Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Theansindhum Pooncholai...
Theansindhum Pooncholai...
Theansindhum Pooncholai...
Ebook369 pages2 hours

Theansindhum Pooncholai...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தான் அன்பு கொண்ட நாயகியின் மொத்த உலகமாக இருந்து அவளை பாதுகாத்து வளர்க்கும் நாயகன் அவள் மீது தனக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்த தயங்கி நிற்கும் வேலையில்.. நாயகியின் பெற்றோரால் அவளுக்கு நிச்சயிக்கப்படும் திருமணம்.. நாயகனின் அன்பு கரை சேருமா.. அவனது கரை காணாக் காதலை புரிந்து கொண்டு அவனின் காதலானவள் நாயகனிடம் வந்து சேருவாளா இல்லையா என்பதை கதையில் தெரிந்து கொள்ளலாம்...

Languageதமிழ்
Release dateOct 1, 2022
ISBN6580134209082
Theansindhum Pooncholai...

Read more from Viji Prabu

Related to Theansindhum Pooncholai...

Related ebooks

Reviews for Theansindhum Pooncholai...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Theansindhum Pooncholai... - Viji Prabu

    https://www.pustaka.co.in

    தேன்சிந்தும் பூஞ்சோலை...

    Theansindhum Pooncholai...

    Author:

    விஜி பிரபு

    Viji Prabu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/viji-prabu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    1

    "வலம்புரிச் சங்கிருக்க...

    சுதர்ஸன சக்ரமிருக்க...

    எனக்கொரு பயமில்லையே..."

    சிடி பிளேயரில் இருந்து ஒலித்த பாடலை கேட்டு... அதனுடன் தானும் சேர்ந்து பாடியவாறு... பெருமாளின் போட்டோவிற்கு... பக்தி சிரத்தையுடன் ஊதுபத்தி காட்டிக் கொண்டிருந்தான் தனநந்தன்.

    அவனது அலுவலக அறையில்... அவனமரும் நாற்காலிக்கு நேர் எதிரில் சுவரில் பாதியளவை அடைத்து... பெரிய அளவிளான பெருமாளின் படம். மாட்டப்பட்டிருக்கும்.

    அறைக்குள் வருபவர்களுக்கு... தனநந்தன்தான் கண்ணுக்கு தெரிவான். ஆனால் தன நந்தனோ... எந்த ஒரு புராஜக்டை எடுத்து பண்ணுவதாக இருந்தாலும்... முதலில் தன் மனதிற்குள்ளிருக்கும் பெருமாளின்... போட்டோவில் இருக்கும் முகத்தை பார்த்துவிட்டுத்தான் செய்ய தொடங்குவான்.

    புராஜக்ட் என்றால்... கட்டிட காண்ட்ராக்ட் முதல்... கைகால் உடைப்பது வரை... அவனைப் பொறுத்த வரையிலும்... அனைத்துமே புராஜக்டுகள் தான்.

    அன்றும்கூட அவன் அவ்வாறு பக்தி சிரத்தையுடன் சாமிக்கு பத்தி காட்டிக் கொண்டிருப்பதை... ஒருவித நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் தனநந்தனின் அடிபொடிகள்...

    அடிபொடிகள் என்றால்... சும்மா இல்லை... தனநந்தன் கட்டி வரச் சொன்னால்... முதலில் வெட்டி விட்டு பின் தங்களது பாசமிகு அண்ணனின் உத்தரவுப்படி அவர்களைக் கட்டிக் கொண்டுவந்து... தனநந்தனின் காலடியில் போட்டுவிடும். விசுவாசக் கூட்டம் அது.

    இப்பமட்டும் எவனாது நம்ம அண்ணனைப் பார்த்தாங்கன்னா... அப்படியே பக்திப் பழம் இவருன்னு... அண்ணனோட கால்ல விழுந்து கும்பிட்டுருவானுக...

    இல்லாட்டின்னா மட்டும்...? கால்ல விழுகாம... என்னா பண்ணுவானுகளாம்...? நம்ம அண்ணன் கெத்துடா...! எவனா இருந்தாலும்... அண்ணனோட காலுக்கு கீழதான்... தெரியுமில்ல...?

    நீ நிறுத்துடா... இதுகூடத் தெரியாமத்தான் அண்ணனோட இத்தன வருசமாக் கூட இருக்கமாக்கும்...? என்னமோ புதுசாச் சொல்ல வந்துட்டான்... எங்கண்ணனைப் பத்தி எனக்குத் தெரியாதா...?

    உனக்கு அண்ணன்னா... அவரு எனக்கு யாராம்...? எங்களுக்கும் அவருதாண்டா அண்ணன். கொஞ்சம் அடக்கி வாசி மச்சான்...

    இல்லாட்டி என்னா பண்ணுவியாம்...? போடா...

    உனக்கு லந்து கொஞ்சம் கூடிப்போச்சுடி... வாயக் குறைச்சுக்க... அம்புட்டுதான் சொல்லுவேன்...

    அங்க என்னடா சத்தம்...? பேசாம இருக்க முடிஞ்சா இருங்க... இல்லாட்டிக் கிளம்பி போயிட்டே இருக்கணும்...

    சின்னப் பேச்சாக தொடங்கி... அங்கு பெரிய கைகலப்புக்கு ஆயத்தமாகிக் கொண்டு இருந்தவர்கள்...

    தனநந்தனின் அதட்டல் குரல் கேட்டவுன்... அடக்க ஒடுக்கத்துடன்... அமைதியாக நின்றுவிட்டார்கள்.

    இல்லண்ணே... சும்மாதான் பேசிக்கிட்டு இருந்தோம்...

    ஆமாண்ணே...

    சிலநொடிகளுக்கு முன்பாக... சிறுத்தையாக சீறிக் கொண்டிருந்தவர்கள்... இன்ஸ்டன்ட் உடன்பிறப்புகளாக... ஒற்றுமையுடன் ஒரே குரலில் கூறுவதை... அழுத்தமாக பார்த்தவாறு... அமர்த்தலாக தன் இருக்கையில் சென்றமர்ந்தான் தனநந்தன்.

    மேலூர் சைட்டுக்கு ஆள் அனுப்பியாச்சா...?

    அனுப்பியாச்சு அண்ணே... நம்மாளுக ரெண்டு பேரை அங்கேயே டென்ட் போட்டு தங்க சொல்லிஇருக்கேன்... ஏதாவது ஒண்ணுன்னா அவனுக தகவல் சொல்லிருவானுக...

    தகவல் சொல்ல என்ன இருக்கு...! அங்கயெல்லாம் ஒரு பிரச்சினையும் வராது... மேஸ்திரிய மேற்பார்வை பார்க்க சொல்லிட்டு... அவனுகளை கிளம்பி வரச் சொல்லு... வேலை நடக்குற இடத்துல இவனுக நின்னுக்கிட்டு இருந்தா... எவன் வீட்ட விலைக்கு வாங்க வருவான்...?

    அதுவும் சரிதாண்ணே... எனக்கு இந்த யோசனை வரல...

    அது வந்துட்டா... அப்புறம் நீ தனாவா ஆகிற மாட்ட...!? அப்புறம் உன்னை மாதிரி இன்னொருத்தன நான் எங்க போய் தேடுறது...!?

    அண்ணே...!! நீங்க வேற...!!

    தனநந்தன் கூறியதைக் கேட்டு சங்கடத்துடன் நெளிந்தவனைப் பார்த்து... சத்தமாக சிரித்தான் தனநந்தன்.

    "டேய்... ரொம்ப நெளியாதடா... இப்படியே பண்ணிட்டிருந்தேன்னா... சின்னத்தம்பின்ற உன் பேர... சின்ன தங்கைன்னு மாத்தி வெச்சுர போறானுகடா...

    உசாரா இரு..."

    அண்ணே... விட்டா நீங்களே மாத்தி வெச்சிருவீங்க போல...

    சேச்சே... நான் அப்படியெல்லாம் பண்ணமாட்டேன்டா... என் தம்பிய நானே விட்டுக் கொடுப்பேனா...? வேற யாராச்சும் அப்படி பண்ணிறப் போறாங்கன்னுதான் சொன்னேன்...

    நீங்க உங்க வாயாலா என்னைய உங்க தம்பின்னு சொன்னதுக்கு அப்புறமும்... என்னைய சீண்டுறதுக்கு எந்த பயலுக்காச்சும் தைரியம் வந்துருமாண்ணே...? ஏலேய்... ஏய்... எல்லோர் காதுலயும் விழுந்துச்சாடா... விழுகாதவனுங்க நல்லாக் கேட்டுக்கங்க... அண்ணன் என்னைய அவரோட தம்பின்னு சொன்னாரு...

    கூறியவனின் குரலில் தெரிந்த பெருமையை... அங்கிருந்த மற்றவர்கள் பொறாமையாக பார்க்க...

    அவர்களின் மனமறிந்தவனாக... ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த சின்னதம்பியை... ஒற்றைப் பார்வையில் அடக்கினான் தனநந்தன்.

    ஏண்டா டேய்... நீ எனக்கு தம்பின்ற மாதிரி... இங்க இருக்க எல்லாருமே எந்தம்பிகதாண்டா...!! விட்டா நமக்குள்ளயே பாகப்பிரிவினையை நடத்தி முடிச்சுருவ போல இருக்கே...!! போடா... போய் உருப்படியா எதையாவது செய்யி... போ...!! நீங்க ஏண்டா திருவிழாவுல காணமப் போனவனுக மாதிரி பேந்தப் பேந்த முழிக்கறீங்க...? நீங்களும் கிளம்புங்க...

    இல்லண்ணே... யாராருக்கு என்ன வேலைன்னு...?

    அத எதுக்குடா எங்கிட்ட கேக்குறீங்க...? வெளிய மாரியப்பன் இருப்பான்... எப்பவும் போல... அவங்கிட்ட போய் கேட்டுக்கங்க...

    சரிங்கண்ணே...

    முரட்டு உருவமும்... முறுக்கு மீசையுமாக... பார்ப்பவர் எவராக இருந்தாலும் பயத்தில் பத்தடி தள்ளி நிற்கும் அளவிற்கு திடகாத்திர தோற்றம் கொண்டவர்கள்...

    தனநந்தனின் உத்தரவிற்கு... குருவிற்கு அடிபணியும் சீடர்களாக... பணிவுடன் கீழ்ப்படிந்து... தனநந்தனின் அலுவலக அறைக்கு முன்பாக ஒரு மர நாற்காலியில் அமர்ந்து... முன்புறம் போடப்பட்டிருந்த டேபிளில் இருந்த கணக்கு நோட்டில் தீவிரமாக எதையே எழுதிக் கொண்டிருந்த மாரியப்பனிடம் செல்ல தொடங்கினார்கள்.

    நீங்க ரெண்டு பேரும் கொடவுன்ல இருக்க சிமிண்ட் மூடைகள நம்ம வேலை நடக்குற சைட்டுக எல்லாத்துக்கும் டிஸ்ட்ரிபியூட் பண்ணிருங்க... சரியா...? ஒரே லாரில போய் வேலைய இழுத்துக்கிட்டு இருக்காம... ரெண்டு லாரியா எடுத்துட்டு போங்கடா...

    சரிண்ணே...

    கோரிப்பாளையம் மைக்கேல்கிட்ட இருந்து ரெண்டு மாசமா வர வேண்டிய தொகை நிலுவையிலயே இருந்துட்டு இருக்கு. நீ போய் என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு வா... பய சொல்ற ரீசன் கரெக்டான்னு பாரு... இல்லேன்னா... எப்படி டீல் பண்ணணுமோ அப்படி டீல் பண்ணி... காச கைப்பத்திக்கிட்டு வரப்பாரு...

    நேத்துக்கூட அந்த மைக்கேல... பார்ல பார்த்தேண்ணே... பய ரொம்ப தெளிவாத்தான் இருந்தான்... பிரச்சினை எதுவும் இருக்க மாதிரி தெரியல...

    அப்படியா சொல்ற...? நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்... இவனுக ரெண்டு பேரக் கூடக் கூட்டிக்கிட்டு போய்... கணக்க நேர் பண்ணிட்டு வந்து சேரு...

    சரிண்ணே... டேய் வாங்கடா...

    ரோடு காண்ட்ராக்டுக்குக்கு ஜல்லி வந்து சேரலைன்னு சொல்லிட்டு இருந்தாங்க... நீ போய்... குவாரியில என்னதான் பிரச்சினைன்னு பார்த்துட்டு வா...

    சரிண்ணே...

    ஒயின் ஷாப் ஏலம் நடக்குற இடம் உனக்கு தெரியும்தான...? டயத்துக்கு கரெக்டா போய் எப்பவும் போல நம்மளுக்கே ஏலத்தை முடிச்சுட்டு தகவல் சொல்லு... அங்க ஏதாச்சும் பிரச்சினைன்னா போன் பண்ணு... இன்னும் நாலு பசங்கள சேர்த்து அனுப்பறேன்.

    அதுக்கெல்லாம் அவசியம் இருக்காதுண்ணே... தேவைப்பட்டா பார்த்துக்கலாம்...

    நீங்க ரெண்டு பேரும் எங்கவும் போகாம இங்கயே இருங்கடா... தனா வெளிய கிளம்பினா கூடப் போகணும்... சின்னத்தம்பி... உன்னையும் சேர்த்துதான் சொல்றேன்...

    சரிண்ணே... எங்கயும் போகல...

    ம்ம்... இங்கனயே இரு... தனா மில்லுக்கு போகணும்னு சொன்னான்... என்ன ஏதுன்னு கேட்டுட்டு வர்றேன்...

    கூறிக்கொண்டே எழுந்த மாரியப்பன்... செல்போன் ஒலிப்பதைக் கண்டு... மீண்டும் சேரில் அமர்ந்து போனை கையில் எடுத்தவன்...

    படியேறி வந்துகொண்டு இருந்த சந்தானலட்சுமியைக் கண்டவுடன்... செல்போனில் அழைத்தது யாரென்று கூட பாராமல்... உடனடியாக போன் தொடர்பை துண்டித்துவிட்டு... மரியாதையுடன் எழுந்து நின்றான்.

    வாங்கம்மா...

    பணிவுடன் சந்தானலட்சுமியை வரவேற்றவனின் பார்வை எச்சரித்ததைப் புரிந்துகொண்டு... அங்கிருந்த மற்ற அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேறி சென்றுவிட...

    செல்பவர்களை கவலையாகப் பார்த்த சந்தானலட்சுமியிடம் இருந்து ஒரு நெடிய பெருமூச்சு வெளிவந்தது.

    எப்பதாண்டா நீங்க இதயெல்லாம் விடப் போறீங்க...?

    எதம்மா...? நாங்க என்ன தப்புத்தண்டாவா பண்ணிட்டிருக்கோம்...? நீங்க இம்புட்டுக் கவலைப்படுற அளவுக்கு இங்க ஒண்ணுமே நடக்கலையேம்மா...?

    ஒண்ணும் நடந்துறக்கூடாதுன்னுதான் நான் பயப்படுறேன் மாரி...? பெத்த மனசு தவிக்கிற தவிப்பு... உங்களுக்கெங்க புரியப்போகுது...?

    ம்மா... நான் என்னிக்கும் சொல்றதத்தான்... இன்னிக்கும் சொல்றேன்... நாங்க போற பாதை வேணும்னா கரடுமுரடா இருக்குமே தவிர... பாதை எப்பவும் தப்பானதா இருக்காதும்மா...

    என்னமோய்யா...!! எனக்கு எம்பிள்ள நல்லா இருக்கணும்... அம்புட்டுதான்... நிழல் மாதிரி எப்பவுமே எம்பிள்ள கூடவே இருந்து அவன பார்த்துக்க...

    நீங்க சொல்லணுமாம்மா...? தனா என்னோட உசிரும்மா... நான் பார்த்துக்கறேன்... நீங்க நிம்மதியா இருங்கம்மா...

    நிம்மதியா...!! அது எப்படி இருக்கும்னு கூட எனக்கு மறந்து போயி வருசக்கணக்காகி போயிருச்சு மாரி...! எம்புள்ள நானும் இல்லாட்டி ஒத்தையா நின்னுருமேன்னு... இந்தக் கட்டையில சீவன இறுக்கி பிடிச்சுக்கிட்டு திரியறேன்...

    ம்மா... அப்படியெல்லாம் பேசாதீங்கம்மா...

    இப்படி பேசி பேசித்தான் மனச ஆத்திக்க வேண்டியதா இருக்கு...? வேற என்னதான் செய்யுறது சொல்லு...? சரி... விடு... தனா இருக்கானா...?

    உள்ளதாம்மா இருக்கான்... நீங்க போங்க...

    மனதின் கவலைகளை மறைக்காமல்... தாய்மைக்கேயுரிய தவிப்புடன் பேசியவளின் துயரத்தினை புரிந்து கொண்டவனாக... கனத்த மனதுடன் சந்தானலட்சுமிக்காக தனநந்தனின் அலுவலக அறைக் கதவினை திறந்துவிட்டான் மாரியப்பன்.

    சந்தானலட்சுமி... தனநந்தனின் தாய்... கோடிகளில் சம்பாதித்த பணத்தினை அவளது பாதத்தில் அவன் சமர்ப்பித்தாலும்... அவையனைத்தையும் ஒதுக்கிவிட்டு... மகனது அன்பை மட்டுமே அவனிடம் இருந்து எதிர்பார்க்கும்... அருமையான தாய் அவள்.

    அதன் காரணமாகவே... அவளிடம் மாரியப்பனுக்கு தனியானதொரு மரியாதை உண்டு... அதே நேரத்தில் அவள் மகனிடம் எதிர்பார்க்கும் அன்பு அவருக்கு முழுமையாக கிடைக்கவில்லையே என்கிற இரக்கமும்... அவள்மீது அவனுக்குண்டு.

    தனந்தனுக்கு... தன் தாயாரிடம் மட்டற்ற பாசம் உண்டுதான்... ஆனால் அவன் அதனை வெளிக்காட்டி விட்டால்... அதுவே அவனுக்கான சிறையாக மாறிவிடக் கூடும் என்கிற பயத்தினால்... தன்னளவில் தனித்து நிற்பதை வழக்கமாக்கி கொண்டிருந்தான் அவன்.

    யய்யா...!! ராசா...!! எப்படிய்யா இருக்க...!!?

    லேப்டாப்பில் எதையோ பதிவேற்றிக் கொண்டிருந்த தனநந்தன்... இருந்திருந்தாற்போல... திடீரெனக் கேட்ட தாயாரின் தவிப்புக் குரலில்... தன்னை மீறிய பாசத்துடன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தவன்...

    வாயிலருகே நின்றிருந்த சந்தானலட்சுமியைக் கண்டவுடன்... ஒரு நொடி இமைக்கவும் மறந்து... அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

    தனநந்தனைப் போலல்லாது... நல்ல சிவந்த நிறத்துடன்... வெண்மை பாதியும் கருமை மீதியுமாக... பாதி நரைத்து அடர்த்தியாக இருந்த தலைமுடியை... தூக்கி வாரிக் கொண்டையிட்டு... ஒல்லியான உடற்கட்டுடன் இருந்தவளை பார்த்த தனநந்தனின் கண்களுக்குள்...

    அழகியாக... இடைதாண்டி நீண்ட பின்னலுடன்... தலைநிறைய பூவும்... வாய்கொள்ள சிரிப்புமாக... மகனை அன்புடன் வாரியணைத்துக் கொண்டு... கணவனை ஓரக் கண்ணால் பார்த்து நாணும்... பழைய சந்தானலட்சுமி... ஒரு கணம் வந்து செல்ல...

    இன்றைய நினைவில்... அன்றைய நிஜங்கள் நிழலாட... ஒருமுறை விழிமூடித் திறந்தவனின் முகம் பாறையாக இறுகிவிட்டது.

    தனா... தனா...?

    பார்த்த பார்வை... அப்படியே நிலைத்திருக்க... இரும்பாக இறுகி நின்றுவிட்ட மகனை மனம் கனக்க பார்த்தவாறு... மீண்டும் மீண்டும் அன்னை அழைத்த குரல்... தனநந்தனை தன்னுணர்வுக்கு மீண்டு வரச் செய்தது...

    வாம்மா... உட்காரு... ஏதாவது சொல்லணும்னா... ஒரு போன் பண்ணி இருக்கலாமில்ல...? எதுக்கு இம்புட்டு தூரம் அலையுற...?

    "போன்ல உன் குரலை கேட்கலாம்...!! உன்னை பார்க்கலாம்...!! ஆனா எனக்கு என் மகனை தொட்டுப் பார்க்கணும்... அவன் பக்கத்துல உக்காந்து பாசத்தோட

    நாலு வார்த்தை பேசணும்... அதெல்லாம் இங்க நேரில் வந்தாத்தான நடக்கும் கண்ணு...? நானென்ன ஏழுகடல் ஏழுமலை தாண்டிக் குதிச்சா இதுக்குன்னு கஷ்டப்படப் போறேன்...? இந்தா இருக்க அண்ணா நகரு வீட்டு வாசல்ல கார் ஏறினா... பத்து நிமிசத்துல உன் ஆபீசுக்கு வந்து நிக்கறது ஒரு அலைச்சலா என்ன...?"

    சரிம்மா... சும்மா தொண தொணன்னு பேசாம வந்த விசயத்த சொல்லிட்டுக் கிளம்பு... எனக்கு தலைக்கு மேல வேலகிடக்கு.

    கெடந்தா கெடக்கட்டும்... நீ ரெண்டு நாளைக்கு ஒரு தடவையாச்சும் வீட்டுப் பக்கம் வந்து தலைய காட்டிட்டு வந்தா... நான் எதுக்கு இப்படி ஆபீசு நேரத்துல வந்து உன் வேலைய கெடுக்க போறேன்...? இப்படி நிக்க நேரமில்லாம ஓடி உழைச்சு என்னதான் பண்ணப் போற தனா...? ஒரு கல்யாணம்... காட்சின்னு... எதுவுமில்லாத தனிமரமா இன்னும் எம்புட்டு நாளைக்குதான் சன்யாசி மாதிரி திரியப் போற...?

    இது...! இந்த நச்சரிப்பு தாங்க முடியாமத்தான்... நான் வீட்டுப் பக்கமே வராம இருக்கேன்... இங்கயும் வந்து புலம்பி... என் மூடை ஸ்பாயில் பண்ணாம கிளம்பும்மா... ப்ளீஸ்...

    டேய்... உன் மனசுல என்னதான் இருக்குன்னு என்கிட்ட சொல்லேண்டா...! எந்தப் பொண்ணப் பார்த்தாலும்... சொல்லி வெச்ச மாதிரி... ஏதோ ஒரு காரணத்தால அந்த இடம் தட்டிப் போயிருது... எல்லாத்துக்கும் காரணம் நீ பார்க்கிற இந்த வேலதான்னு சொன்னா... நீயும் அத புரிஞ்சுக்க மாட்டேங்குற... இப்புடியே போனா என்னதான் ஆகுறது...?

    ஏன்...? என் வேலைக்கும்... நான் பார்க்குற தொழிலுக்கும் என்ன குறைச்சல் வந்துருச்சு...? நீ வேண்டாம் வேண்டாம்னு சொல்றியே... இந்த தொழிலுகதான் இன்னிக்கு நம்மள தல நிமிர்ந்து கௌரவமா... கெத்தா வாழ வெச்சிட்டிருக்கும்மா... பழசெல்லாம் உனக்கு வேணும்னா மறந்து போயிருக்கலாம்... ஆனா எனக்கு... எதுவுமே மறக்கலம்மா... மறக்கவும் மாட்டேன்...

    கூறியவனின் கண்களில் மின்னிய வெறியைக் கண்ட சந்தானலட்சுமி... கண்கள் கலங்க... கெஞ்சுதலாக மகனது கரத்தினைப் பற்றிக் கொண்டாள்

    வேண்டாம் தனா... இம்புட்டு கோவத்த உள்ளுக்குள்ளயே வெச்சு புழுங்காத ராசா... பழச விட்டுரு...

    எப்புடிம்மா விட முடியும்...? தலைமுறை தலைமுறையா நாம ஆண்டுக்கிட்டு இருந்த பூமியை... பொய்க் கணக்கு சொல்லி... எழுதி வாங்கிக்கிட்டு நம்மளை ஒரே நாளில நடுத்தெருவுல நிறுத்துனானுகளே... அத மறக்க சொல்றியா...?

    தனா...?

    ராஜா மாதிரி இருந்த நம்ம அப்பா... அவமானத்துல கூனிக் குறுகி... தன்னையே உருக்குலைச்சுக்கிட்டாரே... அத மறக்க சொல்றியா...?

    அதுக்கெல்லாத்துக்கும் அந்த ஆண்டவன் அவனுங்களுக்கு தண்டனை கொடுத்துட்டாரேப்பா...? அப்புறமென்ன...? இப்ப நம்மள துடிக்க வெச்ச அத்தன பேருமே அட்ரசே இல்லாம போயிட்டானுக...

    அட்ரசே இல்லாம... நான் ஆக்கி இருக்கேம்மா... அந்த ஆண்டவன் என்கூட இருந்து... அத நிறைவேத்தி கொடுத்திருக்காரு... அதுக்காக... அப்படியே இருக்கது போதும்னு... தேங்கி நிக்க சொல்றியா...? அது என்னால முடியாதும்மா... இந்த தனா... ஒரு காட்டாத்து வெள்ளம்... அவன் போக்குல போயிட்டேதான் இருப்பான்... புரியுதா...? நீ பேச வந்தத பேசி முடிச்சுட்டேன்னா... கிளம்பு...

    அதற்கு மேலும் பேச ஒன்றுமே இல்லை என்பதைப் போல... அன்னையை அங்கிருந்து கிளம்ப சொன்னான் தன நந்தன்.

    கொஞ்சம் பொறு... இன்னொரு விசயத்தையும் சொல்லிட்டு கிளம்பிடறேன்... உங்க அக்கா வந்திருந்தா...

    அக்கா மட்டும்தான் வந்ததா...!!? கூட...

    அனன்யா வரலை... உங்கக்கா மட்டும்தான் வந்திருந்தா...

    அனன்யாவின் பெயரை கூறியவுடன்... அனைத்தையும் மறந்தவனாக... பாசம் மட்டுமே உருவானவனாக... மென்மையில் முகம் மலர கேட்டுக் கொண்டிருந்த மகனை... நிறைவுடன் பார்த்து புன்னகைத்தாள் அவனது அன்னை.

    2

    அனன்யா...!!

    எவருக்கும் இளகாத தனநந்தனின் இரும்பு இதயத்தை ஒரு நொடியில் இளக்கிவிடும் பெயருக்கு சொந்தக்காரியான அவள்... தனநந்தனின் உடன்பிறந்த அக்காவான மனோன்மணியின் மகள்.

    அக்காவின் மகளை தனநந்தன் ஆசையுடன் தன் கைகளில் வாங்கிக் கொண்டபோது... அவனுக்கு பத்து வயதிருக்கும்...

    மனோகரிக்கு அடுத்து... நீண்ட இடைவெளிக்கு பிறகு பிறந்திருந்த தங்களது ஆருயிர் மகனான தனநந்தனிடம்... சந்தானலட்சுமி தம்பதியினர் அளவற்ற பாசம் வைத்திருப்பார்கள்.

    பல வருடங்களாக... தந்தை மகாலிங்கத்தின் சொத்துக்கள் அனைத்திற்கும் தான் ஒருத்தி மட்டுமே ஏகோபித்த வாரிசு என்கிற இறுமாப்புடன் இருந்திருந்த மனோகரிக்கு... அவளுக்கு போட்டியாக வந்து பிறந்திருந்த தம்பியின் மீது எல்லையில்லா வெறுப்பு

    இருந்தாலும்... அதனை இம்மியும் அவள் வெளிகாட்டிக் கொண்டதில்லை.

    அனன்யா பிறந்த நேரத்தில்... அவர்களது குடும்பம் மிகவும் செல்வச் செழிப்போடு... கங்கு கரை காணாத சொத்துக்களைக் கொண்டிருந்தது.

    இந்தாடா ராஜா... நம்ம வீட்டு இளவரசிக்கு உன் கையால இந்த செயினைப் போட்டுவிடு...

    தந்தை மகாலிங்கம் எடுத்து நீட்டிய பத்து பவுன் எடை கொண்ட புத்தம் புதுச் செயினை... ஒருவித முகச் சுளிப்புடன் பார்த்தாள் மனோகரி...

    அவளது கணவனான இந்திரனோ... இதெல்லாம் தனக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதைப் போல... மிக இறுமாப்புடன்... எதையும் கண்டும் காணாத பாவனையுடன் நின்று கொண்டிருந்தான்.

    மனோகரிக்கென்று அவளது பிறந்த வீட்டில் இருந்து போட்டு விட்டிருந்த கணக்கு வழக்கில்லாத நகைகளுடன் ஒப்பிடும் போது... பத்து சவரன் என்பது இந்திரனுக்கு சாதாரணமாகத்தான் தெரிந்திருக்கும்.

    திருமணமான இரண்டு வருடங்களில்... மனைவியின் அத்தனை நகைகளையும் தன் ஆடம்பரத்தினால் தொலைத்திருந்தவனுக்கு... பத்து பவுன் என்பதெல்லாம் அவனது ஒருவாரச் செலவுக்கு கூட பத்தாதுதான்.

    இத்தனைக்கும் இந்திரனுமே நல்ல வசதியான... சொத்து பத்துக்கள் நிறைந்திருந்த செல்வாக்கான குடும்பத்தை சேர்ந்தவன்தான்.

    தாய் தந்தை... உடன்பிறந்த அண்ணன்கள் இருவர்... என கூட்டுக் குடும்பமாக இருந்தவர்கள்... இந்திரனின் ஆடம்பர போக்கினால் சொத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைவதைக் கண்டு... அவரவர்களது பங்கினை பிரித்துக் கொண்டு போனது போக... இந்திரனுக்குமே ஒரு கணிசமான பங்கு சொத்து அவரது கைக்கு கிடைத்ததுதான்.

    ஆனால்... ஆடின காலும்... பாடின வாயும்... என்றுமே நிற்காது என்பது போல எப்போதுமே அவருக்கேற்றாற்போல ஜால்ரா போடும் பத்து பேருடன்... உல்லாசமாகவே வாழ்ந்து பழகியவருக்கு. அந்த வாழ்க்கை முறையே அவரது ரத்தத்தில் ஊறிப் போயிருந்தது.

    இந்திரன் பேருக்கு ஏற்றாற்போலவே... மிகவும் அழகிய... கம்பீரத் தோற்றம் கொண்டவர். அவரது அந்த அழகிற்காகவே மகாலிங்கம் தன் ஆருயிர் மகளை அவருக்கு மணமுடித்து கொடுத்திருந்தார்...

    இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால்... அழகனான இந்திரனை பார்த்திருந்த மனோகரி அவரை மனதார விரும்பியதும்கூட அவர்களது திருமணம்

    நடக்க ஒரு காரணமாக இருந்தாலும்... அதனை வெளிக்காட்டினால் மகளுக்குதான் களங்கம் என்று எண்ணிய மகாலிங்கம் அதனை ஒரு நாளும் வெளியில் சொன்னதில்லை.

    மனோகரியை பொறுத்தவரையில்... அவளது காதல் கணவன் என்ன சொன்னாலும் அது அவளுக்கு வேதவாக்கு... இந்திரன் எதைச் சொன்னாலும் அதனை அப்படியே நம்பிவிடுவாள் அவள்.

    மனைவியின் அந்த மயக்கம்... இந்திரனுக்கு மிகவும் வசதியாக போய்விட்டதால்... தடுப்பார் எவரும் இன்றி... தன்மனம் விரும்பியபடி... வாழ்ந்து கொண்டிருந்தார் அவர்.

    மகளது முகம் சிறிது வாடினாலும்... அள்ளிக் கொடுக்க அருகிலேயே மாமனார் வீடு இருக்கும்போது... இந்திரனுடைய சுகபோகத்திற்கு எந்தக் குறையும் இல்லாமல் அவரது வாழ்க்கை மிகச் செழுமையாகவே சென்று கொண்டிருந்தது.

    அன்று முதல்... இன்று வரையிலும்... மனோகரியும் மாறவில்லை... இந்திரனிடமும் எந்த மாற்றமும் வந்திருக்கவில்லை.

    அன்று... வாய்கொள்ளாச் சிரிப்புடன் மகனது கரத்தில் செயினைக் கொடுத்த தந்தையை மனத்தாங்கலுடன் பார்த்தாள் மனோகரி.

    என்னப்பா இது...? என் மகளை தங்கத் தொட்டில்ல போட்டு... வைரத்தாலேயே இழைப்பீங்கன்னு இவருகிட்ட நான் பெருமையா பேசிக்கிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா புல்லு போல ஒத்தை செயினை கொண்டுவந்து போடறீங்களே...? தலை நாளையில பொறந்த பேத்திக்கு... இதுதான் பாட்டன் வீட்டு சீதனமாப்பா...?

    பிள்ளை பெற்று முழுதாக இரண்டு மணி நேரம்கூட ஆகியிருக்காத நிலையில்... பேறுகாலக் களைப்பையும் பொருட்படுத்தாது... தந்தையுடன் சீர்வரிசைக்கு மல்லுக்கு நிற்க தொடங்கிய மகளைப் பார்த்து... பெருமையாக மீசையை முறுக்கியவாறு... வாய்விட்டு சிரித்தார் மகாலிங்கம்.

    அதுக்கென்னடா கண்ணு...? நீ ஆசைப்படற மாதிரியே செஞ்சுட்டா போச்சு... பச்ச உடம்போட இதுக்குப் போய் நீ அலட்டிக்கலாமாடா...? என் பேத்திக்கு செய்யாம நானு வேற யாருக்கு செய்யப் போறேன் சொல்லு...?

    அதுக்கில்லப்பா... எங்க மாமனார் வீட்டுல எனக்கும் கௌரவமா இருக்க மாதிரி செய்யணுமில்லப்பா.

    Enjoying the preview?
    Page 1 of 1