Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nilavodu Vaanam
Nilavodu Vaanam
Nilavodu Vaanam
Ebook197 pages2 hours

Nilavodu Vaanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நிலவின்றி வானம் இல்லை என்பதுபோல இந்த கதையின் நாயகி நிலா, வாணவராயனின் மேல் கொண்ட காதலை எவ்வாறு வெளிப்படுத்துகிறாள் என்பதை சுவாரசியத்துடன் படித்து அறிவோம்...

Languageதமிழ்
Release dateAug 5, 2023
ISBN6580133810086
Nilavodu Vaanam

Read more from Muthulakshmi Raghavan

Related to Nilavodu Vaanam

Related ebooks

Reviews for Nilavodu Vaanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nilavodu Vaanam - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நிலவோடு வானம்

    Nilavodu Vaanam

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    வேகமாக வந்து நின்ற பேருந்தில் இருந்து இறங்கினார் அந்தப் பெரியவர்... அவருடன் இன்னும் சிலர் இறங்கினார்கள்... அகன்ற தார் ரோடு பிரதான சாலையாக இருக்க... அதன்

    இரு பக்கமும் பிரிந்து சென்ற தார் ரோடுகளில் அவர்கள் பிரிந்து நடந்தார்கள்... பஸ் ஸ்டாப் என்று அழைக்கப்படும் பெரிய ஆலமரத்தின் அடியில் கீற்றுக் கொட்டகையினால் வேயப்பட்ட சிறிய டீக்கடை ஒன்று இருந்தது... கீற்றுக்களே தேவையில்லை எனும் வகையில் அடர்ந்திருந்த ஆலமரத்தின் கிளைகள் சிறு பொட்டளவு கூட சூரிய வெளிச்சம் படாமல் கரிய நிழலைத் தந்து கொண்டிருந்தது... வெயிலில் இருந்து மரம் காக்கும்... மழையில் இருந்து காக்குமா...? அதற்காகத்தான் சிறிய அளவிலான கீற்றுக் கொட்டகை... அதில் அடுப்பு... டீ, காபிக்கான உபகரணங்கள்... வடை சுட்டு எடுக்க வாணலி...

    டீக்கடையின் முன்னால் இயற்கையின் கொடையாக பரந்து விரிந்திருக்கும் ஆலமர நிழலில் மர பெஞ்சுகள் கிடந்தன... அதில் ஒன்றில் அன்றைய நாளிதழ் இருந்தது... களைப்புடன் தேங்கி நின்ற பெரியவர் அங்கிருந்த பெஞ்சுகளில் ஒன்றில் அமர்ந்து...

    உஸ்ஸ்... அப்பாடா... என்று மூச்சு வாங்கினார்...

    பட்டுவேட்டி, சட்டை... கை விரல்களில் தங்க மோதிரங்கள்... என்று பணக்காரத் தோரணையுடன் இருந்த பெரியவரைப் பார்த்த டீக்கடை ஆறுமுகம் பக்கத்திலிருந்த மனைவி பாண்டியம்மாளின் காதைக் கடித்தான்.

    ஏ புள்ள பாண்டி... பெரியவீடு மலையமான்தானே... பாத்து பலவருசம் ஆச்சு... நெறத்தப் பாத்தியா... செக்கச் செவேர்ன்னு எம்.ஜி.ஆர் போல இருக்கு... சுண்டி விட்டா ரத்தம் வந்துரும் போல இருக்கே...

    நீ கண்ட...?

    காணாமலா சொல்றேன்... இந்தா, நம்ம முன்னாலதான உக்காந்திருக்காரு...? நீயும் காண வேண்டியதுதானே...?

    ஆமாய்யா... கிழவனைக் காணத்தான் காத்திருக்கேன்... எனக்கு நல்லா வந்திரும் வாயில... பெஞ்சாதிகிட்டப் பேசறதைப் போலவா பேசற...? கர்மம், கர்மம்...

    அடச்சீ... அடிச்சேன்னா வாய் வெத்தல பாக்கப் போட்டுக்கும்... கண்டியான்னு நீதானேடி கேட்ட...? இந்தாதானே உக்காந்திருக்கார்ன்னு சொன்னா, அசிங்கமாப் பேசுவியா...? அடிச்சுத் தூக்கி இந்த ஆலமரத்தில தொங்க விட்டிருவேன்... ஜாக்கிரதை...

    இம்சை...

    யாருடி...?

    வேற யாரு...? நீதான்... எம்.ஜி.ஆர் சுண்டி விட்டா ரத்தம் வர்ற நிறத்தில இருந்ததை நீ கண்டியான்னு கேக்க வந்தா நீ இந்தக் கிழவரைக் கண்டுக்கச் சொல்ற... இம்சை பிடிச்சவன்ய்யா நீ...

    மறுபடியும் தப்பாப் பேசின, சொன்னதை செஞ்சிருவேன்... நான் சின்னப் புள்ளயா இருந்தப்ப என் அப்பாரு என்ன தோள் மேல சுமந்துக்கிட்டு எத்தனை கட்சி மீட்டிங்குக்கு கூப்பிட்டுப் போயிருக்காரு... தெரியுமா...? அப்ப எம்.ஜி.ஆரைக் கண்ணால கண்டிருக்கேண்டி...

    ஆமாமாம்... எல்லோரும் வாயால காண்பாங்க... என் அயித்தான் மட்டும் கண்ணால கண்டிருச்சு... யோவ்... சும்மா பழமை பேசாம, உக்காந்திருக்கிற பெரியவர்க்கு என்ன வேணும் ஏதும் வேணும்னு கேளு...

    பிழைப்பைப் பார்ப்பதில் பாண்டியம்மாள் கெட்டிக்காரி... வியாபாரம் நடப்பதற்கு ‘கிழவர்’ பெரியவராகி விட்டார்... அவர் மட்டும் டீ, காபி, வடையென்று எதுவும் வேண்டாமென்று சொல்லி விட்டால் மறுபடியும் கிழவராகி விடுவார்...

    ‘இவ இருக்காளே...’ மனைவியை ஒரு மார்க்கமாக பார்த்த ஆறுமுகம், பெரியவரிடம் பவ்யமாக...

    ஐயா... நல்லா இருக்கீங்களா...? என்று விசாரித்தான்...

    யோவ்... நான் என்னத்தக் கேக்கச் சொன்னேன்...? நீ என்னத்தக் கேக்கற...? இந்த மனுசன் எப்புடி இருந்தா நமக்கென்ன, பழசா இருந்தா நமக்கென்ன...? பொழப்பப் பாருய்யா... பாண்டியம்மாள் எரிமலையாய் முணுமுணுத்தாள்...

    அந்தப் பெரியவர் நிமிர்ந்து பார்த்து சாத்வீகமாக புன்னகைத்தார்... அவரது முகத்தில் தெரிந்த தேஜஸ் ஆறுமுகத்தை ஈர்த்தது...

    சும்மா இரு புள்ள... மனைவியை அதட்டினான்...

    நல்லா இருக்கேன்ப்பா...

    வார்த்தைகளுக்கு வலிக்குமோ என்று மென்மையாக அவர் பேசிய விதம் ஆறுமுகத்தை ஈர்த்தது... அவனது மனைவி பாண்டியம்மாளும் அது போல பேசினால் என்ன என்ற ஆசை சுரந்தது... மனைவியைப் பார்த்தான்... அவள் வடை சுட்டுக் கொண்டிருந்த கரண்டியைத் தூக்கிக் கண்களால் எச்சரித்ததில் அது நிறைவேறாத நிராசையென்று மனதிலிருந்து ரப்பர் போட்டு அழித்தான்...

    நாச்சியார்புரத்துக்கு துரு பஸ் இருக்கேங்க ஐயா... அதில வந்திருக்க வேண்டியதுதானே...? அக்கறையுடன் இவன் கேட்க...

    ஆமாய்யா... அத்தனை பேரும் துரு பஸ்ஸில் போயிட்டா நாம டீக்கடையைக் காலி பண்ணிட்டு கல்லுடைக்கப் போயிரலாம்... என்று பல்லைக் கடித்தாள் பாண்டியம்மாள்...

    அந்த சதிபதியின் உரையாடலைக் கண்டும், காணாதவராய் சாந்தம் தவளும் முகத்துடன் சிரித்தார் அந்தப் பெரியவர்...

    தெரியும்ப்பா... துரு பஸ் காலையில ஒரு தடவையும், ராத்திரி ஒரு தடவையும்தான் வருமாமே... அதுவரைக்கும் காத்திருக்க முடியாதுன்னுதான் மெயின் ரோடில் இறங்கிக்கலாம்ன்னு இந்த பஸ்ஸில் வந்தேன்... என்று விளக்கம் சொன்னார்...

    கேட்டுக்கிட்டியா...? இனிமேலாச்சும் ஏதாச்சும் வேணுமான்னு கேளுய்யா... நச்சரித்தாள் பாண்டியம்மாள்...

    அது காதுகளில் விழாதைப் போல பேச்சை வளர்த்தான் ஆறுமுகம்... சாந்தமான முகங்களைக் காண்பது அரிதாக இருக்கும் காலத்தில் சாந்த சொரூபியமான பெரியவர் ஒருவரிடம் உரையாட அவனுக்கு வெகுவாகப் பிடித்திருந்தது...

    இங்கேயிருந்து நாச்சியார்புரம் ரெண்டு கிலோ மீட்டர் தூரம்ங்க ஐயா... காரில வந்திருக்கலாமே...

    நீ வேணும்ன்னா தோளில சொமந்து கொண்டு போயி இறக்கி விட்டுட்டு வா அயித்தான்... கரிசனமாக யோசனை சொன்னாள் பாண்டியம்மாள்...

    ‘ஆஹா...’ என்ற மகிழ்ச்சி ஆறுமுகத்தின் முகத்தில் தெரிந்ததில் அவன் அதற்கும் தயாராக இருக்கிறான் என்று புரிந்து போக தலையில் அடித்துக் கொண்டாள் பாண்டியம்மாள்...

    லூஸாய்யா நீ...? பதினாறு வயசுக் குமரிகிட்ட உருகி நிக்கிறதைப் போல, பல்லெல்லாம் ஆடிக்கிட்டு இருக்கிற கிழவன்கிட்ட உருகிக்கிட்டு நிக்கிற... என்னய்யா ஆச்சு உனக்கு...?

    கணவனை நம்பினால் வேலைக்கு ஆகாது என்று தானே களத்தில் குதித்த பாண்டியம்மாள்...

    ஐயாவுக்கு என்ன வேணும்...? சூடா வடை போட்டுக்கிட்டு இருக்கேன்... காபி, டீ, எது வேணும்னாலும் கிடைக்கும்... என்ன சாப்பிடறீங்கய்யா...? என்று வினயமாக கேட்டாள்...

    அவளது வியாபாரத் திறமையை மெச்சிய முறுவல் அவரது இதழ்களில் உதித்தது...

    வடையும், காபியும் கொடும்மா... வானவராயன் வருகிற வரைக்கும் எனக்கும் பொழுது போகனுமே... என்றார்...

    அதுவரை கடுகடுப்புடன் விட்டேற்றியாகப் பேசிக் கொண்டிருந்த பாண்டியம்மாள் பரபரத்தாள்...

    ஆரு வருவாகன்னு சொன்னீக...?

    வாணவராயன்னு சொன்னேம்மா...

    ஆத்தி... அய்யாவ உங்களுக்குத் தெரியுமா...?

    அவன் எனக்குப் பேரன்ம்மா... உன் புருசன் சொல்லலையா...?

    பேரனா...? அய்யாவோட தாத்தா செத்துப் போயி ரொம்ப வருசமாச்சுங்களே...

    அபத்தமாக உளறிவிட்டுக் கணவனின் பலத்த கண்டனப் பார்வைக்கு ஆளானாள் பாண்டியம்மாள்...

    கூறுகெட்டவளே...! எந்த நேரம் எதைப் பேசனும்னு உனக்குத் தெரியாதா...? சீறினான் ஆறுமுகம்...

    விடுப்பா... பாவம்... சின்னப்புள்ள... யதார்த்தமாக் கேட்டிருச்சு... பாண்டியம்மாளுக்காக பரிந்து பேசிய பெரியவர்...

    நான் வாணவராயனோட அப்பா தொண்டைமானுக்குப் பெரியப்பா முறையாகனும்மா... வாணவராயனின் தாத்தா மாறவேள் எனக்குச் சித்தப்பா மகன்... என்று சொன்னார்...

    அய்யாவ இப்பத்தான் பார்க்கிறேனா... அதான்... தெரியலை... மரியாதையுடன் பேசினாள் பாண்டியம்மாள்.

    எனக்கு ஒரே மகன்... சயண்டிஸ்ட்... சிங்கப்பூரில இருக்கிறான்... நானும் அவனுடன் சிங்கப்பூரில இருந்தேன்... நம்ம ஊர்ப்பக்கம் கொஞ்ச நாள் இருக்கலாம்ன்னு சென்னைக்கு வந்தேன்... தொண்டைமான் மகளுக்குக் கல்யாணம்ன்னு பத்திரிக்கை வைக்க வந்தான்... பேத்தி கல்யாணத்தப் பாத்த மாதிரியும் இருக்கும்... நாச்சியார் புரத்தில கொஞ்சநாள் விருந்தாடிய மாதிரியும் இருக்கும்ன்னு வந்திருக்கிறேன்... காரிலதான் வந்திருக்கனும்... வந்தவுடனே திரும்பறதா இருந்தா காரை எடுத்துட்டு வரலாம்... கொஞ்சநாள் இருக்கனும் என்கிறதாலே பஸ்ஸில கிளம்பி வந்துட்டேன்... பிரிவுக்கு வாணவராயன் வந்து காத்திருக்கிறதா சொல்லியிருந்தான்... திடிர்ன்னு மாப்பிள்ளை வீட்டில இருந்து ஆள்கள் வந்துட்டதினால லேட்டாகும் தாத்தான்னு போன் பண்ணினான்... அதுக்கென்னப்பா, காத்திருக்கிறேன்னு சொல்லிட்டேன்... பெரியவர் நீளமாகப் பேசினார்...

    அவரது பின்புலம் தெரிந்ததும் வாயடைத்துப் போன பாண்டியம்மாள் அவசரமாக தட்டில் வாழையிலையை வைத்து, அதில் பதனமாக வடைகளையும், சட்னியையும் பரிமாறி அவர் முன்னால் வைத்தாள்...

    பெரியவர் பேசியபடி வடையைப் பிட்டு வாயில் போட்டார்... மெயின் ரோட்டில் பஸ் வந்து நின்றது... அதிலிருந்து இறங்கிய சிலரில் நாகரிகத் தோற்றத்துடன் இருந்த இளம்பெண் ஒருத்தி, ஆலமர நிழலில் அமர்ந்து வடை சாப்பிட்டுக் கொண்டிருந்த பெரியவரிடம் வந்து...

    நாச்சியார்புரத்துக்கு எந்த வழியில் போகனும் தாத்தா...? என்று கேட்டாள்...

    அந்தப் பெண்ணை நிமிர்ந்து பார்த்த பெரியவரை அவளது களங்கமில்லாத பால் முகம் கவர்ந்தது...

    2

    ‘நிலா முகம்...!’

    பெரியவருக்கு அப்படித்தான் தோன்றியது... பால் நிலவைப் போன்றதொரு தேஜஸீடன் அவள் இருந்தாள்... மாசு மருவற்ற களங்கமில்லா பிள்ளை முகம்... வெள்ளை முகம்... மைதாமாவைப் பிணைந்ததைப் போன்றதொரு நிறம்... மஞ்சளும் இல்லாத வெண்மையாகவும் இல்லாத பால் நிறம்... அமைதியையும், புத்திசாலிதத்னத்தையும் ஒருசேரப் பிரதிபலிக்கும் கண்கள்... சிரிப்பில்லாத அதே சமயம் சிடுமூஞ்சியாகவும் இல்லாத சாந்தமான முகபாவம்...

    ‘யார் இந்தப் பெண்...?’

    மனதில் தோன்றிய கேள்வியைக் கேட்டார் பெரியவர்...

    யாரம்மா நீ...? நாச்சியார்புரத்துக்குப் புதிதா...?

    அதைக் கேட்ட பாண்டியம்மாளுக்குச் சிரிப்பு வந்தது... அருகிலிருந்த ஆறுமுகத்தின் காதில் கிசுகிசுத்தாள்...

    யோவ்... இவரே நாச்சியாபுரத்துக்குப் புது விருந்தாளியா வந்திருக்காரு... இவரு இந்தப் பொண்ணப் பாத்து ஊருக்கப் புதுசான்னு கேக்கறாரு...

    ஐயா வந்து அரை மணி நேரமாச்சுல்ல... அதில இவரு சீனியராகிட்டாருல்ல... அந்த ஹோதாவில கேக்கறாரு போல... விடுவியா...

    விடாம உன்னப் பிடிச்சுக்கிட்டா இருக்கேன்...?

    அந்த நொடியில் பாண்டியம்மாள் நொடித்த நொடிப்பு அழகானதாக இருந்ததைப் போல ஆறுமுகத்துக்குத் தோன்றி வைத்தது... இப்படி அவன் மனைவியிடம் மதி மயங்கும் அரிதான அத்தி பூக்கும் குறிஞ்சி மலர் தருணங்கள்,

    Enjoying the preview?
    Page 1 of 1