Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Hello... Mister Yethirkatchi!
Hello... Mister Yethirkatchi!
Hello... Mister Yethirkatchi!
Ebook155 pages1 hour

Hello... Mister Yethirkatchi!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

“எதுக்காக திடீர்னு இந்த சுபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்?அடங்கணும், அடக்கணும்’ன்னு எல்லாமே புதுசா இருக்கு. புருஷன் உசத்தி, பொண்டாட்டி தாழ்த்திங்கற எண்ணம் எப்ப இருந்து வந்தது திரு? ஆரம்பத்துல நாம டெஸ்ட் மேட்ச் விளையாடினபோது இவ்வளவு வன்மம் இல்லையே?”

“இப்பவும் எந்த வன்மமும் இல்ல. ஆம்பளைன்னா ஒரு படி மேல இருக்கணும்.”

“அப்படின்னு எந்த இடத்துல தீர்மானம் போட்டாங்க? உங்க கொள்கை மாற்றத்துக்குத் தகுந்த மாதிரி நான் மாற முடியாது. எவ்வளவுதான் நாம அடிச்சிக் கிட்டாலும், அதுல அடிக்கோடா ஒரு மறைமுகக் காதல் இருந்துச்சு. எ ப்யூட்டிபுல் ஹிட்டன்[hidden] லவ். அதெல்லாம் இப்ப எங்க போனதுன்னு தெரியல? இனிமே, உங்க வழியில நீங்க போங்க. என் வழியை நான் பார்த்துக்கறேன்.”

“காவ்யா..! தி லவ் இஸ் ஸ்டில் அலைவ். உன்மேல காதல் இல்லாமலா, அந்தக் காதல் சின்னத்தைப் பத்திரமா பாதுகாக்கிறேன்?”

Languageதமிழ்
Release dateDec 31, 2022
ISBN6580134509445
Hello... Mister Yethirkatchi!

Read more from Hansika Suga

Related authors

Related to Hello... Mister Yethirkatchi!

Related ebooks

Reviews for Hello... Mister Yethirkatchi!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Hello... Mister Yethirkatchi! - Hansika Suga

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஹலோ... மிஸ்டர் எதிர்க்கட்சி!

    Hello... Mister Yethirkatchi!

    Author:

    ஹன்சிகா சுகா

    Hansika Suga

    For more books

    https://www.pustaka.co.in/home/author/hansika-suga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம்-1

    அத்தியாயம்-2

    அத்தியாயம்-3

    அத்தியாயம்-4

    அத்தியாயம்-5

    அத்தியாயம்-6

    அத்தியாயம்-7

    அத்தியாயம்-8

    அத்தியாயம்-9

    அத்தியாயம்-10

    அத்தியாயம்-11

    அத்தியாயம்-12

    அத்தியாயம்-13

    அத்தியாயம்-14

    அத்தியாயம்-15

    அத்தியாயம்-16

    அத்தியாயம்-17

    அத்தியாயம்-18

    அத்தியாயம்-1

    குலோத்துங்கன்னு பேர் வெச்சிக்கிட்டா ராஜவம்சத்தைச் சேர்ந்தவன்னு நினைப்பா? மீடியாவுக்காக வெச்சுக்கிட்ட புனைபெயர். அடுத்தவன்கிட்ட இருந்து அடிவாங்காம தப்பிக்கற வழி.

    நீ மட்டும் என்ன? பேரைப் பார்... ‘கா... விய... மனோ... கரி’. அதுல கடைசி ரெண்டு எழுத்தை மட்டும் உனக்குப் பெயரா வெச்சிருக்கலாம். பொருத்தமா இருந்திருக்கும்.

    இந்த வாய்க்கொழுப்புதான் ஆகறதில்ல.

    ஆமாம். உங்க வீட்டுப் பால்ல கடைஞ்செடுத்த வெண்ணையை, உருட்டி, உருட்டி விழுங்கினேனா, கொலஸ்ட்ரால் லெவல் அதிகமாயிடுச்சு.

    நீ இங்க இருக்கற வரைக்கும் இந்த மீடியா சென்டர் உருப்படாது.

    அது எப்படிப் போனாலும் பரவாயில்ல. நீ வாழப்போற வீட்டை நினைச்சா, அடிவயிறு பெரளுது. இந்த வாயாடிகிட்ட லோல்படணும்’னு எந்த ஈனாவானாவுக்கு எழுதி வெச்சிருக்கோ?

    அதைப் பற்றி நீ கவலைப்படவேண்டாம்.

    ஆண்வர்க்கத்தைப் பற்றி ஆண்வர்க்கம் தானே கவலைப்பட முடியும்.

    ச்சே! இன்னைக்குன்னு பார்த்து உன்னை எங்கேயும் வெளியே அனுப்பாமல் இங்கேயே உட்கார வெச்சிருக்காரு. நம்ம பாஸைச் சொல்லணும்.

    கரெக்ட்! ஏன்டா குலோத்துங்கனை கேமிராவோட வெளியே அனுப்பாம இங்கேயே அடைச்சு வெச்சிருக்கேன்னு, மிஸ்டர்.முரளி, அதான், நம்ம வழுக்கைமண்டை பாஸ், அவரைக் கேட்டுட்டு வா. எனக்கும் உன் மூஞ்சியைப் பார்த்துட்டே உட்கார்ந்திருக்க போரடிக்குது. கேமிராவைத் தூக்கிட்டு எங்காவது வெளியே போனால், சில உராங்குட்டான்களைத் தவிர்க்கமுடியும்.

    நான் உராங்குட்டான் மாதிரி இருக்கேனா?

    கண்ணாடி பார்க்கறதே இல்லையா? அப்புறம் எப்படி மேக்கப் போடுவே? கன்னத்துல கையை வெச்சா அரை இன்ஞ்சுக்கு வழிச்சு எடுக்கலாம். நீ சேனல்ல பேசும்போது, ஐயோ... பூச்சாண்டின்னு குழந்தைங்க பயப்படுதாம்.

    தங்களுக்குள் நடந்த கச்சமுச்ச உரையாடல்களை மனத்துக்குள் அசைபோட்டபடி, காவ்யாவும், குலோத்துங்கனும் ஒருவரையொருவர் முறைப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    அவர்கள் இருந்த அறையில் மலர்களின் வாசத்தோடு ஊதுபத்தியின் மணமும் கமழ்ந்து கொண்டிருந்தது.

    ‘நீங்கள் இருவரும் கணவன், மனைவி ஆவதற்குப் பிரியப்படுகிறீர்களா?’ என்று சில நாட்களுக்கு முன்பு யாரேனும் கேட்டிருந்தால், இருவரும் கொலைவெறியில் இருந்திருப்பார்கள்.

    திடீரென்று விதி புரட்டிப்போடும் என்பது அவர்கள் வாழ்க்கையில் எத்தனை நிதர்சனமாகிவிட்டது.

    அப்பாவுக்கு நெஞ்சுவலிடி!

    காவ்யா தன் சேனலில் வேலையாக இருந்தபோது அவளது தாயார் பானுமதி போன் செய்ததுதான் ஞாபகம் இருக்கிறது. அதன்பிறகு நடந்தது எல்லாமே ஏதோ மாய உணர்வை தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது.

    எனக்கு ஏதாவது ஆகறதுக்குள்ள உன் கல்யாணத்தை நான் பார்க்கணும். ஆக்சிஜன் ட்யூபுக்கு நடுவே ஆத்மநாதன் பேசினார்.

    ஒண்ணும் ஆகாதுப்பா. சினிமாவுல வர்ற சென்டிமன்ட் ஸீனெல்லாம் வாழ்க்கையில கொண்டுவரப் பார்க்காதீங்க. கண்ணீருக்கு நடுவே புன்னகைக்க முயன்றாள்.

    அப்பாவின் செல்லப்பெண். திடீரென்று அவருக்கு இப்படியானதில் இதயம் தடதடவென்று தந்தியடிக்கிறது. ஆனாலும், தைரியமாக இருப்பதைப் போல அவர்முன் காட்டிக்கொள்கிறாள்.

    அடுத்த அட்டாக் எப்ப வேணாலும் வரலாம்’னு டாக்டர் பயமுறுத்தறார். பானுமதியின் அழுகை அதிகமானது.

    இன்ஸ்டன்ட் காபி மாதிரி இன்ஸ்டன்ட் மாப்பிள்ளைக்கு எங்கே போறதும்மா? டாக்டர் சொல்றதைக் கேட்டு பயப்படவேண்டிய அவசியமில்லை. நானும், நீங்களும் சேர்ந்து மிருத்யுன்ஜெய சுலோகம் சொல்லுவோம். எந்த எமதர்மராஜன் அப்பா பக்கத்துல வர்றான்னு நான் பார்க்கறேன்.

    தாய், தந்தை இருவருக்கும் தெம்பேற்றும் வகையில் வீரவசனம் பேசினாள் மகள்.

    நாங்க உள்ளே வரலாமா? என்ற குரல் பட்டும்படாமல் ஒலித்தது.வாங்க அண்ணா... என்று அழுகை கலந்த குரலில் வரவேற்றார் பானுமதி. ‘வாடா... ’ என்பதுபோல் கண்களால் சமிக்ஞை செய்தார் ஆத்மநாதன்.

    ஆத்மநாதனின் பால்யசிநேகிதர் பரஞ்சோதி உள்ளே நுழைவதை விசனத்தோடு பார்த்தாள் காவ்யா. பின்னாலேயே அவரது சீமந்தப்புத்திரனும் வரவேண்டுமே?

    ஆ... ஆ... இதோ வந்துவிட்டானே! குலோத்துங்க மகாராஜா வருகிறார், பராக்... பராக்...!

    அவனைப் பார்த்தாலே தார்ச்சாலை தகிக்கும் அளவுக்கு அவள் கோபத்தின் செல்ஷியஸ் கூடுகிறது. அவனோ அங்கிருந்த சூழ்நிலை புரிந்து இதமான கனிவோடு அவளைப் பார்த்தான்.

    ஆத்மநாதனிடம் பவ்யமாக நலம் விசாரித்தான். அவர் மகளை அவன் தலையில் கட்டிவிடப் போகிறார்கள் என்ற விபரீதம் புரியாமல்!

    வீடு வந்து சேர்ந்த பிறகுதான் குலோத்துங்கனுக்கு விஷயமே விளங்கியது.

    ஐயோ, ஐயோ, ஐயையோ...! முடியவே முடியாது. பொம்பளையா அவ? ராட்சஷி. அனேகமா ராவண வம்சத்துல பொறந்தவளா இருக்கணும். உங்க நண்பர் உயிர்பிழைச்சு வர்றதுக்காக, என் உயிரை நான் அடமானம் வைக்க முடியாது.

    ‘காவ்யாவைக் கட்டிக்கொள்’ என்று வற்புறுத்திய பரஞ்சோதியிடம், தன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அலறினான் குலோத்துங்கன்.

    அதே போன்ற ஒரு காட்சி ஆத்மநாதன் இருந்த இடத்திலும் அரங்கேறிக் கொண்டிருந்தது.

    ஐயோ அப்பா. இப்ப என்ன ஆயிடுச்சுன்னு என்னை மரணக்குழியில தள்ளப் பார்க்கறீங்க? சும்மாவே, ரோடு-எஞ்சினுக்கு அடியில சிக்குனமாதிரி, வார்த்தையாலேயே நசுக்கிக் கொல்லறான். இந்த லட்சணத்துல என் வாழ்க்கையை அவன்கிட்ட ஒப்படைக்கவா?

    அந்தக் குலோத்துங்கனைப் பற்றி நினைச்சாலே, உங்களுக்கு வந்த ஹார்ட்-அட்டாக் எனக்கும் வந்துடும். ஏதாவது அரைகுறை டாக்டரை வெச்சு வைத்தியம் பார்த்தாவது, நான் உங்களைப் பத்திரமா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடறேன். இப்படியொரு தண்டனை மட்டும் வேண்டவே வேண்டாம்.

    காவ்யாவின் கதறல் அவர்கள் இருந்த ஆஸ்பத்திரி அறையைத் தாண்டி எதிரொலிக்கும் போல இருந்தது.

    காலத்தின் கோலத்தில் காட்சி மாற்றங்கள்!

    பரஞ்சோதியின் வீட்டில் நாள்தோறும் சத்தம் அதிகமாகத் தொடங்கியது. ‘பிள்ளைக்கு விருப்பமில்லேன்னா விடுங்களேன்’ என்று கணவரிடம் கெஞ்சிப் பார்த்தார் திருமதி.பரஞ்சோதி.

    அப்படியெல்லாம் எளிதில் விட்டுவிடமுடியுமா? தங்கள் சிநேகிதத்தின் ஆழம் என்னவென்பதைக் காட்ட, பரஞ்சோதிக்கு இதைவிட நல்ல சந்தர்ப்பம் அமையுமா? அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சியவன் நண்பன் ஆத்மநாதன் ஆயிற்றே!

    என்னால முடியவே முடியாதுப்பா. நவரசங்களையும் பிரயோகப்படுத்திக் களைத்துவிட்டான் குலோத்துங்கன்.

    அவன் என் பால்ய நண்பன்டா குலோத்துங்கா. நட்டுவைத்த குச்சிபோல் விறைப்பாகப் பேசினார் பரஞ்சோதி.

    பால்ய நண்பனுக்காக பெற்ற பிள்ளையைப் பலியிடுவீங்களா? அவளை எனக்குக் கட்டிவைக்கறதும், கசாப்புக் கடையில என்னை விக்கறதும் ஒண்ணு தான். தினமும் சண்டை போட்டதில், அவனுடைய எனர்ஜி லெவல் இறங்கிக் கொண்டே இருந்தது.

    டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துவிட்டார் ஆத்மநாதன்.இப்ப நான் சொல்றதைக் கேட்கப்போறியா இல்லையா? என்றார்.கேட்க முடியாதுப்பா. என்று உறுதியாகச் சொன்னாள் காவியமனோகரி.

    பானுமதி, குடிக்கக் கொஞ்சம் சுடுநீர் கொண்டு வா. என்ற முனகலுடன் நெஞ்சைத் தடவிக்கொண்டார் ஆத்மநாதன்.

    அப்பா, என்னப்பா பண்ணுது? அலறியடித்துக்கொண்டு அருகில் வந்தாள் மகள்.

    காலமும் வேகமாகக் கரைந்தது. வார்த்தைகளும் வீணாக விரயமானது. பெரியவர்களின் பிடிவாதத்திற்கு முன், சிறியவர்களின் சாமர்த்தியம் எடுபடவில்லை.

    தன் தலைவிதியை நொந்தபடி அரைமனதோடு சம்மதம் தெரிவித்தான் குலோத்துங்கன். ஜீவமரணப் போராட்டத்தில் இருந்தாள் காவியமனோகரி.

    ஒருநாள் அர்த்தராத்திரியில் பானுமதி மீண்டும் டாக்டருக்குப் போன் செய்வதைக் கண்டதும், அவளுக்குச் சப்தநாடியும் அடங்கிப் போனது. ‘உங்க இஷ்டப்படியே நடக்கட்டும்." என்று மகளின் வாயிலிருந்து முத்து உதிர்ந்த பிறகுதான், ஆத்மநாதன் சகஜமானார்.

    ஆத்மநாதனின் உடல்நிலையைக் காரணம் காட்டி, எளிமையாக ஒரு கோவிலில் வைத்து, பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளின் திருமணத்தை முடித்து வைத்தார்கள்.

    வாரம் தவறாமல் சூரத்தேங்காய் உடைச்சேனே? இதுக்குத்தானா விநாயகா? கோவில் சந்நிதியில் நெக்குருக நின்று, மனதுக்குள் புலம்பித் தீர்த்துவிட்டான் குலோத்துங்கன்.

    ‘என் புள்ளையை இப்படிப் புலம்ப விட்டுட்டாங்களே?’ என்ற குற்றச்சாட்டு திருமதி.பரஞ்சோதியின் கண்களில் தெரிந்தது.

    சந்நிதியில் இருந்த அம்மன் விக்கிரகத்தை ஒருவிதமான பகையோடு முறைத்துக் கொண்டிருந்தாள் காவ்யா.

    ‘திருவிளையாடல்’னு கேள்விப்பட்டிருக்கேன். இதுதானா அது? சின்னப்பொண்ணா இருந்தப்போ, நான் எத்தனைமுறை உனக்கு ‘அபிராமி அந்தாதி’ சொல்லியிருப்பேன். வளர்ந்தபிறகு, வேலையில சேர்ந்தபிறகு, அதெல்லாம் சொல்ல நேரமில்லாமப் போச்சு.

    Enjoying the preview?
    Page 1 of 1