Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyire... Uyire... Urugathey...
Uyire... Uyire... Urugathey...
Uyire... Uyire... Urugathey...
Ebook263 pages2 hours

Uyire... Uyire... Urugathey...

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

“என்னடா... ஒரே ரொமான்சி.... ரொமான்சியா கழுவி ஊத்திட்டு இருக்கே. சிஸ்டருக்கு இன்னைக்கு பர்த்டேவா...” என்றான் வசந்தன்.

“ஆமாம்... உன்மேல ஒரே கோவமா இருக்கா... ஒரு சகோதரனா நீ அவ பிறந்தநாளை மறந்துட்டயாம்.”

“ஹ...ஹ... நானாவது மறக்கறதாவது? நான் கொடுக்க வேண்டிய கிஃப்டை மீனு கொண்டு போய் கொடுப்பா... எப்படி அசத்தப்போறேன் பாரு.”

அவன் சொல்லி முடிக்கவும் மீனு அலைபேசியில் அழைக்கவும் சரியாக இருந்தது.

“தின்க் ஆப் தி டெவில் அண்ட் ஹியர் இட் கால்ஸ்... நம்பரைப் பார்த்தாலே கண்ணைக் கட்டுதே....” முனகிக்கொண்டே அலைபேசியை காதுக்குக் கொடுத்தான் வசந்தன்.

“நீங்க ஏதும் ஸ்டியரிங் பிடிக்கறேன்னு உட்காரலயே?. புது வண்டிங்க... பாவம்... ஷ்யாமளன் லோன் போட்டு வாங்கியிருக்காரு... போனா போகுதுன்னு விட்டுடுங்க. இன்னும் பைக்கே உங்களுக்கு சரியா ஓட்டத் தெரியல. விஷப்பரிட்சையெல்லாம் வேண்டாம். வழியில நல்ல ஹோட்டலா பார்த்துச் சாப்பிடுங்க. காசை மிச்சப்படுத்தறேன்னு கண்ட இடத்துல தின்னா வயித்துவலிதான் வரும். பாண்டிச்சேரி தானேன்னு உங்க தீர்த்தத்தைத் தேடிப் போகாதீங்க. பெங்களூர் போயிட்டு வந்து என்கிட்ட வாங்கினது ஞாபகம் இருக்கா?”

“து….ரோ…..கி.....” என்று ஷ்யாமளனைத் திரும்பிப் பார்த்து முறைத்தான் வசந்தன். மீனுவின் அறிவுரை தொடர்ந்துகொண்டே இருந்தது.

“என்ன கொடுமை சரவணா இது?” அழாத குறையாக தலையில் கைவைத்துக் கொண்ட நண்பனின் நிலைகண்டு பொங்கிச் சிரித்தான் ஷ்யாமளன்.

மற்றவை கதையில்...

Languageதமிழ்
Release dateApr 14, 2021
ISBN6580134506872
Uyire... Uyire... Urugathey...

Read more from Hansika Suga

Related authors

Related to Uyire... Uyire... Urugathey...

Related ebooks

Reviews for Uyire... Uyire... Urugathey...

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyire... Uyire... Urugathey... - Hansika Suga

    https://www.pustaka.co.in

    உயிரே... உயிரே... உருகாதே...

    Uyire... Uyire... Urugathey...

    Author:

    ஹன்சிக சுகா

    Hansika Suga

    For more books

    https://www.pustaka.co.in/home/author/hansika-suga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம்-1

    அத்தியாயம்-2

    அத்தியாயம்-3

    அத்தியாயம்-4

    அத்தியாயம்-5

    அத்தியாயம்-6

    அத்தியாயம்-7

    அத்தியாயம்-8

    அத்தியாயம்-9

    அத்தியாயம்-10

    அத்தியாயம்-11

    அத்தியாயம்-12

    அத்தியாயம்–13

    அத்தியாயம்–14

    அத்தியாயம்–15

    அத்தியாயம்–16

    அத்தியாயம்-17

    அத்தியாயம்-18

    அத்தியாயம்-19

    அத்தியாயம்-20

    அத்தியாயம்-21

    அத்தியாயம்-22

    அத்தியாயம்-23

    அத்தியாயம்-24

    அத்தியாயம்-1

    தலைநகரின் ஏதோ ஒரு கோடியில் அமைந்திருந்த அந்தப் பத்திரிகை அலுவலகத்தின் மூடிய கதவுக்குப் பின்னால் இரண்டு குரல்கள் மாறி மாறி ஒலித்துக் கொண்டிருந்தன. குரல் டெசிபெல்களின் ஏற்ற இறக்கத்துக்குத் தகுந்தபடி, பேசிக் கொண்டிருந்தவர்களின் முகபாவங்களும் அடிக்கடி மாறிக் கொண்டிருந்தன.

    இந்த ஆர்டிகிள் வேண்டாம்-ன்னு சொன்னேனே...

    எனக்கு வேணும்.... நைட் முழுக்க கொட்டக்கொட்ட கண்முழிச்சு எழுதியிருக்கேன். வேண்டாம்-ன்னு சொன்னா என்ன அர்த்தம்?

    எத்தனை முறை கேட்டாலும் ஒரே ஒரு அர்த்தம் தான். இது என்னுடைய அப்பா பாடுபட்டு வளர்த்த தொழில். எங்க மோதணும்... எங்க மோதக்கூடாதுன்னு எனக்குத் தெரியும். இது பப்ளிஷ் ஆனா அவங்க நம்ம வேருக்கே தீ வைக்கற அளவுக்கு கோபப்படுவாங்க. எந்த நஷ்டத்தையும் தாங்கறதுக்கு நான் தயாரா இல்ல. இதை நான் அனுமதிக்க முடியாது.

    உங்க அனுமதி எனக்கெதுக்கு? நானும் இந்தப் பத்திரிகை ஆபீசுல ஒரு பார்ட்னர். என்ன செய்யணும் செய்யக்கூடாது-ன்னு முடிவெடுக்க எனக்கும் ரைட்ஸ் இருக்கு.

    இல்லேன்னு சொல்லல...! உன்னுடைய முடிவுகள் நம்ம பத்திரிகைத் தொழிலை ஆக்கபூர்வமான வழியில கொண்டு போகணுமே ஒழிய, ஆபத்து தேடித் தர்றதா இருக்கக்கூடாது. அவங்க சென்ட்ரல்ல இருக்கற பெரிய புள்ளிகளுக்கு வேண்டியவங்க. தொட்டா ஷாக் அடிக்கும்-ன்னு தெரிஞ்சும் அவங்களைச் சீண்டிப் பார்க்க நான் தயாரா இல்லை.

    பயந்தா எதுக்காக பத்திரிகைத் தொழிலுக்கு வரணுமாம்?

    இது பயமில்லை. கஷ்டப்பட்டு உருவாக்குன ஒரு தொழிலைச் சேதாரமில்லாம காப்பாற்றிக் கொள்ளும் உஷார்த்தனம். இந்த அக்கிரமங்களை அவங்கதான் செய்தாங்கன்னு பகிரங்கமா சொல்ல உன்கிட்ட என்ன ஆதாரமிருக்கு? எனி ரெகார்ட்ஸ்? வெறும் அனுமானத்தின் அடிப்படையில் எதையாவது கிறுக்கி வெச்சா நாளைக்கு கேஸ் நம்ம பக்கமே திரும்பும். அவங்க பேரைக் கெடுக்கறோம்-ன்னு அவதூறு வழக்குப் போடுவாங்க. ஆளுங்களை விட்டு நம்ம ஆபீசை அடிச்சு நொறுக்கலாம். இன்னும் எது வேணாலும் நடக்கலாம். இன்க்ளூடிங் அரெஸ்ட்.... புரியுதா? கோபமாகப் பேசியவன் குரலை சற்றுத் தாழ்த்திக் கொண்டான்.

    லுக் லீலா..! அவங்களைச் சமாளிக்கற அளவுக்கு நம்மகிட்ட பணபலம், அதிகாரபலம் எதுவும் கொடிகட்டிப் பறக்கல. தட்டுத்தடுமாறி இப்பதான் மக்கள் மத்தியில நல்லபேர் எடுத்துட்டு இருக்கோம். இன்னும் போகவேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கு. மைண்ட் யூ..

    மிஸ்டர் ஷாம்..! சில சமயம் அனுமானங்கள் கூட பல உண்மைகளை வெளிய கொண்டு வரும். எல்லாமே தகுந்த ஆதாரம் கிடைச்ச பிறகுதான் வெளிச்சத்துக்கு வரணும்-ன்னு சொன்னா, அதுக்குள்ள குற்றங்களோட தீவிரம் பெருகி, அசைக்கமுடியாத அளவுக்கு வேர்பிடிச்சிடும். நானும் ஜர்னலிசம்....

    போதும் உன் ஜர்னலிசம் புராணம். படிக்கறது வேற... அனுபவம் வேற..! வார்த்தைக்கு வார்த்தை என்னை எதிர்த்துப் பேசத் தெரியுது. ஹூம்... அன்னைக்கே அப்பாகிட்ட சொன்னேன்... மொத்த நிர்வாகத்தையும் நாமளே கையில எடுத்துக்கலாம்.... நமச்சிவாயம் சார் குடும்பத்துக்கு என்ன செட்டில் பண்ணணுமோ பண்ணிடுங்கன்னு....! பால்யசிநேகிதன்..டா.... பத்திரிகைத் தொழிலை உசுரா நினைச்சவன்..டா... அவன் இல்லேன்னா நான் இல்லே...... அவன் இடத்துல அவன் வாரிசு இருக்கணும்-ன்னு என்னன்னவோ கதையளந்து, உன்னை வலுக்கட்டாயமா உள்ள சேர்த்துக்கிட்டாரு. இப்ப நான்தானே உன்னோட மல்லுக்கட்டி நிக்க வேண்டியதா இருக்கு. ஒரு தடவை சொன்னா புரிஞ்சிக்கற பொண்ணா இருக்கணும். வாய் இருக்கற அளவுக்கு மூளை....

    பேசிக்கொண்டே சென்றவன் எல்லை தாண்டிவிட்டோம் என்று உணர, சடாரென்று கதவைத் திறந்து, படாரென்று சத்தமாக மூடி தன் இருக்கை நோக்கி நடந்தாள் லீலா.

    சரியான சந்திரமுகி...! புஸ்ஸு புஸ்ஸுன்னு மூக்குக்கு மேல கோவம்தான் வருது. ஏன் சொல்றோம்ன்னு யோசிக்குதா பாரு. இதுல ஜர்னலிசம் கோர்ஸ் முடிச்சிட்டோம்-ன்னு பெருமை வேற...

    உரக்கச் சொல்லிவிட்டு நிமிர்ந்தவனுக்கு கண்கள் ஐஸ் அண்ட் ப்ரீஸ் ஆடின. இவள் இன்னும் போ..க...வில்...லை.....யா......ஆ...?

    நீ இன்னும் போகலயா?

    மனத்தில் எழுந்த கேள்வி தொண்டை வழியே துள்ளிக் குதித்து விழுந்தது. மறந்து வைத்துவிட்டுச் சென்ற தன் சிடியை எடுத்துக்கொண்டு, கதவை மீண்டும் ஓங்கி அறைந்துவிட்டுச் சென்றாள் லீலா.

    எல்லாத்தையும் கேட்டிருப்பாளோ? ஹூம்.... இந்தக் கதவுக்கு இன்னும் எத்தனை நாள் ஆயுசோ? கதவுக்கு ஆயுசு குறைஞ்சாலும் பரவாயில்லை. இவளைக் கட்டிக்கப் போறவனுக்கு ஆயுசு குறையாம இருந்தா சரி.

    ஷாம் முணுமுணுப்பாய் சொல்லிக் கொண்டிருக்கையில் மீண்டும் கதவு திறக்கப்பட, ஐயோ..... மறுபடியுமா? என்ற மனத்தின் அலறலோடு திடுக்கிட்டுப் பார்த்தான்.

    ஏண்டா பேயைக் கண்ட மாதிரி இப்படி முழிக்கறே? நான் வசந்தன்...

    பேயும், நீயும் ஒண்ணுதான். வா... வந்து உட்காரு.

    கண்ணாடிக் குடுவையிலிருந்த தண்ணீர் வசந்தனின் வாய்க்குள் புகலிடம் தேடியது.

    வெய்யில் வாட்டுது மச்சான். எப்பவும் இருக்கறத விட இந்த வருஷம் செமத்தியா இருக்கு.

    ம்ம்... வெதர் ரிப்போர்ட் அப்புறம் படிக்கலாம். நான் விசாரிக்கச் சொன்னது என்ன ஆச்சு?

    என்னால முடிஞ்சவரைக்கும் விசாரிச்சு வெச்சிருக்கேன். அந்த ஐந்நூறு ஏக்கர் நிலமும் கோவிலுக்குச் சொந்தமானதுன்னு சொல்றாங்க. ஆரம்பகாலக் குத்தகையில அங்க விவசாயம் நடந்திருக்கு. அப்புறம் அங்கேயே குடிசை வீடுங்க... ஓட்டு வீடுங்கன்னு கட்ட ஆரம்பிச்சு இருக்காங்க. இப்ப சமீபத்துல அந்தப் பஞ்சாயத்து யூனியன் பிரசிடன்டு அங்க இருக்கறவங்களை மிரட்டி எழுதி வாங்க ஆரம்பிச்சு இருக்கறதா கேள்விப்பட்டேன். எக்கச்சக்கமா பணம் கைமாறியிருக்கு. எல்லாமே போலி ஆவணங்களா இருக்கலாம். அந்த யூனியன் பிரசிடென்டுக்கு, பலத்த அரசியல் பின்புலம் இருக்குமோன்னு பயப்படறாங்க.

    கையிலிருந்த பென்சிலை இரண்டு விரல்களுக்கு நடுவில் உருட்டிக்கொண்டே சிந்தனையில் ஆழ்ந்தான் ஷாம்.

    அரசியல் பின்புலம் இருக்குன்னு சொல்றே..! உள்குத்து இல்லாமலா இருக்கப் போகுது? கோவில் சொத்து களவு போகுதுன்னு ஆதாரத்தோட நிரூபிக்க முடிஞ்சா ஒரு நல்ல காரியம் செய்த மாதிரி இருக்கும். நாமதான் இந்தக் களவாடலைக் கண்டுபிடிச்சுக் கொடுத்தோம்-ன்னு பத்திரிகையோட ரேட்டிங்கும் தாறுமாறா ஏறிடும்.. வசந்த்.

    உன் தொழிலும் கிட்டத்தட்ட டிடெக்டிவ் ஏஜென்சி மாதிரிதான் இருக்கு ஷாம். ஆனால், எதுக்குடா இந்த வீணான தலைவலி? எந்த நடிகை எந்த நடிகனோட ஷூட்டிங் ஸ்பாட்ல ஜொள்ளுவிட்டா.... கிரிக்கெட்ல எவனெல்லாம் சூதாட்டம் பண்ணினான்.... மதுரையில் வைகை அணை நிரம்பி வழிந்ததுன்னு என்னத்தையாவது போட்டுப் பக்கத்தை நிரப்பிட்டுப் போகலாம் இல்ல?

    ஒரு சுவாரசியமும் இல்லாம சப்பையா எழுதுனா, எத்தனை நாளைக்கு வண்டி ஓடும் வசந்த்? நொண்டியடிச்ச மாடு கணக்கா திடீர்-ன்னு மண்டி போட்டு நின்னுடும். அப்புறம் ட்ர்ர்...ட்ர்ர்.... குச்சி எடுத்துக் குத்துனாலும்... நொண்டிமாடு... சண்டிமாடு தான். நம்ம மாதிரியே ரொம்ப சாதாரணமா ஓடிகிட்டு இருந்ததுதான் அந்த வள்ளிமைந்தனோட பத்திரிகை.

    திடீர்-ன்னு ஒருநாள் அந்த காஸ்மெடிக்ஸ் கம்பெனி பற்றி கவர்ஸ்டோரி போட்டு, இன்னைக்கு எங்கயோ போயிட்டான். மாட்டணும்டா.... நமக்கும் அந்த மாதிரி நச்சுன்னு பத்திக்கற நியூஸா ஒண்ணு மாட்டணும். அப்புறம் பாரு...! சரி... என்ன சாப்பிடறே?

    சிக்கன் பிரியாணியும், மட்டன் குஸ்காவும்...

    டேய்....

    தெரியுது இல்ல. எப்பவும் போல ஏதாவது ஒரு கலர் ஆர்டர் பண்ணு. பச்சைக் கலரு ஜிங்குச்சா... மஞ்சக் கலரு ஜிங்குச்சான்னு குடிச்சிட்டுப் போகலாம். அப்புறம் அந்த.....

    ஷ்.... ஷ்...

    ஷாமின் ஷ் எச்சரிக்கையில் வசந்தனின் வாய் கம் போட்டபடி கப்பென்று அடைத்துக் கொண்டது. பரபரவென்று உள்ளே நுழைந்தாள் லீலா.

    சிட்டியில இருக்கற மெயின் ஏரியாவுல ஒரு தீவிரவாதியை அரெஸ்ட் பண்ணி இருக்காங்களாம். கிலோ கணக்கா ரெட் பாஸ்பரஸ் பறிமுதல் பண்ணியிருக்காங்க. நெட்வொர்க்கா கூட இருக்கலாம். கவரேஜ் ரெடி பண்ணியிருக்கேன். ஓகேன்னா ப்ரின்டிங்க்கு அனுப்பிடுங்க.

    கையிலிருந்த தாள்களை அவன் மேஜைமீது வைத்துவிட்டு, லொட்டென்று அதன் மீது ஒரு டேபிள் வெயிட்டையும் வைத்தாள் லீலா. அவள் கோபமாக வைத்த விதத்தை ஆச்சரியமாகப் பார்த்தான் வசந்த்.

    ஹலோ...லீலா மேம்... எப்படியிருக்கீங்க?

    அடுத்த வாரம் அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கலாம்-ன்னு இருக்கேன். அவசியம் குடும்பத்தோட வந்து வாழ்த்திட்டுப் போங்க. மே...மாம் மேம். சும்மா லீலான்னு கூப்பிட்டாலே போதும். நான் உங்களை விட வயசுல சின்னவதான்.

    ஏன் இப்படிப் பட்டாசு வெடிக்கிறது என்று புரியாமல் பார்த்தான் வசந்தன். என்ன இருந்தாலும் நீங்க இந்த அலுவலகத்தோட பார்ட்னர். உங்களை எப்படி நான் பேர்சொல்லிக் கூப்பிடமுடியும்?

    ஏன்? அவரை ஷாம்-ன்னு தானே கூப்பிடறீங்க. சார், மோர்ன்னு அடைமொழி வைக்கலியே? பார்ட்னராம் பார்ட்னர். ஒப்புக்கு சொல்லிக்க வேண்டியதுதான். நான் வரேன் வசந்த் சார்.

    நீங்க மட்டும் சார்-ன்னு....

    ஐயோ போதுமே..! ஏற்கனவே கொதிச்சுப் போய் இருக்கேன். நீங்க வேற கடுப்பைக் கிளப்பாதீங்க.

    அவளது அனல் சிந்தும் பார்வை ஷாமை வெறிக்க, அவனோ நெருப்புக்கோழியாய் காகிதங்களுக்குள் தலைபுதைக்க, கதவு மீண்டும் டமாரென்று அடி வாங்கியது.

    ஷாம்..! என்னடா இது? இப்பதானடா பார்ட்னரா ஜாயின் பண்ணினா? அதுக்குள்ள உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனையா? மேடம் இந்த அளவுக்கு சூடாகற மாதிரி என்னடா பண்ணித் தொலைச்சே?

    காலையில ஒரு ஆர்டிகிள் கொண்டு வந்து உடனே பிரின்டிங் செய்யக் கொடுங்கன்னா. நான் முடியாதுன்னு ஸ்ட்ரிக்டா சொன்னேன். அதுக்குத்தான் இந்தக் கோபம். நீயே படிச்சுப் பாரு. நான் ஏன் வேண்டாம்-ன்னு சொன்னேன்னு புரியும்.

    சன்னமான புருவச்சுளிப்புடன் ஷாம் கொடுத்த காகிதக்கட்டினை வாங்கிப் படிக்க ஆரம்பித்தான் வசந்த்.

    நேரம் செல்லச் செல்ல அவன் முகம் பலவிதமான பாவங்களைக் காட்டியது. தன் கணினியை உபயோகப்படுத்திக் கொண்டிருந்த ஷாம், அவ்வப்போது வசந்தனின் முக மாற்றங்களை மனத்தில் பதித்துக் கொள்ளவும் தவறவில்லை.

    மார்வலஸ்... செம போல்டா எழுதி இருக்காங்க. இதை ஏன்டா வேண்டாம்-ன்னு சொன்னே?

    மார்வலஸ்தான்..! எனக்கும் அவ தைரியம் பிடிச்சிருக்கு. ஆனா சாட்சி? இவ எழுதி இருக்கறது எல்லாம் உண்மைதான்னு நிரூபிக்க ஆதாரம் கொடுக்கச் சொல்லு. சம்பந்தப்பட்டவன் கேட்பான் இல்ல. மக்கள் கேட்பாங்க இல்ல. என்ன பதில் சொல்லுவே? ஜர்னலிசம் படிச்ச பொண்ணுக்கு இது கூடவா தெரியாது. வெறும் வதந்திகள்-ன்னு ஊத்தி மூடிடுவானுங்க. வதந்திகளைப் பரப்பும் பத்திரிகைன்னு நமக்குத்தான் கெட்டப் பேர்.

    அதுவும் சரிதான். இதுக்காக அவளை ரொம்பவும் திட்டுனியோ? பாவம்டா... இப்பதான என்டர் ஆகியிருக்கா...

    திட்டவும் இல்ல... ஒண்ணுமில்ல. வெறுமனே வேண்டாம்-ன்னு சொன்னதுக்குத் தான் இந்தக் கோபம். நானும் ஈக்வல் பார்ட்னர்தானே? எனக்கு ரைட்ஸ் இல்லையான்னு பேசிட்டுப் போனா..! அந்த கோவில் நிலம் மேட்டர் எதுவும் அவ காதுலபடற மாதிரி பேசி வெச்சிடாதே வசந்த். ஆர்வக்கோளாறுல அதைப்பற்றியும் அவசரமா எதையாவது கிறுக்கி வெச்சிடுவா. இன்னைக்கே எழுதி நாளைக்கே பெருசா எதையோ சாதிக்கப் போறதா அவளுக்கு நினைப்பு. எதைச் சொன்னாலும் எதிர்த்துப் பேசறாடா.

    ஹ...ஹா... இந்த ஆபீசுல எல்லோரும் உன்னைப் பார்த்துப் பயப்படுவாங்க. உன்னை டிஸ்டர்ப் பண்ணவும் ஒருத்தி வந்திருக்கான்னு நினைக்கறப்ப சந்தோஷமா இருக்குடா மச்சான்.

    ஏன்டா சொல்லமாட்டே? போகட்டும்.. ஸ்ரீ குட்டி எப்படியிருக்கா? இந்த வருஷம் ப்ளே ஸ்கூல் முடிஞ்சது இல்ல. அடுத்து எங்க சேர்க்கலாம்-ன்னு இருக்கே?

    அதையேன்டா கேக்கறே.... நாலு பெரிய ஸ்கூல்ல அப்ளிகேஷன் போட்டு வெச்சிருக்கேன். இன்டர்வ்யூ கார்ட் வந்ததும் மண்ணெண்ணெய் க்யூல நிக்கற மாதிரி நிக்க வேண்டியதுதான். ஏ.டி.எம் மெஷினைக் கொள்ளையடிச்சாக் கூட ஸ்கூல்ஃபீஸ் கட்ட பணம் பத்தாது. வீட்டைக் கட்டிப் பார்.... கல்யாணத்தைப் பண்ணிப் பார்-ன்னு சொன்னதுக்குப் பதிலா இ.எம்.ஐ கட்டிப்பார்..... ஸ்கூல்ஃபீஸ் கட்டிப்பாருன்னு சொல்லியிருந்தா நமக்கெல்லாம் நல்லா புரிஞ்சிருக்குமோ என்னவோ? உனக்கென்னடா மச்சான்... நீ இன்னும் ஃப்ரீபர்ட். நம்மள குடும்ப வாழ்க்கையில சிக்கவுட்டு, ட..ர்...ர்... ஆக்கிட்டாங்க. சரி.... நான் கிளம்பறேன்டா.

    அட...உட்காருடா. உன் பொண்டாட்டி மீனு அவ அம்மா வீட்டுக்குப் போயிருக்காளே..! அவசரமா கிளம்பிப் போய் என்ன பண்ணப் போறே?

    அம்மா வீட்டுக்குப் போயிருக்கான்னு பேரு. ஒரு நாளைக்கு நாலு போன் மச்சான். பல்லு தேச்சிங்களான்னு ஆரம்பிச்சு, ராத்திரி தூங்கும்போது கொல்லைப்புறக் கதவை அடைச்சீங்களான்னு கேக்கறவரைக்கும் நை...நை...ன்னு ஏதாவது ஒண்ணு அவ மண்டைய அரிச்சிக்கிட்டே இருக்கும்போல....! பொண்டாட்டி ஊருக்குப் போனாலும், அவ குரல் மட்டும், மண்டைக்குள்ள மாவாட்டிகிட்டே இருக்கு மச்சான்.

    ஹ..ஹா..! உன்மேல இருக்கற அக்கறையால தானே கேக்கறா? இதை ஏன் சலிப்பா எடுத்துக்கறே? வர்ற சனிக்கிழமை பெங்களூர்ல சதர்ன் ஸ்டேட்ஸ் ப்ரெஸ் கான்பரன்ஸ்...! வர்றதுன்னா சொல்லு. உனக்கும் சேர்த்து டிக்கட் போடறேன். பொழுது போனா மாதிரியும் இருக்கும். உருப்படியா நாலு விஷயம் கத்துக்கிட்ட மாதிரியும் இருக்கும்.

    கான்பரன்ஸுக்கு நீ மட்டுமா போறே?

    இல்லையே.... ஊர்ல இருந்து அப்பத்தா, சித்தி, சித்தப்பா எல்லோரையும் வரவழைச்சு கட்டுச்சாதம் கட்டிக்கிட்டுப் போகலாம்-ன்னு இருக்கேன். எவன்டா இவன்?

    அதில்லடா.... லீலா....? அவளுக்கும் ப்ரஸ் கான்பரன்ஸ் வர உரிமை இருக்குதானே?

    அவ சும்மா இருந்தாலும் நீயே கிளப்பிவிடுவே போல இருக்கு. நான் அவகிட்ட இதைப் பற்றிப் பேசவே இல்ல. இப்பதான வந்திருக்கா. உடனே வெளியூர் ப்ரோக்ராம் அதுஇதுன்னு கமிட் ஆகாட்டி என்ன? இந்த ஃபீல்டுல இருக்கற நெளிவுசுளிவு எல்லாம் பழகட்டும். அங்கே வந்து எடுத்தோம் கவுத்தோம்-ன்னு எதையாவது பேசி வெச்சான்னா வம்பாப் போயிடும்.

    ஆனாலும் நீ அவளை அளவுக்கு அதிகமா அடக்கி வைக்கறே ஷாம். ஜர்னலிசம் படிச்சவள சும்மா கையைக் கட்டி வேடிக்கைப் பாருன்னா நடக்குமா? அவ இஷ்டத்துக்கு எழுதவிட்டா நம்ம பத்திரிகை சர்குலேஷன்ல ஒரு பெரிய புரட்சியே நடந்தாலும் ஆச்சரியமில்லன்னு தோணுது.

    அப்படி நடந்தா சந்தோஷம்....! ஆனால், யாருக்கும் எந்தச் சேதாரமும் இல்லாம புரட்சி நடக்கணும். இங்க என்னயும், லீலாவையும் தவிர மிச்ச எல்லோரும் குடும்பஸ்தர்கள். ஸ்டாஃப்ஸுக்கு ஒண்ணுன்னா அது அவங்க குடும்பத்தையும் சேர்த்துப் பாதிக்கும். பத்திரிகை அலுவலகம் சூறையாடப்பட்டது.... நிருபர்கள் தாக்கப்பட்டனர்"-ன்னு இரத்த வெள்ளத்துல மண்டை உடைஞ்ச கதையெல்லாம் நாமளே வெளியிட்டு இருக்கோம். அந்தக் கதி நமக்கும் வரக்கூடாது

    Enjoying the preview?
    Page 1 of 1