Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yaaro Manathile... Yetho Ninaivile...
Yaaro Manathile... Yetho Ninaivile...
Yaaro Manathile... Yetho Ninaivile...
Ebook232 pages2 hours

Yaaro Manathile... Yetho Ninaivile...

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

தயாகரன்-ப்ரீதா..!

உறவுமுறையிலே இவர்கள் நேசத்தால் பிணைக்கப்பட்டவர்கள். பிறகு காதலுக்குச் சொல்லவா வேண்டும்.

அவள் விரல்களின் மருதாணிப் பூச்சு அவன் அணிந்திருக்கும் சட்டையில்..!

தன் உயிரில் வைத்து நேசித்தவளை திடீரென இழக்கிறான் தயாகரன். சற்றும் எதிர்பாராத நிகழ்வு. தாங்கமுடியாத இழப்பு.

இப்படிப்பட்ட நேரத்தில் வான்மதி அவனுடையை வாழ்க்கையில் நுழைய நேரிடுகிறது.

வான்மதி யார்? தயாகரனால் வான்மதியை ஏற்றுக்கொள்ள முடிந்ததா?

வெறும் காதலை மட்டுமே எழுத்துக்களில் கொடுத்தால் திகட்டிவிடும். சமுதாயத்தில் நடக்கும் பல கொடுமைகளை ஆங்காங்கு கதையின் வாயிலாக குறிப்பிட்டு இருக்கிறேன்.

பல வருடங்களுக்கு முன்பே புத்தகமாக வெளிவந்த இந்த நாவலுக்கு எனது ரசிகர்களிடையே அமோக ஆதரவு. நீங்களும் உங்கள் கருத்துக்களைப் பகிரலாம். Always welcome.

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580134505715
Yaaro Manathile... Yetho Ninaivile...

Read more from Hansika Suga

Related authors

Related to Yaaro Manathile... Yetho Ninaivile...

Related ebooks

Reviews for Yaaro Manathile... Yetho Ninaivile...

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yaaro Manathile... Yetho Ninaivile... - Hansika Suga

    http://www.pustaka.co.in

    யாரோ மனதிலே... ஏதோ நினைவிலே...

    Yaaro Manathile... Yetho Ninaivile...

    Author:

    ஹன்சிகா சுகா

    Hansika Suga

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hansika-suga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    ஆர்ப்பரிக்கும் கடலைப் போல் பிரம்மாண்டமாக விரிந்திருந்த அந்த நட்சத்திர ஹோட்டலின் அரங்கத்தில், வர்ணஜாலங்களை வாரி இறைத்து வித்தை காட்டிய நவீன மின்விளக்கு அலங்காரங்களை வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்தாள் வான்மதி.

    சரவரிசைகளாய்ப் பளபளக்கும் விசேஷத் தோரணங்கள். தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த வண்ண பலூன்களின் கூட்டணி. கண்ணைப் பறிக்கும் பிளாஸ்டிக் மலர்க்கொத்துக்களின் அலங்கரிப்பு. சில்லென்று தண்ணீரைப் பூவாய் இறைத்த தேவதை வடிவிலான செயற்கை நீர் ஊற்றுகள்.

    அரங்கத்தின் ஒரு பகுதியில் பாதி இருட்டும் பாதி வெளிச்சமும் என்று மாறிக் கொண்டேயிருந்த பனிமூட்டம் போன்ற சூழ்நிலை, திரைப்படங்களில் வரும் கனவுக்காட்சிகளைப் பிரதிபலிப்பதாய் இருந்தது.

    அங்கே வந்திருப்பவரின் காதைக் கிழித்துக் கொண்டிருந்தது இசைவெள்ளம். வெறி பிடித்தவன் போல் உடம்பை உலுக்கி எவனோ ட்ரம்ஸ் வாசிக்க, இசைக்கேற்றபடி ஆரவாரமாய் ஆடிக் கொண்டிருந்தது இளமைப் பட்டாளம்...!

    புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பெயரில் ஆண்களும், பெண்களும் உற்சாக வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்த அந்த இடமே வான்மதிக்குப் புதிதாக இருந்தது.

    ஜோடியாக நடனமாடிக் கொண்டிருந்தவர்களைக் காண ஒருபக்கம் சிலிர்ப்பாக இருந்தாலும், முன்பின் பழக்கமில்லாத அந்தச் சூழ்நிலையில் முள்ளின் மேல் நிற்பது போல் மிகவும் அசௌகரியமாக உணர்ந்தாள் வான்மதி.

    எனக்கு இந்த மாதிரி பார்ட்டிக்குப் போய்ப் பழக்கமில்ல யாழினி... என்று சொல்லியும் கூட, தன்னுடன் வரமறுத்த மதிக்கும் சேர்த்து வலுக்கட்டாயமாக டிக்கட் எடுத்தவள் அவளுடைய அறைத்தோழி யாழினி.

    பழகிக்கோ மதி. இந்த வயசுல இதெல்லாம் என்ஜாய் பண்ணாம எப்ப பண்ணப்போறே? கல்யாணம் பண்ணி நாலு குழந்தைகளைப் பெத்ததுக்கு அப்புறமா? நடக்கவே முடியாம பேரல் மாதிரி ஆயிடுவோம். உங்க ஊர்ல வேணா இந்த மாதிரி பார்ட்டீஸ் பழக்கமில்லாம இருக்கலாம். சிட்டியில இதெல்லாம் சர்வ சாதாரணம். ஒருமுறை என்கூட வந்து பாரு மதி. அடுத்த பார்ட்டி எப்பன்னு நீயே என்கிட்ட கெஞ்சுவே. ஸோ லைவ்லி யூ நோ...!

    யாழினியின் பசப்பான வார்த்தைகள் வான்மதிக்குள் போதையை ஏற்றத் தவறவில்லை.

    மதியின் மனதுக்குள்ளும் நகர வாழ்க்கையின் சொகுசுகளை, நவீனங்களை அனுபவித்துப் பார்க்கவேண்டும் என்ற ஆசை எங்கோ ஒரு மூலையில் ஒளிந்துகொண்டுதான் இருக்கிறது. பெருநகரத்தில் வேலை கிடைத்ததும் அவள் மனசு ரெக்கை கட்டிப் பறந்த உல்லாசத்தை யாரிடம் பகிர்ந்துகொள்ள முடியும்?

    அடிமனதின் ஆசைகள் பலநூறு இருந்தாலும், அவ்வப்போது அவளுக்குள் குறுகுறுவென்று என்னவோ உறுத்துகிறதே...! இதெல்லாம் சரியா? தவறா?

    தன் அம்மா மனோகரிக்குத் தெரிந்தால் என்னாகுமோ? என்ற மனசாட்சிப் போராட்டங்கள் அடிக்கடி அவளுக்குள் ஏற்படுத்தும் பயம்... !

    கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ஊரில் வளர்ந்து, தன் ஊருக்குள் இருந்த ஒற்றைக் காலேஜில் படித்து, நல்ல மதிப்பெண்கள் எடுத்ததன் விளைவாக இன்று சொல்லிக் கொள்ளும்படியான சம்பளத்துடன் ஒரு மத்திய ரகமான கம்பெனியில் வேலை கிடைத்த சந்தோஷத்தில், மெட்ரோ நகரத்தைத் தேடி வந்துவிட்டாள் வான்மதி.

    அடி ஆத்தி... நானும் உன்னையாட்டம் நல்லா படிச்சிருந்தா எனக்கும் ஒரு வேலை கிடைச்சு உன்கூடவே பட்டணத்துக்கு ஓடியாந்திருப்பேனே...! அங்க ஜாமான் வாங்கற கடைக்குள்ள ஓட்டலு, தியேட்டரு, பாப்கார்ன் மெஷினு இன்னும் என்னன்னவோ இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன். நீ கொடுத்து வெச்சவ மதி. இனிமே பட்டணத்து வாசத்தை ஆண்டு அனுபவிக்கலாம். அப்பவே என் ஆத்தா சொல்லுச்சு. நான் எருமை மேய்க்கத்தான் லாயக்கு... வேற எதுக்கும் லாயக்கில்லேன்னு...! கடைசியில அப்படித்தான் ஆச்சுது போ... அரியர்ஸ் பாக்கி இருந்த அலுப்பில் தன் கல்லூரித் தோழி கஸ்தூரி புலம்பியதை அடிக்கடி நினைத்துச் சிரித்துக் கொள்வாள் வான்மதி.

    என்னதான் பெருநகரம் நோக்கி வந்துவிட்டாலும், நடை, உடை, பாவனை என்று நவீனத்துக்கு ஏற்றபடி அல்ட்ரா மாடர்னாக மாறும் திறமையெல்லாம் மதியிடம் இல்லை.

    யாழினியின் தொடர்ச்சியான வற்புறுத்தலுக்காகக் கூந்தலை மட்டும் முன்பக்கம் லேசாகக் கத்தரித்துவிட்டுக் கொண்டு தன் முகத்தில் அப்பியிருந்த கிராமத்து வாடையைப் போக்கிக் கொண்டாள் மதி.

    வழக்கம்போல் இடைவரை நீண்டிருந்த பின்கூந்தல் மதியின் பின்னழகை மேலும் எடுப்பாகக் காட்டுவது யாழினிக்கு இமாலய எரிச்சலைத் தந்து கொண்டிருந்தது.

    பின்னே...! கடவுள் எல்லோரையும் வான்மதியைப் போல் அழகானவளாய்ப் படைப்பதில்லையே...!

    என்னதான் ரூஜ், மஸ்காரா என்று யாழினி தன்னை அழகுபடுத்திக் கொண்டாலும், திருவிழாவில் வேஷம் கட்டுபவர்களின் நினைவு வருவதைத் தடுக்க முடிவதில்லை.

    ஹேய் யாழ்... இங்க என்ன பண்ணறே? கம் லெட் அஸ் டான்ஸ்... அந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் பார்ட்டி ஹாலில், மதியும், யாழினியும் அமர்ந்திருந்த மேஜையைத் தேடிவந்த ஒருவன், யாழினியின் தோள் மீது கைபோட்டு அவளை அழைத்துச் செல்ல,

    மதி... மேனேஜ் அலோன் ஃபார் எ பியூ மினிட்ஸ். அவன்கூட நான் டான்ஸ் ஆடணும்-ன்னு நிவேஷ் ரொம்ப நாளாவே எதிர்பார்த்துட்டு இருக்கான். யூ நோ... ஹி ஹாஸ் எ கிரேஸ் ஓவர் மி. உடன் வந்தவளின் பதிலை எதிர்பார்க்காமல் கண்சிமிட்டிவிட்டு எழுந்து சென்ற யாழினியை அதிர்ச்சியுடன் பார்த்தாள் வான்மதி.

    யாழினி எப்போதும் அருகில் இருப்பாள் என்ற தைரியத்தில் தானே மதி இந்தப் பார்ட்டிக்கு வரச் சம்மதித்தாள். இப்படித் தனியாக விட்டுப் போனால் என்ன அர்த்தம்?

    மிரட்சியோடு சுற்றுமுற்றும் பார்த்தாள் வான்மதி. அங்கங்கே கண்ணாடி டம்ளர்கள் மோதிக்கொள்ளும் சலங் சப்தம். தாய்மொழி மறந்தது போல் ஆங்கிலத்தில் அரட்டைக் கச்சேரிகள்.

    தட்டுகளில் குவிந்து கிடந்த பெயர் தெரியாத விதவிதமான உணவுப் பொருட்கள். நடனமே உயிர்மூச்சு என்பது போல் பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்த இளவட்டங்களின் கூட்டம்.

    ஊர்ப்பக்கம் சாமியாடுவது போல் யாழினி தலையை உலுக்கி ஆடிக் கொண்டிருக்கிறாளே... கழுத்து சுளுக்கிக் கொள்ளாதா? என்று மதி நினைத்துக் கொண்டிருந்தபோதே, ஹாய் பேப்... என்ற குரல் அருகில் கேட்டுத் திகைப்புடன் திரும்பினாள்.

    யார் இவன்? எப்போது இந்த மேஜையில் வந்து அமர்ந்தான்? அவன் கையில் இருந்த கண்ணாடிக் கோப்பையில் வித்தியாசமாக ஏதோ தெரிய, அவன் பார்வையும் விகாரமாய் இருப்பதை உணர்ந்தாள் வான்மதி. உள்ளுக்குள் பயமாக இருந்தது.

    சுற்றியிருக்கும் அத்தனை மேஜைகளும் நிரம்பி வழிகின்றன. இடித்துத் தள்ளும் கூட்டத்தில் எங்கேயும் எழுந்து செல்லவும் முடியாது. அந்த ஏசி ஹாலிலும்... மதிக்கு வேர்க்கும் போல இருந்தது. அருகிலிருந்தவன் ஆல்கஹாலின் வாடையுடன் பேசினான்.

    என்ன தேடிட்டு இருக்கே ஸ்வீட்டி? டான்ஸ் ஆட பேர்[pair] தேடிட்டு இருக்கியா? கம் அண்ட் டான்ஸ் வித் மி. ஐ ஆம் விராஜ். சப்ப ஃபிகரோட டான்ஸ் ஆடி போர் அடிக்குது. உன்னை மாதிரி கிளாசிகல் டச் இருக்கற பொண்ணுகூட ஆடுனா சும்மா கும்முன்னு கிக் ஏறும். கமான்... அவள் கையைப் பிடித்து இழுக்கத் தொடங்கினான் அவன்.

    வான்மதிக்கு உடம்பெல்லாம் கிடுகிடுவென்று நடுங்கத் தொடங்கியது. உதவிக்கு வருவாளா என்று யாழினியைப் பார்வையால் தேடினாள்.

    அவளோ நடப்பது எதுவும் அறியாதவளாய் அந்த நிவேஷோடு உலகம் மறந்து ஆடிக்கொண்டிருந்தாள்.

    அங்க என்ன பார்க்கறே? உனக்குக் கைகொடுக்க நான் இருக்கேன் இல்ல... அந்த விராஜ் பிடித்து இழுத்த வேகத்தில் கீழே விழுந்துவிடுவோம் போலத் தடுமாறினாள் வான்மதி. அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

    இத்தனைப் பெரிய கூட்டத்தில் அவளைக் காப்பாற்ற யாருமே இல்லையா? நடப்பதைப் பார்த்தும் பார்க்காதது போல் பார்த்து ரசித்துக்கொண்டு சிலர்...! என்ன வகையான மக்கள்? என்ன நாகரிகம் இது?

    யாழினி என்று அவள் பெருங்குரலெடுத்துக் கத்தியது அந்த இரைச்சலில் யாருக்குக் கேட்டிருக்கப் போகிறது?

    வாட்ஸ் ஹாப்பனிங்? விருப்பமில்லாத பொண்ணு கையைப் பிடிச்சு இழுக்கறது தப்புன்னு தெரியாதா?

    அருகில் ஆதரவான குரல் கேட்டு மதியின் போன உயிர் மீண்டு வந்தது. வாட்டசாட்டமாக நின்றிருந்தான் ஒருவன். அவன் கையிலும் அதே போல் ஒரு கண்ணாடி டம்ளரில் கலர் திரவம் இருந்தாலும், முகத்திலோ, பார்வையிலோ விகாரமோ, வக்கிரமோ இல்லை.

    நடனமாட அழைத்தவனின் பலவந்தமான கைப்பிடியில் இருந்து வான்மதியை எளிதில் விடுவித்தான் புதியவன்.

    ஹீரோயிசம் காட்டவே கிளம்பி வந்துடுவானுங்க. திஸ் இஸ் நன் ஆஃப் யுவர் பிசினஸ்? என்று அவனை முறைத்துக்கொண்டே விலகிச் சென்றான் விராஜ்.

    புதியவனின் பார்வை மதியின் முகத்தில் படிந்தது.

    ஹேய்... உன் பேர்... அடச்சே... அது என்னவா வேணா இருக்கட்டும். உன்கூட வந்த பேர்[pair] எங்கே? உன்னைத் தனியா விட்டுட்டு வேற ஒருத்தியைத் தேடிப் போயிட்டானா? இந்த மாதிரி இடத்துல பொண்ணுங்களைத் தனியா விடக் கூடாதுன்னு தெரியாத முட்டாளோட வந்த நீதான் சரியான முட்டாள். புதியவன் தன்னிடம் பேசியதைப் புரியாமல் பார்த்தாள் வான்மதி.

    நீங்க நினைக்கறது மாதிரியில்ல. நான் எந்த ஆம்பளையோடவும் இங்க வரல. என் பிரெண்ட் யாழினி. அவதான் என்னை இந்தப் பார்ட்டிக்கு அழைச்சிட்டு வந்தா. எனக்கு இந்த மாதிரி விருந்துக்குப் போய்ப் பழக்கமில்ல. இதுதான் பர்ஸ்ட் டைம்... மதியின் குரலில் பதட்டம் தெரிந்தது.

    ஹக்... பழக்கமில்லேன்னா எதுக்காக வரணும்? இந்தக் கதையெல்லாம் எவனாவது காதுல பூ வெச்சவன் கிட்டச் சொல்லு. எங்க உன்னோட பிரெண்ட் யாழினி? கூப்பிடு பார்க்கலாம். அவன் திட்டவட்டமாகச் சொல்ல,

    யாழினி என்று அழைக்கத் திரும்பியவள் நடனமாடிக் கொண்டிருந்த இடத்தில் தன் தோழியைக் காணாமல் திகைத்தாள். அடக்கடவுளே... இத்தனை நேரம் இங்குதானே ஆடிக்கொண்டிருந்தாள்?

    ஒரு புழுவைப் பார்ப்பது போல் தன்னைப் பார்த்துக்கொண்டு நின்ற புதியவனைப் பரிதாபமாக ஏறெடுத்தாள் வான்மதி.

    இந்தக் கூட்டத்துல தான் எங்கயாவது இருப்பா. நான் போய்க் கூட்டிட்டு வர்றேன்... என்று இரண்டடி எடுத்து வைத்தவளைப் பார்த்துப் பெரிதாக, நக்கலாகச் சிரித்தான் அந்தப் புதியவன்.

    எதுக்கு? இந்த விராஜ் கையைப் பிடிச்சு இழுத்தது பத்தாதுன்னு ஒவ்வொருத்தனா கூட்டத்துல உன் கைப்பிடிச்சு இழுக்கவா? இந்த மாதிரி இடத்துல அதுதான் நடக்கும். பழக்கமில்லேன்னா ஒழுங்கா வீடு போய்ச் சேரு. மதியின் முகத்தில் அறைந்தார் போல் சொல்லிவிட்டு அவன் இடத்தை விட்டு நகர்ந்துவிட்டான்.

    வீடு போய்ச் சேர்வதா? இந்த ராத்திரி நேரத்தில் தனியாகவா?

    யாழினிக்கு டூவீலர் ஓட்டத் தெரியும் என்பதால் அவளுடன் சேர்ந்தல்லவா இங்கே விருந்துக்கு வந்தாள். இவ்வளவு பெரிய அரங்கத்தில் இப்போது யாழினியை எங்கேயென்று தேடுவது?

    கைப்பையில் தேவையான அளவு பணம் இருக்கிறது. ஆட்டோ பிடித்து விடுதிக்குச் சென்றுவிடலாம். ஆனால், இந்த ராத்திரி நேரத்தில் தனியாக ஆட்டோவில் செல்வது எந்த அளவுக்குப் பாதுகாப்பு?

    பாதுகாப்புப் பற்றி முன்னமே யோசித்திருந்தால் இப்படி மடத்தனமாக வந்து மாட்டிக்கொண்டுத் தவிப்பாளா?

    எல்லாம் ஆசை படுத்தும் பாடு. அடுத்தவர்களைப் பார்த்துப் போட்டுக் கொள்ளும் கலாச்சார சூடு.

    இங்கு நடந்ததை மட்டும் அவளுடைய அம்மா மனோகரி பார்த்திருக்க வேண்டும். தோலை உரித்து உப்புக்கண்டம் போட்டிருப்பாள்.

    மேற்கொண்டு அங்கு நிற்பதே மூச்சுமுட்டும் அவஸ்தையாய் இருக்க, மெல்ல அந்தப் பார்ட்டி ஹாலை விட்டு வெளியேறி, பளிங்கினால் வேயப்பட்டிருந்த தரையில் நடந்து எப்படியோ முன்னால் இருந்த ரிசப்ஷன்வரை வந்துவிட்டாள் வான்மதி. கொத்துக் கொத்தாய் அவளைக் கடந்து சென்ற இளவட்டக் கூட்டம்.

    தன்னைக் கடந்து சென்ற இளவட்டங்களை ஒரு நொடி இமைக்க மறந்து பார்த்தாள் மதி. அவர்கள் அணிந்திருந்த விதவிதமான உடைகள். மதிக்கு அந்த உடைகளின் பெயர்கூட சரிவரத் தெரியாது.

    வண்ண நிறங்களில் குதிகால் செருப்புகளின் டொக் டொக்கென்ற இளமையான ஐ டோன்ட் கேர் நடை.

    நீட்டியும், மடக்கியும், சுருட்டியும், அங்கங்கே சாயமேற்றியும் பளபளத்த கூந்தல் அலங்காரங்கள்.

    என்னவென்று தெரியாத ஒரு புதுவிதமான செயற்கை நகையைக் காதிலும், கழுத்திலும் தொங்கவிட்டிருந்தார்கள்.

    இது வேறு உலகம் என்பது புத்தியில் உறைக்க, பயத்தில் மதியின் இதயம் கடம் வாசிக்கத் தொடங்கியிருந்ததில், கால்கள் பின்னிக்கொண்ட தளர்வான நடை. அதே தடக் தடக் இதயத்தோடு முன்புற லானுக்கும் வந்தாகிவிட்டது.

    சரக்... சரக்... என்று முகப்பில் நுழைந்து கொண்டிருந்த கார்கள் தங்களுடைய பிரம்மாண்டத்தைக் காட்டி அவளைப் பயமுறுத்தின. மருந்துக்குக் கூட ஆட்டோ என்ற ஒன்று அங்கே இல்லையா?

    அடியே... மதி... ஜனங்க ஆட்டோவுல வந்து இறங்க இதென்ன உங்க ஊரு அம்மன் கோவில் திருவிழாவா? இந்த ஹோட்டலோட லுக்கைப் பார்த்தாலே இங்க என்ன மாதிரியான ஆளுங்க வருவாங்கன்னு உனக்குத் தெரிய வேண்டாமா? மதியின் உள்மனம் பயத்தில் அலறியது.

    கடந்து செல்பவர்கள் எல்லாம் தன்னையே ஒருமாதிரியாகப் பார்த்துவிட்டுச்

    Enjoying the preview?
    Page 1 of 1