Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thennam Paalai...
Thennam Paalai...
Thennam Paalai...
Ebook121 pages1 hour

Thennam Paalai...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் மாமனாரின் நினைவு தினத்திற்காக குடும்பத்துடன் சொந்த கிராமத்திற்கு செல்லும் பத்மாவதி அருகில் இருக்கும் கிராமத்தில் தன் ஒன்றுவிட்ட சகோதரன் பண்ணை வீட்டிற்கு குடும்பத்துடன் செல்கிறார். அங்கே ஒருநாள் செலவிடுகிறார்கள் உறவினர்கள் ஒன்றுகூடி பேசி சிரிக்கிறார்கள். அப்போது அவளது மனதில் எழும் கடந்த காலத்தின் நினைவலைகளை கதை.
Languageதமிழ்
Release dateJul 19, 2023
ISBN6580133806423
Thennam Paalai...

Read more from Muthulakshmi Raghavan

Related to Thennam Paalai...

Related ebooks

Reviews for Thennam Paalai...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thennam Paalai... - Muthulakshmi Raghavan

    https://www.pustaka.co.in

    தென்னம்பாளை....

    Thennam Paalai...

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    வற்றாத நீரிருக்கும் அந்தக் கிணற்றிலிருந்து குற்றால அருவிபோல மோட்டார் மூலம் தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. சளசளவென்று அகன்ற சிமிண்ட் வாய்க்காலில் பாய்ந்து சென்ற அந்த நீர்... மற்றுமொரு நீர்வீழ்ச்சியாக மாறி... அகலமாக கட்டப்படிருந்த அந்த செயற்கை குளத்தில் விழுந்தது....

    சுழித்தோடிய அந்த வாய்க்கால் நீர் குளத்திற்குள் கொட்டும் இடத்தில் அரிசிப் பொரிகளை அள்ளி நீருக்குள் கலந்து விட்டான் கோபால்....

    பொரிகள் கலந்து கொட்டிய நீர் குளத்திற்குள் பாய்ந்தபோது.... மீன்கள் கூட்டம்... கூட்டமாக நீருக்கு மேலே எழும்பி... பொரிகளைக் கவ்விச் சென்றன....

    கோபாலனின் பார்வை... குளத்தைச் சுற்றிப் படிந்து திரும்பியது...

    மீன்களை வளர்ப்பதற்காக அகலமாக வெட்டப் பட்டிருந்த அந்த குளத்தின் நான்கு புறங்களிலும் சிமிண்ட் படிக்கட்டுகள் கட்டப்பட்டிருந்தன...

    கரையில்... சாய்வாக அமர... சிமிண்ட் பெஞ்சுகள் அமைக்கப்பட்டு... கரையைச் சுற்றி... டூம் விளக்குகளின் கம்பங்கள் நடப்பட்டு இருந்தன...

    இரவு நேரங்களில் அந்த குளக்கரை ஓர் அழகான பூங்காவைப் போல மிளிரக் கூடும் என்பதை அவை உணர்த்தின...

    வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு... வயலின் வரப்பில் இறங்கி நடக்க ஆரம்பித்தான் கோபாலன்...

    பச்சைப் பசேலென்ற வயல்வெளி....

    எதிரில் வந்த விவசாய வேலையாள்....

    கும்பிடறேனுங்க ஐயா... என்றான்...

    தலையசைத்து விட்டு... மேலே நடந்தான் நெல்லி மரங்களில் கொத்து... கொத்தாக காய்கள் பிடித்திருந்தன...

    'இந்த வாரம் காய் அனுப்ப வேண்டும்....' என்று நினைத்துக் கொண்டான்.

    சப்போட்டா மரங்களின் இடையே தெரிந்த காய்ந்த இலைச் சருகளைப் பார்த்தவனின் புருவங்கள் உயர்ந்தன.

    'இவ்வளவு குப்பையும் கூளமுமா இருந்தா எப்படி...? இதையெல்லாம் கவனிக்காம காத்தான் என்ன பண்றான்...?'

    காத்தானை அழைத்து சத்தம் போட வேண்டும் என்பதை அடுத்த நினைவுக்குறிப்பில் சேர்த்துக் கொண்டான்...

    வாழைத் தோப்பில் ஓரளவு குப்பையில்லாமல் சுத்தமாக இருந்தது... அதையடுத்த மாந்தோப்பில்தான்... சப்போட்டா மரங்களுக்கு இடையே இருந்த இலைச் சருகுகளைப் போல சருகுகளைப் பார்க்க முடிந்தது...

    'இதையும் கவனிக்கச் சொல்லணும்....' அடுத்த நினைவுக் குறிப்பை மனதில் எழுதிக் கொண்டான்...

    பலா மரங்கள் அடர்ந்திருந்த பகுதியைத் தாண்டும் போது சுவாதியின் நினைவு அவனுக்குள் எழுந்தது....

    சுவாதி, வாழ்க்கையை... வாழ்க்கையாய் வாழ அவனுக்கு கற்றுக் கொடுத்தவள்.

    அவனுடைய அனைத்து நிறை, குறைகளோடு.... அவனை அவனுக்காகவே ஏற்றுக் கொண்டு நேசித்தவள்....

    இன்று அவன் உயரத்தில் இருக்கிறான்...

    ஆனால்... அன்று அவன் வாழ்க்கையை தொடங்கிய ஆரம்பகட்டத்தில்... அவன் ஒரு கல்லூரி மாணவனாக - மிகச் சாதாரணமானவானாக இருந்தான்...

    எந்தவித அடையாளங்களும் இல்லாத போது அவனை கரம்பிடித்தவள் சுவாதி... அவனுக்கென்று அடையாளங்கள் ஏற்பட்டு சமூகத்தின் மிக முக்கியமான வி.ஜ.பி.யாக அவன் உயர்ந்தபோது... அவனுடன் கை கோர்த்து... அந்த வாழ்க்கையை எதிர்நோக்கியவள் அவள்...

    நாங்க மேட் ஃபார் ஈச் அதர்....

    ஒருமுறை அவனுடைய ஒன்று விட்ட தங்கையான பத்மாவதியிடம் கர்வத்துடன் இந்த வார்த்தைகளை கோபாலன் கூறியிருக்கிறான்.

    அந்த வார்த்தைகள் காற்றோடு கலந்து எங்கே போய் விட்டன...? என்று யோசிப்பவனைப் போல... பலா மரத்தை அண்ணாந்து பார்த்தான் கோபாலன்...

    சுவாதி எதையும் ரசனையுடன் செய்பவள்... விருந்து சமைத்து பரிமாறும் போது... இலையில்... மாம்பழத் துண்டுகளையும்... வாழைப்பழத்தையும்... பலாச் சுளைகளையும் வைப்பாள்...

    மா... பலா... வாழை... இது முக்கனி...

    அழகான பல் வரிசை தெரிய அவள் சிரித்தபடி இதைக் கூறும்போது... இதை ஏன் நாம் மறந்து போனோம் என்று ஒவ்வொருவரும் நினைத்துக் கொள்வார்கள்...

    கோபாலன் தனது கனவுப் பண்ணையை உருவாக்கிய போது ஏன் இந்த பழத்தோப்புகளை உருவாக்கினான்...?

    சுவாதியைப் பற்றிய நினைவலைகள் அவன் நெஞ்சில் நீங்காமல் அடித்துக் கொண்டிருப்பதாலா...?

    அவன்தான் அவளைப் பிரிந்து விட்டதாக சொல்லிக் கொண்டிருக்கிறானே...?

    'நாங்கள் ஒருவருக்காக ஒருவர் என்று படைக்கப் பட்டவர்கள்' என்று பத்மாவதியிடம் கூறிய அவன் ஏன் தன் காதல் மனைவியை விட்டுப் பிரிந்தான்...?

    கோபாலனுக்குள் ஒரு பெருமூச்சு எழுந்தது....

    அடர்ந்த தென்னந்தோப்பில் இறங்கி நடந்த கோபாலன் தென்னைகளைச் சுற்றி வந்தான்...

    'தென்னை பாளை விரிச்சிருக்கே....'

    அவன் ஆசையாக நட்ட மரம் அது... தினமும் அந்த மரத்தைப் பார்வையிடுவதை ஒரு வேலையாக வைத்திருப்பான் கோபாலன்...

    அந்த மரம் அன்று பாளை விட்டிருந்தது...

    ஏனோ... மனதிற்குள் ஒரு மகிழ்வு பரவுவதை உணர்ந்தான் கோபாலன்....

    'சம்திங் டெல்ஸ் மீப்பா... ஏதோ நல்லது நடக்கப் போகுது....'

    சுவாதி... தலையைச் சரித்து அடிக்கடி இப்படிச் சொல்வாள்...

    அதைப் போலவே அவனுக்கும் அப்போது தோன்றியது.

    'இன்றைக்கு ஏதோ ஒருவகையில் முக்கியமான நாள்...'

    வளைந்து சென்ற பாதையில் கார் ஓடிக் கொண்டிருந்தது... பின் சீட்டில் அமர்ந்திருந்த பத்மாவதி பதட்டமாக

    Enjoying the preview?
    Page 1 of 1