Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhaladum Manathu
Kaadhaladum Manathu
Kaadhaladum Manathu
Ebook179 pages1 hour

Kaadhaladum Manathu

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

கல்லூரியில் படிக்கும் கீர்த்தனாவின் சீனியர் தனுஷ், அவள் சற்றும் எதிர்ப் பார்க்காத தருணத்தில் தன் காதலைத் தெரிவிக்கிறான். முறைமாமன் சபா தனக்காகக் காத்திருப்பதாகவும், வீட்டாரை எதிர்த்துக் காதல் திருமணம் செய்ய இயலாது என்றும் கீர்த்தனா மறுமொழி உரைக்கிறாள். இறைவனின் சித்தமோ வேறு! கதைக்குள் பயணிப்போம்.

Languageதமிழ்
Release dateJul 29, 2023
ISBN6580134510067
Kaadhaladum Manathu

Read more from Hansika Suga

Related authors

Related to Kaadhaladum Manathu

Related ebooks

Reviews for Kaadhaladum Manathu

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhaladum Manathu - Hansika Suga

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காதலாடும் மனது

    Kaadhaladum Manathu

    Author:

    ஹன்சிகா சுகா

    Hansiga Suga

    For more books

    https://www.pustaka.co.in/home/author/hansika-suga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 1

    காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்…

    தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு… கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

    ***

    இன்னைக்கு ரிஹர்சல் போதும்’யா! வில் கன்டின்யூ டுமாரோ. என்ற கீர்த்தனாவின் குரலுக்கு எல்லோரும் சம்மதம் என்று தலையசைத்தார்கள்.

    வழக்கத்தை விட சீக்கிரமே குளோஸ் பண்ணிட்டே. சூயிங்கம்மை மென்றபடி கேட்டான் தனுஷ்.

    ஊர்ல இருந்து அத்தையும், மாமாவும் வந்திருக்காங்க. முக்கியமான விஷயம் பேச காத்திருக்காங்கன்னு அப்பா இப்பதான் ஃபோன்ல சொன்னாரு.

    முக்கியமான விஷயமா? அப்படியென்ன சிதம்பர ரகசியம் இருக்கப் போகுது? உன் அத்தை, மாமாவுக்குன்னு ஒரு ஜகஜாலக் கில்லாடி இருக்கானில்ல. அவன் தூது விட்டிருப்பான்.

    சபா மாமாவைச் சொல்றீங்களா? அவர் தூதுவிட்டா உங்களுக்கேன் காண்டாகுது? சிரித்தாள் கீர்த்தனா.

    நீ புரிஞ்சுதான் சிரிக்கறயா அல்லது புரியாமலே சிரிக்கறயா? புருவங்களை நெறித்தான் தனுஷ்.

    புரியுது. என்று மெல்லிய குரலில் முணுமுணுத்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.

    அவளுடைய ஸ்கூட்டி புறப்பட்டு கண்ணிலிருந்து மறையும் வரை அங்கேயே நின்றிருந்தான் தனுஷ்.

    தனுஷ்...!

    ஹீரோக்களுக்கான ‘அதீத லுக்ஸ்’ எதுவுமின்றி சாதாரணமாக இருப்பவன். நல்ல படிப்பாளி. ஆம்... அந்தக் கல்லூரியில் கோல்டுமெடல் வாங்கிய மாணவர் பட்டியலில் அவன் பெயரும் உண்டு.

    கீர்த்தனா...!

    ஆவரேஜ் ஃபிகர்! ஆவரேஜாகப் படிப்பாள். மிக நன்றாக நடனம் ஆடுவாள். அந்தக் கல்லூரியில் படித்துக்கொண்டே பார்ட்-டைம் நடனக் கோச்சாக இருப்பவள்.

    தனுஷ் முதுகலை முடிக்கும் நிலையில் இருந்தான். கீர்த்தனா இளங்கலை முடிக்கும் நிலையில் இருந்தாள்.

    இருவருக்கும் இடையே எப்போது காதல் அரும்பியது என்று திட்டவட்டமாகச் சொல்லமுடியாது.

    அவளது நடனத்தால் ஈர்க்கப்பட்டு, ஒருநாள் தன் மனத்தில் இருந்ததை அவளிடம் கொட்டிவிட்டான் தனுஷ்.

    விழி பிதுங்கப் பார்த்தாள் கீர்த்தனா.

    நீங்க சீனியர் என்பதைத் தவிர, எனக்கு உங்களைப் பற்றி வேறெதுவும் தெரியாது. நீங்க எதிர்ப்பார்க்கற எந்த எண்ணமும் என்கிட்ட இல்லவே இல்லை.

    இப்ப இல்லேன்னா, இனிமேல் வளர்த்துக்கோ கீர்த்தனா.

    களுக்கென்று சிரித்தாள்.

    நினைச்சவுடனே வளர உங்க முகத்துல இருக்கற தாடியில்ல தனுஷ். அண்ட், எங்க வீட்டுல லவ்மேரேஜ் ஒத்துக்க மாட்டாங்க. முறைமாமன்’னு ஒருத்தன் எனக்காகக் காத்துட்டு இருக்கான். அநேகமா, இந்த இயர் எண்டுல எல்லாம் முடிஞ்சிடும்.

    அவர்களின் அறிமுக உரையாடல் அத்தோடு முடிந்தது.

    நடனம் சொல்லிக் கொடு என்று மீண்டும் அவன் வந்து நின்றபோது அதிர்ந்து பார்த்தாள்.

    நான் இங்கே யாருக்கும் தனிப்பட்ட முறையில கோச் கிடையாது. இப்ப நான் ட்ரெயின் பண்ணுற பேட்ச்… காலேஜ் கல்சுரல்ஸ்’கானது.

    கல்சுரல்’ல சீனியர் ஆடக்கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா? ஐ வான்ட் டு ஜாயின் திஸ் பேட்ச். எனக்கு உன்கிட்ட நடனம் கத்துட்டே ஆகணும்.

    ‘உன்னைக் காதலித்தே தீருவேன்’ என்பது போல், அந்த வம்பன் அவள் கண்களுக்குள் ஊடுருவிச் சொன்னான்.

    வம்பு பண்ண வந்திருக்கற மாதிரியிருக்கு. கல்லூரி நிர்வாகத்து கிட்ட கம்ப்ளெயின்ட் செய்வேன்.

    நானும் செய்வேன். மாணவர்களை செலக்ட் செய்யறதுல பாரபட்சம் பார்க்கறாங்க’ன்னு சொல்லுவேன்.

    இப்ப நான் என்ன செய்யணும்?

    நான் டான்ஸ் பண்ணணும். ஸ்டெப்ஸ் கரெக்டா இருக்கான்னு நீ செக் பண்ணணும்.

    இங்கே ஸ்டூடண்ட்ஸ் யாருமில்லை. ட்ரெயினிங் முடிஞ்சு எல்லோரும் வீட்டுக்குப் போயாச்சு. ஈவன் ஐ நீட் டு கோ. அலுப்புடன் சொன்னாள்.

    போகலாம். ஆஃப்டர் ஃபியூ மினிட்ஸ். வேகமாகச் சென்றவன், அரங்கையே அதிரவைத்த பிளேயரை முடுக்கினான்.

    ஜுங்... ஜுஜுங்... தாளகதிக்கு ஏற்ப அவன் கால்கள் வேகமாய் நயத்துடன் ஆடின.

    ஏற்கனவே நடனம் கற்றிருப்பானோ? இல்லாவிட்டால், இப்படிப் பம்பரமாய் சுழன்று ஆட முடியாதே!

    அவன் நடன அசைவுகளை விழியசையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    இத்தனை நன்றாக நடனக் கலையை அறிந்து வைத்திருப்பவன், அவளிடம் வந்து கற்றுத் தரச் சொல்லிக் கேட்பானேன்?

    அவளிடம் பேசுவதற்கும், பழகுவதற்கும் சந்தர்ப்பம் உருவாக்கிக் கொள்ள நினைக்கிறானா?

    ‘அப்படித்தான்’ என்பதுபோல சிரித்தான் தனுஷ். பிளேயரை நிறுத்திவிட்டு மூச்சுவாங்க அவள்முன் நின்றபோது, அவன் கண்களும் சேர்ந்து சிரித்தன.

    நம்மிடையே ஏதாவது ஒருவிஷயம் பொதுவாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன் கீர்த்தனா. எயிதர் லவ்... ஆர் டான்ஸ்... அல்லது இரண்டும்!

    ஹலோ! டான்ஸ் பற்றி மட்டும் பேசினால் போதும். என்று அவனைப் பார்த்துச் சிரித்தவள், அவன் ஆடிய விதம் அருமை என்று மனதிலிருந்து பாராட்டினாள்.

    லோக்கல் மாஸ்டர் ஒருத்தர்கிட்ட கத்துட்டேன். அவரு இப்ப மும்பை போயிட்டாரு. நடனம் பற்றிய அவர்களின் உரையாடல் தொடர்ந்தது.

    மெல்ல மெல்ல அவளைப் பற்றி அவனும், அவனைப் பற்றி அவளும் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். நட்பு இறுக்கமாகிக் கொண்டே வந்தது.

    கேர்ள்ஸுக்கு இந்த ஸ்டெப் வேண்டாமே கீர்த்தனா! ரொம்ப குனிஞ்சு நிமிர்ந்து பார்க்கவே ஆக்வோர்ட்டா இருக்கு.

    மற்றவர்களுக்கு அவள் கற்றுத் தரும் நடன அசைவுகளில், ஆலோசனை சொல்லும் அளவுக்கு அவனும்...

    உங்க முகத்துக்கு தாடி அழகா இருக்கு. ஆனால், இன்னும் கொஞ்சம் ட்ரிம் செய்தால், இப்ப இருக்கறதை விட, மேலும் அழகா இருக்கும். என்று உரிமையெடுத்துச் சொல்லும் அளவுக்கு அவளும்!

    இதெல்லாம் உரிமையோடு சொல்றவ, நான் எதிர்பார்க்கும் அந்த பதிலையும் சொல்லலாமே! முறைமாமனைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சத்தியப் பிரமாணம் எதுவும் எடுக்கலயே?

    கண்கள் பிரகாசிக்கக் கேட்டான், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவள் தலையசைந்துவிடாதா என்ற நப்பாசையில்!

    நீங்களும், நானும் டான்ஸ் பற்றி நிறைய பேசறதால மட்டுமே, நம்ம ஃபிரெண்ட்ஷிப் இன்னும் ‘லைவ்’ல ஓடுது.

    ‘காதல் ஒப்பந்தம்’ சாத்தியமில்லை என்பதன் மறைமுக விளக்கம்.

    இன்னமும் இந்த ‘மூடுபனிக்காதல்’ முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

    ‘உன்னை ‘ஐ லவ் யூ’ சொல்ல வைக்கிறேன்’ என்ற ராட்சத ஆசையில் அவனும்!

    ‘உன் கனவு பகல் கனவாகவே போகப்போகிறது’ என்ற புன்னகையுடன் அவளும்!

    தங்களுக்குள் நடந்த உரையாடல்களை பெருமூச்சோடு நினைத்தபடி தன் பைக்கில் ஏறினான் தனுஷ்.

    இந்தக் காதல் நிச்சயமாக நிறைவேறும் என்று மனத்துக்குள் பட்சி சொல்கிறது. அந்தப் பைங்கிளியோ அதை வன்மையாக மறுக்கிறது.

    ஒவ்வொரு முறையும், காதலிக்க ‘வா...’ என்று அழைத்தபோது, அவள் முகம் போன போக்கை மனத்துக்குள் இரசித்துச் சிரித்தான்.

    இவன் கலாரசிகனாக இருக்க, கீர்த்தனாவின் எண்ணக்கோலங்களோ கலவையாக இருந்தன.

    அகடமிக் இயர் முடியப்போகிறது என்று தெரிந்துதான் அத்தையும், மாமாவும் புறப்பட்டு வந்திருக்கிறார்களா?

    மேற்படிப்புக்கு அந்த வீட்டில் அனுமதி கிடைக்காது என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.

    கல்லூரிச் சுதந்திரங்கள் சிறகொடியப் போகின்றன என்று நினைத்தாலே ஜுரம் வருகிறது.

    அத்தையின் ராஜாங்கம் அப்படி! வீட்டில் அவர் வைத்ததுதான் சட்டம்! அவர் சொன்னது வேதவாக்கு!

    இத்தனை வருடங்களில் சபா மாமா தன் அன்னையை எதிர்த்துப் பேசி அவள் பார்த்தாள் இல்லை.

    அப்படிப்பட்ட ஒருவனுக்கு அவள் மனைவியாகப் போகிறாள். அப்படிப்பட்ட ஒரு வீட்டுக்குத்தான் அவள் மருமகளாகப் போகிறாள்.

    தன் எதிர்காலத்தைப் பற்றி நினைக்கும்போதே மண்டைவலி தலையைப் பிளந்தது.

    வானம் மப்பும்மந்தாரமுமாய் இருப்பதைப் பொருட்படுத்தாமல், வழியிலிருந்த காபிக் கடையின் முன் வண்டியை நிறுத்தினாள்.

    சூடான திரவம் தொண்டைக்குள் இறங்கிய வேளையில், பாக்கெட்டில் இருந்த லேட்டஸ்ட் மாடல் கைப்பேசி அழைத்தது.

    இந்த அத்தைக்கு ஐந்து நிமிடம் கூடத் தாமதமாகிவிடக்கூடாது. ‘என்ன’ ‘எது’ என்று ஆயிரத்தெட்டு கேள்விகள்.

    ‘என்னதான் உன் தந்தையின் உடன்பிறந்த சகோதரியாக இருந்தாலும், நீ அவர்களைச் சமாளிப்பது மிகப்பெரும் சவாலாக இருக்கப்போகிறது கீர்த்தனா. இப்போதே உன்னைத் தயார்படுத்திக் கொள்.’

    கடுமையாக எச்சரிக்கை செய்தது உள்ளுணர்வு.

    வாடிம்மா! எப்ப செய்த ஃபோனுக்கு இப்பதான் வர வழி தெரிஞ்சதா?

    வீட்டுக்கு வந்தபோது, எதிர்பார்த்த வசனத்துடன் கீர்த்தனாவை வரவேற்றார், அத்தை செண்பகம்.

    கனத்த சரீரம். அவர் உருவத்திற்குப் பொருத்தமாக கையில் கொத்தாகத் தங்க வளையல்கள். கழுத்தை நிறைத்த முகப்பு செயின், மற்ற சங்கிலி வகைகள். நெற்றியை நிறைத்த குங்குமப்பொட்டு. சன்னமாக பார்டரிட்ட பட்டுப்புடவை. கூந்தலில் வாசமலர்.

    பிளாக் அண்ட் வயிட் படங்களில் வரும் அக்மார்க் அத்தையம்மா!

    எப்போதும் இப்படி லட்சுமி கடாட்ச கோலத்தில் இருப்பதில், அத்தைக்குப் பெருமிதம்.

    செண்பகம் என்ற ஸ்ரீதேவியின் அருளினால் மட்டுமே, இன்னும் இந்த வீடு கீர்த்தனாவின் பெற்றோர் வசம் இருக்கிறது.

    இல்லாவிட்டால், எப்போதோ ‘கடன் வசூல் பிரிவு’ அவ்வீட்டை ஜப்தி செய்திருக்கும்.

    தகுந்த நேரத்தில் தன் சகோதரி செய்த உதவிக்காகவே, தன் மகளை செண்பகம் வீட்டுக்கு மருமகளாக, தாரை வார்க்கத் தயாராக இருந்தார் மாமல்லன்.

    செய்த உதவியை நான் என்னைக்கும் சொல்லிக் காட்டுறது இல்ல மல்லா! ஆனாலும், இவளைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு என் மகன் ஒத்தைக் கால்ல நிக்கறான். நான் என்னப்பா செய்யட்டும்?

    சகோதரி செண்பகம் வாஞ்சையுடன் சொன்னபோது, மாமல்லனால் மறுக்க முடியவில்லை.

    தன் மனைவியிடமோ, மகளிடமோ இதுகுறித்து மாமல்லன் ஆலோசனை கேட்கவும் இல்லை.

    அவர் எப்போதுமே அப்படித்தான். தான் சொல்வதற்கு அடுத்தவர் கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பவர்.

    "நான்

    Enjoying the preview?
    Page 1 of 1