Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puram Solla Virumbu
Puram Solla Virumbu
Puram Solla Virumbu
Ebook191 pages1 hour

Puram Solla Virumbu

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

அறம் செய்ய விரும்பு என்று சொல்லும் ஆத்திச்சூடியும் மாறும் காலம் இது... புறம் சொல்ல விரும்பு என்று புதியதோர் ஆத்திச்சூடி சொல்லும் கதை இது... புறம் சொல்வதால் என்ன நிகழ்ந்தது என்று சுவாரஸ்யத்துடன் படித்து அறிவோம்...

Languageதமிழ்
Release dateAug 5, 2023
ISBN6580133810087
Puram Solla Virumbu

Read more from Muthulakshmi Raghavan

Related to Puram Solla Virumbu

Related ebooks

Reviews for Puram Solla Virumbu

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puram Solla Virumbu - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    புறம் சொல்ல விரும்பு

    Puram Solla Virumbu

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    அவள் ரம்யா...! ரம்யமானவள்... இருபத்தி நான்கு வயதுப் பாவை...! கொடி போல உடல்... சந்தனத்தை அரைத்துப் பூசியதைப் போன்ற மேனி...! வண்டாடும் கண்கள்... பட்டாம்பூச்சி இமைகள்... மெல்லிய இதழ்கள்... நிலவு முகம்...

    இப்படி அவளை வர்ணித்துக் கொண்டே போகலாம்... ஆகமொத்தம் அவள் வேலை பார்க்கும் அரசு அலுவலகத்தில் அவள்தான் கனவு தேவதை... அவளை பார்வையிடுவதுதான் சக ஆண் ஊழியர்களின் ஆகப் பெரும் கடமையாற்றல்... பெண்களும் பார்வையிடுவார்கள்தான்... அது பொறாமை நிரம்பிய பார்வை... இவள் மட்டும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று ஏக்கப் பெருமூச்சு விடுபவர்களும் உண்டு...

    திருச்சி மாநகரில் பிறந்து வளர்ந்து படித்து... அங்கேயே அரசு வேலையையும் வாங்கி விட்ட ரம்யாவின் அதிர்ஷ்டத்தை அக்கம் பக்கத்தினரும்... அலுவலகத்தில் உள்ளோரும் வயிற்றெரிச்சலுடன் சொல்லிக் காட்டுவார்கள்...

    ம்ஹீம்... உனக்கென்னம்மா... கொடுத்து வைத்தவ... வரம் வாங்கிப் பிறந்திருக்க...

    அந்தக் கொடுத்து வைத்த ரம்யா... ஒரு முரட்டுப் பிடிவாதக்காரனிடம் தன் மனதைக் கொடுத்துத் தொலைத்து விட்டுத் தவியாய் தவித்துக் கொண்டிருந்தாள்... எல்லாவற்றிலும்

    வரம் வாங்கிப் பிறந்தவளுக்குக் காதல் வரம் கிட்டவில்லையோ என்ற சம்சயம் சஞ்சலமாக மாறி அவள் மனதை அரிக்கத் தொடங்கியிருந்தது...

    கண்ணாடியின் முன் நின்றவள் தனக்கு என்ன குறை என்று மருகினாள்...

    ‘அழகாத்தானே இருக்கேன்...? அப்புறம் அவன் ஏன் என்னைத் திரும்பிப் பார்க்க மாட்டேங்கிறான்...?’

    அதுதான் நல்லா இருக்கேன்னு ஊரெல்லாம் ஜொள்ளு விடுதே... அதுக்கப்புறமும் ஏண்டி கண்ணாடியை முறைக்கிற...? அதுக்கு வாயிருந்தால் அழுது தீர்த்திருக்கும்... நீ ஒருத்திதான் இந்த ரூமில் இருக்கிறாயா...? நானும் இருக்கிறேன்... ஞாபகம் இருக்கட்டும்... நகரு... நகரு...

    ரம்யாவின் தோளைப் பிடித்து நகர்த்தி விட்டுக் கண்ணாடியின் முன் நின்று தலைவார ஆரம்பித்தாள் மாயா... ரம்யாவின் தங்கை... இருபது வயது... என்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கிறாள்... இவளும் அழகிதான் என்றாலும் ரம்யா அளவுக்கு அழகில்லை... ரம்யாவுக்கு கொடி போன்ற உடல்வாகு என்றால் மாயா பூசினாற் போன்ற உடல் வாகுடன் இருந்தாள்... மூத்தவள் அரைத்து விட்ட சந்தனத்தின் நிறம்... இளையவளோ மாநிறத்திற்கும் கொஞ்சம் கூடுதலான நிறம்... ரம்யாவுக்கு வண்டாடும் கண்கள்... மாயாவுக்கு நீள்வடிவ மீன் கண்கள்... அவளுக்கு நிலவு முகம்... இவளுக்கு நீள்வட்ட முகம்...

    நல்ல வேளைடி ரம்யா... நீ மூத்தவளாப் பிறந்து தொலைச்ச... இளையவளாப் பிறந்திருந்தன்னு வைய்யி... என்பாடு திண்டாட்டம் தான்... பொண்ணு பார்க்க வர்றவன் அக்காவை விட்டு விட்டுத் தங்கையைப் பார்வையிட்டிருப்பான்... இப்பப் பாரு... அதுக்கு சான்ஸே இல்லை... உன்னைப் பார்க்க வருகிறவன் ஒழுங்கா மரியாதையா கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிருவான்... எனக்கு லைன் கிளியராகிரும்...

    இப்படிச் சொல்லிச் சிரிக்கும் மாயா தமக்கையின் மீது ஆழ்ந்த பாசம் கொண்டவள்... ரம்யாவின் அழகின்மீது பொறாமை கொள்ளாதவள்... அக்கா, தங்கை இருவரும் ஆத்மார்த்தமான சிநேகிதிகள்...

    நான் அழகா இருக்கேன்னு ஊர் சொல்லி என்னடி பிரயோசனம்...? அவன் சொல்லனுமே... ரம்யா பெருமூச்சு விட்டாள்...

    எவன்...? அந்த முரளிதரனா...?

    வேறு யாரைச் சொல்லுவேண்டி...? எப்படி எவன் அவன்னு நீ கேட்கலாம்...? ஐ ஆம் டோட்டலி டிஸ் அப்பாயிண்டடு மாயா...

    நீ என்னவா வேணும்னாலும் ஆகிக்க... ஐ டோன்ட் கேர்... எதுக்கு இப்ப பொங்கல் வைக்கிற...? அவன்தான் உன்னைத் திரும்பிப் பார்க்காத ஞான சூன்யமா இருக்கானில்ல... லூஸில விடுவியா...

    அடிவாங்கப் போற மாயா... அவன் ஞான சூன்யமா...?

    இது அடுக்காது என்று பொறுமினாள் ரம்யா... அவளது தங்கை கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் அதைக் கழட்டித் தூரக் கடாசிவிட்டு ஞான சூன்யம் என்று பட்டம் சூட்டும் முரளிதரன் ஆணழகன்... ஆறடி உயரத்தையும் தாண்டிய உயர்ந்த மனிதன்... பெண்களிடம் ஜொள்ளு விடாமல் அவர்களை எதிரிகளைப் போல முறைத்து இஷ்டத்துக்கு கலாய்க்கும் உத்தமபுத்திரன்... அந்த ஒரு காரணத்துக்காகவே அவனுக்கு ஞான சூன்யம் என்று நாமகரணம் சூடியிருக்கிறாள் மாயா...

    மனிதனுக்கு ஒரு ரசனையிருக்க வேணாம்...? வயசுப் பெண்களை சைட் அடிக்காம... வந்து பாரு வட்டப் பாறைக்குன்னு வெட்டருவாளைத் தூக்கறதைப் போல முறைத்துக்கிட்டு இருக்கிற மனுசன் என்ன மனுசன்...? ஞான சூன்யம்... ஞான சூன்யம்...

    வேண்டாம் மாயா...

    இதை... இதை... இதைத்தான் நானும் சொல்றேன்... அவன் உனக்கு வேண்டவே வேண்டாம்க்கா...

    அவன்தான் எனக்கு வேணும்...

    ம்ஹீம்... இதுதான் உன் தலைவிதின்னா என்னால என்ன செய்ய முடியும்...? விதி விட்ட வழியில போ...

    அவன்தான் வழி விட மாட்டேங்கிறானே... ஆசையாய் பார்த்தா அனலாப் பார்க்கிறான்... ஆபிஸ் வேலையாப் பேசப் போனா எதிரிக்காரியிடம் பேசறதைப் போல முறைச்சுக்கிட்டேப் பேசறான்... பயந்து போய் சொல்ல நினைக்கிறதை சொல்லாமலே ஓடி வந்திடறேண்டி...

    அழமாட்டாத குறையாக புலம்பித் தள்ளிய ரம்யாவைப் பார்க்கப் பார்க்க சிரிப்புத்தான் வந்தது மாயாவுக்கு...

    சரியான மாங்காய் மடையனா இருப்பான் போல... என்று சொல்லி விட்டு தமக்கையிடம் மொத்து வாங்கினாள்...

    வாய்க் கொழுப்புடி உனக்கு... ரம்யாவுக்கு ஆத்திரம் அடங்கவில்லை...

    மாயாவுக்கு தமக்கையை இன்னும் கொஞ்சம் வம்பிழுக்க வேண்டும் போல தோன்றியது...

    "சொல்ல நினைத்த ஆசைகள்...

    சொல்லாமல் போனதேன்...?"

    என்று கண்சிமிட்டியபடி பாடினாள்... ரம்யா கையில் கிடைத்த சீப்பைத் தூக்கி வீச... அதை கேட்ச் பிடித்தாள்...

    நான் காண்டில இருக்கேன்... நீ பாட்டா பாடற...?

    நானாக்கா பாடறேன்...? தானா வருது... அது என்ன மாயமோ தெரியலை... உன் ஆளைப் பத்திப் பேச்சு வந்தாலே பாட்டு அருவி மாதிரி பிச்சுக்கிட்டுக் கொட்டுது...

    கொட்டும் கொட்டும்... ஒரு கொட்டு வைச்சா தெரியும்...

    ஊஹீம்...?

    புருவங்களை உயர்த்திய மாயா... குறும்புப் பார்வையுடன்...

    "சொல்லத்தான் நினைக்கிற...

    உள்ளத்தால் துடிக்கிற...

    வாயிருந்தும் சொல்வதற்கு...

    வார்த்தையின்றித் தவிக்கிற..."

    என்று பாடினாள்... ரம்யா கோபம் மறந்து கண்கலங்க அப்படியே உட்கார்ந்து விட்டாள்... மாயாவின் பாடல் ரம்யாவின் மனது பாடும் பாடலைப் போலவே இருந்ததில்...

    இப்படித்தாண்டி இருக்குது... என்று மூக்கை உறிஞ்சினாள்...

    அக்க்கா... மாயா ரம்யாவின் பக்கத்தில் உட்கார்ந்து கட்டிக் கொண்டாள்...

    இந்த அளவுக்கு நீ உருகறதுக்கு அந்த ஞான சூன்யம் வொர்த்தா இல்லையான்னு எனக்குத் தெரியாது... ஆனா... என் அழகு அக்கா கண்ணீர் சிந்தறான்னா... நான் அதைப் பார்த்துக்கிட்டுச் சும்மா இருக்க மாட்டேன்...

    என்னடி செய்வ...?

    எதை வேண்டும்னாலும் செய்வேன்... பார்க்கலாம்... நமக்கு ஒரு வழி கிடைக்காமலா போயிரும்... இப்ப எந்திரி...

    எதுக்கு...?

    ஊம்... ஓடிப்பிடிச்சு விளையாடறதுக்கு... நீ ஆபிஸ் போகனும்... நான் காலேஜீக்குப் போகனும்... கடமைன்னு ஒன்னு இருக்கில்ல... அது அழைக்கும் குரல் என் காதில் கேட்குதே... உன் காதில் விழவில்லையா...

    ஆமாமில்ல...

    அலுவலகம் செல்ல வேண்டும் என்ற நினைவு வந்தவுடன் அரக்கப் பறக்க எழுந்தாள் ரம்யா... அக்காவும் தங்கையும் மாடியிலிருந்து இறங்கி கீழே வந்த போது நரசிம்மன் டைனிங் ஹாலில் உட்கார்ந்து டிவியில் செய்திகளைப் பார்த்தபடி சூடான பூரிகளை மொக்கிக் கொண்டிருந்தார்... பெயருக்கேற்றார் போல் கடுமையான முகபாவம்...

    அச்சு அசல் நரசிம்மராவ்... எப்படித்தான் சிரிக்காம இருக்கிறாரோ... தலையில் அடித்துக் கொண்டாள் மாயா...

    இந்திரா... நரசிம்மன் குரல் கொடுக்க... (மாயாவின் சொற்றொடர் ‘கர்ஜிக்க...’)

    இதோ வந்திட்டேங்க... என்று தோசைக் கரண்டியுடன் சூடான தோசையுமாக பி.டி. உஷாவைப் போல சமையலறையிலிருந்து ஓடி வந்தாள் இந்திரா...

    இங்கே பாரேன்... அப்பா பெயருக்கேத்ததைப் போல நரசிம்மன் அவதாரம்... அம்மா மட்டும் தலைகீழா இருக்காங்களே... இந்திரான்னு பெயரை வைச்சுக்கிட்டு அடிமை போல ஓடி வர்றாங்க... மாயா அதற்கும் ஓர் அடியைத் தலைக்கு கொடுத்தாள்...

    தோசை கொண்டு வர இவ்வளவு நேரமா...?

    தோசை வேக நேரமாகிருச்சுங்க...

    பரிதாபமாகச் சொன்ன இந்திராவைப் பரிதாபமாகப் பார்த்த மாயா...

    ஏம்மா... சமையலுக்கு இருந்த செந்தாமரை எங்கே...? என்று கேட்டாள்...

    அவ வைச்ச சாம்பார் நல்லாயில்லைன்னு உன் அப்பா நேத்து டைனிங் டேபிளிலேயே கொட்டிக் கவிழ்த்துட்டார்... அதான்...

    மென்று விழுங்கிய இந்திராவின் கண்கள் சுவர் கடிகாரத்தைப் பார்த்தன... அவள் கல்லூரிப் பேராசிரியை... அதைச் சொன்னால் அந்தத் தெருவில் எவரும் நம்ப மாட்டார்கள்... அவளை அப்படி ஆக்கி வைத்திருந்தார் நரசிம்மன்... தனக்கான அடையாளத்தை இந்திரா நினைத்து பார்த்து விடாதபடி வெகு கவனமாக இருந்தார்... அவரோ பள்ளி ஆசிரியர்... அவரது மனைவி கல்லூரிப் பேராசிரியை என்பதில் அவருக்குள் ஓர் கோபம் எரிமலையாய் குமுறிக் கொண்டேயிருந்ததில் கணவன் என்ற ஆதிக்க மனப்பான்மையை அங்குசமாக கையில் எடுத்தார்... மனைவியின் அறிவையும், தகுதியையும் மதிக்காமல் உதாசீனப் படுத்தி அவளது தன்னம்பிக்கையை நசித்து மூலையில் தள்ளினார்... இல்லத்தரசி என்ற பெயரில் அவளை வீட்டு வேலைகளுக்குப் பாத்தியப்பட்ட வேலைக்காரியாக்கினார்...

    எந்த வேலையாளும் அந்த வீட்டில் தொடர்ந்து வேலை செய்து விட முடியாது... சாப்பாடு சரியில்லை என்று தட்டைத் தூக்கியடிப்பதில் சமையல்காரி தொலைந்து போவாள்... வீடு முழுவதும் தூசியும் தும்புமாக இருக்கிறது என்று சத்தம் போடுவதில் வேலைக்காரி ஓடிப் போவாள்... அலுத்துக் களைத்து வரும் இந்திரா அத்தனை வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கும்...

    2

    அது ஒரு கண்ணுக்குத் தெரியாத தளை... ஆண்டாண்டு காலமாக பெண்களைப் பிணைத்திருப்பது... கல்வியோ, வேலையோ... அவர்களுக்கான விடுதலையைத் தந்து விடாது... வெளியுலகில் அவளுக்கென்று ஓர் அடையாளம் இருந்தாலும் வீட்டில்

    Enjoying the preview?
    Page 1 of 1