Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yaarukku Mappillai Yaaro...
Yaarukku Mappillai Yaaro...
Yaarukku Mappillai Yaaro...
Ebook247 pages2 hours

Yaarukku Mappillai Yaaro...

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

முக்கோண காதல் கதை..தான் விரும்பிய தன் உயிரானவளை.. தன்னவள் ஆக்கிக் கொள்ள தவிக்கும் நாயகன் ...அவனை மனதார விரும்பும் நாயகி..அதை அறியா நாயகனின் மன போராட்டம்..அனைத்தையும் கடந்து இருவரும் இணை சேர்வதே இக்கதை..

Languageதமிழ்
Release dateJun 19, 2020
ISBN6580134205580
Yaarukku Mappillai Yaaro...

Read more from Viji Prabu

Related to Yaarukku Mappillai Yaaro...

Related ebooks

Reviews for Yaarukku Mappillai Yaaro...

Rating: 4.333333333333333 out of 5 stars
4.5/5

6 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yaarukku Mappillai Yaaro... - Viji Prabu

    http://www.pustaka.co.in

    யாருக்கு மாப்பிள்ளை யாரோ...!

    Yaarukku Mappillai Yaaro...!

    Author:

    விஜி பிரபு

    Viji Prabu

    For more books

    http://www.pustaka.co.in/home/author/viji-prabu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    ஓம் நமோ நாராயணாய....

    காதருகில் ஒலித்த செல்போனின் அலாரம் ஒலியை கைநீட்டி அணைப்பதற்குள்ளாக...

    அறையின் நாற்புறத்திலிருந்தும் கேட்க தொடங்கிய செல்ல திட்டுக்களைக் கேட்டு எழுந்த புன்னகையுடன் செல்போனின் அலாரத்தினை அடக்கிவிட்டு கட்டிலைவிட்டு எழுந்தமர்ந்தாள் கவிநிலா...

    நீயெல்லாம் அந்காலத்தில பொறந்திருக்க வேண்டிய ஜென்மம்டி... ஏன்தான் இந்த கலிகாலத்தில பொறந்து எங்க உசிரை வாங்கிறியோ தெரியல...

    கலிகாலத்துல பொறந்திருந்தாலும் பரவாயில்லடி... இப்படி நம்மளோட ரூம்மேட்டாக வந்து வாய்த்திருக் கிறாளே...! இந்த கொடுமையை எங்க போய் சொல்வது...!

    ஏய்... ச்சீ... இவவேற... பாட்டி மாதிரி கொடுமை கிடுமைன்னு பினாத்திக்கிட்டு இருக்கா பார்... உன்னைவிட கவிநிலா பெட்டர் தாண்டி...

    இருக்கும்டி... இருக்கும்... காலங்கார்த்தால... ஒரு ரொமான்டிக் சாங்கை கேட்டுக்கிட்டே எந்திரிச்சா... எவ்வளவு நல்லா இருக்கும்...! அன்னிக்கு ஃபுல் டேவும்... பிரஷ்ஷா இருக்கும்... ஆனா இவகிட்டயா...? ரொமான்டிக் சாங்கா...! ம்ஹீம்... சான்சே இல்லை... எப்பப்பார்த்தாலும் இப்படி சாமி பாட்டை அலாரம் சவுண்டா செட் பண்ணி வைச்சுக்கிட்டு என் மூடையே ஸ்பாயில் பண்ணுறா... என்னை கேட்டா இவதான் பர்ஃபெக்டா பாட்டி ரோலுக்கு செட்டாவாள்னு அடிச்சு சொல்லுவேன்...

    அடிச்சு சொல்லுவியா...! யாரை...!

    ஏன்... அடிக்கணும்னு முடிவு பண்ணிட்டா அதுக்காக வேற ரூமுல போயா ஆள் தேட முடியும்... கைக்கு வாகாக யார் அகப்படுறாங்களோ அவங்களை போட்டு தாக்க வேண்டியதுதான்... இதோ... இப்ப நீ என்கிட்ட சிக்கியிருக்கியே... இது மாதிரி...

    கூறிக் கொண்டிருந்தவள்... தனக்கு மிக அருகாக போடப் பட்டிருந்த மற்றொரு கட்டிலில் படுத்திருந்தவளின் முதுகில் கைநீட்டி ஒருஅறை கொடுக்க...

    அடிவாங்கிய ஆத்திரத்துடன் எழுந்தமர்ந்து தன்னுடைய தலையணையை கொண்டு அவளை அடிக்க தொடங்கினாள் மற்றவள்.

    அறைக்குள் நடந்து கொண்டிருந்த அத்தனை களேபரங்களையும் பார்த்தபடியே அறையின் ஒரு புறமாக இருந்த அட்டாச்டு பாத்ரூமிற்குள் சென்று மறைந்த கவிநிலா... ஒரு சில நிமிடங்களில் குளித்து முடித்து... விரிய விடப்பட்ட நீண்ட கூந்தலை துண்டினால் ஒற்றியெடுத்தவாறு குளியல் அறையில் இருந்து வெளிவந்தாள்...

    அப்போதும் தொடர்ந்து கொண்டிருந்த சண்டையினை சற்றும் கண்டு கொள்ளாதவளாக... அவையனைத்திற்கும் காரணமான சூத்திரதாரி தான்தான் என்பதை அறியாதவளாக... தன் போக்கில் ஒரு புத்தகத்தினை எடுத்து மடியில் வைத்தபடி கட்டிலில் அமர்ந்து... மிக தீவிரமாக படிக்க தொடங்கிவிட...

    ஒருவரது தலைமுடியினை மற்றவர் கொத்தாக பற்றியிழுத்தவாறு சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரும்... குளியல் அறையை விட்டு நிச்சலனமாக வெளிவந்த கவி நிலாவை பார்த்துவிட்டு... பின் ஒருவரையொருவர் அர்த்தபாவத்துடன் பார்த்தவாறு ஒருவர் மீதிருந்து மற்றவரின் கரத்தினை விலக்கிவிட்டு... ஒற்றமையின் சிகரமாக மாறி... ஒன்றாக கட்டிலை விட்டெழுந்து... ஒன்றாக அடிவைத்து நடந்து வந்து... ஒன்றாக கவிநிலாவின் அருகாக வந்துநின்று... ஒரே நேரத்தில் ஒருத்தி அவளது மடியில் இருந்த புத்தகத்தினை கைப்பற்றிக் கொள்ள... அதே நேரத்தில் மற்றவள் நிலாவின் முதுகில் ஓங்கி ஒரு அறை வைத்துவிட்டு... அந்த அடியினால் மனம் சமாதானம் ஆகாதவளாக... அவளது தலையிலும் நறுக்கென்று ஒரு கொட்டு கொட்டி விட்டு முறைக்க தொடங்க... தோழியரின் கோபத்தினால் பாதிக்கப்படாதவளாக... பொங்கி யெழுந்த சிரிப்புடன் அவர்களை ஏறிட்டுப் பார்த்தாள் கவிநிலா...

    ஏய் சரண்யா... குரங்கு... இப்ப எதுக்குடி என்னை இப்படி அடிக்கிற...

    ம்ம்... கேட்படி... கேப்ப... உன்னால நான் இந்த பாவனா கழுதைகிட்ட அடிவாங்கிக்கிட்டு கிடக்கிறேன்... நீ என்னடான்னா ஒண்ணுமே நடக்காதது மாதிரி குளிச்சு முடிச்சுட்டு... படிக்க உட்கார்ந்திருக்க...?

    இப்ப உன் கோபத்துக்கான காரணம் என்னன்றதை தெளிவாக சொல்லு சரண்யா... பாவனாகிட்ட அடிவாங்கினதுதான் காரணமா... இல்ல நான் படிக்க உட்கார்ந்தது காரணமா... உண்மையை சொல்லு...

    கவிநிலா பொங்கிவந்த சிரிப்பினை அடக்கிக் கொண்டவாறு முகத்தை தீவிரமாக வைத்தபடி கேட்க... அவளது கேள்வியினால் திகைப்படைந்தவளாக அசடுவழிய நின்றுவிட்ட சரண்யாவை பார்த்து... வாய்விட்டு சிரித்தவாறு... அவளது தலையை செல்லமாக தட்டிவிட்டு... கவிநிலாவின் அருகில் சிரிப்புடன் அமர்ந்து விட்டாள் பாவனா...

    நீ இருக்கியே கவி...! சரியான கிரிமினல்டி நீ...! உனக்கிருக்கிற இந்த கிரிமினல் மைண்டுக்கு பேசாம நீ லாயருக்கு படிக்க போயிருந்தன்னு வையி... ச்சும்மா... ஹைகோர்ட் சுப்ரீம் கோர்ட்ல இருக்கிற அத்தனை லீடிங் லாயர்களையும் பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்ச மறுமாசத்துலயே காலி பண்ணியிருப்ப...

    க்கும்... நீதான் இவளை மெச்சுக்கணும்டி பாவனா... லாயரா சைன் பண்றதுக்கெல்லாம் நீ சொல்கிற மாதிரி கிரிமினல் மைண்ட் மட்டும் இருந்தாப் போதாதுடி... பேச்சுத் திறமையும் இருக்கணும்ப்பா... நம்மாளுக்குத்தான் அந்தத் திறமை கிடையாதே...

    ஏய் சரண்யா... ஏண்டி அப்படி சொல்லுற...

    பின்ன என்னவாம்...? பேச்சு திறமை இருந்திருந்தால்தான் இத்தனை வருசத்துல அந்த வாசுகிட்ட இவளோட லவ்வை சொல்லியிருக்க மாட்டாளாடி...! நானும் இவகூட பிரண்டான காலத்துல இருந்து இவளும் அவன்கிட்ட பேசிருவா... பேசிருவான்னு வெயிட் பண்ணி... வெயிட் பண்ணி... டயர்டாகிட்டேண்டி...

    இவ பேசாததால டயர்டானியோ இல்லையோ... இப்படி பேசிபேசியே நீ டயர்டாகிட்டன்றது மட்டும் தெளிவா தெரியுதுடி... போதும்... கொஞ்சமாவது மூச்சு வாங்கிக்கிட்டு அமைதியா இரு... போ...

    சரண்யாவின் பேச்சினால் முகம் வாடிவிட்டவளாக அமர்ந்திருந்த கவிநிலாவை கண்டு... மனம் கனிந்தவளாக... பாவனா அதட்ட... தோழியின் அதட்டலினால்

    கோபம் கொள்ளாதவளாக குனிந்து... வாஞ்சையுடன் கவிநிலாவினை அணைத்துக் கொண்டாள் சரண்யா...

    உடனே இப்படி முகத்தை உம்முன்னு வெச்சுக்காத கவி... உனக்கு அந்த வாசு சரியான மேட்ச்... நீ இப்படியே இருந்தேன்னா அவன் வேற யாரையாவது கரெக்ட் பண்ணிக்கிட்டு போயிட மாட்டானா... அந்த அக்கறையிலதான் அப்படி பேசிட்டேன்...

    ஆமாமாம்... இப்ப மட்டும் அவன் என்னமோ பெரிய யோக்கிய சிகாமணியாக இருப்பதைப் போல பேசுறியேடி...! அவன் எப்பவுமே கோபியர் புடைசூழ இருக்கிற கிருஷ்ணனைப் போலத்தான் வலம் வந்துக்கிட்டு இருக்கிறான்... இவனுக்கு வாசுங்கிற பேரைவிட... கண்ணன்னு பேர் வெச்சிருந்தால் கரெக்டாக இருந்திருக்கும்... இதுல புதிதாக இவன் இன்னொருத்திகூட போயிருவானோன்னு இவளை வேற பயப்பட சொல்லுற...

    ஏய்... ச்சீ... நீ இவ பேச்சையெல்லாம் கண்டுக்காத கவி... இந்த பாவனாவுக்கு வாசுவை கண்டாலே ஆகாது... நீ என் பேச்சைக் கேளு... பேசாம சீக்கிரத்துல அவன்கிட்ட புரொபோஸ் பண்ணுகிற வழியை பாரு கவி...

    ஆமாம் கவி... நீ என் பேச்சை கண்டுக்கிட்டாத்தான் உருப்பட்டு போய்யிருவியே...! அதனால என் பேச்சை கேட்காம... இந்த சரண்யா பேச்சை மட்டுமே கேளும்மா... கூடிய சீக்கிரத்திலேயே நீ ரொம்ம்ம்ப... நல்ல்ல்லாவே வந்திருவ...

    பாவனா...! பேசாம இருந்துக்க... இப்ப என் வாயிலதான் நல்ல்லா நல்ல்லதா வரப்போகுது பார்...!

    வேண்டாம் தாயே... காலங்கார்த்தால பிரஷ் பண்ணாத உன் வாயில இருந்து எந்த நல்லது கொட்டினாலும்... அதை பார்க்க நான் தயாராக இல்லை... எக்கேடோ கெட்டு ஒழிங்க... எனக்கென்ன வந்தது...!

    ம்ம்... அது...! அந்த பயம் இருக்கணும்... நீ வா கவி... நான் உனக்கு டிரெயினிங் குடுக்கறேன்... அதுப்படி நடந்துக்கிட்டேன்னு வையி... வாசு உனக்குத்தான்...

    க்கும்... அதுக்கப்புறம் வர்ற கஷ்டமும் உனக்குத்தான் கவி...

    நீ இன்னமும் இங்கேதான் இருக்கியா... உன்னை...

    கவிநிலாவிடம் சரண்யா கூறிய அதே தொனியில் கூறிய பாவனாவை அடிப்பதைப் போல சரண்யா துரத்த தொடங்க... அவளது கரங்களுக்கு அகப்படாமல் போக்குக்காட்டியவாறு குளியல் அறைக்குள் சென்று மறைந்துவிட்டாள் பாவனா...

    எப்படியும் நீ வெளியே வந்துதானே ஆகணும்... அப்ப வெச்சுக்கறேன்டி உன்னை...

    சீச்சி... தப்பாப் பேசாதடி... நீ என்னை வெச்சுக்கிறேன்னு சொல்றதை வேற யாராவது கேட்டுவிட்டு... என்னையும் சேர்த்து தப்பா பேச மாட்டாங்களா...! உனக்கு கொஞ்சமாவது விவஸ்தை இருக்கா...

    என்னது...! இப்ப நீதாண்டி விவஸ்தை இல்லாம பேசிக்கிட்டு இருக்க... இரு இரு... நீ இன்னிக்கு பூராவும் வெளியிலயே வரமுடியாத படிக்கு பண்ணுகிறேனா இல்லையா பார்...

    என்ன பண்ணுவ...! பாத்ரூம் கதவுக்கு வெளியில லாக் இல்லையே...

    கொதித்து கொந்தளித்த சரண்யாவை பாத்ரூமில் இருந்தபடியே கிண்டலாக கேட்டுக் கொண்டிருந்த பாவனாவை... உண்மையிலேயே ஒன்றுமே பண்ண முடியாதவளாக பற்களை நறநறவென கடித்தவாறு... அவள் பாத்ரூமில் இருந்து வெளிவரும் தருணத்திற்காக பாவனா காத்திருக்க தொடங்க...

    அவளது நிலையை நன்றாக அறிந்திருந்தவளாக... வெகு பொறுமையாக புன்னகையுடன் குளிக்க தொடங்கினாள் பாவனா...

    அறையில் நடக்கும் அத்தனை களேபரங்களையும் கண்ணுற்றவாறு.... ஆனால் அதில் கலந்து கொள்ள மறுக்கும் சோம்பேறித்தனத்துடன்... போர்வையில் முடங்கியபடி அனைத்தையும் ரசித்து சிரித்தவளாக அவர்களது மற்றொரு அறைத் தோழியான பிரேமா படுத்திருக்க...

    தன்னைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் அனைத்தையும் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தாலும்... மனதால் அதனை உணராதவளாக... மயக்கம் கொண்ட மனதுடன் அமர்ந்திருந்தாள் கவிநிலா...

    ‘வாசு...’

    அவளது எண்ணம் முழுவதிலும் அந்த ஒற்றைப் பெயரே நிறைந்திருக்க... கவிநிலாவின் மயக்கம் கொண்ட மனம் அந்த பெயருக்கு உரியவனிடத்தில் மையம் கொண்டுவிட... கனவு மிதக்கும் கண்களுடன்... அவனைப் பற்றி எண்ணமிட தொடங்கிவிட்டாள் கவிநிலா...

    அவர்கள் படித்துக் கொண்டிருக்கும் அந்த பொறியியல் கல்லூரியானது... அந்த சுற்று வட்டாரத்திலேயே பெயர் பெற்ற பெரிய கல்லூரியாக இருக்க... அந்தக் கல்லூரியின் சார்பாக... கல்லூரி முதல்வரால் அனுப்பப்பட்டிருந்த விருப்பக் கடிதத்துடன் அந்த கல்லூரியில் காலடி எடுத்து வைத்த கவிநிலாவிற்கு... அதன் ஆடம்பரத் தோற்றம் உள்ளூர ஒருவித அச்சத்தைக் கொடுத்தது...

    தன்னுடன் வந்திருந்த தந்தையை ஒட்டினாற்போல நின்றவாறு அவரது கரத்தினை கெட்டியாக பற்றிக் கொண்டாள் அவள்...

    என்னடா கண்ணு...! பயமாக இருக்கா...

    அவளது பயம் உணர்ந்தவராக... அவளது தந்தையான வாசன் வாஞ்சையுடன் கேட்க... ஆமோதிப்பாக தலையசைத்த மகளின் தலையினை ஆதூரத்துடன் தடவிக் கொடுத்தார் அவர்...

    அங்க பாருடா கண்ணு... அங்க கியூவில நிக்கிற அத்தனை பேரும் இந்த காலேஜ்ல சீட் கிடைக்குமான்னு கேள்வியோட காத்துக்கிட்டு இருக்காங்க... ஆனா நீ...? நீ படிச்ச ஸ்கூலில் மட்டும் இல்லாம... இந்த மாவட்டத்துலயே முதல் ஆளாக மார்க் வாங்கி... இந்த காலேஜ் பிரின்சிபாலே எங்க காலேஜ்ல வந்து சேர்ந்துக்கங்கன்னு எழுதி அனுப்பிச்ச அனுமதி கடிதத்தோட வந்து நின்றுக்கிட்டு இருக்க... நீ பெருமையோட தலைநிமிர்ந்து நிக்கணும்டா... இப்படியெல்லாம் பயப்படக்கூடாது... சரியா...

    ம்ம்... சரிங்கப்பா...

    ஆறுதல் கூறிய தந்தையின் வார்த்தைகளை மறுக்க முடியாதவளாக சம்மதமாக தலையசைத்தாலும்... மகளின் கண்களில் மாறாமல் நிலைத்திருந்த அச்சத்தினை புரிந்து கொண்டவராக... ஆறுதலாக அவளை அணைத்துக் கொண்டார் அவர்...

    கைக்குள்ளேயே வளர்ந்ததுங்கய்யா... அப்படித்தான் இருக்கும்... நீங்க ஒண்ணும் பயப்பட வேண்டாம் சின்னம்மா... யாராவது ஏதாவது சொன்னங்கனா ஒரே ஒரு போன் போடுங்க போதும்... அடுத்த நிமிசமே இங்க வந்து நின்னுருவோம்...

    ஆமாம்மா... நீ படிக்கிற வேலையை விட்டுட்டு... இவனுக்கு போன் பண்ணிக்கிட்டே இரு... நல்லா இருக்கும்...! நீ சும்மா இரு சின்னையா... இது என்ன நம்ம ஊரு பள்ளிக்கூடம்னு நினைச்சியா... அப்படியெல்லாம் நினைச்ச நேரத்துல.... யாரு வேணும்னாலும் வந்துரமுடியாது... இந்த காலேஜோட ரூல்ஸே வேற... பெத்தவங்களைத் தவிர... மத்த யாரும் காலேஜ் ஹாஸ்டலுக்குள்ள வரமுடியாது...

    அதுவும் அப்படியா...! சரியாப் போச்சு போங்க...

    சின்னையா என்றழைக்கப்பட்ட கார் டிரைவர் அசட்டுத்தனமாக தலையை சொறிந்து கொண்டவாறு அவளை பரிதாபமாக பார்த்தவிதத்தில் மேலும் கலவரம் கொண்டவளாக தந்தையை ஒட்டி பயத்துடன் நின்று விட்டாள் கவிநிலா...

    நீ பதட்டப்படாத கண்ணு... இந்தா இருக்குற நம்ம ஊரில இருந்து வாரத்துல ரெண்டு மூணு நாளைக்கு நாங்க வந்துர மாட்டமா...? எங்களாலயும் உன்னை பிரிஞ்சு இருக்க முடியாதுல்லடா...?

    எனக்கு ஹாஸ்டல் வேண்டாம்ப்பா... நான் வீட்டில் இருந்தே காலேஜீக்கு வந்துக்கறேன்ப்பா...

    ஆமாங்கய்யா... சின்னம்மா சொல்றதுதான் சரி... நானே தினமும் கொண்டு வந்து விட்டுட்டு... கூட்டிக்கிட்டும் வந்துடறேன்...

    உன்னை அப்பவே பேசாம இருன்னு சொன்னேன் சின்னையா...

    கவிநிலா கூறியதைக் கேட்டு முகமலர்ச்சியுடன் இடைமறித்து கூறியவனை ஒரு அதட்டலில் வாய் மூடி நிற்க செய்துவிட்டு மகளின் முகத்தினை திரும்பிப் பார்த்த வாசனிடம் கண்டிப்பு இருந்தது...

    இப்படியெல்லாம் அச்சப் பிர்சுன்னு உளறக் கூடாது கவி... வீட்டில் இருந்து இங்கே வந்து திரும்புறதுக்கே நேரம் சரியாக இருக்கும்... இதில் நீ எப்படி படிச்சு நல்ல மார்க் எடுக்க முடியும் சொல்லு... அதுவே இங்க ஹாஸ்டல்ல தங்கி படிச்சா... உன்னை சுற்றி நாலு படிக்கிற புள்ளைங்க கூட இருக்கும்... உனக்கும் படிக்கிறதுக்கு நேரமும் கிடைக்கும்... புரிஞ்சுதா...?

    ம்ம்...

    சரி சரி வா... டைம் ஆகுதுல்ல... நல்ல நேரம் இருக்கும் போதே அட்மிசன் பார்மில் கையெழுத்து போட்டுவிடனும்...

    தயங்கி நிற்கும் மகளை ஒரு கையால் ஆறுதலாக அணைத்தவாறு... வரிசையாக நின்றிருந்த மாணவர்களை ஒரு மார்க்கமாக பார்த்தவாறு... அவர்களை முந்திக் கொண்டு... அனைவருக்கும் முன்பாக கல்லூரியின் அலுவலக அறைக்குள் மிடுக்கான நிமிர்வுடன் நுழைந்தார் வாசன்...

    சார்... க்யூவில் வரணும்...

    "தெரியும் சார்... ஆனால் எங்ககிட்ட அனுமதி கடிதம் இருக்கிறது... இது என் பொண்ணு கவிநிலா... டிஸ்ட்ரிக்ட்ல பர்ஸ்டா வந்த ஸ்டேண்ட்... உங்க காலேஜீல இருந்து இங்க வந்து சேர்ந்துக்க

    Enjoying the preview?
    Page 1 of 1