அங்கே நடுநாயகமாக இருந்த பெரியப் புகைப்படம். நாற்பதுகளில் இருந்த ஒரு மனிதரின் புகைப்படம் அது. அந்த முகத்தில் இருந்த கம்பீரமும், பார்வையில் இருந்த தீக்ஷண்யமும் புகைப்படத்தை பார்க்கும்போதே மனதில் மரியாதையை உண்டு பண்ணும்.

    அந்த அறையை அவள் அளவிடும் போதே ஒரு பெண் கையில் பூமாலையுடன் உள்ளே வந்தாள். அங்கே அமர்ந்திருந்த கஸ்தூரியை யார் என்ற பார்வையுடன் அந்த புகைப்படத்தில் இருந்த மாலையை கழற்றிவிட்டு கையில் இருந்த புதுமாலையை மாட்டிவிட்டு உள்ளே சென்றாள். செல்லும்போதே அப்பெண் இவளை மற்றும் ஒருமுறை திரும்பி பார்த்து விட்டுதான் சென்றாள்.

    சில நிமிடங்களில், அதே பெண் காபி கோப்பையை அவளிடம் தந்தாள். சிறு புன்னகையுடன், நன்றி கூறி காபியை பெற்றுக்கொண்ட கஸ்தூரியை ஆச்சர்யத்துடன் பார்த்தவள் பதிலுக்கு சிரித்துவிட்டு உள்ளே சென்று விட்டாள். காபியை பருகியபடி டீபாயின் மீது இருந்த தினசரி பத்திரிக்கையை பார்த்துக் கொண்டிருக்கும்போது, பொத்தென்ற சத்தம் கேட்டது. கண்களை உயர்த்தி பார்த்தவளின் பார்வையில் பட்டது ஒரு பக்கம் சரிந்து இருந்த புதிதாய் மாட்டியிருந்த மாலை.

    புகைப்படத்தில் மாட்டியிருந்த மாலை ஒரு பக்கம் கழண்டு தொங்கியது. காபியை கீழே வைத்தவள், அருகில் சென்று பார்த்த போதுதான் காரணம் தெரிந்தது. முன்தினம் மாட்டியிருந்த மாலையின் பூ ஒன்று அந்த ஆணியில் மாட்டிக் கொண்டிருந்தது. அதனால்தான் மாலை சரியாக மாட்டாமல் கீழே விழுந்துவிட்டது போலும். அத்தோடு பழைய மாலையின் காய்ந்த பூக்கள் அந்த புகைப்படத்தின் கீழே இருந்த சிறிய பலகையில் சிதறி இருந்தது.

    புதிய மாலையை எடுத்து அருகே வைத்தவள், ஒரு நிமிடம் சுற்றி பார்த்து, அங்கே இருந்த தினசரி பத்திரிகையை எடுத்து அங்கு இருந்த வாடிய பூக்களை அதில் சேகரித்தாள். பின்னர் புதிய மாலையை எடுத்து மீண்டும் ஒழுங்காக மாட்டினாள். வாடிய பூக்கள் இருந்த பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு அதை எங்கே கொட்டுவது என்று யோசித்துக் கொண்டே திரும்பியவளின் கண்களில் பட்டான் அவன்.

    ###

    உயிரே - 2

    வண்டர்ஃபுல் ஷாட் பிகே. ஷட்டில் ஆட்டத்தின் கடைசி செட்டை வென்று ஆட்டத்தை முடித்த பிகே என்னும் பிரபாகர், சிறிய தலை அசைவுடன் பாராட்டை ஏற்றுக்கொண்டான்.

    அந்த டென்னிஸ் கோர்ட் மைதானம் இருப்பது ஒரு கிளப்பில். பணம் படைத்தவர்களும், சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களும் உறுப்பினர்களாக இருக்கும் இடம். சுற்றிலும் பச்சை புல்வெளி விரிந்து இருக்க அதன் நடுவில் அமைந்திருந்தது அந்த டென்னிஸ் மைதானம். அந்த புல்வெளியில் அங்கங்கே நட்டு வைத்த குடையின் கீழ் மேஜையும் நாற்காலிகளும் போடப்பட்டிருந்தது.

    அந்த இருள் பிரிந்த காலை நேரத்தில், உடற்பயிற்சிக்காக டென்னிஸ் விளையாடி முடித்த பிரபாகர் அங்கே புல்வெளியில் அங்கங்கே இருந்த குடைகளின் கீழே போடப்பட்டிருந்த நாற்காலிகள் ஒன்றில் அமர்ந்தான். அந்த அதிகாலை பனியிலும் நன்கு விளையாடியதால், வேர்க்க விருவிருக்க அமர்ந்திருந்தான். அருகில் அவனுடன் விளையாடிய அவனுடைய நண்பன் விஜயன் அமர, அவர்கள் ஆர்டர் செய்த காபி வரவும், இருவரும் அதை அருந்த தொடங்கினர்.

    பிரபாகர் பொறியியலும், அதற்குமேல் நிர்வாகவியலும் படித்த இளைஞன். முல்லை எஸ்டேட்டின் உரிமையாளன். சொந்தமாக தேயிலைத் தோட்டம், ஸ்வெட்டர் தொழிற்சாலை, மற்றும் சேலத்தில் நூர்ப்பாலை தொழிற்சாலை நடத்துபவன். எலிஜிபிள் பாச்சிலர் என்று சொல்லப்படும் 28 வயது ஆண்மகன்.

    முல்லை க்ரூப் ஆப் கம்பனிஸிற்கு வாரிசாக இருந்தவன், இரண்டு வருடத்திற்கு முன் ஒரு சாலை விபத்தில் தன் தந்தையை இழந்தபின், அந்த சாம்ராஜ்யத்திற்கு அதிபதி ஆனான். படிக்கும் பொழுதே தந்தையிடம் தொழிலை கற்றுக்கொண்டதாலும், படித்தபின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாலும், தந்தையின் மறைவிற்குப் பின்னர் தொழிற் சக்கரத்தை சீராக சுழற்றினான்.

    ஆனால், வீட்டுப் பிரச்சினையைதான் அவனால் இன்னும் சமாளிக்க முடியவில்லை. அமைதியான நதிப்போல ஒடிக்கொண்டிருந்த அவர்களின் வாழ்க்கை நதி, புயல் வந்தது போல ஏற்பட்டது அவன் தந்தையின் மரணம். ஒரு சாலை விபத்தில் மரித்துப்போன கணவரின் இழப்பு அவனது தாய் ரேணுகாவை மிகவும் பாதித்துவிட்டது. மனதின் வேதனை உடலையும் தாக்க தொடங்கவே அவளால் அறையை விட்டுக்கூட வெளியே வரமுடியவில்லை.

    ஸ்வீடனுக்கு இன்னைக்கு லோட் அனுப்பனும். எல்லாம் நேத்தே பாக் பண்ணியாச்சு. ஒருமுறை செக் பண்ணிட்டா லோட் ஏத்திடலாம். விஜயனின் குரல் அவனை நினைவிற்கு கொண்டு வந்தது.

    விஜயன் அவனுடைய கம்பனியின் பொது தலைமை நிர்வாகி. பிரபாகருடன் ஒன்றாய் படித்தவன். தந்தையை இழந்து தடுமாறிய பிரபாகருக்கு தோள் கொடுத்து அவனை தேற்றிவிட்டவன். இப்பொழுதும், வீட்டு பிரச்சினையால் தடுமாறும் தோழனுக்கு ஆதரவாய் இருந்து கம்பனிகளை நிர்வகிக்கும் ஒரு சிறந்த நிர்வாகி.

    நான் வர லேட் ஆகும்டா. அம்மாவ பாத்துக்கறதுக்கு திலகர் சார் சொன்ன பொண்ணு இன்னைக்குத்தான் வர்றா. அந்த பொண்ண வீட்ல செட் பண்ணிட்டுதான் நான் வருவேன்.

    விஜயனின் முகம் அவனின் பதிலால் தீவிரம் ஆனது. இப்போ இது தேவையா பிரபா? அந்த பொண்ணு யார் எவருன்னே தெரியல. நீ பாட்டுக்கு வர சொல்லிட்ட. அதுக்கு ஏதாவது ஒரு நர்ஸ் மாதிரி வேலைக்கு அமர்த்திக்கலாமே.

    பிரபாகருக்கு விஜயனின் மனநிலை புரிந்தது. ஒரு மெல்லிய புன்னைகையுடன் தன் நண்பனை பார்த்தான். திலகர் சார் ரெகமண்ட் பண்ணா, அது கண்டிப்பா நல்ல பொண்ணாத்தான் இருக்கும். அந்த பொண்ணோட படிப்புக்கு நம்ம கம்பனிதான் ஸ்பான்சர் செஞ்சிருக்கோம். அதோட உனக்கே தெரியுமே, அம்மாக்கு உடம்புக்கு ஒன்னும் இல்ல. மனசுதான் பிரச்சினை. அவங்களுக்கு இப்போ கூடவே இருந்து பாத்துக்க ஒரு ஆள் வேணும். சிவா அத்தைதான் இவ்வளவு நாள் இருந்தாங்க. இந்த வார கடைசில ஊருக்கு போறாங்க. எவ்வளவு நாள்தான் அவங்களும் தன் குடும்பத்த விட்டு இருக்க சொல்ல முடியும்.

    எத்தனை மணிக்கு வரப் போறா? விஜயன் கேட்டான்.

    ஒன்பது மணிக்கு. நான் அந்த பொண்ணு வந்ததுமே பேசிட்டு, சிவா அத்தைய பார்த்துக்க சொல்லிட்டு வரேன். எப்படியும் 11 ஆகிடும். சொன்னவனின் பேச்சை பாதியில் நிறுத்தியது அவன் அலைபேசியில் வந்த அழைப்பு.

    ஹலோ. அழைப்பை ஏற்று உரைத்தான்.

    என்ன? அவனின் முககுழப்பத்தை பார்த்த விஜயனுக்கும் ஒன்றும் புரியவில்லை.

    ட்ராவல் பேக்-ஆ? ஒரு நிமிடம் யோசித்தவன் பேக் செக்யூரிடி போஸ்ட்-லயே இருக்கட்டும். அந்த பொண்ணை மட்டும் உள்ளே அனுப்பு. என்று கட்டளை பிறப்பித்து

    அலைபேசியை வைத்தான்.

    என்னடா? விஜயன் பிரபாகரை கேட்டான்.

    அந்த பொண்ணு வந்தாச்சாம்.

    என்னது? இவ்வளவு விடிய காலைலயா? கைகடிகாரத்தை பார்த்தான் விஜயன்.

    பஸ் ஸ்டாண்டில் இருந்து நேரா வந்ததுபோல இருக்குன்னு செக்யூரிடி சொன்னான். சரி, நான் கிளம்பறேன். என்று கூறி எழுந்தான் பிரபாகர். கூட எழுந்த விஜயன் நானும் வரட்டுமாடா? என்று கேட்டான்.

    "டேய் நான் என்ன

    Enjoying the preview?
    Page 1 of 1