Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enni Irunthathu Edera... Part - 3
Enni Irunthathu Edera... Part - 3
Enni Irunthathu Edera... Part - 3
Ebook388 pages3 hours

Enni Irunthathu Edera... Part - 3

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் மட்டும்தான்... அந்த முடிவோடுதான் இரண்டு வரிக் கதைக் கருவை அமைத்தேன்... என் மனதில் அதை எடுத்தேன்... எழுத ஆரம்பித்திருக்கிறேன்... எட்டு பாக நாவலாக அது விரிந்து ஓடும்...

இந்தக் கதையில் காதல் மட்டும்தான்... காதலைத் தவிர வேறு இல்லை... ஆங்காங்கே ஒருங்கிணையும் சம்பவங்களும் பாத்திரங்களும் கதையின் போக்கில் செண்டிமெண்ட்களை அள்ளித் தெளித்தாலும் ரொமான்ஸ் மட்டுமே முதன்மையாக நிற்கும்.

இப்போதைய எட்டு பாக நாவல் காதலுடன் முகப்புக் கவிதைகளின்றி வெளி வரும்... கவிதைகள் கூட காதலின் ஓட்டத்திற்கு இடையூறு செய்து விடக் கூடாது என்ற எண்ணமே காரணம்... முதல் முதலாக எனது பாக நாவல்களில் முகப்புக் கவிதை வரிகளில்லாமல் வருகின்ற நாவல் இந்த 'எண்ணியிருந்தது ஈடேற...' நாவல்...

ஏன் இப்படி என்று கேட்டால் அது அப்படித்தான் என்பதே என் பதிலாக இருக்கும்... ஒன்பது பாக நாவலை உணர்ச்சி மயமான குடும்ப செண்டிமெண்டுடன் சொல்ல இருக்கிறேன்... பத்து பாக நாவலைப் பற்றியும் அதற்கடுத்து கொடுக்கப் போகும் இருபது பாக நாவலைப் பற்றியும் அந்தத் தருணத்தில்தான் யோசிக்க வேண்டும்...

ஆதலினால்... காதல் சொல்லும் எட்டு பாக கதையை என் வாசக, வாசகியர்க்கு கொடுத்து விட எண்ணம் கொண்டதில் பிறந்ததுதான் இந்த முழுநீளக் காதல் கதை...!

எண்ணியிருப்பதை ஈடேற்றும் கதைக்களமாக நம் இந்தியத் திருநாட்டின் கேரள மண்ணைத் தேர்ந்தெடுத் திருக்கிறேன்... பச்சைப் பசோலென்ற தேயிலைப் பாத்திக்களின் நடுவே இயற்கையுடன் கலந்து வாழும் கேரளத்து மக்களிடையே ஒளிந்து கொள்ள ஓடிக் கொண்டிருக்கிறாள் நம் கதையின் நாயகி நந்தினி...!

சேர நாட்டின் ரவிவர்மனின் குலத் தோன்றல்களில் ஒரு தோன்றலில் வம்சா வழியில் வந்தவனாய்.... ரவிவர்மனின் அனைத்து குணாதிசியங்களையும் தன்னிடத்தில் கொண்டவனாய்... கண்டிப்பும் கறாருமான ரவிச்சந்திரன் நம் கதையின் நாயகனாய் நந்தினிக்கு அடைக்கலம் கொடுத்து அழைத்துச் சென்று கொண்டிருக்கிறான்... கோழிக்கோடில் இறங்கிய பின்பு அடுத்து அவர்கள் செல்லப் போகும் இடங்களையும், நடக்கப்போகும் சம்பவங்களையும் மற்ற பாகங்கள் விவரிக்கும்...

Languageதமிழ்
Release dateJul 19, 2023
ISBN6580133805738
Enni Irunthathu Edera... Part - 3

Read more from Muthulakshmi Raghavan

Related to Enni Irunthathu Edera... Part - 3

Related ebooks

Reviews for Enni Irunthathu Edera... Part - 3

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enni Irunthathu Edera... Part - 3 - Muthulakshmi Raghavan

    http://www.pustaka.co.in

    எண்ணியிருந்தது ஈடேற....

    பாகம் - 3

    Enni Irunthathu Edera... Part - 3

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 67

    அத்தியாயம் 68

    அத்தியாயம் 69

    அத்தியாயம் 70

    அத்தியாயம் 71

    அத்தியாயம் 72

    அத்தியாயம் 73

    அத்தியாயம் 74

    அத்தியாயம் 75

    அத்தியாயம் 76

    அத்தியாயம் 77

    அத்தியாயம் 78

    அத்தியாயம் 79

    அத்தியாயம் 80

    அத்தியாயம் 81

    அத்தியாயம் 82

    அத்தியாயம் 83

    அத்தியாயம் 84

    அத்தியாயம் 85

    அத்தியாயம் 86

    அத்தியாயம் 87

    அத்தியாயம் 88

    அத்தியாயம் 89

    அத்தியாயம் 90

    அத்தியாயம் 91

    அத்தியாயம் 92

    அத்தியாயம் 93

    அத்தியாயம் 94

    அத்தியாயம் 95

    அத்தியாயம் 96

    அத்தியாயம் 97

    அத்தியாயம் 98

    ***

    ஆசிரியர் கடிதம்....

    என் பிரியத்துக்குரிய வாசக.... வாசகிகளே....!

    எண்ட இந்திய தேசத்தின் கேரள மாநிலத்தின் மலையாள மக்கள் எனிக்கு மாப்புத் தரனும் மக்கா... ஈ கதைப் பிரகாரம் ஞான் வயநாட்டுக்குப் போயாகனும்... அங்ஙன வாழும் மக்கள் பேசும் மொழியைச் சற்றேனும் பேசியாகனும்... எண்ட வீட்டுக்குப் பக்கத்து வீட்டில ஓர் மலையாளக் குடும்பம் உண்டு... ஆ இல்லத்தில எனிக்கு வல்லிய நேசம் கொண்ட பெண் குட்டியின் ஸ்நேகிதமும் உண்டு... ஆ மனுஷியிடம் கேட்டு அறிஞ்ஞ மலையாளத்த இங்கன ஞான் பறயறேன்... எனிக்கு வேற வழி ஏதும் இல்லா... உடைஞ்ச மலையாளத்த எண்ட இஷ்டப்படி ஞான் பிரயோகிக்கிறதுக்கு மலையாள மக்கள் என்ன ஷமிக்கனும் மக்கா... மலையாளத்தைத் தவிர்த்து தமிழ் மொழியில அவர்கள் பேசுவதைப் போல எழுதலாம்தான்... பட்ஷே... சிறிதளவாவது மலையாளத்தில் எண்ட கதையின் கதாபாத்திரங்கள் சம்சாரிக்கனும்னு  எனிக்கு ஆக்ரஹாம் (ஆசை) மக்கா...

    'உழவன் மகள்...' கதையில் கொங்கு பாசையைக் கொண்டு வந்தேன்... அது எளிதாக இருந்தது... மதுரை பாஷையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்... எனது ஆடுகளம் அது... விட்டு விளையாடி விடுவேன்... மலையாள பாஷை அப்படியல்ல...

    தமிழ்மொழியின் பல வார்த்தைகள் மலையாள மொழியில் சங்கமித்திருக்கின்றன என்றாலும் தெளிவான மலையாள பாஷையை நான் கையாள வேண்டுமென்றால் மாதக்கணக்கில் மலையாளம் படித்தாக வேண்டும்... தங்கு தடையற்ற ஓட்டத்திற்காக தலைப்புக் கவிதைகளையே தவிர்த்திருக்கும் நான் எனக்கான காலத்தை செலவிட முடியாத நிலையில் இருக்கிறேன்...

    அதே தருணத்தில் மலையாளக் கலப்பில்லாத வார்த்தையாடல்களை வைக்கவும் எனக்கு விருப்பமில்லை... எனது கதையின் மலையாள வாழ் மக்கள் மலையாளத்தில் சிறிதளவாவது உரையாட வேண்டும் என்ற பிரேமம் எனக்குள் மிகுந்து விட்டதால் நான் உடைந்த மலையாளத்தை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்... அதிக வார்த்தையாடல்கள் வராதுதான்... ஆங்காங்கே வரும் வார்த்தையாடல்கள்தான்... அவற்றைத் தெள்ளத் தெளிவான மலையாளத்தில் சமர்ப்பிக்க முடியாமைக்கு கதையிலேயே காரணத்தைக் கொண்டு வந்து விட்டாலும்... தங்களின் மொழியை நேசிக்கும் மலையாள மக்கள் என்மீது கோபமும், வருத்தமும் கொண்டு விடலாகாது என்ற கோரிக்கையுடன் இந்த ஆசிரியர் கடிதத்தில் அவர்களிடம் மாப்பு வேண்டுகிறேன்...

    எனிக்கு மாப்புத் தரோனும் மலையாள மக்களே... ஈ முத்துலட்சுமி ராகவன் ஷமிக்கனும்... எனிக்கு மலையாள மொழி மேல வளர இஷ்டமானு... நிங்கள் மலையாள மொழியில் ஞான் சம்சாரிக்க நிங்கட அனுமதி கிட்டுமல்லோ...?

    அப்புறம்... இந்த ஆசிரியர் கடிதத்தில் நான் டூ வீலரில் பயணித்த சில சம்பவங்களைப் பகிரப் போகிறேன்ம்பா...

    முதன்முதலா என் சித்தப்பா டூ வீலர் வாங்கினதும் என்னைத்தான் பின்னால் உட்காரச் சொல்லி 'ஊர்' வலம் வந்தார்...

    'ஊர்' வலம்ன்னுதான் சொல்லனும்... 'நகர்' வலம்ன்னு சொல்ல முடியாது... அது மதுரை மாவட்டத்தில் உள்ள டி.கல்லுப்பட்டி... என் சித்தப்பா அங்கேயிருக்கும் காந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார்... என் சிறு வயதிலேயே நான் சித்தப்பா வீட்டிற்குப் படிப்பின் பொருட்டு சென்று விட்டேன்... ஏழாம் வகுப்பிலிருந்து பிளஸ் டூ வரை காந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளியில்தான் படித்தேன்... பள்ளியென்றால் அதுதான் பள்ளி...! எனது பள்ளிக்கூடத்தைப் பற்றி பெருமை இன்றளவும் எனக்கு உண்டு...

    கல்லுப்பட்டியின் அருகிலிருக்கும் பேரையூருக்கு என்னை டூ வீலரின் பின்னே அமரவைத்து பயணித்தார் சித்தப்பா... மோட்டார் சைக்கிளில் போகும் சந்தோசம் எனக்கு... தேவன்குறிச்சி மலைக்கு அருகில் போன போது குண்டும் குழியுமாக இருந்த தார் ரோடு மோட்டார் சைக்கிளை உலுக்கி விட்டதில் நான் நழுவி தார் ரோட்டில் விழுந்து விட்டேன்... விழுந்தவள் கால் நீட்டி அப்படியே ரோட்டில் உட்கார்ந்து விட... பேசிக் கொண்டே போன சித்தப்பா பின் பக்கமிருந்து பதில் வராததில் திரும்பிப் பார்த்து விட்டு படு கேசுவலாக சிரித்தபடி...

    ஹா... ஹா... என்னப்பா... விழுந்துட்டியா... வா... வா... என்றாரே பார்க்கனும்...

    விழுந்து விட்டோமே என்று உதடு பிதுங்க அழுகைக்குத் தயாராக இருந்த எனக்கு அனைத்தும் மறந்து விட்டது... எதுவுமே நடக்காததைப் போன்ற சித்தப்பாவின் இயல்பில், எதுவுமே நடக்காததைப் போல எழுந்து பாவாடையைத் தட்டி விட்டு மோட்டார் சைக்கிளுக்குப் போய் விட்டேன்...

    அதுதான் என் சித்தப்பா...! படு கேசுவல் பெர்சனாலிட்டி... அவரைப் போல யாருண்டு...?

    அடுத்ததாக அப்பா வாங்கிய மோட்டார் சைக்கிளில் அவருக்குப் பின்னால் அமர்ந்து பயணித்த கதையிருக்கே... அப்பப்பா...! பெண் பிள்ளைகளை பாதுகாப்பான வேகத்தில் அழைத்துச் செல்ல வேண்டும்தான்... அதற்காக நடந்து போகிற மக்களெல்லாம் ஓவர் டேக் பண்ணி நம்மை ஒரு மார்க்கமாக பார்க்கிற அளவுக்கு மிதமான வேகத்தில் (?) செல்லக் கூடாது... இந்த லட்சணத்தில் வண்டி செல்லுமானால் மோட்டார் பைக் சவாரியே எனக்கு வேண்டாம் என்று தீர்மானமாக நான் சொல்லிவிட்ட பின்பு வேகம் சற்றுக் கூடியது என்றாலும் அப்பாவின் மோட்டார் பைக் சவாரி கட்டை வண்டி சவாரிதான்... எந்த வகையிலும் மேம்பட்டதல்ல...

    அப்பேற்பட்ட கட்டைவண்டி சவாரியில் நான் அலுவலகத்துக்குப் போக நேர்ந்த ஓர் மழைநாளில், வழியில் இருந்த பள்ளத்தில் தண்ணீர் நிரம்பியிருந்ததால் நான் மோட்டார் பைக்கை விட்டு இறங்க நேர்ந்தது... தண்ணீர் நிரம்பியிருந்த பள்ளத்தில் அதைக் கடக்கக் கற்கள் வரிசை

    கட்டிப் போடப்பட்டிருந்தன... அதில் கால் பதித்து பக்கவாட்டில் மோட்டார் சைக்கிளைப் பிடித்தபடி அப்பா முன்னேறிச் செல்ல... அவரைப் போலவே கற்களில் கால் பதித்து சர்வ ஜாக்கிரதையாக நான் பின்னேறிச் சென்றேன்...

    பேசிக் கொண்டே போன அப்பா தண்ணீரைக் கடந்ததும் மோட்டார் சைக்கிளில் ஆரோகணித்து நான் தொற்றிக் கொண்டேனா என்று கவனிக்காமல் போயே போய் விட்டார்...

    நான் அப்படியே நின்று விட்டேன்... தபால்துறையில் வேலை பார்த்தேன்... அங்கே கால அவகாசத்தில் கண்டிப்பாக இருப்பார்கள்... சற்றுத் தாமதமானாலும் கடுஞ்சொற்கள் வந்து விடும்... இன்று தொலைந்தேன் என்று நினைக்கும் போதே அழுகையழுகையாய் வந்தது... அப்பாவிற்கு எதிரே வந்த வண்டிகளைப் பார்த்துக் கையாட்டி அவரைக் கூப்பிடச் சொன்னேன்... ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று வண்டிகள் அவருக்கு எதிரே வந்தன... எனக்காக அவர்கள் அப்பாவிடம் கைகாட்டி நான் கூப்பிட்டுக் கொண்டிருப்பதை அறிவுறுத்தி விட்டுத்தான் வந்தார்கள்... பலனில்லை... அப்பாவின் மோட்டார் சைக்கிள் திருப்பத்தில் திரும்பி மறைந்து விட்டது...

    மூன்றாவதாக வண்டியில் வந்தவன் லிப்ட் கொடுக்கவா என்று கேட்டான்... போடா என்ற ரீதியில் முறைத்து விட்டு நடையைக் கட்டினேன்... அப்பாவின் மீது வந்த கோபத்திற்கு அளவே இல்லை...

    அன்றைக்கென்று ஒரு ஆட்டோகூடத் தென்படவில்லை... திடிரென்று பார்த்தால் திருப்பத்தில் அப்பாவின் மோட்டார் சைக்கிள் தென்படுகிறது... புன்னகை மன்னனாக அருகில் வந்து வண்டியை நிறுத்தியவர்...

    என்னடா... நீ வண்டியிலே ஏறவேயில்லையா...? என்கிறார்...

    எனக்கு வந்த கோபத்தில் கட்டையைத் தூக்கி மண்டையிலே போடலாம் போல இருந்தது... ஆயிரம்தான் இருந்தாலும் அவர் என் அப்பா... என்பதால் அழுகையும் கண்ணீருமாக...

    எங்கே...? நான் ஏறுகிறதுக்குள்ள நீங்க வண்டியைக் கிளப்பிட்டுப் போயிட்டிங்களே... உங்களுக்கு எதிரே வந்தவங்க கிட்ட கையை ஆட்டி வண்டியை நிறுத்தச் சொன்னேன்... அவங்களும் உங்ககிட்டச் சொன்னாங்க... நீங்கதான் நிறுத்தலை... என்று சீறினேன்...

    அதான் அவங்க கையை ஆட்டினாங்களா...? எதுக்குக் கையை ஆட்டறாங்கன்னு தெரியலைடா... உன்கிட்டக் கேட்டேனா... நீயும் பதில் சொல்லலை...

    எப்படிப் பதில் சொல்வேன்...? நான் உங்க பின்னாடியா உட்கார்ந்திருந்தேன்...? அம்போன்னு இங்கே நின்னுக்கிட்டிருக்கேன்...

    அதைத்தாண்டா நானும் நினைச்சேன்... என்னடா... பின்னாடியிருந்து சத்தமே வரலைன்னு திரும்பிப் பார்த்தேனா... நீயில்லை... உடனே வண்டியைத் திருப்பிக்கிட்டு வந்துட்டேன்...

    'எப்புடி...?' என்ற பெருமை பார்வை பார்த்த அப்பா மறதி மன்னர்...! திருமண மண்டபங்களில் மற்றவர்கள் செருப்புக்களைத் தொலைத்தால் இவர் ஒற்றைச் செருப்பை மட்டும் மறந்து தொலைத்து விட்டு ஒருகால் செருப்போடு வீடு வந்து சேருவார்... என்னைப் போலவே அம்மாவையும் வண்டியில ஏறிட்டாங்களான்னு பார்க்காம விட்டு விட்டு வந்து திரும்பப் போய் கூப்பிட்டுக் கொண்டு வரும் திறமைசாலி... நானாவது அழுகையும் கண்ணீரோடும் விட்டு வைப்பேன்...? அம்மா...?

    இதெல்லாம் சரி... நீங்கள் டூவிலர் ஓட்டப் பழகிக் கொள்ள வேண்டியதுதானே என்கிறீர்களா...? நீங்க வேற... நான் ரோட்டை கிராஸ் பண்ணனும்னா ஒரு ஆட்டுக்குட்டி கூட குறுக்கே வந்து விடக் கூடாது... அவ்வளவு பயம்... கார் வாங்கின பின்னாலே டூ வீலர் பின்னாடி உட்கார்ந்து பயணிக்கவே பயப் படுவேன்... இந்த லட்சணத்தில் நானாவது டூவிலர் ஓட்டுகிறதாவது... டூ வீலரே அப்படியெனும்போது காரெல்லாம் நோ சான்ஸ்...

    முத்துலட்சுமி சுத்த வேஸ்டுங்க... நான் பெரிய 'ஜீஜிபி'ன்னு யாராவது சொன்னால் நம்பவே நம்பாதீங்க... சரியா...?

    மற்றவை அடுத்த ஆசிரியர் கடிதத்தில்... பை...

    - நட்புடன் -

    முத்துலட்சுமி ராகவன்

    ***

    67

    ரவிச்சந்திரன்...!

    கேரளத்தின் ராஜ பாரம்பரிய கோடிஸ்வரக் குடும்பத்தில் பிறந்த ஆணழகன்...! அரண்மனையில் வளர்ந்தவன்... கணக்கில் அடங்காத அசையாச் சொத்துக்களுக்கு உடமையாளன்.... உலகில் உள்ள அனைத்து நகரங்களிலும் அவனுடைய குடும்பத்திற்கென்று ஒரு மாளிகையைக் கொண்டவன்...

    அந்த கங்கு கரையில்லாத சொத்துக்களைக் காணாமல் போக வைத்து விடும் ஆற்றல் கொண்ட யோகானந்தன் அருள்மொழிவர்மனுக்கும், ரவிவர்மனுக்கும் அவந்திகா மீது உள்ள பாசத்தை முன்னிறுத்தி மாமனார் குடும்பத்தின் சொத்துக்களை சூறையாட முனைந்தபோது அதைத் தடுத்து நிறுத்தும் கவசமாக ரவிச்சந்திரன் செயல்பட்டான்... அதில் யோகானந்தன் ஆத்திரம் கொண்டார்...

    அருள்மொழிவர்மனின் அருமைப் புதல்வியை அவள் திருமணம் செய்து கொண்டபோது அந்த அரண்மனையின் மருமகனாக தன்னை அவர் கருதவில்லை... மாறாக அந்த  அரண்மனையின் அனைத்துச் சொத்திற்கும் வாரிசாக தன்னை நினைத்திருந்தார்... அவருடைய செலவுக்கு அவருடைய பிறந்த வீட்டுச் சொத்தாலேயே தாக்குப் பிடித்து நிலைத்து நிற்க முடியவில்லையெனும்போது மனைவியின் பங்கிற்கு வந்த சொத்து எத்தனை நாள் நிலைத்திருக்கும்...?

    யோகானந்தன் உலகம் சுற்றும் உல்லாசி... தீவுகளில் ஆட்டம் போடும் சுகவாசி... தினமும் ஒரு கோடி தேவைப்படும்... என்ற நிலையில் அவருடைய செலவுகளுக்குத் தீனி போடுவதை நிறுத்தாவிட்டால் அருள்மொழிவர்மனின் அத்தனை சொத்துக்களும் அழிந்து விடும் என்பதால் ரவிச்சந்திரன் இரும்பு மனிதனாக மாறிக் குடும்பத்தை எதிர்த்து நின்றான்...

    தாத்தா... பரம்பரை புராப்பர்ட்டிஸில அத்தையோட பங்கை நீங்க ஆல்ரெடி பிரித்துக் கொடுத்துட்டிங்க... மீதமிருக்கிற அப்பாவோட பங்கில வருகிற வருமானமும் அத்தைக்குத்தான் போய்ச் சேருது... அப்பா அதை ஏன்னு கேட்க மாட்டார்... ஏன்னா... அவருக்கு தன் குடும்பத்தை விட தங்கையின் குடும்பம்தான் முக்கியம்... அது போல தானே எனக்கும் இருக்கும்...?

    எந்தா பறயுது கொச்சு மோனே...? நினக்கு ஈ கொட்டாரத்தில அநியாயம் நடப்பதைப் போல சம்சாரிக்கிறது...?

    அநியாயம்தான் நடக்குது தாத்தா... என் பங்கு சொத்தையும் ரம்யாவோட சொத்தையும் நீங்க உங்க மகளுக்கே தாரை வார்த்துக் கொடுத்துட்டா நானும், ரம்யாவும் என்ன செய்வோம்...?

    ரவிச்சந்திரா...!

    இரண்டில் ஒன்று சொல்லுங்க தாத்தா...

    எந்தா கொச்சு மோனே...? பறயு...

    நான் உங்க பேரனா இந்த அரண்மனையில இருக்கனுமா... வேண்டாமா...?

    எந்தாக் கேள்வியிது ரவி...? எது சம்சாரிச்சாலும் ஆலோசிச்சு சம்சாரிக்கனும்... கொச்சு மோனே... ஈ கேள்விக்கு ஞான் எந்தாப் பதிலப் சொல்லும்...? நின்னை விடப் வல்லிய சொந்தம்ன்னு ஈ கிழவன் எவரை நினைச்சான் ரவி...? பறயு...

    ஆடிப் போய்விட்ட அருள்மொழிவர்மன் ரவிச்சந்திரன் விதித்த அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட்டார்...

    அப்பா அவரோட புராப்பர்ட்டிஸை இம்மீடியட்டா என் பெயருக்கும், ரம்யா பேருக்கும் மாத்திடனும்... என்ற ரவிச்சந்திரனின் கட்டளையை ஏற்பதைத் தவிர வேறு வழியேதும் இல்லாததால் ரவிவர்மன் தன் பெயரில் இருந்த அனைத்துச் சொத்துக்களையும் சரி பங்காக ரவிச்சந்திரனுக்கும் ரம்ய மாலினிக்கும் பிரித்து எழுதி வைத்து விட்டார்...

    இந்த நிகழ்வு நடந்தபோது யோகானந்தனின் குடும்பம் வயநாட்டு அரண்மனையில் இல்லை... மைத்துனனின் பணத்தில் குடும்பத்தோடு வெர்ல்டு டூர் கிளம்பிப் போயிருந்தார்... உலகத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு அவர் திரும்பிய போது மைத்துனனின் சொத்துக்கள் பங்கிடப் பட்டிருந்தன... கொதித்துப் போனவர் அவந்திகாவை முடுக்கிவிட...

    எந்தா நியாயம் இது அச்சா...? என்று அவள் அருள்மொழிவர்மனிடம் முறையிட்டாள்...

    ஞான் ஏது செய்ய முடியும் மோளே...? நினக்கும் நிண்ட சேட்டனுக்கும் இடையே பாகுபாடு பார்க்கலையே அவந்திகா... நினக்கும், நிண்ட சேட்டனுக்கும் சமமா சொத்துக்களப் பகிர்ந்து கொடுத்தேன்... நீ அதைக் கரைய வைச்சுட்ட... பட்ஷே... நிண்ட சேட்டன் அதைத் தக்க வைச்சுக்கிட்டான்... அவனிண்ட சொத்த அவனோட பிள்ளைகளுக்கு பகிர்ந்து கொடுத்திருக்கான்... ஈ விசயத்தில ஞான் தலை கொடுக்க முடியாது மோளே.

    அருள்மொழிவர்மன் கை விரித்து விட்டார்... தமையனின் சொத்துக்கள் அவரது பிள்ளைகளுக்குப் போய் விட்டன என்று தெரிந்த பின்னாலும் அவந்திகா சோர்ந்து விடவில்லை... அரச குடும்பங்களில் சில நடைமுறைகள் உண்டு... குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் தனித்தனித் சொத்துக்களை பிரத்யேகமாக வைத்துக் கொள்வார்கள்... அவற்றைப் பரம்பரைச் சொத்துக்களில் கணக்கிட மாட்டார்கள்...

    அந்த வகையில் அருள்மொழிவர்மனுக்கும், யாழினிக்கும் சொத்துக்கள் இருந்தன... அவற்றின் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் வந்தது... அவை அப்படியே அவந்திகாவின் கரங்களுக்குச் சென்று யோகானந்தனின் கரங்களுக்கு இடம் மாறின... அந்தக் கோடிக் கணக்கான ரூபாய்களும் போதாமல் ஆயிரம்கோடி கடன் வைத்து மாமனாரை அதிர வைத்தார் யோகானந்தன்... அருள்மொழி வர்மனாலும் ரவிவர்மனாலும் சமாளிக்க முடியாத கடன் ரவிச்சந்திரனின் முன்னிலைக்கு வந்து நின்றது...

    யோகானந்தன் கடன்களைப் பெருக்கிக் கொண்டிருந்த போது ரவிச்சந்திரன் தொழிலை விரிவு படுத்திக் கொண்டிருந்தான்... ராஜ குடும்பத்து வழக்கத்தின்படி ரம்ய மாலினிக்கு வைர நகைகளும் வீடுகளும் பிரித்துக் கொடுக்கப்பட்டு... ரவிச்சந்திரனுக்கு தொழில்கள் கொடுக்கப் பட்டிருந்தன...

    பரம்பரை எஸ்டேட்டின் வருமானத்தில் ரவிச்சந்திரன் 'யாழ்' நட்சத்திர ஹோட்டல்களை சங்கிலித் தொடர்களாக கட்ட ஆரம்பித்தான்.... கேரளத்தின் நகரங்களில் ஆரம்பிக்கப்பட்ட 'யாழ்' ஹோட்டல் விரிந்து இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் வேர் விட்டு வியாபித்தது...

    வயநாட்டில் மட்டும் இருந்த ரப்பர் பேக்டரி பீர மேடிலும் கிளை விரித்தது... கூடவே சணல் பேக்டரியையும் ஆரம்பித்தான்... கடல் சார்ந்த கேரளத்தின் துறைமுக நகரங்களில் மீன் மற்றும் எறால் பதப்படுத்தி அனுப்பும் எக்ஸ்போர்டு கம்பெனிகளை உருவாக்கினான்.... வயநாட்டு எஸ்டேட்டையும் ரப்பர் பேக்டரியையும் மட்டும் கவனித்துக் கொண்டு வயநாட்டிலேயே தேங்கி விட்ட அருள்மொழிவர்மன், ரவிவர்மனைப் போல இல்லாமல் வயநாட்டுக்கும் வெளியே கால் பதித்து உலகம் முழுவதும் பறந்து தொழில் பண்ணும் கை தேர்ந்த தொழிலதிபனாக மாறியிருந்தான்...

    யோகானந்தனைப் போல இவனும் உலகம் சுற்றுபவன்தான்... ஆனால் யோகானந்தனைப் போல உல்லாசமாக பணத்தைக் கரைப்பவனாக சுற்றி வரவில்லை... பணம் பண்ணுபவனாக சுற்றி வந்தான்...

    அருள்மொழிவர்மனின் குடும்பத்துக்கு உலகில் உள்ள அனைத்து நகரங்களிலும் வீடு உண்டு என்றால் ரவிச்சந்திரனுக்கு 'யாழ்...' ஹோட்டல் உண்டு... பணத்தை அசையாச் சொத்துக்களில் முடக்குவதை விட, அந்த அசையாச் சொத்துக்களின் மூலம் வருவாய் ஈட்ட என்ன வழியென்று யோசித்து செயல்பட்டான் ரவிச்சந்திரன்... வீடுகளைக் கவனிக்க ஹவுஸ்கீப்பர்கள் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்கள்... அவ்வீடுகளைப் பராமரிக்க செலவு செய்ய வேண்டியிருந்தது...

    ரவிச்சந்திரனின் 'யாழ்' ஹோட்டல் அப்படிப் பட்டதல்ல... அது வருவாயைத் கொட்டும் தொழில்... அதி விரைவில் ரவிச்சந்திரன் பாட்டனார் பெயரையும் தகப்பனார் பெயரையும் தாண்டி பெயர் பெற்றான்... ராஜ குடும்பத்து வட்டாரங்களில் ரவிச்சந்திரனின் பெயரே முதன்மையாக ஒலித்தது...

    இந்நிலையில் மாமனாரின் சொத்தைக் கரைத்து, மைத்துனனின் வருமானத்தை அபகரித்தது போதாது என்று மைத்துனன் மகனின் தலையில் தனது கடனை சுமத்தி விட்டு ஹாயாக எவருக்கு வந்த கடனோ என்பதைப் போல ஒதுங்கிக் கொண்டார் யோகானந்தன்... அவந்திகா விட்ட கண்ணீரில் குடும்பமே கப்பல் விட்டுக் கொண்டிருக்க எவருக்கு வந்த கடனை யார் சுமப்பது என்று கேள்வி கேட்டான் ரவிச்சந்திரன்...

    ரவி... ஞான் பறயறது ஒன்னுதான்... அருள்மொழிவர்மன் ஆரம்பிக்க...

    நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குத் தெரியும் தாத்தா... ஆயிரம் கோடி கடன் வைத்தாலும் அவர் உங்க மருமகன்னு சொல்லப் போறிங்க... அவருக்கு வந்திருக்கிற கஷ்டம் அத்தையைத்தான் பாதிக்கும்ன்னு சொல்லப் போறிங்க... என்று தடுத்தாட் கொண்டான் ரவிச்சந்திரன்...

    அதே... அதே... எண்ட மனசில ஞான் எந்தா ஆலோச்சித்திறேன்னு எண்ட கொச்சுமேன் அறியும்... என்று பரவசப் பட்டுப் போனார் அருள்மொழிவர்மன்...

    ரொம்பவும் மகிழ்ந்து போகாதீங்க... நீங்க இதை விட்டா வேற என்னத்தைச் சொல்லப் போறிங்க... அத்தை நம்ம குடும்பத்து மேலே பாரத்தைத் தூக்கி வைக்கிற ஒவ்வொரு முறையும் நீங்க இந்த வசனத்தைத்தானே ஒப்பிப்பீங்க...? கேட்டுக் கேட்டு டயலாக்கே மனப்பாடம் ஆகியிருச்சு... நிர்தாட்சண்யமாக நினைவுறுத்தினான் ரவிச்சந்திரன்...

    பட்சே... கொச்சு மோனே... பரிதவித்தாள் யாழினி...

    மகளின் துயரத்தைக் காண முடியாமல் கண் கலங்கினாள்... பாட்டியின் மீது அளவு கடந்த பிரியத்தைக் கொண்டவன் ரவிச்சந்திரன்... அவள் கண்கலங்கி கை பிசைவதைப் பார்க்க அவனுக்குப் பாவமாகத்தான் இருந்தது... அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் கடினமான முகத்துடன் பாட்டியை முறைத்தான்...

    'இந்த மனுசன் அட்டையைப் போல... குடும்பத்தின் சொத்து முழுதையும் உறிஞ்சி விட்டுத்தான் நிறுத்துவார்... இதை தடுத்து நிறுத்தலைன்னா விபரீதமாகிரும்...'

    கத்தியை எடுக்காமல் அறுவைச் சிகிச்சை செய்ய இயலாது... ரவிச்சந்திரன் கத்தியைக் கையில் எடுத்தான்... வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சையை ஆரம்பித்து விட்டான்...

    நீங்க பெரியவங்க... உங்களுக்குத் தெரியாதது இல்லை... நம்ம ராஜ குடும்பங்களில வெறும் பாரம்பர்யம் பெருமையை மட்டும் வைத்துப் பெண் கொடுத்து, பெண் எடுக்க மாட்டாங்க... ஏன்... நம்ம அத்தையைப் பெண் கேட்கும் வரை மாமா வீட்டில பாகப் பிரிவினை பண்ணாமல் மொத்தச் சொத்தையும் கணக்கில காட்டித்தான் பெண் கட்டினாங்க... அத்தைக்கு எவ்வளவு சொத்து வரும்ன்னு கணக்குப் போட்டுத்தான் பெண்ணெடுத்தாங்க... நாமும் சும்மா இல்லை... மாமா வீட்டின் சொத்தின் மதிப்பைத் தெரிந்துக்கிட்டுத்தான் பெண் கொடுத்தோம்... ஏன் தாத்தா...?

    எந்தாக் கேள்வியாது ரவிச்சந்திரா... வெறும் பேர் இருந்தா மட்டும் போதுமா...? வல்லிய சொத்து சுகம் இருந்தாத்தானே எண்ட மோள் ஆ கொட்டாரத்தில சுகமாக ஜீவிதம் பண்ண முடியும்...?

    இது பேச்சு... நீங்க என்ன சொல்கிறீங்க பாட்டி...?

    நிண்ட அச்சன் பறஞ்சதைத்தான் ஞானும் பறயும்... வல்லிய சொத்து சுகம் இல்லாத இடத்தில எவ்விதம் பெண் கொடுக்க இயலும்...? ராஜ குடும்பம்ன்னு பேர் இருந்தா மட்டும் போதாது கொச்சு மோனே... திரவியம் இருக்கனும்... அதுவல்லோ ராஜ பாரம்பர்யத்துக்கான பெருமை...? எண்ட மகளை அவ்விடத்தில்தான் விவாகம் பண்ணிக் கொடுக்க ஏலும்...

    பெரியவங்க, நீங்களே இப்படி நினைக்கிறப்ப... இப்ப இருக்கிறவங்களும் இதைப் போலதானே நினைப்பாங்க...?

    அதே ரவிச்சந்திரா...

    ஆனாப் பாருங்க பாட்டி... உங்க மருமகனுக்கு கடன் அடைச்சு எனக்கும், ரம்யாவுக்கும் இருக்கிற சொத்தை அழிச்சுட்டா நாளைக்கு ரம்யாவை யார் மேரேஜ் பண்ணிக்குவாங்க பாட்டி...? எனக்கும் யார் பெண் கொடுப்பாங்க...?

    ரவி...

    வாழ்வின் நிதரினத்தைப் புரிந்து வைத்திருந்த யாழினியின் கண்கள் இருண்டன... எப்பேற்பட்ட கோடிஸ்வரக் குடும்பம் அது... அந்தக் குடும்பத்தில் பிறந்த அவளது பேரன் கேட்கும் கேள்வியில் அவளுக்கு நெஞ்சை அடைத்து மூச்சுத் திணறியது...

    'அம்மே...! மலையாள பகவதி...! எண்ட கொச்சுமோன் எழுப்பற கேள்வியிலயும் நியாயம் இருக்கல்லோ...'

    யாழினியின் மன உணர்வை அருள்மொழிவர்மனின் முகமும் பிரதிபலிக்க... யோகானந்தன் விழித்துக் கொண்டார்...

    'ஈ கிழடுகள் தங்களோட கொச்சு மோன் பேச்சுக்கு செவி சாய்க்குதுகளே... ஞான் ஏதாவது செய்யலேன்னா ஈ ரவிச்சந்திரன் பேசிப் பேசியே கிழடுகளை அவனோட வழிக்கு கொண்டு வந்திருவானல்லோ... ஈ கொட்டாரத்தில ஞானும் எண்ட பிள்ளைகளும் ஜீவித்திருக்கறப்ப இவனும், இவன் தங்கையும் வேற இடத்தில மணம் செய்துக்கிட்டி எண்ட பிள்ளைகளின் கதி எந்தா...?'

    ஏற்கனெவே அதைப் பற்றி அவரைவிட அதிகமாக ஆலோசித்து திட்டம் தீட்டிவைத்திருந்த அவந்திகாவை அருகில் இழுத்து அவள் காதுகளில் அவர் ஓத... அதை அவள் குடும்ப சபையில் எடுத்துரைத்தாள்...

    "எந்தா அம்மே

    Enjoying the preview?
    Page 1 of 1