Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ithayame Ithayame
Ithayame Ithayame
Ithayame Ithayame
Ebook507 pages4 hours

Ithayame Ithayame

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

சகோதர, சகோதரிகளுக்குள் மலரும் மென்மையான காதல், மோதல், பிரிவு , அவர்களுக்குள் வரும் பிரச்சனைகளை பற்றி சொல்லும் கதை... ஒரு ஜோடியின் காதல் மெல்லினமாய் இதயத்தை தாலாட்டும் என்றால் மறு ஜோடியின் காதல் வல்லினமாய் மனதில் தடம் பதிக்கும்.... நான்கு இதயங்களின் காதல் போராட்டமே இதயமே... இதயமே...

Languageதமிழ்
Release dateJun 30, 2020
ISBN6580134405609
Ithayame Ithayame

Read more from Latha Baiju

Related to Ithayame Ithayame

Related ebooks

Reviews for Ithayame Ithayame

Rating: 4.2 out of 5 stars
4/5

5 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ithayame Ithayame - Latha Baiju

    http://www.pustaka.co.in

    இதயமே இதயமே

    Ithayame Ithayame

    Author:

    லதா பைஜூ

    Latha Baiju

    For more books

    http://www.pustaka.co.in/home/author/latha-baiju

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இதயம் – 1

    இதயம் – 2

    இதயம் – 3

    இதயம் – 4

    இதயம் – 5

    இதயம் – 6

    இதயம் – 7

    இதயம் – 8

    இதயம் – 9

    இதயம் – 10

    இதயம் – 11

    இதயம் – 12

    இதயம் – 13

    இதயம் – 14

    இதயம் – 15

    இதயம் – 16

    இதயம் – 17

    இதயம் – 18

    இதயம் – 19

    இதயம் – 20

    இதயம் – 21

    இதயம் – 22

    இதயம் – 23

    இதயம் – 24

    இதயம் – 25

    இதயம் – 1

    அயிகிரி நந்தினி நந்தித மேதினி

    விஸ்வ வினோதினி நந்தநுதே

    கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி

    விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே

    பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி

    பூரிகுடும்பினி பூரிக்ருதே

    ஜயஜய ஹே மஹிஷாசுர மர்தினி

    ரம்யா கபர்தினி சைலசூதே...

    கோவை கோனியம்மன் கோவில். காலை பதினொரு மணிக்கு கதிரவன் மெல்ல உச்சத்துக்கு வந்து கொண்டிருந்தான். இதமான காற்றில் மிதந்து வந்த துர்கை அம்மனின் பாடல் இனிதாய் செவியை நிறைத்துக் கொண்டிருந்தது.

    இந்த ஊருக்கு கோயம்புத்தூர் என்ற பெயர்வர இந்தக் கோவிலும் ஒரு காரணம். அதற்கு ஒரு கதை உண்டு. கோவை நகரின் மூன்று கண்களாக விளங்கும் கோவில்களில் ஒன்றாக விளங்கும் இங்கு பராசக்தியின் ஓர் உருவாக இருந்து கோனியம்மன் அருள் புரிகிறாள். கோன் என்றால் அரசன் அல்லது தலைவன் என்று பொருள். கோன் என்பதன் பெண்பால் கோனி ஆகும்... அனைவர்க்கும் அரசி... தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம்... எவைக்கும், எவற்றுக்கும் தலைவி... என்னும் பொருளில் தங்கள் அன்னையை கோனி என்றே மக்கள் அழைத்தனர்.

    இருளர் தலைவனான கோவன் என்பவர் கோவிலை சுற்றியுள்ள காட்டைத் திருத்தி ஊராக்கி புதிய ஊரை அமைத்தார். கோவன் அமைத்த ஊராதலால் கோவன் புத்தூர் என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் அதுவே கோயம்புத்தூர் என்றாயிற்று.

    ஆடி வெள்ளிக் கிழமை ஆதலால் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஊஞ்சலில் கோலாகலமாய் வீற்றிருந்த அன்னையை பக்திப் பரவசத்தோடு கும்பிட்டுக் கொண்டிருந்தனர் பக்த ஜனங்கள். அப்போது தான் கோவிலுக்குள் நுழைந்த ஹர்ஷா, அருள்வடிவான தேவியை கண்களில் நிறைத்துக் கொண்டு அழகிய உதடுகள் தேவியின் மந்திரம் சொல்ல, இரு கை கூப்பி வணங்கி, ஓரமாய் நின்று கொண்டாள்.

    சின்னக் கரை வைத்த கேரளத்து சந்தனக் காட்டன் புடவை அவளது மெலிந்த பொன்னிற உடலில் பாந்தமாய் தழுவி இருந்தது. இடுப்பைத் தாண்டி நீண்டிருந்த கருங்கூந்தலை தளர்வாய் பின்னலிட்டு ஒதுக்கி இருந்தாள். அளவான உயரம், பெரிய கண்கள், சிறிய நாசி, சிவந்த சிறிய உதடுகள் என கதாநாயகிக்குரிய சர்வ லட்சணங்களுடனும் இருந்தாள். நெற்றியில் சின்ன ஸ்டிக்கர் பொட்டின் மேலே சந்தனம் இடம் பிடித்து, முக அழகைக் கூட்டியது.

    கூட்டம் மெதுவாய் கலையத் தொடங்க மற்ற தெய்வங்களைப் பிரார்த்தித்து விட்டு அம்மனின் சன்னிதியை நோக்கி நடந்தாள். அங்கே ஒவ்வொருத்தரும் அர்ச்சனை சீட்டுகளை நீட்டிக் கொண்டிருக்க அர்ச்சகர் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார். ஹர்ஷாவும் அங்கே சென்று நின்று கொண்டாள். அப்போது அங்கே புன்னகை முகத்துடன் பழைய கே ஆர் விஜயா சாயலில் ஒரு தடித்த பெண்மணி வந்து நிற்க, அவருக்கு அருகில் புன்னகைக்கத் தெரியாத முகத்துடன் ஒரு நெடியவன் நின்று கொண்டிருந்தான்.

    அவர்களைக் கண்டதும் சிநேகமாய் புன்னகைத்த அர்ச்சகர், அவர்களிடம் வேகமாய் வந்தார். வாங்கோம்மா... வாங்க தம்பி... என்றவர் அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொண்டார்.

    யார் பேருக்கு அர்ச்சனை பண்ணனும்...

    ரெண்டு பையனுங்க பேர்லயும் பண்ணிடுங்க சாமி... என்றார் ரேணுகா தேவி புன்னகையுடன்.

    அவர்களது குடும்பத்தோடு நல்ல பழக்கம் இருந்ததால் அவர் தலையாட்டிவிட்டு, மந்திரத்தை சொல்லிக் கொண்டே அம்மனை நோக்கி நகர, அவர்களுக்கு எதிர்ப்புறம் கண் மூடி நின்றிருந்த ஹர்ஷாவையே ஒரு நிமிடம் அந்தப் பெண்மணி ஆவலுடன் பார்த்தார். அவருக்கு அழகான பெண்களைப் பார்த்தாலே தனக்கு இது போல் ஒரு பெண் மருமகளாய் வந்தால் நன்றாய் இருக்குமே என நினைத்துப் பார்ப்பது வழக்கம்.

    ம்ம்... எவ்ளோ அழகா இருக்கா... என் மகனுக்கும் இந்த மாதிரி லட்சணமா, அடக்கமா ஒரு பொண்ணு அமைஞ்சா நல்லா தான் இருக்கும்... இவன் சரியான சாமியார் கேசால்ல இருக்கான்... கண்ணுக்கு முன்னாடி இவ்ளோ அழகா தேவதையாட்டம் ஒரு பொண்ணு நிக்குது... இவன் அதைப் பாக்குறானான்னு பாரு... தடிமாடு மாதிரி வளர்ந்திருக்கானே ஒழிய ஒரு ஆசையும் கிடையாது... அம்மா தாயே... நீதான் இவன் மனசை மாத்தி, கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கணும்... அவர் அம்மனைப் பிரார்த்தித்துக் கொண்டார்.

    சஞ்சய் கிருஷ்ணா... மாநிறம்... அடர்ந்த சிகை, அகன்ற நெற்றி, கூர்த்த நாசி... அழுத்தமான தடித்த உதடுகள், அலட்சியமும் ஆணவமும் நிறைந்திருந்த அதிகாரக் கண்கள்... உதட்டில் பேருக்குக் கூடப் புன்னகை இல்லை... வளவளத்த தாடை... தடித்த மீசை... என ஆறடியில் கம்பீரமாய் இருந்தான். அலட்சியமாய் திறந்து விடப்பட்ட மேல் பட்டனின் வழியாய் தெரிந்த கழுத்துப் பகுதியில் தங்க செயின் பளபளத்தது... இளநீல முழுக்கை சர்ட்டும் அடர் நீல ஜீன்சும் அவனது கம்பீரத்தை மேலும் கூட்டியது... ஆண்களையே பொறாமைப்பட வைக்கும் கம்பீரமான தோற்றம்.

    அம்மனைக் கும்பிட்டவன் கண்ணைத் திறந்து மேலே உள்ள கோவில் மணியை அடிக்க முயல, அதே நேரத்தில் அவனுக்கு முன்னில் நின்று கொண்டிருந்த ஹர்ஷாவும் மணியின் மீது கையை வைத்தாள்.

    இருவரின் கைகளும் உரசிக் கொள்ள ஹர்ஷாவின் முகம் சிறு கூச்சத்துடன் கையை மீட்டுக் கொண்டது. சஞ்சயின் முகமோ தீயைத் தீண்டியது போல மேலும் கடினமானது. அவளை முறைத்தவன் சற்றுத் தள்ளி நின்று கொண்டான்.

    அவனது முறைப்பின் காரணம் புரியாமல் குழம்பத்தில் சுருங்கியது அவளது தாமரை முகம்.

    சாரி... அவனிடம் கூறியவள் பிரசாதம் வாங்க சென்றாள். அவன் விறைப்புடனே அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

    தீபாராதனை காட்டிவிட்டு அர்ச்சகர் அவசரமாய் நீட்டிய விபூதித் தட்டு தள்ளி நின்ற அவன் அருகில் வராமல் போக அன்னையிடம் நகர்ந்தான் அவன். அதற்குள் நெற்றியில் விபூதியைத் தொட்டுவிட்டு அங்கிருந்த கிண்ணத்தில் கையில் பாக்கியிருந்த விபூதியை அவர் போட்டு விட்டிருந்தார். மகனை ஏறிட்டவர், என்னப்பா பிரசாதம் வாங்கலையா... அடடா... நானும் கிண்ணத்தில் போட்டுட்டேனே... என்று கூற அதைக் கவனித்து விட்ட ஹர்ஷா,

    அம்மா... இந்தாங்க... பிரசாதம்... என்று தன் கையை நீட்டினாள்.

    அவளது நீண்ட வெண்ணிற விரல்களைத் தாண்டி ரோஜா நிற உள்ளங்கைக்கு நடுவில் இருந்த விபூதியும் குங்குமமும் அவனைப் பார்த்து சிரிக்க, தேவையில்லை... நான் அர்ச்சகர் கிட்டயே வாங்கிக்கறேன்... என்று மறுத்து விட்டான் அவன். அவனது கம்பீரமான குரலில் இருந்த கடினம் அவளுக்கு வியப்பாய் இருந்தது.

    ஒரு சின்ன விஷயம்... இதற்கு ஏன் இவன் இத்தனை யோசிக்கிறான்... என அவள் நினைத்துக் கொள்ளும்போதே அவள் கையில் இருந்த விபூதியை எடுத்து மகனது நெற்றியில் வைத்து விட்டார் ரேணுகா.

    இனி எத்தனை பேருக்கு அர்ச்சனை பண்ணிட்டு வந்து தீபாராதனை காட்டி பிரசாதம் கொடுப்பாரோ... அப்புறம் நீ லேட் ஆயிருச்சுன்னு குதிப்பே... யார் கொடுத்தாலும் பிரசாதம் ஒண்ணுதானே... அதை மறுக்கக் கூடாது... என்று கூறிக் கொண்டே குங்குமத்தையும் எடுத்து அவன் நெற்றியில் வைத்து விட்டார்.

    அவனது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தாலும் நிறைந்திருந்த கூட்டத்தின் நடுவே அன்னையை எதுவும் சொல்லாமல் அமைதி காத்தான். அவரது அர்ச்சனைத் தட்டில் இருந்த மல்லிகைப் பூவை எடுத்து அவளிடம் நீட்டி,

    இந்தாம்மா... இதைத் தலையில் வச்சுக்கோ... என்று கொடுத்தார்.

    நன்றி மா... என பிகு செய்யாமல் புன்னகையுடன் வாங்கிக் கொண்டவளின் எதார்த்தம் அவருக்குப் பிடித்திருந்தது. ஆனால் இது எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை என்பது போல் உர்ரென்று நின்று கொண்டிருந்தான் சஞ்சய்.

    சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு அவள் அங்கிருந்து நகர அவளையே ஏக்கமாய் தொடர்ந்த அன்னையின் பார்வையை தடை செய்தது மகனின் குரல்.

    அம்மா... கோவிலுக்கு வரணும்னு சொன்னிங்க... வந்து சாமி கும்பிட்டாச்சு... கிளம்பலாம்... அவனது குரலும் உருவத்தைப் போலவே கம்பீரமாய் இருந்தது.

    ம்ம்... பிரகாரத்தை சுத்திட்டுக் கிளம்பலாம் பா...

    அம்மா... காலைல தானே உங்களுக்கு கால் வலின்னு சொன்னிங்க... இப்போ பிரகாரத்தை சுத்திட்டு இன்னும் வலியை அதிகமாக்கவா... அதெல்லாம் வேண்டாம்... வாங்க வீட்டுக்குக் கிளம்பலாம்...

    டேய் சஞ்சு... கோவிலுக்கு வந்துட்டு இப்படில்லாம் சொல்லக் கூடாதுப்பா... எல்லா வலியையும் வேதனையையும் அவ தீர்த்து வைப்பான்னு நம்பி தானே அவகிட்டே வரோம்... உனக்கு வரப் பிடிக்கலைனா நீ இங்கேயே இரு... நான் பிரகாரத்தை சுத்திட்டு வரேன்... என்றார் அவர்.

    ம்ம்... சொன்னாக் கேக்க மாட்டிங்களே... எல்லாத்துக்கும் பிடிவாதம்... சரி நான் முன்னாடி வெயிட் பண்ணறேன்... சீக்கிரம் சுத்திட்டு வாங்கம்மா... என்றவன் நகர்ந்தான்.

    அவரும் அம்மனை வேண்டிக் கொண்டே பிரகாரத்தை சுற்றத் தொடங்கினார். அலைபேசியை நோண்டிக் கொண்டு வெளியே காத்திருந்தவனின் ஜாதகத்தை அதற்குள் நாம் அலசி விட்டு வருவோம்.

    ரேணுகா தேவி, கோபால கிருஷ்ணன் தம்பதிகளுக்கு சஞ்சய் கிருஷ்ணா, விக்ரம் கிருஷ்ணா என இரு மகன்கள். கோபால கிருஷ்ணனின் பிசினஸ் பார்ட்னர் ஒருவர் அவரை தொழிலில் ஏமாற்றிவிட, கடனில் மூழ்கிப் போனவரை, கரை சேர விடாமல் அவரது பலகீனமான இதயம் துடிப்பதை நிறுத்தி நின்று போனது.

    தந்தை இறக்கும் போது எஞ்சினியரிங் இறுதி ஆண்டில் இருந்தான் சஞ்சய். தந்தை விட்டுச் சென்ற கடனையும், அந்த சின்ன ரியல் எஸ்டேட் நிறுவனத்தையும் தன் தோளில் தாங்கிக் கொண்டவன், அதைப் பார்த்துக் கொண்டே படிப்பையும் முடித்தான். அவனது தந்தையின் நண்பர், ராம் குமார் ஒருவரை மட்டுமே நம்புவான். அவரது ஆலோசனைகளை தந்தையின் ஆலோசனையாய் ஏற்று காரியத்தில் இறங்கத் தொடங்கினான்.

    தந்தை கொண்ட ஒரு நட்பின் நம்பிக்கை மீது விழுந்த அடி அவரது உயிரையே வாங்கிச் சென்றாலும், மற்றொரு நட்பு சிறந்த வழிகாட்டியாய் அவனை உயரங்களுக்கு அழைத்துச் சென்றது. எல்லாரையும் சந்தேகப் பார்வையோடு மட்டுமே பார்க்கத் தொடங்கியவன், அவனது நிழலைக் கூட நம்ப மறுத்தான். அந்தச் சின்ன வயதில் அவனுக்குக் கிடைத்த அனுபவம், பணம் மட்டுமே குறிக்கோளாய் மாற்றி விட்டது. ஊண், உறக்கம் மறந்து தொழில் மட்டுமே குறிக்கோளாய் இருந்து கஷ்டப்பட்டதற்கு நல்ல பலனும் கிடைத்தது.

    குறுகிய காலத்தில் அவனது வளர்ச்சியைக் கண்டு பிசினஸ் உலகமே வியந்தது.

    ஒரு கம்பெனி பல கிளைகளாய் விரிவடைய, SV குரூப் ஆப் கம்பெனீஸ் பெரிய அளவில் விரிந்தது.

    SV பில்டர்ஸ், SV கன்சல்டன்சி, SV ஹோம் டெகரேட்டர்ஸ், SV டெக்னலாஜிஸ் என அவனது கால் பதிந்த இடமெல்லாம் வெற்றியே கிடைத்தது. எட்டு வருட கடின உழைப்பில் அவனது நிலை இளம் தொழிலதிபர்கள் லிஸ்டில் முன்னணியில் கொண்டு நிறுத்தியது.

    முப்பதை நெருங்கிக் கொண்டிருந்த அவனுக்கு கல்யாணத்தில் நாட்டம் இல்லாமல் இருக்கவே, அன்னை ரேணுகா தேவியின் மனதுக்குப் பெரும் கவலையாய் இருந்தது. இப்படியே விட்டால் மகன் ஒற்றை மரமாய் நின்று விடுவானோ என நினைத்து அவரும் பல விதத்தில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார். அவன்தான் அசைந்து கொடுக்கவில்லை.

    அவனுக்கு எந்தப் பெண்ணின் மீதும் விருப்பமும் தோன்றவில்லை... அன்னை காட்டிய பெண்களைக் கல்யாணம் செய்ய ஒத்துக் கொள்ளவும் இல்லை... இன்னும் இன்னும் வாழ்க்கையில் உயரங்களை அடைய வேண்டும்... நிறைய சாதிக்க வேண்டும் என்பது மட்டுமே அவனது லட்சியமாய் இருந்தது.

    காலை அசைத்து அசைத்து மெல்ல நடந்து பிரகாரத்தை சுற்றி வந்து கொண்டிருந்தார் ரேணுகா தேவி. காலை வெயில் சுள்ளென்று முகத்தில் அடிக்க அவருக்கு ஒரு மாதிரி இருந்தது. அப்போது தான் காலையில் பிரஷர், சுகருக்கான மாத்திரையைக் குடிக்க வில்லை என்பது நினைவுக்கு வந்தது.

    அய்யய்யோ... தலை வேற சுத்துதே... காலைல மாத்திரை போட மறந்துட்டேன்னு தெரிஞ்சா என் மிலிட்டரி மகன் அதுக்கும் கிளாஸ் எடுத்து கொல்லுவானே... எப்படியாவது மெல்ல நடந்து அந்த நிழலுக்குப் போயிடணும்... என நினைத்துக் கொண்டே பருத்த உடல் முழுக்க வேர்க்கத் தொடங்கியிருக்க அந்த நீண்ட பிரகாரத்தை சுற்றி வந்து கொண்டிருந்தார். நல்ல கூட்டம் வேறு இருந்ததால் அவரால் எங்கும் நிற்கவும் முடியவில்லை.

    ஒரு வளைவில் சட்டென்று அவரது கட்டுப்பாடில்லாமல் தலை சுற்ற கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. தலை சுற்றி விழப் போனவரை ஓடி வந்து தாங்கிக் கொண்டாள், அங்கிருந்த பிள்ளையாரிடம் தன் வேண்டுதலை லிஸ்ட் போட்டுக் கொண்டிருந்த ஹர்ஷா.

    அச்சச்சோ... என்னாச்சும்மா... என்றவள் அவரைத் தாங்கிக் கொண்டு சற்று ஓரமாய் இருந்த நிழலுக்கு அழைத்துச் சென்றாள். அதற்குள் யாரோ கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை நீட்ட, அதை வாங்கி அவரைக் குடிக்க வைத்தாள். அதற்குள் அங்கே சிலர் கூடிவிட, எல்லாரும் கொஞ்சம் தள்ளிப் போறீங்களா... அவங்களுக்கு கொஞ்சம் காத்து வரட்டும்... என்று கூட்டத்தை விலக்கினாள்.

    என்னம்மா... உங்க மகன் எங்கே போனார்... முடியாம எதுக்கு தனியா இப்படி பிரகாரத்தை சுத்திட்டு இருக்கீங்க... உங்களுக்கு பிரஷர் இருக்கா... மாத்திரை எடுத்துக்கலையா... என்று அவள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, அதற்குள் வெகு நேரமாய் அன்னைக்காய் காத்திருந்து காணாமல் அவரைத் தேடி அங்கு வந்தான் சஞ்சய். ஹர்ஷாவின் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்த அன்னையைக் கண்டவன் பதட்டத்துடன் அவர்கள் அருகில் வந்தான்.

    அய்யோ... என்னாச்சும்மா...

    ஒ... ஒண்ணும் இல்லைப்பா... கொஞ்சம் தலை சுத்திடுச்சு... வேறொண்ணும் இல்லை... நீ பதட்டப்படாதே... இப்ப பரவாயில்லை... என்றார் அவர்.

    ஏன் தலை சுத்துச்சு... காலைல பிரஷர் மாத்திரை போடலையா...

    அது வந்து... எப்பவும் வசந்தி தானே எடுத்துக் கொடுப்பா... இப்ப அவ இல்லியா... அதான் மாத்திரை போட மறந்துட்டேன்ப்பா... என்றார் அவர் பரிதாபமாக. வசந்தி அவரது வேலைக்காரப் பெண். அவளுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டதால் வேலையில் இருந்து நின்று விட்டிருந்தாள்.

    அம்மா... உங்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் கேக்கறதில்லை... மாத்திரை கூடப் போடாம அப்படி என்ன மறதி... பிரகாரத்தை சுத்த வேண்டாம்னு சொன்னா அதையும் கேக்கறதில்லை... என்று பட்டாசாய் பொரிந்தான் மகன். அவன் சொன்னதைக் கேட்டு ரேணுகா பாவமாய் ஹர்ஷாவைப் பார்க்க, இவன் எதற்கு இத்தனை கோபப் படுகிறான் என திகைப்புடன் நோக்கிக் கொண்டிருந்தாள் அவள்.

    ஹப்பா... சரியான ஹிட்லர்தான் போலருக்கு... அம்மான்னு கூடப் பார்க்காமப் பொரிஞ்சு தள்ளறான்... என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

    சரி... வாங்க... கிளம்பலாம்... என்றவன் அன்னையை கை கொடுத்துத் எழுப்பி விட்டான். அப்போதும் அவன் முகம் கடினமாய் இருந்ததே ஒழிய எள்ளளவும் கனிவு இல்லை.

    எழுந்தவர், யாருன்னே தெரியலைனாலும் சட்டுன்னு வந்து உதவி செய்ததுக்கு ரொம்ப நன்றிம்மா... நான் வரேன்... என்றுவிட்டு, மகன் அவளிடம் ஏதாவது சொல்வானா... என்று நினைத்து அவன் முகத்தைப் பார்க்க, அதில் எந்த உணர்வும் இல்லை... அன்னையை அழைத்துக் கொண்டு அவன் நடந்தான்.

    ஒரு தேங்க்ஸ் சொல்லக் கூட இந்த உம்மணா மூஞ்சிக்கு மனசு வரலை போலருக்கு... சரியான ஹிட்லர்... என மனதுக்குள் நினைத்துக் கொண்டே கையிலுள்ள குட்டி கைக்கடிகாரத்தைப் பார்த்தவள் அதிர்ந்தாள்.

    அய்யோ... டியூட்டிக்கு டைம் ஆச்சே... இனி வீட்டுக்குப் போயி லஞ்ச் எடுத்திட்டு கிளம்பறதுக்குள்ளே லேட் ஆச்சுன்னா திட்டு விழுகுமே... என நினைத்துக் கொண்டே வேகமாய் கோவிலை விட்டு வெளியேறியவள் தனது சிவப்பு வண்ண ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு சாலையில் பறந்தாள்.

    பத்து நிமிடத்தில் வீட்டை அடைந்தவள், ஸ்கூட்டியை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தாள்.

    என்னடா ஹர்ஷூ... கோவில்ல ரொம்ப கூட்டமா... சோர்வுடன் வந்தது அன்னை உமாவின் குரல். மெலிந்த தோற்றம்... கண்களில் கவலைகளின் குடியிருப்பு.

    ஆமாம் மா... ஆடி வெள்ளியாச்சே... கூட்டம் இல்லாம இருக்குமா... என்றவள் திருநீரை எடுத்து அவரது நெற்றியில் வைத்து விட்டாள்.

    அம்மா... நீங்க சாப்டிங்களா...

    ம்ம்... எனக்கு வேற என்ன வேலை... சாப்பிடறதும் தூங்கறதும் தானே... சலிப்புடன் வந்தது அவரது குரல்.

    என்னம்மா... எதுக்கு இந்த சலிப்பு... இத்தனை காலம் நீங்க கஷ்டப்பட்டாச்சு... இப்போ நாங்கல்லாம் பெருசான பின்னால இனியாவது கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டியது தானே...

    ம்ம்... நீ இப்படி அரக்க பறக்க வீட்லயும் வேலை செய்துட்டு வேலைக்கும் போயிட்டு கஷ்டப்படறதைப் பார்க்க எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குமா... நின்னுகிட்டே அடுக்களைல எதாவது செய்யறேன்னு சொன்னாலும் நீ விட மாட்டேங்கிறே... அலுத்துக் கொண்டார் அவர்.

    இவ்ளோ நாள் எங்களுக்காய் உங்க உடம்பை வருத்திகிட்டது போதும்... இனி ராணி மாதிரி உக்கார்ந்து எங்களை அதிகாரம் பண்ணிட்டு நல்லா ஓய்வெடுங்க... அவரிடம் சொல்லிக் கொண்டே தனது டிபன் பாக்ஸில் மதிய உணவை எடுத்துக் கொண்டாள் அவள்.

    ம்ம்... எனக்கு உங்க எதிர்காலத்தை நினைச்சா மலைப்பா இருக்கு... கையில உள்ள பணம் எல்லாம் இந்த ஆப்பரேஷன்கு போயிருச்சு... வீடு மேலயும் கடன் வாங்கிட்டோம்... இன்னும் உன் தங்கை எஞ்சினியரிங் படிப்பை முடிக்கணும்... ரெண்டு பேருக்கும் நல்ல இடத்துல வரன் பார்த்து கல்யாணம் முடிக்கணும்... இதுக்கெல்லாம் எத்தனை பணம் வேணும்... இனி என்ன பண்ணப் போறோம்னு நினைச்சா ஒரு வாய் சோறு கூட நிம்மதியா இறங்க மாட்டேங்குது...

    அம்மா... இன்னைக்கு முதல்ல பார்ப்போம்... நாளைக்கு என்ன வேணுமோ அதுக்காய் முயற்சி பண்ணுவோம்... நான் இருக்கேன்ல... எப்படியாவது வர்ஷாவை நல்லபடியா படிப்பை முடிக்க வச்சிருவேன்... அப்புறம் அவளும் நல்லவொரு வேலைக்குப் போகத் தொடங்கிட்டா நீங்க நினைச்சது போல எல்லாம் நடக்கும்... வருத்தப் பட்டு உடம்பை கெடுத்துக்காதிங்கம்மா... எதிர்காலத்தை விட எங்களுக்கு நீங்க முக்கியம்... ஆறுதலாய் வந்த மகளின் வார்த்தைகள் அவர் மனதை நெகிழ்த்தியது.

    சரிம்மா... மதியத்துக்கு சாப்பிட்டு போட வேண்டிய மாத்திரை எல்லாம் மேசைல எடுத்து வச்சிருக்கேன்... மறக்காம போட்டிருங்க... நான் கிளம்பட்டுமா...

    ம்ம்... சரிடா... சாப்பிட நேரம் இல்லைன்னு அப்படியே சாப்பாட்டைத் திருப்பிக் கொண்டு வந்திடாதே... நேரத்துக்கு சாப்பிடு... நைட் வரும்போது கவனமா வண்டி ஓட்டிட்டு வா... பத்திரமா போயிட்டு வா... என்றார். மகளைப் பெருமிதமாய் நோக்கியவரின் விழிகள் கலங்கின. அவள் கிளம்பியதும் அவரது நினைவுகள் பின்னோக்கி சென்றன.

    உமாவின் கணவர் சுந்தர் மின்சாரத் துறையில் லைன் மேனாக வேலை செய்து வந்தவர். ஒரு மழை நாளில் மின்சார இணைப்பை சரியாக்குவதற்காய் மின் கம்பத்தின் மீது ஏறியவர், ஷாக் அடித்து கீழே விழுந்து தலையில் அடிபட, ஆஸ்பத்திரியில் கிடந்து சிகிச்சை பயனின்றி இறந்து போனார். சிகிச்சைக்காய் கையில் உள்ள சேமிப்பு முழுதும் கரைந்து போக, போதாமல் கடனும் சேர்ந்து கொள்ள இரண்டு பெண்களையும் வைத்துக் கொண்டு பரிதவித்து நின்றார் உமா.

    அவருக்கு மின்சாரத் துறையிலேயே கிளர்க் உத்தியோகத்தைக் கொடுத்து புண்ணியத்தை தேடிக் கொண்டது அரசாங்கம். அன்று முதல் தாயும் தந்தையுமாய் அவரே பெண் குழந்தைகளை கருத்தோடு வளர்த்து வந்தார். மூத்தவள் ஹர்ஷா, பொறுமையும் நிதானமும் நிறைந்தவள். அவளுக்குப் பிடித்த நர்ஸிங் படிப்பை சந்தோஷமாய் படித்து முடித்தாள்.

    சிறியவள் வர்ஷா... சற்று துடுக்குத்தனம் நிறைந்தவள்... அன்புக்கு மட்டுமே அடிபணிபவள்... அக்காவும், அன்னையுமே அவளது உலகம்... சென்னையில் ஒரு தோழியின் வீட்டில் பணம் செலுத்தும் விருந்தினராகத் தங்கி எஞ்சினியரிங் கல்லூரியில் இறுதி வருடம் படித்து வருகிறாள்... அவளுக்கு நன்றாகப் படித்து ஐடி கம்பெனியில் வேலைக்குப் போய் எடுத்ததுமே கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பது ஆசை.

    ஹர்ஷா நர்ஸிங் படிப்பை முடித்த சமயத்தில் உமாவுக்கு அவ்வப்போது முடியாமல் போக பரிசோதித்த டாக்டர், இதயத்தில் ஒரு வால்வில் ஏதோ பழுது இருப்பதாகக் கூறி, முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் கூடிய சீக்கிரமே மேஜர் ஆப்பரேஷன் செய்து அதை சரி செய்ய வேண்டும் என்றும் கூறி விட்டார்... எனவே உமா விருப்ப ஓய்வு எழுதிக் கொடுத்து வீட்டில் ஓய்வெடுக்கத் தொடங்கினார். அவரது சிகிச்சை, மருத்துவ செலவு என நிறையத் தொகை செலவாக இருந்த சிறிய வீட்டின் மீது கடன் வாங்கி அந்த செலவுகளை செய்தனர். ஆப்பரேஷனையும் முடித்தனர்.

    அவரது அலுவலகத்தில் இருந்து கிடைத்த பணத்தில் வீட்டுக் கடனைத் தவிர மற்ற கடன்களை அடைத்து விட்டனர். ஹர்ஷா ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்து வந்தாள். அவளது சம்பளமும், உமாவின் ஓய்வூதியமும் மட்டுமே வருமானமாய் இருக்க, சற்று கஷ்டப்பட்டு தான் குடும்பம் ஓடிக் கொண்டிருந்தது.

    மகள் சென்று வெகு நேரமாகியும் வழியையே பார்த்துக் கொண்டு நின்ற உமா, கதவைத் தாளிட்டு விட்டு படுக்கையில் சரிந்தார்.

    விழிகளில் விழுந்திட்டேன்

    இதயத்தில் நுழைந்திடுவேனா...

    விழி மூடி யோசிக்கறேன்...

    இதயத்துடிப்பாய் நீயே வந்தாய்...

    இதயம் பேசும் வார்த்தைகள்

    என்ன மொழி கண்ணே...

    உன் விழிகளின் மூலம்

    சொல்லிக் கொடுப்பாயா...

    விழியை திறக்க மனமில்லை...

    விழி வழியே நீ பறந்துவிட்டால்...

    விழி இருந்தும் பார்வையற்ற

    குருடனாய் நான் ஆவேனே...

    சொர்கத்தின் வாசலும்

    நரகத்தின் வாசலும்

    உன் விழியில் கண்டேன்...

    முதன்முறையாய் என் இதயம்

    அதில் துடிக்கக் கண்டேன்...

    இதயமே... என் இதயமே...

    இதயம் – 2

    அழகான இளமாலை நேரம்...

    சென்னையில் மூன்று நட்சத்திர அந்தஸ்தைப் பிடித்திருந்த அந்த ரெஸ்டாரன்ட் மிதமான வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருந்தது. அங்கங்கே இருக்கையில் ஆர்டர் கொடுத்துவிட்டு பசிக்காகவும், ருசிக்காகவும் காத்திருந்த முகங்கள்.

    ஐந்து நாற்காலிகளால் சூழப்பட்டிருந்த அந்த வட்டவடிவ மேசை நிறைய விதவிதமான பதார்த்தங்கள் இடம் பிடித்திருக்க, கைக்கும், வாய்க்கும் பரிமாற்றம் நடந்து கொண்டிருந்தாலும் உற்சாகத்திற்கும் சிரிப்புக்கும் குறைவில்லாமல் இருந்தது. கவலையில்லா கல்லூரிப் பருவத்தின் கன்னியர்கள் அவர்கள். பஞ்ச பாண்டவிகளும் ஐஐடி யில் கம்ப்யூட்டர் என்ஜினியரிங் இறுதி வருட மாணவிகள். கல்லூரி முதலாமாண்டு முதல் இணை பிரியா தோழிகள்.

    தீபாவின் வீட்டில் தான் வர்ஷா பேயிங் கஸ்ட்டாக வசித்து வந்தாள். அவர்கள் வீட்டில் தீபாவின் அன்னையும் அவளும் மட்டுமே. தீபாவின் சிறு வயதிலேயே அவள் தந்தைக்கும் அன்னைக்கும் கருத்து வேறுபாடு வந்து இருவரும் விவாகரத்து வாங்கி தனித்தனியே வசித்து வந்தனர். வெளிநாட்டில் வசிக்கும் அவள் தந்தை மறுமணம் புரிந்திருக்க, பாங்கில் வேலை செய்து வந்த அன்னை, டிரான்ஸ்பரில் கோவையிலிருந்து சென்னை வரவே வர்ஷாவின் எஞ்சினியரிங் படிப்பு அங்கே தீபாவுடன் ஒரே கல்லூரியில் தொடர்ந்தது. அவர்கள் இருவரும் பள்ளிப் பருவத்தில் இருந்தே நெருங்கிய தோழிகள். தீபாவின் அன்னைக்கும் வர்ஷாவை மிகவும் பிடிக்குமாதலால் மகளைப் போலவே பார்த்துக் கொள்வார்.

    மற்ற மூவரும் ஹாஸ்டலில் வாசம் செய்யும் பல இடத்துப் பறவைகள். அகிலாவின் பிறந்த நாளுக்கு அவளை ட்ரீட் கேட்டு இவர்கள் தொந்தரவு செய்ய, அகிலாவின் தந்தை ட்ரீட் கொடுக்குமாறு கூறி பணத்தை அனுப்பினார். அதைக் கொண்டாட வந்திருந்தனர். அவள் தந்தை திருச்சியில் பெரிய பைனான்ஸ் கம்பெனி வச்சிருந்தார்.

    கவிதா, ஷீலா இருவருமே நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். இருவரும் சென்னைக்கு அருகில் உள்ள ஊரை சேர்ந்தவர்கள் ஆனாலும் படிப்பிற்காய் ஹாஸ்டலில் தங்கி இருந்தனர்.

    ஏய்... அடுத்து எனக்கொரு சிக்கன் நூடுல்ஸ் சொல்லிடுடி... என்றாள் கவிதா.

    அடுத்தடுத்து அவர்கள் ஒவ்வொன்று ஆர்டர் செய்யும் போதும் அகிலாவின் இதயம் சற்று அதிகப் படியாய் துடித்துக் கொண்டிருந்தது. அவளைக் கண்டு கொள்ளாமல் பிடித்ததெல்லாம் ஆர்டர் செய்து உள்ளே தள்ளிக் கொண்டிருந்தனர் நண்பிகள். வானவில் தேவதைகளாய் சிரிப்பும், கிண்டலுமாய் கலகலவென்று அமர்ந்திருந்தவர்களின் மீது ஆவலோடு பதிந்து மீண்டது பலரின் கண்கள்.

    ஏய் கவி... உனக்கு எப்ப கல்யாணம்னு முடிவாகிடுச்சா... அடுத்தது உன்னோட ட்ரீட் தான்... என்றாள் தீபா.

    ம்ம்... உங்களுக்கு ட்ரீட்க்கு ஒரு காரணம் வேணும்... முடியாதுன்னு சொன்னா விடவா போறீங்க... என்றவள், அடுத்த மாசத்துல நாலஞ்சு முகூர்த்தம் ஜோசியர் குறிச்சு கொடுத்திருக்காராம்... அவர் அமெரிக்கால இருந்து லீவுல வர்றதைப் பொறுத்து டேட் பிக்ஸ் பண்ணுவாங்கன்னு நினைக்கறேன்...

    என்னடி சொல்லறே... அப்ப உன்னோட எக்ஸாம்... என்றாள் வர்ஷா.

    கல்யாணம் முடிஞ்சாலும் எக்ஸாம் முடிஞ்சு தான் அமேரிக்கா போவேன்டி... நிறைய பார்மாலிடீஸ் இருக்காம்... என்னையும் கூட்டிட்டுப் போறதுக்கு... அதான்... சீக்கிரம் கல்யாணத்தை வைக்குறாங்க... என்றாள் அவள்.

    ம்ம்... கூடிய சீக்கிரமே மணமகள் ஆகப் போறேன்னு சொல்லு... என்ற அகிலா, அவள் கண்கள் கனவில் மிதப்பதைக் கண்டு மற்றவர்களிடம் சாடை காட்டினாள்.

    அதைக் கண்டு அவர்கள் சிரிக்க, அசடு வழிந்தாள் கவிதா.

    நீ ஏன்டி தீப்ஸ்... அவகிட்டே கல்யாணத்தைப் பத்தி பேசினே... இல்லன்னாலே கனவுல மிதந்துகிட்டு இருப்பா... இப்பப் பாரு... அவ உடனே ட்ரீம்லாண்டுக்கு டிக்கட் வாங்கிட்டா... என்று ஷீலு சொல்ல, அனைவரும் சிரித்தனர்.

    ஏய்... ஷீலு... நம்ம லாஸ்ட் செமஸ்டர்க்கு ரெண்டு மாசம் தான் இருக்கு... அதுக்கப்புறம் நீ என்ன பண்ணற ஐடியால இருக்கே... என்றாள் அகிலா.

    நான் ஆஸ்ட்ரேலியால ஹையர் ஸ்டடீஸ்கு அப்ளை பண்ணலாம்னு இருக்கேன்டி... என் அம்மா வேற எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்து வீட்டை விட்டுத் தொரத்தி விடணும்னு குறியா இருக்காங்க... அப்பாவை தாஜா பண்ணி எப்படியாவது ஆஸ்ட்ரேலியா போயிடணும்... என் அக்கா அங்கே தானே இருக்கா... அங்கே படிப்பை முடிச்சிட்டு அங்கேயே நல்ல ஜாப்க்கு டிரை பண்ணலாம்னு இருக்கேன்... என்றாள் அவள்.

    சட்டென்று ஷீலாவிடம் திரும்பிய கவிதா மெல்லிய குரலில் பேசினாள்.

    ஏய் ஷீலு... அங்க பார்த்தியா ஒரு கொரில்லா உன்னையே வெறிச்சு பார்த்திட்டு இருக்கு...

    ஏய்... அது என்னைப் பார்க்கலைடி... என்னடா... நம்ம பெண்பால் ஒண்ணு இங்கே உக்கார்ந்திருக்கேன்னு உன்னை தான் பார்த்திட்டு இருக்கு...

    ஹூம்... அதானே... நண்பிடி செல்லம்... நீ என் இனம்டி... நம்ம வர்க்கத்தை விட்டுக் கொடுத்து பேசுவியா... என்று அவள் கேட்டதும் அங்கே சின்னதாய் சிரிப்பு அலை எழுந்தது.

    ஏய்... அங்க பார்த்தியா... ரொம்ப நேரமா ஒருத்தன் நயாகராவைத் தொறந்து விட்டிருக்கான்... அவன் வாட்டர் பால்சை மூடலைனா இந்த ஹோட்டலே தண்ணியில மிதக்கப் போகுதுன்னு நினைக்கறேன்... என்றாள் ஷீலா.

    சரி... சரி... நீ அதுல கப்பல் விடாம இரு... அவன் நம்ம பேசுறதை கவனிக்கறான்... என்று அவளை அடக்கினாள் தீபா.

    ஏய் வர்ஷு... நீ என்னடி ஏதோ சீரியஸா யோசிச்சுட்டு இருக்கே... எல்லாருக்கும் பர்த்டேக்கு பார்ட்டி கொடுக்க கூட்டிட்டு வந்திருக்காளே இந்த கஞ்சூஸ் அகிலா... பணம் வச்சிருப்பாளா... இல்லை நம்மை கொடுக்க வச்சிருவாளானு யோசிக்கறியா... அவள் விலாவில் இடித்தாள் தீபா.

    அதைக் கேட்டதும் அவளை முறைத்த அகிலா, ஏய் ரவுடி... என்னை கஞ்சூஸ்னு சொன்னே... அப்புறம் உன்னை மாவாட்ட விட்டிருவேன் சொல்லிட்டேன்...

    அட... அதெல்லாம் ஆல்ரெடி நான் விசாரிச்சுட்டேன்டி... இந்த ஹோட்டல்ல அந்த வசதி எல்லாம் இல்லியாம்... ஒன்லி கிரைண்டர் தானாம்... சோ... நோ பிராப்ளம்... ஸ்விட்ச் ஆன், ஆப் மட்டும் தான்... என சொல்லிக் கொண்டே சாஸ் பாட்டிலை எடுக்க, அவளை அடிக்கக் கை ஓங்கிய அகிலாவின் கை அதில் பட்டு விட்டது. சாஸ் பாட்டில் கையிலிருந்து சரிந்து, அவர்களை சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வர்ஷாவின் இளநீல வண்ண நெட் சுரிதாரில் விழுந்து வரியாய் இறங்கியது.

    அடடா... சாஸ் போச்சே... ஏய் அகிலாண்டம்... கையை வச்சிட்டு சும்மா இருக்காம தட்டி விட்டுட்டே... இப்ப அவ டிரஸ் எல்லாம் பாழாகிடுச்சுன்னு சாமியாடுவாளே... என்றாள் ஷீலு.

    இம்சைகளா... நீங்க ஆளாளுக்கு அடிச்சுகிட்டு என் டிரஸ்ஸை நாசம் பண்ணிட்டீங்களே... ஏய்... அகி... ஒழுங்கு மரியாதையா உன்னோட பர்த்டே ட்ரீட்ல இந்த டிரை வாஷ் செலவும் சேர்த்துக்கோ... என்றாள் வர்ஷா முகத்தை சுளித்துக் கொண்டே.

    சரி... சரி... மூஞ்ச தூக்கி வச்சுக்காம போயி வாஷ் பண்ணிட்டு வந்திடு... அப்புறம் டிரை வாஷ் கொடுத்திடலாம்... என்றாள் அகிலா.

    கொரங்குகளா... உங்களை வந்து வச்சுக்கறேன்... என்றவள் எழுந்து வாஷ் ரூம் நோக்கி நகர்ந்தாள்.

    வர்ஷா... வெயில் காலத்தில் மனம் ஏங்கும் இளம்சாரலை போல் கண்ணுக்கு குளிர்மையாய், அழகாய் இருந்தாள்.

    பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும் பெரிய விழிகளில் மஸ்காரா போட்டு இன்னும் அழகாக்கி இருந்தாள். சிறிய பிறை போன்ற நெற்றியில் கண்ணுக்குத் தெரியாதது போல் குட்டியாய் ஒரு பொட்டு. அழகான, சிறிய, எடுப்பான நாசி. குட்டி ஆரஞ்சு சுளைக்கு லிப்ஸ்டிக் போட்டது போல் அளவான சின்ன உதடுகள். அதை லிப் கிளாஸ் போட்டு மேலும் பளபளப்பாக்கி இருந்தாள்.

    கழுத்தில் மெலிதாய் ஒரு செயின்... உடைக்கு மேட்சாய் காதில் போட்டிருந்த தொங்கட்டான், அவள் தலையாட்டும் ஒவ்வொரு முறையும் அழகாய் அசைந்து பார்ப்பவர்களின் மனதை அசைத்தது. அலை மோதும் கூந்தல் தோளில் தவழ்ந்து கொண்டிருக்க அதை ஒரு கையால் ஒதுக்கிக் கொண்டே தனக்குப் பிடித்தமான அந்த டிரஸ்ஸை வருத்தத்துடன் நோக்கிக் கொண்டு நடந்தாள்.

    அக்கா ஹர்ஷாவை விட அழகாய், நிறமாய் இருந்தாள். தங்க சிலைக்கு உயிர் கொடுத்தது போல பளிச்சென்ற அழகு, அவள் சற்று மெனக்கெட்டதில் மேலும் அதிகமாகி ஜொலித்தது. சுரிதாரையே பார்த்துக் கொண்டு வந்தவள் எதிரில் வந்தவனை கவனிக்காமல் வளைவில் திரும்பினாள். அவனும் அலைபேசியை நோண்டிக் கொண்டே வந்ததில் எதிரில் கவனிக்கவில்லை.

    வளைவில் அவள் மீது அவன் இடித்துவிட, விழப் போனவளை சட்டென்று கை கொடுத்து தாங்கிக் கொண்டான் அவன்.

    அவன்... விக்ரம் கிருஷ்ணா.

    எதிர்பாராத விபத்தில்... ஆம் விபத்து தான்... அவளது கண்கள் படபடவென்று அடித்துக் கொள்ள பட்டாம்பூச்சி சிறகை அடிப்பது போலத் தோன்றியது அவனுக்கு. அவனிடமிருந்து விலகி எழுந்தவள், கோபமாய் அவனைத் திட்டுவதற்காய் முகத்தை ஏறிட்டாள்.

    அப்போது அவன் கைகளில் இருந்த அலைபேசி அழகாய் உயிர்த்து அந்த

    Enjoying the preview?
    Page 1 of 1