Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Un Manathai Thanthuvidu
Un Manathai Thanthuvidu
Un Manathai Thanthuvidu
Ebook185 pages1 hour

Un Manathai Thanthuvidu

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

பரம்பரை வைர நகைகளை அடமானத்தில் இருந்து மீட்டு காரில் எடுத்து வரும் வழியில் நள்ளிரவில் விபத்துக்கு ஆளாகிறான் ஒருவன். மயக்கமடைந்து இருக்கும் அவனை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறாள் ஒரு பெண். கண்விழித்ததும் அவனிடம் வைரநகை பெட்டியை நீட்டுகிறாள். அந்த வைரங்களோ பலகோடி பெருமானவைகள், அவளோ குடியிருப்பதற்கு சொந்தமாக ஒரு குடிசையில்லாத ஏழை.. அவளது நேர்மை அவனை கவர்கிறது.

An young settled his mortgage loan of his family diamond jewels, was met an accident in mid-night with jewels his hand. An young poor girl admitted him hospital and give safety his jewelry to him, but diamond jewels are more costliest.. even she doesn't have own house. her honesty attracts him loudly.

Languageதமிழ்
Release dateJul 19, 2023
ISBN6580133805525
Un Manathai Thanthuvidu

Read more from Muthulakshmi Raghavan

Related to Un Manathai Thanthuvidu

Related ebooks

Reviews for Un Manathai Thanthuvidu

Rating: 3.6 out of 5 stars
3.5/5

15 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Un Manathai Thanthuvidu - Muthulakshmi Raghavan

    http://www.pustaka.co.in

    உன் மனதை தந்துவிடு...

    Un Manathai Thanthuvidu…

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    http://pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    1

    இதோ உங்கள் குடும்ப நகைகள் அர்ஜுன்... வாங்கி சரிபார்த்துக் கொள்ளுங்கள்...

    அர்ஜுனிடம் அந்தப் பெட்டியை நீட்டினார் ராம்சந்த்... அவசரமாய் அந்த பிரௌன் கலர் பெட்டியை கைநீட்டி வாங்கிக் கொண்ட அர்ஜுன், பெட்டியைத் திறந்து பார்த்தான்... வைரங்கள் ஒளிர்ந்தன... கண்கள் பனிக்க அந்த நகைகளைக் கையிலெடுத்துப் பார்த்தான்... அழகான வடிவமைப்பில்... கண்ணைக் கூசவைக்கும்படி ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த வைர நகைகளின் மதிப்பு பலகோடி ரூபாய்...

    இவையெல்லாம் பழைய கால டிஸைன்கள்... நீங்கள் இதைப் புதுப்பித்துதான் போட முடியும்...

    எனக்கு நகை போடும் பழக்கமில்லை ராம்சந்த்... இவையெல்லாம் பெண்கள்தான் போடுவார்கள் என்று நினைக்கிறேன்... ஒருவேளை உங்களுக்கு அப்படியொரு பழக்கம் இருக்கிறதோ என்னவோ அதனால்தான் என்னிடம் இப்படிச் சொல்கிறீர்கள் போல...

    அர்ஜுன் கிண்டலாகக் கூற, ராம்சந்தின் முகம் கறுத்தது... அவர் விழிகள் இடுங்க அர்ஜுனைப் பார்த்தார்... அவர் பார்வையை லட்சியம் செய்யாமல் பெட்டியை மூடிய அர்ஜுன்...

    எல்லாம் சரியாக இருக்கிறது ராம்சந்த்... இத்துடன் நமக்கு இடையில் இருந்த பணப் பிரச்னை முடிந்து விட்டது... நான் கிளம்புகிறேன்... என்று எழுந்து கொள்ளப் போனான்...

    ஒரு நிமிடம் அர்ஜுன்...

    சொல்லுங்கள் மிஸ்டர் ராம்சந்த்...

    உங்களைப் போல... எனக்கும் நகை போடும் பழக்கம் இல்லை...

    இதைச் சொல்லவா என்னை நிறுத்தினீர்கள்...?

    இல்லை அர்ஜுன்... வேறு ஒன்றைச் சொல்வதற்காக நிறுத்தினேன்...

    என்ன...?

    என் மனைவிக்கு நகை போடும் பழக்கம் உண்டு...

    ச்ச்ச்...

    முகச்சுளிப்புடன் ராம்சந்தைப் பார்த்தான் அர்ஜுன்...

    ஆர் யூ பிளே வித் மீ...?

    நிச்சயமாய் இல்லை...

    எனக்கு நின்று பேசற நேரம் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியாத விஷயமா மிஸ்டர் ராம்சந்த்...? இவை என் குடும்ப நகைகள்... இவற்றை மீட்டுக் கொண்டு போக நானே நேரில் வருவதுதான் முறையாக இருக்கும் என்பதனால் மட்டுமே நான் நேரில் வந்தேன்... மைண்ட் இட்...

    டோண்ட் மிஸ்டேக் மீ மிஸ்டர் அர்ஜுன்... என் மனைவி இந்த நகைகளை மிகவும் விரும்புகிறாள்...

    அதற்காக...?

    உங்களுக்கோ இன்னும் திருமணம் ஆகிவில்லை...

    டோண்ட் வேஸ்ட் மை டைம்... சொல்லவந்ததை நேரடியாய் சொல்லுங்கள் மிஸ்டர் ராம்சந்த்...

    இந்த நகைகளுக்கு பெறுமானமான பணத்தைவிட அதிகமாக நான் தருகிறேன்... இந்த நகைகளை எனக்கு ஒரு விலை போட்டுக் கொடுத்து விடுங்கள்...

    அர்ஜுன் கண்களில் தீப்பொறி பறக்க ராம்சந்தை முறைத்துப் பார்த்தான்... அவர் சங்கடத்துடன் பார்வையை விலக்கிக் கொண்டார்... அறுபது வயதைத் தொட்டுக் கொண்டிருக்கும் அவரது வயதைக் கவனத்தில் கொண்டு தனக்குள் பொறுமையை வளர்த்துக் கொண்டான் அவன்...

    மிஸ்டர் ராம்சந்த்...

    என்ன சொல்லப் போகிறீங்க அர்ஜுன்... இந்த நகைகளைக் கொடுத்து விடுகிறீர்களா...?

    நீங்களோ வைர வியாபாரி... உங்களிடம் இல்லாத வைர நகைகளா...? ஏன் பழைய நகைகளின் மேல் ஆசைப்பட வேண்டும்...? இவை என் குடும்பச் சொத்து... பரம்பரையாய் பல தலைமுறைகள் கைமாறி... என்னிடம் வந்து சேர்ந்துள்ள என் குடும்பத்தின் பாரம்பர்ய நகைகள் இவை...

    எனக்கு மூன்று பெண்கள் அர்ஜுன்... உங்களுக்கே தெரியும்... எங்கள் குடும்பங்களில்... நாங்கள் வைர நகைகளைத்தான் பெண்ணுக்கு போட்டுவிட வேண்டும் என்பது... அத்துடன் வைரத்தின் மதிப்பு தெரிந்த வைர வியாபாரி நான்... உங்களிடமிருக்கும் வைரங்கள் கிடைப்பதற்கு அரியவை... அவற்றை என் பெண்களுக்கு சீதனமாக நான் கொடுத்தால் எங்கள் வட்டாரத்தில் என் மதிப்பு கூடும்...

    உங்களுடைய மதிப்பு கூடுவதற்காக விலை மதிக்க முடியாத இந்த நகைகளைக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை ராம்சந்த்...

    எல்லாவற்றுக்கும் விலை உண்டு அர்ஜுன்...

    இந்த நகைகளுக்கு கிடையாது ராம்சந்த்...

    அதுதான் ஏன்...? நீங்கள் பிஸினஸ்மேன்... எல்லோரும் ஒன்றை நூறாக்கினால்... நீங்கள் அந்த ஒன்றை கோடியாக்கும் வல்லமை படைத்தவர்... இந்த நகைகளுக்கான பணத்தை நீங்கள் பிஸினஸ்ஸில் முதலீடு செய்தால்... இதைப் போல பல மடங்கு சம்பாதித்து விடுவீர்கள்...

    நான் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தது இந்த நகைகளை மீட்பதற்காக ராம்சந்த்... என் தொழில் திறமையில் நான் இன்னும் முன்னுக்கு வருவேன்... இந்த நகைகளை விற்று முன்னுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை...

    இவ்வளவு பிடிவாதமாக இருப்பது எதற்காக...?

    இவை என் அம்மாவின் நகைகள் ராம்சந்த்... ஒரு ஃப்ளைட் ஆக்ஸிடெண்டில் என் அப்பா திடீரென்று இறந்து விட்டார்... நான் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்தேன் நான் திரும்பி வருவதற்குள்... கேப்டன் இல்லாத கப்பலின் நிலைமையை எங்கள் கம்பெனி அடைந்துவிட்டது... முதுகில் குத்தும் துரோகிகள் சமயம் பார்த்து முதுகில் குத்திவிட்டார்கள்... என் கம்பெனி ஆட்டம் கண்டு கொண்டிருந்தது... அந்த நிலைமையில் எனக்குத் தெரியாமலேயே என் அம்மா இந்த நகைகளை உங்களிடம் அடமானம் வைத்து விட்டாங்க...

    அதுதான் எனக்குத் தெரிந்த விஷயமாச்சே... மிஸஸ் மரகதம் ராஜசேகரன் தனியாக இதே பெட்டியைத் தூக்கி கொண்டு விடியற்காலையில் வந்தாங்க... எனக்குக்கூட ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது...

    ம்ம்... வீட்டை விட்டுத் தனியாக எங்கேயும் என் அம்மா போனதில்லை... சென்னையிலிருந்து ஹைதராபாத்திற்கு தனியாக காரில் வந்து விட்டாங்க...

    வைரங்களை விற்பதில் நான் நாணயமான வியாபாரி அர்ஜுன்... எத்தனை நகைகளை என்னிடமிருந்து உங்கள் பேரண்ட்ஸ் வாங்கியிருப்பாங்க...? உங்கள் குடும்பத்துடன் எனக்கு இன்று நேற்று பழக்கமில்லை அர்ஜுன்... தலைமுறை தலைமுறையாய் நாங்கள் வைர வியாபாரம் செய்து வருபவர்கள்... உங்கள் குடும்பத்தில் எங்களிடம் தான் தலைமுறை தலைமுறையாய் வைர நகைகளை வாங்குவார்கள்... உங்கள் கையிலிருக்கும் பாரம்பர்ய வைர நகைகளை செய்து கொடுத்த பரம்பரை என் பரம்பரை...

    "அதை நான் இல்லையென்று சொல்லவில்லையே ராம்சந்த்... என் அம்மா கொடுத்த பெட்டியைத் திறந்துகூடப் பார்க்காமல்... இத்தனை வருடங்களாய் பாதுகாத்து

    நான் வந்து கேட்டதும் அதே பெட்டியைத் தூக்கி நீட்டுகிறீங்களே... இதைவிட உங்களின் நேர்மைக்கும் நாணயத்திற்கும் வேறு அத்தாட்சி இருக்க முடியாது..."

    "இது என்ன அர்ஜுன்... இதைப் போய் பெரிய விஷயமாக சொல்கிறீங்க... இந்த வைர நகைகளைச் செய்து கொடுத்தவங்க நாங்க... இந்த நகைகளின் மதிப்பு எனக்குத் தெரியும்... என் கொள்ளுத் தாத்தா காலத்தில் ஆப்பிரிக்காவில் வாங்கி வந்த ஒரிஜினல் வைரங்களைக் கொண்டு கட்டிய வைர மாலையைப் பற்றிய கதையை

    என் அப்பா என்னிடம் சொல்லியிருக்கிறார்... இதை விலை கொடுத்து வாங்கத்தான் நான் ஆசைப்பட்டேன்... உங்களுக்கு விருப்பமிருந்தால் கொடுங்கள்..."

    இது பணமதிப்பு உடையது இல்லை ராம்சந்த்... என் அம்மாவின் கைபட்ட பெட்டி இது... அவர்களை அலங்கரித்த நகைகள் இவை... எந்தக் காரணத்திற்காகவும் இந்த நகைகளை நான் விற்கமாட்டேன்... எனக்குத் தேவையான சமயத்தில் என் அம்மா ஏற்பாடு செய்த போது அது எப்படிக் கிடைத்தது என்று கேட்கக்கூட எனக்கு நேரமில்லை... கடைசியில் இப்படித்தான் பணம் கிடைத்தது என்று தெரிந்த போது துடித்துப் போய்விட்டேன்...

    ஐ ஆம் ஸாரி அர்ஜுன்... அவசரத் தேவைக்கு அடமானம் வைப்பதாகவும் அதை விட்டால் வேறுவழியே இல்லையென்றும் உங்கள் அம்மா சொல்லிவிட்டாங்க... அதனால்தான் நான் பணம் கொடுத்தேன்...

    "இதில் உங்கள் தவறு எதுவுமில்லை ராம்சந்த்... அம்மா கொடுத்த பணத்தை நான் பிஸினஸ்ஸில் போட்டு விட்டேன்... உடனே அதை எடுக்க முடியவில்லை எடுத்தால் தொழில் தடம் புரண்டு விடும்... இத்தனை வருடங்களும் போராடி என் தொழிலை நிலைநிறுத்தி விட்டேன்... இப்போது என் அம்மா உடம்பு சரியில்லாமல் படுத்த படுக்கையாய் இருக்கிறாங்க... அவர்களின் மனதிற்குள் இந்த நகைகளைப் பாதுகாக்காமல் விட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1