Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthithaga Oru Bhoopalam
Puthithaga Oru Bhoopalam
Puthithaga Oru Bhoopalam
Ebook307 pages2 hours

Puthithaga Oru Bhoopalam

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

தோழியின் வீட்டை வழுக்கட்டாயமாக வாங்க முயற்சிக்கும் பணக்காரன் ஒருவனிடம் நியாயம் கேட்கப் போகிறாள் கதாநாயகி.. அவனுக்கும் இவளுக்கும் சண்டைவருகிறது. சண்டையின் முடிவில் அவனுக்கு இவளை பிடித்து விடுகிறது. இவள் அவனது காதலை ஏற்க மறுக்கிறாள். அவன் உன்னை திருமணம் செய்து கொண்டே தீருவேன் என்று சவால் விடுகிறான்.

Heroine supports her friend from a rich land lord to save her friend house. He and her are fighting, end of controversy the rich man propose to the heroine, but she do not accept. Young man challenge her to marry.

Languageதமிழ்
Release dateJul 19, 2023
ISBN6580133805522
Puthithaga Oru Bhoopalam

Read more from Muthulakshmi Raghavan

Related to Puthithaga Oru Bhoopalam

Related ebooks

Reviews for Puthithaga Oru Bhoopalam

Rating: 3.533333333333333 out of 5 stars
3.5/5

15 ratings2 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    The plot is usual. But the narration kept me attached
  • Rating: 5 out of 5 stars
    5/5
    This author writing is always energetic and realistic , this story is excellent making us to dream for such a love

Book preview

Puthithaga Oru Bhoopalam - Muthulakshmi Raghavan

http://www.pustaka.co.in

புதிதாக ஒரு பூபாளம்...

Puthithaga Oru Bhoopalam…

Author:

முத்துலட்சுமி ராகவன்

Muthulakshmi Raghavan

For more books

http://pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அத்தியாயம் 20

அத்தியாயம் 21

அத்தியாயம் 22

அத்தியாயம் 23

அத்தியாயம் 24

அத்தியாயம் 25

அத்தியாயம் 26

அத்தியாயம் 27

அத்தியாயம் 28

அத்தியாயம் 29

அத்தியாயம் 30

அத்தியாயம் 31

அத்தியாயம் 32

அத்தியாயம் 33

அத்தியாயம் 34

1

"வந்தாள் மகாலட்சுமியே...

என் வீட்டில்...

என்றும் அவள் ஆட்சியே..."

எப்.எம் ரேடியோவில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது... கூடச் சேர்ந்து பாடியபடி.. வாணலியில் காய்ந்து விட்ட எண்ணையில் கடுகைப் போட்டாள் ஜானகி.. அதுபடபடவென்று வெடித்தது...

'அப்படியே சின்னவளைப் போல வெடிக்குது..' நினைத்துக் கொண்டவளுக்கு சிரிப்பு வந்தது...

என்னடி ஜானு.. தனக்குத்தானே சிரிச்சுக்கறே.. கேட்டபடி சமையலறைக்குள் வந்து நின்ற கல்யாணராமன் மனைவியை விழுங்கி விடுவதைப் போலப் பார்த்தார்...

ஜானகி அப்பேற்பட்ட அழகோடுதான் இருந்தாள்.. மஞ்சள் துலங்கிய மங்கலகரமான முகத்தில் எப்போதும் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.. அவளது மூக்கில் மின்னிய மூக்குத்தி அவளின் பெண்மையின் மிளிர்வை அதிகப்படுத்திக் காட்டியது...

என்ன அப்படிப் பாக்கறிங்க..? முகம் முழுக்க சிரிப்புடன் கணவனை அதட்டினாள் அவள்..

உன்னைப் பாத்தா பேத்தி எடுத்தவளைப் போலவே இல்லைடி.. அவர் குழைந்தார்..

போதுமே.. ஒரு தாத்தாவைப் போலப் பேசிப் பழகுங்க...

முகம் சிவக்க.. கணவனைக் கடிந்து கொண்டபடி காபி கலக்க ஆரம்பித்தாள் ஜானகி.. பில்டர் காபியின் நறுமணம் நாசியில் நுழைந்ததில் அதன் வாசனையை..

ஹா..! என்று இழுத்துப் பிடித்து ரசித்த கல்யாண ராமன்..

காபின்னா.. இதுதான் காபிடி.. அசல் பில்டர் காபி.. என்றார்..

அப்படியா..? அப்ப... முக்குக்கு முக்கு.. கும்ப கோணம் பில்டர் காபின்னு போர்டு போட்டிருக்காங்களே.. அதையெல்லாம் என்னன்னு சொல்வீங்க..?

அதையும் காபின்னுதான் சொல்வேன்.. எதுக்குடி வம்பு..?

இதுதான் கல்யாணராமன்..

வீட்டுக்குள் நடக்கும் பேச்சுவார்த்தையைக்கூட யோசித்துப் பேசுவார்.. காபியைப் பற்றிய விமரிசனத்தை எடுத்து விட்டால் என்னவோ அவர்கள் வீடு தேடி வந்து வீடு கட்டி விடுவார்கள் போல சர்வ ஜாக்கிரதையாகத்தான் அவரது பேச்சு இருக்கும்...

அதானே பார்த்தேன்.. ஜானகிக்கு சிரிப்பு வந்தது..

எதைம்மா பார்த்தீங்க..? என்றபடி அறைக்குள் வந்த சந்தியா.. அந்த சந்திரனின் பொழிவோடு இருந்தாள்.

அப்போதுதான் தூங்கி எழுந்து வந்தவளின் முகம்.. அப்போது தான் மலர்ந்த பூவைப் போல எப்படி இருக்கிறது என்ற கேள்வி என்றும் போல அன்றும் ஜானகியின் மனதில் உதித்தது...

கலைந்த தலையும்.. கசங்கிய நைட்டியும் கூட ஒரு பெண்ணின் அழகுக்கு அழகு சேர்க்க முடியும் என்பதை மெய்ப்பிப்பவள் சந்தியா.. அவளின் அந்த அதீத அழகில் ஜானகிக்கு என்றுமே பெருமையுண்டு..

சின்னவ என்னைப் போல...

இதைச் சொல்லும் போது பெரியவளான சூர்யா அருகில் இருக்கிறாளா என்று பார்த்து விட்டுதான் சொல்வாள் ஜானகி...

சூர்யாவின் மனது பூஞ்சை மனது.. அவள் மாநிறத்தில் கல்யாண ராமனின் சாயலில் இருப்பதால் அவள் மனதில் லேசான தாழ்வு மனப்பான்மை அவ்வபோது தோன்றி ஆட்டம் காட்டும்...

அதைச் சரியான முறையில் இனம் கண்டு கொள்ளும் ஜானகி அதை முறியடித்து பற்றிவிட சில யுக்திகளை கையிருப்பில் வைத்திருந்தாள்..

என்னதான் சொல்லு லீலா.. லைட் கலருக்கு இருக்கிற அழகே தனி.. டார்க் கலரெல்லாம் ஒரு கலரா..? எங்க சூர்யா லக்கி தெரியுமா..? லைட் கலரெல்லாம் அவளுக்கு அவ்வளவு அழகாக பொருந்தும்.. அதுவே சின்னவளுக்குன்னு வந்தா.. டார்க் கலரைத்தான் எடுத்துத் தொலைக்கனும்.. சூர்யா கொடுத்து வைத்தவ..

இதுபோலப் பேசிப்பேசியே.. சூர்யாவை தான் அழகானவள் என்று உணரச் செய்து விடுவாள் ஜானகி.. அதில் துளிக்கூட முகம் சுளிக்காமல் சந்தியாவும் பங்கு பெறுவதுதான் அதிலிருக்கும் சிறப்பான அம்சமாகும்..

ஒருநாள் கூடத் தன் அழகைப் பற்றிய உணர்தலை அவள் சூர்யாவிடம் வெளியிட்டதில்லை.. மாறாக..

வாவ்.. அக்கா நீ இப்ப எவ்வளவு அழகாயிருக்க தெரியுமா...?

இப்படித்தான் அவள் சொல்லுவாள்.. இன்று சூர்யா திருமணமாகி புகுந்த வீட்டில் கணவன்.. ஒரு பெண் குழந்தை என்று வாழ்கிறாள்.. இதுவரை அவள் மனதில் தன்னைவிட தன் தங்கை அழகானவள் என்ற எண்ணம் தோன்றியதே இல்லை.. அப்படித் தோன்றுவதற்கு அவளுடைய பிறந்த வீட்டினர் இடம் கொடுத்ததில்லை..

என்னம்மா..? என் கேள்விக்கு பதில் சொல்லாம யோசனையா நின்னுட்டிங்க..? நீங்க எதைப் பார்த்தீங்க..? சந்தியா சமையலறையின் மேடையின் மீது சுவாதீனமாக ஏறி உட்கார்ந்து கால்களை ஆட்டியபடி கேட்டாள்...

எதைன்னு சொன்னா நீயும் சேர்ந்து சிரிப்ப.. மகளுக்கு காபியை கப்பில் ஊற்றி நீட்டியபடி சொன்னாள் ஜானகி...

நீங்க சொல்லுங்க.. எனக்குச் சிரிப்பு வருதா.. வரலையான்னு பார்ப்போம்...

கால்களை ஆட்டியபடி காபியை உறிஞ்சிய சந்தியா சொன்னாள்.. ஆனால் ஜானகி சொன்னதைக் கேட்டதும் சட்டென்று அவளுக்குச் சிரிப்பு வந்து விட்டது.. குடித்துக் கொண்டிருந்த காபி புரையேற.. அவள் தலையில் தட்டிய ஜானகி...

பார்த்துடி.. இப்படியா சிரித்து வைப்ப..? புரையேறுது பாரு.. காபியைக் குடிச்சிட்டுத்தான் சிரியேண்டி.. என்று மகளை கடிந்து கொண்டாள்..

அவ காபியைக் குடிச்சபின்னால நீ ஜோக் சொல்லி யிருக்கனும்.. அதை விட்டுவிட்டு புருசனை வார கிடைச்ச சான்ஸை மிஸ் பண்ணக் கூடாதுன்னு உடனே கொட்டிக் கவிழ்த்தா இப்படித்தான்.. எரிச்சலோடு சொன்னார் கல்யாணராமன்...

அதெப்படி... அதுக்கப்புறமா எனக்கு எதைச் சொல்லிக்கிட்டிருந்தேன்கிறது மறந்து போயிருச்சுன்னா என்ன பண்றது..? நீங்களே சொல்றதைப் போலக் கிடைச்ச சான்ஸை மிஸ் பண்ண முடியுமா..?

தலையைச் சாய்த்து புருவங்களை உயர்த்தி லேசாக கண்சிமிட்டி ஜானகி கேட்ட விதத்தில் கல்யாண ராமனின் எரிச்சல் காற்றோடு பறந்து விட்டது...

'இந்த அம்மாவுக்கு.. அப்பாவைக் கண்ட்ரோல் பண்ற டெக்னிக் கை வந்த கலையாய் இருக்கு..' அதை ரசித்துப் பார்த்தாள் சந்தியா..

'வாழ்ந்தா இவங்களைப் போல வாழனும்..' என்று அந்த நொடியில் அவளுக்குத் தோன்றியது..

சந்தியா...

என்னம்மா...

உன் அண்ணன்காரன் என்ன பண்றான்..?

யாருக்குத் தெரியும்..? நான் எழுந்திருச்சதும் காபியைத் தேடி கீழே ஓடிவந்திட்டேன்...

அவனுக்கு ஒரு கப் காபியைக் கொண்டு போய் கொடுத்துடேண்டி.. என் கண்ணுல்ல...

இல்லை..

ஏண்டி..?

என்னைக்காவது ஒருநாள் எனக்கு அவன் காபியைக் கொண்டு வந்து கொடுத்திருக்கானா..? நான் மட்டும் அவனுக்காக காபியைச் சுமக்கனுமா..? நெவர்...

ஆமாண்டி.. நீ ஒரு குடம் காபியை இடுப்பில் சுமந்துக்கிட்டுப் போய் அவன்கிட்டக் கொடுக்கப் போகிற.. இந்த அலுப்பு அலுத்துக்கிற.. உனக்கிருக்கது ஒரே ஒரு அண்ணன்...

இவன் ஒருத்தன் பண்ற அழும்பே தாங்கலை.. இதில இன்னொருத்தனும் வேணுமாம்மா..?

கூடக்கூடப் பேசாதேடி.. பாவம் என் புள்ள..

ஆமாமாம்.. பச்சைப்புள்ள..

அவனுக்கு ஒரு வாய் காபியைத்தான் கொடுத்துட்டு வாயேண்டி.. பேசியபடியே காபிக் கப்பை சந்தியாவிடம் நீட்டிய ஜானகியை ஓர் பார்வை பார்த்தாள் சந்தியா...

இதுவா ஒரு வாய் காபி..?

ஒரு வாய்ன்னா ஒரு ஸ்பூன்தான் கொடுக்கனுமா..? போடி...

அவனுக்கு நானென்ன வேலைக்காரியா..?

வாய்க்குள் முணுமுணுத்தபடி மாடிப்படியேறினாள் சந்தியா.. ஹாலின் இரு புறமும் இருந்த அறைகளில்.. அவள் அறைக்கு எதிர்புறமாக இருந்த அறையின் கதவு திறந்திருக்க.. உள்ளே எட்டிப் பார்த்தவள்..

அண்ணா.. அடேய் அண்ணா.. என்று பாசமாக அழைத்தாள்..

உள்ளேயிருந்து ஒரு சப்தமும் வரவில்லை...

அடேய்.. தடி மாட்டு தாண்டவராயா..? என்று குரல் கொடுத்தாள்..

அவள் பின்னந்தலையில் அடி விழுந்தது.. தலையைத் தடவியபடி திரும்பி முறைத்தாள்.. ஜாகிங் உடையுடன் அங்கே சுதர்சனம் நின்று கொண்டிருந்தான்..

எதுக்காகடா என்னை அடிச்ச..?

தடிமாட்டுத் தாண்டவராயனா..? நீதான் எனக்குப் பெயர் வைச்சியா..? ஒரு அடியோடு விட்டேனேன்னு சந்தோசப்படு.. ஆமா.. உனக்கு என் ரூம் பக்கம் என்ன வேலை..?

கேப்படா.. கேட்ப.. உனக்கு காபிக்கப்பை சுமந்துக் கிட்டு வந்தா.. நீ இதுவும் கேட்ப.. இன்னமும் கேட்ப.. இவர் ரூம் பெரிய மைசூர் மகாராஜாவோட ரூம்.. நாங்க எட்டிப் பார்த்துட்டோம்.. கட்டில்ல பாரு.. நீ அவிழ்த்துப் போட்ட ஜீன்ஸீம்.. உருவிப் போட்ட கைலியும் சுருண்டு கிடக்கு.. மனுஷி எட்டிப் பார்ப்பாளா இந்த ரூமை..?

நீதான் எட்டிப்பார்ப்ப..

விதி..! வேறென்ன சொல்ல..? உன் கூடப்பிறந்து தொலைச்சிட்டேனே... எட்டித்தான பார்க்க வேண்டியிருக்கு..?

ரொம்பவும் அலுத்துக்காதே.. நாள பின்ன உனக்கு ஒரு இளிச்சவாயன் மாட்டி.. நீயும் சூர்யாக்காவைப் போலக் கல்யாணம் பண்ணிக்கிட்டு போயி.. குழந்தை குட்டின்னு ஆனபின்னால.. நீ பெத்த பிள்ளைகளுக்கு தாய்மாமன் சீர் செய்ய நான்தான் வந்து நிக்கனும்.. அதை மறந்திராதே.. ஐயாவுக்கு பவர் ஜாஸ்தி...

தோடா.. ரொம்பத்தான் அலட்டிக்கிறான்.. அத அப்பப் பார்த்துக்கலாம் ராஜா.. இப்ப அடக்கி வாசி...

ஏன்..? ஏன்..? ஏன்..?

எதுக்கு இத்தனை ஏன் போடற..?

ஆயிரம் தான் இருந்தாலும் நானொரு இன்ஜினியர்.. கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி ஆரம்பிச்சு கோடிக்கணக்கா சம்பாதிக்கப் போகிறவன்.. உன் புருசனாகப்பட்டவன் நாலு தட்டு தட்டினா...

யாரை..?

உன்னை..

என்ன பேராசைடா உனக்கு.. ம்ஹீம்.. இப்படிப்பட்ட அண்ணன் கூடப் பிறக்க என்ன தவம் நான் செய்தேன்..? ஆமாம்.. அந்த புருசனாகப் பட்டவன் எதுக்காகடா.. என்னைத் தட்டனும்..?

வேற எதுக்கு..? போய் உன் பிறந்த வீட்டில் சீர் வாங்கிட்டு வான்னுதான் தட்டுவான்...

ஆம்பளப் புத்தி.. அப்படியே கண்டு பிடிச்சிட்ட.. மேலே சொல்லு...

அப்படி அவன் தட்டினா.. நீ என்னிடம் தான் வந்து நிற்கனும்..?

எதுக்குப்பா..? செங்கலையும்.. சிமிண்டையும் குடுடா அண்ணான்னு கேட்டுக்கிட்டு உன் முன்னால வந்து நிற்பேனா..?

அத வைச்சுக் கட்டின வீட்டில சம்பாதிச்சுக் குமித்து வைச்சிருக்கிற என்கிட்ட பணங்காசு கேட்டுத்தான் வந்து நிற்ப...

பணம்..? யு மீன்.. இந்த 'காசு.. பணம்.. துட்டு.. மணி.. மணி...'

யா.. யா...

அதுக்கு முதல்ல நீ உன் இன்ஜினியர் படிப்பை முடி.. இன்னும் படிப்பே முடியல.. கனாக்காண ஆரம்பிச்சிட்ட.. விட்ட விடிகாலையில இப்படி மொட்டை ரம்பம் போடறியே.. உனக்கு நானென்னடா கெடுதல் பண்ணினேன்..? அம்மா கொடுத்த காபியை வாங்கிக்கிட்டு வந்து உன்கிட்ட கொடுத்தது ஒரு குத்தமாடா..

அதனாலதான் இதோட விட்டேன்.. இந்தாப்.. பிடி..

என்னதுப்பா..? சீரா...?

அத உன் கழுத்தில எந்தக் கேணயனாவது தாலியைக் கட்டறப்ப செய்யறேன்.. இப்ப காலிக் கப்பைக் கொண்டு போ..

அதுக்கு வேற ஆளைப் பாரு... அம்மா சொன்னாங்களேன்னு காபி கப்பைக் கொண்டு வந்தேன்.. திருப்பிக் கொண்டு போறது உன்னோட வேலை...

வேணாம் சந்தியா.. எதிர்கால இன்ஜினியரோட பகையை சம்பாதிச்சுக்காதே.. பின்னாலே இதை நினைச்சு நீ ரொம்பவும் ஃபீல் பண்ண வேண்டி வரலாம்...

சும்மா அலட்டிக்காதே.. நான் கூடத்தான் எதிர்கால சி.ஏ...

ஹா.. ஹா.. நீ..? சி. ஏ வா..?

ஏண்டா..? நீயே கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி ஆரம்பிக்கப் போறப்ப.. நான் சி. ஏ வா ஆகக் கூடாதா..?

அதுக்கு முதல்ல நீ பி.காம் படிப்பை முடி.. அதுக்கப் புறமா சி.ஏ படிப்பில சேரு.. அப்புறம் அந்தப் படிப்பு உன் மண்டையில் ஏறி.. அதையும் நீ பாஸ் பண்ணின பின்னாலே சி.ஏ கணவு காணு..

அதை நீ சொல்லாதே..

நான்தான் சொல்லனும்.. ஏன்னா.. என் படிப்பு ஒரு மாசத்தில முடிஞ்சிரும்.. உனக்கு அப்படியில்லை..

நாங்களும் பி.காம் ஃபைனல் இயர்தான்...

அதுக்குப் பின்னாலே சி.ஏ வில நீ சேரணுமில்ல..?

கட்டாயம் சேருவேண்டா..

அதையும் பார்ப்போம்...

நீ பார்க்கத்தான் போற...

முதல்ல அந்தப் பால்கனியில் வந்து உட்கார்ந் திருக்கிறகுருவியைப் பாரு..

சுதர்சனம் கை காட்ட.. தன்னிச்சையாக அந்தப் பக்கம் பார்த்தாள் சந்தியா.. சட்டென்று அவள் கையில் காலிக் காபிக் கோப்பையை திணித்து விட்டு அறைக்குள் போய் கதவைச் சாத்திக் கொண்டு விட்டான் சுதர்சனம்...

நீ அடிதாண்டா வாங்கப் போகிற.. தரையில் கால் உதைத்தாள் சந்தியா..

2

குட் மார்னிங் சார்...

எதிர்பட்ட சிவராஜின் காலை வணக்கத்திற்கு தலையசைத்து விட்டு.. மேனேஜர் என்ற பெயர் பொதித்த கண்ணாடி அறைக்குள் நுழைந்தார் கல்யாணராமன்...

அவர் இருக்கையில் உட்காருவதற்காக காத்திருந் ததைப் போல அறைவாசலில் விரல் மடக்கித் தட்டப்படும் சப்தம் கேட்க..

யெஸ்.. கமின்.. என்றார்..

கண்ணாடித் தடுப்புக்கு அப்பால் தெரிந்த கூட்டத்தில் அவருக்குள் லேசான களைப்பு வந்தது.. அது காலை நேர வேலையின் களைப்பு.. அப்போது ஆரம்பிக்கும் அந்த வேலை.. இரவுதான் முடியப் போகிறது என்பதை அவர் உணர்ந்திருந்ததினால் ஏற்பட்ட களைப்பு...

அவர் மட்டுமல்ல.. தேசிய உடைமையாக்கப்பட்ட அந்த வங்கியில் பணிபுரிந்த எல்லோருமே.. நிமிர்ந்து பார்க்க நேரமின்றித்தான் வேலை செய்து கொண்டிருந்தார்கள்..

'மனித இயந்திரம்..' கல்யாணராமன் நினைத்துக் கொண்டார்..

நடையாய் நடக்கிறேன் சார்... லோன் ஆபிசர் இன்னைக்கு.. நாளைக்குன்னு இழுத்தடிச்சார்... இப்பக் கேட்டா லோன் சேங்சன் ஆக பாஸிபிலிட்டி இல்லேங் கிறார்... கல்யாண ராமனுக்கு எதிரே அமர்ந்திருந்தவர் அங்கலாய்த்தாள்..

ஏன்னு கேட்டிங்களா..? அதுக்கு அவர் சரியான காரணத்தைச் சொல்லியிருப்பாரே..

கேட்டோம் சார்.. அது குறை.. இது குறைன்னு இல்லாததையும்.. பொல்லாததையும் சொல்றார்..

அப்படிச் சொல்ல.. அவருக்கும்.. உங்களுக்கும் என்ன வரப்புத் தகராறா இருக்கு..? உங்கள் முன்னே.. பின்னே அவருக்குத் தெரியுமா..?

இல்லைதான் சார்.. ஆனாலும்..

இங்கே ஆனா.. ஆவன்னாவிற்கே இடமில்லை சார்.. அவர் கேட்ட டாகுமெண்ட்ஸை நீங்க கொடுத்திருக்க மாட்டிங்க.. அதனால அப்படிச் சொல்லியிருப்பார்..

அதை முதலிலேயே சொல்லியிருக்கலா மில்லையா..?

எப்படிச் சொல்வது..? கல்யாணராமன் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டார்.. தினமும் இதுபோன்ற முறையீடுகளை அவர் சந்திக்க நேரிடுகிறது.. லோன் கேட்பவர்களிடம் தேவையான டாக்குமெண்டுகளும்.. கேரண்டியும் இருந்தால்தான் லோனை சேங்சன் பண்ண முடியும் என்பதை லோன் போட்டு கிடைக்காமல் ஏமாற்றத்துக்கு ஆளானவர்கள் ஏன் புரிந்து கொள்வதில்லை என்ற கேள்வி அவர் நெஞ்சில் எழுந்தது...

ஸ்டெப் பை ஸ்டெப்பாத்தான் போக முடியும் சார்.. அவர் ஒவ்வொண்ணா உங்களிடம் கேட்டிருப்பார்.. அவர் கேட்டது கிடைக்காததில் லோன் சேங்சன் ஆக பாஸி பிலிட்டி இல்லைன்னு சொல்லியிருப்பார்.. தட்ஸ் ஆல்..

வந்தவர் முறைப்பாய் எழுந்து போனார்.. கல்யாண ராமன் கம்யூட்டரை உயிர்ப்பித்தார்.. மெயிலை செக் பண்ண ஆரம்பித்தார்..

மே ஐ கமின்..?

கம்பீரமான குரலில் நிமிர்ந்து பார்த்தவர்.. அவசரமாக எழுந்து கை நீட்டினார்..

நீங்க உள்ளே வர பெர்மிசன் கேட்கனுமா..?

அவர் நீட்டிய கையைப் பற்றிக் குழுக்கிய ரகுநந்தன் ஆறடி உயரத்தில்.. கருநீல கோட்.. சூட்.. டையுடன் ரேமண்ட் விளம்பர மாடலைப் போன்ற கச்சிதமான ஆணழகனாக இருந்தான்...

ரூல்ஸ் ஆர் ரூல்ஸ்.. புன்முறுவல் செய்தபடி அவருக்கு எதிரே தோரணையாக அமர்ந்தான்...

வாட் கேன் ஐ டு ஃபார் யு சார்...

அந்த வங்கிக் கிளையின் மேலாளரான கல்யாணராமன் அந்த அளவுக்கு நயந்து வினவுகிற அளவுக்கு ரகுநந்தனிடம் பணம் கொட்டிக் கிடந்தது.. அவன் கணக்கு வைத்திருக்கும் பல்வேறு வங்கிக் கிளைகளில் அவருடைய வங்கிக் கிளையும் ஒன்று என்பதில் அவருக்கு அசாத்திய பெருமையும் நிம்மதியும் உண்டு...

உனக்கென்னய்யா.. ரகுநந்தன் கஸ்டமரா இருக்கிற பிரான்ச்.. எத்தனை கோடி டெபாசிட்டை டார்கெட்டா சொன்னாலும் அந்த டார்கெட்டை மீறி உன் பிரான்ச்சில் டெபாசிட் இருக்கும்.. நாங்க அப்படியா..? ஒவ்வொரு வருசமும் இயர் எண்டு கணக்கு முடிக்கிறதுக்குள்ள உயிர் போய் உயிர் வருது..

மற்ற கிளைகளின் மேலாளர்கள் பொறாமைப் படுவார்கள்.. வருடாந்திரக் கணக்கைக் கண்டு பயப்பட வேண்டாத அந்த அஞ்சாமையை அவருக்குக் கொடுத் திருக்கும் ரகுநந்தனிடம் அவர் நயந்து பேசாமல் என்ன செய்வார்..?

ஒன் குரோர் டெபாசிட் செய்யப் போறேன்..

தேங்க்யு சார்.. தேங்க்யு...

என்னவோ அந்த ஒரு கோடியை அவரின் வீட்டுக்கே கொண்டு போகப் போகிறவரைப் போல மகிழ்ந்து போனார் கல்யாண ராமன்..

இப்ப ஷேப்டி லாக்கர்ல இருக்கிற சம் டாக்கு மெண்ட்ஸை நான் கொண்டு போக வேண்டியிருக்கு..

கல்யாணராமன் எழுந்தார்.. லாக்கர்கள் இருந்த அறையின் கதவைத் திறந்து

Enjoying the preview?
Page 1 of 1