Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manaththai Mayakkum Mandhiramey!
Manaththai Mayakkum Mandhiramey!
Manaththai Mayakkum Mandhiramey!
Ebook313 pages3 hours

Manaththai Mayakkum Mandhiramey!

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

“அவனவன் என்ன டென்ஷனோட போயிட்டு இருக்கான். ஏற்கனவே லேட் ஆச்சுங்கற கடுப்பு. துரைக்கு டீக்கடை கேட்குதா?” என்று மகனின் தொடையில் நறுக்கென்று கிள்ளினார் கர்ணா.

“ஆ...” என்று அலறியவன், “இதுக்கு நான் ஆந்திராவுக்கு அடிமாடா போயிருக்கலாம். டென்ஷன் ஆகறதுக்கு இதுல என்ன இருக்கு? யுத்தத்துக்கா போறோம்? வெறுமனே அந்தப் பொண்ணையும், குடும்பத்தையும் எச்சரிக்கை செய்யத்தானே இதை போன்ல கூடச் சொல்லியிருக்கலாம். நம்ம செலவுல வண்டி போட்டுட்டு போகலேன்னா என்ன? வெட்டி வேலை! தண்டச் செலவு!” என்று தைரியமாகப் புலம்பத் தொடங்கிவிட்டான் சிவா. “அப்படியே போன்ல சொல்லி இவங்க கேட்டுட்டாலும்! வளைச்சு போட எவன் கிடைப்பான்னு...” என்று ஆரம்பித்த கங்காதரன், தன்னருகே டிரைவர் இருப்பதை உணர்ந்து, அத்தோடு அந்த விஷயத்தை நிறுத்திக் கொண்டார்.

Languageதமிழ்
Release dateDec 31, 2022
ISBN6580134509454
Manaththai Mayakkum Mandhiramey!

Read more from Hansika Suga

Related authors

Related to Manaththai Mayakkum Mandhiramey!

Related ebooks

Reviews for Manaththai Mayakkum Mandhiramey!

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manaththai Mayakkum Mandhiramey! - Hansika Suga

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மனத்தை மயக்கும் மந்திரமே!

    Manaththai Mayakkum Mandhiramey!

    Author:

    ஹன்சிகா சுகா

    Hansika Suga

    For more books

    https://www.pustaka.co.in/home/author/hansika-suga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம்-1

    அத்தியாயம்-2

    அத்தியாயம்-3

    அத்தியாயம்-4

    அத்தியாயம்-5

    அத்தியாயம்-6

    அத்தியாயம்-7

    அத்தியாயம்-8

    அத்தியாயம்-9

    அத்தியாயம்-10

    அத்தியாயம்-11

    அத்தியாயம்-12

    அத்தியாயம்-13

    அத்தியாயம்-14

    அத்தியாயம்-15

    அத்தியாயம்-16

    அத்தியாயம்-17

    அத்தியாயம்-18

    அத்தியாயம்-1

    ஏன் ஒரு மாதிரி டென்ஷனா இருக்கீங்க? எல்லை தாண்டி வந்தாச்சு. ஃப்ரீயா இருங்க. என்றான் விஷ்வக்ஸேனா.

    தொழில் நிமித்தமாக வெளிமாநிலம் சென்ற இடத்தில், திடீர்க் கலவரத்தில் மாட்டிக்கொண்டான். யாரும் கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத வகையில் ஊருக்குள் வெடித்துவிட்ட கலவரம்.

    மக்களின் சகஜ வாழ்க்கை ஸ்தம்பித்துப் போன நிலையில், எப்படி அங்கிருந்து புறப்பட்டு, எப்படிச் சொந்த ஊர் வந்து சேருவது என்று புரியாத நிலை.

    அவனைப் போலவே, தனது அலுவலக வேலையாக வந்து சிக்கலில் மாட்டிக் கொண்டவள் தேவரதி. காதுக்கு எட்டிய கலவரச் செய்திகள் வெகுவாகப் பீதியைக் கிளப்பின.

    வேலை விஷயமாக வந்த இடத்தில், இன்னும் எத்தனை நாட்கள், அந்த விடுதியில் கைதாகிக் கிடப்போம் என்று தெரியவில்லையே? அதுவும் தனியொரு பெண்ணாக!

    சமயசஞ்சீவியாக யாரேனும் உதவிக்கு வருவார்களா என்று எதிர்ப்பார்த்த நேரம், அவள் தங்கியிருந்த அறையின் அருகில் இருந்தவன், தமிழன் என்று தெரியவும், ரதிக்கு, போன மூச்சு திரும்பி வந்தது.

    சொந்த கார்ல தான் வந்திருக்கேன். திரும்பிப் போகும்போது உங்களையும் அழைச்சுட்டுப் போறதுல ஒரு பிரச்சனையும் இல்ல மேடம். ஆனால், இங்கே இருக்கற நிலைமையைப் பார்த்தால், இப்போதைக்கு கிளம்ப முடியுமான்னு தெரியல.

    எதுக்கும் ரிசப்ஷன்ல இன்னொரு முறை விசாரிச்சுட்டு வர்றேன். என்று விடுதியின் வரவேற்பறை நோக்கி நடந்தான் ஸேனா.

    ரிசப்ஷனில் இருந்து அவன் திரும்பி வந்தபோது, ஏதேனும் நல்ல செய்தி கிடைக்குமா என்று ஸேனாவின் முகத்தை ஆர்வத்துடன் பார்த்தாள் தேவரதி.

    அவங்களுக்கும் ஒண்ணும் சொல்லத் தெரியல. கலவரத்துக்கான காரணமே பல்வேறு வகையான நியூஸா வந்துட்டு இருக்காம். இப்போதைக்கு வெளியே தலைகாட்டாமல் பாதுகாப்பா இருக்கறது நல்லதுன்னு சொல்றாங்க.

    இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இங்கே தங்க வேண்டி வந்தால், கன்சிடரபிள் ரேட்டுல, ஸ்டே எக்ஸ்டண்ட் பண்ணித் தர்றாங்களாம் மேடம். அவங்க பிஸினஸ் அவங்களுக்கு! என்றான் ஸேனா.

    ஓ! என்று உதடு குவித்தவள் முகத்தில் கவலை படர்ந்தது.

    கவலையா இருக்கற மாதிரியிருக்கு. ஸ்டே எக்ஸ்டண்ட் பண்ண அமெளண்ட் எதுவும் வேணுங்களா?

    இப்பதான் எங்க ஆபீசுக்கு ஃபோன் செய்து நிலவரத்தைச் சொன்னேன். அவங்களே எனக்குத் தேவையான அக்கவுண்ட் டிரான்ஸ்பர் செய்துட்டாங்க.

    நல்லது மேடம்! பார்க்க தைரியமான ஆளா இருக்கீங்க. ஆனாலும், இந்த மாதிரி வெளியூர் ட்ரிப் வர, உங்க ஆபீஸுல ஆண்களை அனுப்ப மாட்டாங்களா? இப்படி வந்து சிக்கிட்டு இருக்கீங்க?

    சார்! அது லேடீஸ் மட்டுமே வொர்க் பண்ணுற பிரைவேட் கன்சர்ன். எம். டி. கூட வயசான லேடி தான். இந்த மாதிரி வெளியூர் வேலைகளுக்கு, நான் அல்லது என் கொலீக் ஸ்ரீஜா போவோம். இதுக்கு முன்னாடியும் போயிருக்கோம் சார். ஆனால், இப்படி மாட்டிக்கிட்டது இல்ல.

    அது சரிங்க! நம்ம நேரம் எப்பவுமே நல்ல நேரமா இருக்காதுங்க. இப்படியும் ஆகத்தான் செய்யும். ஜென்ட்ஸூக்கு ஈக்குவலா லேடீஸ் எல்லா விஷயத்துலயும் கால் வைக்க நினைக்கறீங்க. அதேநேரம், உஷாராகவும் இருக்கணும்’ங்க.

    நீங்க சாப்பிட்டீங்களா மேடம்? இருக்கற நிலைமையில சாப்பாடு சீக்கிரமா தீர்ந்துடப் போகுது. என்று அவன் எச்சரிக்கை செய்ய,

    உணவு சாப்பிடும் பகுதி நோக்கி அவனுடன் சேர்ந்து விரைந்தாள். எதற்கும் இருக்கட்டும் என்று ஆளுக்குக் கொஞ்சம் பார்சலும் வாங்கி வைத்துக் கொண்டார்கள்.

    ஊர் சகஜ நிலைக்குத் திரும்ப, முழுதாக இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. இந்த இரண்டு நாட்களாக ஸேனா மட்டும் பேச்சுத் துணைக்கு இல்லையென்றால், ரதிக்குப் பைத்தியமே பிடித்திருக்கும்.

    ஹலோ! எதுக்கு டென்ஷனா இருக்கீங்கன்னு கேட்டேன்?

    காரோட்டிக் கொண்டிருந்த ஸேனா மீண்டும் கேட்டபிறகு, வேறு உலகத்தில் இருந்து வெளியே வந்தது போல் பார்த்தாள் தேவரதி.

    தன் கைப்பையைத் திறந்து அந்த இன்விடேஷனை எடுத்தாள். போஸ்ட்கார்டை விட கொஞ்சம் பெரிதாக இருந்தது.

    நெக்ஸ்ட் வீக் என்னுடைய மேரேஜ்! நான் உயிருக்கு உயிராகக் காதலித்த ஒருவனைக் கல்யாணம் செய்துக்க போறேன். இரண்டு வீட்டுலயும் சம்மதம் சொல்லிட்டாங்க. அவசியம் நீங்க வரணும் விஷ்வா. என்றவள், திருமணப் பத்திரிக்கையை அவனிடம் கொடுத்தாள்.

    என்னங்க மேடம்... இரண்டு நாளா அந்த விடுதியில அடைஞ்சு கிடந்து, குளோஸ் பிரெண்ட்ஸ் மாதிரி பேசிட்டு இருந்தோம். அப்ப சொல்லாம, இப்ப டிரைவிங்ல இருக்கும்போது சொல்றீங்க. என்றவன், வண்டியைச் சற்றுத் தள்ளி சாலையோரம் நிறுத்தினான்.

    ஆர்வத்துடன் அந்தத் திருமண அழைப்பிதழைப் பிரித்து, வரிவரியாக வாசித்தான்.

    லவ் மேரேஜூங்களா! நல்ல விஷயம்தான். பாருங்களேன்... நாம திடீர்னு சந்திச்சோம். கல்யாண அழைப்பிதழை கையில வாங்குற அளவுக்கு வந்துட்டோம். மங்களகரமான சந்திப்பு மேடம். சரி... உங்களுக்குப் பிடிச்ச கலர் சொல்லுங்க மேடம்.

    எதுக்கு இத்தனை மேடம்? நான் விஷ்வா’னு உரிமையோடு கூப்பிட்டேன். கலர் எதுக்காகக் கேட்கறீங்க?

    அட... எதுக்காக இருந்தால் என்ன? சும்மா சொல்லுங்க.

    எனக்குத் தெரியும். உங்க ஷோரூம்ல இருந்து, எனக்குப் பிடிச்ச கலர்ல, ஒரு சாரீ பிரசண்ட் பண்ணப் போறீங்க... அதுதானே விஷ்வா?

    என்னவொரு கண்டுபிடிப்பு! பட்டுப்புடவை என்பதே திருமணத்துக்கு தானே மேடம்! ஷோரூம் மட்டுமில்ல. சொந்தமா தறியும் வெச்சிருக்கேன். தோழிக்காக இது கூட செய்யலேன்னா எப்படி?

    ஆனால், நம்முடையது அப்படியொண்ணும் டீப் ஃபிரண்ட்ஷிப் இல்லையே! வெறும் இரண்டு நாள் பழக்கம். இட்ஸ் ஓகே விஷ்வா. நீங்க திருமணத்துக்கு வாங்க. எனக்கு அது போதும்.

    வெறும் இரண்டு நாள் பழக்கமாக இருந்தாலும், எனக்கு அழைப்பு வைக்கத் தோணுச்சு இல்ல. அப்ப நான் பரிசோடத்தான் வருவேன். நீங்க கலர் சொல்லலே ‘ன்னா, எனக்குப் பிடிச்ச கலரா கொண்டு வந்துடுவேன். பிறகு என்னை வையக் கூடாது.

    ஸேனா சிரிக்க, ‘வயலட்’ என்று முடித்துக்கொண்டாள் தேவரதி. பயணத்தின் முடிவில், சென்னையில், அவள் இறங்கவேண்டிய இடத்தில் இறக்கிவிட்டான் ஸேனா.

    இந்த பில்டிங்கோட மூணாவது தளத்துல வலது கோடி பிளாட்டுல தங்கியிருக்கோம் விஷ்வா. மொத்தம் ஆறு பேர். கொஞ்சம் நெரிசலா இருக்கு. எரிச்சலாகவும் இருக்கு. ஃபிரண்ட்ஸ் எல்லோரும் ஆபீசுக்கு ஒண்ணா போவோம்... வருவோம்.

    என் அம்மா, அப்பா, சகோதரி எல்லாம் வேலூர்ல இருக்காங்க. என் கல்யாணம் வேலூர்ல நடக்கப் போகுது.

    அப்பாவுக்கு உடம்பு சரியில்லாததால, லிமிட்டா அழைச்சு, ரொம்ப சிம்பிளா எல்லாமே ஏற்பாடு பண்ணியிருக்கோம். கல்யாணப் பத்திரிக்கை கூட ரொம்ப சிம்பிள்!

    அவசியம் வந்துடுங்க விஷ்வா. மீண்டும் ஒருமுறை அழைப்பு வைத்தாள் தேவரதி.

    சிம்பிளா... கிராண்டாங்கறது கணக்கில்லீங்க! மதிச்சுக் கூப்பிட்டால் நிச்சயம் வருவேன். நீங்களும், உங்க ‘அவரும்’ காஞ்சிபுரம் வந்தால், நேரா நம்ம ஷோரூமுக்கு வந்துடுங்க. என்று தன் கார்டை அவளிடம் கொடுத்தான் விஷ்வக்ஸேனா.

    அவள் கேட்டது ‘வயலட்’ என்றாலும் கூட, எந்த டிசைன் பார்டர் அவளுக்குப் பிடிக்கும் என்று காஞ்சிபுரம் போகும் வழியிலேயே யோசிக்கத் தொடங்கி விட்டான்.

    இப்ப லேட்டஸ்டா தறியில இருந்து வந்தது, தோகைமயில் பார்டர்! ஊடால கலர் ஜரிகையும் வந்து, பார்க்கவே அம்சமா இருக்கும். ஆனால், அத்தனையும் ஆர்டருக்காக நெய்தது. உபரியாக ஒண்ணு கூட இல்லையே தம்பி. என்றார் தலைமை நெசவாளர் மணிகண்டன்.

    நீங்க கேட்ட கலர்ல மணிப்புறா பார்டர் வேணா இருக்கு. தரட்டுங்களா? என்று அவரே வேறொரு புடவையை எடுத்துக் காட்ட, ஸேனாவுக்கு அந்த நிறமும், நேர்த்தியும் மனத்துக்குப் பிடித்தமானதாக இருந்தது.

    கண்களை மூடி நின்றவன், அவளின் வடிவத்துக்கு அந்தப் புடவை பாந்தமாக இருக்குமா என்று மனத்துக்குள் ஒருமுறை கற்பனை செய்தும் பார்த்துக் கொண்டான்.

    ஐயாயிரம் மதிப்புள்ள பட்டுப்புடவை யாருக்கு அண்ணா? புதுசா ஆர்டர் எதுவும் வந்திருக்கா? என்றான் சிவப்பிரசன்னா, ஸேனாவின் சித்தப்பா மகன்.

    அண்ணன், தம்பி இருவரும் காஞ்சிபுரத்தில் இருந்த அந்த மீடியமான ஷோரூமின் நிர்வாகத்தினர் மற்றும் பங்குதார்கள்.

    ம்ம்... ஆமாம்... இல்லை... ஒரு திருமணத்துக்கான பரிசு. என்னுடைய சொந்தச் செலவாக கணக்கில் எழுதிக்கொள் சிவா.

    இத்தனை மதிப்புள்ள பட்டுப்புடவை கொடுக்கும் அளவுக்கு அப்படி யாருடைய திருமணம் அண்ணா?

    எனக்கு வேண்டியவர்கள் என்று வைத்துக்கொள். அந்த விவரம் உனக்கெதற்கு? கல்லாவுக்கு காசு வந்தால் சரிதானே! என் கணக்கில் எழுது.

    உத்தரவாகச் சொல்லிவிட்டு, பட்டுப்புடவையை அட்டைப்பெட்டியில் வைத்து எடுத்துக்கொண்டு, வீட்டுக்குச் சென்று விட்டான் ஸேனா.

    போன இடத்துல என்னவோ கலவரம்... திரும்பி வர நாளெடுக்கும்’னு நீ போன்ல சொல்லவும் பகீர்னு ஆகிடுச்சு. என்று அம்மா காதம்பரி வரவேற்க,

    வா... ப்பு... பயணம் சுகம்தானே... என்று வரவேற்றார் கங்காதரன். வரும்போதே கையில பொட்டி... என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தன்னுடைய அறை நோக்கிச் சென்றான் ஸேனா.

    சேம்பிள் டிசைன் ஏதாவது புடிச்சிட்டு வந்திருப்பான். அவனுக்குச் சாப்பாடு போடு காதம்பரி. எனக்கு வெளியே வேலையிருக்கு. சட்டையை உதறிப் போட்டுக்கொண்டு புறப்பட்டார் கங்காதரன்.

    முழுதாக மூன்று வாரங்களுக்குப் பின், ஒரு விடுமுறை நாளில்!

    தேவி! உன்னைப் பார்க்க விஷ்வான்னு ஒருத்தர் வந்திருக்கார். என்று தோழி அகிலா சொல்லவும், அதிர்ந்து பார்த்தாள் தேவரதி.

    இங்கே எதற்கு வந்தான் என்ற கேள்வியுடன், அவிழ்ந்து கிடந்த கூந்தலை கோடாலிக் கொண்டை போட்டுக்கொண்டு அவசரமாக அவள் வெளியே வர, அந்த பில்டிங்கை நோட்டம் பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வக்ஸேனா.

    விஷ்வா என்று மெல்லிய குரலில் அவள் அழைக்க, குரல் கேட்டுத் திரும்பியவன் பார்வை, அவள் முகத்தில் கேள்வியுடன் நின்றது.

    கல்யாணம் நின்னுடுச்சு. வேலூர் வரவேண்டாம்’னு மெசேஜ் பண்ணியிருந்தீங்க. ஏதோ பிரச்சனை’னு மட்டும் தெரிஞ்சது. மற்றபடி ஒண்ணும் புரியல. ஏதாவது பணச்சிக்கலா? உதவி தேவைப்பட்டால் கேளுங்க’னு அன்னைக்கே சொன்னேனே! கேள்விகளை அடுக்கினான் ஸேனா.

    வெளியே எங்கேயாவது போய் பேசுவோமா? என்றாள் ரதி ஆயாசமான குரலில்.

    சரி... டிரஸ் பண்ணிட்டு வாங்க. வெளியே கார்கிட்ட வெயிட் பண்ணறேன். இப்பதான் தூங்கி எழுந்தீங்களா? முகத்தைப் பார்த்தால் அப்படித்தான் தெரியுது.

    ஆமாம். சன்டே ஒருநாள் தானே ஃப்ரீ! நாங்க ஆறு பேருமே சொல்லி வைத்த மாதிரி லேட்டா தான் எழுந்திருப்போம். கொஞ்ச நேரத்துல வந்துடறேன். என்று உள்ளே ஓடினாள் ரதி.

    திருமணம் நின்று போனதற்கு என்ன காரணமாக இருக்கக்கூடும் என்று யோசித்துக்கொண்டே, தன் கார் நோக்கி நடந்தான் விஷ்வக்ஸேனா.

    சற்றுநேரத்தில், ஏதோவொரு உணவு விடுதியில் அமர்ந்து இருவரும் சுவாரசியமே இல்லாமல் எதையோ கொறித்துக் கொண்டிருந்தார்கள்.

    உங்களுக்குப் பிடிச்ச கலர்ல புடவை கூட செலக்ட் செய்து வெச்சிருந்தேன் மேடம். திடீர்னு ‘வெட்டிங் கேன்சல்ட்’ மெசேஜ் வரவும், ஒண்ணும் புரியல. உடனடியா புறப்பட்டு வேலூருக்கே வந்து, என்ன விஷயம்’னு பார்க்க நினைச்சேன். நமக்கு அந்த அளவுக்கு எல்லாம் உரிமை இல்லைன்னு அப்புறம் தான் உறைச்சது.

    மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தான் ஸேனா. ரதியின் முகத்தில் விரக்தி தெரிந்தது.

    தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு. வேறு என்ன சொல்ல விஷ்வா? ஹாசன் இப்படியொரு சந்தேகப் புத்திக்காரனா இருப்பான்னு நான் கொஞ்சமும் நினைக்கல. என்று நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள் தேவரதி.

    "நான் ஆபீஸ் விஷயமாக வெளியூர் போறதெல்லாம் அவனுக்கு ஏற்கனவே தெரியும். அப்பவெல்லாம் ஒண்ணுமே சொல்லாமல் இருந்துட்டு, இம்முறை, திரும்பி வர இரண்டு நாள் தாமதமானதும்...

    ஹாசன்... அவனா என்னென்னவோ கற்பனை பண்ணிக்கிட்டான் விஷ்வா! வாய்க்கு வந்ததெல்லாம் பேசி... என் கேரக்டரை அசிங்கப்படுத்திட்டான். இப்படியொரு சந்தேகப் பேர்வழியோட... வாழ்க்கை முழுக்க... நான் எப்படி வாழ முடியும்?"

    அட்லீஸ்ட், கடைசி நிமிஷத்துல அவனுடைய சுயரூபம் தெரிய வந்தது. கல்யாணமும் நின்னு போச்சு. ஒரு சொட்டு அழுகை இல்லாமல் சொல்லி முடித்தாள் ரதி.

    நம்பிக்கை வேணும் விஷ்வா. உண்மையான காதலாக இருந்தால் சந்தேகத்துக்கு இடம் ஏது?

    இவ்வளவு நாள் இல்லாமல், ஹாசன் எதற்காக என்னைச் சந்தேகப்பட்டான்? அவன் பேசுனதை எல்லாம் நினைக்க நினைக்க, மனசே வெடிச்சிடும் போல இருக்கு.

    உள்ளே இத்தனை அழுக்கை வெச்சுட்டு, வெளியே வேஷம் கட்டுனானா? தப்பு பண்ண நினைக்கறவங்க வெளியூர் போய்தான் தப்பு செய்யணும்’னு அவசியம் இல்லையே! நான் அந்த மாதிரி ஆளும் இல்லையே!

    உங்களுக்குத் தெரியுமா விஷ்வா! அவன் ஒரு தனியார் கம்பெனியில வேலை பார்க்கறான். எத்தனையோ முறை வெளியூர் போவான்... வருவான். சில நேரங்கள்ல ஒரு வாரம் கழிச்சுக் கூட நாங்க மீட் பண்ணிக்குவோம். என்னைக்காவது நான் அவனைச் சந்தேகப்பட்டு ஒரு வார்த்தை பேசியிருப்பேனா? புலம்பிக்கொண்டே சென்றாள் ரதி.

    எதுக்காக இப்படிப் புலம்பறீங்க? ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே நீதி எப்ப இருந்திருக்கு மேடம்?

    யாருக்குச் சந்தேகம் வந்தாலும், தீக்குளிக்கறது என்னவோ பெண்களோட வேலைங்க! ஆண்கள் யாரும் தீக்குளிச்சு, தன்னை உத்தமன்’னு நிரூபிச்சதா சரித்திரம் இல்லைங்க.

    சேறுபட்டாலும், சகதிபட்டாலும் எல்லாமே பெண்கள் மேல மட்டும் தானுங்க. தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு’னு நீங்களே சொல்லிட்டீங்க இல்ல. விட்டுடுங்க மேடம்.

    நம்ம லைஃப்ல, நல்லது, கெட்டது எல்லாமே ஏதோவொரு காரணத்துக்காக இறைவன் நடத்தி வைக்கற நாடகம்’னு எங்கம்மா அடிக்கடி சொல்வாங்க. இதுவும் அந்த மாதிரின்னு நினைச்சுட்டுப் போங்க.!

    அந்த ஹாசனை விட நல்ல மாப்பிள்ளை உங்களுக்குச் சீக்கிரமே கிடைப்பான். வருத்தப்படாதீங்க. உங்களுக்குன்னு எடுத்து வெச்ச புடவை மேடம். மறுபடியும் ஷோரூம்ல கொண்டு வைக்க மனசில்லீங்க.

    புடவைப் பெட்டியை அவளிடம் கொடுத்தான் ஸேனா! வாங்கிக்கொள்ள மறுத்தாள் தேவரதி!

    நின்னுபோன கல்யாணத்துக்கு யாராவது பரிசு கொடுப்பாங்களா? என்ன விஷ்வா? அலுப்புடன் எழுந்து முன்னே நடந்தாள்.

    கல்யாணத்து அன்னைக்கு கொடுத்தால் மட்டுமே, அது கல்யாணப் பரிசு. இப்ப மூணு வாரம் முழுசா ஓடிப் போச்சு. என் தோழிக்காக நான் கொண்டு வந்த சாதாரண பரிசு.

    வார்த்தைக்கு வார்த்தை தோழி’னு சொல்றீங்க. கேட்கவே சந்தோஷமா இருக்கு. இந்தப் புடவை தருவதற்குப் பதிலாக, எனக்கு வேறு ஒரு உதவி செய்யமுடியுமா?

    டெக்னாலஜி அண்ட் பிராஸசிங் பிரிவில், எங்கேயாவது வேலை வாங்கிக் கொடுக்க முடிந்தால் நன்றாக இருக்கும் விஷ்வா. நான் படித்ததும் டெக்ஸ்டைல் டெக்னாலஜியின் ஒரு பிரிவு தான்.

    "ஏன்? இப்ப பார்த்துட்டு இருக்கற வேலைக்கு என்னங்க மேடம்? போகச் சொல்லிட்டாங்களா?

    அவங்களா போகச் சொல்லல. எனக்கே அங்கிருந்து வெளியே வந்துடலாமா’ன்னு இருக்கு. கல்யாணம் நின்னு போனதுல அரசல்புரசலா என்னென்னவோ பேச்சு வருது. ஆபீஸுலயும் அப்படித்தான். இங்கே தங்கியிருக்கற இடத்துலயும் அப்படித்தான்.

    நெருங்கிய தோழிகள்’னு நினைக்கறவங்களே, நம்மை ஒரு தினுசா பார்க்கும் போது, எவ்வளவு நாள் வலிக்காத மாதிரியே நடிக்கறது விஷ்வா?

    சரிங்க மேடம். உங்க படிப்பு, மற்ற விவரமெல்லாம் எனக்கு வாட்ஸ்-அப் பண்ணிடுங்க. நம்ம ஃபிரண்ட்ஸ் சர்க்கிள் பெரும்பாலும் நெசவு, ஜவுளின்னு டெக்ஸ்டைல் ஃபீல்டுல இருக்கறவங்க. அவங்ககிட்ட ஆலோசிச்சுட்டு சொல்றேன்.

    ஆனால் மேடம், இந்தப் புடவையை நீங்க வாங்கிட்டால் மட்டுமே, அம்மணி கேட்ட உதவியெல்லாம் நம்மகிட்ட இருந்து கிடைக்கும். இல்லேன்னா, சாமி சத்தியமா எதுவும் கிடைக்காது. எனக்கென்ன’னு போயிட்டே இருப்பேன். என்று ஸேனா மிரட்டலாய் சொல்ல,

    நீண்ட நேரத்துக்குப் பிறகு, ரதியின் முகத்தில் மில்லிமீட்டர் அளவுக்குப் புன்னகை பூத்தது.

    இந்தப் புடவையை இப்ப நான் கையோட எடுத்துட்டுப் போனால், என் ஃபிரண்ட்ஸ் எல்லாம், என்ன... ஏதுன்னு கேட்பாங்க. என்னால பதில் சொல்ல முடியாது விஷ்வா. உங்ககிட்ட இருக்கட்டும். புது வேலை கன்ஃபர்ம் ஆனதும், நான் அங்கேதானே வருவேன். அப்ப வாங்கிக்கறேன். என்றவளை நம்பிக்கை இல்லாமல் பார்த்தான் விஷ்வக்ஸேனா.

    ஏன் அப்படிப் பார்க்கறீங்க? நிச்சயமா வாங்கிக்குவேன். ஆனால், அதுக்கு முன்னாடி நீங்க என்னை மேடம்’னு கூப்பிடுவதை நிறுத்தணும். பேர் சொல்லிக் கூப்பிடுங்க. தேவி அல்லது ரதி! அஸ் யூ லைக்!

    பெரிதாகப் புன்னகைத்துவிட்டு வழியில் வந்த ஆட்டோவைக் கைகாட்டி நிறுத்தி ஏறிக்கொண்டாள் தேவரதி.

    கையில் இருந்த புடவையையும், சென்று மறைந்த ஆட்டோவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வக்ஸேனா. அவள் திருமணம் நின்று போனதைப் பற்றி அவன் கொஞ்சமும் கவலைப்படவில்லை.

    யாரு தேவி அது? உன்னைத் தேடி காலையிலேயே விஜயம்! இதுவரைக்கும் இந்த மூஞ்சியை இங்கே பார்த்தது இல்லையே? என்றாள் மாலி, தன் முகத்துக்கு ஃபேஷியல் மாஸ்க் போட்டுக்கொண்டே!

    தெரிஞ்சவங்க மாலி! கல்யாணத்துக்கு வரமுடியல’னு சொல்லி, பரிசு கொடுப்பதற்காக இங்கேயே தேடி வந்துட்டாங்க. திருமணம் நின்னு போன தகவல் அவங்களுக்குப் போய்ச் சேரல. என்றாள் ரதி, மெல்லிய குரலில்.

    ஐயோ பாவம்! இன்னும் எத்தனை பேர் இப்படி வந்து நிற்கப் போறாங்களோ? ஆனாலும், உன்னுடைய நிலைமை இப்படி ஆகியிருக்க வேண்டாம். என்று மாலி உச்சுக்கொட்ட,

    ஏற்கனவே இதையெல்லாம் கேட்டு அலுத்துக்கிடந்த ரதியின் மனம் மேலும் சுணங்கிக் கொண்டது.

    இன்னும் கொஞ்சநேரம் விஷ்வாவுடன் பேசிக்கொண்டிருந்து நேரத்தைக் கழித்திருக்கலாமோ?

    அதற்குள் பிளாட்டுக்குத் திரும்பி வந்து, இந்த ஏப்பசோப்பைகளிடம் பாட்டு வாங்க வேண்டாமே!

    விஷ்வா ஒன்றும் ‘கிளம்பிப் போ’ என்று சொல்லவில்லை. அவளாகத் தான் ஆட்டோ பிடித்து வந்துவிட்டாள்.

    கொஞ்சம் தலைவலித் தைலத்தை நெற்றியில் பூசிக்கொண்டு, மீண்டும் படுக்கையில் சாய்ந்தாள் தேவரதி.

    "மறுபடியும் தூக்கமா? ஹலோ... இந்த வாரம் வீட்டுக்கு ‘மாப்’ போடுறது உன்

    Enjoying the preview?
    Page 1 of 1