Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Roja Ondru Mutham Ketkum Neram...
Roja Ondru Mutham Ketkum Neram...
Roja Ondru Mutham Ketkum Neram...
Ebook226 pages1 hour

Roja Ondru Mutham Ketkum Neram...

Rating: 2.5 out of 5 stars

2.5/5

()

Read preview

About this ebook

காதல்... காதல்... காதல்..!

கதை முழுவதும் மைக்கேல்-ஜெனியின் அழகான காதல்.

முறுக்கு மீசை நாயகனும், குறும்பான நாயகியும்..!

தோழி கங்காவின் குறும்புகள்.

மைக்கேலின் பொறுப்பான நண்பன் நந்தகுமார்.

அத்தியாயம் டு அத்தியாயம் ரொமான்ஸ்.

Languageதமிழ்
Release dateJun 30, 2020
ISBN6580134505630
Roja Ondru Mutham Ketkum Neram...

Read more from Hansika Suga

Related authors

Related to Roja Ondru Mutham Ketkum Neram...

Related ebooks

Reviews for Roja Ondru Mutham Ketkum Neram...

Rating: 2.5 out of 5 stars
2.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Roja Ondru Mutham Ketkum Neram... - Hansika Suga

    http://www.pustaka.co.in

    ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்...

    Roja Ondru Mutham Ketkum Neram...

    Author:

    ஹன்சிகா சுகா

    Hansika Suga

    For more books

    https://www.pustaka.co.in/home/author/hansika-suga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    1

    ஜெனி… இட்ஸ் கெட்டிங் லேட்…

    இதோ ரெடியாகிட்டேன்… அப்பப்பா… வர்றதுக்குள்ள எத்தனைமுறை குரல் கொடுப்பீங்கன்னு தெரியல…

    ‘ஹே… அழகியே…’ என்று அவன் வருணிக்கத் தகுந்தார்போல் வந்து நின்றாள் ஜெனிபர்.

    மைக்கேலும் அவளும் தேனிலவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    புதுசா கல்யாணமானவங்க… சிம்லா, குலுமனாலின்னு நார்த் பக்கம் வர ஆசைப்படுவாங்க. நீங்க என்னடான்னா தேனிலவுக்கு அந்தமான்னு பிடிவாதம் பண்ணிட்டீங்க மைக்.

    அளப்பரிய காதலில் மைக்கேல் ‘மைக்’ ஆகிவிடுவான்… ஜெனிபர் ‘ஜெனி’ என்று செல்லமாக ரசிக்கப்படுவாள்.

    தன் மனைவியைக் காதலுடன் பார்த்தவன், எதற்காகக் கிளம்பினோம் என்பதை மறந்து ரசனையுடன் கொஞ்சவும் தொடங்கிவிட்டான்.

    கன்னத்தில் குறுகுறுத்த அவனது போலீஸ் மீசையை செல்லமாக நிமிண்டிவிட்டாள் ஜெனி.

    ஃபிளைட் நமக்காகப் புறப்படாம நிறுத்தி வைக்கப்படுமா என் காதலரே?

    சரியான நேரத்துல உன்னை விமானத்துல ஏற்றவேண்டியது, என் பொறுப்பு காதலியே…! நெற்றியில் முட்டிச் சிரித்தவன், அவள் இடையை இறுக்கினான்.

    அப்புறம் எதுக்கு… ‘இட்ஸ் கெட்டிங் லேட்’ன்னு அவசரமா குரல் கொடுத்தீங்களாம்?

    அவனோடு நிறையவே இழைந்து கொண்டாள். இருவேறு பெர்ஃப்யூம்களின் நறுமணம் இனிய கலவையாய்…!

    போறதுக்கு முன்னாடி ரொமான்ஸ் வேண்டாமா?

    அவன் காட்டிய ரொமான்ஸில் தன் உடல் பேலன்ஸ் இல்லாமல் தடுமாறுவதை ஜெனியால் நன்றாகவே உணர முடிந்தது.

    மற்றதெல்லாம் அந்தமான்ல வெச்சுக்கலாம். என்று ஒருவிதமான குரலில் சொன்னவளின் முகத்தில், புதிதாய் ஒரு ரோஜாவண்ணம்.

    நிறம் மாறிய முகத்தை நிறைவாய் ரசித்தவன், கனமான சூட்கேசுகளைத் தள்ளிக்கொண்டு செல்ல, மற்ற லக்கேஜுகளை சுமந்துகொண்டு பின்தொடர்ந்தாள் ஜெனிபர்.

    திருமணம் நடந்த உடனே, இந்தியாவின் தலைநகருக்குக் குடிவந்துவிட்டதில், இங்கே இன்னும் அவளுக்குத் தேவையான வசதிகள் சரிவரப் பூர்த்தியாகவில்லை.

    ‘வீட்டுக்கு வேலையாள் தேவை’ என்று அக்கம்பக்கத்தில் சொல்லி வைத்திருக்கிறாள்.

    ‘ஸ்ட்ரிக்ட் ஆபீசர்’ வீடு என்று அக்கம்பக்கமும் கேள்விப்பட்டு இருப்பதால், ஆட்கள் வேலைக்கு வரவே தயங்குகிறார்கள்.

    தனக்கென்ற சொந்த வாகனத்தில், தானே காரோட்டியாக மாறி டிரைவ் செய்து கொண்டிருந்தான் மைக்கேல்.

    கிண்ணென்று நரம்புகள் முறுக்கேறிய அந்தக் கரங்களை, தன் விழிகளுக்குள் ஆசைதீர நிறைத்தாள்… ஜெனி.

    அவை கரங்கள் அல்ல… அவள்மீது காதல் வரையும் தூரிகை…!

    இதயம் தறிகெட்டுப் போகும் அபாயமுணர்ந்து, அவனை ‘லுக்’ விடுவதைத் தவிர்த்து, முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள் ஜெனிபர்.

    சம்திங் ராங் வித் மை டார்லிங்…! மற்றதெல்லாம் அந்தமான்ல வெச்சுக்கலாம்’ன்னு சொல்லிட்டு, இப்ப நிறம் மாறுனா எப்படி? குறும்பாய்ச் சிரித்தான்.

    போலீஸ்காரன் கண்ணுக்கு எதுவும் தப்பாது… என்று முணுமுணுத்தவள், இப்படிச் சிக்கிக்கொண்டோமே என்று பரிதவிக்கவில்லை.

    காதல் ஸ்பீடோமீட்டர் கட்டுக்குள் நிற்கமாட்டேன் என்று அவளிடம் அடம் பிடிக்க, அவன் கரத்துக்குக் கிடைத்தது… அழுத்தமான முத்தங்கள்.

    கொடுக்கறதை மொத்தமாகக் கொடுக்க வேண்டியதுதானே? எதுக்கு இந்த ஓரவஞ்சனை? இந்தக் கை என்ன பாவம் செய்ததாம்?

    இதழ் ஸ்பரிசம் அனுபவிக்காத மற்றொரு கரத்தை வேண்டுமென்றே அவள் முகத்தின் முன் அவன் நீட்ட, குறும்புடன் புறங்கையில் நறுக்கென்று கடித்தாள்.

    ஸ்…ஸ்… கட்டெறும்பே… இதுக்கான தண்டனையை உனக்குக் கொடுத்தே தீருவேன். என்று மைக்கேல் கோபத்துடன் மீசையை முறுக்க,

    அந்த தண்டனை என்னவாக இருக்கும் என்ற யூகத்தில் ஜெனியின் தேகமெங்கும் ஒருவித உணர்வு…!

    ‘உன் மண்டைக்குள் ஊறுவதை வெளியே காட்டிக் கொடுக்கிறதே… உன் முகம்…! நீ படும் அவஸ்தையைக் கண்டு மைக்கேல் கேலியாகச் சிரிக்கிறான் பார்…!’ எச்சரித்தது மூளை.

    அவனையும், அவன் சிரிப்பையும் உற்றுப் பார்த்தவள், கோபமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

    ‘ஒவ்வொரு முறையும் தோற்கிறேன் என்று தெரிகிறதல்லவா… இன்னும் எதற்கு இந்தச் சிரிப்பு ராஸ்கல்?’

    மனத்துக்குள் அவனைத் திட்டியவள், வெட்கத்தில் சுணங்கிய தன் முகத்தை மறைக்க இடம்தேடி, இறுதியில் பரந்து விரிந்த சாலையில் வலுக்கட்டாயமாகப் பார்வையைப் பதித்தாள்.

    என்ன மாதிரியான ஊர் இது…! எத்தனை ஜனத்தொகை…!

    அவளது சொந்த ஊராக இருந்தால், ஒற்றைச்சாலையில் கூட உல்லாசமாக நடக்கலாம்.

    இங்கே நான்குவழிச்சாலை, எட்டுவழிச்சாலை என்று ரகரகமாகப் பிரித்திருக்கிறார்கள். எல்லா சாலைகளும் வாகனங்களால் நிரம்பியே காட்சி தருகிறது.

    விமான நிலையத்திலோ அதைவிட ஜனசந்தடி…! காதல் கணவனைக் கோட்டை விட்டுவிடக் கூடாதே என்ற பயத்தில், அவனோடு ஒட்டிக்கொண்டே நடந்தாள் ஜெனிபர். அவள் இடையைச் சுற்றிப் பாதுகாப்பாய் கரம் பதித்தான்.

    இந்த மீசையை நம்பி, வளர்ந்த ஊரை விட்டு எங்கேயோ போகப்போறே… எப்படித்தான் அந்த ஊரு உனக்குப் பழகப்போகுதோ?

    திருமண நேரத்தில் தோழிகளும், உறவுகளும் செய்த கேலியும், கிண்டல்களும், இதயக் கருவறைக்குள் பசுமையாய்…!

    ஆகாயவிமானம் உயர எழும்பி பறக்கத் தொடங்கிய வேளையில், தங்களுக்குள் காதல் பூத்த தருணங்களை நோக்கி அவர்கள் மனமும் சிறகு விரிக்கத் தொடங்கியது.

    ஏய்… இன்னைக்கு தோட்டக்காரன் இல்ல… வர்றியா… மரம் முழுக்க மாம்பழம் பழுத்துத் தொங்குது. பார்த்தாலே எச்சி ஊறுது. சப்புக்கொட்டி அழைத்தாள் தோழி கங்கா.

    நல்லா பார்த்துட்டியா… தோட்டக்காரன் இல்லையா? அன்னைக்கு மாதிரி திடீர்னு எங்கிருந்தாவது முளைக்கப் போறான்.

    போருக்குத் தயாராவதைப் போல் திருட்டு மாம்பழம் பறிக்க, மிகுந்த உற்சாகத்துடன் தயாரானாள் ஜெனிபர்.

    அதெல்லாம் ஒரு தடவைக்கு நாலுதடவை செக் பண்ணிட்டேன். இன்னைக்கு ஆள் லீவ் லெட்டர் கொடுத்துட்டான் போல…! நம்ம பாடு கொண்டாட்டம் தான்…!

    கங்காவின் உற்சாகத் துள்ளலில் இரண்டு பெண்களும் தங்கள் ‘டார்க்கெட்’ தோட்டம் நோக்கி வேகமாக நடந்தார்கள்.

    விவசாயம் இன்னும் மறந்துபோகாத தென்னகத்து ஊர் அது…! வானம் பொய்க்காத பசுமையாடை போர்த்திய பூமி, காண்போர் மனத்தைக் குளிரச் செய்யும்.

    அங்கிருந்த செல்வந்தர்கள் பலர், தங்களுக்கென சொந்தமாக ஆகச்சிறந்த பழத்தோட்டங்கள் வைத்திருந்தது, இவர்களைப் போன்ற குறும்புப் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

    மார்க்கெட் முழுக்க மாம்பழம் குவிஞ்சு கெடந்தாலும், இந்த மாதிரி பறிச்சுத் திங்கற ருசியே அலாதி… இல்ல கங்கா…

    கழுத்தில் கிடந்த துப்பட்டாவை இரண்டாக மடித்து விரித்து கங்காவிடம் கொடுத்தாள் ஜெனிபர்.

    நான் இந்த மதில் மேல ஏறி மாமரக் கிளை எட்டுதான்னு பார்க்கறேன். நான் பறிச்சுப் போடறதை, நீ அந்த துப்பட்டாவுல கரெக்டா ‘கேட்ச்’ பிடிச்சுக்கோ. சிக்குன வரைக்கும் லாபமுன்னு அப்படியே மூட்டை கட்டி வீட்டுக்குக் கொண்டு போயிடலாம். நமக்குள்ள பங்கு பிரிக்கறதெல்லாம் அப்புறம்தான். ஒற்றைவிரலை நீட்டிக் கடுமையாக எச்சரித்தாள், ஜெனிபர்.

    ஆகட்டும்… ஆகட்டும்… ராஜமாதா உத்தரவு போட்டுட்டாங்க. எல்லோரும் கேட்டுத்தான் ஆகணும்.

    வாய்க்குள் முணுமுணுத்து, மாம்பழங்களின் வரவிற்காக, விரித்த துப்பட்டாவை, இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள் கங்கா.

    ஒன்-டூ-த்ரீ… என்று எண்ணிக்கைகளின் கணக்கு கூடிக்கொண்டே போனது.

    ஏய்… போதும்… இதுவே கனமா கனக்குது… ஒரு கட்டத்தில் கையிலிருந்த துணியை மூட்டை கட்டத் தொடங்கினாள் கங்கா.

    ஷ்… அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. மரத்துல இருக்கற மற்ற பழங்கள் கோவிச்சுக்குமா… இல்லையா? என்று தோழியைத் திரும்பிப் பார்த்துச் சிரித்த ஜெனிபர், பேலன்ஸ் தவறி ‘தொபுக்கடீர்’ என்று கீழே விழ,

    அம்மா…ஆ…ஆ… என்ற வானைப் பிளக்கும் அலறல் கேட்டுத் திகைத்தாள் கங்கா.

    அடச்சே… ஒரு திருட்டை ஒழுங்காகச் செய்யத் தெரிகிறதா? இப்படியா கீழே விழுந்து சொதப்புவது? இவள் கத்துவது யார் காதிலாவது விழுந்தால் என்னாகும்?

    சனியனுக்கு எங்கே அடிபட்டது என்று தெரியவில்லையே…! எட்டிப் பார்க்க வழியில்லாமல் இந்த மதில்தான்… எம்மாம் உயரம்…!

    டி… ஏன் இப்படிக் கத்தித் தொலைக்கறே? உன் குரலைக் கேட்டு ஊரே கூடும்போலவே…!

    ரகசியமாய் எச்சரிப்பதாய் நினைத்துச் சத்தமாகவே சொன்னாள் கங்கா.

    ஏன் கத்த…றே…னா? நீ விழுந்து பாரு… அப்ப தெரியும். ஐயோ அம்மா… இடுப்புச்சுளுக்கு எடுக்க இரண்டுநாள் ஆகும்போலவே…!

    சரி… சரி… எல்லாம் வீட்டுக்குப் போய் சுளுக்கெடுக்கலாம். முதல்ல மதிலைத் தாண்டி இங்கிட்டு வா புள்ள…!

    உனக்கு அறிவிருக்கா? நானே கேள்விக்குறி மாதிரி வளைஞ்சு நிக்கறேன். இந்த லட்சணத்துல எங்கிருந்து மதிலைத் தாண்ட? வெளியே வர்றதுக்கு ஏதாவது உதவி செய் கங்கா.

    நான் எப்படி உதவி செய்ய? எனக்கு ஒரு வழியும் புலப்படல. அங்க நீளமான கம்பு ஏதாச்சும் இருக்குதா? ஒரு படத்துல, வடிவேலு சொ…ய்…ங்குன்னு ஜம்ப் பண்ணி மதில்மேல லேண்ட் ஆவாரு பாரு…! அந்த மாதிரி முயற்சி செய் புள்ள…!

    அடியே… எந்திருச்சு நிக்கவே முடியலேங்கறேன். கம்பு வெச்சு வித்தை காட்டச் சொல்றே? மதில்மேல லேண்ட் ஆன வடிவேலுக்கு, அந்தப் படத்துல என்ன கதி ஆனதுன்னு தெரியுமில்ல…! சும்மா எதையாவது சொல்லிட்டு இருக்காம, இந்தத் தோட்டத்து ‘கேட்’ பூட்டை உடைக்க முடியுதா பாரு… நான் மெல்ல தவழ்ந்து ‘கேட்’ வரைக்கும் வந்துடறேன்.

    கிழிஞ்சது போ… இனி இது வேறயா? என்ற கங்கா, பூட்டை உடைக்க, கனமான கல்லாகத் தேடினாள்.

    ண்ங்… ண்ங்…

    பூட்டை உடைக்கும் சத்தம் நன்றாகவே எதிரொலிக்க, கடவுளே… யாரும் வந்துவிடக்கூடாதே என்ற பயத்தில் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டாள் கங்கா.

    சீக்கிரம்… டி… வலி உயிர்போகுது… என்று முனகியவாறு, இரும்புக்கேட்டை இரண்டு கைகளாலும் பிடித்து நின்றாள் ஜெனிபர்.

    நான் வேணா உதவி செய்யட்டுமா? என்ற முரட்டுக்குரலில், இரண்டு பெண்களின் ஜீவனும் ஸ்தம்பித்தது.

    திரும்பவே முடியாத நிலையிலும், குரல் வந்த திசைக்கு மெல்லத் திரும்பினாள் ஜெனிபர்.

    குரல் கொடுத்தவனைக் கண்டு கங்காவின் முகம் ஏற்கனவே சலவையாய் வெளுத்திருந்தது.

    திடுமென அங்கே ஒருவனைப் பார்த்ததின் பிரமை நீங்காமல், பேந்தப்பேந்த விழித்தப் பெண்களைக் கூர்ந்து பார்த்தான், அவன்…!

    அழுத்தமான அவனது நடை, நிதானமாக… வெகு நிதானமாக… அவர்களை நோக்கி வந்தது.

    2

    அடடே… நம்ம ரூபியோட பொண்ணு… அவ பிரெண்ட் கங்கா… என்ன ஆச்சு ஜெனிபர்… ஏன் இப்படி நடக்கறே? என்று கேட்டபடி திண்ணையிலிருந்து எழுந்து வந்தார் ஸ்டெல்லா.

    குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட கைதிகளை முறைப்பதுபோல் முறைத்துக் கொண்டிருந்தான் மைக்கேல்.

    இந்தப் பொண்ணுங்களை எங்கே பார்த்தே? இங்கே ஏன் அழைச்சிட்டு வந்தே மைக்கேல்? என்ன நடக்கிறது என்று புரியாமல் ஆஜானுபாகுவைப் பார்த்தார் ஸ்டெல்லா.

    கேக்கறாங்க இல்ல… உங்க வீரதீரப் பராக்கிரமங்களை சொல்ல வேண்டியதுதானே? வேண்டுமென்றே தன் அடர்த்தியான மீசையை முறுக்கினான்.

    பதில் சொல்லமுடியாமல் அந்தப் பெண்களின் முகம் தரையைப் பார்க்க, புரியாத பார்வையை அவனிடம் வீசினார் ஸ்டெல்லா.

    திருடிங்க… நம்ம தோட்டத்துப் பழங்களைத் திருடப் பார்த்தாங்க சித்தி. திருட்டுக் கழுதையில ஒண்ணு கீழ விழுந்து கையைக் காலை ஒடிச்சிட்டு நிக்குது. தோட்டக் காவல்காரன் இன்னைக்குப் பணிக்கு வரலேன்னு சொல்லிட்டு இருந்தீங்க இல்ல… சந்தர்ப்பம் பார்த்து வேலையைக் காண்பிச்சிருக்காங்க.

    ஆஜானபாகு, அபஸ்வரமாய் குற்றப்பத்திரிக்கை வாசிக்க, பதைப்புடன் பார்த்தார் ஸ்டெல்லா.

    அடப்பாவமே… மரத்து மேலயா ஏறுனீங்க. பழம் வேணுமின்னு கேட்டிருந்தா, நானே பறிச்சுத் தரச் சொல்லியிருப்பேனே…! ஜெனிபருக்குத்தான் அடிபட்டிருக்கு போல…! உள்ளே வாம்மா… ஜெனி… மருந்து போட்டுவிடறேன்.

    ஸ்டெல்லா கைத்தாங்கலாய் அந்தப் பெண்ணைப் பற்றிக்கொள்ள, குறுக்கே கைநீட்டித் தடுத்தான் மைக்கேல்.

    "தப்பு செய்திருக்காங்கன்னு சொல்றேன். தண்டனையைக்

    Enjoying the preview?
    Page 1 of 1