Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadalil Kalantha Mazhathuli...
Kadalil Kalantha Mazhathuli...
Kadalil Kalantha Mazhathuli...
Ebook217 pages1 hour

Kadalil Kalantha Mazhathuli...

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

உயிரான குடும்பத்துக்காக உறவில் இணையும் நாயகனும் நாயகியும்..

அவர்களது திருமண பந்தம் நீடிக்குமா இல்லையா என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateJun 19, 2020
ISBN6580134205588
Kadalil Kalantha Mazhathuli...

Read more from Viji Prabu

Related authors

Related to Kadalil Kalantha Mazhathuli...

Related ebooks

Reviews for Kadalil Kalantha Mazhathuli...

Rating: 3.25 out of 5 stars
3.5/5

4 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadalil Kalantha Mazhathuli... - Viji Prabu

    http://www.pustaka.co.in

    கடலில் கலந்த மழைத்துளி...

    Kadalil Kalantha Mazhathuli...

    Author:

    விஜி பிரபு

    Viji Prabu

    For more books

    http://www.pustaka.co.in/home/author/viji-prabu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    1

    ஐயா நாராயணா... நீயே கதியய்யா...

    பெருமாளின் சந்நிதியில் கைகூப்பி நின்றிருந்த பட்டம்மாவின் முன்னால் கற்பூரத்தட்டை நீட்டினார் ஐயர். என்னைச் சரணடைந்தோருக்கு நானே எல்லாமாக இருந்து காப்பாற்றுவேன் என்ற புன்னகையுடன் தன் பாதங்களை நோக்கிக் கைகாட்டிச் சிரித்துக் கொண்டிருந்த பெருமாளை மனம் நிறையத் தரிசித்தவாறே கற்பூர ஆரத்தியைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டாள் பட்டம்மா...

    என்னங்கம்மா... ஐயாவுக்கு இப்ப உடம்புக்குப் பரவாயில்லையா...? கவலை கலந்த ஆதூரத்துடன் கேட்ட ஐயரை நிமிர்ந்து பார்த்தாள் பட்டம்மா.

    அவளது முகத்திலும் கண்களிலும் தெரிந்த சோகம் ஐயரின் இதயத்தைப் பிசைந்தது.

    ஊருக்கே பெரிய மனிதரான ஏகாம்பரத்தின் மனைவி பட்டம்மா. ஊரின் நல்லது கெட்டது அனைத்திற்கும் முன் நின்று அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஏகாம்பரத்தின் மனமறிந்த குணவதியாக அவரது அனைத்துச் செயல்களுக்கும் முன்னேற்றத்திற்கும் துணையாக தூண்டுகோலாக இருந்தவள் அவள்.

    கண்ணூரை சொந்தமாகக் கொண்ட பரம்பரைப் பணக்காரர் ஏகாம்பரம். அவரது மனைவியாக அவர் வீட்டிற்குள் பட்டம்மா காலடி எடுத்து வைத்த நல்ல நேரமோ அல்லது பட்டம்மாவின் புத்திசாலித்தனமான தூண்டுதலினாலோ ஏகாம்பரம் அவரது பரம்பரைப் பணக்கார அந்தஸ்தில் இருந்து விடுபட்டு ஒரு தொழில் அதிபராக முன்னேறத் தொடங்கினார்.

    தொழிற்சாலைகளும், தொழில்களும் முன்னேற்றம் அடைந்து கொண்டிருந்த காலத்தில் அவர் தொடங்கிய நூற்பாலை பன்மடங்கு வருமானத்துடன் விரிந்து படர்ந்த ஆலையாக விரைவிலேயே முன்னேற்றம் அடைந்து விட்டதில் ஆச்சரியம் இல்லை.

    கட்டுப்பெட்டியாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் பட்டம்மாவும் கணவருடன் இணைந்து தொழிலை ஆர்வத்துடன் கவனித்துக் கொள்ள ஏகாம்பரம் மேலும் மேலும் செல்வாக்குடன் முன்னேறத் தொடங்கினார்.

    ஆஸ்திக்கு ஒரு ஆண் யோகநாதனும் அழகிற்கு ஒரு பெண்ணாக மோகனாவும் பிறந்தவுடன் ஏகாம்பரம் பட்டம்மாவை குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் பொறுப்புடன் வீட்டில் இருக்கச் செய்துவிட்டு தான் மட்டும் தனியாகத் தொழிலைக் கவனித்துக் கொள்ள ஆரம்பித்தார். ஆனால் இரு கை தட்டியபோது வரும் ஓசையை ஒரு கை ஓசை தந்துவிடாது என்பதற்கிணங்க கணவன் மனைவி இருவரும் இணைந்திருந்து நடத்தியபோது கண்ட முன்னேற்றம் அவர் மட்டும் தனியாக தொழிலை நடத்தத் தொடங்கியவுடன் தடைபட்டு நின்று விட்டது.

    பட்டம்மாவின் துணையால்தான் தன்னுடைய தொழில் பெருகியது என்ற உண்மையை ஒத்துக்கொள்ள மனமில்லாத ஏகாம்பரம் அதுவரை அடைந்த முன்னேற்றமே போதும் என்ற மனநிலையுடன் தொழிலை விரிவுபடுத்தும் எண்ணமற்று இருந்துவிட்டார்.

    பரம்பரையாக இருந்த தோட்டமும், வயலும், தோப்பும் அந்த ஊரிலேயே நான்கில் மூன்று பாகமாக நிறைந்திருக்க... அதில் இருந்து வந்த வருமானமும், தொழிற்சாலையில் இருந்து வந்த வருமானமுமே அளவிற்கு அதிகமாகவே இருக்க பட்டம்மாவும் கணவரின் மனதறிந்த மனைவியாக அமைதியாக இருந்துவிட்டாள்.

    தொழிலில் மட்டுமே தலையிடாமல் ஒதுங்கியிருந்த பட்டம்மா, கண்ணூரிலேயே பரம்பரை வீடு தனியாக இருக்க, ஊரின் மையத்திலேயே தன்னுடைய தூண்டுதலினால் ஒரு பெரிய மாளிகை போன்ற வீட்டினை கணவரைக் கட்டச் செய்து அதிலேயே குடியேறவும் செய்துவிட்டார்.

    பரம்பரை வீட்டினை விட்டுப் புது வீட்டிற்கு குடி போவதை ஆரம்பத்தில் மறுத்த ஏகாம்பரத்தின் தாய் தந்தையார் அந்த வீடு உருவாகி முடித்தவுடன் அதன் அழகில் மயங்கி அங்கேயே குடிபுக ஒப்புக் கொண்டார்கள்.

    பெரிய அரண்மனை போன்ற கம்பீரத்துடன் சுற்றிலும் காம்பவுண்டுச் சுவர் கோட்டைச் சுவர் போல உயர்ந்து நிற்க ராஜமாளிகையாகக் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டு இருக்கும் அவர்களது வீடு. இன்றும் ஊரிலேயே பெரிய வீடு அவர்களது வீடுதான் என்பதால் ஏகாம்பரமும் பட்டம்மாவும் ‘பெரிய வீட்டுக்கார ஜயா...’, ‘பெரிய வீட்டுக்கார அம்மா’வாக ஆகிவிட்டார்கள்.

    அவர்களது ஒரே மகன் யோகநாதனை தன் தொழிலுக்கு வாரிசாக உருவாக்கிய ஏகாம்பரம், ஒரே மகளான மோகனாவை கோயம்பத்தூரிலேயே பெரும் பணக்காரரான சுந்தரத்திற்கு திருமணம் செய்து வைத்து, அவளது மனம் கோணாத வகையில் தங்கமும், வைரமுமாக சீர் செய்து, கோயம்பத்தூரிலேயே ஒரு வீட்டையும் வாங்கி மகளுக்குக் சீதனமாகக் கொடுத்து நல்ல முறையில் அவளையும் வாழ வைத்திருந்தார் ஏகாம்பரம்.

    யோகநாதனுக்கு ஒரே மகனாக பிரசன்னா பிறந்திருக்க, மோகனாவோ மஞ்சரியையும், ஆனந்தனையும் பெற்றெடுத்து இரண்டு பேரப்பிள்ளைகளை பட்டம்மா தம்பதியினருக்கு கொடுத்திருந்தார்.

    மகனது வாரிசான பிரசன்னா சட்டக் கல்லூரியில் படித்து முதல் மாணவனாக தேர்ச்சியடைந்திருந்தாலும், வக்கீலாக தன் பணியினைத் தொடர விருப்பம் இல்லாமல் குடும்பத் தொழிலை கவனிக்க ஆரம்பித்தாலும், தன் தாத்தா, தந்தையைப் போல அந்த கண்ணூரிலேயே பின் தங்கிவிட விருப்பம் இல்லாமல் தன் சுய முயற்சியால் அருகில் உள்ள நகரத்தில் பெரிய வணிக வளாகமும், ஹோட்டலும் தொடங்கி அதைத் திறமையுடன் நடத்தியும் காட்டியிருந்தான். கணவருக்கும் மகனுக்கும் இல்லாத தொழில் திறமையுடன் முன்னேறிக் கொண்டிருந்த பேரனின் மேல் தனியான பாசம் கொண்டிருந்தாள் பட்டம்மா. அவனது வார்த்தைதான் அவளுக்கு வேதம். அவனது வாழ்க்கைதான் பட்டம்மாவின் உயிர்வாழும் நோக்கம். பேரனது விருப்பம்தான் அவளது உயிர்மூச்சு.

    பாட்டியின் பாசத்திற்குக் குறைவில்லாத பாசம் கொண்ட பேரன் தான் பிரசன்னாவும், சிறுவயதில் இருந்தே பாட்டியார் அரவணைப்பிலேயே வளர்ந்தவனான பிரசன்னாவிற்கு பாட்டி, குரு, தோழி என அனைத்துமே பட்டம்மாதான். அவனை பெற்ற அன்னையான காந்திமதியை விட தன் பாட்டியான பட்டம்மாவின் மீதுதான் பிரசன்னாவிற்கு அன்பு அதிகம்.

    அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. காந்திமதி அதே கண்ணூரிலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால் கணவரது பரம்பரைப் பெருமையே அவருக்குப் போதுமானதாக இருந்தது. ஆனால் அவருக்கு மூத்த தலைமுறையான பட்டம்மாளோ தன்னுடைய வாரிசுகள் கண்ணூரிலேயே பின் தங்கி இருப்பதில் விருப்பம் இல்லை. நகரத்திலும் தன் வாரிசு கால் பதித்துத் தொழிலில் முன்னேற வேண்டும் என்ற விருப்பம் கொண்டவள் பட்டம்மா. அந்த வித்தினை பிரசன்னாவின் உள்ளத்தில் விதைத்து அவனை தன் விருப்பத்தினை நிறைவேற்றும் கடமையுள்ளவனாக வளர்த்து ஆளாக்கியிருந்தாள் பட்டம்மா.

    சட்டக் கல்லூரியில் படிப்பை முடித்த பிரசன்னா தொழில் தொடங்கும் ஆசையில் அனைத்து ஏற்பாடு களையும் செய்யத் தொடங்க அவனுக்கு முதல் எதிர்ப்பு அவனது தந்தையான யோகநாதனிடம் இருந்து வந்தது. தங்களது சொத்துக்களை பராமரிக்கவே ஆள் இல்லாமல் இருந்த நிலையில் பிரசன்னா தனியாக தொழில் தொடங்குவதைக் கடுமையாக ஆட்சேபித்தார் அவர். யோகநாதனுக்கு உறுதுணையாக ஏகாம்பரமும் சேர்ந்து கொள்ள எதிர்க்கும் வகை தெரியாமல் திகைத்தான் பிரசன்னா.

    "அப்பா யோகநாதா... உன் பரம்பரைத் தொழிலைக் கவனிக்கத்தான் நீயும் உங்கப்பாவும் இருக்கீங்கள்ள...? அப்புறம் எதுக்காக என் பேரனோட திறமையையும் அதுக்குள்ளயே முடக்கப் பார்க்கறீங்க...? அவனை அவன் போக்கில விட்டுவிடற வழியை பாருங்க. இந்த வயசில சம்பாதிக்காமல் அவன் எந்த வயசில் சம்பாதிக்கிறது...? அவங்கவங்க சோலியைப் பார்த்தால் போதும். என்

    பேரன் அவன் விருப்பப்படி என்ன செய்யணுமோ அதை செய்யட்டும்..." திட்டவட்டமாக அறிவித்துவிட்டாள் பட்டம்மா.

    அன்னையை எதிர்க்கும் துணிவில்லாமல் யோகநாதன் தந்தையைப் பார்க்க, பட்டம்மாவின் முகத்தைத் தயக்கத்துடன் பார்த்தார் ஏகாம்பரம்.

    அதுக்கில்லை பட்டு... நம்ம சொத்தே பார்க்க நாதியில்லாம கிடக்கிறப்ப... புதுத் தொழில் எதுக்குன்னு தான்...

    எனக்கு நல்லா வாயில வந்திரும். காடு கரையைப் பார்த்துக்கிட்டு அவன் இந்த ஊரிலேயே இருந்தால் பிள்ளையின் எதிர்காலம் என்னவாகும்...? இப்ப அவன் என்ன இந்த ஊரை விட்டே போறேன்னா சொல்றான்...? இந்தா இருக்கிற டவுனில் ஒரு கடை ஆரம்பிக்கிறேன்னு சொல்றான். காலையில போயிட்டு சாயந்திரம் வந்திரப் போறான். இத்தனை வருசமும் என் பேரன்தான் ஏரெடுத்து உழுது விவசாயம் பார்த்தானா...? இப்ப மட்டும் நாதியில்லாமல் போக...? இத்தனை வருசமும் எப்படி நடந்திச்சோ அதுபோலவே இனிமேலும் நடக்கும். அவனைத் தடுக்காம அவன் போக்கில் விடுங்க. நீங்களும் உங்க பிள்ளையும் ஒரு பைசாக்கூட பிரசன்னாவுக்குக் கொடுக்க வேண்டியது இல்லை. என் பேரன் எப்படி முன்னேறி வரணும்னு எனக்குத் தெரியும்... கணவரின் வாயை அடைத்த பட்டம்மா. தங்கள் அறைக்குச் சென்று தனது அத்தனை நகைகளையும் கொண்டு வந்து பிரசன்னாவின் கைகளில் வைத்தாள்.

    இதெல்லாம் எனக்குச் சீதனமா எங்க அம்மாவும், எனக்கு உரிமையா என் மாமியாரும் கொடுத்த நகைங்க பிரசன்னா. இதை விப்பியோ இல்லை அடமானம் வெப்பியோ அது உன் இஷ்டம். நீ என்ன வேணும்னாலும் செய்துக்க. இத்தோட மதிப்பு கோடிகளில் வரும். நீ யாரிடமும் முதலீட்டுக்காக கைகட்டி நிக்க வேண்டாம். நான் இருக்கையில் நீ ஏன் தயங்கணும் ராசா...? போ. போய் ஆகவேண்டிய வேலைகளைப் பாரு... பிரசன்னாவின் விழிகளில் கண்ணீர் திரையிட அவன் நன்றியுடன் பாட்டியைப் பார்த்தான்.

    பட்டு... இதெல்லாம்...

    எல்லாம் எனக்குத் தெரியுங்க. இதெல்லாம் விலை மதிப்பில்லாத நகைகள்தான். ஆனால் என் பேரனோட ஆசை அதைவிட விலைமதிப்பில்லாதது. அதுவும் இல்லாம இந்த நகைகளில் ஒரு குந்துமணிகூட நீங்க வாங்கித் தந்ததை நான் என் பேரனிடம் கொடுக்கலை. அதெல்லாம் பத்திரமா என்கிட்டவே இருக்கு. எக்காரணம் கொண்டும் அதை இழக்க நான் விரும்பமாட்டேன். மனைவியின் கண்களிலும் முகத்திலும் அந்த முதிர்ந்த வயதிலும் தெரிந்த அன்பினையும் காதலையும் கண்ட ஏகாம்பரம் அதற்குமேல் பிரசன்னாவிடம் மறுப்பாக ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. பாட்டியின் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு வியாபாரத்தைத் தொடங்கிய பிரசன்னாவும் பட்டம்மாவின் நம்பிக்கையை பொய்யாக்கவில்லை. அவனது வியாபாரம் மேலும் மேலும் விருத்தியாகியதே யொழிய நஷ்டம் ஏற்படவில்லை.

    2

    கோவிலில் இருந்த கனத்த இதயத்தோடு வீடு திரும்பிய பட்டம்மாள் காதுகளில் ஒலித்த பலமான சிரிப்பொலியை கேட்ட பட்டம்மாளின் புருவங்கள் சுளித்தது. அவளது சுளிப்பிற்கு காரணம் சிரிப்பொலியல்ல. சிரித்தவளின் குணம்தான் என்பதனை அவளது இதயம் அறியும்.

    வீட்டிற்குள் நுழைந்த பட்டம்மாளைப் பார்த்த சஞ்சனாவின் சிரிப்பு அவளது உதட்டிலேயே உறைந்துவிட அவள் ஒருவித குரோதத்தோடு பட்டம்மாளைப் பார்த்தாள்.

    வீட்டுப் பொண்ணுகளோட சிரிப்பு ரோட்டுக்குக் கேட்டால் அந்த வீடு உருப்புட்டாப் போலத்தான். சிரிச்ச வங்களைவிட அப்படி சிரிக்கிறாப்போல வளர்த்தவங் களைத்தான் குத்தம் சொல்லணும்... அர்ச்சனைத் தட்டினை மருமகளிடம் நீட்டிய பட்டம்மாவின் பார்வை மருமகள் வைசாலியின் முகத்தைத் துளைத்தது.

    மாமியாரின் பார்வையின் தீட்சண்யத்தைத் தாங்க முடியாத வைசாலியின் பார்வை சங்கடத்துடன் தழைந்தது.

    வாங்கத்தை. கோவிலுக்குப் போயிருந்தீங்களா...? நல்லது... நல்லது... அசட்டுச் சிரிப்புடன் கேட்ட கணபதியை வெட்டும் பார்வை பார்த்தாள் பட்டம்மா.

    இந்த வீட்டில் எப்பவுமே நல்லதுதான் நடக்கும் கணபதி. வெட்டியாக அரட்டை அடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிற குடும்பம் இல்லை இது...

    அதுக்கென்னங்கத்தை. இதை நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியணுமா. நம்ம குடும்பத்துப் பழக்க வழக்கம்தான் எனக்கு நல்லாத் தெரியுமே... விட்டுக் கொடுக்காமல் பதிலளித்த கணபதியை முறைத்துவிட்டு பட்டம்மாள் அகல கணபதி அறியாமல் தலையில் அடித்துக் கொண்டு மாமியாரைப் பின் தொடர்ந்தாள் வைசாலி.

    கணபதி வைசாலியின் உடன் பிறந்த அண்ணன். சஞ்சனா அவரது மூத்த மகள்.

    Enjoying the preview?
    Page 1 of 1