Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaanalvari Kavithai
Kaanalvari Kavithai
Kaanalvari Kavithai
Ebook245 pages2 hours

Kaanalvari Kavithai

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

கண்ணகி அறநெறியில் வாழும் குடும்பத்தில் பிறந்தவள். கட்டுக்கோப்பாக வளர்க்கப்பட்டவள். அவள் கற்புக்கரசியாக இருந்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. மாதவியோ கணிகையர் குலத்தில் பிறந்தவள். அவள் கற்புக்கரசியாக இருந்தது ஆச்சர்யம்மல்லவா.. இந்த கதை மாதவியின் மாண்பை விளக்குவது.

There is no wonder of chastity of Kannaki because she was born in an orthodox family. But Madavi was born in a Kanikaiyar family, it's wonder that Madavi was chastity. The story reveals Madavi's Dignity.

Languageதமிழ்
Release dateJul 19, 2023
ISBN6580133805523
Kaanalvari Kavithai

Read more from Muthulakshmi Raghavan

Related to Kaanalvari Kavithai

Related ebooks

Reviews for Kaanalvari Kavithai

Rating: 3.8333333333333335 out of 5 stars
4/5

6 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaanalvari Kavithai - Muthulakshmi Raghavan

    http://www.pustaka.co.in

    கானல்வரிக் கவிதை

    Kaanalvari Kavithai

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    http://pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    1

    பொழுது விடிந்து கொண்டிருப்பதற்கான அனைத்து அறிகுறிகளும் வெளியே தெரிந்தன... கிராமத்துக்கே உரிய சப்தங்கள் வெளியே கேட்க ஆரம்பித்திருந்தன...

    சேவல் கூவும் ஒலி... கறவை மாடுகளில் பால் கறக்கும் சத்தம்... வாசலில் சாணம் தெளித்துப் பெருக்கும் சத்தம்... என்று அந்தக் கிராமத்தின் விடியலை அந்தச் சப்தங்கள் கூறிக் கொண்டிருந்தன...

    யாரோ தட்டி எழுப்பியதைப் போல... அதி

    காலையிலேயே கண் விழித்து விட்ட மோகனா எழுந்து... ஜன்னல் வழியாகத் தெருவைப் பார்த்தாள்...

    தினமும் இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் அவள் விழித்துக் கொள்கிறாள்... இன்று... நேற்று ஆரம்பித்த பழக்கமல்ல இந்தப் பழக்கம்... சிறு வயதிலிருந்து அவளது ரத்தத்தில் ஊறிய பழக்கம் இந்தப் பழக்கம்...

    சுரேந்திரன் கூடக் கூறுவதுண்டு...

    இவ்வளவு சீக்கிரமாய் எழுந்து என்ன செய்யப் போகிற? படுத்துத் தூங்கு மோகனா... என்பான்...

    இல்லைங்க... எனக்குத் தூக்கம் போயிடுச்சு... மோகனா மறுப்பாள்... அவன் சிரிப்பான்...

    என்ன நீ... விடியற்காலையில் தூக்கம் போடும் சுகமே தனி... இதை அனுபவிக்காமல் யாராவது விழிப்பாங்களா?

    அவள் விழித்தாள்... அதிகாலைத் தூக்கத்தை அனுபவிப்பதை விட... அதிகாலையை ரசித்துப் பார்த்து... உணர்ந்து வரவேற்க... அனுபவிக்க... அவளுக்குப் பிடிக்கும்...

    மோகனா... சுரேந்திரனின் நினைவுடன்... அவ

    னில்லாத கட்டிலைப் பார்த்தாள்...

    அவன் தூங்கிக் கொண்டிருப்பதைப் போன்ற தோற்றம் தெரிய... கண் சிமிட்டி விழித்தாள்... அந்த மாயத் தோற்றம் கலைந்தது...

    'பிரமை...' அவள் மனம் வலித்தது...

    எல்லாமே பிரமைதானா...? அவள் அவனுடன் வாழ்ந்தது... சுமதியைப் பெற்றது... எல்லாமே கனவுதானா...?

    அவள் பெருமூச்சுடன் வெளியே பார்த்தாள்... கருமை கலந்த வெளிச்சம் பரவியிருந்தது...

    'வானத்திலே ஒரு கல்...

    அது என்ன கல்...?'

    முதல்நாள் டிவியில் பார்த்த படத்தில் வந்த புதிர் பாடலின் வரிகள் மனதில் தோன்றின...

    'கருக்கல்...?'

    விடையும் தோன்ற... அந்த கருக்கல் மெல்ல கலைந்து வெளிச்சத்தின் ரேகைகள் பூமியில் படிய ஆரம்பிப்பதை கவனித்தாள் மோகனா...

    அறையை விட்டு வெளியே வந்தாள்... சலவைக்கற்களால் இழைக்கப்பட்ட அந்த மாளிகையின் அழகை ரசிக்கும் மனநிலையில் அவளில்லை...

    'வசந்த மாளிகை...!'

    இப்படித்தான் சுரேந்திரன் கூறினான்... அவளுக்காக அந்த வீட்டை இழைத்து... இழைத்துக் கட்டினான்...

    அது அற்புதமான மாளிகைதான்... அந்த சுற்று

    வட்டாரத்திலேயே... ஏன்... அந்த மாவட்டத்திலேயே... மோகனாவின் மாளிகைக்கு இணையாக எந்த வீடும் இல்லை...

    ஆனாலும்... அதனால் மோகனாவிற்கு பெருமையில்லை...

    'எப்படி வரும்...?' மோகனாவின் இதழ்களில் துயரப் புன்முறுவல் உதித்தது...

    'இதைக் கட்டிக் கொடுத்தவன்... ஊரறிய அவளுக்குத் தாலியைக் கட்டியிருந்தால்... அப்போது இது பெருமையாக இருந்திருக்கும்... இப்போது...?' அவள் கண்கள் கலங்கின

    சுரேந்திர பூபதியின் ஆசைப்படியே அந்த சுற்று வட்டாரத்திலேயே... அவ்வளவு அழகான பெரிய வீடு யாரிடமும் இல்லைதான்...

    ஏன்... அந்த ஊர் பண்ணையாரின் வீடுகூட... மோகனாவின் வீட்டின் அழகிலும்... விஸ்தீரத்திலும் பாதியளவு கூட வராதுதான்... அந்த வகையில் ஊர் பண்ணையார் புண்ணியகோடிக்கு மோகனாவின் மீது ஓர்வித பகையுணர்வு உண்டுதான்...

    அவரும் பலமுறை... பலவிதமாக... மோகனாவிடம் ஆள்களை அனுப்பி... அந்த வீட்டை விலை பேசி வாங்கிக் கொள்ள முயற்சி செய்தார்... ஆனால்... என்னதான் அவர்... பகீரதப் பிரயத்தனம் செய்தாலும்... மோகனா அசைந்து கொடுக்க மாட்டேன் என்று மறுத்து விட்டாள்...

    இல்லைங்க ஐயா... குடியிருக்கும் வீட்டை விற்று விடுகிற அளவுக்கு எனக்குப் பணக்கஷ்டம் இல்லைங்க...

    வந்தவர்கள் இதைக் கேட்டதும் ஒரு நமட்டுச் சிரிப்பைச் சிரிப்பார்கள்... அது என்னவோ... பண்ணையார் வீட்டை விலைபேச தூதனுப்பும் ஆள்கள்தான்

    வேறு... வேறாக இருப்பார்கள்... ஆனால் அவர்கள் அத்தனை பேர்களின் அலையும் பார்வையும்... இடக்கான குத்தல் பேச்சும்... நமட்டுச் சிரிப்பும் மாறவே மாறாது...

    அது சரி... உங்ளுக்கு பணக் கஷ்டம் வரும்ன்னு எந்த மாங்காய் மடையனாவது சொல்லுவானா...? நீங்க யாரு...?

    அந்தக் கேள்வியில்... 'தான் யார்?' என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு... மோகனா விக்கி விறைத்து மூலையில் முடங்கிக் கொள்ள வேண்டும் என்ற பேராசை வெளிப்படும்...

    ஆனால் மோகனா அவர்கள் எதிர்பார்த்ததைச் செய்ய மாட்டாள்... ஓர்விதக் கம்பீரத்துடன் நிமிர்ந்து அவர்களை நேர் கொண்ட பார்வையாய் பார்ப்பாள்...

    நல்லதுங்கய்யா... உங்களுக்கே நான் யாருன்னு நல்லாத் தெரிஞ்சிருக்கிறது... அதனால் உங்களுக்கு விளக்கம் சொல்கிற வேலை எனக்கு மிச்சம்... என்று அவர்களை விட இடக்காக பதில் சொல்வாள்...

    அந்தப் பதிலில்...

    'ஆமாம்... அப்படித்தான்... இப்ப இடத்தைக் காலி பண்ணுகிறாயா...?' என்ற தொனி இருக்கும்...

    வந்தவர்களுக்கு அது நன்றாகப் புரியும்... முகத்தில் ஈயாடாமல் போனாலும்... வாயை மூடிக்கொண்டு... அவ்வளவு சீக்கிரத்தில் இடத்தைக் காலி பண்ண மாட்டார்கள்...

    அம்மா... என்னதான் உயர... உயரப் பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகிடாது...

    இது எனக்கும் தெரியுமே... ஆனால் இந்த பழமொழியை... ஏன்... என்னிடம் வந்து சொல்கிறீங்கன்னுதான் எனக்குத் தெரியலை...

    உங்களுக்கா தெரியாது...? உங்களுக்குத் தெரியாத விசயம் கூட இந்த உலகத்தில் இருக்குதுங்களா...?

    மீண்டும் விசமப் பேச்சு... அவளை நோக்கித் தாவி வரும்... மோகனா அசைந்து கொடுக்க மாட்டாள்...

    இதைச் சொல்லத்தான் இவ்வளவு பெரிய மனுசங்க என் வீட்டுப் படியை மிதித்தீங்களா...?

    அவளது வார்த்தைகள் கூர்மையாக வெளிப்படும்.....

    "வரக்கூடாதுதான்... உங்களை மாதிரிப்பட்ட மனுசங்களை தொந்தரவு பண்ணக் கூடாதுதான்... ஊரில் பெரிய மனுசங்களா இருந்துக்கிட்டு... உங்க

    வீட்டு வாசல் படியை மிதிக்கக் கூடாதுதான்... இதை நீங்க சொல்லி... நாங்க தெரிஞ்சிக்கனும்கிறது இல்லை... எங்களுக்கே அது நல்லாத் தெரியும்..."

    அவளது பதிலை விடக் கூர்மையான வார்த்தை ஈட்டிகள் அவளை நோக்கித் தாவி வரும்...

    மோகனா அஞ்ச மாட்டாள்... அந்த வார்த்தை ஈட்டிகளால் காயப்படமாட்டாள்...

    ஏனென்றால்... இந்த வார்த்தை ஈட்டிகளை அவளை நோக்கி வீசுகின்ற பெரிய மனிதர்களின் 'பொய் முக' முகமூடிக்குப் பின்னாளிருக்கும் உண்மை முகம் அவளுக்குத் தெரியும்... அது விகாரமானது...

    ஐயா... உங்ககிட்ட ஒருநாள் பேசனும்னு ஆசைப்படுறாரு...

    இந்தப் பெரிய மனிதர்கள் பண்ணையாருக்கு தூது வந்தால்... இவர்களின் கைத்தடிகள்... இந்தப் பெரிய மனிதர்களின் விகார ஆசைக்கு தூது வருவார்கள்...

    மோகனாவிற்கா அதன் அர்த்தம் தெரியாது...?

    'பேசிப் பார்ப்பது...'

    எவ்வளவு அழகான விசயம்...? பேசுதல் என்பது பகிர்ந்து கொள்வது எனப்படுவது...

    ஒரே உணர்வின் அலையில் பயணிக்கும் இருவர் பேசிக் கொள்ளும் போது... அங்கே நேரம் கணக்கெடுக்கப்படுவதில்லை...

    அவர்கள் தோழிகளாக இருக்கலாம்... தோழர்களாக இருக்கலாம்... ஏன்... தோழனும்... தோழியுமாகக் கூட இருக்கலாம்...

    அந்தப் 'பேசுதல்...' அற்புதமான ஓர் நிகழ்வு... இந்தப் 'பேசுதல்...'?

    மோகனாவிற்கு குமட்டிக் கொண்டு வரும்... சுரேந்திர பூபதியின் மீதான காதல் தன்னை எந்த அளவிற்கு தாழ்த்தி விட்டிருக்கிறது என்ற துக்கம் அவளுக்குள் பொங்கும்...

    ஆனால் அவள் கண்ணீர் விட மாட்டாள்... அவளைப் பார்த்து இப்படியொரு கேள்வியைக்

    கேட்டு விட்டார்களே என்று இடிந்து விட மாட்டாள்...

    ஒரு மகாராணியின் கம்பீரத்தோடு... தூது வந்த ஆளை முறைத்துப் பார்ப்பாள்... அந்தப் பார்வையில் அவர்கள் வெலவெலத்துப் போய் விடுவார்கள்...

    போ... போய் உன் ஐயாவிடம் சொல்லு... மோகனா கண்ட கழிசடைகளிடம் பேசிப் பழகும் ஆளில்லைன்னு சொல்லு... ஒன்றையே நினைத்து... ஒன்றிலேயே வாழும் உத்தமின்னு போய் சொல்லு... ஒரு வேளை உன் ஐயாவைக் கட்டிக்கிட்ட மகராசி... அடுத்தவர்களிடம் பேசிப் பழக ஆசைப்படலாம்... ஜமீன்தார் சுரேந்திர பூபதியுடன் வாழ்ந்த மோகனா... ஒருநாளும் அப்படிப்பட்ட ஆசையை நினைத்துக் கூடப் பார்க்க மாட்டாள்ன்னு போய் சொல்லு...

    இதைக் கேட்ட அல்லக்கைகளின் முகத்தில் ஓர் மரியாதை வந்து குடி கொள்ளும்...

    "என்ன மாதிரியான பொம்பளைய்யா அது...? என்ன ஒரு தேஜஸ்... என்ன ஒரு கம்பீரம்... கேட்டுச்சே ஒரு கேள்வி...? இந்த ஆள்களுக்கெல்லாம் இப்படித்

    தான்ய்யா கேள்வி கேட்டகனும்..."

    அவர்கள் மெச்சிக் கொள்வார்கள்... மறக்காமல் அந்தக் கேள்வியைப் போய்... சம்பந்தப்பட்ட பெரிய மனிதர்களிடம் சொல்வார்கள்...

    அப்போது அவர்கள் முகம் இருளுமே... அந்த இருட்டைப் பார்ப்பதில் அவர்களுக்கு அப்படியொரு சந்தோசம் பொங்கும்...

    2

    புண்ணிய கோடிக்காக தூது வருபவர்களின் மனதில் மோகனாவை அணுகமுடியாத ஆற்றாமை இருக்கும் அவளை அடைய முடியாத புகைச்சல் இருக்கும்...

    அதனாலேயே புண்ணிய கோடிக்காக பரிந்து பேசுவதைப்போல... மோகனாவைப் பற்றிப் பேசி... தங்களின் மனதை ஆற்றிக் கொள்வார்கள்...

    அம்மா... ஆயிரம்தான் இருந்தாலும் அவர் ஊர் பண்ணையார்...

    நான் இல்லைன்னு சொல்லலையே...

    மரியாதைப்பட்ட மனிதர்...

    அவர்களின் பேச்சில்... 'நீ அப்படியில்லை...' என்ற எகத்தாளம் ஒலிக்கும்...

    அவருக்கு மட்டும்தான் மரியாதையிருக்கா...? ஏன் உங்களுக்கு அது இல்லையா...?

    சாட்டையாய் மோகனாவின் வார்த்தைகள் சுழன்று எகத்தாளம் பேசினவர்களைத் தாக்கும்...

    இதற்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் அவர்கள் திக்கு முக்காடிப் போவார்கள்... உடனடியாக பேச்சின் போக்கை மாற்றி... அவ

    ளுக்கு அறிவுரை சொல்வதைப் போல தங்களின் அந்தரங்க ஆசைகளை வெளிப்படுத்த முயல்வார்கள்...

    அம்மா... உங்க நல்லதிற்காகத்தான் சொல்கிறேன்...

    என் நல்லதிற்கு நீங்க சொல்கிறீங்களா...? ஓ...? அப்படி என்னதான் எனக்கு நல்லது சொல்ல வருகிறீங்க...?

    பேசுகிறவரைவிட அதிகமான எகத்தாளத்துடன் மோகனா கேட்பாள்...

    அடுத்த வார்த்தையைப் பேச முடியாமல் எதிராளி திணறிப் போவார்... ஆனாலும்... பேச்சை நிறுத்தமாட்டார்...

    ஊரில் இருக்கிற பெரிய மனிதர்களை பகைத்துக் கொள்கிறது... உங்களைப் போல ஆள்களுக்கு நல்லதில்லைம்மா...

    'என்னை நீ பகைத்துக் கொள்ளாதே...' என்ற எச்சரிக்கையும்... 'உன்னைப் போல் ஒருத்தி... என் ஆசைக்கு இணங்க மறுக்கலாமா...?' என்ற கேள்வியும் கலந்து அவர் பேச்சைத் தொடரும் போதே...

    'போதும்... நிறுத்து...' என்ற பாணியில் வலதுகையை உயர்த்தி... முகத்தில் ஒரு கண்டிப்புடன் பேசுவாள் மோகனா...

    உங்களைவிட பல மடங்கு... பணத்திலும்... குணத்திலும்... பரம்பரையிலும்... பெரிய மனிதராய் இருப்பவருடன் குடும்பம் நடத்தி... குழந்தையும் பெற்றுக் கொண்டவள் நான்... உங்களின் பகை வருகிறதே என்ற கவலை எனக்கு இல்லை...

    'நான் யாரென்று நினைத்தாய்...?' அவளின் மறைமுகச் சீற்றம் புரிந்ததும் அவர்கள் அடங்கிப் போய் விடுவார்கள்...

    அது எங்களுக்குத் தெரியாதா...?

    ஊருக்கே தெரிந்திருக்கும் போது உங்களுக்குத் தெரியாமல் இருக்குமா...?

    இருந்தாலும் மோகனாம்மா...

    "ஐயா... இன்றைக்கு ஜமீன்தார் இங்கே அடிக்கடி வரமுடியாமல்... வெளிநாடுகளில் சுற்றிக் கொண்டிருக்கலாம்... ஆனால்... என்றைக்குமே... நான் அவருக்குச் சொந்தமானவள்... எனக்கு ஒன்றென்றால்... அவர் ஓடிவந்து நிற்பார்... எனக்கொரு கஷ்டமென்றால்... இந்த ஊரையே அழித்து விடுவார்...

    Enjoying the preview?
    Page 1 of 1