Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyir Unarum Va(li)zhiyo Kaadhal
Uyir Unarum Va(li)zhiyo Kaadhal
Uyir Unarum Va(li)zhiyo Kaadhal
Ebook323 pages2 hours

Uyir Unarum Va(li)zhiyo Kaadhal

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

காதல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவங்களைக் கொடுக்கும்... வலியைக் கொடுக்கும் காதலே வாழ்விற்கான வெளிச்சமாய் வழியையும் காட்டலாம்... காதலிப்பவர்கள் பொய்த்தாலும் காதல் என்றும் உண்மையானது... இந்தக் கதையிலும் இரு ஜோடிகளின் வாழ்வில் காதல் எவ்வித அனுபவங்களைக் கொடுத்தது என்பதைப் படித்து தெரிந்து கொள்ளலாம்...

Languageதமிழ்
Release dateSep 28, 2021
ISBN6580134407500
Uyir Unarum Va(li)zhiyo Kaadhal

Read more from Latha Baiju

Related to Uyir Unarum Va(li)zhiyo Kaadhal

Related ebooks

Reviews for Uyir Unarum Va(li)zhiyo Kaadhal

Rating: 3 out of 5 stars
3/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyir Unarum Va(li)zhiyo Kaadhal - Latha Baiju

    https://www.pustaka.co.in

    உயிர் உணரும் வ(லி)ழியோ காதல்

    Uyir Unarum Va(li)zhiyo Kaadhal

    Author:

    லதா பைஜூ

    Latha Baiju

    For more books

    https://www.pustaka.co.in/home/author/latha-baiju

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் – 6

    அத்தியாயம் – 7

    அத்தியாயம் – 8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் – 10

    அத்தியாயம் – 11

    அத்தியாயம் – 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் – 14

    அத்தியாயம் – 15

    அத்தியாயம் – 16

    அத்தியாயம் – 17

    அத்தியாயம் – 18

    அத்தியாயம் – 19

    அத்தியாயம் – 20

    அத்தியாயம் – 21

    அத்தியாயம் – 22

    அத்தியாயம் – 23

    அத்தியாயம் – 24

    அத்தியாயம் – 25

    அத்தியாயம் – 26

    அத்தியாயம் – 1

    அம்மா, இங்க வா... அறைக்குள் இருந்து மூத்த மகள் ரம்யாவின் கத்தலைக் கேட்டு அடுக்களையில் இருந்து ஓடி வந்தாள் பூங்கொடி.

    என்னடி, எதுக்கு இப்படிக் கத்தற...

    என்னோட பிங்க் துப்பட்டா எங்கே, காணோம்... அவள் கேட்டதும் உள்ளுக்குள் சற்று அதிர்ந்தவர், அ..அது துவைச்சுப் போட்டிருக்கேன், மாடில இருக்கும்...

    அதை எதுக்குத் துவைச்ச... நான் தான் யூஸ் பண்ணவே இல்லியே...

    துவைக்கறதுக்கு துணி கம்மியா இருந்துச்சு... அதான் சும்மா டைம் பாஸ்க்கு எடுத்துத் துவைச்சேன், போதுமா... பதில் சொல்லிட்டனே, நான் போகலாமா... சொல்லிவிட்டு உயிரைப் பிடித்துக் கொண்டு நகர்ந்தாள் பூங்கொடி.

    நல்லவேளை, எதையோ சொல்லி சமாளிச்சேன்... சின்னவ காவ்யா தான் இவ துப்பட்டாவை எடுத்துப் போட்டுட்டுப் போயிருக்கான்னு தெரிஞ்சுது, இவ இந்நேரம் சாமி ஆடிருப்பாளே... புலம்பிக் கொண்டே ரசத்துக்குப் புளியைக் கரைத்தாலும் வயிற்றிலும் புளியைக் கரைத்தபடி நின்றார்.

    மதிய சமையலை முடித்து மேசை மீது எல்லாவற்றையும் எடுத்து வைத்து ஹாலுக்கு செல்ல டீவி முன் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு ஒரு பழைய அழுக்கு நைட்டியுடன் அமர்ந்திருந்தாள் ரம்யா.

    ரம்யா, அம்மா தான் உனக்கு புதுசா நாலஞ்சு நைட்டி வாங்கி வச்சிருக்கேன்ல, அதுல ஒண்ணை எடுத்துப் போட்டுக்கக் கூடாதா, இந்த நைட்டில இனி சாயம்னு ஒண்ணு இல்லவே இல்லேங்கிற போல நஞ்சு, நரைச்சுப் போயிக் கிடக்கு... இப்பவும் அதே தான் போடுவேன்னு ஏம்மா அடம் பிடிக்கற... பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க மகள் அலட்சியமாய் ஒரு வில்லி சிரிப்பு சிரித்தாள்.

    ஹூக்கும், சொல்லுறதெல்லாம் கேட்டுட்டு வில்லத்தனமா சிரிக்கிறதைப் பாரு, படையப்பா நீலாம்பரின்னு நினைப்பு மனசுல... கொஞ்சம் கூட மதிக்கிறது கிடையாது...

    என்ன கடுப்பா இருக்கா, எவ்ளோ வாங்கிக் கொடுத்தாலும் உன் பொண்ணு புதுத் துணி போடாம பிச்சக்காரி போல இருக்காளேன்னு வயிறு எரியுதா... இன்னும் கபகபன்னு நல்லா எரியட்டும்... அப்பத்தான் என் மனசு கூலாகும்... சொன்னவளை பூங்கொடி வேதனையுடன் பார்க்க வெடுக்கென்று ரிமோட்டை எடுத்து சானலை மாற்றினாள்.

    "சோதனை தீரவில்ல, சொல்லி அழ யாருமில்ல,

    முன்னப் பின்ன அழுததில்ல, சொல்லித் தர ஆளுமில்ல..."

    சன் லைபில் ஒலித்த பாடலில் உருக்கமாய் முகத்தை வைத்துக் கொண்டு ரம்யா அதில் ஆழ்ந்து போக, தலையில் அடித்துக் கொண்டு வேதனையுடன் எழுந்து சென்றாள் பூங்கொடி.

    சோதனை உனக்கில்லடி, உன்னைப் பெத்ததுக்கு தினம் தினம் எங்களுக்கு தான் வேதனையைக் கொடுத்துட்டு இருக்க... மனது ஆற்ற முடியாமல் பொசுங்கி வலித்தது.

    சரவணன், பூங்கொடி தம்பதியருக்கு இரண்டு மகள்கள் மூத்தவள் ரம்யா டிகிரி முடித்திருக்கிறாள். இரண்டாமவள் காவ்யா இரண்டாம் வருடம் முடிக்கும் தருவாயில் இருக்கிறாள்.

    சரவணன் சொந்தமாய் எலக்ட்ரிக்கல் ஷாப் வைத்திருக்க, வசதி வாய்ப்புக்கு குறைவில்லாத ஹையர் மிடில் கிளாஸ் வாழ்க்கை.

    மூத்தவள் ரம்யாவின் அகராதியில் எழுதியதெல்லாம் பிடிவாதம், திமிர், ஆணவம், அகம்பாவம் மட்டுமே. அவளுக்கு நேர் எதிரானவள் தங்கை காவ்யா. எல்லா விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளும் மென்மையான சுபாவம் கொண்டவள். அக்காவின் பிடிவாதத்தை பொறுமையாய் சமாளிப்பாள்.

    வாசலில் வண்டி சத்தம் கேட்டதைத் தொடர்ந்து சரவணன் வெயிலின் சோர்வுடன் உள்ளே வந்தார்.

    உஸ்ஸ்... அப்பா, ஏன்னா வெயிலு... அடிக்கிற வெயிலுக்கு தண்ணித் தொட்டிக்குள்ள இறங்கி உக்கார்ந்துக்கலாம் போலருக்கு... புலம்பிக் கொண்டே வந்தவருக்கு கையில் மோருடன் வந்தார் பூங்கொடி.

    இந்தாங்க மோரு... சாப்பாடு எடுத்து வைக்கவா...

    ம்ம் சரி பூவு, முகம் கழுவிட்டு வரேன்... என்றவர் மோரைக் குடித்துவிட்டு கொடுத்தார். தான் வந்ததைக் கூட கண்டு கொள்ளாமல் டீவியில் ஆழ்ந்திருந்த மகளிடம் கையிலிருந்த கவரைப் பிரித்தபடி கேட்டார்.

    ரம்யாக் கண்ணு, சாப்பிட்டியா டா...

    இல்ல...

    உனக்குப் பிடிக்குமேன்னு இளநீர் ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வந்தேன்... சாப்பாடு சாப்பிட்டு சாப்பிடு...

    எனக்கு வேண்டாம்...

    ஏண்டா, உனக்கு பிடிக்கும்னு சொல்லுவியே...

    இப்பப் பிடிக்காது... முகத்திலடித்தாற் போல் வந்த பதிலில் முகம் வாடியவர் ஐஸ்க்ரீமை மேசை மீது வைத்துவிட்டு அறைக்குள் சென்று விட்டார்.

    ஏன் ரம்யா, இப்படிப் பண்ணற... உனக்குப் பிடிக்கும்னு எப்பவோ சொன்னதை நினைவு வச்சு அப்பா ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வந்திருக்கார், முகத்துல அடிச்ச போல் வேண்டாம்னு சொல்லற...

    அப்பப் பிடிச்சுது, இப்பப் பிடிக்கல... அதுக்கென்ன...

    ஏண்டி இப்படிப் பேசற... நீ சொல்லுற வார்த்தை எங்களை எவ்ளோ வேதனைப்பட வைக்குது தெரியுமா...

    வேதனப்படனும்னு தான சொல்லறேன்... நல்லாப் படுங்க... என்னவோ எனக்கு பிடிச்சதெல்லாம் கொடுக்கற போல சீன் போடறீங்க... சொன்னவள் எழுந்து டைனிங் ஹாலுக்கு சென்று ஒரு தட்டில் சாதத்தை வைத்து தயிரை மட்டும் ஊற்றிக் கொண்டு டிவி முன்னில் அமர்ந்தாள்.

    ரம்யா, அயிரை மீன் குழம்பு வச்சு, பிரை பண்ணிருக்கேன், அதையாச்சும் எடுத்துக்க...

    ப்ச்... வேண்டாம், அதெல்லாம் நீங்களே தின்னுட்டு நல்லாருங்க... என்றவள் வம்படியாய் தயிர் சோறில் உப்பு கூடப் போடாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்க வேதனையுடன் உணவு மேசைக்கு வந்தார் சரவணன்.

    அவளுக்கு ஒரு முட்டையாச்சும் ஆம்லட் போட்டுக் கொடுக்கலாம்ல, இப்படி எல்லாத்தையும் சாப்பிடாம ஒதுக்கி வச்சா அவ உடம்பு என்னத்துக்கு ஆகறது...

    ஹூக்கும்... மகமேல ரொம்ப தான் அக்கறை, பெருசா சொல்ல வந்துட்டார்...

    அவ வேணும்னே சாப்பிடாம நம்மளைப் பாடாப் படுத்திட்டு இருக்கா... அவளுக்கு கோழி முட்ட மட்டுமில்ல, டைனோசர் முட்டைல ஆம்லட் போட்டாலும் தின்ன மாட்டா, உடம்பெல்லாம் அவ்ளோ திமிரு... எரிச்சலுடன் மகளை நோக்கி சொல்லிக் கொண்டே கணவனுக்கு பூங்கொடி உணவைப் பரிமாற அது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் உப்பில்லா தயிர் சாதத்தை வாய்க்குள் போட்டு முழுங்கி வயிற்றை நிறைத்துக் கொண்டிருந்தாள் ரம்யா.

    மகளைப் பற்றிய கவலை மனதில் இருந்தாலும் வயிற்றுக்கு வஞ்சம் செய்யாமல் மனைவி வைத்திருந்த மீன் குழம்பு, வறுவலை ரசித்து ருசித்து உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார் சரவணன். பூங்கொடியும் கணவனுக்குப் பரிமாறிவிட்டு உடன் அமர்ந்து சாப்பிட்டார்.

    பெருசா பீல் பண்ணற போல டயலாக் விட்டுட்டு ரெண்டும் நல்லாக் கொட்டிக்கிறதைப் பாரு... மனதுக்குள் கருவிக் கொண்டே உணவு உண்ட பிளேட்டைக் கூடக் கழுவி வைக்காமல் நங்கென்று சத்தத்துடன் அடுக்களை சிங்கில் போட்டுவிட்டு கை கழுவிவிட்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள் ரம்யா.

    அவளை எரிச்சலுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு சாப்பாட்டை கவனிக்கத் தொடங்கினார் பூங்கொடி.

    மாலையில் கல்லூரி முடிந்து இளைய மகள் காவ்யா திரும்பி வருகையில் அருகிலுள்ள கடையில் நின்ற பூங்கொடி, காவி, அந்த ராட்சஸி ஹால்ல தான் உக்கார்ந்திருக்கா, அவளோட ஷாலை நீ போட்டுட்டு போனது தெரிஞ்சா இன்னைக்கு புல்லா ஆடிட்டு இருப்பா... அந்த ஷாலைக் கழற்றிக் கொடு... என்றவர் வேறு துப்பட்டா ஒன்றை அவளிடம் கொடுத்து போட்டுக் கொள்ள சொல்லிவிட்டு ரம்யாவின் பிங்க் துப்பட்டாவை மடித்து சுருட்டி பைக்குள் வைத்துக் கொண்டார்.

    இதுக்குதான் நான் அது வேண்டாம்னு சொன்னேன், அக்கா கோபப்படுவான்னு தெரிஞ்சும் எதுக்குமா அதைய போட்டு போக சொன்னிங்க... சலித்துக் கொண்டே அந்த துப்பட்டாவை சுரிதார் மீது போட்டுக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள் காவ்யா.

    டீவி பார்க்கறியா அக்கா...

    இல்ல, சமையல் பண்ணிட்டு இருக்கேன்...

    ஏன்க்கா கோச்சுக்கற... வீட்டுல போர் அடிக்குதா, உனக்கு படிக்க லைப்ரரில இருந்து எதுவும் புக் எடுத்திட்டு வரவா...

    உன் அக்கறை வெங்காயம் எல்லாம் என்கிட்ட வேண்டாம்...

    அக்கா என்னைக் கோவிக்க நான் என்ன பண்ணினேன்...

    நீயும் அவங்க கோஷ்டில சேர்ந்தவ தான... ரெண்டு பக்கமும் நல்லவளா நடிச்சா அவார்டு கொடுக்கப் போறதில்ல...

    சாட்டையாய் சுழலும் நாக்கு, முன்னில் எவர் இருந்தாலும் பாரபட்சமில்லாமல் வார்த்தைகளைத் துப்பி குதறிக் கொண்டிருந்தாள். அவளது மனநிலையை உணர்ந்தவள் ஆதலால் அமைதியாய் உள்ளே சென்று விட்டாள் காவ்யா.

    வந்துட்டா, பெருசா விசாரிக்கறதுக்கு... எனக்குன்னு தான் இந்த வீட்டுல யாரும் இல்லையே, இப்ப என்னவோ பெருசா அக்கறை உள்ள போல நடிக்க வேண்டியது...

    "ஏன்? எதற்காய் எல்லார் மீதும் ரம்யாவுக்கு இந்த கோபம்...? அவள் இப்போதுதான் இப்படியா, எப்போதுமே இப்படிதானா?

    மனதின் காயங்களுக்கு

    வார்த்தைகள் மருந்தாகுமா...

    உயிரின் இழப்புக்கு

    உறவுகள் துணை போகுமா...

    உயிர் உணரும்

    வலியோ வழியோ காதல்...

    அத்தியாயம்– 2

    காலையில் கல்லூரிக்கு நேரமாகவே கிளம்பிய காவ்யா வழியில் இருந்த அம்மன் கோவிலுக்குள் நுழைந்தாள்.

    அம்பாளைக் கண்டு அவசரமாய் கன்னத்தில் போட்டுக் கொண்டவளின் பார்வை சுற்றிலும் அலைய, அவளை நோக்கிப் புன்னகையுடன் வந்து கொண்டிருந்தான் கவின். காவ்யாவின் அத்தை மகன்.

    நிகுநிகுவென உயரம்... மாநிறம்... முகம் முழுக்க தேங்கி நிற்கும் குறும்பு சிரிப்பு. பார்வையாலேயே பார்ப்பவர் மனதை சுண்டி இழுக்கும் வசீகரமான தோற்றத்துக்கு சொந்தக்காரன்.

    அவனைக் கண்டதும் சில்லென்று மனதுக்குள் வீசிய பூஞ்சாரலைக் கண்டு கொள்ளாமல் ஒதுக்கியவள் முகத்தில் அவசரத்தைக் காட்டி அவனை ஏறிட்டாள்.

    அத்தான், எதுக்கு என்னை அவசரமா கோவிலுக்கு வர சொன்னிங்க, என்னோட பேசணும்னா வீட்டுக்கு வந்திருக்கலாமே…

    வந்திருக்கலாம் தான், ஆனாலும் உன்னை இப்படித் தனியாப் பார்க்க முடியாதுல்ல, அதான் கோவிலுக்கு வர சொன்னேன்… என்றான் கவின்.

    ஓஹோ, என்னை எதுக்கு நீங்க தனியாப் பார்க்கணும்…? என்றவளின் விழிகளுக்குள் ஆழமாய் பார்த்தவன், காவ்யா, நிஜமாலுமே உனக்கு என் மனசு புரியலையா..? இல்ல, புரியாத போல நடிக்கறியா…?

    ப்ச்… நான் எதுக்கு நடிக்கணும், புரியாம தான் கேக்கறேன்… என்றவளின் விழிகள் நிலம் நோக்கியது.

    அதை என் முகத்தைப் பார்த்து சொல்லறது, இங்க பாரு காவ்யா, உனக்கு நிஜமாலுமே என்னைப் புடிக்கலியா… ஏன் என் மனசு தெரிஞ்சும் இப்படி விலகிப் போற…? அவனது கேள்வி மனதை சுட, தவிக்கத் தொடங்கிய மனதை கட்டுப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தாள்.

    அத்தான், நானும் எத்தனையோ முறை சொல்லிட்டேன், அக்காக்குன்னு ஒரு வாழ்க்கை அமையாம என்னைப் பத்தி மட்டும் என்னால யோசிக்க முடியாதுன்னு… அதுவும் இல்லாம, நீங்க என்னைக் காதலிக்கறீங்கனு வீட்டுல போயி நின்னா முதல் எதிர்ப்பு அவகிட்ட தான் வரும்… முதல்ல படிப்பு முடியட்டும்… அதுக்குள்ள அக்காக்கு ஏதாச்சும் நல்லது நடக்கும்னு நம்புவோம்… அதுக்குள்ளே பெரிய அத்தானுக்கும் கல்யாணம் முடிஞ்சுட்டா அப்புறம் வீட்டுல சொல்லி முடிவு எடுப்போம்… தெளிவாய் சொன்னாள் காவ்யா.

    காவ்யா, நீ சொல்லுறது எல்லாம் சரிதான்… ஆனா உன் அக்கா வீம்புக்கு, வர்ற சம்மந்தம் எல்லாத்தையும் தட்டிக் கழிச்சிட்டு இருக்கா… அப்படி இருக்கும்போது எப்படி அவளுக்கு கல்யாணம் நடக்கும்…?

    அதுக்காக அவளை அப்படியே விட்டுட முடியாதே… அவ இந்த நிலமைல இருக்கும்போது நம்ம கல்யாணத்தைப் பத்தி யோசிக்கிறது ரொம்பத் தப்பு… என்னால அப்படி சுயநலமா யோசிக்க முடியாது…" சொன்னவளை கனிவோடு பார்த்தான்.

    இதான், உங்கிட்ட இருக்கிற இந்த பக்குவமும், குடும்பத்து மேல நீ வச்சிருக்கிற அன்பும் தான் என்னை உன்னையே சுத்தி வர வைக்குது… நீ சொன்னபோல கல்யாணம் எப்ப வேணும்னா நடக்கட்டும், இப்போதைக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு மட்டுமாச்சும் உன் வாயால சொல்லிட்டா நான் நிம்மதியா இருப்பேன்ல…

    அத்தான், வாயால சொன்னாதான் எனக்கு உங்களைப் பிடிக்கும்னு அர்த்தமா… பிடிக்கும்னு சொன்ன பின்னாடி உங்க மனசு அமைதியா இருக்குமா, அடிக்கடி என்னைப் பார்க்க சொல்லும், போன்ல பேச சொல்லும்… அப்புறம் அக்கா காதுக்கு விஷயம் போயிட்டா பிரச்சனை ஆயிடும்… அதான் உங்களைக் கொஞ்சம் பொறுமையா இருக்க சொல்லறேன்… என்றதும் பெருமூச்சு விட்டான் கவின்.

    ஹூம், இவ்ளோ நாள் தான் சொல்லல, இன்னைக்கு என் பிறந்த நாளுக்காச்சும் அந்த சந்தோஷத்தைக் கொடுப்பேன்னு ஆவலா வந்தேன்… ஓகே, இந்த ஸ்வீட் பாக்ஸ் ஆச்சும் வாங்கிக்க… சொன்னவன் ஸ்வீட் பாக்ஸை நீட்ட வாங்கிக் கொண்டவள், பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அத்தான்… என வாழ்த்தவும் செய்தாள்.

    சரி, காலேஜ்க்கு லேட் ஆகிடும், நான் கிளம்பட்டா…?

    நானே டிராப் பண்ணறனே, ப்ளீஸ் காவ்யா… கவின் கெஞ்சலாய் கேட்க, மறுக்க முடியாமல் தலையாட்டினாள்.

    சரி, வண்டில தான போறோம், அஞ்சு நிமிஷம் வெளிய வெயிட் பண்ணுங்க, சாமி கும்பிட்டு வந்துடறேன்… சொன்னவள் அம்மன் சன்னதிக்கு சென்றாள்.

    அர்ச்சகரிடம், சாமி... கவின், பூரம் நட்சத்திரம், ஒரு அர்ச்சனை பண்ணிடுங்க… என்றதும் அவர் பூக்களைத் தூவி மந்திரம் சொல்ல கை கூப்பி கண் மூடி அவனுக்காய் பிரார்த்தித்துக் கொண்டு கண் திறந்தவள் திகைத்தாள்.

    அவள் எதிரே கண்ணில் காதல் வழிய, உதட்டில் மலர்ந்த புன்னகையுடன் கை கட்டி நின்று பார்த்துக் கொண்டிருந்தான் அவளது அத்தை மகன்.

    புருவத்தை மேலேற்றி கேள்வியாய் அவளைப் பார்த்து கேலியாய் சிரிக்க, தன்னை மீறி சிவந்த முகத்தை காட்டிக் கொள்ளாமல் இருக்க போராடினாள் காவ்யா.

    அது…வந்து, என்ன இருந்தாலும் உங்களுக்கு இன்னைக்குப் பிறந்த நாள்னு சொல்லிட்டீங்க… அதான், ஒரு அர்ச்சனை பண்ணலாமேன்னு… திணறலாய் சொல்ல, நான் எதுவும் கேக்கவே இல்லயே… என்றான் அவன்.

    ஹூம், மனசு நிறைய காதல் இருந்தாலும் உன்னால அதை ஒத்துக்க முடியலைல, பார்ப்போம், இன்னும் எவ்ளோ நாளைக்கு இப்படியே சொல்லப் போறேன்னு, சரி, கிளம்புவோமா… என்றதும் வேகமாய் தலையாட்டினாள்.

    அவன் பின்னில் அமர்ந்தவளின் இதயத் துடிப்பு வேகமாவதை அவளால் உணர முடிந்தது. அவனைப் பிடிக்காமல் பைக்கின் சைடில் உள்ள கம்பியை சப்போர்ட்டுக்குப் பற்றி இருந்தாலும் காற்றைக் கிழித்துக் கொண்டு இருவருமாய் புல்லட்டில் செல்கையில் காதுக்குள் ஒலித்த பாடலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

    "பார்த்த முதல் நாளே... உன்னைப் பார்த்த முதல் நாளே...

    காட்சி பிழை போலே... உணர்ந்தேன் காட்சி பிழை போலே..."

    அவள் அமைதியாய் யோசித்துக் கொண்டிருக்க இதழில் மிளிர்ந்த புன்னகையை, சைடு மிரரில் கவனித்த கவின், என்ன காவ்யா, பேக்கிரவுண்டு சாங்கா... என்றதும் திகைத்தவள், கள்ளன், நான் மனசுல எதை நினைச்சாலும் கண்டு பிடிச்சுடறானே... செல்லமாய் சலித்துக் கொண்டாள்.

    காவ்யாவுக்கும் சின்ன அத்தானை நிரம்பவே பிடிக்கும்... சின்ன வயதில் இருந்து பழகியதில் அவன் குணமும் தெரியுமாதலால் அவனை ஏற்றுக் கொள்ள எந்தத் தயக்கமும் இல்லை. ஆனாலும் இருவருக்கும் கல்யாணம் என்பதை குடும்பத்தினராய் பேசத் தொடங்க வேண்டுமென்று எதிர்பார்த்தாள். அக்கா ரம்யாவின் விஷயத்தில் முன்னமே மனமொடிந்து போன பெற்றோருக்கு தானும் எந்த விதத்திலும் வருத்தத்தைக் கொடுத்துவிடக் கூடாது என்பதில் காவ்யா தீர்மானமாய் இருந்தாள்.

    கவின் சிவில் எஞ்சினியரிங் முடித்துவிட்டு ஒரு பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தான். வேலைக்கு சேர்ந்தது முதல் இப்படி காதல் விண்ணப்பத்தைத் தூக்கிக் கொண்டு அடிக்கடி காவ்யாவிடம் ஓடி வருகிறான். அவளுக்கும் அவனிடம் நேசம் இருந்தாலும் வீட்டுப் பெரியவர்களாய் தீர்மானிக்க வேண்டுமென்று விரும்பினாள். அதற்கு முக்கிய காரணமும் இருந்தது.

    நிலம் பார்க்கும் உன் கண்கள்

    என் முகம் பார்க்க மறுப்பதேனோ

    இதழ் உரைக்கும் பொய்யை

    இமை மறைக்கத் தானோ...!

    வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்க, துவைத்த துணியை மடித்துக் கொண்டிருந்த பூங்கொடி எட்டிப் பார்த்தார். சரவணனின் தங்கை மல்லிகா மகன் அர்ஜூனுடன் காரிலிருந்து இறங்கிக் கொண்டிருக்க முகம் மலர்ந்தார்.

    தலையைப் பெப்பரப்பே என விரித்துப் போட்டுக் கொண்டு சோபாவில் அமர்ந்து, அடுத்து வீட்டினரை எப்படி வெறுப்பேத்தலாம் என சீரியஸாய் யோசித்துக் கொண்டிருந்த மகளிடம்,

    ரம்யா... மல்லிகா அத்தயும், அர்ஜூன் அத்தானும் வர்றாங்க, போயி தலையை சீவி ஒதுக்கிட்டு அழகா வா மா... என்றதும் எரிச்சலாய் முறைத்தாள்.

    அவங்க என்ன... பொண்ணு பார்க்கவா வராங்க, வந்துட்டுப் போகட்டும்... அசால்ட்டாய் சொன்னவள் அப்படியே குத்துக் கல்லாய் அங்கே அமர்ந்திருக்க, பூங்கொடி தலையில் அடித்துக் கொள்ள அதற்குள் மல்லிகா உள்ளே வந்தார்

    என்ன அண்ணி, என் மருமவ என்ன சொல்லுறா...

    ப்ச்... எத்தன தடவ சொல்லிருக்கேன், என்னை அப்படி கூப்பிட வேண்டாம்னு... மருமவளாம் மருமவ... பட்டென்று மூஞ்சியில் அடித்தது போல் சொல்லிவிட்டு எழுந்து அவள் அறைக்குள் நுழைந்து கொண்டாள். விக்கித்துப் போன மல்லிகா, என்ன அண்ணி, இவ இப்பவும் அப்படியே தான் இருக்காளா... என்றார் கவலையுடன்.

    ஆமா மல்லிகா, போன ஜென்மத்துல நாங்க பண்ணின பாவம் தான் இவளைப் பொண்ணாப் பெத்து வச்சிருக்கோம்னு நினைக்கறேன்...

    பீல் பண்ணாதீங்க அண்ணி, ஏதோ அவளோட பொல்லாத காலம், விதி அவளை இப்படி ஆக்கி வச்சிருச்சு, காலம், மாறி வரும்போது அவளும் மாறிடுவா...

    ம்ம்... அப்படிதான் ஒவ்வொரு நாளும் நினைச்சிட்டு இருக்கோம்... ஒரு வருஷமாச்சு, மாற்றத்துக்கான எந்த அறிகுறியும் காணோம்... நாளுக்கு நாள் அவளோட திமிரும், அடாவடியும் அதிகமாயிட்டு தான் இருக்கு... பூங்கொடி சொல்வதைக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான் மல்லிகாவின் மூத்த மகன் அர்ஜூன்.

    வாப்பா அர்ஜூன், இன்னைக்கு லீவா...

    இல்ல அத்த, இன்னைக்கு நைட் ஷிப்ட்... அதான் அம்மா இங்க வரணும்னு சொல்லவும் அழைச்சிட்டு வந்தேன்... சொன்ன அர்ஜூன் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்துவிட்டு, வின்ட் மில்க்கான ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கும் பிரைவேட் கம்பெனி ஒன்றில் சீனியர் சூப்பர்வைசராக இருக்கிறான். தம்பி கவினை விடக் குறைவான சம்பளம் என்றாலும் மனதுக்குப் பிடித்த, படித்த நிறைவான வேலை என்பதில் சந்தோஷமாய் இருந்தான்.

    மல்லிகாவுக்கு இரண்டு மகன்கள் மூத்தவன் அர்ஜூன் அமைதியும் பொறுப்பும்

    Enjoying the preview?
    Page 1 of 1