Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Panneer Pushpangal
Panneer Pushpangal
Panneer Pushpangal
Ebook358 pages3 hours

Panneer Pushpangal

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

தாய்மையின் மகத்துவம் கலந்த காதல் கதை.அண்ணன் மகனை தன் மகனாக பார்க்கும் ஊமைத் தாய்..அவளை பழிவாங்க காத்திருக்கும் கபட உறவுகளுக்கு நடுவே மகனை எவ்வாறு வாழ வைக்கிறாள் என்பதைக் கதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580134206714
Panneer Pushpangal

Read more from Viji Prabu

Related to Panneer Pushpangal

Related ebooks

Reviews for Panneer Pushpangal

Rating: 4 out of 5 stars
4/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Panneer Pushpangal - Viji Prabu

    https://www.pustaka.co.in

    பன்னீர் புஷ்பங்கள்...

    Panneer Pushpangal...

    Author:

    விஜி பிரபு

    Viji Prabu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/viji-prabu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    1

    பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்..

    மார்கழி மாத பனிக்கு இதமாக கம்பளிபோர்வையை நன்றாக காது வரையிலும் இழுத்து மூடி.. உறங்கிக் கொண்டிருந்தவனின் செவிகளில்.. இறுக்கமாக மூடப்பட்டிருந்த கண்ணாடி ஜன்னல்களையும் கடந்து வந்து விழுந்த பாடலினால்.. உறக்கம் கலைந்து எழுத்துவிட்டான் வசந்தன்..

    அதற்கு மேல் உறங்க மனமில்லாதவனாக எழுந்து சென்று ஜன்னல் கதவுகளை விரிய திறந்து விட்டவனை.. எல்லையற்ற சுதந்திரத்திரத்துடன் ஆரத்தழுவிக் கொண்டது பனிகாற்று..

    சுத்தமும்.. ஈரப்பதமுமாக.. சில்லென தன்னை தழுவிக் சென்ற பனிக்காற்றினை.. ஒருமுறை ஆழமாக உள்வாங்கிக் கொண்டவாறு.. இரு கைகளையும்யுயர்த்தி நெட்டி முறித்தவனின் பார்வையில்..

    சுத்தமமாக சாணமிடப்பபட்டு.. கூட்டியிருந்த வாசலை அடைத்து.. அழகாக கோலமிட்டுக் கொண்டிருந்த சிவகாமி கண்களில்பட.. ரசனையுடன் அப்படியே நின்று விட்டான் வசந்தன்..

    வெண்ணிற கோலமாவில்.. சிவகாமியின் கைவண்ணத்தில் அவள் போட்டிருந்த கோலத்தில் இருந்த மயிலும்.. அன்னப்பட்சியும்.. அப்படியே வெண்ணிற தோகையும்.. சிறகுகளும் கொண்டு சிறகடித்து பறப்பதைப் போன்ற தொரு பிரம்மையை கொடுக்க..

    ஒருமுறை கண்சிமிட்டி.. தன் பிரம்மையிலிருந்து விடுபட்டவனாக.. ரசனையுடன் வசந்தன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே.. அவன் பார்த்துக் கொண்டிருப்பதை உள்ளுணர்வினால் உணர்ந்தவளாக.. அவனிருக்கும் ஜன்னலின் புறமாக திரும்பி.. பின்

    அவன் அங்கிருப்பதைக் கண்டு.. வசந்தனை பார்த்து புன்னகைத்தாள் சிவகாமி..

    அவள் அவ்வாறு புன்னகைத்த மறுநொடி.. அவளது வீட்டிற்கு மிக அருகாமையில்.. அடர்த்தியாக.. உயரமாக வளர்ந்து நின்றிருக்கும் பன்னீர் மரத்தில் இருந்து.. அவளது சிரிப்பினை ஆசீர்வதிப்பதைப் போல.. காற்றில் பறந்து வந்து அவள் மீது உதிர்ந்த பன்னீர் புஷ்பங்களை..

    ஒருவிதமான ஆராதனை பாவனையுடன்.. ஏற்றுக் கொள்பவளாக அம்மரத்தினை அண்ணாந்து பார்த்த சிவகாமி.. அப்போது நின்றிருந்த அக்கோலமானது.. மிகச் சிறந்த ஓவியனொருவன் கவனமாக தீட்டிய சித்திரத்திற்கு நிகரானதொரு நிறைவும் அழகுமாக இருப்பதை மனதார ரசித்த வசந்தனுக்கு.. அந்த காலைப் பொழுது.. மிக மிக ரம்மியமாக.. அன்றைய பொழுதின் ஆனந்த தொடக்கமாக தோன்ற.. மனதில் படர்ந்த புத்துணர்வுடன்.. அதற்கு மேலும் அறைக்குள் முடங்கிக் கிடக்க முடியாதவனாக.. அறையை விட்டு வெளியேறி.. தங்களது மாளிகைக்கு சற்று தள்ளியிருந்த சிவகாமியின் வீட்டை நோக்கி செல்ல தொடங்கினான் வசந்தன்..

    அவன் அவ்வாறு வருவான் என்று எதிர் பார்த்திருந்தவளாக.. சிவகாமியும் மிக விரைவாக தன் கோலத்தினை முடித்துக் கொண்டிருக்க..

    அதனை ரசித்து பார்த்தவாறு சென்று.. அவளது வேலையை கலைக்காத கவனத்துடன்.. இயல்பாக வீட்டின் வாசல் படியில் அமர்ந்து கொண்டான் வசந்தன்..

    மென்மையும்.. கனிவுமாக.. அவனை பார்த்தவாறே.. தன் வேலையை விரைந்து முடித்துக் கொண்டு எழுந்துவிட்டவள்.. கோல மாவினை அதனிடத்தில் கொண்டு சென்று வைத்துவிட்டு வருவதற்குள்..

    அவர்களது வீட்டில்.. பல்லாண்டுகளாக பணிபுரிந்து வரும் பொன்னி கொண்டு வந்து நீட்டிய காபி டம்ளர்களில் ஒன்றினை வாங்கி வசந்தனிடம் கொடுத்து விட்டு.. மற்றொன்றை தான் எடுத்துக் கொண்டவாறு வசந்தனின் அருகில்.. அதே படியில் அமர்ந்தாள் சிவகாமி..

    கோலம் ரொம்ப அழகா இருக்கு ஆண்ட்டி..! உங்க கையில் ஏதோ ஒரு மேஜிக் இருக்கு..!!

    வசந்தன் ரசித்து கூறிய விதத்தில்.. சிவகாமியின் முகத்தில் பெருமிதம் கலந்த புன்னகை மலர.. அதெல்லாம் ஒன்றுமில்லை என்பதைப் போல மறுதலிப்பாக தலையசைத்தாள் அவள்..

    சிவகாமியால் பேச முடியாது.. காது கேட்கும்.. வாய் பேச முடியாதவள் அவள்.. ஆனால் தன்குறை வெளியே தெரியாதவகையில்... தன் அழகான மௌனச் சிரிப்பினால் அதனை மறைத்துக் கொள்ளும் சிவகாமியின் மீது... மட்டற்ற அன்பும் மரியாதையும் கொண்டிருந்தான் வசந்தன்..

    சிறு வயது முதல்.. அவனுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக.. அன்று முதல் இன்று வரையிலும் மாறாத அக்கறையுடன் வசந்தனை பார்த்துக் கொண்டிருக்கும் சிவகாமியின் மீது.. தன் அன்னைக்கு நிகராக அன்பு வைத்திருந்தான் அவன்..

    காபியை குடித்து முடித்துவிட்டு.. எழுந்து சென்ற சிவகாமி.. பன்னீர் மரத்தின் வேர்களில் நன்றாக சென்று பாயும்படிக்கு.. நேராக செல்லும் வாய்காலின் அருகில் இருந்த பைப்பினை திறந்து விட்டு.. அதிலிருந்து வரும் தண்ணீர் எங்கும் தேங்கி நின்று விடாதவாறு.. வாய்காலின் ஊடாக கிடந்த சிறு குப்பைகளை அகற்றி விட்டு.. மரத்திற்கு சென்று பாயும் தண்ணீரினை பார்த்தவாறு அதனருகில் சென்று நிற்க..

    அவளது கரங்கள் தன்னிச்சையாக.. ஆசையும் ஆதூரமுமாக அந்த மரத்தினை தன் வழக்கமான மென்மையுடன் தடவுவதை பார்த்த வசந்தனுக்கு.. ஏனோ.. அவளை அந்த நிலையில் பார்க்க.. மனதிற்கு கஷ்டமாக இருந்தது..

    அந்த பன்னீர் மரம்.. சிவகாமிக்கு.. அவளது தாயிற்கு நிகரானது.. அவள் அதனை தன் தாயின் ஒரு ரூபமாகவே நினைத்தாள்..

    சிவகாமியின் தாயாரான.. கமலத்தின் கரத்தினால் நடப்பட்டு.. வளர்க்கப்பட்ட மரம் என்பதனால்கூட.. அவளுக்கு அப்படி தோன்றியிருக்கலாமோ என்னவோ..

    ஆனால்.. அவள் அவளது அன்னையின் நினைவும்.. ஏக்கமுமாக அந்த மரத்தின் அடியில் சென்று நிற்கும் போதெல்லாம்.. வசந்தனின் மனம்.. ஓடிச் சென்று அவளையணைத்து ஆறுதல் படுத்தவே துடிக்கும்..

    அவன் சிறு பாலகனாக இருக்கும் போது.. அவனிடம் சிவகாமி தனக்கும் அந்த மரத்திற்கும் இடையில் இருக்கும் பிணைப்பினைப் பற்றி.. சைகையாகவே பலபல கதைகளை சொல்லி இருக்கிறாள்..

    அவள் பிறந்து.. வளரும் வரையிலும்.. அந்த பன்னீர் மரத்தின் கிளையில்தான் அவளது அன்னை அவளுக்கு தொட்டில் கட்டியிருந்தார்களாம்..

    அதன் பின்.. அவள் சிறுமியாக இருந்த போது.. அந்த தொட்டில்.. ஊஞ்சலாக மாறியிருந்ததாம்..

    சிவகாமிக்கும்.. அவளது அன்னைக்கும் இடையிலான உறவில்.. அந்த பன்னீர் மரம் மிக முக்கிய அங்கம் வகித்திருந்தது..

    அவள் கூறும் அத்தனை கடந்த கால கதைகளிலும்.. அந்த மரமும் தவறாமல் இடம் பெற்றிருக்கும்..

    வசந்தனுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக.. அந்த மரத்தினை பூக்கள் இல்லாமல் அவன் பார்த்ததே கிடையாது..

    வருடத்தின் அத்தனை நாட்களிலும் நீண்ட காம்புகளுடன் கூடிய மலர்கள் கொத்துக் கொத்தாக பூத்துக் குழுங்கிக் கொண்டிருக்க.. தனக்கேயுரித்தான தெய்வீக நறுமணத்துடன் இருக்கும் அந்த பன்னீர்மரம் ஒரு வினோத மர்மமாகவே வசந்தனுக்கு தோன்றினாலும்..

    சிவகாமிக்கு மிகவும் பிடித்தமான மரம் என்பதால்.. வசந்தனுக்கும் அந்த மரமும்.. அதன் மலர்களும்.. அதன் நறுமணமும்.. மிகவும் பிடிக்கும்..

    சிவந்த நிறமும்.. அடர்த்தியாக இடைதாண்டி நீண்டிருக்கும் கூந்தலும்.. வசீகரிக்கும் தோற்றமும்.. அதனுடன் கூடிய ஒருவித தெய்வீக மென்மையுமாக சிவகாமி இயற்கையாகவே அழகாக இருந்தாலும்..

    அந்த மரத்தின் அடியில் அவள் நிற்கும் நேரங்களில் அவளது அந்த அழகானது பலமடங்கு கூடி.. ஒரு தேவதையைப் போல காட்சியளிப்பதை வியப்பாக பார்த்துக் கொண்டிருக்கும் வசந்தனுக்குள்.. அவள் ஏன் திருமண பந்தத்தினை வெறுத்து அந்த பன்னீர் மரத்தினை போலவே.. அழகான தனி மரமாக நின்று விட்டாள்..

    என்று கேள்வி எழுந்தாலும்.. தன்னுடைய கேள்வியை சிவகாமியிடம் வெளிப்படையாக கேட்க அவனுக்கு தெரியம் வராததால்.. தன் கேள்வியை தனக்குள்ளேயே புதைத்து.. மறைத்துக் கொள்வான் அவன்..

    உன்னை காணோம்னு அங்க அம்மா தேடிக்கிட்டு இருக்காங்க.. நீ வழக்கம்போல் இங்க வந்து நின்னுட்டியாக்கும்.. எத்தனை வயசானாலும் திருந்தாம.. அப்படியேதாண்டா இருக்க நீ..

    ஆசையுடன் சிவகாமி மரத்தை பார்த்துக் கொண்டிருக்க.. அதே ஆசையுடன் அவளது அந்த ஆராதனை மனோபாவத்தினை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த வசந்தன்.. தனக்கு பின்னாலிருந்து.. அந்த சூழ்நிலைக்கு ஒட்டாத வெறுப்புடன் எழுந்த குரலினைக் கேட்டு திரும்பிப் பார்க்க.. தன் வெறுப்பினை மறைக்காமல் முகத்தில் வெளிக்காட்டியவாறு நின்றிருந்தான் விவேக்..

    விவேக்.. வசந்தனின் உடன் பிறந்த அண்ணன்.. அவர்களது பெற்றோரான அன்பரசன்.. ரேணுகா தம்பதியினரின் மூத்த புதல்வனான அவனுக்கு.. ஏதோ ஒரு காரணத்தினால்.. சிவகாமியை அறவே பிடிக்காது..

    ஒருவேளை.. இருவரில்.. வசந்தனின் மீது சிவகாமி தனியானதொரு பாசம் கொண்டிருந்ததும்கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்..

    வசந்தனின் தாத்தாவான.. ராஜா ரவீந்தரன்.. அவரது காலகட்டத்தில்.. மிகவும் பிரசித்தி பெற்றிருந்த ஜமீன்தாராக.. ஒரு சிற்றரசரின் புகழோடும்.. அந்தஸ்தோடும் வாழ்ந்தவர்..

    ராஜா ரவீந்தரனுக்கு பிறகு.. அவரது இரு மகன்களான அன்பரசனும்.. இளவரசனும் தந்தையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாத புகழோடு.. அதே செல்வாக்குடன் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்..

    இளவரசன்.. அன்பரசன் தவிர.. ராஜா ரவீந்தருக்கு.. வடிவு என்கிற ஒரு செல்ல மகள் இருக்கிறாள்.. தன் மகளின் மீது ரவீந்தரன் கொண்டிருந்த மாறாத அன்பின் காரணமாக.. தங்கள் அந்தஸ்த்திலேயே.. வீட்டோடு மாப்பிள்ளையாக வர சம்மதித்த விஜயன் என்கிற மணமகனுக்கு மகளை கொடுத்து.. அவர்களுக்காக தன் மாளிகையின் அருகிலேயே.. மற்றொரு மாளிகையையும் கட்டி கொடுத்து.. அதில் அவர்களை குடியமர்த்தி இருந்தார் ரவீந்தரன்..

    மூத்தவரான அன்பரசனுக்கு.. விவேக்.. வசந்தன் என இரண்டு மகன்களும்..

    இளையவரான இளவரசனுக்கு தினேஷ் என்கிற ஒரு மகனும் இருக்க..

    ரவீந்தரனின் ஒற்றை மகளான வடிவோ.. சத்யா.. காவ்யா.. பாக்யா.. என மூன்று மகள்களை பெற்றெடுத்திருந்தாள்..

    அடுத்ததாக ஒரு ஆண்வாரிசு வேண்டுமென்கிற ஆசையில்... வரிசையாக மூன்று மகள்களுக்கு தாயாகியிருந்த தங்கையின் ஆசையை.. மைத்துனரின் மூலமாக எடுத்துரைத்து.. தமையன்கள் இருவரும் தடை போட்டு நிறுத்தியிருந்தார்கள்..

    அந்த வகையில்.. தங்கையான வடிவின் மீது அண்ணன்கள் இருவரும் மட்டற்ற பாசம் வைத்திருந்ததால்.. அவளது மனக்குறையை போக்க.. தங்கள் மகன்களுக்கு வடிவின் மகள்களை மணமுடித்து.. மருமகன்களான தங்கள் மகன்களை வடிவிற்கு மகன்களாக்கி இருந்தார்கள் இருவரும்..

    வடிவின் மூத்த மகளான சத்யாவை.. அன்பரசனின் மூத்த மகனான விவேக் மணமுடித்திருந்தான்..

    அதற்குத்தவளான காவ்யாவை.. வசந்தனை விட வயதில் மூத்தவனாக இருந்த.. இளவரசனின் மகன் தினேஷ் மணமுடித்திருந்தான்.

    தற்போது.. வடிவின் கடைசி மகளான பாக்யா.. வசந்தனை மணந்து கொள்ளும் நாளினை எதிர் பார்த்தவாறு.. தானும் வளர்ந்து கொண்டிருக்கிறாள்..

    ஆனால்.. தன் அண்ணன்களைப் போலில்லாமல்.. சிறுவயது முதல் தூக்கி விளையாடி வளர்த்திருந்த அத்தையின் மகள்.. வசந்தனின் கண்களுக்கு.. ஒரு சகோதரியாகவே தெரிய..

    மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவனாக இருந்த வசந்தனின் மீது.. வடிவின் மகனாக மாறியிருந்த விவேக் கோபம் கொண்டிருப்பதில் வியப்பு இல்லைதான்..

    ஏறக்குறைய.. ஒத்த வயதுள்ளவர்களாக.. ஒன்றாக வளர்ந்து.. ஓரே வீட்டில் பெண்ணெடுத்து.. ஒரே குடும்பத்தினராக வாழ்ந்து வரும் தினேஷ் விவேக்கிற்கு உடன் பிறந்தவனாக தோன்றிவிட்டதினால்..

    உடன் பிறந்த தம்பியான வசந்தன்.. விவேக்கை பொறுத்த வரையில் ஒரு அன்னியன்னாகவே தோன்ற தொடங்கியிருந்தான்..

    அதிலும் குறிப்பிட்ட வயதிற்கு மேல்.. தொழிலில் கெட்டிக்காரனாக இருந்த தம்பியிடம்.. போட்டியிட முடியாதவனாக.. வசந்தனின் பொறுப்பிற்கு கீழிருந்து அனைத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த விகேக்கிற்கு.. வசந்தனின் மீதிருந்த கொஞ்ச நஞ்ச பாசமும் மறைந்து.. தம்பி யென்பவன் தன்னிடமிருக்கும் அனைத்தையும் பங்கிட்டு கொள்ள வந்திருக்கும் போட்டியாளனாக மட்டுமே மாறிப் போயிருந்தான்..

    குட் மார்னிங் விவேக்கண்ணா..! இன்னிக்கு சீக்கிரமா எந்திரிச்சுட்டீங்க போல..! வெரிகுட்..

    என்னை கலாய்க்கிறது இருக்கட்டும்.. உன்கிட்ட அம்மா உன்னை தேடுறாங்கன்னு சொன்னேன்.. அது காதுல விழுந்துச்சா..?

    ம்ம்.. நல்லாவே விழுந்ததுண்ணா.. பட்.. அம்மாவுக்கு என்னை பத்தி நல்லாவே தெரியும்.. அதனால.. தேடியிருக்க மாட்டாங்க.. ஸோ..!!

    வசந்தன் தான் கூறவந்ததை முழுதாக கூறாமல்.. நாசூக்காக தோள் குலுக்கிய பாவனையே.. விவேக் பொய் சொல்கிறான் என்பதை அவன் புரிந்து கொண்டுவிட்டான் என்பதை யுணர்த்த.. அதனை கண்ட விவேக்கின் முகம் கறுத்துவிட்டது..

    அதிலும்.. அதை வசந்தன்.. விவேக் என்றுமே ஒரு பொருட்டாக எண்ணியிராத சிவகாமியின் முன்பாக கூறியதைத்தான்.. விவேக்கினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை..

    விவேக்கிற்கு சிவகாமியை பிடிக்காது.. ஏனெனில்.. வடிவிற்கு சிவகாமியை கண்டாலே ஆகாது.. அந்தஸ்த்தில் தன்னைவிட குறைந்தவளான சிவகாமி.. அழகு.. அறிவு.. திறமை.. என மற்ற அனைத்திலும் அவளைவிட பலமடங்கு உயர்ந்தவளாக இருப்பதால்.. தனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே சிவகாமியை மனதார வெறுத்துக் கொண்டிருந்தாள் வடிவு..

    அதிலும்.. மூத்த அண்ணனான அன்பரசன்.. அவர்களது குடும்பத்திற்கு எந்த விதமான சம்பந்தமும் இல்லாதவள் என வடிவு நினைத்துக் கொண்டிருக்கும் சிவகாமியிடம் எந்த பாகுபாடும் காட்டாதவராக... பாரபட்சமில்லாத பாசத்தை காட்டியது அவளது வெறுப்பை மேலும் அதிகரிக்க செய்திருந்தது..

    அழகியான சிவகாமி.. திருமணமே வேண்டாம் என்றிருப்பதும்.. அண்ணனான அன்பரசன் அவள்மீது அக்கறை காட்டுவதும்.. வடிவின் மனதிற்குள் பற்பல சந்தேக விதைகளை விதைத்திருக்க..

    தன் மனதில் விழுந்து வேரூன்றி இருந்த சந்தேக விதைகளை விதைத்து... தன்னுடைய இரண்டு மருமகன்களின் மனதிலும் விருட்சமாக வடிவு வளரச் செய்திருந்ததால்.. சிவகாமி இருக்கும் திசைப் பக்கமாக.. தன்னை சார்ந்த எவரும் திரும்புவதைக்கூட விரும்ப மாட்டான் விவேக்..

    அதனை அறிந்திருப்பதாலோ என்னவோ.. முன்பெல்லாம் சுவாதீனமாக அன்பரசனின் வீட்டிற்கு வந்து செல்லும் தன் வழக்கத்தினை படிப் படியாக குறைத்துக் கொண்டுவிட்டாள் சிவகாமி..

    நீ எப்படியோ போ.. எனக்கென்ன வந்தது..

    தன்னையே நேராக பார்த்துக் கொண்டிருந்த தம்பியிடம்.. தன் துவேசத்தை சற்றும் மறைக்காத வெறுப்புடன் கூறிவிட்டு.. சட்டென திரும்பி விவேக் சென்றுவிட..

    செல்லும் அவனது கோபம் புரிந்தவளாக.. மெதுவாக வசந்தனின் அருகில் வந்து.. அவனது தோளில் கை வைத்து தன் புறமாக திருப்பி.. அவர்களது வீட்டிற்கு வசந்தனை செல்லும்படி சைகையால் அறிவுறுத்தினாள் சிவகாமி..

    ச்சு.. அண்ணன் கோபப்படுறது புதுசா என்ன..? டோண்ட் ஓர்ரி ஆன்ட்டி.. அவரை எப்படி.. ஹேண்டில் பண்ணனும்னு எனக்கு தெரியும்..

    சிவகாமியின் கவலையுணர்ந்த மென்மையுடன் கூறிய வசந்தன்.. அப்படியும் அவள் முகத்தில் இருந்த வருத்தம் மாறாமல் இருப்பதைக் கண்டு... அதே மென்மையுடன் அவளது தோள்களை அணைத்துக் கொண்டான்..

    உங்க பையன் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கில்ல ஆன்ட்டி..?

    ம்ம்.. தட்ஸ் குட்.. அப்ப இந்த மாதிரி கவலையா முகத்தை வைச்சுக்காம எப்பவும் போல பிரஷ்ஷா இருக்கணும்.. ஓக்கே..?

    சரி.. மத்ததை விடுங்க.. இன்னிக்கு பஜனை பாடுனவங்க ரொம்ப நல்லா பாடுனாங்க.. இல்ல ஆன்ட்டி..?

    அந்த பாட்டை கேட்டுதான் எந்திரிச்சுட்டேன்.. எந்திரிச்சு பார்த்தா நீங்க கோலம் போட்டுக்கிட்டு இருந்தீங்க.. அதுக்கு மேல எனக்கு அங்க என்ன வேல.. நேரா இங்க வந்துட்டேன்..

    ம்ம்.. நான் வர்றத அம்மா பார்த்தாங்க.. ஸோ.. நான் இங்கதான் இருப்பேன்னு அவங்களுக்கு தெரியும்.. அதோட உங்க ஸ்பெசல் காபியும் கிடைச்சு இருக்கும்னும் தெரியும்.. அதனால அவங்க என்னை இப்போதைக்கு தேட மாட்டாங்க..

    சிவகாமி சைகையில் கேட்ட கேள்விகளை நொடியில் புரிந்து.. அதற்கான பதிலளித்தவாறு சகஜமாக அவளுடன் வசந்தன் பேசிக் கொண்டிருப்பது.. ஏதோ.. இருவருமே வாய்விட்டு பேசுவதைப் போலிருப்பதை.. மனநிறைவுடன் பார்த்தவாறு அவர்களது அருகில் வந்து நின்ற பொன்னியின் கையில் இருந்த பூக்கூடையில்.. அன்று மலர்ந்த பலவித மலர்கள் நிறைந்திருந்தது..

    முதுமையின் காரணமாக முகத்தில் ஓடிய வயோதிக ரேகைகளுடன்.. தாய்மையின் ரேகைகள் சற்றும் குறைவின்றி படர்ந்திருந்த பொன்னியை பார்த்தவுடன்.. பாசப்புன்முறுவலுடன் அவளது கையில் இருந்த சில்வர் பூக்கூடையை வாங்கிக் கொண்ட சிவகாமியின் விழிகளில் தெரிந்த கரிசன கண்டிப்பையுணர்ந்தவளாக.. பாதி பொக்கையாகி போயிருந்த வாய்திறந்து.. மலர்ந்து சிரித்தாள் பொன்னி..

    கோபப்படாத தாயி.. எனக்கும் கொஞ்சம் புண்ணியம் கிடைச்சுட்டு போகட்டுமே..! பனிக்கு பயந்து வீட்டுக்குள்ள உட்கார்ந்திருக்க முடியலைம்மா.. ஓடி உழைச்ச காலு... ஒரு இடத்துல நிலையா நிக்க மாட்டேங்குதுல்ல.. என்னை என்ன செய்ய சொல்ற..?

    வயோதிகத்திலும்.. தனக்காக பொன்னி உழைப்பதை விரும்பாத வருத்தத்துடன் கண்டிப்பாக பார்த்த சிவகாமியை சமாதானப்படுத்துவதைப் போல அவளது தாடை பற்றி கெஞ்சலாக பொன்னி கூறிய விதத்தில் சிரித்து விட்டாள் சிவகாமி..

    ம்ம்.. இது..!! இப்பதான் எங்க சிவகாமியம்மாவை பார்க்கிற மாதிரி இருக்கு.. இந்த சிரிப்புதான் உன் அடையாளம் கண்ணு.. எதுக்காகவும் இத மாத்திக்காத.. போய் குளிச்சுட்டு கோவிலுக்கு கிளம்பு..

    உங்கம்மா காலத்துல.. பாதி கருக்கல்லயே கோவில்ல போயி நின்னுருப்போம்.. அந்த நேரத்துக் கெல்லாம் பஜனை முடிந்து.. பூஜையும் ஆகிரும்.. ஹீம்.. இப்ப எல்லாருக்கும் சோம்பேறித்தனம் வந்துட்டதால.. சாமிக்கு கூட லேட்டாதான் கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்குது.

    எங்க கமலாம்மா பாடுற பஜனை பாட்டை கேக்குறதுக்காக.. இந்த ஊரு சனமே கோவில்ல காத்திருக்கும்.. மஞ்சள் பூசின முகமும் குங்குமமுமா.. உங்கம்மாவை பார்க்க.. அப்படியே அந்த மகாலட்சுமி நேருல வந்தது மாதிரியே இருக்கும் தெரியுமா..! அந்த மகராசி முகம்.. இப்பவும் என் கண்ணுக்குள்ள அப்படியே உறைஞ்சு போயிக் கிடக்கு..

    இன்னும் எந்த சென்மத்துல.. எப்ப அந்த தாய பார்க்க போறேனோ தெரியல..

    சிவகாமியின் தாயான.. கமலத்தின் காலம் தொட்டு.. அந்த வீட்டில் இருந்துகொண்டிருக்கும் உரிமையுடன் பொன்னி அங்கலாய்த்துக் கொண்டே அங்கிருந்து செல்ல தொடங்க..

    அவளது வார்த்தைகளால்.. மனதில் கிளர்ந்தெழுந்த அன்னையை பற்றின நினைவுகளுடன்.. விழிகளில் ஈரம் படர.. அப்படியே நின்றுவிட்டாள் சிவகாமி..

    2

    இருள் விலகாத காலைப் பொழுதில்.. வெண்புகையாக சாலையை மறைத்திருந்த மார்கழி மாத பனி மூட்டத்தினை ஊடுறுவ போராடியவாறு வசந்தன் தனது ராயல் என்பீல்ட் பைக்கினை மிகவும் சிரமப்பட்டு செலுத்திக் கொண்டிருக்க..

    அப்பனிப் புகையை வேடிக்கை பார்த்தவாற அவனது தோளினை உரிமையுடன் பற்றியவாறு பைக்கின் பின் சீட்டில் அமர்ந்திருந்த சிவகாமி வசந்தனின் சிரமத்தைக் கண்டு கேலியாக புன்னகைத்தாள்..

    இதுக்குத்தான் காரில் வரலான்னு சொன்னேன்.. நீங்க கேட்டாத்தான..? இப்ப நான் படுற பாட்டைப் பார்த்தா கேலியா இருக்கா உங்களுக்கு..? சிரிங்க.. நல்லா சிரிங்க.. உனக்கு இது வேணும்டா வசந்தா.. தானா வந்து தலைய கொடுத்தேல்ல..? அனுபவி ராஜா.. அனுபவி..

    தனக்கு அன்னையாக இருந்து அவனை வளர்த்திருந்தவள்.. தன் அன்னையின் நினைவினால் வாடுவதை காண முடியாதவனாக.. சிவகாமியை தானே கோவிலுக்கு அழைத்துக் கொண்டு வந்திருந்த வசந்தன் ஆற்றாமையுடன் புலம்ப தொடங்கினான்..

    அவனது அந்த புலம்பலையும் ரசித்து சிரித்த சிவகாமியின் முகத்தில் தெரிந்த மகிழ்விற்காகவே.. வேண்டுமென்றே மீண்டும் தனக்குத் தானாக புலம்பியவாறு பைக்கின் கண்ணாடி வழியாக சிவகாமியை பார்த்துக் கொண்டு வந்த வசந்தன்..

    இருந்திருந்தாற்போல எதிரில் வந்துவிட்ட காரினை கவனிக்காதவனாக அதில் மோதி விட்டான்..

    உண்மையில் அந்த கார் வந்ததே பனிமூட்ட மறைப்பில் தெரிந்திருக்கவில்லைஎன்றாலும்..

    வசந்தனின் கவனம் பாதி சாலையிலும்.. மீதி கண்ணாடி வழியாக தெரிந்த சிவகாமியிடமும் இருந்ததில்.. கடைசி நிமிட கவனிப்பில் அவன் போட்ட சடன் பிரேக்கில்.. சாலையில் லேசாக இழுபட்டு சென்று.. சரியாக அந்த காரின் மீது நேராக மோதியபிறகே வசந்தனின் வண்டி நின்றது..

    அந்த நேரத்திலும்கூட.. பின்னால் அமர்ந்திருந்த சிவகாமி கீழே விழுந்துவிடக் கூடாது என்பதில்தான் வசந்தனின் கவனமெல்லாம் இருந்ததே தவிர.. எதிரில் வந்த காரினை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவன்..

    ஆர் யூ ஆல்ரைட் ஆன்ட்டி..? வண்டி நின்னுருச்சு.. பயப்படாம இறங்குங்க.. மெதுவா.. பார்த்து..

    வசந்தன் சிவகாமிக்கு கரம் கொடுத்து ஆறுதல் கூறியவாறு அவளை பைக்கை விட்டு கீழிறக்கிக் கொண்டிருக்க.. பத்ரகாளியைப் போல கோபத்துடன்

    Enjoying the preview?
    Page 1 of 1