Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Aasai Yaarai Vittatho...!
Kaadhal Aasai Yaarai Vittatho...!
Kaadhal Aasai Yaarai Vittatho...!
Ebook315 pages3 hours

Kaadhal Aasai Yaarai Vittatho...!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

நகரங்களின் அபார்ட்மன்ட் வாழ்க்கை நிறைய சுவாரசியங்களைக் கொண்டதாக இருக்கும்.

பல்வேறு மனிதர்கள், பலவகையான கலாச்சாரம்..! சண்டைகள், சந்தோஷங்கள் என்று கலந்துகட்டிய நாகரீகம்..!

அப்படியொரு அபார்ட்மன்ட்டில் எதிரெதிர் வீட்டில் வசிக்கும் குடும்பங்கள் எப்படி ஜீவிக்கின்றன என்பதை சிறந்த நகைச்சுவையோடும், காதல் ததும்பவும் சொல்லும் கதை.

டெர்ம்-எக்ஸாம் போல, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தங்களுக்குள் பலப்பரீட்சை நடத்தாவிட்டால், அந்த இரண்டு பெண்களுக்கும் தின்ற சோறு செரிப்பதில்லை. ‘அபார்ட்மன்ட்’ வாசிகள் இதற்கு வைத்திருக்கும் பெயர் “வாய்ஜால ரெஸ்ட்லிங்.” வாய்ச்சொற்களால் நடைபெறும் மல்யுத்தம்.

ஆம்..! இந்தக் கதையின் சுவாரசியமும் அந்த இரண்டு பெண்களின் வாய்ஜாலத்தால் மெருகேறுகிறது. யார் அவர்கள்?

Languageதமிழ்
Release dateJun 30, 2020
ISBN6580134505635
Kaadhal Aasai Yaarai Vittatho...!

Read more from Hansika Suga

Related authors

Related to Kaadhal Aasai Yaarai Vittatho...!

Related ebooks

Reviews for Kaadhal Aasai Yaarai Vittatho...!

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Aasai Yaarai Vittatho...! - Hansika Suga

    http://www.pustaka.co.in

    காதல் ஆசை யாரை விட்டதோ..!

    Kaadhal Aasai Yaarai Vittatho...!

    Author:

    ஹன்சிகா சுகா

    Hansika Suga

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hansika-suga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம்-1

    அத்தியாயம்-2

    அத்தியாயம்-3

    அத்தியாயம்-4

    அத்தியாயம்-5

    அத்தியாயம்-6

    அத்தியாயம்-7

    அத்தியாயம்-8

    அத்தியாயம்–9

    அத்தியாயம்-10

    அத்தியாயம்-11

    அத்தியாயம்–12

    அத்தியாயம்–13

    அத்தியாயம்-14

    அத்தியாயம்–15

    அத்தியாயம்-16

    அத்தியாயம்-17

    அத்தியாயம்-18

    அத்தியாயம்-19

    அத்தியாயம்-20

    அத்தியாயம்-21

    அத்தியாயம்-22

    அத்தியாயம்-23

    அத்தியாயம்-24

    அத்தியாயம்-25

    அத்தியாயம்-26

    அத்தியாயம்-27

    அத்தியாயம்-28

    அத்தியாயம்-1

    செவ்வானம் சிவந்து வரவேற்ற நகரத்துப் பெருவாழ்க்கை. பால்காரன் அடிக்கும் மணியிலிருந்து, பஸ், லாரி ஹாரன் சத்தங்கள் வரை அலாரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்க, நகரத்தின் ஒரு மூலையில் வானளாவ உயர்ந்து நின்றது அந்த ‘ஜோஜோ அபார்ட்மன்ட்ஸ்’.

    பல்வேறு மொழிகளும், கலாச்சாரங்களும் கொண்ட மக்களைத் தனக்குள் அடக்கிவைக்கும் பெருமை ‘அபார்ட்மன்ட்’  வாழ்க்கைக்கு மட்டுமே உரியது.

    அங்கே வசிக்கும் குடும்பங்களுக்கு நடுவே சுவாரசியமான நட்புகள், சந்திப்புகள், உரையாடல்கள், வேடிக்கைப் பொழுதுபோக்குகள் என்று பலவிதமான நிகழ்வுகள் இருந்தாலும், அவ்வப்போது சில குடுமிப்பிடி சண்டைகளும் நடந்து, மற்றவர்களை, என்னவோ என்று எட்டிப்பார்க்க வைத்துவிடுகிறது.

    அப்படியொரு சண்டைதான் அன்றும் தொடங்கியிருந்தது. ப்ளாட் S-22 தமயந்திக்கும், அவளது எதிர்-ப்ளாட்டில் வசிக்கும் சுதாராணிக்கும் எப்போது சண்டை வெடிக்கும் என்றே தெரியாது.

    டெர்ம்-எக்ஸாம் போல, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தங்களுக்குள் பலப்பரீட்சை நடத்தாவிட்டால், அந்த இரண்டு பெண்களுக்கும் தின்ற சோறு செரிப்பதில்லை. ‘அபார்ட்மன்ட்’ வாசிகள் இதற்கு வைத்திருக்கும் பெயர் வாய்ஜால ரெஸ்ட்லிங். வாய்ச்சொற்களால் நடைபெறும் மல்யுத்தம்.

    இந்த ‘ரெஸ்ட்லிங்’ தொல்லையைத் தாங்கமுடியாத இருவரது கணவன்மார்களும் ஓரளவு புத்தி சொல்லிப் பார்த்துவிட்டு, பிரயோஜனம் இல்லை என்றதும் தேமே என்று ஒதுங்கிவிடுவார்கள்.

    மிகவும் இக்கட்டான நேரங்களில் பக்கபலமாக இருப்பது, தமயந்திக்கு அவரது மகள் ரித்வியும், சுதாராணிக்கு அவரது இளையமகன் வசந்த் மட்டுமே..!

    இன்று வசந்த் ஊரில் இல்லாததால் சுதா அணியில் ஆள் இல்லை. மோதிப் பார்க்கும் பலம் குறைந்துவிட்டது.

    தமயந்தியின் சொல்வீச்சுகளைச் சமாளிக்க முடியாமல், சுதா திணறிக் கொண்டிருந்த நேரத்தில், அவரது கணவர் ஜனா உதவிக்கு வருவார் என்று பார்த்தால், அவரோ அந்தரத்தில் காக்காய் பிடித்துக் கொண்டிருக்கிறார். என்ன மாதிரியான மனிதர் இவர்?

    புருஷன் என்பவர் எதற்காக? பொண்டாட்டிக்கு உதவி தேவை என்றால் ஓடோடி வரவேண்டாமா? அதுவும் சபை நடுவே மனைவியை விட்டுத்தரலாமா?

    ‘என்ன மனுஷனோ?" என்று நினைத்துக்கொண்டே தன் கோபத்தை எதிர்தரப்பு தமயந்தியின் மீது முறைப்பாகக் காட்டினார் சுதாராணி. சொல்வீச்சு பலவீனமாகி சேதாரமாகி விட்டால், அடுத்து விழிவீச்சுதானே ஆயுதம்.

    ‘உன் டகாலிட்டி வேலையெல்லாம் யாருகிட்ட....’ என்று இடுப்பில் கைவைத்துக் கொண்டு உதார் பார்வைப் பார்த்தார் தமயந்தி. தன் அம்மாவுக்கு பாடிகார்ட் போல நின்றாள், அவர் மகள் ரித்வி.

    ‘அடடா..! பேச்சு சத்தம் குறைந்துவிட்டதே..! சண்டை பிசுபிசுக்கும் போல இருக்கிறதே..! இன்னும் கொஞ்சநேரம் இலவச சீரியல் ஓடாதா’ என்ற ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த பலஜோடிக் கண்கள்..!

    ‘இந்தப் பொம்பளைங்களுக்கு வேற வேலையே கிடையாது...’ என்று உரக்கவே முணுமுணுத்துவிட்டு தங்கள் கடமையைப் பார்க்கச் சென்ற ‘பொறுப்பு பிஸ்தாக்கள்’..!

    என் பையன் ஊர்ல இல்லாத தைரியத்துல உன் வாய் நீண்டு போச்சு. அவன் வரட்டும். வெச்சுக்கறேன். என்று எதிர்தரப்பை எச்சரித்துவிட்டுச் சென்றார் சுதா.

    ஆமாம்... இவர் மகன் பெரிய ஹீரோ. ஊர்ல இருந்து வந்ததும் அப்படியே பறந்துபறந்து எங்களை அடிப்பார். வெட்டித் தம்பட்டத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. என்று பழிப்புக்காட்டிவிட்டு, ‘உக்கிர ரூபிணி’யாக நின்ற தன் அன்னையை உள்ளே அழைத்துச் சென்றாள் ரித்வி.

    அன்றைய சண்டை வெகுநேரம் நீடிக்காமல், சப்பென்று முடிந்துவிட்ட ஆதங்கத்தில், அங்கங்கே நின்று வேடிக்கைப் பார்த்தக் கூட்டம் மெல்லக் கலைந்துச் செல்ல, ‘புஸ்புஸ்’ என்று மூச்சுவிட்டுக் கொண்டிருந்த தமயந்தியைக் குளிர்விக்கும் விதமாக ஜூஸ் கலந்து வந்து கொடுத்தாள் ரித்வி.

    மக்கள் நலனுக்காகப் பார்லிமென்ட்ல பலமணிநேரம் பேசிக் கிழிச்சிட்டா பாரு. ஜூஸ்தான் ரொம்ப முக்கியம். அந்தப் பொம்பளையோட சண்டை இழுக்கலேன்னா, உன் அம்மாவுக்கு ஆகவே மாட்டேங்குது. என்று தைரியமாகத்[?] தன் மனைவியைக் கடிந்துகொண்டார் அவரது மணவாளன், ‘மாண்புமிகு’ பல்லவன்.

    பல்லைத் தட்டிடுவேன். நானா அவளை வம்புக்கு இழுத்தேன்? அவதான் முதல்ல ஆரம்பிச்சா. என்று மணாளனிடம் தன் வீரத்தைக் காட்டத் தொடங்கினார் தமயந்தி.

    ஐயோ...அப்பா... ஜில்லுன்னு ஜூஸ் குடிச்ச பிறகுதான் அம்மா கூல்டவுன் ஆயிட்டு இருக்காங்க. மறுபடியும் நீங்க சூடத்தைக் கொளுத்தி, பாய்லர்ல போடாதீங்க. இது இன்னைக்கு நேற்றா நடக்குது? என்னைக்கு இந்த அபார்ட்மன்டுக்கு வந்தோமோ, அன்னையில இருந்து இப்படித்தான். எது எப்படி இருந்தாலும், மற்றவங்க முன்னாடி நீங்க உங்க மனைவியை விட்டுக்கொடுக்காமப் பேசிப் பழகணும் மிஸ்டர் பல்லவன். என்று சூழ்நிலையைக் கலகலப்பாக்க முயன்றாள் ரித்வி.

    நல்லா மண்டையில உறைக்கற மாதிரிச் சொல்லு ரித்வி. பல்லவனாம்... பல்லவன்..! எப்ப பார்த்தாலும், அடுத்த வீட்டுப் பொம்பளைகிட்ட பல்லைக் காட்டிட்டு நிற்க வேண்டியது. நல்ல மனுஷனா இருந்தா மற்றவங்க முன்னாடி பொண்டாட்டியை விட்டுக் கொடுப்பாரா? எல்லாம் என் தலையெழுத்து. இவரைக் கட்டிட்டு மாரடிக்கிறேன். இவங்கம்மா, அதான் என் மாமியார், உயிரோட இருந்த காலத்துல, எப்படியெல்லாம் என்னைக் குத்திப்பேசுவாங்க தெரியுமா? ஒருநாள் கூட தன் அம்மா செய்த அக்கிரமத்தைக் கேள்வி கேட்டது இல்லையே..! எது நடந்தாலும் மரம் மாதிரியே நிப்பாரு. ஊருக்கு இளைச்சவ ஆண்டிங்கற மாதிரி, எதுக்கெடுத்தாலும் என்கிட்ட மட்டும் டிங்குடிங்குன்னு ஆடவேண்டியது. என்று வரிந்துகட்டினார் தமயந்தி.

    எங்கம்மாவைப் பற்றிப் பேசாதே தமயந்தி. அவங்க இன்னும் பல வருஷம் உயிரோட இருந்திருப்பாங்களோ என்னவோ..! இப்படி வாய்த்துடுக்கா பேசி அவங்களை நீயே கொலை பண்ணிட்டே. என்று மனைவியின் முகத்துக்கு நேராகக் குற்றம்சாட்டினார் பல்லவன்.

    ‘ஆஹா... இத்தனை வருடம் குடும்பம் நடத்தி என்ன புண்ணியம்? பல்லவன் பேசத் தெரியாமல் பேசி, மனைவியின் உக்கிரத்தை அதிகமாக்கிவிட்டாரே..! எரிகிற நெருப்பில் தீக்குச்சியை எறிவதே தவறு. இதில் பெட்ரோல் பங்க்கையே தூக்கிப் போடலாமா? இன்று அப்பா சேதாரமில்லாமல் தப்பித்தால் பலஜென்ம புண்ணியம் தான்.’ என்று மனத்துக்குள் பயந்தவாறே தன் அறையை நோக்கி ஓடினாள் ரித்வி.

    எங்கடி போறே? டிபன் எடுத்து வைக்கிறேன். என்று தமயந்தி தடுத்தபோதே, ‘விட்டால் போதும்’ என்று கல்லூரிக்குக் கிளம்பிவிட்டாள் ரித்வி.

    காலேஜ் கேன்டீன்ல இன்னைக்கு மைசூர்போண்டா போடறானாம். மிஸ் பண்ணுவானேன். என்று அம்மாவின் தாடையைப் பிடித்துக் கொஞ்சி, ஒருவழியாக வீட்டைவிட்டு வெளியே வந்தாகிவிட்டது.

    வயிறு கபகபவென்று பசிக்கிறது. ஆனால், தாய் என்னும் ‘ருத்ரமாதேவி’ இருக்கும் நிலையில், இதற்கு மேலும் வீட்டில் இருப்பது என்பது சாத்தியமில்லாதது.

    ரித்வியைப் பெற்ற மகராசரும், மனைவியிடம் கொளுத்திப் போட்டதோடு தன் வேலை முடிந்தது என்று வீட்டைவிட்டு ‘எஸ்கேப்’ ஆகிவிட்ட நிலையில், ஏவுகணை எப்படி வேண்டுமானாலும் திசைதிரும்ப வாய்ப்புள்ளது.

    எதற்கு வம்பு? கல்லூரிக் கேன்டீனில் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தாள் ரித்வி.

    அவள் மனத்துக்கு மிகவும் ஆதங்கமாக இருக்கிறது. கலர்கலராக ஸ்கூட்டி ரக வாகனங்கள் கடந்து செல்கின்றன. அதைச் ஸ்டைலாக ஓட்டிச் செல்லும் விதவிதமான பட்டாம்பூச்சிகளைப் பார்க்கும்போது ஒருவித பொறாமை. அந்தச் ஸ்கூட்டி பெண்கள் அணிந்திருக்கும் கூலர்களிலிருந்து, கால்செருப்பு வரை, அவர்களின் டூவீலரோடு என்னமாக மேட்ச் ஆகிறது.

    ‘என்னா ஸ்டைல் மச்சி...’ என்று உரக்கச் சொல்லி விசிலடிக்க வேண்டும்போல் ரித்விக்குள் தாளமுடியாத ஒரு குறுகுறுப்பு.

    அதே ‘மச்சி ஸ்டைலை’ பாஃலோ செய்ய அவளுக்கும் நீண்ட நாட்களாக ஆசைதான். டூவீலர் வாங்கித் தருவதற்குத் தந்தையார் பல்லவன் சம்மதித்தாலும், தாயார் தமயந்தி விடுவதாய் இல்லை.

    ஊருக்குள்ள இருக்கற ட்ராபிக்ல நீ தனியா ஓட்டிட்டு வரலேன்னு யாரு அழுதா? எங்க பார்த்தாலும் ஒரே ஆக்சிடன்ட் நியூஸா இருக்கு. வயித்துல நெருப்பைக் கட்டிட்டுத் திரிய என்னால முடியாது. காலேஜு பஸ்சுக்கு என்ன குறைச்சல்? அதுலேயே பத்திரமா போயிட்டு... பத்திரமா வா. வழியில பசங்களோட ராகிங் தொல்லை இல்லாமப் பாதுகாப்பா இருக்கும்.

    ரித்வியின் டூவீலர் ஆசையில் மண் விழுந்துவிட்டது. தமயந்தி தீர்ப்புச் சொல்லிவிட்டால், மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பே இல்லை.

    பெயரில் மட்டுமே ‘பல்லவனை’க் கொண்டிருக்கும் தந்தையாருக்கு, அம்மாவை எதிர்ப்பதில் அந்த ‘அரசவம்சத்தின் வீரம்’ கொஞ்சமேனும் இருந்திருக்கலாம் என்று அவ்வப்போது ரித்வி வருத்தப்படவும் செய்திருக்கிறாள்.

    என்ன செய்யமுடியும்? ரித்விக்கு வாய்த்த அப்பா, அம்மா இப்படித்தான்.

    ‘பாவம்... அப்பா..! இன்று டிபன் சாப்பிட்டாரோ... இல்லையோ..? நடந்த சண்டையில் வெறுத்துப் போய் வெளியே கிளம்பிவிட்டாரோ..?’ என்று நினைத்துக்கொண்டே சாலையைக் கடந்தவளின் கண்கள், அரைநொடி கறுப்பு நிறம் அனுஷ்டித்த நேரம்..!

    சரக்கென்று ப்ரேக்கிட்டு நிற்கும் வாகனங்களின் சத்தம்..!

    சாலையின் சூடு தன் மீது பரவுவதை உணர்ந்தாள் ரித்வி. ஆனால், கண்களைத் திறந்துப் பார்க்க முடியாதபடி மங்கலாய் ஒரு திரை..!

    சாரி மேடம்... நான்தான் ரொம்ப வேகமா வந்துட்டேன். அடி எதுவும் படலியே? மிகவும் அருகில் ஒலித்தது ஒரு ஆண்குரல்.

    ஏய்... விலகுப்பா... இடிக்கறதையும் இடிச்சிட்டு கதைவிடறதைப் பாரு. ரித்வி...நான் பஞ்சாபகேசன் அங்கிள். செவன்த் ப்ளோர். என்று புதிதாக ஒரு குரல் ஓவர்டேக் செய்ய, முழுவதுமாக நினைவிழந்தாள் ரித்வி.

    உங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணா சார்? ஆட்டோல போட்டு வீட்டுக்குத் தூக்கிட்டுப் போ சார். ட்ராபிக் ஜாம் ஆகுது. என்று யாரோ குரல் கொடுத்தார்கள்.

    தேவையில்லை. என்னோட கார் இருக்கு. யாராவது ஹெல்ப் பண்ணுங்க. ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டுப் போயிடலாம். என்று அவளை இடித்துத் தள்ளியவன் பரிதாபப்பட்டான்.

    அட... இது வெறும் மயக்கமப்பா. இதுக்கு ஏன் இம்புட்டு அலப்பர? என்று பளிச்சென்று அவள் முகத்தின் மீது தண்ணீரைத் தெளித்தார்கள்.

    ரித்வியின் இமைகள் அசைந்து, சூரியனால் சலவை செய்யப்பட்ட வானம் சுளீரெனத் தெரிந்தது. மர்மநாவல் படிக்கும் நிலையில் அனைவரும் அவளையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    நடுரோட்டில் கிடக்கிறோம்... தன்னைச் சுற்றி இத்தனை முகங்களா என்று பகீரென்று அடித்துக்கொண்ட பெண்மனம், என்ன நடந்தது என்பதை ‘ரீ-கேப்’ செய்யும்முன், பஞ்சாபகேசனின் முகம் க்ளோஸ்-அப்பில் தெரிந்தது.

    நல்லவேளை... இவராவது இருக்கிறாரே என்று அவர் நீட்டிய கரத்தைப் பிடித்துக்கொண்டு எழுந்தாள் ரித்வி.

    போப்பா... போப்பா... கூட்டத்தைக் கிளியர் பண்ணு. என்ற குரல் கேட்டபோது, ஐ ஆம் சாரிங்க... ஹாஸ்பிடலுக்கு போகணுமா? வீட்டுக்குப் போகணுமா? எங்கே போகணும்-ன்னு சொல்லுங்க. நானே டிராப் பண்ணறேன். பவ்யமாகப் பேசினான்.

    நீ இன்னும் கொஞ்சம் வேகமா மோதியிருந்தா, அவ ஒரேயடியா போயிருப்பா. நீ போப்பா. எங்க பொண்ணை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போக எங்களுக்குத் தெரியும். என்று அவனைத் திட்டிவிட்டு, அருகில் நின்ற ஆட்டோவில் ரித்வியை ஏற்றினார் பஞ்சாபகேசன்.

    எதுக்கு அங்கிள் அவரைச் சத்தம் போட்டீங்க? எனக்குத் திடீர்னு தலைசுத்தற மாதிரி ஆனதுக்கு அவர் என்ன பண்ணுவாரு? என்று ஆட்டோவில் செல்லும்போது பச்சாதாபப்பட்டாள் ரித்வி.

    நீ விழுந்து கிடக்கறதை நான் பார்த்ததால தப்பிச்சே. வள்ளிக்கிழங்கு மாதிரி இருக்கற பொண்ணு, இப்படித் தெருவுல மயங்கிக் கிடந்தா, நாலுபேர் உத்துப் பார்க்கச் செய்வான். நாளைக்கு நீ மறுபடியும் அந்த ஏரியா பக்கம் போகும்போது, உன்னை அவனுங்க பார்க்கற தினுசு வேறவிதமாவும் இருக்கும். அதுக்குத்தான் ஒரு சவுண்ட் விட்டேன். மற்றபடி இடிச்சவன் யாரு என்னன்னு கூட நான் கேட்டுக்கல. என்றார் பஞ்சாபகேசன்.

    கேசத்தில் அங்கங்கே ஒட்டிக் கொண்டிருந்த நீர்த்துளிகளை மென்மையாகத் துடைத்துக் கொண்டாள் ரித்வி. ஒழுங்காக டிபன் சாப்பிட்டு வந்திருந்தால், இந்த ஸீன் தேவைப்பட்டிருக்காது.

    இந்தக் காலத்துப் பிள்ளைங்க...வேளைக்குச் சாப்பிடறது இல்ல. உடம்புல சத்து பத்தறதில்ல. அப்புறம் சுருண்டு விழாம என்ன செய்வாங்க? காலையில எந்திருச்சு சண்டையை வழிச்சுவிட்ட நேரம், மக சாப்பிட்டாளா இல்லையான்னு உங்கம்மா கவலைப்பட்டு இருக்கலாம். என்று தன் அர்ச்சனையைத் தொடர்ந்துகொண்டே ‘ஜோஜோ அபார்ட்மன்ட்’ வாசலில் வந்து இறங்கினார் பஞ்சாபகேசன்.

    இந்த மனிதருக்கு ஒரு விஷயம் தெரிந்தால், ஊருக்கே தமுக்கு அடித்தமாதிரி என்று நினைத்துக்கொண்டே, அபார்ட்மன்ட் லிப்டை நோக்கி நடந்தாள் ரித்வி.

    உங்கம்மாவை நாக்கைப் பிடுங்கிக்கற மாதிரி நாலு கேள்வி கேட்டாதான் என் ஆத்திரம் அடங்கும். என்று ‘லிப்டுக்குள் நரசிம்மர்’ போல் நின்றார் பஞ்சாபகேசன்.

    காலிங்க்பெல் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்த தமயந்தி அதிர்ந்து பார்த்தார். காலேஜுக்குப் போகல? என்று தன் மகளை அவர் கேட்டதுதான் தாமதம்.

    ரித்வி வாய் திறக்கும்முன் முந்திக்கொண்டார் பஞ்சாபகேசன். சில மணித்துளிகளில் ஒரு ‘குட்டிச்சுனாமி’ வந்து சென்றதுபோல் ஒரு உணர்வு.

    தட்டில் வைக்கப்பட்ட சப்பாத்தியையும், குருமாவையும் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ரித்வி. தன் மகளையே முறைத்துக் கொண்டிருந்தார் தமயந்தி.

    ஒரு வாய் சாப்பிட்டு காலேஜுக்குப் போடின்னு அப்பவே சொன்னேன். இப்ப கண்டவனெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ணிட்டு போறான் பாரு. என்று எரிந்து விழுந்தார்.

    தமயந்தியின் அடுத்தகட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள, ‘கண்டவன்’ பட்டம் வாங்கிய பஞ்சாபகேசன் அங்கே நிற்கவில்லை.

    நாக்கைப் பிடுங்கும்படி தான் கேட்க நினைத்த நாலு கேள்விகளை நறுக்கென்று கேட்டுவிட்டு, அவர் அப்போதே ஜூட் விட்டுவிட்டார்.

    சாப்பிடும்மா. என்று தன் கோபத்தைக் குறைத்துக்கொண்டு மகளின் கூந்தலைப் பரிவுடன் கோதிவிட்டார் தமயந்தி.

    இந்த அக்கறையெல்லாம் சண்டை வழிக்கறதுக்கு முன்னாடியே இருந்திருக்கணும். எப்ப பாரு உங்களால ஏதாவது ஒரு ஸீனு..! அப்பா சாப்பிட்டாரா, இல்லையான்னு கொஞ்சமாவது கவலைப்பட்டீங்களா? அவர் எங்கே போய் தலையைச் சுத்தி விழுந்து கிடக்காறோ? என்று அன்னையிடம் கோபப்பட்டாள் ரித்வி.

    போதுமடி... உன் அப்பாவைப் பற்றின கவலை..! அந்த மனுஷன் சாப்பிட்டுத்தான் போயிருக்கார். ஹாட்பேக்ல சப்பாத்தி சுட்டு வெச்ச எனக்கு, எத்தனை காலியாகியிருக்குன்னு தெரியாதா? பிரளயமே நடந்தாலும் எனக்கென்னன்னு, தன் கடமையைக் கண்ணும்கருத்துமா செய்யற கண்ணாயிரம் தானே, உன் அப்பா. உன்னையும் ‘டிபன் தின்னுட்டுப்போ’ன்னு தானே சொன்னேன். நீயேன்டி தேவையில்லாம நடுரோட்ல சுருண்டு விழுந்து என் மானத்தை வாங்கறே? என்று பதிலுக்குப் பாய்ந்தார் தமயந்தி.

    ஹூம்..! வீட்டுக்குள்ள சூரிய நமஸ்காரம் பண்ண மறந்துட்டேன். அதுனால வீதியில போய் பண்ணிட்டு வந்தேன். என்று சப்பாத்தியைக் குருமாவில் முக்கி, வாய்க்குள் திணித்தாள் ரித்வி.

    இன்று ‘காலேஜ் கட்’ ஆனது கூட அவளுக்குக் கவலையில்லை. அவள் நடுவீதியில் விழுந்து கிடந்தாள் என்று தெரிந்தால், எதிர்வீட்டு வசந்த் அவளைக் காய்ச்சி எடுத்துவிடுவான்.

    ‘தமுக்கு’ பஞ்சாபகேசன் அங்கிள் இந்நேரம் ஏழெட்டு ப்ளோரிலாவது அவள் மயக்கமான தகவலைப் பரப்பியிருப்பாரே..! ஊரிலிருந்து திரும்பி வந்ததும் வசந்த் காதுக்கு விஷயம் போகாமலா இருக்கும்? ‘என்ன உன் உடம்புக்கு?’ என்று கேட்டுக் கேட்டே அவளை இளைக்க வைத்துவிடுவானே..!

    ‘எதிர்வீட்டுக்காரன் ஊரிலிருந்து வரட்டும். நிலைமையைச் சமாளிப்போம்.’ என்று நினைத்துக்கொண்டே மிச்சமிருந்த சப்பாத்திகளை விழுங்கத் தொடங்கினாள் ரித்வி.

    அத்தியாயம்-2

    இப்ப எதுக்குத் தவளையாட்டம் குதிக்கறே? யாராவது வேணுமின்னே ரோடுல உருளுவாங்களா? என்னவோ நடந்தது நடந்துபோச்சுன்னு விடேன். மறுநாள் தன்னிடம் சண்டையை ஆரம்பித்த காதலனை அடக்கப் பார்த்தாள் ரித்வி.

    அவனாவது அடங்குவதாவது..! சுதா எட்டடி என்றால் அவர் மகன் பதினெட்டடி பாயும் ரகம்.

    உங்கம்மாவுக்கு சண்டை போடறதுல இருக்கற சாமர்த்தியம், தன் மகளைக் கவனிக்கறதுல இல்ல. என்றான் வசந்த், காட்டமாக.

    உங்கம்மா மட்டும் ரொம்ப ஒழுங்குதான். எப்படா வரிஞ்சுகட்டிக்கிட்டு வரலாம்-ன்னு காத்திருக்க வேண்டியது..! தன் பிள்ளையாண்டான் மேல அவங்களுக்கு அக்கறையே இல்ல. தன் மகன் என்ன செய்யறான்னு கண்ணுகொத்திப் பாம்பு மாதிரியில்ல பார்த்திருக்கணும். அப்படிப் பார்த்திருந்தா, வீட்டுக்குத் தெரியாம நீ லவ்ஸ் பண்ணற மேட்டரை எப்பவோ கண்டுபிடிச்சு இருப்பாங்களே..! என்று உதடு கடித்துச் சிரித்தாள் ரித்வி.

    வருங்கால மாமியார்-ன்னு பயமே இல்லாமப் போச்சுடி உனக்கு. என்றவன், அக்கம்பக்கம் என்றும் பாராமல், அவளைத் தன்னருகே இழுத்து, அந்த மென்மையான உதடுகளில் அழுந்த முத்தமிட்டான். அவனுக்குள் அவள் கரையும் நிமிடங்கள். அதற்காகவே ஏங்கிக் கிடக்கும் தருணங்கள்.

    ரித்வியின் இதயம் இன்பமாய் அதிர்ந்தது. பரபரப்புடன் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டாள். அங்கொன்றும் இங்கொன்றுமாக அமர்ந்திருந்த ஜோடிகள் இவர்களின் சில்மிஷங்களைக் கண்டு கொள்ளவில்லை. தலைக்குமேல் தத்தமது வேலை.

    ஆனாலும் உனக்கு ரொம்பத்தான் தைரியம் வசந்த். அவள் கண்களின் நாணம் வானவில்லாய்..!

    தைரியமா? எனக்கா? கிழிஞ்சது போ. வீட்ல இருக்கும்போது நிம்மதியா உன்கிட்ட ஒரு போன் கூடப் பேசமுடியல. நீயும் உங்கம்மா முன்னாடி என்கிட்ட பேசப் பயப்படுறே. வாடி...போடின்னு போன்ல நாடகமாடி, என்னைப் பொட்டையாக்கிடுவே போலிருக்கு ரித்வி. எதிரெதிர் வீட்டுல இருந்தாலும் நமக்குள்ள திருட்டுப்பார்வை பார்க்கறோம். கட்டிப்புடிச்சி கசமுசா பண்ணலாம்-ன்னு மனசு ஏங்கும்போது, மத்தவங்க நம்மைச் சந்தேகப்படுவாங்களேன்னு மூஞ்சியைக் குரங்கு மாதிரி வெச்சிட்டு திரியறோம். என்னைக்கு நம்ம காதலை வெளிப்படையா சொல்லமுடியுதோ, அன்னைக்கு தைரியசாலின்னு மார் தட்டிக்கலாம். அதுவரைக்கும் திருட்டுச் சந்திப்புதான்... திருட்டு முத்தம்தான். என்று மீண்டும் அவளைக் காந்தமாய் தன்னிடம் இழுத்தான் வசந்த்.

    கொஞ்சம் இடம்கொடுத்தா ஒரேயடியா பாயறே பார்த்தியா? என்று அவன் மார்மீது கைவைத்துத் தள்ளிவிட்டாள் ரித்வி.

    தன்னைத் தள்ளிவிட்ட கரங்களை ஆசையுடன் பொத்திவைத்து முத்தமிட்டான். அவன் மீசை அவள் விரல்களின் மீது கோலம் வரைய, அந்தக் குறுகுறுப்பும், அவன் கண்களின் கள்ளத்தனமும் அவளுக்குள் டாஸ்மாக் கலவரத்தை ஏற்படுத்தியது. போதையான மயக்கத்துடன் நின்றவளை அடிக்கண்ணால் பார்த்தான் வசந்த்.

    "ஷ்ஷ....ப்பா...! ஆளை இழுக்குதுடா. கண்ணுக்குள்ள ‘வயாகரா’ வெச்சுப் பார்க்காதே ரித்வி.

    Enjoying the preview?
    Page 1 of 1