Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Agni Paravai...
Agni Paravai...
Agni Paravai...
Ebook274 pages3 hours

Agni Paravai...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அக்னி நட்சத்திரம் போல அருகில் இருப்பவரை அதிலும் குறிப்பாக பெண்களை சுட்டெரிக்கும் குண இயல்பு கொண்டவன் ஆதித்தன். எதிர்மறை சிந்தனை கொண்டவன் சிடு சிடுவென இருப்பான்.
அமைதியான நதி போல எல்லாரிடமும் இன்சொல் பேசி பழகுபவள் சந்தியா. நேர்மறை சிந்தனைகளை கொண்டவள் சிரித்த முகமாக இருப்பாள். இருவரும் வாழ்வில் சின்னஞ்சிறு பருவத்தில் பாதிக்கப்பட்டவர்கள்.
ஆதித்தனின் தாய் அவன் குழந்தையாக இருக்கும் போது வேறு ஒருவனுடன் ஓடிவிடுகிறாள். ஆதித்தனின் தந்தை மறுமணம் செய்து கொண்டு ஆதித்தனின் கைவிடுகிறார். அவன் தாத்தாவின் பராமரிப்பில் படித்து வளர்ந்து உயர்ந்து வேலையில் அமர்கிறான். சந்தியாவின் தந்தையோ வேறு ஒரு பெண்ணை
வீட்டுக்குகே அழைத்து வந்துவிடுகிறார். சந்தியாவின் தாய் சுயமரியாதையுடன் மகளுடன் வீட்டை விட்டு வெளியேறி மெஸ் ஒன்றை நடத்தி மகளை படிக்க வைத்து வேலையில் அமர வைக்கிறார். எதிர்மறை துருவங்களான இருவரும் ஒருநாள் சந்திக்கிறார்கள்.
எதிர்மறை துருவங்கள் ஈர்க்கும் என்பது அறிவியலின் வேதியியல் விதி. ஈர்க்கவும் செய்கின்றன என்ன ஆகிறது என்பதுதான் கதை.
Languageதமிழ்
Release dateJul 19, 2023
ISBN6580133806418
Agni Paravai...

Read more from Muthulakshmi Raghavan

Related to Agni Paravai...

Related ebooks

Reviews for Agni Paravai...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Agni Paravai... - Muthulakshmi Raghavan

    http://www.pustaka.co.in

    அக்கினிப் பறவை...

    Agni Paravai...

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    1

    அண்ணாசாலையில் அகன்ற சாலைப் பகுதியில் உள்ள பல மாடிக் கட்டிடங்களில் ஒன்றில் இயங்கிக் கொண்டிருந்த அந்த அலுவலகம் காலை நேரத்தின் பரபரப்போடு இயங்க ஆரம்பித்தது. உள்ளே பணிபுரிந்து கொண்டிருந்த ஆடவர் மற்றும் மகளிர் வேலைக்கு வர ஆரம்பித்திருந்தனர். ஒவ்வொருவராய் வந்து அவரவர் இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தபோது உள்ளே மூச்சு வாங்க ஓட்டமும் நடையுமாய் வந்த பெண்ணொருத்தி அமர்ந்திருந்த பெண்களில் ஒருத்தியைப் பார்த்து,

    குட்மார்னிங் வனஜா... என்றாள் மூச்சிரைக்க... பதிலுக்கு,

    குட்மார்னிங் சுசிலா... என்ற வனஜா,

    ஏண்டி இப்படி மூச்சு வாங்குது...? மெதுவாக வரக் கூடாதா...? என்றாள்.

    ஏன் சொல்ல மாட்டாய்...? துர்வாச முனிவர் வருவதற்கு முன்னாடியே சீட்டில் வந்து உட்கார்ந்து விட்ட தைரியம் உனக்கு... துர்வாசர் வருவதற்கு முன்னாடி வந்துடனும்னு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நான் ஓடி வந்த தவிப்பு எனக்கு இல்ல தெரியும்... போடி... ஸ்ஸு... அம்மாடி... ஒரு வழியா வந்துவிட்டேன்... என்று சுசிலா அவளது சீட்டில் அமர்ந்து கொண்டு ஆசுவாசப் பெருமூச்சுவிட, பிரியா புயலாய் உள்ளே நுழைநதாள். வரும்போதே,

    ஹாய் வனஜ்! காலங்கார்த்தாலேயே சுசிலா புலம்பிக் கொண்டிருக்கிறாளே என்னவாம்... என்று வம்பு கேட்கும் ஆர்வத்துடன் கேட்க, வனஜா,

    நத்திங் ப்ரியா...! லேட்டாயிடுச்சுன்னு பயந்திட் டாளாம். இப்போது நீ லேட்டாத்தானே வர்றே...? துர்வாசருக்குப் பயந்து ஓடியா வர்றே...? அதைத்தான் சொன்னேன். பொரிஞ்சு தள்ளுரா... என்று கூறினாள்.

    அதற்கு அந்தப் பிரியா, நான் மெதுவாக வந்தேனா...? நெவர்... நான் அப்போதே வந்து விட்டேன். வாசலில் நின்று அரட்டையடிச்சுக்கிட்டு இருந்தேன்... துர்வாச முனிவர் வந்துவிட்டார். அதான் சீட்டுக்கு வந்தேன்... என்று கூற வனஜாவும், சுசிலாவும் பதறிப் போனார்கள்.

    அடிப்பாவி... என்னடி சொல்றே. துர்வாசர் வந்தாச்சா. வனஜ்! நீ உன் சீட்டுக்குப் போ... நான் என் சீட்டுக்கு வந்து விட்டேன். என்றபடி சுசிலா பாய்ந்து அவளது சீட்டை ஆக்ரமித்து வேலையிருப்பது போல் குனிந்து கம்ப்யூட்டரை நோண்ட ஆரம்பித்தாள். வேலை பார்ப்பது போல் பாவனை செய்தபடி குனிந்து இருந்தாலும் விழிகள் வாசலைப் பார்த்தபடி இருந்தன.

    வெளியே டக்டக்கென்று ஷூவின் கம்பீரமான காலடிச்சத்தம் கேட்டது. அந்த அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களும் வேலை செய்யும் பாவனையில் கம்ப்யூட்டரை கட்டி அணைத்துக் கொள்ள 'ஆதித்தன்' அந்த நிறுவனத்தின் ஜி.எம். என்றழைக்கப்படும் ஜெனரல் மேனேஜர் பதவி வகிப்பவன் உள்ளே நுழைந்தான். கடுகடுவென்ற முகத்துடன் 'துர்வாச முனிவர்' என்று அந்த அலுவலகத்தில் பணிபுரிபவர்களால் முக்கியமாய் பெண்களால் பெயர் சூட்டப் பட்ட அந்த ஜெனரல் மேனேஜர் எல்லோருடைய 'குட்மார்னிங்'குகளையும் போனால் போகிறதென்று சிறு தலை அசைவுடன் ஏற்றுக் கொண்டு அவனது தனியறைக்குள் நுழைந்தான். அவன் உள்ளே போன அடுத்த நிமிடம் அலுவலகமே மூச்சு வாங்கி ஆசுவாசப்பட்டுக் கொண்ட நேரத்தில் பிரியாவின் டேபிளின் மேலேயிருந்த இன்டர்காம் அலறியது. பிரியா அதை விட வேகமாய் அலறிக் கொண்டு எடுத்துப் பேசினாள்.

    பிரியா...! கொஞ்சம் வந்துவிட்டுப் போங்க. என்று ஆணையிட்டது ஆதித்தனின் குரல். உயிரெல்லாம் வடிந்து விட்ட நிலையில் சவமாய் வெளுத்துப் போன முகத்துடன் அவள் சீட்டை விட்டு எழுந்திருக்கையில் பக்கத்து சீட் வசுமதி துக்கம் விசாரித்தாள்.

    என்னடி ப்ரியா...? துர்வாச முனிவரின் சாபம் இன்றைக்கு உன்கிட்டயிருந்து ஆரம்பிக்கப் போகுதா...? இன்றைக்கு முதல் பலி நீதானா? நல்லா மாட்டினே போ...

    வசு ப்ளீஸ்... நானே நொந்து போயிருக்கேன்... நீ வேற மேலேயும் நோகடிக்காதே...

    எதுவானாலும் உள்ளே போய் அர்ச்சனையை வாங்கிக் கட்டிக் கொண்டு வந்து நொந்து போ... லேட்டாய் போனேன்னு வை, துர்வாசர் அதுக்குள்ள வெளியே வந்து எல்லார் மத்தியிலும் காச்சு காச்சுன்னு காச்சிரும். தேவையா...?

    அடிப்பாவி... அந்தாளு மாதிரியே நீயும் சாபம் கொடுக்கறியேடி. நான் உள்ளே போய் அர்ச்சனை வாங்கிக் கட்டிக் கொள்வதைக் கேட்க உனக்கு அவ்வளவு ஆசைடி. போறேன்டி. எல்லாம் என் நேரம். போய் வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறேன்.

    நடுங்கிக் கொண்டே போய், எம்.ஆதித்தன் எம்.இ., எம்.பி.ஏ., ஜெனரல் மேனேஜர் என்ற போர்டு மாட்டப் பட்டிருந்த அறையின் முன் நின்று மெதுவாய், மிக மெதுவாய் ஒரு விரலால் கதவைத் தட்டினாள் பிரியா.

    யெஸ் கமின் என்ற கண்டிப்பான குரல் கேட்டவுடன் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றாள்.

    வெளிர் நீல சுடிதாரில் அழகாய் மாடலிங் பெண் போன்ற தோற்றத்துடன் முன்னால் வந்து நின்ற பிரியாவின் அழகு கொஞ்சம் கூட பாதிக்காதவனாய் அந்த ஆதித்தன் முறைத்தான். மென்று துப்பிய வார்த்தைகள் போல் தோன்ற,

    டேக் யுவர் சீட் என்றான். இருபத்தியெட்டு வயது வாலிபனான அவன் முன்னால் நிற்கும் உணர்வில்லாமல் செங்கல்காள வாசலின் உள்ளே நிற்பது போல் வியர்த்து விறுவிறுக்க நின்றிருந்த பிரியா,

    இட்ஸ் ஓகே சார்... என்றாள் அவசரமாக,

    ஏன் உட்காரப் பிடிக்காதா...? நின்று கொண்டி ருந்தால் தான் பிடிக்குமா...? அதனால்தான் ஆபிஸ் நேரத்தில் ஆபிஸ் சீட்டில் உட்காராமல் ஆபிஸ் வாசலில் நின்று கொண்டிருந்தீர்களா...?

    சார் அது வந்து...

    எது வந்து... ம்ம்... இந்த வந்து போயெல்லாம் வேண்டாம். உங்களுக்கு எட்டு மணி நேர வொர்க்குன்னு தெரியுமில்லை...

    சார்... சார்...

    தெரியுமா...? தெரியாதா...? ஐ வான்ட் இம்மீடியட் ஆன்சர்...

    தெரியும் சார்...

    அது தெரிந்துமா, ஆபிஸ் நேரத்தில் வாசலில் நின்று அரட்டையடித்துக் கொண்டு இருந்தீர்கள்...? மாதக் கடைசியில் ஆயிரக் கணக்கில் சம்பளம் கொடுப்பது நீங்க வேலை செய்யணும்கிறதுக்காக. அரட்டையடிக் கிறதுக்கு இல்லை. புரியுதா...? காலையில் வந்தவுடனேயே அரட்டைக் கச்சேரியை ஆரம்பித்து வைக்கிறீர்களே... உங்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கிறதா...? இல்லையா...?

    இல்லை சார்... அது வந்து... என்று பதறினாள் பிரியா.

    இல்லையா...? எது இல்லை...? மனச்சாட்சி இல்லையா...?

    இல்... ஐயோ... நான் அந்த அர்த்தத்தில் 'இல்லை'ன்னு சொல்லவில்லை சார். என்று பிரியா பரிதவித்தாள்.

    குட்... இன்னைக்கு நாள் நல்லபடியா ஆரம்பிச் சிருக்கு... 'ஐயோ அம்மா'ன்னு அருமையாப் பேசுறீங்க... இதைத்தான் காலேஜில் படிச்சு டிகிரி வாங்கினீங்களா...?

    இல்...இல்லை... சார் என்று 'இல்லை'யென்ற பதிலைத் தவிர எந்தப் பதிலை இந்தக் கேள்விக்கு கூறுவது என்ற தடுமாற்றத்துடன் பிரியா கூறினாள்.

    ச்சு... முதலில் இந்த ப்ளடி 'இல்லை'யை விட்டுத் தொலையுங்கள்... இன்னொரு தரம் இப்படி பிகேவ் பண்ணினால் 'மெமோ' கொடுத்து விடுவேன். பிகேர்புல். ஆபிசுக்கு வருவதாக நினைக்கிறீங்களா...? இல்லை மெரினா பீச்சிற்கு வருவதாக நினைக்கறீங்களா...? லுக் மேடம். இந்த லூட்டியடிக்கிறது. அரட்டையடிக்கிறது இதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு இந்த ஆபிஸில் வேலை பார்க்கிறதாக இருந்தால் வேலை பாருங்க. இல்லைன்னா ரிசைன் பண்ணிவிட்டு உங்க வீட்டு வாசலில் போய் நின்று அரட்டையடிங்க. மைன்ட் இட்... புரியுதா...?

    யெஸ் சார்...

    என்னத்துக்கு இப்போ 'யெஸ்' போடறீங்க...? ரிசைன் பண்ணிடறீங்களா...?

    நோ... நோ... நோ சார்...

    எஸ், நோ, இந்த இரண்டு வார்த்தையை விட்டால் வேறு வார்த்தை எதுவும் பேசத் தெரியாதா...? ஆனால் அரட்டையடிக்க ஆரம்பித்து விட்டால் மட்டும் சரளமாய் வார்த்தைகள் வந்து விழுகின்றதே... எப்படி...ம்...?

    இனிமேல் ஜாக்கிரதையாய் நடந்து கொள்கிறேன் சார்... என்று தழைந்த குரலில் பேசிய பிரியாவின் கண்களில் நீர் திரையிட்டிருந்தது.

    அதைக் கவனிக்காதவன் போல் ஆதித்தன் பேசினான்.

    ஜாக்கிரதையாய் நடக்க நீங்க என்ன கம்பி மேலேயா நடக்கப் போறீங்க... ஆபிஸ் நேரத்தில் ஆபிஸ் வேலையை மட்டும் பாருங்க மேடம். எனக்கு அது போதும். ஆபிஸ் நேரம் முடிந்தவுடன் நீங்க எக்கேடு கெட்டால் எனக்கென்ன...?

    ஓ.கே. சார்... என்று இந்த பதிலுக்கும் அவன் என்ன கூறப் போகிறானோ என்ற பயத்துடன் பிரியா கூறினாள். அவளது பயத்தை மெய்ப்பிப்பது போல ஏதோ பேச வாய் திறந்தவன் போன் மணி அடிக்கவும் அதை எடுத்து,

    ஹலோ மேக்னா பவர்ஸ் லிமிடெட் ஜி.எம்.ஹியர். என்றபடி அவளைப் போகலாம் என்று ஒற்றை விரலால் சைகை செய்து வெளியேற்றினான்.

    கிழிந்து போன துணியாய் வெளியே வந்தாள் பிரியா... உள்ளே ஆதித்தன் கத்திய காட்டுக் கத்தலை செவிமடுத்திருந்த அலுவலகத்தின் சக ஊழியர்களின் இரக்கமான பார்வைகளைக் கடந்து அவளது இருப்பிடத்திற்குப் போய் அமர்ந்தாள். அவளது காலை நேரத்து உற்சாகம் ஆதித்தனின் அக்கினிப் பேச்சில் பொசுங்கிப் போயிருக்க இயந்திரமாய் கண்களில் நீர் வழிய வேலையில் ஆழ்ந்தாள்.

    2

    அலுவலக சுவர் கடிகாரம் 'ஒன்று' என அடித்தது. அந்தச் சத்தத்திற்காக காத்திருந்தது போல் அனைவரும் கம்ப்யூட்டரை அணைத்து விட்டு மதிய உணவுக்கு ஒவ்வொருவராக எழுந்து செல்ல ஆரம்பித்தனர். ஆண்களில் பலர் அலுவலக கேண்டினை நோக்கி நடக்க பெண்கள் அனைவரும் 'டைனிங் ஹால்' என அழைக்கப்படும் உணவு அருந்தும் அறைக்குச் சென்றார் கள். மதிய உணவு நேரம் தான் அவர்களுக்கான நேரம். குடும்பச் சுமைகளைப் பகிர்ந்து கொள்வது. அரசியல் பற்றி அலசுவது, விளையாட்டை விமர்சிப்பது, புதிதாய் வந்திருக்கும் சேலை, துணிமணிகள், நகைகள் பற்றிப் பேசுவது, யாராவது புதுடிசைளில் உடை அணிந்திருந் தாலோ அல்லது நகை அணிந்திருந்தாலோ அதைப் பற்றிப் பாராட்டுவது, கருத்துச் சொல்வது, சினிமா பற்றிப் பேசுவது, டி.வி. சீரியல்கள் எந்தத் தரத்தில் இருக்கிறது என்ற இவர்களது டி.ஆர்.பி. ரேட்டிங்கை கடைபரப்புதல் என்று அந்த ஒரு மணி நேரமும் பணிபுரியும் மகளிருக்கான தனி உலகமாக இருக்கும். இவற்றின் இடையே அலுவலக அக்கப் போர்கள் நிச்சயம் பேசப்படும். அன்றைய உணவு இடைவேளையில் அலுவலகப் பெண் ஊழியர்களின் வாய்களில் உணவுக்குப் பதில் ஆதித்தன் அரைபட்டான். ஆளுக்கு ஆள் ஆறுதல் வார்த்தைகளை பிரியாவை நோக்கி அள்ளிவிட பிரியா அழுது விட்டாள்.

    ஐயோ பிரியா...! என்னப்பா இது...? இதுக்குப் போய் கண்ணீர் விடலாமா...? துர்வாசர் குணம்தான் உனக்குத் தெரியுமே...? நீயேண்டி அது கண்ணில் படுகிற மாதிரி வாசலில் நின்று தொலைச்சே...! என்று வசுமதி வினவ,

    அசட்டுத் தைரியம் வசு! ஒரே நிமிடம்தான் ஸ்லோ பண்ணியிருப்பேன். அதுக்குள்ளே ஜி.எம்மின் கார் உள்ளே வந்து விட்டது என்றாள் பிரியா.

    ஏய் பிரியா... இங்கே பார்... ஏண்டி இன்னும் பேயறைஞ்ச மாதிரியிருக்கே... ரிலாக்ஸ்டா. நீ இப்படி டல்லாயிருந்தால் உன் முகம் பார்க்கவே சகிக்கலை... என்று வனஜா கூற,

    ஆமாம்டி... அவ முகம் இப்ப பார்க்க சகிக்கிற மாதிரி இல்லாததுதான் பிரச்னையா...? என்ன மனுசன்டி அந்த ஆளு...? எப்பப் பார்த்தாலும் பெண்களை அழுக வைத்துக் கிட்டு... எந்த மகராசி எந்த நேரத்தில் பெத்தாளோ...? ஏண்டி இந்த ஆளுக்குப் பெண்களைக் கண்டாலே பிடிப்ப தில்லை. என்று சுசிலா கேட்டாள்.

    இதைப் போய் என்னிடம் கேட்டால் எனக்கென்னடி தெரியும்.? இதை அந்த ஆளோட அம்மாகிட்டயோ அக்கா தங்கை கிட்டயோ தான் கேட்கணும். என்றாள் வனஜா.

    ஏன் மனைவிகிட்ட கேட்கக் கூடாதா...? என்று சுசிலா கண் சிமிட்ட, வசுமதி சிரித்தாள்.

    மனைவியா...? யாருக்கு நம்ம ஜி.எம்.முக்கா... ஏண்டி நீ வேற... எவடி கண்ணைத் திறந்து கொண்டே தண்ட வாளத்தில் தலையை நீட்டுவாள்...?

    வசுமதியின் அந்த விமரிசனத்தில் பிரியா கவலையை மறந்து சிரித்துவிட மற்ற பெண்களும் சேர்ந்து சிரித்தனர்.

    ஆக நம்ம ஜி.எம்மிற்கு கழுத்தை நீட்டுவதும் தண்டவாளத்தில் தலையை நீட்டுவதும் ஒன்னுங்கிற. வெல்டன் வசு... எவ்வளவு கரெக்டா கண்டு பிடித்து வைத்திருக்கிறாய் என்று வனஜா பாராட்ட முகம் மலர்ந்த வசுமதி,

    ஐயோ! அங்கே நின்று கொண்டு நாம பேசுவதைக் கேட்டுக்கிட்டு இருக்கிறது யாருடி...? நம்ம ஜி.எம். போல இருக்கே. போச்சு வசு. மதியம் காய்ச்சல் உன்னிடமிருந்து ஆரம்பமா...? என்ற அவளின் அடுத்த வார்த்தைகளைக் கேட்டதும் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கண்கள் நிலைகுத்த அமர்ந்து விட்டாள் வசுமதி.

    ஏய்ய்... வசு... என்னடி ஆச்சு...? விளையாட்டுக்குச் சொன்னேன்டி...

    சுசி தண்ணியை எடுடி... வசு... வசு...என்று வனஜா பதற எல்லாப் பெண்களும் தண்ணீரைக் குடுத்து ஆசுவாசப்படுத்த ஒரு வழியாய் தன்நிலைக்கு வந்து மூச்சு விட்ட வசுமதி வனஜாவை முறைத்தாள்.

    ஸாரிடி வசு. கேலிக்குச் சொன்னேன்டி... நீ வேற துர்வாசர் மாதிரியே அக்கினிப் பார்வை பார்க்காதேடி. ஆபிசுக்கு ஒரு துர்வாசர் போதும்டி. இன்னொன்னு வந்தால் தாங்காது. மலை இறங்குடி மகளே. ப்ளீஸ்... இங்கே பாருடி. இந்த ஸின்த்தெடிக் சுடிதார் உன் அக்கினிப் பார்வையால் பொசுங்கியே விட்டது. என்று வனஜா கொஞ்சினாள்.

    அவளின் விளையாட்டுப் பேச்சில் கோபம் மறந்த வசுமதி,

    ஏண்டி... நீ விளையாட்டாய் பயமுறுத்த வேறு மேட்டரே கிடைக்கலையா...? பூகம்பம் வந்திருச்சுன்னு சொல்லு தாங்கிக்கறேன். சுனாமி வந்திருச்சுன்னு சொல்லு கேட்டுக்கிறேன். ஜி.எம். வந்திருச்சுன்னு சொல்லலாமாடி. நான் தாங்குவேனா...? என்று கேட்டாள்.

    பூகம்பத்துக்கும், சுனாமிக்கும் பயப்படாத அந்த பெண்குலம் ஜி.எம். என்ற வார்த்தையைக் கேட்டால் உயிரே பறப்பது போல் அலறும்படி அந்தப் பதவிக்கு மரியாதை தேடித் தந்திருந்த ஆதித்தன் அந்த நேரம் ஒரு கடிதத்தை பிரித்துப் படித்துக் கொண்டிருந்தான்.

    என் அன்பு ஆதித்தனுக்கு.

    வரவர என் கண் பார்வை மங்கிக் கொண்டே

    வருகின்றது. முழுவதும் மங்குவதற்குள் உன்னை

    ஒருமுறை பார்த்துவிட வேண்டுமென்று ஆசைப்

    படுகிறேன். வருவாயா...?

    இப்படிக்கு

    தியாகி தணிகாசலம்.

    கோணல் மாணலான எழுத்துக்கள் அந்த வயோதி கரின் தள்ளாமையையும் கண் பார்வைக் குறைவையும் விளக்க மனவேதனையுடன் கண் மூடி சுழல் நாற்காலியில் சாய்ந்து கொண்டு சிந்தித்தான் ஆதித்தன். அவரைப் பார்க்க வேண்டுமென்றால் கிராமத்துக்குப் போக வேண்டும். கிராமத்துக்குப் போனால் இந்தச் சென்னையில் ஒரு கம்பெனியின் ஜி.எம். என்ற அடையாளத்துடன் வலம் வருபவன் வேறு விதமாய் அடையாளம் காணப்படுவான். அந்தக் கிராமத்தின் சுட்டு விரல் சுட்டிக் காட்டும் அடையாளத்தை அவனால் ஏற்க முடியுமா...? அதைத் தாங்க முடியாமல் தானே அவன் வருடக் கணக்காய் கிராமத்தைத் துறந்து, அந்த வயோதிக கைகள் தந்த ஆதரவையும் பாசத்தையும் மறந்து சென்னையில் மறைந்து வாழ்கிறான்.

    அழைக்கும் அந்த வயோதிகக் குரலைத் தொடர்ந்து நினைவுகள் அவனைத் துரத்த அந்த நினைவுகளின் விரட்டல் தாங்காமல் மனதில் கனம் வந்து சேர அந்த கனம் தாங்காதவனாய் அவன் கண்களை இன்னும் இறுக மூடிக் கொண்டான்.

    3

    'அம்மா உணவகம்' என்ற சிறிய பெயர் பலகை தொங்கிய அந்த வீட்டின் பின்புறத்தில் இருந்த இரு அறைகளில் ஒன்றில் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த அன்னம் தளர்வாக அழைத்தாள்.

    சந்தியா... அவளது அழைப்iக் கேட்டதும் அடுத்த அறையிலிருந்த சந்தியா அவசரமாய் அன்னையின் அருகே வந்து அவள் முகத்தின்

    Enjoying the preview?
    Page 1 of 1