Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavugal Manathiley Malaruthey...
Kanavugal Manathiley Malaruthey...
Kanavugal Manathiley Malaruthey...
Ebook373 pages2 hours

Kanavugal Manathiley Malaruthey...

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

குடும்பத்தினரின் நிம்மதிக்காக விரும்பா கணவனையும்.. பொருந்தா திருமணத்தையும் மனம் உவந்து ஏற்றுக்கொள்ளும் நாயகி.. தன் பொறுமையாலும் .. அன்பாலும்.. தனக்கமைந்த வாழ்க்கையை தன் வசமாக்கிக் கொள்வதை பற்றிய அருமையான காதல் கதை.

Languageதமிழ்
Release dateOct 15, 2022
ISBN6580134209083
Kanavugal Manathiley Malaruthey...

Read more from Viji Prabu

Related to Kanavugal Manathiley Malaruthey...

Related ebooks

Reviews for Kanavugal Manathiley Malaruthey...

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavugal Manathiley Malaruthey... - Viji Prabu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கனவுகள் மனதிலே மலருதே...

    Kanavugal Manathiley Malaruthey...

    Author:

    விஜி பிரபு

    Viji Prabu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/viji-prabu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    1

    "கோபியர் கொஞ்சும் ரமணா..

    கோபால கிருஷ்ணா...

    கோபியர் கொஞ்சும் ரமணா.."

    கொட்டும் மார்கழி மாத பனியையும் பொருட்படுத்தாமல் கணீர் குரலில் பஜனை பாடிக் கொண்டிருந்த பஜனைக் குழுவினரின் பக்தியை மனதிற்குள் பாராட்டியவாறு அவர்களைக் கடந்து சென்று.. சந்தியில் வீற்றிருந்த பெருமாளின் முன்பு கைகூப்பி நின்ற பங்கஜகத்தின் விழிகளில்.. எப்போதும் போலவே.. மெல்லிய ஏக்கம் படர தொடங்கியது..

    அவளது அந்த ஏக்கத்திற்கான காரணத்தை அறிந்தவராக புன் சிரிப்புடன் அருள்பாலித்துக் கொண்டிருந்த பெருமாளை.. உரிமையும் சலிப்புமாக மனதிற்குள் கோபித்துக் கொள்ள தொடங்கினாள் பங்கஜம்.

    நான் என்ன மத்தவங்க மாதிரி பொன் கொடு.. பொருள் கொடுன்னா பேராசையா கேட்டுப்புட்டேன்..? இல்லேயில்ல..? என் தங்கப் பேத்திக்கு தகுந்தவரனா சீக்கிரத்துல கொண்டு வந்து சேருன்னுதான கெஞ்சிக்கிட்டு இருக்கேன்..? இதக்கூட செய்ய கூடாதா நீ..? இந்த உலகத்துல நியாயமான கோரிக்கைகள் மட்டும் ஏன் உன்னால நிராகரிக்கப்பட்டுக்கிட்டே இருக்குது..? எனக்கு பதில் சொல்லு என் அப்பனே..?

    ஆமா..! நீ என்னிக்குத்தான் என் கேள்விக்கு பதில் சொல்லி இருக்க..?! நான்தான் பைத்தியக்காரி மாதிரி உன்கிட்டயே வந்து வந்து நின்னுக்கிட்டு இருக்கேன்..

    பங்கஜம் மனதிற்குள் கடவுளை தன் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருக்கும்போதே..

    பாட்டி கூறியவாறு கோவிலை வலம் வந்து முடித்து விட்டு.. அவள் அருகில் வந்து நின்று கண்மூடி பெருமாளை கும்பிட தொடங்கிய பேத்தி பூஜாவைக் கண்டவுடன் பங்கஜத்தின் மனம் கனிந்து விட்டது..

    நல்லாப் பாருங்கய்யா..! இவளுக்கு என்ன குறை..? அழகு இல்லையா..? அறிவு இல்லையா..? என்ன இல்ல இவகிட்ட..? பின்ன எதுக்கு இம்புட்டு சோதிக்கறீங்க..?

    அங்க பாருங்க.. இவளைவிட சின்னவளுங்க எல்லாம்.. கல்யாணம் முடிஞ்சுட்ட பகுமானத்தோட வாரதைப் பாருங்க..

    பங்கஜத்தின் பார்வை பொறாமையும் ஏக்கமுமாக.. அங்கு வந்து நின்ற மற்ற பெண்களை பார்வையிட தொடங்க..

    தன் வேண்டுதலை முடித்துக் கொண்டு பாட்டியை திரும்பிப் பார்த்து போகலாம் என்பதைப் போல தலையசைத்துவிட்டு.. சுற்றி நின்ற எவரையும் ஏறெடுத்தும் பாராமல் திரும்பிச் செல்ல தொடங்கிய பூஜாவைப் பார்த்த மற்ற பெண்களின் கண்களில் பொறாமை மின்னியது..

    மஞ்சள் பூசிய சந்தன நிற தேகம் தங்கம் போல மின்னிக்கொண்டிருக்க.. செதுக்கிய சிற்பமாக.. அழகோவியமாக.. அழகிற்கெல்லாம் இலக்கணமாக.. பெண்மையும் மென்மையும் கலந்ததொரு தெய்வீக தோற்றத்துடன்.. நீண்ட கூந்தலின் நுனியில் போட்டிருந்த கொண்டையில் இருந்து ஈரம் சொட்ட நடந்து சென்று கொண்டிருந்த பூஜாவின் மீதிருந்த பார்வையை விலக்கிக் கொள்ள முடியாதவர்களாக அனைவரும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க..

    அவர்களை பார்த்துவிட்டு.. அதற்கும் மனதிற்குள் நொடித்துக் கொண்டவாறு.. அவர்களின் பார்வையில் இருந்து பேத்தியை மறைத்தவாறு.. அவள் பின்னால்.. அரணாக அவளை தொடர்ந்து செல்ல தொடங்கினாள் பங்கஜம்..

    அத்தனை நேரமும் கொதிகலனாக கொதித்துக் கொண்டிருந்த பங்கஜத்தின் உள்ளம்.. அந்த நொடியில்.. பேத்தியை பற்றிய பெருமித பெருமையினால் பூரித்து போய்விட்டது..

    பாருங்கடி.. நல்லாப் பாருங்க..! நீங்க என்னதான் பார்த்தாலும் என் பேத்தியோட பக்கத்துலகூட உங்களால நின்னுற முடியுமா என்ன..? அவ யாரு..!! இந்த பங்கஜத்தோட பேத்தியாக்கும்..!!

    ஹீம்.. இம்புட்டு அழகும் அந்தஸ்த்துமா இளவரசியாட்டம் இருக்கிற புள்ளைக்கு ஏத்த வரனா அமைச்சுக் கொடுக்கிறது சாதாரண வேலையா என்ன..!?

    அதனாலதான் என்னப்பன் பெருமாள் இம்புட்டு அவகாசம் எடுத்துக்கறாரு..!! அவரையும் குறைசெல்லிர முடியுதுதான..? என் அப்பனே.. இந்த ஏழைச் சிறுக்கியை மன்னிச்சிருப்பா.. நான் பேசுனதை பெருசா எடுத்துக்காதே..

    பங்கஜம் தன் கோபம் தணிந்தவளாக.. மனதிற்குள் பெருமாளிடம் கெஞ்சியவாறு.. மீண்டும் பெருமாளின் சந்நிதி இருக்கும் புறமாக திரும்பி நின்று கன்னத்தில் போட்டுக் கொள்ள..

    பாட்டியின் செயலினைக் கண்டு.. தன் வரிசைப் பற்கள் பளிச்சிட.. கன்னம் குழிவிழ.. கேலியாக சிரித்தாள் பூஜா..

    என்ன அப்பத்தா..? இன்னிக்கு மன்னிப்பு பலமா இருக்கு..? சாமிக்கு செம மண்டகப்படி கிடைச்சிருக்கும் போல இருக்கே..!?

    ஆமாண்டிம்மா.. உனக்கு என்னைப் பார்த்தா நக்கலா தெரியுதாக்கும்..?

    சேச்சே.. என் செல்ல ஸ்வீட்டியை நக்கல் பண்ணுவேனா..?

    இந்த கொஞ்சலுக்கெல்லாம் குறைச்சலே இல்ல..!

    வேற எதுல குறைச்சலாம்..!?

    ஏறக்குறைய சம வளர்த்தி என்றாலும்.. சலுகையாக பாட்டியின் தோளில் கைபோட்டு அணைத்து.. அவள் முகம் பார்க்க ஏதுவாக சற்று குனிந்து பங்கஜத்தை பார்த்துக் கொண்டே வந்த பூஜா..

    இருந்திருந்தாற்போல எதிரே வந்து நின்ற உருவத்தைக் கவனிக்காமல்.. அதன் மீது லேசாக மோதிவிட்டவள்.. பின் தான் மோதிய உருவம் ஆண் என்பதறிந்த பதட்டத்துடன்.. வேகமாக பின்னடைந்து நின்றுவிட்டாள்..

    இந்தாப்பா ஏய்.. பொம்பளைப் புள்ளைக வர்றது தெரியல..? பாத்து வரக் கூடாது.. இப்பிடித்தான் நேரா வந்து இடிப்பியா..?

    பார்த்துக்கிட்டே வந்ததுனாலதான்.. இடிக்க வேண்டியதாப் போயிருச்சு பாட்டி.. ஸாரி.. நான் வேணும்னு பண்ணலை..

    பார்த்துக்கிட்டே வந்து இடிச்சேன்னு சொல்லிட்டு.. வேணும்னு பண்ணலைன்னா என்னப்பா அர்த்தம்..? இது மட்டும் எங்க வீட்டு ஆம்பளைகளுக்கு தெரிஞ்சதுன்னா என்ன நடக்கும்னு தெரியுமில்ல..?

    சேச்சே.. அந்தளவுக்கெல்லாம் போக வேணாம் பாட்டி.. ஏற்கெனவே நம்ம ரெண்டு குடும்பத்துக்கு நடுவில இருக்கிற விரிசலை சரி பண்ண முடியாம நானே திண்டாடிப் போயிருக்கேன்.. இதுல நீங்கவேற புதுசா எதையாச்சும் கிளப்பி விட்ராதீங்க.. ப்ளீஸ்.. ஏங்க பூஜா.. நீங்களாவது பாட்டிகிட்ட எடுத்து சொல்லக்கூடாதா..?

    இந்தாப்பா தம்பி.. உனக்கு இம்புட்டுதான் மரியாதை.. பார்த்துக்க.. வயசுப்புள்ளைகிட்ட பேசற வேலையெல்லாம் வெச்சுக்காத.. சொல்லிப்புட்டேன்.. நீ வா கண்ணு..

    முன்னால் நின்றிருந்தவனை.. எங்கோ.. எம்போதோ.. பார்த்திருந்த ஞாபகம் இருந்ததினால்.. அவன் யாராக இருக்கக்கூடும் என்கிற ஆராய்ச்சி உள்ளூர ஓடிக் கொண்டிருந்தாலும்..

    அவனது பார்வையும்.. பங்கஜத்தின் எச்சரிக்கையும் உள்ளூர உணர்த்திய ஜாக்கிரதை உணர்வுடன் தன் ஆராய்ச்சியை ஓரம் கட்டிவிட்டு அவர்களை கடந்து முன்னேறி செல்ல தொடங்கிய பூஜா.. தன்னையழைத்து சாட்சி வைத்தவனின் குரலினால்.. மேலும் வேகமாக அங்கிருந்து விலகிச் செல்ல தொடங்கிவிட்டாள்..

    அவள் அவ்வாறு விலகிச் செல்வதை.. ஒரு வித ஏமாற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவனை முறைத்தவாறு.. தானும் பேத்தியை பின்தொடர தொடங்கினாள் பங்கஜம்..

    அது யாரு அப்பத்தா..? பார்த்த முகமாவும் தெரியுது.. அதே சமயத்துல புது ஆளு மாதிரியும் இருக்கே..? நீங்க எதுக்காக தேவையில்லாம அவன்கிட்ட சத்தம் போட்டீங்க..? தப்பு நம்மமேலயும்தான் இருக்கு..

    அட நீ வேற கண்ணு..! இவனுக கிட்டயெல்லாம் நீதி.. நியாயம் பார்த்துக்கிட்டு இருந்தா வேலைக்காகாது பூஜா..! இவன் யாருன்னு தெரியாதுல்ல.. உங்கப்பாவோட பரம எதிரி பரமசிவத்தோட சின்ன மகன்.. பேரு முகிலனாம்.. பாரின்லயெல்லாம் போய் படிச்சிட்டு வந்திருக்கானாமில்ல..? ஊருக்குள்ள பேசிக்கிறாங்க..

    பங்கஜம் கூறிய விபரங்களை காதில் வாங்கியவாறு அவர் கூறிய எதற்கும் பதில் பேசிவிடாத கவனத்துடன் செல்ல தொடங்கிய பூஜாவின் மனதிற்குள்.. இனி அந்த முகிலன் இருக்கும் திசைப்பக்கமாக திரும்பியும் பார்த்து விடக்கூடாது.. என்கிற உறுதி படர தொடங்கியது..

    "எம்புட்டு சொன்னாலும் கேட்க மாட்டேங்கறியே பங்கஜம்.. கொட்டுற பனியில இப்படி ஈரத் தலையோட வெளியில போனா உடம்புக்கு ஒத்துக்குமா..?

    ஏதாவது ஒண்ணுகிடக்க ஒண்ணு வந்ததுக்கு அப்புறம் வருத்தப்பட்டு பிரயோஜனம் இருக்காது பங்கஜம்.."

    இங்க வாடா பாப்பா.. ஆனாலும் நீ இருக்கியே..?! உங்க அப்பத்தா பேச்ச கேட்காதன்னு சொன்னா கேக்குறியா..

    அம்மாடி பிருந்தா.. அந்த சாம்பிராணி கரண்டிய எடுத்துட்டு வாம்மா.. அப்படியே சூடா காபியையும் போட்டுக்கிட்டு வந்துரு.. உங்கத்தையும் பாப்பாவும் வந்துட்டாங்க..

    அவர்களின் வரவிற்காக எதிர்பார்த்து காத்திருந்தவராக.. பங்கஜமும் பூஜாவும் வந்ததைக் கண்டு.. வேகமாக வாயிற்படியை கடந்து வந்து பேத்தியின் கரம் பற்றி வாஞ்சையுடன் அவள் கையில் தன் தோளில் கிடந்த துண்டினைக் கொடுத்தவாறு மனைவியை கடிந்து கொண்டார் பார்த்திபன்..

    ஆனால் அவரது அந்த கண்டிப்பெல்லாம்.. பங்கஜத்திடம் ஒரு நாளும் எடுபட்டதில்லை என்பதை அனுபவ பூர்வமாக பார்த்திருந்த பூஜா தாத்தாவிற்கு பதிலேதும் சொல்லாமல்.. ஒருவித நமுட்டுச் சிரிப்புடன் இருவரையும் கண்காணித்தவாறே தன் நீண்ட கூந்தலை அவர் கொடுத்த துண்டினால் துடைத்து கொள்ள தொடங்கினாள்..

    நாங்களாவது கொட்டுற பனியில கோயிலுக்கு போய் புண்ணியத்த தேடிட்டு வந்துருக்கோம்.. ஆனா இங்க..? வெட்டியா வாசல்ல வந்து நின்னு கொட்டுற பனிய வழுக்கை தலையில வாங்கிக்கிட்டு.. வியாக்கியானம் வேற.. பேசாம உள்ள போயி உட்காருங்க.. எல்லாம் எங்களுக்கும் தெரியும்..

    ஹி.. ஹி.. அதுக்கில்ல பங்கஜம்.. பச்சப்புள்ள.. பனியைத் தாங்கிக்க தெம்பிருக்காதுல்ல.. அதான்..

    க்கும்..! இதுக்கொண்ணும் குறைச்சல் இல்ல..! இன்னும் பச்சப்புள்ள.. பச்சப்புள்ளன்னு எத்தனை வருசத்துக்கு கொஞ்சிக்கிட்டு இருக்கப் போறீங்க..? அதுகூட படிச்சதுகள்லாம்.. கையில ஒண்ணும்.. வயித்துல ஒண்ணுமா தூக்கிக்கிட்டு திரியுதுக..

    பாட்டியின் பேச்சு போகும் திசை பிடிக்காதவளாக.. ஒரு சின்ன முகச் சிணுக்கத்துடன் பூஜா வீட்டினுள் சென்றுவிட.. செல்லும் பேத்தியை பார்த்துவிட்டு.. கோபத்துடன் மனைவியிடம் திரும்பினார் பார்த்திபன்..

    புள்ளைய வெச்சுக்கிட்டு இந்த மாதிரி பேசாதன்னு எத்தனை தடவைதான் உனக்கு சொல்றது பங்கஜம்..? அதப் பார்த்தியா இல்லையா.. பூஜா முகம் வாடிப் போயிருச்சு.. நீ பேசுறது தப்புன்னு உன் புத்திக்கு உறைக்குதா இல்லையா..?

    பார்த்திபனின் குரலில் கோபமிருக்க.. தன் மேலும் தவறிருப்பதை ஏற்றுக் கொள்பவளாக அமைதியாக வாசற்படியிலேயே அமர்ந்துவிட்ட மாமியாரை பார்த்தவாறு வந்த பிருந்தா.. அவள் கையில் தான் கொண்டு வந்த காபி டம்ளரைக் கொடுத்து விட்டு.. தானும் அவளருகில் அமர்ந்து விட்டாள்..

    இங்க பாருங்கத்தை.. நீங்க இந்தளவுக்கு கவலைப்படுற அளவுக்கு நம்ம பூஜாக்குட்டிக்கு அப்படியென்ன வயசாகிப் போயிருச்சு சொல்லுங்க..? வர்ற ஆவணி வந்தா இருபத்து மூணு ஸ்டார்ட் ஆகப் போகுது.. அம்புட்டுத்தான..?

    உனக்கும் உங்க மாமனாருக்கும் எதுவுமே பெரிய விசயமாத் தெரியாதும்மா.. நானும் உங்களை மாதிரியே எனக்கென்னன்னு இருக்க முடியுமா..?! இந்த மனுசன்தான் ஊரு நடப்பைபத்தி கவலைப்படாம பேசிக்கிட்டு இருக்காரு.. உனக்காவது நாட்டு நடப்பு புரிய வேண்டாமா பிருந்தா..?

    நம்ம ஊரு சின்ன கிராமங்கறதால.. உங்களுக்கு இது பெரிசா தெரியுது அத்த.. இந்த ஊரைக் கடந்தும் உலகம் பரந்து விரிஞ்சு கிடக்கு.. டவுனுப்பக்கமெல்லாம் இருபத்தஞ்சு வயசுக்கு மேலதான் மாப்பிள்ளையே பார்க்க ஆரம்பிக்கறாங்களாம்..!!

    "மத்தவங்க எக்கேடு கெட்டா நமக்கென்ன பிருந்தா..? நீயும் உன் மாமனார மாதிரியே கூறு கெட்டதனமா பேசிக்கிட்டு இருக்காம போயி ஆக

    வேண்டிய வேலைய பாரு.. சும்மா காலங்கார்த்தாலயே கடுப்பேத்திக்கிட்டு.. இந்தா.. உங்களையும் சேர்த்துதான் சொல்றேன்.. ஏற்கெனவே பாதிபனி மண்டைக்குள்ள போயிருச்சு.. மீதியும் போறதுக்குள்ள வீட்டுக்குள்ள வந்து சேருங்க.."

    தான் கொண்ட நிலையிலிருந்து கிஞ்சித்தும் மாறாத உறுதியுடன் எழுந்துவிட்ட பங்கஜம்.. போகிற போக்கில்.. கணவனையும் ஒரு சாடு சாடிவிட்டு விறுவிறுவென வீட்டினுள் சென்றுவிட..

    செல்லும் மாமியாரின் இயல்பு புரிந்த புன்னகையுடன் தானும் எழுந்த மருமகளை வாஞ்சையுடன் பார்த்தார் பார்த்திபன்..

    அவ அப்படித்தான்னு தெரியும்தானம்மா.. போ.. போயி சத்தியநாதன் என்ன பண்றான்னு பாரு..

    சரிங்க மாமா.. நீங்களும் இங்கயே நிக்காம உள்ள வாங்க அப்புறம் அதுக்கும் பேச்சு வாங்க வேண்டியதா இருக்கும்..

    இவகிட்ட நாம்பேச்சு கேட்குறது புதுசா என்ன..? இருந்தாலும் உள்ள வந்துடறதுதான் இப்போதைக்கு நமக்கு சேஃப்.. அதனால.. இதோ வந்துட்டேன்..

    வெளித்தோற்றத்தில் கெத்தாக இருந்தாலும்.. உள்ளூர மனைவியிடம் பயம் கொண்டவராக.. வேட்டியை மடித்துக் கட்டியவாறு.. பாந்தமாக மனைவியை தேடிச் செல்ல தொடங்கிய மாமனாரைக் கண்டு..

    சத்தமின்றி சிரித்தவாறு.. ஒரு புறம் மகளைப் பற்றிய கவலை மனதை அழுத்த.. அவசரமாக அவளை நாடிச் செல்ல தொடங்கினாள் பிருந்தா..

    2

    அந்த லைட்டிங்கை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்கப்பா.. போகஸ் டிம்மா தெரியுது..

    இது சேலை விளம்பரம்மா.. அதனால சேலைதான் ஹைலைட்டா இருக்கனும்.. நகையை ரிமூவ் பண்ணிட்டு வா..

    காஸ்ட்யூமர் யாருப்பா..? இதையெல்லாம் டைரக்டர் நான்தான் சொல்லணுமா..? நீ சொல்ல மாட்டியா.. நீ ஏம்மா என் வாய பார்த்துக்கிட்டே நிக்கிற.. போ.. சீக்கிரம் ரெடியாகிட்டு வா..

    புளோர் கிளீன் பண்ணினதுக்கு அப்புறமா நடக்காதீங்கடான்னு சொன்னா கேக்கறீங்களா..? இப்பப் பாருங்க.. மறுபடியும் கிளீன் பண்ணினாத்தான் ஷீட் பண்ணவே முடியும் போல.. ஏண்டா இப்படி டயத்தை வேஸ்ட் பண்றீங்க..

    கமான் மேன்.. கேரியான்.. எல்லாத்தையும் பர்பெக்டா ரெடி பண்ணுங்க.. லேட்டாகுறது தெரியலையா..?

    விளம்பரப் படம் எடுப்பதற்காக போடப்பட்டிருந்த அந்த செட்டில் இருந்த அனைவருமே அவரவரால் இயன்ற அளவிற்கு பரபரபாகவே வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும்..

    அவர்களது அந்த வேகமும் திருப்தியளிக்காதவனாக இறைந்து கொண்டிருந்தான் வைபவ்..

    கூல்டவுன் பேபி.. இப்ப எதுக்காக இவ்வளவு டென்சன்னா இருக்க..? ஐ வில் மேனேஜ்.. யூ கோ அண்ட் டேக் ரெஸ்ட்..

    வைபவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக்கொண்டு இருந்த அவனது அஸிஸ்டெண்ட்டுகளின் செவிகளில் வைபவை மென்மையாக கண்டித்தவளின் குரல் தேனாக பாய..

    அந்த குரலிற்கு உரிமையானவளான மந்த்ராவை ஒரு முறை தெய்வத்தை பார்க்கும் பரவசத்துடன் திரும்பி பார்த்துவிட்டு.. பின் இனி வைபவை அவள் சமாளித்துக் கொள்வாள் என்கிற நிம்மதியுடன் அமைதியாக அவரவர்களின் வேலைகளை தொடங்கியவர்களை பார்த்து.. தனக்குள் கேலியாக சிரித்துக் கொண்டாள் மந்த்ரா..

    'இவன் ஒரு பைத்தியக்காரன்..! இவன் கிட்ட வேலைபார்க்கிற இதுக இவனைவிட பெரிய மென்டல் கேசுக..! என் நேரம் இதுகளை கட்டிக்கிட்டு அழ வேண்டியதா இருக்க..'

    'என்ன செய்ய..? இன்னிக்கு அட்வர்டைசிங் இண்டஸ்ட்ரில இந்த வைபவ்தான் பெரிய ஆளா இருந்து தொலைக்கிறான்.. என்னோட கேரியரை ஸ்டாண்டட் பண்ணிக்க இவனை நான் கரெக்ட் பண்ணிக்கத்தான் வேணும்..'

    'பார்க்கலாம்..! இத்த மந்த்ராவுக்கு இவனெல்லாம் ஒரு மேட்டரே இல்ல..'

    தனக்குள் எண்ணியவாறு.. மணிக்கணக்காக கவனமாக போட்டுக் கொண்டிருந்த மேக்கப்பின் உபயத்தினால்.. மஸ்காரா தடவிய கண்இமைகள் பட்டாம் பூச்சியாக படபடக்க.. வரவழைத்துக் கொண்ட மென்மையும் அக்கறையுமாக தன் தோளணைத்துக் கொண்டவளின் ஸ்பரிசத்தினால் ஈர்க்கப்பட்டவனாக.. சற்று அமைதியடைந்தான் வைபவ்..

    இல்ல பேபி.. மார்னிங் சிக்ஸ் வரைக்கும்தான் இந்த புளோரை புக் பண்ணியிருக்கோம்.. அதுக்குள்ள ஷீட்டை முடிச்சாகணும்.. இவனுங்க என்னடான்னா இன்னைக்குன்னு பார்த்து சொதப்பி வைக்குறானுக.. என்னால முடியலை..

    இட்ஸ் ஓக்கே.. அதான் நான் வந்துட்டேன்ல்ல..? இனிமேல் எல்லாம் சரியாகிரும்..

    ஆனா நல்லதுதான்.. ஆமா.. உனக்கு இன்னிக்கு ஷீட்டிங் இருக்குன்னு சொன்னியே..?

    அது கேன்சல் ஆகிருச்சு.. சரி.. உனக்கு ஹெல்ப்பா இருக்குமேன்னு நேரா இங்க வந்துட்டேன்..

    தேங்க்யூ பேபி.. லவ் யூ..

    ஐ டூ..

    நிம்மதியாக புன்னகைத்த வைபவிடம் ஒரு போலி சிரிப்பினை உதிர்த்துவிட்டு.. அவனுக்கே தெரியாமல் அவனது இடத்தினைக் கைப்பற்றிவிட்ட தன்னுடைய சாமர்த்தியத்தினை தனக்குள்ளாக மெச்சியவாறு.. அவனுடைய யூனிட் ஆட்களை நைச்சியத்துடன் வேலை வாங்க தொடங்கினாள் மந்த்ரா..

    உண்மையை சொல்லப் போனால்.. வைபவிடம் அவள் கூறியதை போல அன்று அவளுக்கு படப்பிடிப்பு எதுவுமே இல்லை..

    மாடலிங் உலகில் மந்த்ராவிற்கு என்று ஒரு நிலையான இடம் இருந்த காலமொன்றும் இருந்ததுதான்..

    ஆனால்.. சமீப காலமாக அவளது இடமும்.. அவளுடைய மார்க்கெட்டும் சற்று கீழிறங்கி விட்டது..

    அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கெத்துடன் இருந்தவாறே தன்னுடைய இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள போராடிக் கொண்டிருந்தாள் மந்த்ரா..

    இன்றும்கூட.. வைபவ் எடுத்துக் கொண்டிருக்கும் விளம்பர படத்தின் முக்கியத்துவத்தையுணர்ந்தே.. அதற்காகவென்றே பிரத்யேகமாக தன்னை அலங்கரித்து கொண்டு அங்கு வந்திருந்தாள் அவள்..

    ஏனெனில்.. உலக அளவில் பிரசித்தி பெற்றிருக்கும் டிசைனர் ஒருவரின் மிக பிரத்யேக கலெக்சனுக்கான விளம்பரப் படமான இந்த வாய்ப்பை எப்படியாவது தான் கைப்பற்றிவிட்டால்.. அவளது எதிர்காலத்திற்கான மிகப் பெரிய அடித்தளமாக இந்த விளம்பரம் அமைந்துவிடும்..

    வைபவை பொறுத்த வரையில் தொழில் என்று வந்து விட்டால் அவனுக்கு எது சரியென்று படுகிறதோ அதை மட்டுமே அவன் செய்வான் என்பதால்.. நேரடியாக மந்த்ராவினால் அந்த வாய்பினை அவனிடம் கேட்டுப் பெற முடியவில்லை..

    ஸ்ஸ்.. இந்த பொண்ண எங்க இருந்து பிடிச்ச..? மாடலிங்கோட பேசிக்கூட தெரியலை..

    இங்க பாரும்மா.. சேலையோட பல்லுவ இப்படி.. இந்த மாதிரி போகஸ் பண்ணு..

    அடடா.. இந்த போஸ்ல இல்ல.. இப்ப்புடி..

    ம்ஹீம்.. இன்னும் கொஞ்சம் அட்ராக்டிவ்வா போஸ் குடு.. ரிகர்சல் கரெக்டா பார்த்துக்கிட்டா.. ஷீட் அப்ப டென்சன் இல்லாம இருக்கும் அதுக்குதான் சொல்றேன்..

    ஏற்கெனவே நேரமாகிவிட்ட டென்சனில் இருந்த வைபவ்வின் கண்ணில் படும்படியாக... விளம்பர மாடலிற்காக வந்திருந்த பெண்ணை மந்த்ரா படுத்திய பாட்டில்.. மிக விரைவிலேயே சோர்வடைந்து விட்டாள் அவள்..

    மந்த்ராவிற்கு தேவையானதும் அதுதான் என்பதால்.. விடாமல் அந்தப் பெண்ணை தயார் படுத்தும் சாக்கில் அவள் செய்து காட்டிய வித விதமான போஸ்கள்.. அந்தப் பெண்ணிற்கு அழகாக வந்ததோ இல்லையோ.. வைபவின் கருத்தினை ஒருவழியாக கவர்ந்துவிட்டது..

    இட்ஸ் ஓகே மது.. அந்தப் பொண்ணுக்கு செட் ஆகலைன்னா விடு.. இஃப் யூ டோண்ட் மைண்ட்.. நீயே இதுக்கு மாடலிங் பண்ணிடேன்.. இப்ப நீ பிரியாதான இருக்க..?

    நோ நோ வைபவ்.. இன்னெருத்தங்களோட சான்சை நான் தட்டிப்பறிக்கிறது சரியில்ல.. நோ வே..

    ஹேய்.. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லப்பா.. டைரக்டர் சாருக்கு ஓக்கேன்னா.. எனக்கு எந்த பிராப்ளமும் இல்ல.. எனக்கும் அர்ஜெண்ட்டா கிளம்பியாகணும்ப்பா.. பிரான்சுல நாளன்னிக்கு ஷீட் இருக்கு பிளைடுக்கு டைமாச்சு.. ஸோ.. யூ கண்ட்டினியூ.. நோ மோர் இஷ்யூ.. பை சார்..

    வைபவ் தேர்ந்தெடுத்திருந் அந்த மாடல் அழகி.. தற்போதைய நிலைமையில்.. டாப் மோஸ்ட்டில் இருப்பவள் என்பதால்.. விட்டால் போதும் என்று கிளம்பிவிட..

    தான் நினைத்ததை சாதித்துவிட்ட திருப்தியுடன் மேக்கப் ரூமினை நோக்கி செல்லத் தொடங்கிளாள் மந்த்ரா..

    சாதுர்யத்தில் மட்டுமல்லாமல்.. வேலையிலும் அவள் கெட்டிக்காரி என்பதனால்.. கைதேர்ந்த லாகவத்துடன் மிக கவனமும்.. கவர்ச்சியுமாக அவள் கொடுத்த வித

    விதமான போஸ்களில் எதையுமே மறுக்காமல் முழு திருப்தியுடன் வைபவ்வின் படப்பிடிப்பு இனிதே நடந்து முடிந்து விட்டது..

    தேங்க் காட்.. ரியலி.. நீ மட்டும் கரெக்ட் டயத்துக்கு வரலேன்னா.. ஒரு நல்ல ஆட்.. சொதப்பலா போயிட்டிருக்கும் பேபி.. ஐம் ஃபுல்லி சேட்டிஸ்பைடு நௌ..

    படப்பிடிப்பு முடிந்து.. காரில் சென்று கொண்டிருந்த வைபவின் முகத்தில் தெரிந்த நிறைவினைக் கண்ட மந்த்ராவிற்கு.. திருப்தியாக இருந்தது..

    இதுதான் வைபவ்.. செய்யும் தொழிலில் முழுநிறைவு  கிடைக்க வேண்டும் என்கிற கொள்கையுடையவன்..

    அவனது தற்போதைய நிறைவானது.. மேலும் சில வாய்ப்புக்களை கண்டிப்பாக மந்த்ராவிற்கு பெற்றுத் தந்துவிடும் என்பதினால்.. மிக ஆனந்தமாக உணர்ந்தாள் மந்த்ரா..

    உனக்காக இதைக்கூட செய்ய மாட்டேனா வைபவ்..? எனக்கு நீ எவ்வளவு இம்ப்பார்ட்டண்ட்னு உனக்கு தெரியாதா..?

    லவ் யூ பேபி.. லவ் யூ ஸோ மச்.. சரி இந்த மொமெண்ட்டை நாம செலிபரேட் பண்ணியே ஆகணும்.. எங்க போகலாம்னு சொல்லு..

    உன்கூட எங்க வர்ரதுக்கும் நான் ரெடியாக இருக்கேன் வைபவ்.. ஜஸ்ட்.. நீ என்கூட இருந்தால் மட்டும் போதும்..

    கூறிக்கொண்டே நகர்ந்து.. காரோட்டிக் கொண்டிருந்தவனின் கைவளைவில் கை கொடுத்து கட்டியணைத்தவாறு.. அவனது தோளில் சலுகையாக சாய்ந்து கொண்டவளைக் கண்டு.. கர்வமாக புன்னகைத்தான் வைபவ்..

    அவனது நண்பர் வட்டாரத்தில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அழகியாக கருதப்படும் மந்த்ரா.. அவனிடம் மயங்கிக் கிடப்பவளைப்போன்றதொரு தொனியில் கூறியதைக் கேப்பவனுக்கு.. கெத்தாகவே இருந்தது..

    ம்ஹீம்..? எங்க கூப்பிட்டாலுமா..?

    ஷ்யூர்..

    ஆண்மையின் கர்வத்துடன் கேட்டவனின் கண்களை நேருக்குநேராக பார்த்தவளின் முகத்தில் தான் கூறியதை செய்துவிடும் உறுதி இருந்தது..

    அப்ப அதையும் செக் பண்ணி பார்த்துர வேண்டியது தான்..

    Enjoying the preview?
    Page 1 of 1