Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paarvai Karpoora Deepamaa..!
Paarvai Karpoora Deepamaa..!
Paarvai Karpoora Deepamaa..!
Ebook433 pages4 hours

Paarvai Karpoora Deepamaa..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“நீங்க தர்ஷன் முடிச்சாச்சா பாஸ்? இல்லேன்னா, இரண்டு பேரும் ஒண்ணா போய் சுவாமி தரிசனம் பண்ணிடுங்களேன். ஆபீசுல மட்டும்தான் பாஸ்-ஸ்டாஃப் உறவுமுறை. இங்கே சாதாரண ஃபிரண்ட்ஸ் மாதிரி நடந்துக்கலாமே!” என்று அப்போதுதான் ஞானோதயம் வந்தவள் போல் சொன்னாள் விவேதிகா. மிருத்யுவின் கண்களில் மின்னல் வெட்டியது. அதைக் காட்டிக் கொள்ளாமல், லாவண்யாவைப் பார்த்தான். லாவண்யாவுக்குச் சரியென்று சொல்வதைத் தவிர, வேறு வழியிருக்கவில்லை. முன்பின் பார்த்தறியாத இந்தப் பிரம்மாண்ட கோவிலை, அவளால் நிச்சயம் ஒற்றை ஆளாகச் சுற்றிப் பார்க்கமுடியாது. இவனோடு சேர்ந்து கோவிலைச் சுற்றினால் என்ன வந்தது? விவா சொன்னது போல் இங்கே இவன் பாஸ் இல்லை. ஃப்ரெண்ட் தான். லாவண்யா சரியென்று தலையாட்ட, கூந்தலில் சூடியிருந்த மல்லிகைச் சரங்கள், அவள் கழுத்தசைவுக்கு ஏற்ப அசைந்தன.

‘டேய்... கோவில்..டா... படவா...’ தன்னைத்தானே திட்டிக்கொண்டான் மிருத்யு. “நான் தர்ஷன் முடிஞ்சு திரும்பி வர்றவரைக்கும் நீ பத்திரமா இரு.” என்று அவன் விவேதிகாவிடம் சொல்ல, “என்னை எவன் தூக்கிட்டுப் போகப் போறான்? மனசுல இருக்கறதெல்லாம் நிறைவேறணும்-ன்னு நீ சுவாமிகிட்ட ஸ்ட்ராங்கா வேண்டிக்கோ.” என்று கட்டை விரலை உயர்த்தினாள் விவா. மிருத்யு-லாவண்யா இருவரும் கோவிலுக்குள் ஒன்றாகக் காலெடுத்து வைத்தார்கள். பார்த்துக் கொண்டிருந்த விவேதிகாவுக்கு மனம் நிறைய மகிழ்ச்சி. ‘யோகநந்தீஸ்வரா! உனக்கும், எனக்கும் வேணா, ‘டஃப்’ இருக்கலாம். ஆனால், மிருத்யு ரொம்ப நல்லவன். அவன் ஆசைப்பட்ட வாழ்க்கை அவனுக்குக் கிடைக்கற மாதிரி செய்.’ வெளியிலிருந்தே வேண்டிக் கொண்டாள் விவேதிகா.

Languageதமிழ்
Release dateJul 23, 2022
ISBN6580134508905
Paarvai Karpoora Deepamaa..!

Read more from Hansika Suga

Related authors

Related to Paarvai Karpoora Deepamaa..!

Related ebooks

Reviews for Paarvai Karpoora Deepamaa..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paarvai Karpoora Deepamaa..! - Hansika Suga

    http://www.pustaka.co.in

    பார்வை கற்பூர தீபமா..!

    Paarvai Karpoora Deepamaa..!

    Author:

    ஹன்சிகா சுகா

    Hansika Suga

    For more books

    https://www.pustaka.co.in/home/author/hansika-suga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    1

    நேரமாகுதுன்னு சொன்னே! அப்படியே கிளம்பு என்றார் சௌந்தரவல்லி.

    ஏது… இந்தக் கசகசங்கற பட்டுப்புடவையில அப்படியே வேலைக்குப் போறதா? என்று உடைமாற்றும் அறைக்குள் சென்றாள் லாவண்யா.

    சற்று நேரத்தில் சந்தன நிற சூரிதாரில் அழகுப் பதுமையாய் அவள் புறப்பட, இறைவனின் படத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டார் சௌந்தரவல்லி.

    பிடிவாதமா வேலைக்குப் போயே தீருவேன்னு போறா. அவளைப் பத்திரமா நீதான் பார்த்துக்கணும். காலம் கெட்டுக் கிடக்குது. என் மகளுக்கு எந்த ஆபத்தும் வந்துடக்கூடாது. உனக்குத் தெரியாதது இல்ல. நீ அங்கே இருந்தே, இங்கே நடக்கற அத்தனையும் பார்க்கறவன். மீண்டும் கன்னத்தில் போட்டுக்கொண்டார் சௌந்தரவல்லி.

    உன்னுடைய ரோதனை தாங்காமல்தான் இறைவன் அங்கேயே இருக்கிறார். பூமிக்கு விசிட் செய்யறதே இல்ல. என்றபடி வந்தார் கமலநாதன்.

    நல்லா சொல்லுவீங்க! பொண்ணைப் பெற்ற அம்மாவா அடுத்த ஜென்மத்துல இருந்து பாருங்க. வயித்துல நெருப்பைக் கட்டிட்டு வாழறதுன்னா என்னன்னு, அப்ப தெரியும். முகத்தை நொடித்துக்கொண்டார் சௌந்தரவல்லி.

    ஊருக்குள்ள இவ ஒருத்திதான் பொண்ணைப் பெத்துட்டா? உன் மகள் அப்சரஸ் மாதிரி அழகியா அல்லது வேறு எந்தப் பெண்ணுமே தைரியமா வேலைக்குப் போகலயா? பில்ட்-அப் கொடுக்கற பேர்ல அவளைக் கோழையா மாற்றிடாதே! இந்தக் காலத்துல பெண்ணுக்கு முகலாவண்யத்தை விட, தைரியமும், பொருளாதார சுதந்திரமும் ரொம்ப அவசியம். லேடீஸ் ஆர் ரீச்சிங் தெர் நியூ ஹைட்ஸ்! நீ வேணால் பழைய பஞ்சாங்கமா இருந்துக்கோ. டோன்ட் ஸ்பாயில் மை டாட்டர் என்றார் கமலநாதன்.

    சரி… சரி… சுண்டலும், பாயாசமும் கொண்டு வர்றேன். எப்பவும் போல நியூஸ் பேப்பரை விரிச்சு வெச்சுட்டு, கபளீகரம் பண்ணுங்க. என்றபடி உள்ளே சென்றார் சௌந்தரவல்லி.

    உலகின் வடதுருவமும், தென்துருவமும் ஒன்றாகச் சந்தித்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறதா?

    வடகொரியாவும், தென்கொரியாவும் ஒன்று சேர வாய்ப்பிருக்கிறதா?

    நீரும், நெருப்பும் இணையுமா? கடலும், வானும் இணையுமா?

    அதுபோலத்தான் கமலநாதனும், சௌந்தரவல்லியும்!

    இந்தக் காலத்து ஜோடிகளைப் போல் ஒத்துவரவில்லை என்று தெரிந்தவுடன், அவர்கள் உடனே விவாகரத்து வரை சென்றுவிடவில்லை. ஆயிரம் சண்டை போடுவார்கள். அட்ஜஸ்ட் செய்தும் வாழ்வார்கள்.

    வீட்டுக்கு வீடு ஆயிரம் வாசப்படி… எந்த வீட்டுல சண்டையில்லாமல் இருக்கு? என்று சமாளித்துவிடுவார் சௌந்தரவல்லி.

    கமலநாதன் அடுத்தவர் விமர்சனங்களுக்கோ, கண்டனங்களுக்கோ செவிசாய்ப்பதே இல்லை. நீ யாரடா என்னைச் சொல்வதற்கு என்று கெத்து காட்டுபவர். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நிற்பவர். தனது செல்ல மகள் லாவண்யாவையும் அவருடைய பிரியப்படியே வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

    லாவண்யாவின் அண்ணன் வசுப்பிரதன், இந்தத் தொல்லையெல்லாம் வேண்டாம் என்று செகந்தராபாத்தில் தன் மனைவி, குழந்தையோடு செட்டிலாகி விட்டான்.

    அப்பாவும், அம்மாவும் போடும் செல்லச் சண்டைகள், லாவண்யாவுக்கு நல்ல ‘என்டர்டெயின்மெண்ட்’ என்று கூடச் சொல்லலாம்.

    பாதிநேரம் வீட்டில் டி.வி.யை அமர்த்திவிட்டு இவர்களின் வாக்குவாதங்களை இரசித்துக் கொண்டிருப்பாள்.

    நியாயத்தை நீயே சொல்லுடி… என்று சௌந்தரவல்லி அவளை நெருங்கும்போது, டக்கென்று அப்பாவுக்காகப் பரிந்து பேசி, அம்மாவுக்கு அல்வா கொடுத்து விடுவாள்.

    எவ்வளவுதான் உனக்குப் பார்த்துப் பார்த்துச் செய்தாலும், நீ அவர் பக்கம்தான். இதே இடத்துல வசு இருந்தான்னா, நடக்கறதே வேற! புலம்பிவிட்டுச் செல்வார் சௌந்தரவல்லி.

    நெற்றி நிறைய குங்குமம். கையில கயிறு. என்ன விசேஷம்? என்றாள் ஸ்டெப்பி.

    வரலக்ஷ்மி விரதம். நாலு மணிக்கே எழுந்து தலைக்குக் குளிச்சு, பூஜை முடிச்சு, பட்டுப்புடவை மாற்றி, நார்மலுக்கு வந்து… காட்… ஒரு சின்ன பண்டிகைன்னாலே எங்கம்மா வீட்டையே கோவிலா மாற்றிடுவாங்க. இன்னைக்கு கேட்கவே வேண்டாம் என்று சிரித்துக்கொண்டே தன் இருக்கையில் அமர்ந்தாள் லாவண்யா.

    ஃபேன்சி பொருட்கள் தயாரிக்கும் ஒரு பிரபல நிறுவனத்தின் ரீஜனல் கிளையில் நல்ல வேலை!

    தலைமையகம் பெங்களூருவில் இருக்க, எப்போதாவது அங்கிருந்து வரும் உயரதிகாரிகள் திடுதிப்பென்று இங்கே விசிட் அடிப்பார்கள்.

    மற்றபடி, ரீஜனல் கிளையின் மேலாண்மை முழுவதும் தி கிரேட் சீதாராமன் மற்றும் அவரது குழுவினர் கையில்!

    சீதாராமன் செய்யும் அடாவடி சொல்லி மாளாது. தேவையில்லாத தம்மாத்தூண்டு விஷயத்துக்கெல்லாம் சீறிக்கொண்டு வருவார்.

    இன்னைக்கு யாருக்கு அர்ச்சனை? சத்தம் பலமா இருக்கு. ஸ்டெப்பியிடம் இரகசியம் பேசினாள் லாவண்யா.

    மார்க்கெட்டிங்ல புதுசா ஜாயின் பண்ண ரவிக்குமார். ஏட்டுப்படிப்பு எதுக்கோ உதவாதுன்னு சும்மாவா சொன்னாங்க. பையனுக்கு ‘ஆனா… ஆவென்னா’வுல இருந்து சொல்லித் தரவேண்டியிருக்கு-ன்னு புலம்பல்கள் காதுல விழுந்தது.

    எல்லோருக்கும் நினைச்ச வேகத்துல எல்லா கலையும் வந்துடுமா? அவனே இப்பதான் ட்ரெயினிங்ல இருக்கான். வில்லேஜ் பேக்-கிரவுன்ட் ஆசாமிக்கு சிட்டி அட்மாஸ்பியர் கஷ்டம். இந்த ஊருக்கும், கம்பெனிக்கும் அட்ஜஸ்ட்டாக டைம் எடுக்கும். அதுக்குள்ள இப்படிப் போட்டு வெளுக்காட்டி என்ன? அலுத்துக்கொண்டாள் லாவண்யா.

    சீதாராமன் சாரோட பி.பி.க்கும் காரணம் உண்டு. இந்தமுறை இன்ஸ்பெக்ஷன் வழக்கமான டீம் வரப் போறதில்ல. திடுதிப்புன்னும் வரப்போறதில்ல. இத்தனாந்தேதி, இத்தனை மணிக்கு திருவாளர் மிருத்யுன்ஜெயன் வரப்போகிறார்-ன்னு ஏற்கனவே தகவல் வந்தாச்சு. பேரு வித்தியாசமா இருக்கில்ல. ஆளு எப்படியோ?

    மரணத்தை வென்றவன்-ன்னு அர்த்தம். எப்ப வர்றதா சொல்லிக்கிட்டாங்க? என்றாள் லாவண்யா, ஆயாசத்துடன்.

    அவளே அலுவலகத்தில் லீவு கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தாள்.

    லீவு கிடைக்குமான்னு பாரு லாவண்யா. குடும்பத்தோட திருச்செந்தூர் போயிட்டு வரணும்-ன்னு உன் அம்மா பிரியப்படறா! என்று அப்பா ஏற்கனவே அவளிடம் சொன்னதுதான்.

    இப்போது இருக்கும் சூழ்நிலையில் லீவு கேட்டால், சீதாராமன் டமாலென்று ஹைட்ரஜன் பாம்போல வெடித்து விடுவார். வாயை மூடிக்கொண்டு வேலையைப் பார்க்க வேண்டியதுதான்.

    வர்றவரு வெறுமனே இன்ஸ்பெக்ஷன் அண்ட் ஆடிட்டிங் டீம் இல்லையாம். பெரிய எம்.டி.க்கு ரொம்பவும் வேண்டப்பட்டவராம். சிங்கிள் மேன் ஆர்மி. என்று அலுவலகத்தில் திடீர் செய்தி பரவ,

    இதுவரை பார்த்திராத அந்த மிருத்யுன்ஜெயனை அனைவரும் திகிலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

    ஜெயன் ‘என்ட்ரி’ தரவேண்டிய அந்த நன்னாளும் வந்தது. வழக்கத்தை விட இருபது நிமிடம் முன்பாகவே கிளம்பிவிட்டாள் லாவண்யா.

    வெறும் இரண்டே இட்லி சாப்பிட்டுப்போனால் எப்படி? என்று சௌந்தரி திட்டியது லாவண்யாவின் காதில் விழவில்லை.

    க்கும்! இந்த ட்ராபிக்கில் டூவீலரை ஓட்டி, ஆபீஸ் போய் சேருவதற்குள்! இந்த அம்மாவுக்கு இட்லியும், சாம்பாரும் மட்டுமே உலகம்.

    ஒருநாளாவது என் டூவீலரை ஓட்டிட்டு ஆபீஸ் வரைக்கும் வந்து சேருங்க. இட்லி முக்கியமா… ஆபீஸ் முக்கியமானு அப்ப தெரியும். என்றுவிட்டு வண்டியை நோக்கி ஓடினாள்.

    வரமாட்டேன்னு நினைச்சயா? இந்த சௌந்தரி நினைச்சா எதையும் செய்வா! அரைவயித்துக்குச் சாப்பிட்டுப் போறியேன்னு சொன்னால், வியாக்யானம் பேசிட்டு! கோபத்தில் கொந்தளித்தார் சௌந்தரி.

    வீடு என்பது ஆரோக்கியத்தின் பிறப்பிடம். வீட்டில் இருப்பவர்களின் நலன் அவருக்கு மிகவும் முக்கியம். வெறும் சைவ சாப்பாடாக இருந்தாலும், பார்த்துப் பார்த்துச் சமைப்பார் சௌந்தரி.

    மூன்றுவித காய்கறிகள் தினமும் உணவில் இருக்கும். பருப்புகள் தாராளமாகத் துணை சேரவேண்டும். நெய் இல்லாத நாள் இல்லை. கட்டித் தயிரும், உறைப்பான ஊறுகாயும்!

    கணவரும், மகளும் வயிறார சாப்பிட்டு முடித்த பிறகே, அவர் தனக்கான உணவைத் தேடுவார்.

    கல்லூரி சென்றபோதும் சரி… இப்போது வேலைக்குச் செல்லும்போதும் சரி… லாவண்யா தனது காலை உணவில் சரியாக அக்கறை செலுத்துவது குறைந்து போனது.

    சௌந்தரிக்கு அதில் சற்று கோபமும், வருத்தமும் மிகுதியாகவே! அப்படியாவது வேலைக்குச் சென்று துன்பப்பட வேண்டிய அவசியமென்ன… எங்கள் காலத்தில் வேலைக்கா சென்றோம்? ஒழுங்காக வீட்டைப் பேணி வலம் வரவில்லையா என்று அங்கலாய்ப்பார்.

    அந்தக் காலத்துச் சங்கதிகள் பலவும், இந்தக் காலத்தில் ஒத்து வருவதில்லை என்பது வேறு விஷயம்.

    டபிள் சமோசாவா? என்னாச்சு? அகோரப்பசி போல! என்றாள் ஸ்டெப்பி, அன்று பகல் பதினோரு மணியளவில்.

    ஆமாம். இன்னைக்கு இன்ஸ்பெக்ஷன் ஆச்சே… லேட்டாகிட வேண்டாமேன்னு வெறும் இரண்டு இட்லியை முழுங்கிட்டு வந்தேன். ஆபீஸ் வந்த கொஞ்ச நேரத்துலேயே அகோரப் பசி. இன்ஸ்பெக்ஷன் கேன்சலாகும்-ன்னு எனக்கு எப்படித் தெரியும்? இன்னொரு கேக் ஆர்டர் பண்ணு. வயிறு ஃபுல் ஆகற மாதிரி தெரியல என்றாள் லாவண்யா.

    கேன்சல் ஆகல. போஸ்ட்போன் ஆகியிருக்கு. அவ்வளவுதான் என்று இருவருக்கும் கேக் ஆர்டர் செய்தாள் ஸ்டெப்பி.

    ஒரே டென்ஷனப்பா… டென்ஷன்! அந்த மிருத்யு வந்ததும் யார்ரா நீ… ஆபீசே அலப்பறையா இருக்குன்னு கேட்கணும் என்று அலுத்துக்கொண்டே கேக்கை விழுங்கினாள் ஸ்டெப்பி.

    உனக்கு அவ்வளவு தைரியமிருந்தால் செய்து காண்பி. சும்மா வாய்ல வடை சுட வேண்டியது. மிருத்யுன்னு சொல்லாதே… ஜெயன்னு சொல்லு. என்றாள் லாவண்யா.

    ஆங்! ஓகே மேடம். இருக்கற பேரைத்தான் சுருக்க முடியும். வடைன்னதும் ஞாபகம் வருது. நாலு மசால்வடை பார்சல் கட்டி வாங்கிப்போம். மதியம் லஞ்ச் நேரத்துல ஆகும் என்று அதற்கும் சேர்த்து பில் போட்டாள் ஸ்டெப்பி.

    அலுவலகத்தை விட்டு சற்றே தள்ளியிருந்த பேக்கரியில் சாப்பிட்டுவிட்டு இருவரும் சாவகாசமாக நடந்து வந்தார்கள்.

    எங்கே போயிட்டீங்க இரண்டு பேரும்? சார் வந்தாச்சு. நல்லா வாங்கப்போறீங்க என்று வரவேற்றார் அன்புராஜ்.

    சார்…ன்னா… மிருத்யுன்ஜெயன் சாரா? இன்ஸ்பெக்ஷன் போஸ்ட்போன் ஆகிடுச்சுன்னு ஆபீசுல பேசிட்டாங்களே! அதிர்ந்து கேட்டாள் லாவண்யா.

    "அதுகூட ஒரு பிரான்க்தான் போல! ‘போஸ்ட்போன்’னு சொல்லிட்டு அப்புறம் திடீர்னு வந்தால் வண்டவாளம்

    தெரியும்-ன்னு நினைச்சிருக்கலாம். சீக்கிரம் சீட்டுக்குப் போங்க. சார் அங்கேதான் நின்னுட்டு லெஃப்ட் அண்ட் ரைட் விட்டுட்டு இருக்காரு."

    நாசமாப்போச்சு. என்னைக்கும் இல்லாமல் இன்னைக்குன்னு பேக்கரியில ரொம்ப நேரம் இருந்தோம். மாட்டப் போறோம். என்று புலம்பிக்கொண்டே லாவண்யா பூனைபோல் தன் இருக்கைக்குச் செல்லவும்,

    முதுகு காட்டி நின்றுகொண்டிருந்த மெகா உருவம் அவள் பக்கம் திரும்பவும் மிகச் சரியாக இருந்தது.

    ஸ்டெப்பியும், லாவண்யாவும் வெலவெலத்துப் போனார்கள். அவன் பார்வை சீற்றத்துடன் அவர்களை ஒருகணம் ஆராய்ந்து, சீதாராமன் பக்கம் கேள்வியுடன் திரும்பியது.

    நல்ல பொண்ணுங்க சார். சின்சியர் ஸ்டாஃப். வொர்க்குல ரொம்ப கரெக்டா இருப்பாங்க. இன்னைக்கு என்னவோ… என்று தலைகுனிந்து கொண்டார் சீதாராமன்.

    முறைப்பாகப் பார்த்தவன், அழுத்தமான நடையுடன் அவர்கள் அருகே வந்தான். சுவாசத்தை வேகமாக இழுத்து, லாவண்யாவின் கையிலிருந்த பார்சலை உற்றுப் பார்த்தான்.

    ‘பெருச்சாளி மசால்வடையை மோப்பம் பிடிக்குது’ என்று மனத்துக்குள் பொருமினாள் ஸ்டெப்பி.

    இருக்கற பிசினஸை க்ளோஸ் பண்ணிட்டு, வடை பிசினஸ் ஆரம்பிச்சுடலாம் சீதாராமன் சார்… என்றவன்,

    எவ்ரி ஒன் ஆஃப் யூ… கம் டு மை கேபின் என்றுவிட்டுச் செல்ல,

    அர்ச்சனையைத் தேடி ஒவ்வொருவராக உள்ளே சென்றார்கள். என்ன நடந்ததோ… அன்புராஜ் வெளியே வந்தபோது நெற்றி வியர்வையை ஒற்றிக்கொண்டு வந்தார்.

    ஏசி ரூம்ல இப்படி வேர்க்குதுன்னா… என்று பரிதாபமாகத் தோழியைப் பார்த்தாள் ஸ்டெப்பி.

    இப்ப என்ன? வயிறு பசிச்சது. சாப்பிடப் போனோம். அவ்வளவுதானே! இது ஒரு மிகப்பெரிய குற்றம்-ன்னு சத்தம் போட்டால் போடட்டும். அவனும் மனுஷன்தான். அவனுக்கும் வயிறுன்னு ஒண்ணு இருக்கும். பசின்னா என்னன்னு தெரியும். படக்கென்று பேசினாள் லாவண்யா.

    ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம். உன்னை உள்ளே கூப்பிடும்போது நானும் வந்துடறேன். பக்கத்துல ஒருத்தி நின்னா, எக்ஸ்ட்ரா தைரியம் கிடைக்கும் என்றாள் ஸ்டெப்பி.

    தங்களை எப்போது உள்ளே அழைப்பான் என்று இருவருமே காத்திருந்தார்கள். ஆனால், கடைசியாக கேபினில் இருந்து வெளியே வந்தது சீதாராமன்.

    சார் முக்கியமான ஃபோன்கால் பேசிட்டு இருக்கார். எல்லாம் அவங்கவங்க சீட்டுக்குப் போங்க என்று அவர் சொல்லவும், பெண்கள் இருவரும் திருதிருவென்று விழித்தார்கள்.

    இரண்டு நாட்கள் இருந்து எல்லோரையும் நன்றாக மந்திரித்துவிட்டு, புறப்பட்டுச் சென்றான் மிருத்யுன்ஜெயன்.

    மசால்வடை மேட்டர் அத்துடன் மறக்கப்பட்ட நிம்மதியில் திளைத்தார்கள் லாவண்யாவும், ஸ்டெப்பியும்!

    இனிமேல் எப்ப இன்ஸ்பெக்ஷனாலும் இவர்தான் வருவாராம் என்ற கொசுறுச் செய்தி வலம்வர,

    சீதாராமன் மேலும் அதிக அக்கறையுடன் தன் மேலாண்மையைச் செலுத்தத் தொடங்கினார்.

    2

    ஆத்ரேயா நிவாஸ் என்ற அழகிய பங்களா. கிரிதர் ஆத்ரேயா அந்தக் குடும்பத்தின் தலைவர்.

    அவரது திறமையாலும், சாதுரியத்தாலும் ஆரம்பிக்கப்பட்ட தொழில் நிறுவனம், இன்று தனஞ்செயன், மிருதியுன்ஜெயன் ஆகிய இரு மகன்களால் வழிநடத்திச் செல்லப்படுகிறது.

    அப்பா ஆத்ரேயாவை உருவத்திலும், திறமையிலும் உரித்து வைத்துப் பிறந்தவன் தனஞ்ஜெயன்.

    அம்மா சுமித்ராவின் குணங்களை ஒட்டிப் பிறந்தவன் மிருத்யுன்ஜெயன். வீட்டிலும், நட்பு வட்டத்திலும் அவர்களை அழைப்பது ‘தனா’ மற்றும் ‘ஜெய்’.

    ஜெய் வந்துட்டானா தனா? என்று கேட்டுக்கொண்டே ஹாலில் இருந்த சுவாமி படங்களுக்குத் தூபம் காட்டினார் சுமித்ரா.

    இந்நேரம் வந்திருக்கணும். ஏன் லேட்டுன்னு தெரியல? என்றான் தனா, ஆங்கிலப் பத்திரிக்கையில் இருந்து பார்வையை விலக்காமல்!

    ஹாய்… குட்மார்னிங்! என்றபடி உள்ளே வந்தாள் சாஹிதா.

    ஹாய்… சஹி டார்லிங்… என்று ஆர்வமாய்க் கைகாட்டினான் தனஞ்ஜெய்.

    எப்போதும் இளமைகள் எடுப்பாகத் தெரியும் டி-ஷர்ட் மற்றும் தொடை தெரியும்படியான ஷார்ட்ஸ் அல்லது குட்டை ஸ்கர்ட்!

    விழாக்களின் போதோ அல்லது மிகவும் வற்புறுத்தினால் மட்டும் பட்டுப்புடவை, காக்ரா போன்ற உடைகள்!

    வெளிநாட்டில் படித்தவள்! கர்வத்துக்கும், திமிருக்கும் பஞ்சமில்லை. சர்வ சுதந்தரி.

    சாஹிதாவின் தந்தை ஹயக்ரீவ், ஆத்ரேயாவை விட பலமடங்கு உயர்வான செல்வந்தர். ஊருக்குள் இவர்களை விட, அவர்களுக்குச் செல்வாக்கு அதிகம்.

    அதனாலேயே சாஹிதா எப்படி நடந்துகொண்டாலும், ஆத்ரேயா அல்லது தனா அவளை எதுவுமே சொல்வது இல்லை.

    மேலும் தனாவுக்கு அவள் அப்படி மாடர்னாக இருப்பது எப்போதுமே பிடிக்கும்.

    அவனை நெருங்கி அமர்ந்தவள், பச்சக்கென்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

    ஹேய்… அம்மா இருக்காங்க… என்று தனா பதறவில்லை. சாஹிதாவை அந்தக் கோலத்தில் கண்டாலே அம்மாவுக்குப் பிடிக்காது. உள்ளே சென்றுவிடுவார் என்று அவனுக்குத் தெரியும்.

    உன்னை எந்தக் கோலத்துல பார்த்தாலும் நல்லாத்தான் இருக்கு. ஹால் என்பதையும் மறந்து தழுவிக்கொண்டான் தனா.

    அவர்களது திருமணத்துக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவாகவே இருந்தது. திருமண ஏற்பாடுகள் துரிதகதியில் நடந்து கொண்டிருக்க,

    எப்போதும் போல் அவர்கள் காதலித்துக் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தார்கள். அவன் கழுத்தை வளைத்து, காதருகே உதடு பதித்து இரகசியம் பேசினாள் சாஹி.

    பிராண்ட் நியூ வில்லா! நான் நேர்ல பார்த்துட்டு வந்துட்டேன். அழகோ அழகு… அப்படியொரு அழகு. நம்ம திருமணம் முடிஞ்சதும் அங்கே போயிடலாம். ஆன்ட்டி இருக்காங்களா… அங்கிள் இருக்காங்களா… வேறு யாராவது நம்மை வேடிக்கைப் பார்க்கறாங்களா… ஒரு கவலையும் இல்லை. ஒன்லி யூ அண்ட் மீ! நிறைய ரொமான்ஸ் பண்ணுவோம். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அவன் மடிமீது ஏறி அமர்ந்தாள் சாஹிதா.

    சொர்க்கத்தையே தன் மடிமீது ஏந்தியதாக உணர்ந்தான் தனஞ்ஜெய். யூ ஆர் மெஸ்மரைசிங் என்று கிளுகிளுப்பாய் சொல்லிக்கொண்டே அவள் கழுத்தின் கீழ் பார்வையால் ஆராய்ந்தான்.

    அவன் கரங்கள் அவளை நோக்கி ஈர்க்கப்படுமுன், சின்னதாய் ஒரு ஹாரன் ஒலியுடன் மிருத்யுன்ஜெயனின் கார் போர்டிகோவில் வந்து நின்றது.

    திஸ் இஸ் வாட் ஐ செட்! நம்ம வீடுன்னா எந்தவொரு தொல்லையும் இருக்காது. ஸீ யூ அகெயின். சிடுசிடுப்பான முகத்துடன் கிளம்பினாள் சாஹிதா.

    சல்லாபம் தடைப்பட்டதன் அவதி. தனாவுக்கு மட்டும் அது இல்லையா என்ன? அதற்காகச் சொந்தத் தம்பியிடம் முகம் காட்ட முடியாது.

    ஹாய் சஹி… என்ற மிருத்யுன்ஜெயனின் அழைப்புக்கு, ஒப்புக்கு தலையசைத்து விட்டுச் சென்றாள்.

    வாடா… ஃபர்ஸ்ட் டைம் ரீஜனல் ஆபீஸ் போயிருக்கே? ஹௌ வாஸ் தி எக்ஸ்பீரியன்ஸ்? என்று வரவேற்றான் தனா.

    வாடா ஜெய்… இன்னும் உன்னைக் காணலையேன்னு இப்பதான் கேட்டுட்டு இருந்தேன் என்றபடி வந்தார் சுமித்ரா.

    என்னவோ பலவருஷம் உன்னைப் பிரிஞ்சு இருந்த மாதிரி அம்மா கொடுக்கற பில்ட்-அப் பார். அம்மாவுக்கு எப்பவுமே நீ உசத்தி என்றான் தனா, பொறாமை பொங்கும் குரலில்.

    ஆமாம்…டா. ஜெயனுக்கு நான் மட்டும்தான் இருக்கேன். உனக்கு மடியிலே உட்கார்ந்து அக்…க…றை…யா பார்த்துக்க ஒருத்தி இருக்காளே! அவளே உன்னை ந…ல்…லா… பார்த்துப்பா. முகத்தை நொடித்துக்கொண்டு உள்ளே சென்றார் சுமித்ரா.

    வழக்கமான பல்லவி. நீ உள்ளே வா… என்று முன்னே சென்றான் தனஞ்ஜெய்.

    காலை உணவு நேரம்! வழக்கம்போல் குடும்ப ஆண்கள் அனைவரும் ஒன்றாகக் கூடியமர்ந்து உண்டார்கள்.

    சில முக்கியமான விஷயங்களை உங்களோடு கலந்தாலோசிக்க நினைக்கறேன் மை டியர் சன்ஸ் என்று ஆரம்பித்தார் கிரிதர் ஆத்ரேயா.

    ‘என்ன’ என்பதுபோல் அனைவருமே நிமிர்ந்து பார்த்தார்கள்.

    மெயின் பிசினஸ் இங்கே… ரீஜனல் ஆபீஸ் தமிழ்நாட்டுலன்னு இதுவரைக்கும் பார்த்துட்டு இருந்தோம். வி ஹாவ் ஒன்லி மார்க்கெட்டிங் அண்ட் ப்ரொமோஷன் டிவிஷன் தெர். அங்கேயே இன்னொரு புது யூனிட் ஓபன் செய்தால் என்ன? சம்திங் லைக் எ சிஸ்டர் கன்செர்ன்.

    எதுக்குப்பா? இப்ப இருக்கற மாதிரியே இருக்கட்டும் என்றான் ஜெய்.

    பேன்சி லைன்ல நாம கவர் பண்ணவேண்டிய பொருட்கள் இன்னும் ஏராளமா இருக்கு. அக்ஸசரீஸ்-ன்னு பார்த்தால் எண்ணிலடங்காமல் லிஸ்ட் போயிட்டே இருக்கு. பசங்க நீங்க வளர்ந்து வந்தாச்சு. இங்கே இருக்கறதை தனஞ்ஜெய் அண்ட் நான் பார்த்துக்கறோம். புது யூனிட் மிருத்யுன்ஜெய்கிட்ட கொடுக்கலாம்-ன்னு இருக்கேன். என்ன சொல்றீங்க? என்றார் கிரிதர்.

    நம்ம பிசினஸை விரிவாக்க நினைக்கறீங்க. நல்லதுதானே. எனக்கு ஓகே என்றான் தனா.

    எனக்குப் பிடிக்கல. ஜெயன் இங்கேயே இருக்கட்டும். புது ப்ராஜெக்ட் ஒண்ணும் வேண்டாம். இங்க இருக்கற பிசினஸுக்கு என்ன குறைச்சல்? இதுவே போதும் என்றார் சுமித்ரா.

    ஆமாம்… உன்னை மாதிரி எலான்மஸ்க் நினைச்சிருந்தால் இவ்வளவு பெரிய கோடீஸ்வரர் ஆகியிருக்க முடியுமா? இறைவன் எனக்கு இரண்டு ஆண் பிள்ளைகளைக் கொடுத்ததே, தூண் மாதிரியிருந்து பிசினஸை வளர்த்து விடத்தான். அண்ட், எனக்கும் வயசாகிட்டு வருது. இன்னும் சில வருஷங்கள்ல சொத்துக்களைப் பிரிச்சுக் கொடுக்க நேரும் சுமித்ரா. இவனுக்கு ஒரு யூனிட், அவனுக்கு ஒரு யூனிட்டுன்னு தனித்தனியா அமைஞ்சிட்டால், தொழிலைப் பிரிக்கும்போது குழப்பம் வராது என்றார் கிரிதர்.

    வெல்செட் டாட்… என்றான் தனா.

    என்னடா வெல்செட்? அப்படிப் போறதுன்னா நீ போ. உனக்கு இந்த பீல்டுல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. இவன் இப்பதான் புதுசா உட்கார்ந்திருக்கான். இவன் இங்கேயே இருக்கட்டும் என்றார் சுமித்ரா.

    பார்த்தீங்களா டாட்! நான் தேவையில்லையாம். ஜெய் மட்டும் வேணுமாம். என்னவொரு ஓரவஞ்சனை. தாய்ப்பாசத்துல கலப்படம் இருக்கலாமா? ஐயகோ! என்றான் தனா.

    தனா எப்படி அங்கே போவான் சுமித்ரா? அவனுடைய மாமனார் வீடு இங்கேயிருக்க அவன் எப்படி அங்கே போகமுடியும்? இனி, தனா நமக்கு மட்டும் வாரிசு இல்ல. ஹயக்ரீவாவுக்கும் அவன்தான் ரைட் ஹாண்டா இருக்கணும். என்னடா… நான் சொல்றது புரியுதா? என்று தனாவை அழுத்தமாகப் பார்த்தார் ஆத்ரேயா.

    மேலும், கீழும் தலையை ஆட்டினான் மகன்.

    புது யூனிட் ஆரம்பிக்கறது பற்றி எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் வேணும். தொழிலையும், சொத்துக்களையும் பிரிக்க, இப்ப என்ன அவசரம்? முதல்ல அண்ணன் கல்யாணம் முடியணும்… அப்புறம் என் கல்யாணம் நடக்கணும்… நீங்க பேரன், பேத்திகளைப் பார்க்கணும். அதுக்குள்ள பாகப்பிரிவினை பற்றி என்ன பேச்சு? கடுகடுவென்று சொன்னான் இளையவன்.

    அப்பா இப்பவே சொத்துக்களைப் பிரிக்கறேன்னு சொன்னாரா? இன்னும் சில வருஷங்கள்-ன்னு அழுத்தமா சொல்லித்தானே சொன்னார். எல்லா குடும்பத்துலயும் நடக்கறதை அவர் முன்கூட்டியே யோசிச்சிருக்கார். எதுலயும் தெளிவா இருக்கறது நல்லதுதானே! சைடு கேப்புல அப்படியே அவன் கல்யாணத்தைப் பற்றியும் பேசிட்டான் என்று சிரித்தான் தனா.

    ஆமாம்… உனக்கும், அவனுக்கும் வெறும் இரண்டு வருஷ வித்தியாசம். உன் கல்யாணம் முடிஞ்சவுடனே இவனுக்குப் பொண்ணு பார்த்தால், எல்லாம் கூடிவர சரியாக இருக்கும். இவனுக்கு அமையறவளாவது குடும்பத்துக்கு ஏற்ற மகாலட்சுமியா இருக்கணும். என்றார் சுமித்ரா.

    கையை உதறிக்கொண்டு கோபத்துடன் எழுந்தான் தனா. மனைவியை முறைப்பாகப் பார்த்தார் கிரிதர். தலையில் கைவைத்துக்கொண்டான் ஜெயன்.

    சஹியைப் பற்றி ஏதாவது சொன்னால், அண்ணனுக்குப் பிடிக்காதுன்னு தெரியாதா? இதுக்குப்பேருதான் ஏழரையை இழுத்து விடறது என்று ஜெயன் சொல்லிக்கொண்டிருந்த போதே, கிரிதரும் கைகழுவ எழுந்தார்.

    இப்ப என்னடா சொல்லிட்டேன்? ஏன் என்மேல கோபப்படறாங்க? மனசுல பட்டதைப் பேச எனக்கு உரிமையில்லையா? இவங்களா ஒரு பொண்ணைக் கூட்டிட்டு வருவாங்க… இவங்களா சரின்னு சொல்வாங்க… நம்ம சம்மதம் முக்கியமில்லையா? என்றார் சுமித்ரா.

    அம்மா! அவங்க போடுற கணக்கு வேற! நீங்க மனசுல நினைக்கறது வேற! இரண்டும் ஒத்துவராது. தனாவுக்கு மனைவியாகறவளைப் பற்றி நீங்க குறை சொல்லாமல் இருக்கறது நல்லது. வாங்க… என் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடுங்க என்றான் மிருத்யுன்ஜெயன்.

    நான் அப்புறமா சாப்பிட்டுக்கறேன். நீயாவது வயிறார சாப்பிடு. அவங்களை மாதிரி கோபத்துல எழுந்துபோகாதே என்று மெல்லிய குரலில் சொல்லியபடி உள்ளே சென்றார் சுமித்ரா.

    ஏன்…ப்பா அம்மா இப்படியிருக்காங்க? என்று நிறுவனத்துக்குச் செல்லும் வழியில் கோபப்பட்டான் தனா.

    அவ கிடக்கறா… நீ உன் திருமணத்தைப் பற்றி மட்டும் யோசி. எந்தத் தடங்கலும் இல்லாமல், இந்தத் திருமணம் நடக்கணுமேன்னு இருக்கு என்றார் ஆத்ரேயா.

    ஏன்…ப்பா…? எதுக்கு இந்தத் திடீர்க்கவலை?

    அவ்வளவும் வயித்தெரிச்சல்…டா. சுற்றியிருக்கற அத்தனை பேரும், பொறாமையில பொங்கிட்டு இருக்கானுங்க. ஹயக்ரீவ் குடும்பத்தோட நமக்குச் சம்மந்தமான்னு வாய் பிளந்து பார்க்கறானுங்க.

    அது சரி… என்று வாய்விட்டுச் சிரித்தான் தனா. உள்ளுக்குள் சந்தோஷமாகவும், கர்வமாகவும் இருந்தது.

    இவனைவிட கண்ணுக்கு அழகாக, வசதியாக எத்தனையோ பேர் இருக்க, சாஹிதா காதல் கணைகளை வீசியது தனஞ்ஜெய்யிடம்!

    உயர்மட்ட விருந்து கேளிக்கைகளில் இரண்டு, மூன்றுமுறை சந்தித்துப் பழகினார்கள். சாதாரணப் பழக்கமாகச் சென்றது, பிறகு எப்படியோ காதல் பொறியாகப் பற்றிக்கொண்டது.

    அடிக்கடி சந்திப்பதற்கும், பேசுவதற்கும் அவர்களாகவே சில லொகேஷன்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அவளுடைய பணக்காரத்தனமும், அல்ட்ரா மாடர்னிசமும் தனாவுக்கு மிகமிகப் பிடித்திருந்தது. அவளால் கவரப்பட்டவன், ஒருவித மயக்கத்தில் இருந்தான்.

    சாஹிதாவுக்கு பணத்தைச் செலவிடுவதில் தாராளமும், அதற்கு எதிர்மாறாக, ஆடைகளில் சிக்கனமும், கவர்ச்சியும்!

    தனா அவளிடம் கரைந்து போவதற்கு, அந்தக் கவர்ச்சி ஒன்றே போதுமானது.

    தன்னுடைய மகன் காதலால் வீழ்த்தியது ஒரு மிகப்பெரிய திமிங்கலத்தை என்று அறிந்தபோது, மயங்கி விழாத குறையாகப் பார்த்தார் கிரிதர் ஆத்ரேயா.

    நிஜமாகத்தான் சொல்றியா? எப்படி…றா? வெறும் ப்ளர்டிங்கா இருக்கப்போகுது. வெளிநாட்டுல வாழ்ந்தவளுக்கு இது சகஜம். ஹயக்ரீவ் ஒருநாளும் சம்மதிக்க மாட்டார். பயங்கரமா ப்ரெஸ்டிஜ் பார்க்கற ஆளு, நம்மைவிடப் பலமடங்கு உயர்வான இடத்துல இருக்காங்க என்றார் கிரிதர்.

    என்னப்பா பேசறீங்க? வெளிநாட்டுல வாழ்ந்தால் எல்லாமே மாறிடுமா? ப்ளர்ட்டுக்கும், லவ்வுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு நான் ஒண்ணும் மடையனில்ல! ஹயக்ரீவ் பற்றி நீங்க பயப்பட வேண்டாம். அதெல்லாம் அவ பார்த்துப்பா. நீங்க ஏன்…ப்பா திடீர்ன்னு இவ்வளவு லோ-வா ஃபீல் பண்ணறீங்க? அவங்க பலமடங்கு உயர்வா இருந்தால் என்ன? நாமளும் பணக்காரங்கதான். தெம்பாக அப்பாவின் தோள் தட்டினான் தனா.

    மிகப்பெரிய

    Enjoying the preview?
    Page 1 of 1