Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jagame [Kaadhal] Thanthiram
Jagame [Kaadhal] Thanthiram
Jagame [Kaadhal] Thanthiram
Ebook234 pages2 hours

Jagame [Kaadhal] Thanthiram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆக்லாந்தின் அந்த அழகிய பூங்காவில் அவர்கள் இருவரிடையே கனத்த அமைதி. பூங்காவும் அவர்களைப் போல் அமைதியாகவே காட்சி தந்தது. மீண்டும் சந்திக்க வேண்டும் என்று இருவருமே விரும்பினார்கள். அலைபேசியில் உரையாடி அதற்கான நேரமும் குறித்துக் கொண்டார்கள். ஆனாலும், நேரில் சந்தித்த பிறகு மௌனம் மட்டுமே மொழி.

அவன் ஏதோ சொல்லப் போகிறான் என்று அவள் காத்திருக்க, அவள் ஏதோ சொல்லப் போகிறாள் என்று அவன் காத்திருக்க, என்னதான் நடக்கிறது பார்ப்போமே என்று அங்கிருந்த செடிகளும், பூக்களும் காத்திருக்க, “இப்ப என்ன பண்ணிட்டு இருக்கே? நீயும் உங்கப்பா மாதிரி ஈஸிசேர்ல உட்கார்ந்து, வாழ்க்கையைப் பற்றி யோசிச்சிட்டு இருக்கியா? அல்லது உருப்படியா வேற ஏதாவது செய்யறியா?” என்றான் கதிர், அதிகாரத் தொனியில்.

இதைக் கேட்கவா இவ்வளவு நேரம்? வேறு ஏதோ சொல்லப் போகிறான் என்ற எதிர்ப்பார்ப்பு அவளுக்கு! பொசுக்கென்று சுருங்கியது முகம். “ஒரு ப்ரைவேட் கம்பெனியில நல்ல வேலை. நிறைவான சம்பளம். அவே ஃப்ரம் தி ஹோம் அட்மாஸ்ஃபியர். நீங்க எப்படி பிளாட் எடுத்துத் தங்கியிருந்தீங்களோ, அதே மாதிரி நானும் என்கூட வேலை பார்க்கற இருவரும், குட்டியா ஒரு வில்லா எடுத்துத் தங்கியிருக்கோம். சம் ஹௌ, ஐ ஹேட் ஸ்டேயிங் இன் எ ஹாஸ்டல். நிறைய கட்டுப்பாடுகள்.. விச் ஐ கேனாட் டாலரேட்.”

“ம்ம்.. சுதந்திரமா வாழ நினைக்கறவங்களுக்கு கட்டுப்பாடுகள் பிடிக்காது. உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவனும், உனக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்காமல், சுதந்திரமா வாழவிடணும். அப்படியொரு வாழ்க்கைத் துணை அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இருவரும் சிறந்த புரிதலுடன் பல்லாண்டு காலம் மகிழ்வுடன் வாழுங்கள்.” என்று அவளையே பார்த்துக் கொண்டு கதிர் சொல்ல, கலக்கத்துடன் அவனை ஏறெடுத்துப் பார்த்தாள் ரூபா.

அவனிடம் ஏதோ சொல்லவேண்டும் என்று நாக்கு பரபரத்தது. ஆனாலும், சொல்ல இயலாமல் ரூபாவுக்குள் ஒரு தவிப்பு. எப்போதும் போல் எதையும் பிரதிபலிக்காத அவனது இறுகிய முகம். எவனையோ திருமணம் செய்துகொள்ள எனக்கு வாழ்த்துக்கள் சொல்கிறாயா கதிர்?

அப்படியானால், என்மீது உனக்குப் பழையபடி நாட்டமில்லையா? உன்மீது ‘அது’ இருக்கிறது, ‘இது’ இருக்கிறது என்று நீ சொன்னதெல்லாம், எதுவாகவும் இல்லாமல் போய்விட்டதா? நீ பழைய கதிராக காதலுடன் இருப்பாய் என்று நினைத்தது குற்றமானதே! இதயம் கலங்குவதில் அப்பெண்ணுக்கு அழுகை வந்துவிடுமோ?

இல்லை... அழக்கூடாது. அழுவது பலவீனம். அவன் பழைய கதிராக இருப்பான் என்று எதிர்பார்த்ததும் பலவீனம். “நான் கிளம்பறேன். புது இடம். ரொம்பவும் லேட்டாயிட்டா அக்காவும், மாமாவும் பதறுவாங்க.” திடீரென ஞானோதயம் வந்தது போல் அவசரமாகக் கிளம்பினாள்.

“புது இடம்-ன்னு புரியுது இல்ல. நீ எப்படி இங்கிருந்து தனியாகப் போவே? துணைக்கு நான் வர்றேன்.” என்றான் இறுக்கமான குரலில்.

“வரும்போது தனியாகத்தானே வந்தேன். போகும்போதும் அதே மாதிரிப் போயிடுவேன். இந்த உலகத்துல தனியா வாழப் பழகிக்கறது ஒருவகையில நல்லது.”

“பை..பை..கதிர். நைஸ் மீட்டிங் யூ. நாம மறுபடியும் சந்திக்கப் போறோமான்னு தெரியாது. ஆனாலும், அட்வான்ஸ் விஷஸ். ஃபார் யுவர் ஃபியூச்சர் லைஃப் அண்ட் ஃபார் எவரிதிங்.” பாடம் ஒப்பிப்பது போல் சொல்லிவிட்டு, அங்கிருந்து வேகமாகச் செல்ல முயன்றவளின் ஹைஹீல்ஸ் சதி செய்தது. ஒவ்வொரு முறையும் அவன் முன்னால் தடுமாற வேண்டுமா?

விழ இருந்தவளுக்கு இப்போதும் அவனுடைய கரங்களே அரண்.

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580134507280
Jagame [Kaadhal] Thanthiram

Read more from Hansika Suga

Related authors

Related to Jagame [Kaadhal] Thanthiram

Related ebooks

Reviews for Jagame [Kaadhal] Thanthiram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jagame [Kaadhal] Thanthiram - Hansika Suga

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    ஜகமே [காதல்] தந்திரம்

    Jagame [Kaadhal] Thanthiram

    Author:

    ஹன்சிகா சுகா

    Hansika Suga

    For more books

    https://www.pustaka.co.in/home/author/hansika-suga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    சாம்… டேய் தடியா… எழுந்திரு…

    அசந்து உறங்கிக் கொண்டிருந்தவன் தொடையின் மீது, காலால் செல்லமாக எட்டி உதைத்தான் மணீஷ்.

    ஹூம்… என்று சோம்பேறியாய் புரண்டு படுத்தான் சாம்.

    எப்படா எழுந்திருப்பே? உன் தங்கச்சி கல்யாணம் முடிஞ்சு அவ ஹனிமூன் போன பிறகா? டேய்… செம்மறியாடு… ஆம்னி வண்டி கிளம்பிடுச்சாம். என்று ஷேவிங்-க்ரீம் அப்பியிருந்த முகத்தோடு குரல் கொடுத்தான் கதிர்.

    இவன் எழுந்திருக்க மாட்டான். ஏன்…டா என்னை டைமுக்கு எழுப்பலன்னு அப்புறம் நம்மகிட்ட குஸ்திக்கு வருவான். அவன் சொந்தப்பேர் சொல்லிக் கூப்பிடு. காதுல விழுதான்னு பார்ப்போம். என்றான் கதிர், தன் முகச்சவரத்தைத் தொடர்ந்தபடி.

    சோமசுந்தர வைகுண்ட ராஜா… என்று சத்தமாக அழைத்தான் மணீஷ்.

    எவன்…டா அவன்… என்று வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தான் சாம்.

    சொன்னேன் பார்த்தியா! என்று சிரித்தான் கதிர்.

    பின்ன! சாம்…சாம்…ன்னு எவ்வளவு நேரமா கூப்பிடறோம். எருமையாட்டம் தூங்கறே. கல்யாணத்துக்குப் பதினஞ்சு நாள் முன்னாடியே ஊருக்குப் போகணும்’னு சொன்னது மறந்துடுச்சா? ஆம்னி வண்டிக்கு இன்னைக்கு தானே புக் பண்ணியிருக்கே? என்றான் மணீஷ்.

    அசதியில தூங்கிட்டேன். இதோ… இப்ப கிளம்பறேன். என்று அவிதியாகக் குளியலறை தேடி ஓடினான் சாம்.

    நான்ஸ்டிக் தவாவில் ப்ரெட் ஆம்லேட் பிரட்டிப் போட்டான் மணீஷ். ஆபத்பாந்தவனாய் எப்போதும் ஒரு சாஸ் பாட்டில்.

    சாம், மணீஷ், கதிர் மூவரும் அந்த ஃபிளாட் வாடகையைப் பகிர்ந்து கொள்பவர்கள்.

    வெவ்வேறு துறையில் மேற்படிப்பு படித்தாலும், அவர்களுக்கான அகாமடேஷன், ஒரே இடம் என்றாகிப் போனது.

    தடியா, வா, போ, எருமை என்பதெல்லாம் அவர்களின் நெருங்கிய நட்பைப் பறைசாற்றும் ‘தொன்மை’யான சொற்கள்.

    அறிமுகமான ஆரம்பத்தில் சார், பாஸ், நண்பா, தோழரே என்றெல்லாம் மிகவும் மரியாதையாக, ஒருவரையொருவர் அழைத்துக் கொண்டவர்கள், நாளடைவில் வாடா, போடா என்று ஒருமைக்குத் தாவினர்.

    சமையல் கலையில் அவர்கள் வல்லுனர்கள் இல்லை. ஆனாலும், ஒரு இன்டக்ஷன் ஸ்டவ்வும், சில நான்ஸ்டிக் பாத்திரங்களும் வைத்துக்கொண்டு, நமக்கு நாமே திட்டத்தில் அவ்வப்போது இறங்கிவிடுவர்.

    ‘யூ-ட்யூப் இருக்க பயமேன். சமையல்ல அ-னா, ஆ-வன்னா தெரியாதவன் கூட அதைப் பார்த்துக் கத்துக்கலாம்.’ என்பான் மணீஷ்.

    நாளடைவில் அவனுக்கே சமையலில் ஆர்வம் அதிகமானது என்று கூடச் சொல்லலாம்.

    ஏதாவது ஒரு வார விடுமுறையின் போது, அவன் கைமணத்தில் தயாராகும் பிரியாணி வாசனை ஆளைத் தூக்கும்.

    எங்களையும் சேர்த்துக் கண்ணீர் விட வைக்கறியே! இருடா… ஹெல்மெட் மாட்டிட்டு வெங்காயம் நறுக்கறேன். என்பான் சாம்.

    ஆனாலும், பெரும்பான்மையான நேரங்களில் அவர்களது உணவுத் தேவை அருகிலிருந்த மெஸ்ஸிலோ, கல்லூரிக் கேன்டீனிலோ நிறைவேறிவிடும்.

    நாளுக்கு நாள் அவர்களின் நட்பு இறுகிக்கொண்டு வந்த சூழ்நிலையில், தங்களை வேற்று ஆட்களாகக் கருதாமல் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர்.

    தன் தங்கையின் திருமணம் பற்றி மிகவும் வருத்தப்பட்டுப் பேசினான் சாம். அவன் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன்.

    அப்பா சாதாரண கிளார்க் வேலை பார்த்து, ரிடையர் ஆகற ஸ்டேஜ்ல இருக்காரு மச்சான். நான், என் அக்கா, தங்கைன்னு அந்தக் குடும்பத்துல மூணு பேரு. அக்காளுக்கு கல்யாணம் பண்ணி அனுப்பறதுக்குள்ள மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கிடுச்சு. இப்ப தங்கைக்குத் திருமணம் நிச்சயமாகியிருக்காம். பணம் ஏதாவது அனுப்ப முடியுமான்னு கேட்கறாரு. என்னோட பார்ட்-டைம் ஜாப்ல பெருசா என்ன வந்துடப் போகுது? என் செலவுக்கே இங்கே சரியா இருக்கு. என்றான் சாம், பெருமூச்சுடன்.

    எங்க வீட்டுல அப்பப்ப கைச்செலவுக்குன்னு அனுப்பற பணம். ஐம்பதாயிரம் வெறுமனே சேவிங்க்ஸ்ல போட்டு வெச்சிருக்கேன். அவசர ஆத்திரத்துக்கு டப்புன்னு எடுத்துடலாம். கடனா தர்றேன். உன்னால முடியும்போது திருப்பிக் கொடு. என்றான் கதிர்.

    பிஃப்டி முடியாது மாமே! ஒரு தர்ட்டி வேணா தர்றேன். அவன் சொன்னதுதான். உன்னால முடியும்போது திருப்பிக் கொடு. என்றான் மணீஷ்.

    தெய்வமடா நீங்க… என்று தலைக்குமேல் கையெடுத்துக் கும்பிட்டான் சாம்.

    இந்தக் கும்பிடு வெச்சு நாங்க என்ன பண்ண? உன் தங்கச்சி கல்யாணத்துல ஸ்பெஷலா எங்களைக் கவனி. அது போதும். என்றான் கதிர், சிரித்துக்கொண்டே.

    கண்டிப்பா… கண்டிப்பா! உங்களுக்குச் செய்யாம வேற யாருக்கு? எண்பதாயிரம் ரெடியா இருக்குன்னு அப்பாகிட்ட இப்பவே ஃபோன்ல சொல்லிடவா? அவருக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும். என்றான் சாம் படபடப்பாக.

    தாராளமா சொல்லுடா இவனே… என்றார்கள், கதிரும், மணீஷும் கோரஸாக!

    தன் அன்புத் தங்கை கீர்த்தியின் திருமண நிகழ்வுகளை அருகிலிருந்து நடத்தி வைக்க, ஒரு பொறுப்பான சகோதரனாக சொந்த ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான் சாம்.

    நான் இப்ப கிளம்பறேன்… டா. அவசியம் கல்யாணத்துக்கு வந்துடுங்கடா. ஏதாவது காரணம் சொல்லி கடைசி நிமிஷத்துல வராம இருந்துடாதீங்க.

    நூற்று ஓராவது முறையாக சாம் தன் நண்பர்களைக் கேட்டுக்கொள்ள,

    அதெல்லாம் அவசியம் வந்துடுவோம். சும்மா போட்ட ரெக்கார்டே போடாம நீ சீக்கிரம் கிளம்பு மேன். ஆம்னி வரைக்கும் உன்னை டிராப் பண்ண, கதிர் பைக்கோட வெயிட் பண்ணிட்டு இருக்கான். என்றான் மணீஷ், வழியில் சாம் கொறிப்பதற்கு சில தின்பண்டங்களை, அவன் பையில் செருகிக் கொண்டே!

    உங்களை மாதிரி ஃபிரெண்ட்ஸ் கிடைக்க கொடுத்து வெச்சிருக்கணும். வந்திடுங்கடா… என்று மீண்டும் ஒருமுறை சொல்லிவிட்டுக் கதிரைத் தேடி விரைந்தான் சாம்.

    அங்கே கீர்த்தியின் வீட்டில்!

    மெஹந்தி டிசைன் இது ஓகேவா பாரு.

    ஜடை மட்டைக்கு டவைட் அண்ட் ரெட்ட காம்பினேஷன் சூப்பரா இருக்கும்.

    ரிசப்ஷன் ப்ளவுஸ் என்னடி சிம்பிளான எம்ப்ராய்டரி டிசைனா இருக்கு? இன்னும் கொஞ்சம் கிராண்டா தைக்கச் சொல்லியிருக்கலாமே? ஸ்டோன்ஸ், முத்து, கலர்பாசின்னு கலக்கலா தைக்கறாங்களே! கொளுத்திப் போட்டாள் உறவுக்காரி.

    இந்த ஒரு ப்ளவுசோட எம்ப்ராய்டரிக்கே ஆயிரத்து ஐநூறு ரூபாய் ஸ்டிச்சிங் சார்ஜ். அங்கங்க குட்டி ரோஜாப்பூ போட்ட மாதிரி தைச்சிருக்காங்க. போனாப் போகுதுன்னு டைலர் கேட்ட காசைக் கொடுத்துட்டேன். கல்யாணப் பொண்ணு சாதாரணமா போட்டா நல்லாவா இருக்கும். நீங்க என்னடான்னா சிம்பிள் டிஸைன்னு பொசுக்குன்னு சொல்றீங்க. கோபம் மேலிடச் சொன்னார், கீர்த்தியின் அன்னை சுகுமாரி.

    சுகு… ஒரு நிமிஷம் உள்ளே வா… என்றழைத்தார், அவரது கணவர் கண்ணபிரான்.

    உறவுக்காரங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம். அவங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது. சோமு வண்டி ஏறிட்டானாம். இப்பதான் ஃபோன் வந்தது.

    அப்பாடி… கிளம்பிட்டானா! ரொம்ப சந்தோஷம். அவன் வந்தால் பலவகையில எனக்கு ஒத்தாசையா இருக்கும். என்று மகிழ்வுடன் சொன்னார் சுகுமாரி.

    சோமு அத்தான் புறப்பட்டாச்சா? இங்கே எத்தனை மணிக்கு வந்து சேருவாராம்? துப்பட்டா நுனியைச் சுருட்டிக்கொண்டே உள்ளே வந்தாள் நித்யா.

    நாம பேசுனது இவளுக்கு மட்டும் எப்படிக் கேட்டுச்சுன்னு பார்த்தீங்களா? சோமுன்னு வேற கிரகத்துல இருந்து அசரீரி வந்தால்கூடப் போதும். இதோ வந்துட்டேன்னு ஓடிடுவா. அவள் காதைப் பிடித்துச் செல்லமாகத் திருகினார் சுகுமாரி.

    வேண்டாம் அத்தே! கீர்த்தி கல்யாணம் முடிஞ்சதும், எனக்கும், சோமு அத்தானுக்கும் தான் டும்…டும்… இப்ப நீங்க என் காதைத் திருகுனா, இந்த வீட்டுக்கு மருமகளா வந்தபிறகு, நான் உங்களைக் கொடுமைப் படுத்துவேனாக்கும். என்று விளையாட்டாய் மிரட்டினாள் நித்யா.

    போடி… போடி… எந்தெந்த மாமியார் எப்படியெல்லாம் தன் மருமகளை வெச்சு செய்யறான்னு, நானும் நிறைய சீரியல் பார்த்திருக்கேன். எங்கிட்ட வெச்சுக்காதே. தன் பங்குக்கு மிரட்டிக் கொண்டிருந்தார் சுகுமாரி.

    நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்தது ஆம்னி வண்டி. காதைக் கிழிக்காத இசையில் நனைந்தபடி சென்றான் சாம்.

    அவனுடைய மைனா, ‘நித்யா’ அவன் கண்ணுக்குள் நிலவாய்!

    எப்ப வர்றே மாமு? அலைபேசியில் கொஞ்சலாய் ஒலித்த அவள் குரல்.

    அட வர்றேன்…டி. அவனவன் ஆயிரம் டென்ஷன்ல இருக்கான்.

    அவள் குரலைக் கேட்டதும், குல்ஃபி சுவைத்த கணக்காய் இனித்தாலும், நித்துவிடம் பிகு செய்து கொள்வதில் அவனுக்கு அலாதி சுகம்.

    ரொம்ப பண்ணுவியே மாமு! கீர்த்தி கல்யாணத்தோட சேர்த்து நம்ம கல்யாணத்தையும் ஒரே மேடையில நடத்தி முடிச்சா என்னவாம்? எப்படிப் பார்த்தாலும் நான் அவளை விட ஒரு வருஷம் பெரியவ! நீ என்னைவிட… ரொம்ப… ரொம்ப… ரொம்ப பெரியவன்.

    அடிக்கழுதை! உன்னைவிட நான் ஒன்றரை வயசுப் பெரியவன். ஏதோ கிழவனைக் கட்டிக்கப் போற கணக்கா பேசறே! நம்ம கல்யாணம் நிதானமாகவே நடக்கட்டும். உன்னை ராஜாத்தி மாதிரி வெச்சிக்க, இன்னும் கொஞ்சம் காசு சேர்த்துக்கறேன். இதுவரை சம்பாதிச்சதும், ஆத்துல போட்ட உப்பு கணக்கா கரையுது. என்ன பண்ணச் சொல்றே?

    நானும் வேலைக்குப் போயிட்டு தான் இருக்கேன். உள்ளதைக் கொண்டு ஹேப்பியா வாழ்வோம் மாமு. இதுக்குமேல டிலே பண்ணாதே. கண்ணைக் கசக்கினாள் நித்யா.

    நித்யாவைப் பற்றி நினைக்கும்போதே சோமுவின் இதயத்தில் காதல் அரும்பியது. மாமன் லோகேஸ்வரனின் அருந்தவப் புதல்வி. அவனுக்காகவே பிறந்து, வளர்ந்து காத்திருப்பவள்.

    ‘மாமு…மாமு…’ என்று சோமுவைச் சுற்றி வந்து காதலை வளர்த்துக் கொண்டவள்.

    ஒரு தனியார் பள்ளியில் லேப் அசிஸ்டன்டாக வேலை பார்க்கிறாள். அவளுக்கு ஓரளவு நல்ல சம்பளம் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

    அவர்களின் காதலுக்கு இருவீட்டிலும் எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனாலும், சாம் - நித்யா திருமணம் தள்ளிப்போகிறது.

    பட்டப்படிப்பு முடித்த கையோடு, வேலை தேடச்சொல்லி கண்ணபிரான் தன் மகனுக்கு அறிவுரை சொன்னாலும்,

    நல்ல உத்தியோகம் கிடைக்க மேற்படிப்பு முக்கியம் என்று சாம் வெளியூரில் தங்கிவிட, அவனைப் பிரிந்த ஏக்கம் அவளுக்குள்!

    ‘நிறைய படிக்கணும்ன்னு ஆசையா இருந்தா, கரஸ்ல படிக்க வேண்டியதுதானே! இதுக்காக வெளியூர் போகணுமா?’ அவன் பிரிவைத் தாளாமல் வருந்தினாள்.

    மேற்படிப்பின் முழுச்செலவையும் தன் அப்பாவால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று புரிந்து, வெளியூர் வந்த வேகத்தில், பார்ட்-டைம் ஜாப் தேடிக் கொண்டவன் சாம்.

    ஓரளவு அவனால் செலவுகளைச் சமாளிக்க முடிகிறது என்றாலும், நித்யாவோடு குடும்பம் நடத்த இந்த வருமானம் போதுமா?

    கொஞ்சம் பொறுத்துக்கோ. கோர்ஸ் முடிஞ்சதும் நிச்சயமா நல்ல சம்பளத்துல, நல்ல வேலை கிடைக்கும். அப்பா மாதிரி என்னால வெறும் கிளார்க் வேலைக்கெல்லாம் போகமுடியாது நித்து. ஃபவுன்டேஷன் ஸ்ட்ராங்கா போட்டுட்டா, காலம் முழுக்க நாம நிம்மதியா இருக்கலாம். இந்த டிலேவுக்கெல்லாம் சேர்த்து அப்ப வைக்கறேன்…டி உனக்கு! என்று சொல்லிச் சொல்லியே அவளைச் சமாதானப்படுத்துவான்.

    எப்போது கோர்ஸ் முடிவது? எப்போது வேலை கிடைப்பது? எப்போது கைநிறைய சம்பாதிப்பது? எப்போது நித்யா அவன் வசமாவாள்?

    ஒரு பெருமூச்சோடு இருக்கையில் நன்றாகச் சாய்ந்துகொண்டான் சாம்.

    அவன் மிகப்பெரிய சாம்ராஜ்ஜிய சக்ரவர்த்தியாக ஆசைப்படவில்லை. இந்தச் சமுதாயத்தில் எங்கோ ஒரு மூலையில் பிதுங்கிக்கொண்டு வாழாமல், ஓரளவு அந்தஸ்தாக வாழ ஆசைப்படுகிறான். நித்தி அவனுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள்.

    2

    எதுக்குடா வண்டி கேட்கறே? எப்ப திரும்பி வருவே? நான் எப்படி சூளைக்குப் போறது? என்றார் கதிரின் தந்தை குமாரவேல்.

    செங்கல் சூளைக்குப் போறதுக்கு கார் எதுக்குன்னு கேட்கறேன்? உங்க ஃபிரெண்ட் வண்டி இருக்கில்ல. ஒரு வாரம் அதை யூஸ் பண்ணிக்கோங்க. அலட்சியமாகச் சொன்னான் கதிர்.

    சாம் வீட்டுத் திருமணத்திற்குச் செல்லும் முஸ்தீபில் அவன்!

    கல்யாண மண்டபத்துக்கு பேருந்தில் சென்று இறங்க, அவனால் ஆகாது. காரில் பந்தாவாகச் சென்று இறங்குவது தான் கதிருக்கு கெத்து!

    கதிரின் தந்தை குமாரவேல் நல்ல பசையான பார்ட்டி. ஏழெட்டு இடங்களில் பெரிய அளவில் செங்கல் சூளை போட்டு வளமாகக் காசு பார்த்துவிட்டவர்.

    அவருக்குச் சொந்தமாகவே நான்கு வீடு இருக்கிறது. வாடகைக்கு விட்டு அதிலும் வருமானம் பார்க்கிறார். மகனது மேற்படிப்புக்கு செலவிடுவது அவருக்கு வெறும் கொசுறுத் தொகை போன்றதே!

    ‘உனக்கு என்ன வேணுமோ படி. ராஜாவாட்டம் இரு. சம்பாதிச்சுப் போட அப்பன் இருக்கேன். நான்தான் படிக்காத தற்குறி. என் பிள்ளைங்களாவது

    Enjoying the preview?
    Page 1 of 1