Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaanile... Theanila...
Vaanile... Theanila...
Vaanile... Theanila...
Ebook263 pages2 hours

Vaanile... Theanila...

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

தற்கொலை எண்ணங்களால் தூண்டப்படும் ஆதிரா என்ற நாயகி.

அவளை அஸ்வின் என்ற நாயகன் ஆதரித்து அன்பு செலுத்துகிறான்.

ஆதிராவின் வாழ்க்கையில் நடந்தது என்ன? அஸ்வின் அவளை எங்கே எவ்வாறு சந்தித்தான்?

அஸ்வின்-ஆதிரா காதல் காட்சிகள் மனதை வருடுபவை. இருவரின் வாழ்வில் நடந்த சங்கடங்கள் இயற்கையாகவே அவர்களுக்குள் அன்பு என்னும் ஊற்றை வளர்க்க, மற்றவை கதையில்..!

Languageதமிழ்
Release dateJun 30, 2020
ISBN6580134505638
Vaanile... Theanila...

Read more from Hansika Suga

Related authors

Related to Vaanile... Theanila...

Related ebooks

Reviews for Vaanile... Theanila...

Rating: 2 out of 5 stars
2/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaanile... Theanila... - Hansika Suga

    http://www.pustaka.co.in

    வானிலே... தேனிலா...

    Vaanile... Theanila...

    Author:

    ஹன்சிகா சுகா

    Hansika Suga

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hansika-suga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    வெளியே கும்மென்று தெரிந்த இருட்டை வேடிக்கைப் பார்த்தபடி வந்தாள் ஆதிரா. ரயிலின் வேகத்துக்கு ஏற்ப, அவளுடன் சேர்ந்து, அந்த வானத்து நிலவும் பயணித்துக் கொண்டிருந்தது.

    கோச்சில் இருந்த மற்ற பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, தன் உயரத்திற்கு ஏற்ப கால்களை விஸ்தாரமாக நீட்டிப் படுக்கமுடியாமல், தூக்கத்தைத் தொலைத்து அவதிப்பட்டுக் கொண்டிருந்தான் அஸ்வின்.

    ஏற்கனவே கருமை பூசியிருந்த அந்தச் சூழலில், தன் கழுத்து மப்ளரால் முகத்தில் பாதியை மூடிக்கொண்டு, எதிர்இருக்கையில் அமர்ந்திருந்தவளை அரைக்கண்ணால் நோட்டம் விட்டான்.

    அக்கம்பக்கம் மறந்தவளாய் அந்தத் தேவதை அடிக்கடி தன் கண்களைத் துடைத்துக் கொள்வது, அவனுக்கு மிகவும் கவலையளிப்பதாய் இருந்தது.

    அவன் அந்தக் கோச்சில் ஏறிய வேளையிலிருந்தே ஜன்னலோரத்துச் சிலையாக அமர்ந்திருக்கிறாள். அழகான அந்த முகச்சூரியனை மேகங்கள் மறைத்ததுபோல், கவலைவாட்டம் தெரிகிறது.

    ரயில்பெட்டிக்குள் வெளிச்சம் அடங்கிய பிறகாவது, மற்றவர்களைப் போல உறங்கச் செல்வாள் என்று பார்த்தால், தன் நிலையிலிருந்து சிறிதும் அசைய மறுக்கிறாள். மற்றவர் முன், கண்ணீரை மறைக்கத் தெரியாமல் தவிப்பவளுக்கு அப்படியென்ன கவலையோ?

    ‘அவ என்னவோ பண்ணிட்டுப் போகட்டும். நீ தூங்குடா...’ என்று அதட்டிய மனதை அலட்சியப்படுத்தினான்.

    ‘தூக்கம் வந்தா தூங்கமாட்டோமா? பார்வை அவ பக்கமே போகுதுன்னு தெரிஞ்சும் இந்த அட்வைஸ் தேவையா? எனக்குப் புத்தி சொல்றதை விட்டுட்டு நீ தூங்கு.’

    தன்னைக் கண்டித்த மனசாட்சியை, உடனடியாக உறங்க வைத்துவிட்டான் அஸ்வின். ரயில்வண்டி தூரங்களைக் கடந்து பயணித்துக் கொண்டிருந்தது.

    நண்பன் சரண் போனில் கேட்டுக்கொண்டதைப் போல், வீட்டிலிருந்து காரை அனுப்பச் சொல்லி அதிலேயே சொகுசாக வந்திருக்கலாம்.

    ‘இம்முறை ரயிலில் வரலாம் என்றிருக்கிறேன்’ என்று பீலா விட்டுவிட்டு, இப்போது படுத்து உறங்கவும் முடியாமல், எழுந்து நிற்கவும் முடியாமல், என்ன மாதிரியான அவதி இது?

    மீண்டும் அவன் பார்வை, அந்த ஜன்னலோரத்துத் தேவதையைத் தேட, மனம் திடுக்கென்று அதிர்ந்தது.

    அதுவரை அசையாத சிலையாய் அவ்விடத்தை ஆக்கிரமித்து இருந்தவள், திடீரென எங்கே போனாள்?

    ‘டேய் முட்டாள்... இதெல்லாம் என்னடா கேள்வி? இந்த நேரத்துல எங்கே போவாங்க? பெண்ணுக்கு எத்தனையோ இயற்கை உபாதைகள் இருக்கும். உன்னிடம் சொல்லிவிட்டுச் செல்ல, அவளென்ன உன்...??? அவள் எழுந்து செல்வதைக் கூட அறியாமல், நீ எந்த வான சஞ்சாரத்தில் இருந்தாய்?’ என்று மனம் திட்டினாலும், உள்ளுணர்வு வேறு என்னவோ எச்சரிக்கை செய்தது.

    விலுக்கென்று மப்ளரை முகத்திலிருந்து எடுத்தவன், பர்த்திலிருந்து ஓசையின்றி இறங்கினான்.

    அந்தக் கோச்சின் கதவருகே இருளில் நின்று கொண்டிருந்தாள் ஆதிரா. முகத்தைக் கிழித்துக்கொண்டு வீசிய காற்று, கீழே தள்ளிவிடுவேன் என்று அச்சுறுத்த, தண்டவாளங்கள் தடதடக்கும் ஓசை அவளது இதயத்துடிப்பை நிறுத்திவிடுமோ?

    நிலவின் வெளிச்சத்தில் மின்னிய இரும்பு அரக்கன்கள், இன்னும் சிறிது நேரத்தில் உன்னை அரைத்துக் கூழாக்கப் போகிறோம் என்று பயமுறுத்தின.

    இந்த வண்டியின் பயணம் முடிவதற்குள் அவள் வாழ்க்கைப் பயணம் முடியப் போகிறது. இது அவள் எடுத்திருக்கும் சரியான முடிவுதானா?

    ‘ஏய்... முட்டாள் பெண்ணே...! உன்னை விடமாட்டேன்’ என்று பிடிவாதமாய் ஒட்டிக்கொண்டு வந்த வானத்து நிலாவை அண்ணாந்து பார்த்தாள்.

    ‘இவ்வுலகில் எந்தச் சோகங்களும் நிரந்தரம் இல்லை. இந்தக் கோரமான முடிவு உனக்குத் தேவையா? நன்றாக யோசித்துக் கொள் பெண்ணே...! உயிர் போனால் திரும்ப வராது. ஒருபுறம் அந்தக் கடவுள் கவலைகளையும், கஷ்டங்களையும் கொடுத்தாலும், மறுபுறம் அவற்றையெல்லாம் ஈடுகட்ட சுகங்களையும், சந்தோஷங்களையும் தந்துகொண்டுதான் இருக்கிறார். நீ வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே தேய்பிறையைக் கண்டவள். நான் ஒவ்வொரு முறையும் தேய்ந்து வளர்பவள். நான் சொல்வதைக் கேள்.’ என்று நிலவு அவளுக்கு எச்சரிக்கை செய்வது போல இருந்தது.

    ‘மனதைத் தளரவிடாதே. வாழ்க்கையோடு போராடிப் பாரு ஆதிரா.’ என்று அவளை போனில் உற்சாகப்படுத்த முயன்ற நெருங்கிய தோழி கனிகாவின் நினைவு வந்தது. யார் வேண்டுமானாலும் அறிவுரை சொல்லலாம். வாழ்ந்து பார்ப்பவர்களுக்குத் தானே வலி தெரியும்.

    இப்படியே யோசித்துக்கொண்டு இருந்தால், குழப்பங்கள் மட்டுமே மிஞ்சும். நீண்ட மனப் போராட்டத்திற்குப் பிறகு எடுத்த முடிவு. திடமான சிந்தனையோடு தானே இருக்கையை விட்டு எழுந்து வந்தாள். மீண்டும் ஏன் குழப்பிக்கொள்ள வேண்டும்?

    இதற்கு மேலும் அவளால் யாரிடமும் அசிங்கப்படவோ, அவமானப்படவோ முடியாது. அவள் வளர்ந்த விதம் பட்டுப்பூவை விட மென்மையானது. விதியின் வசத்தால் புரட்டிப் போடப்பட்ட வாழ்க்கையின் ரணங்களை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

    ‘உன் முடிவில் திடமாக இரு ஆதிரா. அத்தனை ரணங்களுக்கும் முற்றுப்புள்ளி வை. விடுதலையைத் தேடி உன் ஆன்மா விரையட்டும். அடுத்த ரயில்வே ஸ்டேஷன் எப்போது வேண்டுமானாலும் வந்துவிடலாம். அதற்குள் நீ செய்ய நினைத்ததைச் செய்துவிடு’ என்று மனம் உந்தித் தள்ள, கண்களை இறுக மூடிக்கொண்டு, உடலை நடுக்கிய மரணபயத்துடன் தன் தேகத்தை வேகமாக அசைத்தாள்.

    தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற அவளது அசுர முயற்சி, திடீரென்று அரக்கப்பிடியில் சிக்கியதுபோல் பலவீனப்பட்டுப் போனது.

    விரும்பியழைத்த எமனின் பாசக்கயிறுக்கு விலங்கிட்டவன் எவனோ என்று அவள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க, அவளை அணைத்திருந்த அந்த வலிமையான கரத்தின் இறுக்கமான பிணைப்பு சற்றும் தளர்வதாக இல்லை.

    அவள் மார்புக்கும், இடைக்கும் இடையே செக்போஸ்ட் போல் தன் கைகளை வைத்திருந்த அஸ்வின், கண்களில் கோபாக்னியுடன் அவளைப் பார்க்க, தான் எடுத்த முடிவை இப்படி நாசமாக்கிவிட்டானே என்ற ஆத்திரமும், கோபமும் அவள் கண்களில் நீர்ப்படலமாய்...!

    தற்கொலை முயற்சிக்கு சட்டப்படி என்ன தண்டனை தெரியுமா? என்று அவன் அடங்கிய குரலில் கேட்டாலும், அதிலிருந்த மிரட்டல் தொனி அவளை மிரள வைத்தது.

    தன் அலைபேசியை எடுத்தவன், ஏதோவொரு கால்டாக்ஸி நிறுவனத்தை அழைக்க, யாரிடம் இப்படிச் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற புரியாத அவதியுடன் திணறிக் கொண்டிருந்தாள் ஆதிரா. அவனது ஆக்டோபஸ் பிடியிலிருந்து அவளால் இம்மியளவும் விலக முடியவில்லை.

    கடவுளே...! இவன் யாரென்றே தெரியவில்லை? காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று அவள் மேனியின் மீது உறவு கொண்டாடிக் கொண்டிருக்கிறான். சத்தம் போட்டு யாரையாவது உதவிக்கு அழைக்கலாமா?

    அவள் எண்ணம் புரிந்ததுபோல் அவள் இடையை மேலும் நெருக்கினான் அவன். நீ யாரென்று எனக்குத் தெரியாது. தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருக்கும் உன்னைக் காப்பாற்றுவது மட்டுமே என் வேலை. நான் இறங்கச் சொல்லும் இடத்தில் ஒழுங்கா இறங்கணும். ஏதாவது கலாட்டா செய்து ஊரைக்கூட்ட நினைச்சே... ஜஸ்ட் லுக் அட் திஸ்... என்று தன் அலைபேசித் திரையை அவள்முன் ஒளிரச் செய்தான்.

    அலைபேசியில் பதிவான காட்சிகளை அதிர்வுடன் பார்த்தாள். மங்கலாகத் தெரிந்தாலும், இருளில் இந்தப் பெண்ணுக்கு இரயில்பெட்டியின் கதவருகில் என்ன வேலை என்ற கேள்வி வரத்தான் செய்கிறது.

    அவள் கண்களைத் துடைத்துக் கொள்ளும் காட்சியும், வானத்தை அண்ணாந்து பார்க்கும் சோகமும், தண்டவாளங்களின் மீது பார்வையைப் படறவிடுவதும் நிழல் உருவமாக...!

    ‘எதற்காக இதையெல்லாம் பதிவு செய்தாய்?’ என்ற அச்சத்துடன் அவனைப் பார்த்தாள் ஆதிரா.

    அமைதியா என்கூட வரமுடியுமா அல்லது எவிடன்ஸ் கொடுத்து உன்னைப் போலீஸ்ல ஹேன்டோவர் பண்ணட்டுமா? தற்கொலை முயற்சிக்கு என்ன தண்டனை தெரியுமா? என்று மீண்டும் அடிக்குரலில் மிரட்டினான்.

    போலீஸ்... தண்டனை... என்றதும் அவளுக்கும் கதிகலங்கியது. ஆனாலும், இவனை நம்பி இவன் அழைக்கும் இடத்திற்குப் போகமுடியாதே? இவன் எப்படிப்பட்டவனோ... என்னவோ? எங்காவது கொண்டு சென்று இவளை விற்றுவிட்டால்?

    ஆதிராவின் மனத்தில் என்னவெல்லாம் விபரீதக் கற்பனை. அவன் காட்டப்போகும் நரக வாழ்க்கைக்கு இந்தக் கொடூரச் சாவே மேல் என்ற எண்ணம் தலைதூக்க, அவன் பிடியிலிருந்து எகிறிக் குதிக்கும் முயற்சியில் ஈடுபட்டாள் ஆதிரா. தண்டவாளத்தின் ரத்த தாகத்தைத் தீர்க்க மற்றொரு அசுர முயற்சி.

    அவளது தீவிரமான முயற்சியால் அஸ்வினுக்கும் நிலை தடுமாறியது. எங்கே தன்னையும் சேர்த்து மரணப் படுகுழியில் தள்ளிவிடுவாளோ என்ற பயத்தில், தன்னிடமிருந்த வேகத்தையெல்லாம் ஒன்றுதிரட்டி அவளை ஓங்கி அறைந்துவிட்டான்.

    அத்தனை சக்திவாய்ந்த அறையை அவள் இதுவரையில் வாங்கியதில்லை போலும். ஆதிராவின் செயல்வேகம் தடைபட, அவள் கண்களுக்குள் நட்சத்திரங்கள் மின்ன, விழிகள் செருகிக்கொண்ட நிலையில் அவன்மீதே துவண்டு சரிந்தாள். அந்த இறகு தேகத்தின் முழுப்பாரமும் இப்போது அவன்மேல்...!

    ஐயகோ...! இதென்னடா ஆண்மகனுக்கு வந்த சோதனை என்று அதிர்ந்து பார்த்தான் அஸ்வின். யாரும் இந்தக் காட்சியை விபரீதமாகப் பார்க்கும் முன் ஏதாவது செய் மகனே என்று மூளை உத்தரவிட்டது.

    தன் உடலோடு ஒட்டியிருந்த அவளையும் இழுத்துக்கொண்டு, உடனடியாக வாஷ்பேசினை நெருங்கினான். லேசான தண்ணீர்ச் சாரலில் அவள் முகம் நனைந்தது. இமைகள் அசைந்தன.

    ‘நான் எங்கே இருக்கிறேன்?’ என்று சினிமாவில் வருவதுபோல் இந்தச் ஷணம் அவள் வாயைத் திறந்தால், அவன் கொலைகாரனாகிவிடுவான். நல்லவேளை...! அப்படிப்பட்ட சோதனைகள் எதுவும் நடந்துவிடவில்லை.

    ஆதிராவின் மயக்கம் நீங்கி, அவள் பார்வை தெளிவு பெற்றதும், செல்போன் வெளிச்சத்தில் அஸ்வின் தனது விசிட்டிங் கார்டை அவளுக்கு அடையாளம் காட்ட, தான் நினைத்தது போல் அவனொன்றும் கெட்டவனில்லை என்ற நிம்மதி அவள் முகத்தில் படர்ந்தது.

    அடுத்து வந்த ஸ்டேஷனில் இறங்கி, அவர்களுக்காகக் காத்திருந்த கால்டாக்சியில் ஏறியமர்ந்தார்கள். இருள் மண்டியிருந்த அந்தச் சாலையில் கால்டாக்ஸி விரையத் தொடங்கியது.

    என்ன நடக்கிறது என்று புரியாத குழப்பத்தில் இருந்தாள் ஆதிரா. ஏன் விதி தன்னை எப்படியெல்லாமோ இழுத்துச் செல்கிறது. எங்கோ போவதற்காக ரயிலேறி, இப்போது வேறெங்கோ சென்று கொண்டிருக்கிறாள்.

    தன் வாழ்க்கையில் இன்னும் என்னவிதமான பூதங்கள் புறப்படப் போகிறது என்று புரியாமல், இருண்ட சாலையை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் ஆதிரா.

    மன்னிச்சிடும்மா. என்னையும் சேர்த்துத் தண்டவாளத்துல தள்ளிடுவியோங்கற பயத்துல உன்னை வேகமா அறைஞ்சுட்டேன். மயங்கி விழற அளவுக்கு ஆகும்-ன்னு நினைக்கல. ஐ ஆம் ஸாரி. என்று ஐந்தாவது முறையாக அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கிறான் அஸ்வின். ஆதிராவின் காதில் எதுவும் விழுந்ததாகவே தெரியவில்லை.

    இனி இந்தப் பெண்ணிடம் பேசிப் பயனில்லை. முதலில் சித்தப்பிரமை தெளியட்டும். வீடு சென்றபிறகு விலாவாரியாக விசாரித்துக் கொள்ளலாம் என்ற சலிப்புடன் தன் இருக்கையில் சாய்ந்தான் அஸ்வின்.

    தன் அனுமதியில்லாமல் ஆதிராவை வழியில் எங்கும் இறக்கிவிடக்கூடாது என்று டாக்ஸி ஓட்டுனருக்கு அவன் திடீரென உத்தரவிட, அந்தப் பெண் அவனை வெறித்துப் பார்ப்பது தெரிந்தது.

    அசதி ஆட்கொண்ட வேகத்தில் அஸ்வின் இருக்கையில் சாய்ந்து உறங்கிவிட, மீண்டும் ஆதிராவின் கண்கள் சாலையின் இருளில் கலந்தன. டாக்சி மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

    அவள் பார்க்காத காரா? ஓட்டிப் பழகாத வண்டியா? வாழாத வாழ்க்கையா? அல்லிராணி அரசாண்ட கதையை நினைக்காதே என்று புத்தி தடையுத்தரவு போட்டாலும், பழைய வாழ்க்கையின் சுகங்களைத் தேடி மனம் அலைபாய்கிறது. துள்ளும் மான்போல் திரிந்து கொண்டிருந்த அழகான நாட்கள், அவள் மனத்துக்குள் இனிய விஸ்வரூபங்களாய்...!

    2

    சிகப்பு வண்டியை சர்வீஸ் பார்க்கச் சொல்லி நேற்றே சொன்னேனே... இன்னைக்கு நான் ஷட்டில் விளையாடப் போவேன்னு தெரியாதா? தன் கையிலிருந்த ஷட்டில் ரேக்கட்டை ஸ்டைலாகச் சுழற்றிக்கொண்டே சொன்னாள் ஆதிரா.

    அந்த வீட்டின் சின்ன எஜமானியம்மாளின் முன், தலையைச் சொறிந்துகொண்டு நின்றான் டிரைவர் செல்வம்.

    நேற்று முழுக்க ஐயாவோட சுத்திக்கிட்டு இருந்ததுல, நீங்க சர்வீஸ் விடச் சொன்னதையே சுத்தமா மறந்துட்டேன்மா. வேற வண்டியில கொண்டுபோய் இறக்கிவிடட்டுங்களா? என்று பவ்யமாய்க் கைகட்டி நின்றான் செல்வம்.

    தேவையில்ல. நானே பார்த்துக்கறேன். உனக்கு எப்பவுமே அப்பாதான் முக்கியம். நான் சொன்ன வேலையை இன்னைக்காவது செய்து முடி செல்வம். எனக்கு அந்த வண்டி எவ்வளவு பிடிக்கும்-ன்னு உனக்குத் தெரியாதா? என்று சலிப்புடன் சொல்லிவிட்டு போர்டிகோவில் நின்ற மற்றொரு காரை நோக்கி நடந்தாள் ஆதிரா. கவலை என்பதன் அர்த்தமறியாத காலமது.

    சந்தோஷ வாழ்க்கையின் களிப்பு அவள் நடையிலேயே தெரிய, பிரம்மாண்டமாக விரிந்து கிடந்த தன் பங்களாவை ஆசையுடன் பார்த்துவிட்டு, வண்டியில் ஏறி அமர்ந்தாள். போர்டிகோவிலிருந்து வழுக்கிக்கொண்டு வந்த வண்டியைக் கண்டதும் பணிவுடன் சலாமடித்துக் கேட்டைத் திறந்துவிட்டான் செக்யூரிட்டி.

    பதிலுக்கு ஒரு புன்னகையைத் தானமாக்கிவிட்டு, தன் வாகனத்தின் ஸ்பீடோமீட்டர் திறமையைச் சாலையில் காட்டத் தொடங்கினாள் ஆதிரா. என்றுமே அவள் அந்த வீட்டின் மகாராணி.

    அவளைப் பெற்றவர் அப்படித்தான் வளர்த்துக் கொண்டிருந்தார். ஹாய் டேட்... என்று தந்தையின் கழுத்தைச் செல்லமாகக் கட்டிக்கொண்டு அவள் ஆசைப்பட்டதைக் கேட்டுவிட்டாலே போதும். அன்றைய தினமே அவளது தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுவிடும்.

    அம்மா இல்லாத பொண்ணுக்கு எந்தக் குறையும் தெரியாம வளர்க்க வேண்டியது இந்த அப்பனுடைய கடமை அல்லவா? என்று அவர் சிரிக்கும்போது, கண்களில் மளுக்கென்று நீர் முட்டும்.

    ஷட்டில் கிரவுண்டில் அவளைக் கண்டதும் ‘ஹாய்... ஹாய்...’ என்று ஆர்ப்பரித்த தோழிகள், தோழர்கள். பணம்... பணத்தோடு சேரும். நண்பர்களுடன் ஆசைதீர ஷட்டில் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்ததும், அவளுக்கெனத் தயாராகக் காத்திருக்கும் ஆரஞ்சுப் பழப் பானம்.

    ‘ஸ்டார்ட் யுவர் டே வித் எ ப்ரூட் ஜூஸ்.’ என்று நட்பு வட்டத்துக்கு ஹெல்த் டிப்ஸ் வழங்கும் அளவுக்கு, ஆரோக்கியத்தின் மீது அக்கறை.

    பாத்-டப்பில் நீந்தி, ஷவரில் குளித்து, பூத்துவாலையால் மேனியின் வனப்பை மறைத்தபடி வார்ட்-ரோபைத் திறந்தால் எந்த உடையைத் தேர்ந்தெடுத்து அணிவது என்னும் அளவுக்கு குழப்பம்.

    அத்தனைக்கும் ஆசைப்படு... என்று யாருக்காக சொன்னார்களோ தெரியாது. ஆனால், ஆதிராவுக்காக அதைச் சொல்லியிருக்கலாம்

    Enjoying the preview?
    Page 1 of 1