Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nakshatra
Nakshatra
Nakshatra
Ebook256 pages2 hours

Nakshatra

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கல்லூரியில் படிக்கும் நக்ஷத்ரா என்ற அழகுப்பெண் தேஜா மற்றும் பிரேம் ஆகிய இருவரின் அன்புப்பிடியில் இருக்கிறாள்.

இதில் எது உண்மையான அன்பு, எது வெளிவேஷம்?

நக்ஷத்ராவின் நாயகனாக தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவன் யார்? நாயகனின் வீட்டார் நக்ஷத்ராவை மனமுவந்து ஏற்றுக்கொண்டார்களா? காதலை ஏற்றுக்கொள்வதில் குழப்பங்கள் தான் என்ன?

கல்லூரிக் கலாட்டாக்களும், இனிமையான காதலும் இழைந்தோடும் துள்ளலான கதை.

Languageதமிழ்
Release dateJun 30, 2020
ISBN6580134505636
Nakshatra

Read more from Hansika Suga

Related authors

Related to Nakshatra

Related ebooks

Reviews for Nakshatra

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nakshatra - Hansika Suga

    http://www.pustaka.co.in

    நக்ஷத்ரா

    Nakshatra

    Author:

    ஹன்சிகா சுகா

    Hansika Suga

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hansika-suga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    அறிவும், அழகும், இளமையும் துள்ளும் வண்ணச்சிட்டுக்களுடன், இளமைப் பூங்காவனமாய் கலகலத்துக் கிடந்தது, அந்த இருபாலர் படிக்கும் கல்லூரி.

    இட்ஸ் எ பெட்...! நக்ஷத்ரா நம்ம தேஜாவுக்குத்தான்.

    நோ வே...! அவ பிரேம் பக்கம்தான்.

    தேஜாவுக்கும், அவளுக்கும் நடுவுல ரொமான்ஸ் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. ‘மை கேர்ள்... மை கேர்ள்...ன்னு சொல்லிட்டு அலையறான்.

    ஆனால், பாஸ்கட்-பால் கிரவுண்ட்ல நடக்கற கதையே வேற. தினமும் ப்ராக்டீஸ் போற எனக்குத் தெரியாதா?

    உங்க யூகங்கள் எல்லாமே தப்பு. அவ அல்ட்ரா மாடர்ன் பொண்ணு. அவ்வளவு சீக்கிரம் எதுலயும் சிக்கமாட்டா...! அடுத்தவங்களை வேணா சுத்தல்ல விடுவா.

    சுத்தல்ல விடறதுன்னா? பசங்களுக்கு டேக்கா கொடுக்கற டைம்பாஸ் கேரக்டர்-ன்னு சொல்ல வர்றியா?

    எக்ஸாக்ட்லி மச்சி.

    ஹேய்... ஹேய்... பசங்ககிட்ட பொண்ணுங்க சகஜமாப் பேசுனா, உடனே ‘டைம்பாஸ்’ கேரக்டரா? ஹௌ மீன் யூ ஆர்?

    ஆமா... நாங்க மீனு... இவங்க கருவாடு. மொசப் புடிக்கற நாயை மூஞ்சியைப் பார்த்தாலே தெரியும்-ன்னு எங்க ஊர்ப்பக்கம் சொல்வாங்க.

    அதான் உன் மூஞ்சைப் பார்த்தாலே தெரியுதே...! எந்த ஊர்டா நீ?

    டா...போட்டா பேசறே? அடிச்சேன்னா பல்லு அத்தனையும் கொட்டிடும்.

    அடேய்... என்னங்கடா இது? எவளுக்காகவோ நாம ஏன் சண்டை போடணும்?

    எவளோ இல்லை பாஸ். நக்ஷத்ரா...! இந்தக் காலேஜுடைய ஹீட்...! தேஜா, பிரேம் இருவருமே அவ பின்னாடி லோலோன்னு அலையறாங்க. யாருக்கு யார் என்பதுதான் கான்டினென்டல் டாக்.

    கான்டினென்டல் டாக்கா? அடக்கி வாசி மச்சி. இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியல.

    அந்த ‘ரொமான்ஸ் ராக்கர்ஸ்’ அவனுங்க வேலையை பெர்பஃக்டா பார்க்கட்டும். இரண்டு பேர்ல எவனுக்கு சாதுர்யம் இருக்கோ, அவன், அந்தப் பறவையைக் கொத்திட்டுப் போகப் போறான். இதுக்காக நம்ம பொழப்பை விட்டுட்டு அவங்களைப் பற்றிப் பந்தயம் கட்டுவானேன்?

    அதென்ன அவ்வளவு லேசா சொல்லிட்டே. இன்னைய தேதிக்கு மனுஷனோட வாழ்க்கையே பந்தயத்துல தான் ஓடிட்டு இருக்கு.

    யெஸ்...! கிரிக்கெட்டுல பெட், கேஸினோல பெட், மரத்தடி சூதாட்டுத்துல பெட்... அவ்வளவு ஏன்... நம்ம ராக்கி இந்த செம்ல அரியர்ஸ் வெக்காம பாஸ் ஆகறதா பெட் கட்டியிருக்கான்.

    ஏன்...டா... ராக்கி... அப்படியா? கூட்டம் மொத்தமும் கலகலப்பாய் ராக்கியின் பக்கம் திரும்ப, அங்கே சிறிதுநேரம் நக்ஷத்ரா, தேஜா, பிரேம் ஆகிய மூவரும் தற்காலிகமாகப் பாதுகாக்கப் பட்டார்கள்...

    மீண்டும் அந்த சில்வண்டுகளின் கவனம் நமது நாயகி நக்ஷத்ராவின் பக்கம் திரும்பும்முன், நாமே அவளைப் பற்றிச் சிறுகுறிப்பு வரைந்து விடுவோம்.

    நக்ஷத்ரா...!

    ‘அல்ட்ரா மாடர்ன் யங் கேர்ள்’.

    கேட்வாக்கில் பங்கேற்க வேண்டிய நளின யுவதியை இந்தக் கல்லூரியில் கொண்டு வந்து தவறுதலாகச் சேர்த்துவிட்டார்களோ என்று நினைக்கும் அளவுக்கு ஆடையலங்காரங்களில் ஒருவிதமான அலப்பறை...!

    ‘போல்ட் அண்ட் ப்யூட்டிபுல்’ என்று கல்வெட்டில் பதிந்துவிட்டு, பக்கத்திலேயே காவலுக்கும் உட்கார்ந்து கொள்ளலாம்.

    தவறு என்று தெரிந்தால், எதிரில் நிற்பவன் எமனாக இருந்தாலும் தட்டிக் கேட்கும் துணிவு...!

    படிப்பில் டாப்பர் இல்லை. அதேசமயம், பரிதாபப்படும் நிலையும் இல்லை. ‘அபௌவ் ஆவரேஜ்’ வர்க்கத்தின் கடைசி நிலையில் ரேங்க் பதித்து நிற்கிறாள்.

    கனவுக்கன்னிகளின் சினிமா போஸ்டரை ஏக்கத்துடன் பார்க்கும் வழிப்போக்கர்களைப் போல், தூரத்திலிருந்து அவளை ஜொள்ளுவிடும் ஆண்மக்கள், அந்தக் கல்லூரி வளாகத்துக்குள் அதிகம்.

    ஆயினும், அவளை நெருங்கிப் பழகும் ஜாக்பாட் அடித்தது, இரண்டு காளையர்களுக்கு மட்டுமே...! ஒன்று தேஜா...! மற்றொன்று பிரேம்...!

    தேஜா...!

    கல்லூரிக் கலைநிகழ்ச்சிகளில் அவளுக்கு நடனகுருவாக நியமிக்கப்பட்ட சீனியர் மாணவன். நட்புடன் பழகிய நக்ஷத்ராவை, ‘மை கேர்ள்...’ என்று சொல்லிக்கொண்டு அலப்பறையாகத் திரிபவன் தேஜா.

    நடனத்துக்கு ஏற்றபடி வளைந்து கொடுக்கும் ரப்பர் தேகம் கொண்ட ஆடவன். ஓரிடத்தில் நிற்காமல் ஒயிலாட்டம் பயிலும் கால்கள். சூட்டிகையானவன். சுதந்திர விரும்பி...! பகட்டானவன். தன் பகட்டை வெளிக்காட்டிக் கொள்வதில் சிறுகர்வமும் உண்டு.

    பிரேம்...!

    தனது பாஸ்கட்பால் விளையாட்டு ஆர்வத்தினால், நக்ஷத்ரா என்ற அழகுப்பெண், தானாகவே இந்தச் சீனியரை குருவாக ஏற்றுக்கொண்டவள்.

    பிரேம் தன் உருவத்தில் பாடிபில்டரைப் போல் இருந்தாலும், இறுக்கமான முகஅமைப்பும், ஆழ்ந்த அமைதியும், அசாத்திய கோபமும் கொண்டவன். மிடில்-கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், நக்ஷத்ராவின் நட்பை அமுதமாய் நினைத்து ஆழ்மனத்தின் அடியில் ருசிபார்த்துக் கொண்டிருப்பவன் பிரேம்.

    ஆரம்பத்தில் சீனியர்-ஜூனியர்... குரு-சிஷ்யை... என்ற ரீதியில் கிண்டலடிக்கப்பட்டு வந்த இவர்களின் நட்பு... இப்போது தாறுமாறாக டி.ஆர்.பி.ரேட்டிங்கில் எகிறத் தொடங்கியிருக்கிறது.

    இன்னைக்கு என்னடி நியூஸ்?

    ஷி இஸ் மூவிங் மோர் க்ளோசர் டு தேஜா.

    வாவ்...! எப்படிச் சொல்றே?

    ரெண்டு பேரும் டேட்டிங் போனதா காலேஜ் முழுக்க வதந்தி.

    ஐயோ...! அப்படியெல்லாம் இருக்காது. எவனாவது பொறாமையில பொய்ச்செய்தி கிளப்பி விட்டிருப்பான்.

    டேட்டிங் நியூஸ் உண்மையா இருந்தா, பிரேம் எப்பவோ அவளைக் கட் பண்ணியிருப்பானே...! இப்பகூட பாஸ்கட்பால் கோர்ட்டுல ரெண்டு பேரையும் பார்த்துட்டு தான் வர்றேன்.

    தேஜாவைவிட பிரேம்தான் சார்மிங் பர்சன். நக்ஷத்ராவுக்குப் பிரேம்தான் செட் ஆவான்.

    உன் டேஸ்ட்டே சரியில்ல. பிரேம் ஒரு தொட்டாச்சிணுங்கி. அவனைப் போய் சார்மிங் பர்சன்னு சொல்றியே? அவன் கோபத்தை நீ நேர்ல பார்த்தது இல்லேன்னு நினைக்கறேன். பட், தேஜா இஸ் எ ஜாலி பெஃல்லோ...! எப்பவுமே ஒரு ஹாயான லுக் அவன்கிட்ட இருக்கும். நக்ஷத்ரா மாதிரியான லவ்லி கேரக்டரை, தேஜா மாதிரியான காந்தம்தான் இழுக்கமுடியும்.

    தப்பும்மா. ‘ஆப்போஸிட் போல்ஸ் அட்ராக்ட் ஈச் அதர்’-ன்னு நீ கேள்விப்பட்டதே இல்லையா? எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று வெகுவாய் ஈர்க்கும். அதுனாலதான் சொல்றேன். பிரேம் vs நக்ஷத்ரா.

    கே.எப்.சி. பெட் வெச்சுக்கலாமா? நான் தேஜா vs நக்ஷத்ரான்னு அடிச்சுச் சொல்றேன்.

    போடி...! நீ ஓசியில கே.எப்.சி. பக்கெட் அடிக்க என்னை யூஸ் பண்ணிக்காதே. என் லவ்வே இங்க செட் ஆகமாட்டேங்குது. இதுல நக்ஷத்ரா மேட்டர் எனக்கெதுக்கு?

    ஹை...! இவ்வளவு நேரம் வளவளன்னு பேசிட்டு, இப்ப தப்பிக்க பார்க்கறியே? பந்தயம்-ன்னு வந்துட்டா நின்னு அடிக்கணும். இப்படிப் பயந்து ஓடக்கூடாது.

    நான் எதுக்கு நின்னு அடிக்கணும்? அந்த வானத்து நட்சத்திரத்துக்காக அவனுங்க ரெண்டு பேரும் அடிச்சுக்கட்டும். டகால்ட்டி...! உங்க டிஸ்கஷன்ல நான் சிக்கமாட்டேன்.

    தினமும் கல்லூரியில் பிரேயர் நடக்கிறதோ இல்லையோ? இதைப் போன்ற ‘ஹாட் டிஸ்கஷன்’ நிறையவே நடக்கிறது.

    படிப்பில் ஆர்வம் காட்டுகிறார்களோ... இல்லையோ...! இந்த லவ்-ஸ்டோரியின் தினசரி அப்டேட்டுக்காக ஆர்வம் காட்டுபவர்கள் நிறைய...!

    அன்றைய தினம்... வழக்கம்போல் பாஸ்கட்-பால் கிரவுண்டில்... பிரேம் vs நக்ஷத்ரா...!

    காலேஜ் முழுக்க என்னைப் பற்றி ரூமர் ஸ்ப்ரெட் ஆயிருக்கு. அதைப் பற்றி என்னன்னு ஒரு வார்த்தைக்கூட கேட்கமாட்டியா பிரேம்?

    இருண்டு கிடந்த இறுக்கமான முகத்துடன் பந்தை லொட்டுலொட்டென்று கிரவுண்டில் தட்டிக் கொண்டிருந்தவனைப் பேச்சுக்குள் இழுத்தாள் நக்ஷத்ரா.

    என்ன ரூமர்? எனக்கெதுவும் தெரியாதே?

    நீ அந்த அளவுக்கு அப்பாவியா பிரேம்? நானும், தேஜாவும் டேட்டிங் போனதா, இட்டுக்கட்டிப் பேசுறது நிஜமாவே உனக்குத் தெரியாதா?

    அதான் இட்டுக்கட்டிப் பேசறதுன்னு நீயே சொல்லிட்டயே. பிறகு ஏன் அதைப் பற்றிக் கவலைப்படுவானேன்? ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்தாப்புல அஞ்சுநிமிஷம் பேசுனாலே வதந்தியைக் கிளப்பற கல்லூரி இது. நீ அவனோட சாதாரணமா ஷாப்பிங் போயிருந்தா கூட, டேட்டிங் போனதா நியூஸ் வரும்.

    அப்ப... நீ அந்த ரூமரை நம்பலியா பிரேம்? ஆர்வமானாள்.

    இது உனக்கும், தேஜாவுக்கும் இருக்கற பர்சனல் மேட்டர். இதுல நான் நம்பறதுக்கும், நம்பாம போறதுக்கும் என்ன இருக்கு? ஊசிக்குத்தலாய் அவன் பேச்சு.

    ஸோ, உனக்கும், எனக்கும் நடுவுல எந்தப் பர்சனலும் இல்லேன்னு சொல்றியா?

    உன் கேள்வியே எனக்குப் புரியல நக்ஷத்ரா. நமக்குள்ள என்ன பர்சனல் இருக்கமுடியும்? தேஜா மாதிரி நான் உன்னைக் கார்ல ஏத்திட்டு எங்கேயும் சுத்தல. கிடைச்ச சந்தர்ப்பத்துல க்ளோசா உட்கார்ந்து மணிக்கணக்கா பேசல. ரொமான்டிக் ஹீரோ கணக்கா, மரத்தடியில மல்லாக்கப் படுத்துக் காத்து வாங்கல...! ஹாய் டார்லிங்-ன்னு எல்லோர் முன்னாடியும் உன்னை உரிமையா அணைக்கல... அது ஒரு நட்பு ரீதியான அ...ணை...ப்...பா...க இருந்தாலும் கூட...! ஐ ஆம் ஜஸ்ட் எ கோச்...! நம்ம பிரெண்ட்ஷிப் இந்த பாஸ்கட்-பால் கிரவுண்டோட முடிஞ்சது.

    பிரேமின் வார்த்தைகளில் அசாத்திய குற்றச்சாட்டு இருப்பதை அவளால் உணரமுடிந்தது. வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல் என்னமாய் பேசுகிறான்...!

    தேஜாவுடன் பழகுவது பிடிக்கவில்லை என்றால் நேரடியாக அவளிடம் சொல்லவேண்டியது தானே...!

    அவன் கோபத்தின் வெளிப்பாடோ என்னவோ? அவன் கையில் அகப்பட்ட பந்து, மூச்சுத்திணற பூமியை முத்தமிட்டுக் கொண்டிருந்தது. அவன் கோபத்தின் வேகம்... அந்தப் பந்தின் மீது விழுந்த பலத்த அடிகளாய்...!

    உள்ளத்தில் அனல் பூத்துக் கிடந்தவனுக்கு, மிகவும் நெருக்கத்தில் வந்து நின்றாள் நக்ஷத்ரா. விளையாடியதில் ஏற்பட்ட வியர்வை அவள் ஆடையை நனைத்திருந்தது. நெற்றியில் துளிர்த்த ஈரத்தோடு ஒட்டியிருந்தன மெல்லிய கூந்தல் கற்றைகள். சற்றே பழுப்பு நிறம் கொண்ட அவளது விழிகள் அவனது முகத்தைக் கவனமாய் ஆராய்ந்தன.

    பொறாமையா இருக்கா? தேஜா மாதிரி என் பக்கத்துல உட்கார்ந்து மணிக்கணக்கா பேசணும்-ன்னு ஆசையா இருக்கா பிரேம்?

    அவள் கேள்வி புரிந்தும் மௌனமாய் இருந்தான். ‘அடம்பிடிக்கும் முரட்டுப் பீஸ்’ என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டாள் நக்ஷத்ரா.

    உன்கிட்ட கார் இல்லாமல் போகலாம். பைக் இருக்கில்ல. அதுல என்னை ஏத்திட்டு எங்கேயாவது கூட்டிட்டுப் போயேன். ஷாப்பிங்... பார்க்... எங்கே வேணாலும்...! ஐ ஆம் ரெடி டு கம் வித் யூ. பெண்கிளி ஆசையுடன் வைத்த கோரிக்கையை ஆண்கிளி உற்றுப் பார்த்தது.

    குபுகுபுவென்ற ஆத்திரம் உள்ளே கிளம்பியதில், கண்களை இறுக மூடித்திறந்தான் பிரேம். அவள் கண்ணெதிரே கூடைப்பந்தைக் கால்பந்தாக்கி எட்டி உதைத்துவிட்டு கிரவுண்டை விட்டு வெளியேறினான்.

    ஸ்டுப்பிட்...! இதுதான் மிடில்கிளாஸ் மென்டாலிட்டி. பெருசா எதுக்காவது ஆசைப்படுவீங்க. ஆனா, அதுக்கான முயற்சி எதுவும் எடுக்கமாட்டீங்க. மைதானத்தில் எக்கோ அடிக்கும் அளவுக்குக் கத்தினாள்.

    ஷட்-அப்...! ஷட்-அப் நக்ஷத்ரா...! மைன்ட் யுவர் வோர்ட்ஸ். பதிலுக்குக் கத்திவிட்டுச் சென்றான் பிரேம்.

    உதடு மடங்க அவன் போவதையே பார்த்துக்கொண்டு நின்றாள். சிலநேரங்களில் ஆண்களும் புரியாத புதிர்...!

    மனத்துக்குள் பல ஆசைகளை அடக்கிக்கொண்டு மட்டையாகிக் கிடக்கும் மட சாம்பிராணிகள்...!

    அன்று மாலை...! சொர்ணம் போட்டுக் கொண்டிருந்த தேநீரின் வாசம் வீட்டையே நிறைத்தது. பழைய காலத்துச் சோபாவில் சாய்ந்து படுத்திருந்தான் பிரேம். எண்ணங்களில் எக்கச்சக்கமான சிலந்தி வலைகள்.

    "ஒரு பொய்யாவது சொல் கண்ணே...

    உன் காதலன் நான்தான் என்று...

    அந்தச் சொல்லில் உயிர் வாழ்வேன்."

    தொலைக்காட்சிப் பாடலில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தான். மூளைக்குள் விடாப் பிடியாய் ஒட்டிக்கொண்ட அவளைப் பற்றிய நினைவுகள்.

    ஐ ஆம் ரெடி டு கம் வித் யூ.

    ஒரு பெண் எத்தனை தைரியமாக இதைச் சொல்கிறாள். பனிப்பாளம் வெடித்துச் சிதறியது போல் சில்லென்று இதயத்தில் ஒரு குளியல். அந்த இனிமையில் குளிர்காய்வதற்கு மட்டும் தயக்கமாக இருக்கிறது.

    அவள் எந்த அர்த்தத்தில் ‘ஐ ஆம் ரெடி டு கம் வித் யூ’ என்று சொன்னாள்? இந்த மரமண்டைக்கு அது புரியவில்லையே?

    ஒருபக்கம் தேஜாவையும், அவளையும் இணைத்து வைத்துப் பலவிதமாகப் பேசுகிறார்கள்.

    இன்னொரு பக்கம்... ‘பாஸ்கட்பால் கோர்ட்டில் காதல் பாடம்...’ என்று கல்லூரியின் உட்புறச் சுவர்களில் கிறுக்கி வைக்கிறார்கள். இதில் எது நிஜம்?

    அவளை மறக்க முயன்றும், முடியாமல் போன வேதனையில் தலையை அழுத்திக்கொண்டான் பிரேம். ‘யூ கான்ட் டெலீட் மீ ப்ரம் யுவர் மைண்ட்...’ கொக்கரிக்கிறாள்.

    அவனுக்குள் சிலந்திப் பின்னல்கள் மேலும் சிக்கலாயின.

    ‘உண்மையைச் சொல் நக்ஷத்ரா. நீ யார் பக்கம்? என் பக்கமா? தேஜா பக்கமா?’

    ‘நமக்குள் இருப்பது வெறும் நட்பா? காதலா?’

    ‘காதல் என்று சத்தியம் செய்யத்தான் என் மனம் ஆசைப்படுகிறது. ஆனால், தீர்ப்பு உன் கையில் அல்லவா இருக்கிறது.’

    ‘இன்றைய ஆண்-பெண் நட்பு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது. ஒத்துக்கொள்கிறேன். ஆனால், என்னிடம் காட்டும் அதே நெருக்கத்தை... நீ தேஜாவிடமும்... அல்லது அதைவிட மேலாக...’

    டீ குடிப்பா பிரேம்... என்று சொர்ணத்தின் குரல் அருகில் கேட்டபிறகே, தனக்குள் நடந்து கொண்டிருந்த உரையாடலில் இருந்து வெளியே வந்தான்.

    காலேஜுல இன்னைக்கு வேலை அதிகமோ? எப்பவும் போல இல்லாம முகம் சோர்ந்து கிடக்கு. பரிவுடன் மகனது கேசத்தைக் கோதிவிட்டார் சொர்ணம்.

    இந்த ஆண்மகன் கடோத்கஜன் போல் வளர்ந்துவிட்டாலும், பெற்ற அன்னைக்கு என்றும் அவன் செல்லப்பிள்ளையே...!

    சொர்ணம்...! பெயருக்கு ஏற்றாற்போல் தாமரையென முகம்.

    கணவர் மிலிட்டரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே, தேசத்துக்காக உயிர் நீத்தவர் என்ற பெருமிதத்தில், பூவையும், பொட்டையும் மிகுந்த மரியாதையுடன் இழந்தவர்.

    கணவரைப் பிரிந்த நேரம், சொர்ணத்தின் இரண்டு மகன்களும் தோளுக்கு மேல் வளர்ந்து நின்றதால், சிங்கக்குட்டிகள் அருகில் நிற்கும் மனோதிடம்.

    மூத்தவன் குமார் தந்தையின் வழியே சென்று, இப்போது இந்திய ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறான். அவனது மனைவி, குழந்தைகள் அனைவரும் வடமாநிலத்தின் ஏதோவொரு பகுதியில் பத்திரமாக வசிக்கிறார்கள்.

    இளையவன் பிரேம்... இங்கே தனது தாய் சொர்ணத்தின் அருகில்...!

    அம்மாவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல், மீண்டும் அமைதியில் ஆழ்ந்தான் பிரேம்.

    பிறந்து வளர்ந்ததில் இருந்தே ஆர்ப்பாட்டம் இல்லாத

    Enjoying the preview?
    Page 1 of 1