Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neeyenge Ninaivugalange
Neeyenge Ninaivugalange
Neeyenge Ninaivugalange
Ebook313 pages2 hours

Neeyenge Ninaivugalange

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

எல்லோர் வாழ்விலும் இருக்கும் அசைபோட சில இனிமையான நினைவுகள்... அப்படிதான் இந்தக் கதை நாயகியின் வாழ்விலும் அழகான நினைவுகள் சுகமாய் தாலாட்டி சுமையாய் மாறுகிறது... இரு மனதுக்குள் மலரும் அழகான நேசம் சூழ்நிலையால் பிரிவைத் தர இருவரும் மீண்டும் எப்படி இணைகிறார்கள் என்பதே நீயெங்கே நினைவுகளங்கே...

Languageதமிழ்
Release dateJun 30, 2020
ISBN6580134405616
Neeyenge Ninaivugalange

Read more from Latha Baiju

Related to Neeyenge Ninaivugalange

Related ebooks

Reviews for Neeyenge Ninaivugalange

Rating: 2 out of 5 stars
2/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neeyenge Ninaivugalange - Latha Baiju

    http://www.pustaka.co.in

    நீயெங்கே நினைவுகளங்கே

    Neeyenge Ninaivugalange

    Author:

    லதா பைஜூ

    Latha Baiju

    For more books

    http://www.pustaka.co.in/home/author/latha-baiju

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நினைவுகள் - 1

    நினைவுகள் - 2

    நினைவுகள் - 3

    நினைவுகள் - 4

    நினைவுகள் - 5

    நினைவுகள் - 6

    நினைவுகள் - 7

    நினைவுகள் - 8

    நினைவுகள் - 9

    நினைவுகள் - 10

    நினைவுகள் - 11

    நினைவுகள் - 12

    நினைவுகள் - 13

    நினைவுகள் - 14

    நினைவுகள் - 15

    நினைவுகள் - 16

    நினைவுகள் - 17

    நினைவுகள் - 18

    நினைவுகள் - 19

    நினைவுகள் - 20

    நினைவுகள் - 21

    நினைவுகள் - 22

    நினைவுகள் - 23

    நினைவுகள் - 24

    நினைவுகள் - 1

    தனிமை...

    மழை...

    தேநீர்...

    அசை போட

    உன் நினைவுகள்...

    வாழ்தல் இனிது...

    கதிரவன் மேகக் காதலியின் கறுப்புப் போர்வைக்குள் கதகளி ஆடிக் கொண்டிருக்க, மாலை நான்கு மணிக்கே வானம் இருட்டிக் கொண்டு செல்லச் சிணுங்கலுடன் மழையைத் தூவி பூமியை முத்தமிட்டுக் கொண்டிருந்தது. பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பும் நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியதால் குழந்தைகளின் உற்சாகமும், ஆரவாரமும் மழையோடு குதூகலமாய் சேர்ந்து கொண்டது.

    வாசலில் குடையுடன் காத்திருந்த பெற்றோர் பிள்ளைகளை அழைத்துச் செல்ல, பள்ளி வாகனங்களில் செல்லும் குழந்தைகளும் கிளம்பிக் கொண்டிருந்தனர். மழை அதிகரிக்கும் முன் வீட்டுக்கு செல்லும் அவசரம் எல்லாரிடமும் இருந்தது.

    சில குழந்தைகள் மழையைப் பொருட்படுத்தாமல் நனைந்து கொண்டே உற்சாகமும், துள்ளலுமாய் நடக்கத் தொடங்கி இருந்தனர். பேருந்து நிலையத்தில் காத்திருந்த குழந்தைகள் மழை நீரைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு சற்றும் சளைக்காமல் வளர்ந்த குழந்தையாய் நின்று கொண்டிருந்த மீராவும் மழைத் துளிகளைக் கையில் பிடித்தும், முகத்தை நனைத்தும் விளையாடிக் கொண்டிருந்தாள்.

    கல்லூரி நேரமே விட்டிருந்தாலும் அவளுக்கு பிளேஸ்மென்ட் கிளாஸ் இருந்ததால் அதை முடித்துக் கிளம்ப தாமதமாகி விட்டிருந்தது. BSC IT இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தவளுக்கு பிளேஸ்மென்ட் மூலமாய் நல்ல கம்பெனியில் ஆபர் லெட்டர் வாங்கி வேலைக்கு சேர்ந்துவிட வேண்டுமென்ற ஆர்வம் இருந்தது. சாரலாய் தூவிக் கொண்டிருந்த மழையைக் கண்ட உற்சாகத்தில் ஓரமாய் நின்று விளையாடிக் கொண்டிருந்தாள். மழை அவளுக்கு மிகவும் பிடிக்கும். நேரம் செல்லத் தொடங்க மேகம் இன்னும் இருண்டு மழை வலுக்கத் தொடங்கியது... ஏதேதோ பேருந்துகள் வந்து கொண்டிருந்தாலும் அவளுக்கான பேருந்தை இன்னும் காணவில்லை.

    மழையின் ரசனை மெல்ல மாற சற்று தவிப்புடன் சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தவள், ஹலோ மீரா... பின்னில் ஒலித்த குரலில் திரும்பினாள்.

    மையிட்ட விழிகள் அவனைக் கண்டு திகைப்புடன் மலர, அளவான எடுப்பான நாசிகளுக்கு கீழே அளவெடுத்து வைத்தது போல் இருந்த அழகான அதரங்கள் ஆச்சர்யத்தின் வெளிப்பாடாய் சற்றுத் திறந்திருந்தன. சராசரிக்கும் சற்று உயரமாய் மாநிறத்தில் இருந்தாள். அவளது நீள்வட்ட முகத்தில் படபடக்கும் அந்த விழிகளின் ஈர்ப்பு எதிரில் காண்பவர் யாராகினும் ரசனையுடன் நின்று நோக்கியே கடக்கத் தோன்றும். காதில் அணிந்திருந்த தங்க வளையங்கள் அவள் முகத்துக்கு இன்னும் வசீகரத்தைக் கொடுத்திருந்தன.

    தன் அருகில் நின்று குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டு அவளது இதயத் துடிப்பு வேகமாகத் தொடங்கியது. ஒரே குடியிருப்பில் அடுத்தடுத்த வீட்டில் வசித்து வரும் அவர்களுக்குள் சிறுவயது முதலே பழக்கம் இருந்தாலும் இப்போதெல்லாம் அவன் தன்னைப் பார்க்கும் பார்வையில் ஒரு வித்தியாசத்தை உணர்ந்திருந்தாள். அவனது கண்கள் காந்தமாய் தனை ஈர்ப்பதை, வித்தியாசமாய் தன் இதயத்தை சுண்டுவதை உணர்ந்தாள். படிக்கும்போது மனதை அலைபாய விடக்கூடாது என்று கட்டுப்படுத்திக் கொண்டாலும் அவனைக் காணும்போது எல்லாம் மனதுக்குள் ஒரு பட்டாம்பூச்சி சிறகு விரித்துக் கொள்ளத்தான் செய்தது.

    ஒரே குடியிருப்பில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் அருகில் பார்த்துக் கொள்ளும்போது சிறு புன்னகையுடன் கடந்து விடுவர். அதிகம் பேசியதெல்லாம் கிடையாது. இப்போதெல்லாம் அவனது பார்வை ஆழமாய் தன்னைத் துளைத்து ரசனையாய் நோக்குவதை உணர்ந்தவள் மனது ஒருவித கும்மாளம் போடத் தொடங்கியிருந்தது.

    மீரா, ரொம்ப நேரமா பஸ்ஸுக்கு நிக்கற போலருக்கு... மழை அதிகமாயிட்டே போகுது... நான் வீட்டுக்குத் தான் போறேன்... உனக்கு ஆட்சேபனை இல்லேன்னா என்னோட பைக்ல வரலாம்... அவன் அழைக்கவும் தயக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் அவனோடு மழையில் பைக்கில் போவதை நினைத்தாலே மனம் சில்லிட்டது.

    அவள் பதில் எதுவும் சொல்லாமல் நிற்க, என்ன மீரா, என்னோட வர மாட்டியா... நான் ஒண்ணும் உன்னைக் கடிச்சுத் தின்னுற மாட்டேன்... நம்பிக்கையோட தயங்காம வா... என்றான் பல்வரிசை பளீரிட சிரித்துக் கொண்டே.

    அந்தப் புன்னகை அவள் மனதில் மின்னலாய் வெட்ட, அது வந்து... என்று அவள் ஏதோ கூற வரும்போது அருகில் இருந்த ஒருவர், அந்த ரூட்டுல பெரிய மரம் ஒண்ணு விழுந்திருக்காம்... பஸ் வர லேட்டாகும்... மழை வலுக்கிற முன்னாடி சீக்கிரமா வீடு போயிச் சேரும்மா... சொல்லிக் கொண்டே குடையுடன் அவர் நடக்கத் தொடங்க தயக்கத்துடனே மீண்டும் அவனை ஏறிட்டவளை நோக்கிப் புன்னகைத்தான்.

    போதுமா... இனியும் நீ இங்கயே நிக்கப் போறியா... என்றவன் சற்று அதிகாரமாகவே கேட்க, சரி, வரேன்... என்றாள் சிறு தயக்கத்துடனே.

    அப்பா... ஒருவழியா சம்மதிச்சியே... என்றவன் முன்னில் நடக்க துப்பட்டாவைத் தலையில் போட்டுக் கொண்டு அவனைத் தொடர்ந்தாள் மீரா. மழை வலுத்திருக்க, வண்டியில் ஏறுவதற்கு முன்பே தொப்பலாய் நனைந்து நின்றவளைக் காண அவனுக்கு பரிதாபமாய் இருந்தது.

    உடை உடலோடு ஒட்டிக் கொள்ள அவஸ்தையாய் நின்று கொண்டிருந்தவளிடம், மீரா... இந்த ரெயின் கோட்டை நீ போட்டுக்க... என்றவன் தான் போட்டிருந்த கோட்டை அவிழ்த்து அவளிடம் நீட்ட மழை வேகமாய் அவனை நனைக்கத் தொடங்கியது.

    இல்ல வேண்டாம், நீங்க நனைவீங்களே... அவள் தயக்கமாய் சொல்ல, எனக்கு ஹெல்மெட் இருக்கு... நீ இதைப் போட்டுக்க... என்றவன் ஹெல்மெட்டை தலையில் அணிந்து வண்டியை ஸ்டார்ட் செய்ய அதை அணிந்து வண்டியில் அமர்ந்தாள் மீரா.

    இருபக்கமும் காலைப் போட்டு நடுவில் பாகை வைத்து இடைவெளி விட்டு அமர்ந்தவளைப் புன்னகையுடன் பார்த்தான்.

    உடலை நனைக்கும் மழை

    உள்ளத்தையும் நனைக்கிறது

    உன் அருகாமை சூட்டில்...

    வெளியே பெய்து கொண்டிருந்த மழை மனதையும் நனைக்க இருவரின் மனதுக்குள்ளும் சுகமான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது. அவனது கோட்டின் கதகதப்போடு அன்பும் அக்கறையுமான அவன் வாசத்தையும் அதில் உணர்ந்தாள். மழையின் வேகத்துக்கு நிதானமாகவே வண்டியை ஓட்டினான்.

    அவனது பார்வை இடையில் கண்ணாடி வழியே அவளைப் பார்க்கவும் தவறவில்லை. அதை உணரும்போதேல்லாம் அவளுக்குள் ஏதோ ஒரு உணர்வு ஜிவ்வென்று பரவியது.

    அவர்கள் வீடு ஒரு அரசு மாடிக் குடியிருப்பில் இருந்தது. அங்கு பல்வேறு துறையில் பணிபுரிந்த அரசு அலுவலர்களின் குடும்பங்கள் குடியிருந்தனர்.

    மீராவின் தந்தை நடராஜ் பொதுப் பணித்துறையில் பணி புரிந்து வந்தார். அன்னை வசந்தி, தங்கை மேகலா என அழகான குடும்பம் அவளுடையது. மேகலா பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். அவர்கள் வீடு முதல் தளத்தில் இருக்க அதை ஒட்டிய கட்டிடத்தின் அதே தளத்தில் அவனது வீடும் இருந்தது. அவன் அபிநந்தன்.

    அடியே மீரு, எவ்ளோ நேரமா கூப்பிடறது... கையில் தேநீர் கோப்பையுடன் ஜன்னல் அருகே அமர்ந்து பழைய நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்த மீரா தோழி ராகவியின் குரல் கேட்டுத் திரும்பினாள்.

    என்ன ராகு... எதுக்குக் கூப்பிட்ட...

    ப்ச்... என்னடி, நீயும் மஞ்சு போலவே என்னை ராகு, கேதுன்னு கூப்பிட்டு இருக்கே... சலித்துக் கொண்டவளை நோக்கி புன்னகைத்தவள், அதென்னமோ உன்னை அப்படி கூப்பிட்டாதான் மனசுக்கு நெருக்கமா தோணுது... என்ற மீராவை முறைத்தவள்,

    ம்ம்... தோணும் தோணும்... இந்த மழைல வெளிய எங்கயும் போகாம ரூம்லயே அடைஞ்சு கிடக்கறது செம போரா இருக்குடி... அந்தப் பஞ்சு இருந்தாலாச்சும் அவளை வம்பிழுக்கலாம்... அவளும் இல்லாம செம போர் அடிக்குது... எப்படித்தான் நீ இப்படியே இந்த மழையைப் பார்த்துட்டு உக்கார்ந்திருக்கியோ... முகத்தைச் சுளித்து சொன்னவளை நோக்கிச் சிரித்தாள் மீரா.

    ஏன்னா, மழை எனக்கு ரொம்பப் பிடிக்குமே... வர்றியா, ரெண்டு பேரும் மொட்ட மாடிக்குப் போயி, மேகம் கருக்குது... மின்னல் சிரிக்குதுன்னு செமையா ஆட்டம் போட்டுட்டு வரலாம்... ஆர்வமாய் கேட்டவளை முறைத்தாள் ராகவி.

    அய்யய்யோ... நான் மாட்டேன் பா... சளி, காய்ச்சல்னு அவஸ்தைப்பட என்னால முடியாது... இந்த மழையைக் கட்டிட்டு நீயே அழு... என்றவள், இந்த மழைக்கு சூடா பஜ்ஜி சாப்பிட்டா சூப்பரா இருக்கும்... நான் போயி அதைத் தயார் பண்ணறேன்... என்று அடுக்களைக்கு செல்லவும் மீண்டும் மழைத் துளிகளை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் மீரா.

    மழையின் சாரல் ஜன்னல் வழியே முகத்தில் விழவும் கண் மூடி அதை அனுபவித்தாள் மீரா. மழை பெய்து மண்ணின் மணத்தை கிளறுவது போல் அவள் மனதிலும் சில நினைவுகளைக் கிளறிவிட்டிருந்தது. ராகவி, மஞ்சரி இருவரும் மீராவுடன் IT நிறுவனத்தில் பணிபுரியும் தோழிகள். மூன்று பேரும் ஒரு பிளாட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தனர். மஞ்சரி இப்போது ஊருக்குப் போயிருந்தாள். படித்து முடித்த கையோடு நல்ல ஒரு IT கம்பெனியில் ஆபர் லெட்டர் வாங்கி வேலைக்கு சேர்ந்த மீரா, மூன்றே மாதத்தில் தன் திறமையால் பணியில் நிரந்தரமாகி இருந்தாள்.

    தந்தை நடராஜ் ஒரு வருடம் முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற, கோவையில் அவர்களது சொந்த வீட்டில் தனியாக இருந்த அவரது அன்னைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் குடும்பத்துடன் அங்கேயே சென்றுவிட்டார். மீரா, வேலைக்கு செல்லவேண்டும்... இதை விடமுடியாது… என்று அடம் பிடித்த காரணத்தால் அவளை ஹாஸ்டலில் விட்டுச் சென்றனர். மாதம் ஒருமுறை கோவை சென்று குடும்பத்துடன் இரண்டு நாட்கள் இருந்து விட்டு வருவாள். அவளது பாட்டியும் இப்போது தவறி இருந்தார். தங்கை மேகலா கோவையில் இப்போது கல்லூரி முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.

    மனசு ஹோவென்று மழையை விட வேகத்துடன் அழுதாலும் அவள் இதழ்களில் மட்டும் நிரந்தரமாய் ஒரு புன்னகை உறைந்திருந்தது. எந்தப் பிரச்சனையையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் தனக்குள்ளேயே ஒதுக்கிக் கொள்ள இந்த நாட்களில் நன்றாகவே பழகி இருந்தாள். தோழிகளிடமும், அலுவலகத்திலும் புன்னகையுடனே வளைய வருவதால் அவளை நோக்கி அநாவசியமாய் எந்தக் கேள்வியும் வந்ததில்லை. மனது எப்போதும் போல் அன்றும் அதே கேள்வியை மட்டுமே திரும்பக் கேட்டது.

    டேய் அபிநந்தா, நிஜமாலுமே என்னை வெறுத்திட்டியா... உன்னால அது முடியுமா... மனது அரற்ற, இல்லை... நிச்சயம் என்னை என் காதலை மறக்க அவனால் முடியவே முடியாது... இன்னும் மூன்று மாதங்கள்... இந்த மூன்று மாதங்களை மௌனமாய் கடக்கும் சக்தியை எனக்குத் தா... வேண்டிக் கொண்டவளின் கண்களில் ஈரத்தின் பிசிபிசுப்பு. அதன் கசப்பை தொண்டைக்குள் இறக்கிவிட்டு கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு புன்னகைத்தவள் அலைபேசியை எடுத்தாள்.

    என் பிரியனே...

    இக்காதலின் பெருவெளியில்

    அரவங்களற்றுத் தனித்திருக்கிறேன்...

    காற்றும் மரமும் கடலும் மழையும்

    சுற்றியிருக்கும் அனைத்தும்

    பேரழகுக் காதலுடன்

    பிரமிப்பை ஊட்டுகின்றன...

    எங்கோ சலசலக்கும் நீரூற்று

    உனக்குள் என் மீதான நேசம்

    இன்னும் வற்றிப் போய்விடவில்லை

    என்பதை உணர்த்துகிறது...

    எனைத் தீண்டும் சிறு காற்று

    உனையும் தீண்டுகிறதென்பதே

    நான் சுவாசிக்கக் காரணமாகிறது...

    உன் பேரன்பின் பெருமழையில்

    எனை நனைத்திட வேண்டாம்...

    என் மீது சிறு சாரலை மட்டும்

    தெளித்து விட்டுப் போ...

    என் காதலை பட்டுப் போகாமல்

    காத்திட அது மட்டுமே போதும்...

    - மீரா நந்தன்...

    என்று முடித்தவள் அதை மீண்டும் படித்துப் பார்த்தாள். தன் கடினப்பட்டிருந்த மனதை அந்த வார்த்தைகள் இதமாய் மயிலிறகால் தடவுவது போல் ஒரு சுகத்தைக் கொடுப்பதை உணர்ந்தவள் அந்தப் பதிவைப் போஸ்ட் செய்துவிட்டு எழுந்தாள்.

    *****

    நினைவுகள் - 2

    எரியும் மெழுகு சிரித்து

    தன் கடைசித்

    துளியும் எரித்து

    கண்ணயரும் போது

    எனை நனைத்து

    நிரம்புகின்றன

    உன் நினைவுகள்...

    காம்டன் பக்கிங்ஹாம் அபார்ட்மென்ட், டாலாஸ்.

    அமெரிக்காவின் முக்கிய மாகாணமான டெக்ஸாஸில் உள்ள அழகான ஊர். அங்கே ரிச்சர்ட்சன் என்ற இடத்தில் நிறைய குடியிருப்புக்கான பிளாட்டுகளுடன் கம்பீரமாய் நின்றிருந்தது. ஒரு நல்ல கம்பெனியில் லீட் கோ ஆர்டிநேட்டராய் வேலை செய்து வந்த நமது நாயகன் அபிநந்தனின் இப்போதைய வாசஸ்தலம் இங்குதான். அது நிறைய இந்தியர்கள் வசிக்கும் பகுதியானாலும் இவன் அதிகம் யாரோடும் நெருங்கிப் பழக மாட்டான். தனியே ஒரு பிளாட்டில் இருந்தான்.

    அந்த அபார்ட்மென்டில் ஜிம், நீச்சல் குளம், மற்றும் நடைப் பயிற்சிக்கும் தனித்தனியே வசதி இருந்தது. விடுமுறை நாட்களில் சற்று அங்கே நடைபோடுவதுடன் சரி... அவனது அதிக பொழுதுகளும் தனிமையில் கழிக்கவே அவனுக்குப் பிடித்திருந்தது.

    அழகான இளம் மாலை நேரத்தில் கதிரவன் கடமை முடித்து கிளம்பிக் கொண்டிருக்க வெளுத்திருந்த வானத்தில் அடுக்கடுக்காய் படிந்திருந்த மேகக் கூட்டங்களை நோக்கிக் கொண்டே அபார்ட்மென்ட் முன்னில் கல் பெஞ்சில் அமர்ந்திருந்தான் அபிநந்தன்.

    சில அமெரிக்க குழந்தைகளும், இந்தியக் குழந்தைகளும் சற்றுத் தள்ளி டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்க அவர்களின் உற்சாகக் குரல்களில் அடிக்கடி திரும்பி வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவன் நினைவுகள் இலக்கில்லா மேகமாய் அங்கங்கு நகர்ந்து கொண்டிருந்தன. வாரம் முழுதும் பணியின் சுமையில் மனதின் சுமையை மறந்து ஓடிக் கொண்டிருப்பவன் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் மட்டும் தவிப்புடன் தனிமையைக் கழிப்பான்.

    முன்பெல்லாம் தனிமை அவனுக்குப் பிடிக்காத விஷயம். தான் இருக்கும் இடத்தைக் கலகலப்பாய் வைத்துக் கொள்ள நினைக்கும் அவனுக்கு இங்கு தனிமை மட்டுமே பிடித்திருந்தது. அதற்குக் காரணம் அந்த அழகான ராட்சசி. அவள்தான் மீரா.

    மிதந்து செல்லும் இந்த மேகத்தைப் போல் காதலில் மிதந்து கொண்டிருந்த என்னை, நனைந்த பஞ்சுப் பொதியாய் மனதை கனக்கச் செய்த ராட்சசி... எத்தனை பிடிவாதம் இருந்தால் இத்தனை நாட்களாய் என்னோடு பேசாமலே இருப்பாள்... அத்தனை உதாசீனப்படுத்தி பேசியவள் கொஞ்சமாவது என் காதலை உணர்ந்திருந்தால் இத்தனை நாட்கள் தேடாமல் இருப்பாளா... என்னைப் போல் அவளுக்கு எந்தத் தவிப்பும் இருக்காதா... இல்லை, என்னை மறந்துதான் போயிருப்பாளா... யோசித்தவனுக்கு இதயத்தை யாரோ நசுக்கிப் பிழிவது போலத் தோன்றியது. இலக்கில்லாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தவன் அருகில் சொத்தென்று ஏதோ விழவும் திரும்பினான்.

    அங்கிள், பால்... ப்ளீஸ்... எதிர் வீட்டுப் பொடியன் ராகவ் கேட்கவும், அருகில் கிடந்த டென்னிஸ் பந்தை எடுத்து அவனை நோக்கி வீசியவன், நான் அங்கிள் போலவா இருக்கிறேன்... தனிமை எனக்கு அத்தனை முதுமையைக் கொடுத்து விட்டதா என்ன... யோசித்தவனின் இதழ்கள் மெல்ல புன்னகையை சிந்தின.

    எடுப்பான மூக்கும், ஆழ்ந்த மனதைத் துளைக்கும் காந்த விழிகளும், அழகாய், அளவாய் டிரிம் செய்யப்பட்ட மீசையும், தாடியும் காற்றில் படபடத்துக் கொண்டிருந்த சிகையும் அவனது தோற்றத்திற்கு வயதுக்கு மீறிய ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்திருந்தது. யோசனையில் இருந்தவன் காதில் கிசுகிசுப்பான அந்தக் குரல் சுகமாய் உரசிச் சென்றது.

    டேய், நந்தா... நீ ஏண்டா இவ்ளோ ஹாண்ட்சமா இருக்க... இந்த குல்பி மூக்கை அப்படியே கடிச்சு கன்னத்துல விழுகுற குழியில குடித்தனம் நடத்தணும் போல ஆசையா இருக்கு... ஆனா, ஒவ்வொருத்தியும் உன்னை சைட் அடிக்கும்போதுதான் உள்ள கபகபன்னு எரியுது... உன்னை வெளிய விடாம அப்படியே என் இதயச் சிறையில் ஆயுள் கைதியா வச்சுக்கட்டுமா... குழைவுடன் அந்தக் குரல் காதுக்குள் ஒலிக்க தொண்டைக்குள் ஒரு சொல்லமுடியா உணர்வு நெஞ்சுக்குள் பந்தாய் அடைத்துக் கொண்டது போல் திணறினான். கசப்பாய் இதயத்தை நனைத்த உணர்வுகளை கண்ணை மூடி இறக்கியவனை அந்த அவஸ்தையில் இருந்து காக்கவே அருகில் ஒலித்தது விக்ரமின் குரல்.

    டேய் எரும, எவ்ளோ நேரமா உன் போனுக்கு டிரை பண்ணறேன்... எடுக்காம இருக்க... எல்லா இடத்திலும் தேடிட்டு வந்தா, இங்க வந்து உக்கார்ந்திருக்க... அவன் திட்டவும் தான் போனை சைலன்டில் போட்டது நினைவு வர சிரித்தான். திட்டிய விக்ரம் அவனது தாய் மாமன் மகன். இருவரும் ஒத்த வயதினர்... மட்டுமல்லாமல் நல்ல நண்பர்களும் கூட. அவனுக்கு இங்கே இருக்கும் ஒரே நிம்மதி விக்ரம் மட்டும் தான்.

    விக்ரமின் தந்தை சத்யமூர்த்தி அபிநந்தனின் தாய்மாமன். சிறுவயதிலேயே அலுமினியம் பேப்ரிகேஷன் தொழில் விஷயமாய் நண்பருடன் அமெரிக்கா வந்தவர் அங்கேயே செட்டிலாகி சொந்தமாய் தொழில் நடத்திக் கொண்டிருந்தார். மனைவி நந்தினியும் கணவருக்கு தொழிலில் உதவியாக இருக்கிறார். டெக்சாசின் தலைநகரான ஆஸ்டினில் அவர்களுக்கு சொந்தமாய் வீடு இருந்தது. இருவரும் பிசினசைப் பார்த்துக் கொண்டதால் மகன் விக்ரமை சென்னை விடுதியில் விட்டிருந்தனர்.

    படிப்பு முடிந்ததும் விக்ரம் அமெரிக்கா வந்துவிட மனைவிக்கு ஓய்வு கொடுத்து மகனைத் தொழிலில் இணைத்துக் கொண்டார். அவர்தான் அபிநந்தனுக்கு ஒரு நண்பரின் மூலமாய் இந்த வேலைக்கு ஏற்பாடு செய்து அவனை இங்கு அழைத்து வந்திருந்தார். நந்தனின் அலுவலகத்தில் இருந்து அவர்கள் வீட்டுக்கு சென்று வர மூன்றரை மணி நேரம் ஆகுமென்பதால் மட்டுமே அவன் தனியே அலுவலகத்தின் அருகில் பிளாட் எடுக்க அவர் சம்மதித்திருந்தார்.

    விக்ரம் சென்னையில் விடுதியில் தங்கி படித்து வளர்ந்ததால் விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் அத்தை கமலா வீட்டில் ஆஜராகிவிடுவான். MBA முடித்த கையோடு மேல்படிப்பை அமெரிக்காவில் முடித்தவன் தந்தையின் தொழிலைப் பார்த்துக் கொண்டான். ஆனால் அபிநந்தனுக்கு வெளிநாட்டு வேலையில் விருப்பம் இல்லாததால் காம்பஸ் இன்டர்வியூவில் தேர்வான கம்பெனியிலேயே சென்னையில் சேர்ந்திருந்தான்.

    அபிநந்தனுக்கு மூத்தவள் கலா, இளையவள் நிர்மலா... இரு பெண்களுக்கு நடுவில் ஒரே ஆண் பிள்ளை அபிநந்தன் என்பதால் சற்று செல்லமாகவே வளர்ந்தவன். அவனது தந்தை தபால் துறையில் போஸ்ட் மாஸ்டராய் பணி புரிந்து

    Enjoying the preview?
    Page 1 of 1