Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaanam Vittu Vaa Nilavey
Vaanam Vittu Vaa Nilavey
Vaanam Vittu Vaa Nilavey
Ebook253 pages2 hours

Vaanam Vittu Vaa Nilavey

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

தந்தை மகள் என அவர்கள் மட்டும் வாழும் அழகான உலகில் இடையூறாக வரும் உறவுகளை நம்பும் தந்தை.. தந்தைக்காக விரும்பாத உறவுகளை ஏற்றுக்கொள்ள முன்வரும் மகள்.. அவளது அன்பு புரிந்து தந்தை மகளை காப்பாற்றி கரை சேர்க்கிறாரா இல்லையா என்பதை விவரிக்கும் அழகான பாசக்கதை இது.

Languageதமிழ்
Release dateOct 1, 2022
ISBN6580134209078
Vaanam Vittu Vaa Nilavey

Read more from Viji Prabu

Related to Vaanam Vittu Vaa Nilavey

Related ebooks

Reviews for Vaanam Vittu Vaa Nilavey

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaanam Vittu Vaa Nilavey - Viji Prabu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வானம் விட்டு வா நிலவே

    Vaanam Vittu Vaa Nilavey

    Author:

    விஜி பிரபு

    Viji Prabu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/viji-prabu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 1

    பெருமாளின் சந்நிதியில்.. அவரை தரிசனம் செய்து கொண்டிருந்த ரகுராமன் கண்களும் மனமும் நிறைந்தவராக தன் அருகில் கை கூப்பி நின்றிருந்த மகளைத் திரும்பிப் பார்த்தார்.

    தந்தை தன்னைப் பார்ப்பதைக்கூட அறியாதவளாக கண்மூடி நின்றிருந்த ஷ்ரத்தாவின் தோற்றம் ரகுராமனின் இதயத்தைத் தொட்டது.

    ஐயா.. என் பெருமாளே.. என் மகளோட வாழ்க்கை என்றென்றும் சிறப்பாக அமைய அருள் புரியப்பா.. கண்களில் நீர் படர மனம் உருக பெருமாளிடம் வேண்டிக் கொண்டார் அவர்.

    போகலாமாப்பா…?

    அர்ச்சகர் கொடுத்த பூஜைத் தட்டைக் கையில் வாங்கிக் கொண்டு… தந்தையின் வேண்டுதல் முடிவதற்காகக் காத்திருந்த ஷ்ரத்தா.. ரகுமான் கண்களைத் திறந்தவுடன் அவரது முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.

    சரிம்மா.. ரகுராமன் அமைதியாக நடக்க.. அவருடன் இணைந்து பிரகாரத்தைச் சுற்றத் தொடங்கிய ஷ்ரத்தாவின் கவனமெல்லாம்… தந்தையின் மீதே குடி கொண்டிருந்தது.

    அவள் அமைதியாக ஒரு கையில் பூஜைத் தட்டையும் மறுகையால் தந்தையின் ஒரு கரத்தையும் பற்றிக் கொண்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தாள்.

    ஷ்ரத்தா.. ரகுரமனின் ஒரே செல்ல மகள். அவள் அவரது செல்ல மகள் மட்டுமல்ல.. செல்வ மகளும் கூட. ரகுராமனின் உயிரே.. தன் மகள் மட்டும்தான்.

    ஆறு வயதிலேயே தாயை இழந்துவிட்ட ஷ்ரத்தாவிற்கு தானே.. தாயும் தகப்பனுமாக இருந்து அவளை வளர்த்து ஆளாக்கியிருந்தார் ரகுராமன்.

    இன்னும் சொல்லப் போனால்.. ரகுராமனின் வாழ்க்கைக்கு ஒரு புது அர்த்தத்தையே ஷ்ரத்தா தான் உருவாக்கியிந்தாள். தன் வயதிற்கு அதிகமான புத்திக் கூர்மையோடும்.. அறிவோடும்.. தன் தாயின் மறைவு கொடுத்த வெறுமையைத் தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு.. தந்தைக்காகவே அன்றிலிருந்து இன்றுவரை வாழ்ந்து கொண்டிருந்தாள் ஷ்ரத்தா.

    தன் தாயார் தையல் நாயகியைப் பற்றி ரகுராமனாக மனம் திறந்து ஏதாவது ஒன்றைக் கூறினால் ஒழிய.. ஷ்ரத்தா தானாக தந்தையிடம் அன்னையைப் பற்றிய பேச்சையே எடுக்க மாட்டாள்.

    தையல் நாயகியின் பிரிவு ரகுராமனை எந்த அளவுக்கு பாதித்திருக்கும் என்பதை.. தன் சிறு வயதிலேயே உணர்திருந்தவளாதலால் ஷ்ரத்தா.. முடிந்தவரை.. தந்தையுடன் இருக்கும் ஒவ்வொரு கணத்திலும் தன்னுடைய அன்பையும்.. அருகாமையையும் ரகுராமனுக்கு உணர்த்திக் கொண்டே இருப்பாள்.

    அன்று.. தையல் நாயகி மறைந்த தினம் என்பதனால்.. ரகுராமனின் மனத்துயரை அறிந்தவளாக.. ரகுராமனின் எண்ணங்களுக்கு இடையூறாக தான் இல்லாமல்.. அதே வேளையில் தன் அன்பையும் தந்தைக்கு உணர்த்தும் விதமாக.. தந்தையின் கரத்தை மென்மையாக பற்றிக் கொண்டு.. தந்தையுடன் சென்று கொண்டுருந்தாள் ஷ்ரத்தா.

    கொஞ்ச நேரம் உட்காருவோமாடா..? பிரகாரத்தைச் சற்றி வந்து.. கோவிலின் முன் மண்டபத்தைக் காட்டிக் கேட்ட தந்தையிடம் சம்மதமாக தலையசைத்தபடி அமர்ந்தாள் ஷ்ரத்தா.

    தண்ணி குடிக்கிறீங்களாப்பா? தந்தை அமரும்வரை காத்திருந்து.. அவரது தேவை அறிந்தவளாக தன் ஹேண்ட் பேக்கில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து ரகுராமனிடம் கொடுத்தாள் ஷ்ரத்தா.

    மறுக்காமல் வாங்கி.. தண்ணீரை தன் வாயில் சரித்துக் கொண்ட வேகத்திலேயே தந்தையின் தாகத்தை உணர்ந்து கொண்ட ஷ்ரத்தாவின் முகத்தில் மென்மை படர்ந்தது.

    இவ்வளவு தாகத்தை அடக்கி வெச்சுக்கிட்டு இருந்தீங்களாப்பா? நான்தான் உங்களுக்காக எப்பவுமே ஹேண்ட் பேக்கில் தண்ணி வெச்சிருப்பேன்னு தெரியும்தானேப்பா.. ஏன்ப்பா இப்படி இருக்கீங்க? அன்புடன் தந்தையைக் கடிந்து கொண்டாள் அவள்.

    இல்லடா. எனக்கு தாகமெல்லாம் இல்ல.. இவ்வளவு தூரம் நடந்து வந்தது கொஞ்சம் டயர்டாக இருந்தது. அவ்வளவுதான்.

    ப்பா...! எனக்கு உங்களைப் பத்தித் தெரியும்ப்பா... கேலியாக தலையசைத்துச் சிரித்தாள் ஷ்ரத்தா.

    மகளின் சிரித்த முகத்தை மனநிறைவுடன் பார்த்துக் கொண்டிருந்த ரகுராமனின் விழிகளில் கனிவு தெரிந்தது.

    மாசு மருவற்ற.. வெண் பளிங்கு தேகத்துடன்.. கூர்மையான நாசியும்.. அறிவுச் சுடர் ஒளி வீசும் ஆழமான அகன்ற கண்களுடன்.. பிறை போன்ற நெற்றியை மறைத்த.. நாகரீகமாக இடைவரை வெட்டி விடப்பட்ட கூந்தலுடன்.. சிவந்த இதழ்களுக்குள் மின்னும் முல்லைப்பூ பற்களுடன்.. கம்பீரமான அழகுடன் இருந்த ஷ்ரத்தாவைப் பார்த்த ரகுராமனுக்கு.. தன் மகளை தான் வளர்த்திருக்கும் விதத்தைப் பற்றி மனதிற்குள் பெருமை தோன்றியது.

    யாருடைய மனதும் புண்படக் கூடாது என்கிற கவனத்துடன் மென்மையாகப் பேசும் ஷ்ரத்தாவிற்கு.. ஒரு மனிதரைக் கண்டவுடன் அவரது குணநலன்களைப் பற்றி ஒரே நொடியில் எடைபோட்டுவிட முடியும்.

    அனைவருடனும் இயல்பாகக் கலந்து பழகும் குணம் கொண்ட ஷ்ரத்தாவிற்கு.. ஒருவருடைய திறமையை எடைபோட்டு.. யாரை எங்கு வைத்துப் பழக வேண்டும் என்பது நன்றாகத் தெரியும்.

    கனிவும் சிரிப்புமாக வலம் வரும் ஷ்ரத்தாவிற்கு.. எதிரி யாராக இருந்தாலும்.. துணிவுடன் எதிர்கொண்டு.. தன் புத்திக் கூர்மையால் அனைவரையும் வென்றுவிட முடியும்.

    ரகுராமனின் தொழில்களை.. நிறுவனத் தலைவராக இருந்து ரகுராமன் ஓரளவிற்கு வழி நடத்திச் சென்றாலும்.. தந்தையின் தொழில்களை திறம்பட நிர்வகித்துக் கொண்டிருப்பவள் ஷ்ரத்தாதான்.

    தன் காலத்திற்குப் பிறகு.. மகள்.. தன் காலில் தனித்து நின்று பழகிக் கொள்ள வேண்டும் என்கிற வைராக்கியத்துடன்.. ரகுராமன் ஒரு வழிகாட்டி என்கிற நிலையில் மட்டும் நின்று கொண்டு... தொழில்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஷ்ரத்தாவின் கைகளிலேயே முழுமையாக ஒப்படைத்து விட்டார்.

    ஷ்ரத்தாவும்.. தான் ரகுராமனின் வாரிசு என்பதை நிரூபிக்கும் வகையாகத் திறம்பட தன் வேலைகளை செய்து முடித்துக் கொண்டிருந்தாள்.

    ப்பா.. என்னைப் பார்வையிட்டு முடிச்சாச்சுன்னா சொல்லுங்க.. நாம கிளம்பலாம். இல்லாட்டின்னாலும் பரவாயில்ல.. நான் இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே அசையாமல் உட்கார்ந்திருக்கேன். நீங்க நல்லா கவனமா பார்வையிட்டு முடிச்சதுக்கு அப்புறமாக கிளம்பிக்கலாம். ஒண்ணும் அவசரம் இல்ல... சிரிக்காமல் கூறிய மகளின் கையில் செல்லமாகத் தட்டினான் ரகுராமன்.

    வாலு… ரகுராமனின் வார்த்தையில் பெருமை தொனித்தது.

    ம்ம்.. இருக்கும்.. இருக்கும். ஏன்னா.. நான் உங்க பொண்ணாச்சே... சிரித்தபடி எழுந்து நின்று.. தந்தைக்காக கை நீட்டினாள் ஷ்ரத்தா.

    மகள் நீட்டிய கரத்தை ஆதரவாகப் பற்றிக் கொண்டு எழுந்த ரகுராமன்.. சிரித்தபடி அன்புடன் மகளது தோளில் கைபோட்டு அணைத்தபடி நடந்து செல்ல..

    தந்தையின் முகத்தில் தோன்றியிருந்த சிரிப்பு மாறி விடாதவாறு.. கவனமாக ரகுராமனுடன் பேசிக் கொண்டே அவருடன் கடந்த ஷ்ரத்தாவை.. அப்பொழுதுதான் கோயிலுக்குள் நுழைந்த.. அந்த நெடிய மனிதனின் கண்கள் வியப்புடன் பார்த்தது.

    அவனது கண்களில் தெரிந்த வியப்பு மாற்றத்தை உணர்த்த அவனுடன் வந்திருந்த மற்றவர்களின் பார்வையும் ஷ்ரத்தாவின் மீது படிய.. கண்களில் சினத்துடன் அவர்களை அடக்கினான் அவன்.

    நெடியவளின் கோபத்தைப் புரிந்திருந்த மற்றவர்களின் பார்வை... ஷ்ரத்தாவின் மீதிருந்து ஒரு நொடிக்குள் விலகிவிட... அவனது கண்கள் மட்டும் ஷ்ரத்தாவின் மீதே பதிந்திருந்தது.

    செல்லமாகப் பேசிச் சிரித்தபடியே.. தன் இடக்கரத்தால் தந்தையின் இடையை அணைத்துக் கொண்டே நடந்து கொண்டிருந்த ஷ்ரத்தாவை.. தன்னைச் சுற்றி நடக்கும் எதையுமே கவனத்தில் கொள்ளாதவளாக... இயல்பாக கோவிலை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தாள்.

    கோவிலின் முன்புறம் இருந்த தங்களது பெரிய காரின் பின் வைத்திருந்த பூஜைத் தட்டையும்.. ஹேண்ட் பேக்கையும். பின் சீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு.. தந்தை நன்றாக அமர்ந்து கொண்டதை உறுதி செய்து கொண்ட பின்னரே.. காரைக் கிளப்பிய ஷ்ரத்தாவின் ஒவ்வொரு செயலும் அந்த நெடியவனின் மனதிற்குள் புகைப்படமாகப் பதிந்தது.

    ஷ்ரத்தாவின் கார்.. கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்திருந்துவிட்டு... பின்... ஒரு பெருமூச்சுடன் திரும்பி நடந்தவனின் மனதிற்குள்.. இனம் புரியாத வகையில்.. ஷ்ரத்தா... நிரந்தமாகப் பதிந்து விட்டாள்.

    இன்னிக்கு அந்த ஜெயின்சன் கம்பெனி காண்ட்ராக்ட் விஷயமாக மீட்டிங் இருக்கில்லப்பா... உங்களுக்கு தெரியும்தானே..? ரோட்டில் கவனமாக.. தந்தைக்காக.. மிதமான வேகத்தில் காரை செலுத்திக் கொண்டிருந்த ஷ்ரத்தாவை திரும்பிப் பார்த்தார் ரகுராமன்.

    தெரியும்டா.

    ஆனா.. எனக்கென்னமோ.. இந்த காண்ட்ராக்ட் தேவை இல்லாத ஒரு வேலைன்னு தோணுதுப்பா.

    ஏண்டா.. இது நல்ல ஸ்டாண்டர்டான கம்பெனிடா. இந்த காண்ட்ராக்ட் நமக்கு நிச்சயமா லாபத்தைக் கொடுக்கும் ஷ்ரத்தா.

    நிச்சயமாப்பா. அதில் எனக்கும் உடன்பாடுதான். ஆனா.. நமக்கு ஏற்கனவே நாம எடுத்திருக்கிற காண்ட்ராக்ட்டுகளை முடிச்சுக் கொடுக்கவே ஆட்கள் பத்தாம இருக்குப்பா.. அதான் கொஞ்சம் யோசனையாக இருக்கு.

    அதைத்தான் ரமணா மேனேஜ் பண்ணிக்கிறேன்னு சொன்னானேம்மா? நீ மறந்துட்டியா?

    தந்தையை லேசாகத் திரும்பிப் பார்த்துவிட்டு.. ரோட்டில் பார்வையைப் பதித்துவிட்ட ஷ்ரத்தாவின் முகத்தில் சிந்தனை தெரிந்தது. தந்தையின் நம்பிக்கையான முகத்தில் தெரிந்த திருப்தியைக் கலைக்க மனமில்லாதவளாக அமைதியாகி விட்டாள் ஷ்ரத்தா.

    மகளது அமைதியைப் புரிந்து கொள்ளாதவராக.. வெளியில் தெரிந்த காட்சிகளில் கவனத்தைப் பதித்திருந்த ரகுராமனின் முகத்தை.. கடைக்கண்ணால் பார்த்த ஷ்ரத்தாவின் கண்களில் வலி தெரிந்தது.

    அத்தியாயம் 2

    ஆடம்பரமற்ற அமைதியுடன் நேர்த்தியாகக் கட்டப்பட்டு இருந்த அந்த பெரிய மாளிகையின் முன்புறம் இருந்த அழகிய தோட்டத்தின் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த தோட்டக்காரனை.. தன் இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு நின்றிருந்த கண்ணம்மா தன் பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

    தன் நீண்ட கூந்தலைத் தூக்கிப் பெரிய கொண்டையாகப் போட்டு.. நெற்றியில் சிறிய விபூதிக்கீற்றுடன்.. வட்ட முகமும்.. கண்டிப்பான தோற்றமும் கொண்டிருந்த கண்ணம்மா.. பார்ப்பதற்கு பழைய நடிகை வரலட்சுமியின் சாயலைத் தன்னிடம் கொண்டிருந்தாள்.

    என்ன பெரியசாமி.. உன் வீட்டுச் சொத்து எதுவும் வீணா கீழே போகப் போகுதா..? செடிகளுக்கு தண்ணி ஊத்தச் சொன்னா.. நீ என்னமோ.. தண்ணியை தெளிச்சுக்கிட்டிருக்க? நல்லாச் செழிப்பா தண்ணீர் விட்டாத்தான செடிகளெல்லாம் பசுமையா இருக்கும்? ஒண்ணும் தெரியாத பச்சப்புள்ள மாதிரி வேலை பார்க்கிற.

    கண்ணம்மாவின் உரத்த குரலைக் கேட்ட பெரியசாமியின் வேக நடை... நிதானமாகியது.

    ‘இவள்லாம் விரட்டுகிற அளவுக்கு என் நிலைமை ஆகிப்போச்சு. என்ன செய்ய.. சின்னம்மாவுக்கும் ஐயாவுக்கும் இவ வாக்குதானே வேதவாக்கா இருக்கு...’

    தன்னை வேலைக்கு அமர்த்தியதே கண்ணம்மா தாள் என்கிற எண்ணம் துளிகூட இல்லாதவனாக தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான் பெரியசாமி.

    இந்தா புள்ள... நீலவேணி. கொஞ்சம் நில்லு...

    கண்ணம்மாவின் கவனம்.. அவசர அவசரமாக தன்னைக் காய்கறி கூடையுடன் கடந்து செல்ல முயன்ற நீலவேணியின் மீது செல்ல.. பெரியசாமி நிம்மதிப் பெருமூச்சுடன் தன் வேலையைத் தொடரத் தொடங்கினான்.

    எந்தக் கடையில காய் வாங்கின? எல்லாமே முத்தலும் வதங்கலுமா இருக்கு?

    சந்தேகத்துடன் காய்கறிகளை ஒதுக்கிப் பார்த்த கண்ணம்மாவின் முகத்தைத் தயக்கத்துடன் ஏறிட்டாள் நீலவேணி.

    எப்பவும் வாங்குகிற கடையிலதான்க்கா வாங்கினேன்...

    நீலவேணியை நிதானமாக ஏறிட்ட கண்ணம்மாவின் கண்கள் சுருங்கியது.

    அப்படியா சொல்ற..? இருக்காதே... நம்ம வீட்டுக்கு எப்படிப்பட்ட காய்கறிகளை அனுப்பணும்னு கந்தனுக்கு நல்லாத் தெரியுமே? சரி அதை விடு. எம்புட்டுக் காசாச்சு.. அதைச் சொல்லு.. அசட்டையாகக் கேட்ட கண்ணம்மாளை நிம்மதியாகப் பார்த்தாள் நீலவேணி.

    மொத்தம் முன்னூத்தி அம்பத்தஞ்சு ரூபா ஆச்சுக்கா. நான் அஞ்சு ரூபா கொறைச்சு.. முன்னூத்து அம்பது ரூவா கொடுத்தேன். சரிதான்க்கா? சிரித்தபடி கூறிய நீலவேணியின் முகம்.. கண்ணம்மாவின் கோபத்தைக் கண்டவுடன் மாறியது.

    அடிசெருப்பால.. நாயே. கொஞ்சமாவது உனக்கு நன்றி இருக்க வேணாம்? உண்ட வீட்டுக்கு எப்படி உன்னால் துரோகம் நினைக்க முடியுது? ச்சே.

    அக்கா...

    "ச்சீ... பேசாத... கடைக்காரன் கொடுக்கிற ஐம்பது ரூபாய் கமிசனுக்காக அவன் கொடுத்த.. முத்தல் காய்கறியை வாயை மூடிக்கிட்டு வாங்கிட்டு வந்துட்டியாக்கும். நீ நாம எப்பவும் வாங்குற கடைக்குப் போகாம.. இந்தா இருக்குற முக்குக் கடையிலேயே காய் வாங்கிக்கிட்டு வர்றது எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா?’’

    இல்லக்கா... நான்...

    நீ ஒண்ணும் சொல்ல வேணாம். இந்தக் காயையும் அவன் கொடுத்த காசையும்... அந்தக் கடைக்காரன் மூஞ்சியிலயே விட்டு எறிஞ்சுட்டு.. நாம எப்பவும் வாங்குற கடையில போய் வாங்கிட்டு வா.. போ..

    நீலவேணி தப்பினேன் பிழைத்தேன் என திரும்பி ஓடியதைப் பார்த்துக் கொண்டிருந்த கண்ணம்மாவின் முகத்தில் வேதனை தெரிந்தது.

    இந்தக் குட்டி... இந்த வீட்டுக்கு வேலைக்கு வர்றப்ப பத்து வயசுதான் இருக்கும். அக்கா அக்கான்னு என்னையே சுத்திச் சுத்தி வளர்த்தவளுக்கு எப்படித்தான் இப்படியொரு ஏமாத்தற புத்தி வந்ததோ..? இந்த உலகம்தான். அத்தனை மனுசங்களோட நல்ல குணத்தையும் உறிஞ்சு எடுத்துப்புடுதே? இவளைக் குத்தம் சொல்லி என்ன பண்றது. ஹூம்.. வாய்விட்டுக் கூறிக்கொண்டே வீட்டினுள் செல்வதற்காக திரும்பிய கண்ணம்மாவின் கண்கள்.. காம்பவுண்டு கேட்டைக் கடந்து வந்த காரைக் கண்டவுடன் மலர்ந்தது.

    கார்.. போர்டிகோவில் வந்து நிற்கும் வரை காத்திருந்தவள்.

    Enjoying the preview?
    Page 1 of 1