Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sollathan Ninaikkirean
Sollathan Ninaikkirean
Sollathan Ninaikkirean
Ebook221 pages2 hours

Sollathan Ninaikkirean

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள செல்கிறான் கதாநாயகன். அந்த மணப்பெண்ணுடன் இவனை தொடர்பு படுத்தி மாப்பிள்ளை சந்தேகப்படுகிறான். அவளோ இவனுக்கு முன்பின் தெரியாதவள். திருமணம் நின்றுவிடுகிறது.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இவன் வாழ்க்கைக் கொடுக்கிறான்.

The hero of the story was attended a marriage, the groom mis thought the bride with the hero. Marriage was stopped. Actually Hero was a stranger to the bride. But, the hero give her a Life & Marriage the girl.

Languageதமிழ்
Release dateJul 19, 2023
ISBN6580133805521
Sollathan Ninaikkirean

Read more from Muthulakshmi Raghavan

Related to Sollathan Ninaikkirean

Related ebooks

Reviews for Sollathan Ninaikkirean

Rating: 3.473684210526316 out of 5 stars
3.5/5

19 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sollathan Ninaikkirean - Muthulakshmi Raghavan

    http://www.pustaka.co.in

    சொல்லத்தான்... நினைக்கிறேன்...

    Sollathan… Ninaikkirean…

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    http://pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    சொல்லத்தான் நான் வந்தேன்...

    சொல்லிடவே முடியவில்லை...

    புலர்கின்ற காலைப் பொழுதில்... அந்தக் கிராமத்தில்.. விடியலை வரவேற்பதற்கான அனைத்து ஆயத்தங்களையும் செய்ய ஆரம்பித்திருந்தனர்..

    பெண்கள்.. வாசலில் நீர் தெளித்துப் பெருக்கிக் கோலம்போட ஆரம்பிக்க... ஆண்கள்.. ஏர்களை பூட்டிக் கொண்டு... மாடுகளைக் கையில் பிடித்து வயலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்...

    வேப்பங்குச்சி ஒன்றை வாயில் வைத்து மென்றபடி.. வயலை வேடிக்கை பார்த்தபடி.. வரப்பில் நடந்து வந்த சரவணன்..

    யாரப்பு.. அது.. நம்ம வெள்ளைச்சாமியோட சின்ன மகனைப் போல இருக்கே... என்ற குரலைக் கேட்டதும்... அவசரமாக மடித்துக் கட்டியிருந்த கைலியை அவிழ்த்து விட்டான்..

    ஆமாம் பெரியப்பா.. நான்தான்..

    மதுரையிலயிருந்து எப்பப்பு வந்தே...?

    நேத்து பொழுது சாய வந்தேன் பெரியப்பா..

    இன்னும் கைக் கஞ்சியைத்தான் காய்ச்சிக் குடிக்கிறயா..? காலாகாலத்தில் ஒருத்தி கழுத்தில தாலியைக் கட்டி.. குடும்பம் நடத்த ஆரம்பிப்பு...

    வெள்ளந்தியாக அந்த கிராமத்து மனிதர் பேசிய பேச்சில் லேசாக முகம் சிவந்து போனான் சரவணன்

    பாக்கலாம் பெரியப்பா... இப்போ அதுக்கென்ன அவசரம்..?

    அப்புறம்...? அவசரமில்லையா...? என்னமோ.. கவர்ண்மென்டு உத்தியோகம் கிடைச்சிருச்சுன்னு.. இந்தக் கருமாத்தூரில் மண்ணைக் கொத்திப் பிழைக்கிற பிழைப்பை விட்டுப்புட்டு... காகிதங்களை கட்டி மேய்க்க.. மதுரைக்குப் போன... போன பயலுக்கு கஞ்சி காய்ச்சி ஊத்த உன் ஆத்தாளால கூட வர முடிஞ்சதா...?

    அம்மாவுக்கு ஆயிரம் வேலை.. அது என்ன செய்யும் பாவம்..

    பாவப்பட்ட ஜென்மம்தான்.. பட்டிக்காட்டில.. விவசாயக் குடும்பத்துப் பொம்பளைக எல்லாருமே பாவப்பட்ட ஜென்மம்தான்.. கோழி கூவுறதுக்கு முன்னாலேயே எழுந்திருச்சு.. பொழப்பு.. தழப்பப் பார்க்க ஆரம்பிச்சா.. நடு ஜாமம் கடக்கற வரைக்கும்.. அதுகளுக்கு வேலை ஓயாது தான்.. அதுக்காக... உன்னைத் தனியா விடறதா..?

    எனக்கென்ன பெரியப்பா... பாதி நேரம் ஹோட்டல் சாப்பாடு இருக்கு.. மீதி நேரத்துக்கு நானே எதையாவது செய்து சாப்பிட்டுக்குவேன்.. என் ஒருத்தனுக்காக... இங்கே குடும்பத்தை விட்டுட்டு அம்மா வர முடியுமா..?

    பொறுப்பான பயதான்.. ஏனப்பு.. உன் ஆத்தாதான் உங்க குடும்பத்தைத் தாங்கனுமா..? உன் அண்ணன் பொண்டாட்டி தாங்கினா ஆகாதா...?

    ரெண்டு பிள்ளைகளை கட்டி மேய்க்கவே மதினிக்கு நேரம் சரியாயிருக்கு.. இதில்.. அம்மா இல்லாம... குடும்பத்தைத் தனியா பார்த்துக்கறதுன்னா அதுக்கு ரொம்ப கஷ்டம் பெரியப்பா...

    இதப்பாருடா... மதினியை விட்டுக் கொடுக்காத கொழுந்தனாரா இருக்க... எல்லாத்துக்கும் ஒரு பதிலை வச்சிருக்கயே... இதுக்கு ஒரு பதிலைச் சொல்லு...

    என்ன பெரியப்பா..?

    உன் அத்தை மகளைக் கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டயாமே.. அது ஏன்ப்பு...?

    நெருங்கின சொந்தத்தில் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது பெரியப்பா...

    முறை மாப்பிள்ளையை விட்டுப்புட்டு.. வேற ஒருத்தனை பரிசம் போட வரச் சொல்லாத சீமையப்பா.. நம்ம சீமை... உடந்தைப் பட்டவன் நீயிருக்க.. இன்னொருத்தனுக்கு உன் அத்தையால பொண்ணைக் கொடுக்க முடியுமா...?

    "நீங்க உங்க காலத்திலேயே இருக்கிறிங்க பெரியப்பா.. இப்ப காலம் மாறிப்

    போச்சு..."

    மாறிப் போன காலத்தில.. உன் ஆத்தாளை.. 'அம்மா'ன்னு கூப்பிடாம... 'அயித்தே'ன்னா கூப்பிடறே...?

    இப்படிப் பேசினா எப்படி பெரியப்பா...?

    தெரியாமல்தான் கேட்டேனப்பு.. தெரிஞ்சா பதிலைச் சொல்லு...

    இதுதான் கிராமம்.. இதன் வேர்களை சுவாசிக்கும் மனிதர்கள் இப்படித்தான் கிடுக்கிப்பிடி போட்டு பேசுவார்கள்.. அவர்களின் பேச்சிற்கு எதிர் பேச்சை பேசிவிட யாராலும் முடியாது.. அந்த கிராமத்திலேயே இருக்கிறவர்களால் கூட... இந்தக் கேள்வியைக் கேட்ட காளியப்பனின் கேள்விக்கு பதிலைச் சொல்லி விட முடியாது எனும் போது... தவளைக்கு... தண்ணீரும்... தரையுமா.. இரண்டு இடம் என்பதைப் போல... கருமாத்தூரில் பிறந்து.. மதுரையில் வேலை பார்க்கும் சரவணனால் மட்டும் எப்படி பதிலைச் சொல்ல முடியும்..?

    அதனால்.. அவன் என்ன பதிலைச் சொல்வது என்று புரியாமல் திருதிருத்து நிற்க.. அதை ரசித்து..

    ஹா... ஹா... என்று பெருங் குரலெடுத்து சிரித்தார் காளியப்பன்.

    'என்னத்தைப் பேசறது...? இப்படி எகனைக்கு மொகனையா கேள்வியை கேட்டு வைச்சா.. மனுசன் பதில் சொல்வானா..?'

    அதனாலதான் சொல்றேனப்பு...

    'இது வரைக்கும் சொன்னது போதாதா...? இன்னும் புதுசாய் வேற சொல்லனுமா...?'

    எதையும் பேசறதுக்கு முன்னால.. யோசிச்சுப் பேசனும்..

    'யோசிக்காம உங்ககிட்ட ஒரு மனுசன் பேசிர முடியுமா..? எங்கே.. என்னத்தை யோசிச்சாலும்.. உங்க வாயை அடைக்கிறதைப் போல ஒரு பதிலைச் சொல்ல என்னால முடியலையே...'

    வரட்டுமாப்பு..?

    'வராதீங்க.. போய்கிட்டே இருங்க...'

    என்னப்பு... பேச்சைக் காணோம்...

    காளியப்பன் நின்றுவிட.. எங்கே அவர் திரும்பவும் ஏதானும் வம்பைக் கட்டி இழுத்து விடுவாரோ என்ற பதைப்பில் அவசரமாக வாயைத் திறந்தான் சரவணன்..

    போய்ட்டு வாங்க பெரியப்பா...

    நீ தான் மதுரைக்கு பிழைப்பைத் தேடிப் போகனும்.. நானு இந்த மண்ணு வாசனையில வாழறவனப்பா.. என்னை எங்கே போகச் சொல்ற...?

    'இந்த மனுசன் எதிரே வருவாருன்னு தெரிஞ்சிருந்தா.. காலில் முள்ளு குத்தினாலும் பரவாயில்லைன்னு... பேசாம.. கருவேலங் காட்டுப் பாதையில போயிருப்பேனே..'

    காலம் கடந்து யோசித்தான் சரவணன்.. அவனது அங்கலாய்ப்பைக் கடவுள் கேட்டு வைத்த காரணத்தினால் காளியப்பன் மனமிரங்கி அவனுக்கு வழி விட்டு.. விலகி நடந்தார்...

    போப்பா.. போயி... காலாகாலத்தில உன் அத்தை மகளுக்கு பரிசத்தைப் போடப்பாரு.. முறை மாப்பிள்ளை... ஒருத்தனுக்குத்தான்... முறைப் பொண்ணை... மணவறையில இருந்து தூக்கிக்கிட்டு வந்து தாலியைக் கட்டறதுக்கான உரிமை இருக்குப்பு...

    காற்றோடு அவர் குரல் கலந்து ஒலிக்க... சரவணன் யோசனையுடன் மேலே நடந்தான்..

    'மணவறையில உட்கார்ந்திருக்கிற பெண்ணைத் தூக்கிக் கொண்டு வந்தால்... பெண்ணைக் கடத்தின குற்றம் வந்து விடாதா' என்று நினைத்துப் பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது...

    என்னடா... நீயாய் சிரிச்சுக்கிட்டு வர்ற..

    வாய்க்கால் தண்ணீரை... வயலுக்குள் திருப்பி விட்டுக் கொண்டிருந்த விக்னேஸ்வரன்.. மண்வெட்டியை தூக்கிக் கொண்டு நிமிர்ந்தபடி கேட்டான்..

    வழியில நம்ம காளியப்ப பெரியப்பாகிட்ட மாட்டிக்கிட்டேண்ணே.. சரவணனுக்கு சிரிப்பு குறைய வில்லை...

    என்ன சொன்னாரு...

    பொண்ணைத் தூக்கச் சொன்னாரு..

    இதப்பாருடா.. இப்படியாப்பட்ட யோசனைய எல்லாம் உனக்குச் சொல்லிக் கொடுக்கிற மகராசன்.. என்கிட்ட இதைப்பத்தி வாயைத்திறக்கவே இல்லையே...

    கேலியாக கேட்டபடி... வாய்க்கால் நீர்பக்கம் கண்ணைப் பதித்திருந்த விக்னேஸ்வரன்..

    அடேங்கப்பா.. அப்படியொரு நினைப்புக்கூட.. உங்க மனசில இருக்குதாக்கும்.. அந்த மனுசன் வாயைத் திறந்திருந்தா என்ன பண்ணியிருப்பீரு..? எந்தப் பொண்ணத் தூக்கியிருப்பீரு..? என்ற குரலைக் கேட்டதும் அரண்டு திரும்பினான்..

    கையில் தூக்குவாளியுடன்.. முகம் முழுவதும் கோபம் படற அவன் மனைவி மல்லிகா நின்றிருந்தாள்..

    இப்பத்தாண்டி உன்னை நினைச்சேன்..

    பொய் சொல்லாதீங்க.. எந்தப் பெண்ணையாவது தூக்கிக்கிட்டு வந்து தாலியைக் கட்ட முடியலையேன்னு நினைச்சீங்க..

    யாருடி இவ.. காலங்கார்த்தால.. சண்டைக்கு பறக்கிறா...

    ஆமாமாம்.. இவருகூட சண்டை போடத்தான் நான் பறக்கிறேன்.. கருக்கல்லுல்லயே தண்ணி பாய்ச்ச வந்துட்ட மனுசனுக்கு.. தொண்டையை நனைக்க.. சூடாய் காபித்தண்ணிய வைச்சு.. தூக்குச் சட்டியில் ஊத்திக்கிட்டு ஒரு மனுஷி ஓடி வந்தா.. இந்த மனுசனுக்கு அது தெரியலையாம்.. நானு சண்டைக்கு பறக்கிறவளாய் தெரியறேனாம்..

    ஏண்டா சரவணா... விடிஞ்சும்.. விடியாம... உன்னை யாருடா.. அந்த வில்லங்கம் புடிச்ச மனுசன் பார்வையில படச் சொன்னது..? இப்பப்பாரு.. உன்னோட வினை போகாம.. என்னையும் தொத்திக்கிட்டு ஆட்டுது.

    எனக்கு மட்டும் வேண்டுதலா அண்ணே...? இந்த மனுசன் எதிரில் வருவாருன்னு தெரிஞ்சிருந்தா.. நான் ஊடுகாட்டுப் பாதையில.. கருவேலம் முள்ளு... காலைப் பதம் பார்த்தாலும் பரவாயில்லன்னு வத்திருக்க மாட்டேனா..?

    அண்ணனும்.. தம்பியும் வாக்குவாதத்தில் இறங்க.. போனால் போகிறதென்று... மலையிறங்கினாள் மல்லிகா..

    அடிச்சிக்கிட்டது போதும்.. அண்ணனும்.. தம்பியும்.. காபித்தண்ணியக் குடிக்க வாங்க...

    மோட்டார் வைக்கப் பட்டிருந்த அறையின் படியில் அவள் அமர்ந்து தம்ளர்களில்... கள்ளிச் சொட்டைப் போல இருந்த காபியை ஊற்றிக் குடுக்க.. விக்கேஸ்வரனும்.. சரவணனும் வாங்கிக் கொண்டார்கள்.

    செழுமையான மல்லிகாவின் மேனியழகை விக்னேஸ்வரனின் பார்வை மொய்த்தது.. அதைக் கண்டும்.. காணாதவள் போல முகத்தை வைத்துக் கொண்ட மல்லிகா.. மனதிற்குள் கிளர்ச்சியுற்றாள்..

    'கூடப் பிறந்த பிறப்பைப் பக்கத்தில் வைச்சுக்கிட்டு.. இந்த மனுசன் பாக்கிற பார்வையைப் பாரேன்...'

    சரவணன்.. மோட்டார் தண்ணீரில் குளிக்க நகர்ந்து விட.. விக்னேஸ்வரன்.. அடிக்குரலில் மல்லிகாவிடம் பேசினான்..

    வீடு புகுந்து தூக்கிக்கிட்டு வாரதா இருந்தா.. உன்னைத்தாண்டி.. தூக்கிக்கிட்டு வருவேன்.. அது புரியாம.. முறைச்சுக்கிட்டு இருக்கிறவ...

    போதுமே.. என்னைக் கண்டதும் சிலுப்பிக்க வேணாம்...

    உன்னைக் காணாட்டியும்.. இப்படித்தான் சிலுப்பிக்குவேன்..

    ஆளைக் கண்டா மட்டும்... மயக்கறதைப் போல பேசிவைக்க.. என் அயித்தானால மட்டும்தான் முடியும்..

    உன் அயித்தானால... அதுக்கு மேலயும் முடியும்டி... ரெண்டு புள்ளய பெத்த பின்னாலயும்.. அதுல உனக்கு சந்தேகமா...?

    ஐய்யே... ரெண்டு புள்ளைக்கு அப்பனாட்டம் பேசுங்க..

    உன்னப் பாத்தா.. ரெண்டு புள்ளயப் பெத்தவளப் போல இல்லையேடி.. அப்புறம்.. வேற எப்படி பேச்சு வரும்..?

    ங்ஸ்.. கொழுந்தன்... குளிச்சுக்கிட்டு இருக்கு... அடக்கி வாசிங்க..

    சரவணன்.. ஈரம் சொட்டிய தலையைத் துண்டினால் துடைத்தபடி.. அவர்களுக்கு அருகில் வர.. இருவரும் பேச்சை திசை மாற்றினர்..

    ஏன் சரவணனா... இன்னும் ரெண்டு நாளைக்கு இருப்பேல்ல..?

    இல்ல மதினி.. நாளைக்கு விடியக்காலையிலயே மதுரைக்கு கிளம்பனும்..

    ஏண்டா... இருந்துட்டுப் போக வேண்டியது தானே..

    லீவு கிடைக்கலேண்ணே...

    அக்கா மகனுக்கு காது குத்தப் போறாங்க.. அதுக்கு வந்துருவஇல்ல...

    ஆமாம்.. குத்துன காதையே.. எத்தனை தடம்தான் உங்க அக்கா வீட்டில குத்துவாங்க..? அப்பா வீட்டு மொய் பணத்தை வாங்க.. அந்தப் பையனின் காதை புண்ணாக்கறாங்களே...

    ஏய்ய்.. வாயை மூடுடி.. எங்க அக்காவுக்கு நாங்க செய்யறோம்.. அதைச் சொல்லிக் காட்டற வேலைய வைச்சுக்காதே..

    எனக்கெதுக்கு அந்தப் பொல்லாப்பு...? நானும் வாக்கப்பட்டு வந்த நாள் முதலா பார்த்துக்கிட்டுத்தான இருக்கேன்..? இங்கே அறுவடை பண்ணினா.. அதை உடனே அறுவடை பண்ண.. உங்க அக்கா காதுகுத்தை வைச்சிருமே...

    மல்லிகா நொடித்துக் கொண்டு எழுந்தாள்.. காபி கொண்டு வந்த பாத்திரத்தையும்... தம்ளர்களையும்.. மோட்டார் தண்ணீரில் கழுவியபடி.. விக்னேஸ்வரனை நோக்கி ஓர் பார்வையை வீசினாள்.. அவன் சொக்கிப் போனான்..

    'இவ ஒருத்தி... தம்பிகாரன் பக்கத்தில நிக்கிறப்போ.. இப்படி பார்த்து வைப்பா...'

    அவர்கள் இருவரும்... ஒருவரையொருவர் மனதிற்குள் குறைகூறியபடி... ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டார்கள்..

    2

    நீ சொல்லும் ஒற்றைச் சொல்லில்...

    நிலை கொள்ளும் என் இதயம்...

    வேலித்திடலை திறந்து

    Enjoying the preview?
    Page 1 of 1