Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nizhalodu Nizhalaga
Nizhalodu Nizhalaga
Nizhalodu Nizhalaga
Ebook222 pages2 hours

Nizhalodu Nizhalaga

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சாருலதாவை பார்த்த அடுத்த வினாடியே இவளே என் மனைவி என்று சபதம் கொண்டான் பாண்டியன். ஆசை காதலிக்கு தாலி கட்டிய அடுத்த வினாடியே கடமைக்கு கட்டுப்பட்டு நாட்டைக் காப்பாற்ற சென்று விட்டான். அவன் சென்ற அடுத்த வினாடி நடந்தது என்ன? தாலியை கழுத்தில் வாங்கிக் கொண்ட ஒரு மணி நேரத்திலேயே வாழாவெட்டியாக, சாருலதா தன் பிறந்தகம் சென்ற காரணம் என்ன? பாண்டியனையும் சாருவையும் நிரந்தரமாய் பிரிப்பதற்கு சதி செய்தவர்கள் யார், யார்? யாருக்கு யார் நிழலாய் நின்று இவர்களைச் சேர்த்து வைத்தார்கள்? நிழலாய் நின்ற காதலின் நிஜத்தை தெரிந்து கொள்ள வாசிப்போம்...

Languageதமிழ்
Release dateAug 26, 2023
ISBN6580133810095
Nizhalodu Nizhalaga

Read more from Muthulakshmi Raghavan

Related to Nizhalodu Nizhalaga

Related ebooks

Reviews for Nizhalodu Nizhalaga

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nizhalodu Nizhalaga - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நிழலோடு நிழலாக

    Nizhalodu Nizhalaga

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    1

    வானகமோ நிலவோடு

    வையகமோ நீரோடு

    நீ மட்டும் நிழலோடு

    நிழலாக ஏன் மறைந்தாய்?

    அதிகாலை நேரக் குளிர் காற்று பனிவாடையுடன் உடலைத் தீண்டிச் சென்றது. காடுகளடர்ந்த மலைப் பாதையின் ஓரத்தில் பூத்திருந்த பூக்களின் சிகப்பு நிறம் கண்ணுக்குக் குளுமையையும் மனதிற்கு உற்சாகத்தையும் அளித்தது. அந்த அதிகாலையில் அவர்களைப் போலவே ஜாகிங் வந்தவர்களில் அறிமுகமானவர்கள் கைகளை ஆட்டி விட்டுச் சென்றனர். பதிலுக்கு உற்சாகமாய் கையாட்டிக் கொண்டே ஓடிக் கொண்டு இருந்தார்கள் பாண்டியனும், காமேஷும்.

    காமேஷ்.

    என்ன பாண்டியா?

    நேத்து பாவனா கிட்டயிருந்து லெட்டர் வந்ததோ...?

    ஏய்ய்... என் பொண்டாட்டி எனக்கு லெட்டர் போட்டது உனக்கெப்படித் தெரியும்? நான் சொல்லவேயில்லையே?

    ம்ம்... சொன்னாத்தானோ... கண்ணைப் பார்த்தாத் தெரியாது? சிவந்து கெடக்கு. ராத்திரி பூராவும் உன் ரூம் லைட் எரிஞ்சுக்கிட்டு இருந்ததே... பின்னே பரிட்சைக்கா படிச்சுக்கிட்டு இருந்திருப்பே... பொண்டாட்டி லெட்டரையில்ல மனப்பாடம் பண்ணிக்கிட்டு இருந்திருப்பே.

    ஆமாண்டா. கட்டின பெண்டாட்டி லெட்டர் போட்டா ஒரு மனுசன் பிரிச்சுப் படிச்சா கூட உனக்குப் பொறுக்காதே. டேய் பாண்டீ... உனக்குப் பொறாமைடா. நாம இன்னும் கட்டை பிரம்மச்சாரியாய், தனிக்கட்டையாய்... இன்னும் கட்டை பிரம்மச்சாரியாய், தனிக்கட்டையாய்...

    தனிக்காட்டு ராஜான்னு சொல்லுடா.

    அதை நீ சொல்லிக்க நான் சொல்ல மாட்டேன். தனிக்கட்டைன்னுதான் சொல்வேன். எங்கே விட்டேன். ம்ம்... இப்படி ஒத்தைப் பனைமரமாய் நிற்கிறோம்...

    டேய்... அடையாறு ஆலமரம்டா.

    குறுக்கே பேசின மகனே! பொலி போட்டிருவேன். காலா காலத்திலே கல்யாணம் பண்ணிக்காம அடுத்தவனைப் பார்த்து காயறான். என் அழகுப் பெண்டாட்டி எனக்கு பக்கம் பக்கமா வரைவா. நானும் விடிய விடிய படிப்பேன். உனக்கு என்னடா நஷ்டமாப் போச்சு. நீயும் கல்யாணம் பண்ணிக்க. உனக்கும் உன் பெண்டாட்டி தினம் ஒரு லெட்டர் போடுவா.

    ஏண்டா என்னவோ நேயர் விருப்பம் மாதிரி லெட்டர் வரணும்கிறதுக்காக கல்யாணம் பண்ணிக்கவா? கொடுமைடா.

    கொடுமையா? நடிக்காதடா மச்சான்.

    நடிப்பா. ஏண்டா நான் சுதந்திரப் பறவையா இருக்கிறது உனக்குப் பிடிக்கலையா?

    அதெல்லாம் பிடிக்குது. என் பெண்டாட்டி கிட்டியிருந்து லெட்டர் வந்தா உனக்கு ஒளிஞ்சு படிக்கிறது போன் வந்தா உனக்குத் தெரியாமப் பேசறதுன்னு உன் ரோதனை தாங்கலைடா மச்சி. அதுதான் பிடிக்கலை.

    ஏண்டா செல்போனை காதில் வைச்சா மணிக் கணக்காப் பேசிக்கிட்டு உட்காருகிறே. பணம் என்னடா மரத்திலேயா காய்க்குது.

    உன்கிட்ட கேட்டேனா. நான் சாம்பாதிக்கிறேன். நான் போன் பில் கட்டுறேன்.

    அதுக்காக அளவு வேண்டாம்.

    அளவு கோலெல்லாம் இதுக்கு உதவாது மச்சி. நீ கல்யாணம் பண்ணி மூணே மாசத்திலே பெண்டாட்டியைப் பிரிஞ்சு காட்டுக்குள்ள வந்து உட்கார்ந்து பார். அப்பப் புரியும். நான் படும் பாடு. ஏண்டா உன் போலீஸ்காரன் புத்தி ராத்திரியிலே லைட் எரியறதை வைத்து பெண்டாட்டி கிட்டயிருந்து லெட்டர் வந்ததை கண்டு பிடிக்கத்தான் யூஸாகுமா? வேறு எதுக்கும் பயன்படாதா? என்றவாறு தோளில் கிடந்த துண்டை எடுத்து அதில் முகம் துடைத்துக் கொண்ட காமேஷ் இருபத்தியொன்பது வயதாகும் ஐ.பி.எஸ். அதிகாரி. சமீபத்தில் திருமணம் முடித்தவன் தீவிரவாதிகளைப் பிடிக்க காவல் துறையால் அமைக்கப்பட்ட விசேஷக் குழுவில் முக்கியப் பொறுபேற்று நடத்தும் காவல் துறை அதிகாரி. பணி நிமித்தம் மனைவியைப் பிரிந்து வந்திருக்கிறான். உடன் வந்துள்ள மற்றொரு ஐ.பி.எஸ். அதிகாரியான பாண்டியன், காமேஷின் சம வயதினன். பெற்றோர், அண்ணன் அண்ணி என்று கூட்டுக் குடும்பத்திலிருந்து வந்தவன். பாண்டியனின் தந்தை ஆளவந்தார் மதுரை நகரின் மிகப் பெரும் செல்வந்தர்களுள் ஒருவர். பெயர் பிரசித்தி பெற்ற வியாபாரி. நகரின் மையத்தில் கடைகளும், வீடுகளும் பக்கத்து கிராமத்தில் வயல்களும், தோப்புகளும் அதிகமுள்ள அந்தக் குடும்பத்தில் மூத்த மகன் பரதன் தந்தைக்கு உதவியாக குடும்பத் தொழிலில் இறங்கிவிட இளைய மகன் பாண்டியன் பிடிவாதமாய் ஐ.பி.எஸ். பாஸ் பண்ணி காவல் துறையில் சேர்ந்து விட்டான்.

    அதில் அவனது தந்தை ஆளவந்தாருக்கு நெஞ்சு கொள்ளாத பெருமை. தாயார் பங்கஜத்துக்கோ செல்ல மகன் அருகேயிருந்து செல்வத்தை அனுபவிக்காமல் உத்தியோகம் என்று பிரிந்து அலைவதில் மனம் பூராவும் வருத்தம்.

    மூத்தவன் பரதன் ‘செல்வம், செல்வத்தோடு சேரும்’ என்பதற்கு தகுந்த மாதிரி பெற்றோர் சொல் தட்டாமல் கோயம்புத்தூர் மில் ஓனர் மகளான பிரேமாவை மணம் முடித்திருந்தான். இளைய மகனுக்கும் மணம் முடிக்க ஆளவந்தார் தீவிரமாய் பெண் பார்த்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு முறை பாண்டியன் ஊருக்குப் போகும்போதும் அவர் பெண் பார்க்க ஏற்பாடு செய்வார். பாண்டியன் ஏதாவது காரணம் சொல்லித் தட்டிக் கழித்து விடுவான். திருமண ஏற்பாடு தடைபடும். திருமணத்தில் அவனுக்கு நாட்டமில்லாதது குறித்து ஆளவந்தார் வருந்துவார். ஆனால் பாண்டியனின் திருமணப் பேச்சு முறிபடும் போதெல்லாம் அவனது தாய் பங்கஜம் உள்ளூர மகிழ்வாள். அவளுக்கு அவளது அண்ணன் மகளான ரூபாவை பாண்டியனுக்கு திருமணம் செய்து வைக்க எண்ண மிருந்தது. ஆனால் நயவஞ்சகப் புன்னகையுடன் தோன்றும் அவளது அண்ணனின் நரிக்குணத்தை உணர்ந்த ஆளவந்தார் அதற்கு இசையவில்லை. அந்தப் பெண் ரூபாவும் தகப்பனாரின் கல்யாண குணங்களின் பிரதி பலிப்பாய் இருந்ததால் அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். அந்த முற்றுப்புள்ளியை கமாவாக்க பங்கஜமும் அவளது அண்ணன் வகையறாக்களும் முயன்று வந்தனர்.

    பேசிக்கொண்டே அவர்களது இருப்பிடத்தை நெருங்கிய காமேஷும் பாண்டியனும் அறைக்குள் நுழைந்தனர். ஒரு சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்து கொண்ட காமேஷ்,

    பாண்டியா, நாளையிலிருந்து பத்து நாட்கள் லீவு கிடைச்சிருக்கு. நான் மதியமே கிளம்பி விடுவேன். நீ எப்போ கிளம்புவாய் என்றான்.

    எனக்கென்ன ஊரில் புதுப் பெண்டாட்டியா காத்திருக்கிறாள். நான் நைட் டிரெயினில் கிளம்புவேன்.

    ஏண்டா உங்க அப்பாதான் நீ ஊருக்குப் போகும் போதெல்லாம் பத்துப் பெண்களையாவது பெண் பார்கக் வைக்கிறாரே. அதில் ஒன்று கூடவா பிடிக்கவில்லை. நீ ஊமென்று சொன்னால் உடனே கெட்டி மேளம் தானே.

    கெட்டி மேளம் வாழ்க்கையில் ஒரு முறைதாண்டா அடிக்கும்.

    நானென்ன நாலு முறையா அடிக்கச் சொன்னேன். நான் ஏகபத்தினி விரதன்டா. பாவனாகிட்ட கேட்டுப்பார்.

    நானும் உன் போலதான். என் வாழ்க்கையை பங்கு போட வரும் பெண் முதல் பார்வையிலேயே என் நெஞ்சத்தைக் கிள்ள வேண்டும்.

    என்னடா இது புதுக்கதை. கல்யாணம் பண்ணச் சொன்னால் காதல் பண்ணச் சொன்ன மாதிரி பேசகிறோன்.

    என்னைப் பொறுத்தவரை இரண்டும் ஒன்றுதான் காமேஷ். என் மனம் சிலிர்க்க வேண்டும். நான் தேடும் பெண் இவள்தானென்று என் மனம் கூவவேண்டும். அவள் மென்மையின் வடிவாக இருக்க வேண்டும்.

    சரிதான் போ. கவிஞன் மாதிரி பினாத்த ஆரம்பிச்சுட்டே. நீ தேடும் சீதை உனக்குக் கிடைக்க வாழ்த்தத் தான் என்னால் முடியும். இப்ப ஆளை விடு.

    காமேஷ் மதியம் கிளம்பிவிட பாண்டியன் இரவு ரயிலில் பயணமானான். அவனுக்குப் பிடித்த ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்ட பாண்டியன் எதிர்காற்றில் முடி பறக்க நட்சத்திர புள்ளிகளாய் தெரியும் மின் விளக்குகளையும், கடந்து போகும் தந்திக் கம்பங்களையும், மரங்களையும் ரசிக்க ஆரம்பித்தான்.

    காலை நேரம் பூஜைக்காக தோட்டத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்த பங்கஜம் யாரோ பின்னாலிருந்து கண்களைப் பொத்தவும் திகைத்துப் போனாள். கைகளைத் தொட்ட தாயுள்ளம் மகனைக் கண்டுவிட டேய் பாண்டிக்கண்ணா என்றாள் வாயெல்லாம் பல்லாக.

    அடப் பரவாயில்லையே கண்டு பிடிச்சிட்டிங்க.

    ஆமாடா. பெத்தவளுக்குத் தெரியாதாடா புள்ளைகையை. கண்ணுதான் குருடா போனா கருத்துமா குருடா போகும்?

    ஹா! வந்தவுடனே பழமொழியா. அம்மாவ் இப்படியே திரும்பிப் போயிடுவேன். பேசாம இருங்க.

    என்னைக் கேலி பண்ணலைன்னா உனக்கு தூக்கம் வராதே. போக்கிரி என்று அவனது முதுகில் செல்லமாய் அடித்தவள் பூக்கூடையை ஒரு கையிலும் மகனை ஒரு கையிலும் பிடித்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றாள்.

    இன்னும் யாருக்கும் துயில் கலையலை போலயிருக்கு என்றவனிடம்,

    ஆமாம். நீயும் போய் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து வா. உனக்குப் பிடித்த இடியாப்பமும், தேங்காய்ப் பாலும் செய்து வைக்கிறேன் என்றாள் பங்கஜம். பாண்டியன் குளித்து முடித்து வந்தபோது அவனது குடும்பம் மொத்தமும் அவனுக்காக சாப்பாட்டு மேஜையில் காத்திருந்தது. ஹாய் என்ற கூச்சலுடன் தம்பியைக் கட்டிக் கொண்டான் பரதன். கொழுந்தனென்ற மரியாதை கலந்து ஆனால் கொள்ளைப் பிரியத்துடன் நலம் விசாரித்த அண்ணி பிரேமா அவன் சாப்பிட தட்டை எடுத்து வைத்தாள். இரண்டு வயது பூஜாவை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்து விளையாடிக் கொண்டே சாப்பிட வந்தான் பாண்டியன். தித்தப்பா என்று ‘சித்தப்பா’வை மழலையாக விளித்தவாறு அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டது குழந்தை. அவனைக் கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்த ஆளவந்தார்.

    உத்தியோகம் எப்படி இருக்குப்பா? என்று விசாரித்தார்.

    ஆமா பாழாப் போன உத்தியோகத்தப் பத்தி சாப்பிடும் போது கூட பேசணுமா விடுங்க. பிள்ளை சாப்பிடட்டும் என்று சிடுசிடுத்தாள் பங்கஜம். ஆளவந்தார் சிரித்தார். உணவு முடிந்த பின் முன்னறையில் குடும்பத்தினர் அமர, உனக்கு எத்தனை நாள் லீவுப்பா என்றார் ஆளவந்தார். ஆரம்பிச்சிட்டார் உன் மாமனார் - மருமகளிடம் பங்கஜம் முணுமுணுக்க அதைக் கவனியாதவன் போல்,

    பத்து நாள் லீவுப்பா என்றான் பாண்டியன்.

    இந்தப் பக்கம் எப்ப மாறுதல் வரும்.

    ஆச்சுப்பா. இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தால் போதும் எங்கள் வேலை முடிஞ்சிடும். இந்தப் பக்கம் வந்திரலாம்.

    அப்படியா என்றபடி யோசனையாய் தாடையைத் தடவிய ஆளவந்தார், அப்போ நாளைக்குக் காலையிலே எல்லோரும் தஞ்சாவூர் போயிட்டு வந்திரலாம் என்றார்.

    எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள பாண்டியன்,

    என்ன விசேஷம்பா? என்றான்.

    எல்லாம் உன் கல்யாண விசேஷம்தான். அங்கே நம்ம தூரத்துச் சொந்தக்காரங்க வீட்டுப் பெண் ஜாதகம் உன் ஜாதகத்தோடு பொருந்தியிருக்கு. பத்துப் பொருத்தமும் இருக்குன்னு ஜோசியர் சொல்றார்...

    ஆளவந்தார் பேசிக் கொண்டே போக,

    மனப் பொருத்தம் இருக்குன்னு சொன்னாரா என்று மெல்லிய குரலில் பரதனிடம் சொன்னான் பாண்டியன். பிரேமா சிரிப்பை அடக்கிக் கொண்டு குனிந்து கொள்ள, என்னப்பா? என்று வினவினார் ஆளவந்தார்.

    இப்ப என்ன அவசரம்ன்னு பிள்ளை சொல்றான். அவன்தான் இரண்டு மாதத்தில் மாறுதலாகி வந்திடுவானே. வந்த பின்னால் பார்த்துக்கக் கூடாதான்னு கேட்கிறான் என்று பங்கஜம் இடைவெட்டினாள்.

    ஏண்டி அவன் ஒரு வார்த்தைகூட மறுத்துப் பேசலே. நீ ஒன்பது வார்த்தையை தோரணம் கட்டுகிறாயே. பெண்ணைப் பார்த்திட்டு வரலாம். பிடிச்சிருந்தா கல்யாணத்தை இரண்டு மாதம் கழித்து வைத்துக் கொள்ளலாம். நமக்குக் கல்யாண வேலை பார்க்க நாள் வேண்டாமா? என்ற ஆளவந்தாரிடம்,

    என்னமோ அவன் பெண்ணைப் பார்த்து பிடிச்சுப் போச்சுன்னு சொல்லிட்டாப்புலயில்ல குதிக்கறீங்க. நீங்களும் நாலு திசையும் கூட்டிக் கொண்டு போய் பெண் பார்க்க வைக்கறீங்க. அவன் பிடிக்கலைன்னு ஒத்த வார்த்தையில் உதறிப் போட்டு விடுகிறான். நான் ஒண்ணு சொல்றேன் கேளுங்க...

    சொல்லதே நீ என்ன சொல்வாயின்னு தெரியும்...

    கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவார்களா? என் அண்ணன் மக ரூபா இருக்கிறப்போ ஊரான் வீட்டுல பெண் தேடுவானேன் என்று நீட்டி முழக்கிய பங்கஜத்தை,

    அது வெண்ணையில்லடி. குடும்பத்தை எரிக்கிற மண்ணெண்ணெய். இங்கே பாருடி. நாளைக்கு நாம் தஞ்சாவூர் போகிறோம். பெண்ணைப் பார்க்கின்றோம். இஷ்டமிருந்தா வா. இல்லைன்னா வீட்டிலிரு என்று தீர்மானமாய் பேசி வாயை அடைத்த ஆளவந்தார் கோபத்துடன் கடைக்குச் சென்றுவிட குடும்பத் தலைவர் பேச்சுக்குக் கட்டுப்பட்ட குடும்பம் அடுத்த நாள் பயணத்திற்கான ஆயத்தங்களை ஆரம்பித்தது. அடிபட்ட புலியாக உறுமிய பங்கஜத்தின் உள்மனம் அடுத்த நாள் பார்க்கப் போகும் பெண்ணை பார்க்கும் முன்னரே வெறுக்க ஆரம்பித்தது.

    2

    Enjoying the preview?
    Page 1 of 1