Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nenjaankoottil Neeye Nirkkirai
Nenjaankoottil Neeye Nirkkirai
Nenjaankoottil Neeye Nirkkirai
Ebook390 pages3 hours

Nenjaankoottil Neeye Nirkkirai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தக் கதை, காதலையும், குடும்ப அமைப்பையும் கொண்டு மிகச்சாதாரணமாக பயணிக்கும்.
தனக்கு பிடித்த வேலையை செய்வதில், மனைவியை மனுஷியாய் மதிப்பதில், துரோகம் செய்யும் உறவுக்கும் உதவி செய்வதில் என ஓர் நல்ல மனிதனாக கதிரவன் இருக்கிறான்.
அன்பு தான் கடவுள் என்று உணர்ந்து அனைவருக்கும் உதவி செய்யும் நல்ல மனிதனாக, அதே சமயம் ஒழுக்கத்தை உயிர் மூச்சாக பேணி, அதனை, அவனது கீழ் வேலை செய்யும், அனைவரும் கடைபிடிக்க வைக்கும் ராபர்ட், மனம் போன போக்கில் பயணித்து, அனைத்தையும் இழந்து நின்றாலும், அதில் இருந்து மீண்டு வரும் மகேந்திரன் என்ற மூவரும் கதையின் தூண்கள்.
தகப்பனாக மாறி நிற்கும் ஒரு அன்னை, தாயா என்று கேள்வி கேட்க வைக்கும் மற்றொரு அன்னை, நல்ல தோழமை, பாரம்பரியத்தோடு மகளை வளர்க்க நினைக்கும் ஒரு தந்தை, சகோதரிக்காக எதையும் இழக்கத்துணியும் ஒரு தம்பி, விட்டுக்குடுப்பதில் கெட்டுப்போவதில்லை என்று நிரூபிக்கும் ஒரு அண்ணன், உடன் பிறந்தவளே ஆனாலும் அவள் தோற்க வேண்டும் என்று நினைக்கும் மற்றொரு அண்ணன்.
இதில் யார் யாருடைய நெஞ்சாங்கூட்டில் நிற்கிறார்கள், என்பதையும், இக்கதையின் மையப்புள்ளி யார் என்பதையும் கதையைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்!
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580110506298
Nenjaankoottil Neeye Nirkkirai

Read more from Shrijo

Related authors

Related to Nenjaankoottil Neeye Nirkkirai

Related ebooks

Reviews for Nenjaankoottil Neeye Nirkkirai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nenjaankoottil Neeye Nirkkirai - Shrijo

    http://www.pustaka.co.in

    நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்!

    Nenjaankoottil Neeye Nirkkirai!

    Author:

    ஸ்ரீஜோ

    Shrijo

    For more books

    http://www.pustaka.co.in/home/author/shrijo-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    1

    வெற்றி நிச்சயம்!

    இது வேத சத்தியம்!

    கொள்கை வெல்வதே!

    நான் கொண்ட லட்சியம்!

    என்று திரைப்படப் பாடல் வரிகள் வீட்டின் எதிரில் இருந்த டீக்கடையில் ஒலித்துக்கொண்டிருக்க, வீட்டின் உள்ளே நிருபமாவின் குரல் அதற்கு இணையாக ஒலித்துக்கொண்டு இருந்தது.

    வெளியே ஒலித்துக்கொண்டு இருந்த பாடலோ, காலை வேளையில், கேட்போருக்கு உற்சாகமும் நம்பிக்கையும் தர, நிருபமாவின் குரலோ, வேதனையையும், விரக்தியையும் தந்து கொண்டிருந்தது. ஏன், புதிதாக கேட்கும் சிலருக்கு கோபத்தைக் கூடத் தந்து கொண்டு இருந்தது.

    தமிழகத்தின் நெற்களஞ்சியம், தஞ்சை மாவட்டத்தில், வல்லம் என்ற ஊரில் உள்ள அந்த சிறு வீட்டின் உள்ளே நாமும் பிரவேசிப்போம்...

    அத்தை.... உங்க மனசில என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? மணி எத்தனை? ஏன் இன்னும் பால் வாங்காம இருக்கீங்க?

    நிரு... குழந்தைக்கு விடிய விடிய காய்ச்சல்... நானும் தூங்கலை... அதான் எந்திரிக்க லேட் ஆகிடுச்சு...

    இங்க பாருங்க, அவ குழந்தைக்கு காய்ச்சல்ன்னா, நான் என் பையனுக்கு பால் குடுக்காம இருக்க முடியாது. எனக்கு வேலைக்கு போகனும், அவனுக்கு ஸ்கூல் போகனும், நீங்க விடிய விடிய தூங்குங்க, தூங்காம போங்க... அது எனக்கு தெரியாது… எனக்கு நேரா நேரத்துக்கு எல்லாம் கரெக்ட்டா நடக்கனும்

    இனிமே பார்த்துக்கறேன் நிரு...

    சீக்கிரம் பிரேக்ஃபாஸ்ட் ரெடி பண்ணுங்க, லஞ்ச் கட்டி வைங்க என்று நிருபமா அவளது அறையை நோக்கித் திரும்ப,

    நிரு... என்று அன்னபூரணி தயங்கி தயங்கி கூப்பிட்டார்.

    அவரது குரலில் எரிச்சல் மேலிட, அவர் பக்கம் திரும்பிய நிருபமா,

    என்ன?

    அது வந்து...

    சீக்கிரம் சொல்லித்தொலைங்க... எனக்கு ஏற்கனவே லேட் ஆச்சு

    நம்ம ஹரீஷ்க்கு காய்ச்சல் அதிகமா இருக்கு, டாக்டர்கிட்ட போகனும்

    நான் கிளம்பினதும் போயிட்டு, பையன் வர்றதுக்குள்ள வந்துடுங்க என்று நகர முற்பட்டவளை,

    அதில்லை நிரு... என்று மீண்டும் அன்னபூரணி தயங்கியவாறு சொல்ல,

    என்ன பணம் வேணுமா?

    ஆ.. ஆமா.. நிரு... ஒரு ஆயிரம் ரூபாய் குடேன்...

    பத்து வீடு தள்ளி ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கு... அங்க போயி காட்டுங்க, இங்க ஒன்னும் கொட்டிக்கிடக்கலை... என்று விருட்டென்று அறைக்குள் புகுந்து கொண்டாள்.

    படாரென்று சாத்தப்பட்ட கதவையே, கண்ணீர்த்திரை மறைக்க, அன்னபூரணி பார்த்துக்கொண்டு நின்றார்.

    வீட்டின் பின்கட்டில், இவற்றை காதில் வாங்கிக்கொண்டு காய்ச்சல் கண்ட ஹரிஷை மடியில் போட்டுக்கொண்டு, கண்கள் கலங்க அவனைப்பெற்றவர்கள் இருவரும் அமர்ந்திருந்தனர்.

    அரைமணி நேரத்திற்கு பின்னர், அறையில் இருந்து வெளியே வந்த நிருபமா, அவளது மகன் மித்ரனை பள்ளிக்கு கிளப்பி கூட்டிக்கொண்டு வந்தாள்.

    டைனிங் டேபிளில் உட்கார்ந்து மகனுக்கு ஊட்டிவிட்டவள், மித்து... ஹரீஷுக்கு பீவர்... அவனோட விளையாடாத... உனக்கு எக்ஸாம் வேற இருக்கு... புரியுதா...

    சரிம்மா...

    ஈவினிங் ஹோம்வொர்க் பண்ணிட்டு, கொஞ்ச நேரம் வெளிய விளையாடிட்டு வந்து டிவி பார்க்கனும். உடனே டிவி பார்க்க கூடாது. புரிஞ்சுதா

    அம்மா... அத்தை டீவி பார்த்தா திட்டறாங்க

    ஏன்?

    மாமா நியூஸ், கிரிக்கெட் மேட்ச் பார்க்கணுமாம், கார்ட்டூன் பார்க்க விடமாட்டீங்கறாங்க என்று மித்ரன் குற்றப்பத்திரிக்கை வாசிக்க,

    மாமியாரின் பக்கம் திரும்பியவள், உங்க மகளுக்கும், மருமகனுக்கும் நான் குடுத்த டைம் முடிஞ்சு போயி, ஒரு மாசம் கூடவே தாண்டிடுச்சு... சீக்கிரமா வேற வீடு பார்த்துகிட்டு போகச்சொல்லுங்க.. அப்புறம் நானும் என் புருசனும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கறது இவனுக்காகத்தான்... இவன் இஷ்டத்துக்கு தான் இருப்பான்... சொல்லி வைங்க உங்க மகக்கிட்ட... என்ற நிருபமா, தானும் உண்ணலானாள்...

    மகனை பள்ளி வேனில் அனுப்பிவிட்டு, அதற்கு பின்னே வந்த கம்பெனி வண்டியில் ஏறியவள், வீட்டை ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு அவளிடத்தில் சென்று அமர்ந்துகொண்டாள்.

    அவள் வண்டி பார்வையில் இருந்து மறைந்ததும், சமையலறையில் வேலை செய்து கொண்டு, ஜன்னல் வழியே, அவளை பார்த்துக்கொண்டு இருந்த அன்னபூரணி, அதை அப்படியே போட்டுவிட்டு பின்கட்டை நோக்கி ஓடினாள்.

    கிராமமும் இல்லாத, நகரமும் இல்லாத ஊர், அருகில் இருக்கும் கம்பெனி ஒன்றில் நிருபமா அக்கவுண்ட்ஸ் மேனேஜராக இருக்கிறாள். தஞ்சையில் வசித்த நிருபமா, அந்த கம்பெனிக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பின்னர், அதன் அருகிலேயே இடம் வாங்கி, வீடு கட்டி, அங்கேயே குடிபெயர்ந்துவிட்டாள்.

    கணவன் கதிரவன் ஒரு விவசாய பட்டதாரி... ஏக்கர் கணக்கில் இருந்த பூமித்தாயின் மடியில் விவசாயம் பார்த்தவன், காவிரி நீர் கைவிட்டுவிட, கார்பரேட்டும் சோதனை செய்ய, வானும் வேடிக்கை பார்க்க, கடன் வாங்கி, கடன் வாங்கி, இருந்த நிலங்களை விற்றுவிட்டு, மீதமிருந்த கடனை அடைக்கத் துபாய் பறந்துவிட்டான். அங்கு டிரைவராக பணிபுரிந்துகொண்டு இருக்கின்றான்.

    கூடவே வீட்டுக்கடன் சேர்ந்துவிட, கடனை அடைக்க, கணவன் மனைவி இருவரும் ராப்பகலாக ஓடிக்கொண்டு இருக்கின்றனர்.

    ஒரு படுக்கையறை கொண்ட சிறு வீடு… சிறு வரவேற்பறை, அதை ஒட்டி கிட்செனும், நால்வர் அமரக்கூடிய டைனிங் டேபிள் போடப்பட்ட சிறு டைனிங் ஹாலும்... அதற்கு சரிபாதியாக அட்டாச்சுடு பாத்ரூம் கொண்ட ஒரு படுக்கை அறை.

    வீட்டின் கிட்சென் தாண்டி பின்கட்டு... அங்கு ஒரு பாத்ரூமும், துணி துவைக்க, காயவைக்க திறந்த வெளியும் ஆளுயர காம்பவுண்ட் சுவற்றுடன் இருந்தது...

    வீட்டின் மெயின் கேட் மூலமாகவும் வீட்டை சுற்றிக்கொண்டு பின்கட்டிற்கு செல்லலாம்.

    பின் பக்கமாக மாடிப்படிக்கட்டு… வடிவில் கட்டப்பட்டு இருந்த மாடிபடிக்கட்டு தந்த மறைப்பில் சிறு அறை ஒன்று உருவாகி இருந்தது. அதை ஸ்டோர் ரூம் போல நிருபமா பயன்படுத்தி வந்தாள்.

    அதில் தான் அன்னபூரணியின் மகளும், மருமகனும் தற்போது தஞ்சம் புகுந்திருக்கின்றனர்...

    என்ன வந்தனா? பையன் எப்படி இருக்கான்?

    இன்னும் காய்ச்சல் குறையலைம்மா...

    சரி வா... நர்ஸ்சம்மா வந்துருக்கும், போயி காட்டிட்டு வருவோம்

    அங்கேயா? நிருபமா பணம் தரலையா? என்று மகேந்திரன் கவலையோடு கேட்க,

    இல்லை மகேஷ்....

    அந்த பதில் மகேந்திரனின் மனதை அசைத்துப்பார்த்தது...

    .............

    சரி வாம்மா... அங்கேயே போயிட்டு வருவோம்... என்று கணவனின் மவுனம் காணச்சகிக்காது, வந்தனா ஹரிஷை தூக்கிக்கொண்டாள்.

    மூவரும் கிளம்பி ஆரம்ப சுகாதார நிலையத்தை நோக்கிச் சென்றனர்.

    என்னம்மா? என்று ஏதிர்பட்ட நர்ஸ் அவர்களிடம் கேட்க,

    என் பேரனுக்கு நைட்டெல்லாம் காய்ச்சல்ம்மா

    எத்தனை வயசு? என்று அவர் ஒரு நோட்டில் குறித்துக்கொண்டே கேள்வி கேட்க ஆரம்பித்தார்.

    3 வயசு

    பேர் என்னமா?

    ஹரீஷ்

    எப்ப இருந்து காய்ச்சல்?

    ஒரு வாரமா விட்டு விட்டு காய்ச்சல் இருந்ததும்மா... இப்ப நேத்து நைட் விடாம அடிக்குது, நூறுலையே இருக்கு என்று அன்னபூரணி சொல்ல,

    அந்த நர்ஸ் ஹரிஷை பரிசோதித்து பார்த்தார்.

    வைரல் பீவர் மாறி இருக்கு, இப்பையும் நூறு தான் காட்டுது... மருந்து என்ன குடுத்தீங்க

    இந்த மருந்தும்மா என்று கொண்டு சென்றிருந்த பாட்டிலை அன்னபூரணி காட்ட,

    எப்ப கடைசியா குடுத்தீங்க?

    காலைல ஆறு மணி இருக்கும்ம்மா

    வாங்க டாக்டரை போயி பார்ப்போம் என்று மருத்துவரிடம் கூட்டிச்சென்று, அவரிடம் அனைத்தையும் விவரித்தார்.

    அவரும் ஹரிஷை பரிசோதித்துவிட்டு,

    வைரல் பீவர் மாதிரி இருக்கு, ரத்த டெஸ்ட் ஒன்னு பார்ப்போம், இப்ப காய்ச்சல் குறைய ஊசி ஒன்னு போடுங்க, ரத்த டெஸ்ட் பார்த்துட்டு மீதியை பார்ப்போம் என்று சொல்ல, ஊசி போட்டுவிட்டு, ரத்த டெஸ்ட் எடுக்கும் இடத்திற்கு விரைந்தனர்.

    அரைமணி நேரத்திற்கு பின்,

    வைரல் பீவர், அணுக்கள் கம்மியா இருக்கு, டிரிப்ஸ் போடனும், அதுலையே ஆன்டிபயாட்டிக் போட்டுடுவாங்க... அட்மிட் பண்ணுங்க... சீஃப் டாக்டர் வந்து பார்ப்பார். என்று மருத்துவர் சொல்லிவிட, ஹரிஷை அங்கேயே அட்மிட் செய்தனர்.

    வந்தனா... நீ பையன்கிட்ட இரு, நான் போயி மகேஷ்கிட்ட ஹரிஷுக்கு கஞ்சியும், உனக்கு சாப்பாடும் குடுத்து அனுப்பறேன், வேலையெல்லாம் முடிச்சுட்டு நான் வர்றேன்

    சரிம்மா...

    அன்னபூரணி சென்றுவிட, வந்தனா ஹரீஷின் அருகில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தாள்.

    அருகில் இருந்த பெட்டில் அட்மிட் செய்யப்பட்டு இருந்த முதியவர் ஒருவரைக் காண, சில உறவினர்கள் வந்திருந்தனர்.

    அதில் இருந்த ஒரு கணவன், மனைவி, வந்தனாவையும், ஹரிஷையும் கண்டவர்கள், தங்களுக்குள் பார்வை பரிமாற்றத்தை செய்துகொண்டனர்.

    அடுத்த அரை மணி நேரத்தில், மகேந்திரன் உணவுடன் வந்தவன், அங்கிருந்த அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு, தங்கசாமி? என்னாச்சு? யாருக்கு உடம்பு சரியில்லை? என்று அருகில் சென்று பேச,

    அவனது குரலில் தான் அங்கிருந்த இருவரையும் வந்தனா பார்த்தாள்.

    சரிங்க மாமா.. நாங்க போயிட்டு வர்றோம், தீபா வேற வீட்ல தனியா இருக்கு என்று தங்கசாமி அவனை மதிக்காது அந்த முதியவரிடம் சொல்லிவிட்டு நகர,

    மகேந்திரனுக்கு முகத்தில் அடித்தது போல இருந்தது.

    அதைக் காணச் சகிக்காது, வந்தனா, என்ன தங்கசாமி? அவரே வந்து பேசியும் கண்டுக்காம இப்படி அசிங்கபடுத்திட்டு போறீங்க? என்று மனத்தாங்கலுடன் கோபமாகக் கேட்க,

    இந்தா பாரும்மா... இவங்கிட்டையெல்லாம் நின்னு பேசனும்ன்னு என் புருசனுக்கு ஒன்னும் அவசியம் இல்லை. அதுவும் இல்லாம நீ அதட்டல் போட்டு பேச, இப்ப அவர் ஒன்னும் இவங்கிட்ட வேலை செய்யலை

    தெரிஞ்சவங்கன்னு பேசினா, அவன், இவன்னு மரியாதை இல்லாம பேசறீங்க

    உங்களுக்கு இதுவே அதிகம்... வாங்க... இதுங்க காத்து பட்டாலே நமக்கும் பாவம் என்று அந்த பெண்மணி கணவனது கரத்தைப்பிடித்தவாறு அங்கிருந்து செல்ல,

    ஏன் பரமு? இவங்களை உனக்குத் தெரியுமா? என்று அவர்கள் இருவரின் பின்னாலேயே அந்த ஊர் பெண்மணி ஒருவர் வாய்க்கு அவல் போட விவரம் கேட்டுக்கொண்டே சென்றார்.

    தங்கசாமி மற்றும் அவரது மனைவி பரமுவின் செயலில் மனதில் அடிபட்ட உணர்வுடன் மகேந்திரன் ஹரீஷின் அருகில் சென்று அமர்ந்தான்.

    வந்தனா அவனைத் தேற்றும் பொருட்டு அவனது தோளில் கைவைக்க,

    பையனுக்கு கஞ்சி குடு

    நீங்க சாப்பிட்டீங்களா?

    ஹ்ம்ம்

    மகனுக்கு கஞ்சி தந்து, படுக்கையில் படுக்க வைத்துவிட்டு, வந்தனா தானும் உண்ணலானாள்.

    மகேந்திரனின் மனம் தான் எல்லையில்லாத் துயரத்தை சுமந்து கொண்டிருந்தது.

    மூன்று நாட்கள் கடந்து, ஹரீஷ் வீட்டிற்கு வந்தும், நிருபமா அவனைச் சென்று பார்க்கவேயில்லை.

    அன்று, ஞாயிறு என்பதால், நிருபமா விடுப்பில் இருந்தாள். காலையிலேயே சென்று மகனுக்கு மீனும், மட்டனும் வாங்கி வந்து சமைக்க ஆரம்பித்து இருந்தாள்.

    அன்றைய தினம் அன்னபூரணி அவள் சமைத்த பின்னர் தான் சமைக்க முடியும். இல்லையென்றால், அவளுக்கு முன்பே சமைத்து வைத்திருக்க வேண்டும்.

    அவர்கள் மூவருக்கும் இட்லி ஊற்றி எடுத்துவைத்தவர், சட்னி மற்றும் சாம்பார் வைத்திருந்தார்.

    நிருபமா மகனுக்கு காலை உணவிற்கு, பூரியும், கறிக்குழம்பும், செய்தவள், மதியத்திற்கு மீனை மசால் தடவி வைத்துவிட்டு, கிட்செனை விட்டு வெளியே வந்தாள்.

    அவள் சென்றதும், கிட்செனை ஆராய்ந்த அன்னபூரணி, அவளுக்கு தெரியாமல், ஒரு கிண்ணத்தில் கறிக்குழம்பு கொஞ்சம் ஊற்றிக்கொண்டு திரும்ப, அதை நிருபமா கை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

    கையும் களவுமாக சிக்கிக்கொண்ட அன்னபூரணியின் கண்களில் இருந்து கண்ணீர் உற்பத்தியாக, கையில் இருந்த கிண்ணத்தை கிட்சென் சிலாஃப்பில் வைத்துவிட்டு, இரு கரங்களையும் கூப்பி,

    மன்னிச்சிடு நிரு... ஹரிஷுக்கு குடுக்கலாம்ன்னு... என்று குரல் கம்ம சொல்ல,

    நான் ஒன்னும் அந்தளவுக்கு கொடுமைக்காரி இல்லை, நானே அவனுக்கு குடுக்கனும்ன்னு நினைப்பேன், நீங்க எனக்குத்தெரியாம அவனுக்கு வாரவாரம் அசைவ உணவு குடுக்கறது எனக்குத் தெரியாதுன்னு நினைக்கறீங்களா?

    நிரு....

    உங்க மகளையும், அவளைச் சார்ந்தவங்களையும் நானும், என் கணவனும் என்னிக்கும் ஏத்துக்க மாட்டோம், அதுக்காக அந்த பிஞ்சை தண்டிக்க நாங்க தயாரில்லை

    ………..

    பெத்த அம்மாங்கற ஒரே காரணத்துக்காக என் புருஷன் உங்களை இங்க இருக்கச் சொல்லி இருக்கார், கூடவே ஒரு கடமைக்காகத்தான் அவளை இங்க தற்காலிகமா தங்கச் சொன்னார்.

    …………

    அதுவும் முடிஞ்சு போச்சு... இன்னும் ஒரு வாரத்துல, அவங்களை வேற வீடு பார்த்து போகச் சொல்லிடுங்க... மீறி இருந்தா, அவங்க பொருளையெல்லாம் நான் வெளிய தான் தூக்கி போடுவேன்...

    நிரு.... இன்னும் கொஞ்சம் டைம் குடேன்...

    இதுக்கு மேல என்னால டைம் தர முடியாது. இன்னொரு விஷயம், உங்களுக்கு மகன் வேணுமா, மகள் வேணுமான்னு உங்க பையன் முடிவு பண்ணிக்கச் சொன்னார்.

    என்னம்மா சொல்ற?

    மகள் வேணும்ன்னு அவ பின்னாடி போனா, கொள்ளிவைக்கக் கூட மகன் வரமாட்டாராம் என்றவள் அவரைத்தாண்டிச் சென்று செல்பில் இருந்த தட்டை எடுத்து, மகனுக்கு உணவை எடுக்க ஆரம்பித்தாள்.

    அனைத்தையும் பின்னால் இருந்து கேட்டுக்கொண்டு இருந்த, வந்தனாவிற்குத் தான் உள்ளம் அதிகம் கொந்தளித்தது.

    அன்னை கொண்டு வந்த குழம்பை, ஆத்திரத்துடன் தட்டிவிட்டவள்,

    என்னம்மா அவ நினைச்சுக்கிட்டு இருக்கா? நாங்க என்ன பிச்சைக்காரங்களா? இன்னிக்கு அவளை என்ன பண்ணறேன்னு பாரு என்று அவரையும் தள்ளிவிட்டு ஹாலை நோக்கிச்சென்றாள்.

    நிருபமா.... என்ற அவளின் குரல் கேட்டும், அவளை ஒரு பொருட்டாக மதிக்காத நிருபமா, டிவியை பார்த்துக்கொண்டே மகனுக்கு உணவு ஊட்ட,

    அவளது கையில் இருந்த தட்டை வேகமாக பிடுங்கி எறிந்தாள், வந்தனா.

    அதில் கோபம் கொண்ட நிருபமா, சட்டென எழுந்து வந்தனாவை அறைந்திருந்தாள்.

    அன்னபூரணி சுதாகரித்து வருவதற்குள் அனைத்தும் நொடியில் நடந்திருந்தது.

    வந்தனாவை நிருபமா அடித்ததைப் பார்த்த மகேந்திரன்,

    நிருபமா.... என்று கர்ஜிக்க,

    அவன் பக்கமாகத் திரும்பிய நிருபமா, ஷ்ஷ்ஷு என்று வாயின் மீது விரல் வைத்து, அமைதியாக இருக்கும்படி சொன்னவள்,

    உன் திமிரெல்லாம் உன் வீட்ல வைச்சுக்கோ... இது என் வீடு...

    இது என் அண்ணன் வீடு…. என்னை இங்க இருந்து போக சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு?

    எப்படி எப்படி... அண்ணன் வீடா? இது என் புருஷன் வீடும்மா... எனக்கு மட்டும் தான், இப்ப, இங்க, உரிமை இருக்கு... என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் தந்தவள், தொடர்ந்து, தென் நான் ஒன்னும் பரம்பரை பரம்பரையா உங்க தாத்தா பாட்டி காலத்து வீட்டை உரிமை கொண்டாடலை... சரியா? நானும் என் புருசனும் சுயமா சம்பாதிச்சு கட்டின வீடு இது. என்று சொல்ல, வந்தனாவிற்கு பேச வார்த்தைகளில்லை.

    …………….

    எப்ப என் பையன் சாப்பிடற தட்டை நீ தட்டி விட்டையோ, இனி நீ ஒரு நிமிஷம் கூட இந்த வீட்ல இருக்கக்கூடாது... உடம்பு சரியில்லாத உன் பையனுக்காக, இன்னும் ஒரு நாள் டைம் தர்றேன். நாளைக்கு பொழுதுக்குள்ள வீட்டை காலி பண்ணுங்க... என்றவள் மாமியாரின் பக்கம் திரும்பி,

    மகனா? மகளான்னு முடிவு பண்ணிக்கிங்க... என்று சொல்லிவிட்டு கீழே கிடந்த தட்டை எடுத்துக்கொண்டு கிட்ச்செனை நோக்கிச் செல்ல, அவளை இடை மறித்த மகேந்திரன்,

    எப்பையும் நாங்க இப்படியே இருக்க மாட்டோம் நிருபமா... இதுக்கான பதிலை ஒரு நாளைக்கு நான் உனக்கு குடுக்காம இருக்கமாட்டேன்

    அத்தை... கண்ட நாயெல்லாம் இந்த வீட்ல நின்னு என்னை பார்த்து குறைக்குது.... முதல்ல என்னை பார்த்து, குறைக்கக் கூட ஒரு தகுதி வேணும்.. இந்த மாதிரி தகுதி இல்லாத ஆளுங்களை கூட்டி வந்து என்னையும் என் புருஷனையும் ஏன் அசிங்கப்படுத்தறீங்க

    ஏய், யாரை நாயின்னு சொல்ற? என்று வந்தனா மீண்டும் அவளிடம் பாய வர, மகேந்திரன் பிடித்து வைத்துக்கொண்டான்.

    நிருபமா நீ பேசறது ரொம்ப தப்பு என்று அன்னபூரணி கண்கள் கலங்க சொல்ல,

    எது தப்பு? அன்னிக்கு என் புருஷன் அசிங்கப்பட்டு நின்னப்ப வாயை மூடிக்கிட்டு நின்னீங்கள்ல, அன்னிக்கு எங்க போச்சு உங்க அறிவு? அன்னிக்கு நடந்தது சரின்னா, இப்ப நான் பேசறதும் சரி, நான் பேசறது தப்புன்னா, அன்னிக்கு நடந்ததும் தப்பு என்றவள்,

    அங்கிருந்த டீபாயில் கிடந்த ஃபோனை எடுத்து,

    ஹலோ...

    ………….

    நாளன்னிக்கு நம்ம வீட்ல வெள்ளை அடிக்கனும்

    .............

    "யெஸ்... அட்வான்ஸ் நாளைக்கு ஆஃபிஸ்ல வாங்கிக்கோங்க, நாளன்னிக்கு வேலை முடிஞ்சே ஆகனும்.

    ………..

    தேங்க்ஸ் என்று ஃபோனை அணைத்தவள்,

    மற்றொரு அழைப்பெடுத்தாள்.

    ஹலோ

    ……………….

    சாமி, அன்னிக்கு நான் சொன்ன மாதிரி பூஜை பண்ணனும், நாளன்னிக்கு வீடு பூசறேன், எப்ப பூஜை வைச்சுக்கலாம்?

    ………….

    சரிங்க சாமி.... புதன் கிழமை காலைல ஏற்பாடு பண்ணிடலாம், நீங்க ஆபீஸ் வந்து நாளைக்கு என்னை பாருங்க, நான் பணம் தர்றேன், பொருளெல்லாம் நீங்களே வாங்கிட்டு வந்திடுங்க

    …………..

    ஃபோனை அணைத்தவள், அன்னபூரணியின் பக்கம் திரும்பி,

    பேசினது கேட்டீங்கள்ல? புரிஞ்சுருக்கும்ன்னு நினைக்கிறேன் என்று கிட்செனுக்குள் நுழைய,

    என்னம்மா இப்படி பண்ணறா? என்று வந்தனா அன்னபூரணியை அணைத்துக்கொண்டு அழ,

    சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கம்மா என்ற அன்னபூரணி, மகளை விலக்கிவிட்டு, கீழே சிதறிக்கிடந்த உணவுகளை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

    2

    மவுனமும், கண்ணீரும் நிறைந்த ஞாயிறு மெல்ல மெல்ல மறைய, பின்கட்டில் வந்தனா மற்றும் மகேந்திரன் இருவரும் சோகத்துடன் அமர்ந்திருந்தனர்.

    ஹாலில் கிடந்த ஷோபாவில் அமர்ந்து துணி மடித்துக்கொண்டு இருந்த அன்னபூரணியிடம் தனது செல்போனை நீட்டினாள் நிருபமா.

    அதில் தெரிந்த கதிரவனைக் கண்டதும் மகிழ்வுடன் அதனை வாங்கிய அன்னபூரணி,

    கதிரு... எப்படிப்பா இருக்கிற?

    இருக்கேன்ம்மா.... நீங்க எப்படி இருக்கறீங்க?

    எனக்கென்னப்பா... நிருபமா என்னை நல்லா பார்த்துக்கறா?

    இப்ப நான் உங்ககிட்ட பேசனும்ன்னு சொன்னதுக்கு காரணமே, வந்தனா பத்தி தான்

    சொல்லுப்பா

    ஒரு அண்ணனா என் கடமையை நான் இது வரைக்கும் சரியா செஞ்சு இருக்கேன்ம்மா. முடிஞ்சு போன உறவை நான் புதுப்பிக்க தயாரா இல்லை. உங்களுக்காகத்தான் நான் இவ்ளோ நாளா என் வீட்ல அவளை தங்க வைச்சு இருக்கேன்.

    எனக்கு எல்லாமே தெரியுதுப்பா

    நாளைக்கு அவளை கிளம்ப சொல்லிடுங்க, கூடவே தாய்மாமன்னு வந்து நிற்க வேண்டாம்ன்னு சொல்லிடுங்க

    தம்பி...

    அந்த உறவு ஏற்கனவே அறுபட்ட உறவுன்னு உங்களுக்கே தெரியும். நீங்க இப்ப எங்க ரெண்டு பேர்ல ஒருத்தரை தான் தேர்ந்தெடுக்கனும். அது யார்ன்னு நீங்களே முடிவுபண்ணிக்கோங்க

    கதிரு....

    நான் வேணும்ன்னு நினைச்சா, மகளை தலை முழுகிடுங்க, அவ வேணும்ன்னு நினைச்சா என்னை தலை முழுகிடுங்க

    .............

    என்ன வேணா முடிவு பண்ணிக்கோங்க, பட் என் கூட இருக்கற மாதிரி இருந்தா, நாளைக்கு உங்களுக்கு ஏதாவது ஒன்னு நடந்தா, நான் அவளுக்கு சொல்லவும் மாட்டேன், சேம் அவளை உங்க முகத்தை பார்க்கவும் விட மாட்டேன்

    கதிரு........

    அவதான்னு நீங்க போனா, இதுதான் நாம பேசற கடைசி முறையா இருக்கும்...

    .............

    பைம்மா என்றவன் ஃபோனை அணைத்துவிட்டான்.

    கசியும் கண்களுடன், அன்னபூரணி ஃபோனை நிருபமாவிடம் தந்தார்.

    அடுத்தநாள் காலை நிருபமா வேலைக்கு கிளம்பிய பின்னர்,

    மகளிடம் சென்ற அன்னபூரணி,

    வந்தனா...

    என்னம்மா?

    என்கிட்ட ஆயிரம் ரூபா தான் இருக்கு, இதை வைச்சுக்கோ... என்னடா அம்மா காசை வைச்சுக்கிட்டே பையனுக்கு தரலைன்னு நினைக்காத... இது என்னிக்காவது அவசரத்துக்கு ஆகும்ன்னு நான் எடுத்து வைச்சிருந்த காசு

    நீயும் என்னை போகச் சொல்றியாம்மா?

    இங்கயே இருக்க முடியாதும்மா...

    .............

    நானே இங்க பாரம் தான், என்னையும் அவன் இங்க இருக்க சொல்லி சொல்லலை. உன் கூடவே போறதுன்னா போகச்சொல்லிட்டான்

    என்னம்மா சொல்ற? அண்ணன் எப்ப பேசுச்சு?

    நேத்து நைட்... இப்ப நீங்க இருக்கற சூழல்ல நான் உங்களுக்கு பாரம், பையனுக்கும் மூனு வயசாகிடுச்சு, ஏதாவது ஒரு ஸ்கூல்ல சேர்த்துவிட்டுட்டு நீயும் ஒரு வேலைக்கு போ, உங்க பாடை நீங்க பார்த்துக்கோங்க

    அத்தை....

    மகேஷ்.... என்னதான் நீ வெளிநாட்ல படிச்சு, ஒரு பெரிய கம்பெனியோட முதலாளியா இருந்திருந்தாலும், இன்னிக்கு உன் நிலமை அப்படி இல்லை, கூடவே தொழில் ஆரம்பிக்க உன் கைல இப்ப பணமும் இல்லை. சொல்லப்போனா, இன்னும் கடன் தான் இருக்கு. வர்ற வேலையெல்லாம் தட்டிக்கிட்டே இருந்தா, இன்னும் அசிங்கப்படவேண்டி வரும். வந்தனாவுக்காக நீ எல்லாமே பொறுத்து போகலாம். எப்பையும் இப்படியே இருக்க முடியாது

    .............

    உன்னாலையும் அப்படி இருக்க முடியாது

    .............

    ஆறு மணிக்கு முன்னாடி கிளம்பிடுங்க... அப்புறம் நாளைக்கு நான் செத்துட்டேன்னு உனக்கு உங்க அண்ணன் தகவல் சொன்னா மட்டும் வந்து என்னைப் பார். இல்லைன்னா வராத...

    "நாங்க கிளம்பறோம்மா... இனி நீயோ, உன்

    Enjoying the preview?
    Page 1 of 1