Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Ennai Kaadhal Seiya...
Kaadhal Ennai Kaadhal Seiya...
Kaadhal Ennai Kaadhal Seiya...
Ebook198 pages1 hour

Kaadhal Ennai Kaadhal Seiya...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

துறுதுறு நாயகன் சம்பத். இடம் பொருள் ஏவல் தெரியாமல் தன் காதலை, வளர்ந்து வரும் தொழிலாதிபரான சௌபர்ணிகாவிடம் வெளிப்படுத்த, இப்படியும் ஒருவனா என்று அவள் விழிக்கிறாள். அதுவே பின்னர் காதலாகப் பற்றிக்கொள்ள, ஒரு jolly-go love story. படித்து மகிழுங்கள்.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580134506592
Kaadhal Ennai Kaadhal Seiya...

Read more from Hansika Suga

Related authors

Related to Kaadhal Ennai Kaadhal Seiya...

Related ebooks

Reviews for Kaadhal Ennai Kaadhal Seiya...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Ennai Kaadhal Seiya... - Hansika Suga

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காதல் என்னைக் காதல் செய்ய...

    Kaadhal Ennai Kaadhal Seiya...

    Author:

    ஹன்சிகா சுகா

    Hansika Suga

    For more books

    https://www.pustaka.co.in/home/author/hansika-suga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 1

    ஐ ஜஸ்ட் ஹேட்... ஹேட்... ஹேட்... மனத்துக்குள் தாண்டவம் ஆடத் தொடங்கியிருந்தாள் சௌபர்ணிகா.

    உள்ளூரில் நடந்த தொழிலதிபர்களின் மாநாட்டிற்கு கிளம்பிச் சென்றபோது எல்லாம் நன்றாகத் தான் இருந்தது.

    ‘இருப்பா... இரு... தொழிலதிபர்கள் மாநாடா?’

    அட... ஆமாங்க...! அவங்களைக் கேட்டா அப்படித்தான் சொல்லிக்குவாங்க.

    ‘மினி மாநாடு’ முடிந்து வீடு திரும்பலாம் என்று நினைத்த நேரத்தில், அவளுடைய குதூகலத்தில் மண்ணள்ளிப் போட்டுவிட்டான் சம்பத்.

    லவ்வாம் லவ்...! ப்ரொபோஸ் பண்ணுவதற்கு நல்ல நேரம் பார்த்தான்.

    தொழிலதிபர்கள் சங்கமத்தில் வைத்து வியாபாரத்தைப் பற்றிப் பேசுவார்களா அல்லது காதல் என்று பினாத்துவார்களா?

    சும்மாவே அவளுக்கு காதல் என்றால் பிடிக்காது. அலர்ஜி ரகமெல்லாம் இல்லை. என்னவோ காதல் என்ற வார்த்தை மீதே நம்பிக்கை இல்லை.

    ‘காதலாவது... மண்ணாங்கட்டியாவது...’ என்று காதலை மண்ணாங்கட்டி நிலைக்குக் குப்புறத் தள்ளி கும்மியடித்துச் சிரிப்பவள்.

    காதலுக்கு அவள் கொடுத்த மரியாதை ‘ஜீரோ’ என்று புரியாமல் தன் இதயத்தைத் திறந்து காட்டி விட்டான் சம்பத்.

    அவன் பைத்தியமா...ப்பா?

    வீட்டுக்குள் வரும்போதே கேட்ட பெண்ணைப் பார்த்து ஆடிப்போனார் சிவஸ்வாமி.

    யாரைச் சொல்றே?

    அந்த சம்பத்தோ... கிங்காங்கோ... உங்க ஃபிரெண்ட்... மதுபர்கரோட பையன்.

    உனக்கு என்னாச்சு சௌபர்ணிகா? அவன் பர்கரும் இல்லை... பீசாவும் இல்லை. மதுக்கர். ஆமாம். மதுக்கரோட மகன் சம்பத். அதுக்கென்ன இப்ப? அந்த சம்பத் கோல்ட் மெடலிஸ்ட். அவனைப் போய் பைத்தியம்’ன்னு சொல்லலாமா? கோபம் ஊடுருவக் கேட்டார் சிவஸ்வாமி.

    தேவையில்லாமல் அவருடைய நல்ல நண்பர் மதுக்கரையும், அவரது மகனையும் இந்தப் பெண் வம்புக்கு இழுக்கலாமா?

    தனக்குள் ஏதோ முணுமுணுத்தவளாய் உள்ளே சென்றாள் சௌபர்ணிகா.

    என்ன நடந்திருக்கும் என்று சிவஸ்வாமிக்கு குழப்பமாக இருந்தது.

    ப்ச்...! என்னவாக இருந்தால் என்ன? இரண்டொரு நாளில் என்னவென்று மகள் மூலமாகவே தெரியத்தான் போகிறது.

    சௌபர்ணிகா எப்போதுமே அப்படித்தான். தனக்குள் இருப்பதை ஏதோ குகைக்கோவில் இரகசியம் போல் பாதுகாப்பதாக நினைத்து, விரைவில் அவளே போட்டு அந்த இரகசியத்தை உடைக்கவும் செய்திடுவாள்.

    மனத்தில் சிறு குழப்பத்தோடு வண்டியில் அமர்ந்திருந்தான் சம்பத். இந்தியாவில் ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்வது அத்தனை பெரிய குற்றமா?

    நான்கு வருடங்களாக அவன் வாழ்ந்த ஜெர்மனியில் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே.

    பெண்களிடம் காதலைச் சொன்னால், பிடித்தால் ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள் அல்லது சிறு புன்னகையுடன் மறுத்துவிட்டுப் போகிறார்கள்.

    இந்தப் பெண்... பெயர் என்ன... சௌசௌஆ? ஜலதோஷமா? ஆங்... சௌபர்ணிகா...!

    ‘எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது... இருவரும் காதலிக்கலாமா என்று கேட்டுவிட்டானாம்.’ ஞே... என்று அப்படி விழிக்கிறாள்.

    ஒருவேளை அவளிடம் யாருமே ‘காதல்’ என்ற வார்த்தையை உச்சரித்தது இல்லையோ?

    அதனால்தான் அகராதியிலிருந்து புறப்பட்ட புதிய வார்த்தை போல் அப்படி நின்றாளா?

    ஹூம்... சம்பத்துக்கு அவள் பார்த்த பார்வைதான் வேடிக்கையாக இருந்தது.

    இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்தால் மறுபடியும் அவளைச் சீண்டிப் பார்த்து, பேக்குபோல் முழிக்கச் செய்யவேண்டும் என்று ஆசை எழ, குறுநகையுடன் மெல்ல உதட்டைக் கடித்துக் கொண்டான்.

    மனசுக்குள்ள என்னவோ நினைச்சு சிரிக்கற மாதிரியிருக்கு. டிரைவிங்கில் இருந்த அவன் நண்பன் ராகேஷ் கேட்க,

    அந்தப் பொண்ணு யாரு? என்றான் சம்பத்.

    யாரைச் சொல்றே? எந்தப் பொண்ணு? இப்படி மொட்டையா கேட்டா ஒண்ணும் புரியல.

    இப்ப போயிட்டு வந்தமே... ஒரு யூஸ்லெஸ் மினி மாநாடு...! அதுல அந்த லேடி சௌபர்ணிகா...!

    அந்த அவதாரமா...! சிவஸ்வாமியோட பொண்ணு...! ஐயோ... ஏன் அவங்களைப் பற்றிக் கேட்கறே? அவங்களுக்கும், உனக்கும் ஏதாவது சண்டையா?

    ஆச்சரியத்துடன் பார்த்தான் சம்பத். நான் ஒரு விவரமும் சொல்லல. அதுக்குள்ள எனக்கும், அவளுக்கும் சண்டையான்னு கேட்கறே? அவ்வளவு பெரிய சண்டைக்காரியா? பார்த்தா அப்படித் தெரியலயே?

    க்கும்... எனக்கும், அவங்களுக்கும் ஒரு விஷயத்துல எதிர்பாராவிதமா லடாய் ஆயிடுச்சு. அதுல இருந்து அந்தம்மா எங்கிருந்தாலும் எட்டடி தள்ளி நிக்கறது. நீயும் அப்படியே இரு.

    சம்பத்தின் புன்னகை அதிகமானது. சரி...சரி... உங்க இரண்டு பேருக்குள்ள என்ன நடந்ததுன்னு இன்னொரு நாள் கேட்டுத் தெரிஞ்சுக்கறேன். இப்ப வழக்கமா போற பாருக்கு வண்டியை விடு.

    இன்னைக்குமா? இந்த வாரத்துல இது மூணாவது முறை...

    மனசு ஹேப்பியா இருந்தா குடிக்கப் போறோம். இதுல என்னடா கணக்கு?

    பாரத்தைக் குறைக்கக் குடிக்கறேன்னு சொன்னாலும் அர்த்தமிருக்கு. ஹாப்பியா இருக்கும்போது குடி தேவையா மச்சி?

    என்னைக்கு வருத்தம் இருந்திருக்கு நண்பா? பொறந்ததுல இருந்து நான் ஹாப்பியஸ்ட் பர்சன். பாரத்தைக் குறைக்கக் குடிக்கறேன்னு என்னைக்குமே சொன்னதும் இல்லை. சொல்லப்போறதும் இல்லை.

    சம்பத் உற்சாகமாய் சொல்ல, பார் காம்பவுன்டுக்குள் காரை ஒடித்து நிறுத்தினான் ராகேஷ்.

    கச்சிதமாகப் பார்க் செய்யும்படி செக்யூரிட்டியிடம் சாவியை வீசிவிட்டு இருவரும் கண்ணாடிக் கதவைத் திறந்து உள்ளே செல்ல,

    மெல்லிய நீலநிற வெளிச்சம் இருவரின் மனநிலைக்கும் இதமானதாய்...!

    ஆர்டர் செய்த திரவத்தின் மீதிருந்த ஐஸ்கட்டிகளை நகைப்புடன் பார்த்தான் சம்பத்.

    சௌபர்ணிகாவின் திருதிரு பார்வை போலவே இருந்தன. ‘நிறையவே தொந்தரவு செய்ய ஆரம்பிச்சுட்ட...’ மனத்துக்குள் நினைத்தவனாய் மளுக்கென்று அவன் போதையை உள்ளுக்குத் தள்ள,

    ராகேஷ் தன் கையிலிருந்த கோப்பைத் திரவத்தை அவ்வப்போது ருசித்தபடி பாரை சுற்றி நோட்டம் விட்டான்.

    கண்ணாடித் தடுப்பின் மற்றொரு பிரிவில் இளம்பெண்கள் உயர்ரக மதுக்கோப்பைகளுடன் ஜாலியாய் அரட்டை அடித்தபடி...!

    மொத்த சமூகமும் குட்டிச்சுவரா போயிடுச்சு.

    குட்டிச்சுவரா போயிடுச்சு... என் மனசு மாதிரி...! கொஞ்சமாக போதை ஏறிய கிளுகிளுப்பில் சம்பத்தும் உரக்கச் சொல்லிவிட்டான்.

    வியப்பில் புருவங்களை உயர்த்தினான் ராகேஷ். இன்னைக்கு ஆளே ஒரு மார்க்கமா இருக்கற... என்ன விஷயம்?

    பர்ணா...! ஆபர்ணா...! பர்ணிகா...! அவளை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா கூப்பிடற மாதிரி ஒரு பேர் சொல்லுடா.

    இவ்வளவு நேரம் அவளைத்தான் நினைச்சயா? ஸ்வீட்நேம் தேடுற அளவுக்கு வந்தாச்சா? உன் அப்பாவைப் பற்றித் தெரிஞ்சும் உனக்கு இது தேவையா சம்பத்?

    ஏன்... அப்பாவுக்கு என்ன?

    குரல் குழறியது. சௌபர்ணிகாவின் ‘ஞே’ விழிகள் அவன் கண்முன்னே வந்து கண்ணாமூச்சி ஆடின.

    ஐ வுட் லவ் டு ஸீ தட் ப்ரெட்டி முட்டக்கண்ணி ஐயிஸ் ஒன்ஸ் அகெயின். உல்லாசமாய் சிரித்துச் சொன்னான் சம்பத்.

    ஒரிஜனல் சரக்கு போல...! உள்ளே இறங்குனதும் குப்புன்னு ஏறிடுச்சு. வா... போகலாம். நண்பனைக் கைத்தாங்கலாய் அழைத்துக்கொண்டு காரை நோக்கி நடந்தான் ராகேஷ்.

    காலியாக இருந்த தெருவில் கார் மெல்ல நகரத் தொடங்கியது.

    மாட்டுவண்டியிலா போறோம்? சீக்கிரம் போ மேன்...

    இப்படியே உன்னைக் கொண்டுபோய் விட்டா, அந்த சௌபர்ணிகா பற்றி உன் அப்பா முன்னால உளறுனாலும் உளறுவே...! பேசாம என் வீட்டுக்கு வந்துடு. அம்மாவும், அப்பாவும் ஊர்ல இல்ல. நீ என்ன உளறுனாலும் அங்கே ஏன்னு கேட்க ஆளில்ல.

    நண்பன் சொன்னது புரிந்ததுபோல் தலையை ஆட்டினான் சம்பத். கார் வேகமெடுக்கத் தொடங்கியது.

    மறுநாள் காலை...!

    சம்பத்... சம்பத்...

    முதுகில் யாரோ தட்டினார்கள். சின்ன முனகலுடன் புரண்டு படுத்தான். தலையணை அவன் கைகளுக்குள் கசங்கியது.

    பொண்டாட்டியைக் கட்டிப்பிடிச்சுத் தூங்குற மாதிரி தூங்கறான் ராஸ்கல்...! டேய்... வீட்டுல இருந்து ஃபோன்...! ஏன் நைட் வீட்டுக்கு வரலேன்னு அம்மா கேட்கறாங்க.

    அம்மா என்ற வார்த்தை காதில் விழுந்ததும், ராகேஷிடம் இருந்த அலைபேசியை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டான்.

    ம்மா... சாரிம்மா. இங்கே நைட் முழுக்க புது பிசினஸ் பற்றி நானும் இவனும் டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம். அப்படியே இங்கேயே தூங்கற மாதிரி ஆயிடுச்சு.

    இருக்கற பிசினஸை ஒழுங்கா பார்த்துட்டாலே போதும். இன்னைக்கு தாரிகாவும், அவளோட ஃபேமிலியும் டெக்சாஸ்ல இருந்து வர்றாங்க. அப்பா உன்னைத்தான் ஏர்போர்ட் அனுப்பணும்’ன்னு நினைச்சார். நீ வீட்டுக்கே வரலேன்னதும் கோபமாயிட்டார். அவரே வண்டி எடுத்துட்டு ஏர்போர்ட் போயிருக்கார் சம்பத். அவர் திரும்பி வர்றதுக்குள்ள வந்துடு.

    ம்மா... அவரைப் பார்த்தாலே ஏன் இப்படிப் பேயைக் கண்ட மாதிரி பயப்படுறீங்க? எல்லாம் நீங்க அவரைப் பற்றி உருவாக்கி வெச்சிருக்கற இமேஜ். எப்ப பார்த்தாலும் கோபம். எதுக்கெடுத்தாலும் கோபம்...!

    சரிடா... எனக்கு அட்வைஸ் பண்றதை விட்டுட்டு நீ சீக்கிரம் வீட்டுக்கு வா.

    அலைபேசி அணைக்கப்பட, கலைந்திருந்த தலையை மேலும் கலைத்துவிட்டுக் கொண்டு மீண்டும் தலையணைகளுக்கு நடுவே சரிந்தான்.

    கெட்டப் மேன்...! அம்மா சொன்னது காதுல விழல?

    நண்பனை உசுப்பினான் ராகேஷ். ‘ப்ச்’ கொட்டி முகத்தைத் திருப்பிக் கொண்டான் சம்பத்.

    போகவே பிடிக்கலடா...! அதென்ன வீடா அல்லது டூரிஸ்ட் ரிசார்டா? மூணு மாசத்துக்கு முன்னாடி ஆஸ்திரேலியா கெஸ்ட். இந்த மாசம் திடீர்னு டெக்ஸாஸ் கெஸ்ட்...! அடுத்த மாசம் ஹாங்காங்ல இருந்து வருவாங்க போல...! எப்பவும் வீட்டுக்குள்ள சந்தைக்கடை மாதிரி இரைச்சல். பேசாம ஜெர்மனியிலேயே இருந்திருக்கலாம். ஏன் இங்கே வந்தோம்’ன்னு இருக்கு...!

    சரி... சரி... ரொம்ப அலுத்துக்காதே. இந்த டெக்ஸாஸ் ஆன்ட்டிக்கு யாராவது பார்பி-டால் பொண்ணு இருக்கலாம்.

    சுத்தப்போர்...! வெளிநாட்டுச் சரக்கே வேணாம் மச்சி. நம்ம ஆபர்ணிகா மாதிரி ஒரு ஃபிகர் உள்ளூர்ல செட்டானா போதும்.

    நேத்துல இருந்து அவங்க பேரையே சொல்லிட்டு இருக்கே. ஆர் யூ சீரியஸ்? தூக்கத்துல கூட என்னவோ உளறுன மாதிரி ஞாபகம்.

    டாம் சீரியஸ்...! என்னவோ தெரியல... பச்சக்குன்னு மனசுல ஒட்டிக்கிட்டா. ஆனா, ப்ரொபோஸ் பண்ண விதத்துல எங்கேயோ சொதப்பிட்டேன். முழிச்சா பாரு ஒரு முழி. காஷ்...! தட் வாஸ் ஸோ கிரேசி மேன்.

    சம்பத் ரெஸ்ட்ரூமுக்குள் புகுந்துகொள்ள, யோசனையுடன் பால்கனியில் வந்து நின்றான் ராகேஷ்.

    சம்பத் கனவுகளில் மிதக்கிறான். தவறில்லை.

    Enjoying the preview?
    Page 1 of 1