Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poo Malarntha Pothu...!
Poo Malarntha Pothu...!
Poo Malarntha Pothu...!
Ebook260 pages2 hours

Poo Malarntha Pothu...!

Rating: 0 out of 5 stars

()

Read preview
Languageதமிழ்
Release dateMay 24, 2020
ISBN6580106005412
Poo Malarntha Pothu...!

Read more from Jaisakthi

Related to Poo Malarntha Pothu...!

Related ebooks

Reviews for Poo Malarntha Pothu...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poo Malarntha Pothu...! - Jaisakthi

    http://www.pustaka.co.in

    பூ மலர்ந்த போது…!

    Poo Malarntha Poothu…!

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author//jaisakthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    மங்களகரமாக இருந்தாள் வித்யா. எளிமையான அந்த அலங்காரத்திலும் அவளைப் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

    அன்று அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள். பெண் பார்ப்பதென்ன? கிட்டத்தட்ட முடிவான மாதிரிதான். ஏற்கனவே கோவிலில் வைத்து மாப்பிள்ளை ஆனந்தன் வித்யாவைப் பார்த்து விட்டான். அவனுக்கு மனதுக்குப் பிடித்துத்தான் இருந்தது. ஆனாலும், வித்யா வசிப்பது கிட்டத்தட்ட ஒரு கிராமம் என்பதால் முறைப்படி வீட்டிற்குப் பெண் கேட்டு வர வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள் வித்யாவின் பெற்றோர்கள்.அதற்காகத்தான் இந்த ஏற்பாடு.

    என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. அப்புறம் பையனுக்குப் பிடிக்காமல் போய் விடுமா? என்று அவள் கன்னத்தை வழித்து நெட்டி முறித்தாள் ஒரு உறவுக்காரப் பெண்மணி. மலர்க்கொடி பெருமையாகப் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான். அதே நேரத்தில் அங்கு வந்த சுப்பையா இந்தா மலரு! வேடிக்கை பார்த்துகிட்டு நின்கினுட்டு இருந்தீன்னா எப்படி? அவங்களெல்லாம் வர்ற நேரமாச்சு. நாம முன்னாடி போய் வரவேற்கறதுக்குத் தயாரா இருக்கணும்! என்றார்.

    ஆமாங்க! என்று பரபரப்பாகப் போனாள் மலர்க்கொடி. தாயும் தந்தையும் அப்படிப் பரபரப்பாகப் போவதை ஒரு வித மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டு நின்றாள் வித்யா.

    அவர்கள் வாசலுக்குப் போய் நிற்பதற்கும் இரண்டு கார்களில் மாப்பிள்ளை வீட்டார் வந்து இறங்குவதற்கும் சரியாக இருந்தது. ஒரு காரில் மாப்பிள்ளைப் பையன் விவேகானந்தன், அவனுடைய சகோதரி மிருணா தாய் புனிதவதி, இன்னும் யாரோ குடும்பத்துப் பெரியவர் எல்லோரும் இறங்கினார்கள்.

    இன்னொரு காரிலும் இரண்டு மூன்று குடும்பத்தார் இறங்கினார்கள். புனிதவதி தான் மட்டும் வந்தால் நன்றாகஇருக்காது என்று அப்படி இரண்டு மூன்று குடும்பத்தாரை ஏற்பாடு செய்து கொண்டு வந்திருந்தார். ஆனால், வரும்போதே சொல்லித்தான் வைத்து வந்திருந்தாள். எந்த விமர்சனமும் இருக்கக் கூடாது ஏற்கனவே பையனுக்குப் பெண்ணைப் பிடித்து விட்டது என்று. ஆனாலும், விவேகானந்தனின் சகோதரி மிருணா மிகவும் ஆர்வமாக இருந்தாள். ஏனென்றால் அன்றைக்குக் கோவிலில் பார்க்கும் பொழுது அவளை அழைத்துச் செல்ல வில்லை. ஃபோட்டோவில் தான் பார்த்திருந்தாள். தாய் வேறு ‘ஃபோட்டோவை விட நேரிலே இன்னும் நல்லா இருக்காடி!" என்று சொல்லியிருந்தாள். அதனால் அவள் மிகவும் ஆர்வமாக இருந்தாள்.

    விவேகானந்தன் நான் ஏற்கனவே பார்த்துட்டேன். வரலைன்னா என்ன? என்றான். ஆனால் தாய் ஒத்துக்கொள்ளவில்லை. இல்லப்பா இப்பத்தான் ஊர்க்காரங்களுக்குத் தெரியும். நாம பொண்ணு பார்க்கப் போறோம். அதனால நீ வரலைன்னா நல்லா இருக்காது. பல விதமாகப் பேச்சுக் கிளம்பும்! என்று சொல்லிவிட்டார்.

    விவேகானந்தனுக்கு உள்ளூர ஆர்வம்தான் ஆனாலும் கொஞ்சம் பிகு செய்து பார்த்தான். தாய் மனம் அதை அறியாதா என்ன? அவன் மனம் குளிர்வது போல இரண்டு வரார்த்தைகளைச் சொல்லி அவனை அழைத்துக் கொண்டு வந்து விட்டாள்.

    பெண் பார்க்கும் படலம். வித்யா வந்து எல்லோருக்கும் ஒரு வணக்கம் சொல்லி விட்டு இனிப்புக்களைக் கொண்டு வந்து வைத்தாள்.

    புனிதவதி எதிரே இருந்த சேரைக் காட்டி ‘உட்காரும்மா!’ என்றாள். வித்யா திரும்பி மலர்க்கொடியைப் பார்க்க அவள் ‘உட்காரு!’ என்பது போலக் கண்ணைக் காட்டினாள். சேரில் சற்று நேரம் அமர்ந்திருந்தாள். பேருக்கு ஒன்றிரண்டு வார்த்தைகள் வித்யாவும் பேசினாள். அதற்குப் பிறகு அவளை எழுந்து போக சொல்லி விட்டார்கள்.

    பிறகு எல்லாரும் டிஃபன் சாப்பிட்டுட்டுத்தான் போகணும்! என்றார் சுப்பையா.

    டேய்! சுரேஷ் ஏற்பாடு பண்ணச் சொல்லு! என்று திரும்பி மகனுக்கு குரல் கொடுத்தார். ஆனால், புனிதவதியும் உடன் வந்திருந்த உறவினர்கள் பிரேமா, கமலாவும் இல்லைங்க இப்ப ஸ்வீட் காரம் காஃபி மட்டும் போதும். நிறையப் பேசி முடிச்சதுக்கு அப்புறம் ஒரு நாளைக்கு உங்க வீட்ல கை நனைக்கலாங்க! என்று சொல்லி விட்டார்கள்.

    உறுதி செய்யாமல் சில குடும்பங்களில் அப்படிக் கை நனைக்க மாட்டார்களாமே. அது ஏற்கனவே வித்யாவுக்கும் தெரிந்திருந்ததுதான். அவள் உள்ளே போய் தன் அறையில் அமர்ந்தவுடனே மிருணா மெல்ல எட்டிப் பார்த்தாள்.

    ‘வாங்க!’ என்றாள் வித்யா புன்னகையுடன்.

    ‘வாங்க போங்களெல்லாம் இல்லை. நான் உங்களை விட சின்னவதான் அண்ணி. நீங்க என்னை மிருணான்னே கூப்பிடலாம்!’ என்றாள்.

    வித்யா புன்னகைத்தாள். நீங்களும் அண்ணின்னு கூப்பிடலாம்"

    பார்த்தீங்களா? எங்கண்ணாவுக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு. உங்க ஃபோட்டோவை டேபிள் மேலே வச்சிருக்கான்! என்றாள் மிருணா. வித்யாவின் முகம் சிவந்து விட்டது. அவள் அருகில் வந்து அண்ணி, நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க! ரொம்ப கோபிச்சுப்பான்! என்றாள்.

    வித்யா பேச்சை மாற்றியவளாக அப்புறம் எக்ஸாமெல்லாம் நல்லா எழுதினீங்களா? என்றுகேட்டாள்.

    ம்... நல்லா எழுதியிருக்கேன். தேர்ட் இயர். ராங்க்கெல்லாம் வாங்க மாட்டேன் உங்களை மாதிரி. ஆனால், ஓரளவுக்கு மெரிட்டோரியஸ்ஸா பாஸ் பண்ணுவேன். நான் தான் சொன்னேன் எக்ஸாம் முடிஞ்சதுக்குப் பிறகு தான் இந்த விசேஷம் வைக்கணும்.அப்பத்தான் நான் ஃபுல் அன் ஃபுல்லா பார்ட்டிசிபேட் பண்ண முடியும்னு அம்மாகிட்ட சொன்னேன் என்றாள்.

    வித்யாவுக்கு அந்தக் கணமே அவளைப் பிடித்துப் போய் விட்டது. ‘யதார்த்தமாகப் பழகுகிறாளே. பரவாயில்லை நாத்தனார் பிரச்சினை பெரிதாக வராதுன்னு நினைக்கிறேன்!" என்று எண்ணிக் கொண்டாள்.

    அண்ணி, உங்களுக்கு எல்லா கலரும் ஸ¨ட் ஆகும். ஆனா நீங்க டார்க் கலர்ஸ் போட்டீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்! என்றாள்.

    சரி மிருணா! என்றாள் வித்யா.

    ஐய்யே இப்படி எல்லாத்துக்கும் சரி சரின்னு சொன்னீங்கன்னா த்ரில்லிங்காவே இருக்காதே. கொஞ்சமாவது சண்டை போட்டாத்தானே நல்லா இருக்கும்! என்றாள் மிருண.

    வித்யா மையமாகப் புன்னகைத்து வைத்தாள். அதற்குள்ளாக புனிதவதியும் மற்ற உறவினர் பெண்களும் வந்தார்கள். என்னடி? இங்கே வந்து பாவம் அவளைப் பயமுறுத்திகிட்டிருக்கே? என்றாள் அம்மா.

    அம்மா, எனக்கென்னமோ இவங்க ஒண்ணும் பயப்படறமாதிரி தெரியலை. ஸாஃபட்டா இருக்காங்க ஆனா பயப்பட மாட்டாங்கன்னு நினைக்கிறேன்! என்றாள்.

    வித்யா ஒன்றும் பேசவில்லை.

    புனிதவதி வித்யாவைப் பார்த்து சரிம்மா! உனக்கு ஏதாவது சொல்லணும்னு இருந்தா இப்ப என்கிட்டே சொல்லு! என்றாள்.

    எனக்கு அப்படி ஒண்ணும் இல்லைங்க. எங்க அம்மா அப்பா என்ன சொல்றாங்களோ அது படிதான்! என்றாள் வித்யா.

    ம்... இப்ப அம்மா அப்பா சொல்றபடி கேட்டுக்க. அப்புறம் எங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம்...! என்று சிரித்தாள்.

    அங்கே நீங்க பெரியவங்க இருக்கீங்க! என்று இழுத்து நிறுத்தினாள்.

    அப்புறம் அவன் இருக்கானே! என்று புனிதவதி கலகலவென்று சிரித்து விட்டு, சரிம்மா! நாங்க கிளம்பறோம்! என்று அவளிடம் விடை பெற்றுக் கொண்டாள்.

    அந்த அறையின் வாயில் வரை சென்றவர் திரும்பி மலர்க்கொடியைப் பார்த்து அம்மா! கண்டிப்பா சுத்திப் போடுங்க. என் கண்ணே பட்டிருக்கும்! என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

    விவேக் முன்னாலே ஹாலில் சுப்பையாவிடம் அன்று வந்த பெரியவர்களிடமும் பேசிக் கொண்டிருந்தான். வரும்போது புனிதவதி சொல்லி விட்டாள். இந்த டைம் பார்க்க மாட்டும்தான். அங்கே பொண்ணுகிட்டே தனியா பேசறதெல்லாம் முடியாது. வேண்ணா ஃபைனலைஸ் ஆனதுக்கு அப்புறம் நீ செல்ஃபோன்ல பேசிக்கலாம்! என்று சொல்லியிருந்தாள். அதனால் அவனும் தன்னுடைய ஆசையை அடக்கிக் கொண்டுதான் அமர்ந்திருந்தான்.

    எல்லோருமாக விடைபெற்றுக் கொண்டு கிளம்பும் போது மட்டும் அவன் கண்கள் வித்யாவைத் தேடின. அதற்குள்ளாக உறவுக்காரப் பெண்மணிகள் மெதுவாக அவளை இழுத்து வந்து அறை வாயிலிலே நிறுத்தியிருந்தார்கள். அவன் வித்யாவைப் பார்த்து லேசாகத் தலை அசைத்து விட்டுப் புறப்பட்டான்.

    அந்தத் தலையசைப்பே அவளுக்கு ஒரு பூரிப்பை புளகாங்கிதத்தை ஏற்படுத்தியது. முகம் சிவக்க அவளும் லேசாகத் தலையாட்டினாள். அவள் அந்தப் பக்கம் போனவுடன் சுரேஷ் வித்யாவின் பக்கத்திலே வந்து அக்கா, அத்தான் சூப்பரா இருக்காரில்லே! என்றான்.

    போடா! என்று அவள் செல்லமாகக் கோபித்துக் கொண்டு உள்ளே போய் விட்டாள்.

    மலர்க்கொடியும் சுப்பையாவும் அவர்களை வழியனுப்புவதற்காக முன்னாலே போயிருந்தார்கள். எல்லோரும் காரிலே ஏறிய பிறகும் கூட புனிதவதி தயங்கினாற்போல நின்று கொண்டிருந்தாள்.

    பிறகு திரும்பி வந்து நான் சொன்ன விஷயம்? என்று இழுத்தார்.

    அம்மா! நீங்க எப்படிச் சொல்றீங்களோ அப்படிம்மா? நீங்க என்ன கேட்கறீங்களோ அதைச் செய்யறோம்! என்றார் சுப்பையா.

    நான் தான் ஒண்ணும் கேட்கலையே? உங்க பொண்ணாச்சு. நீங்களாச்சு என்னை பொறுத்த வரைக்கும் என் மகனுக்கு உங்கப் பொண்ணை பிடிச்சிருச்சு இப்பக் கட்டின புடவையோட அனுப்பினா கூட நான் கூட்டிட்டுப் போய் பெரிசா விமரிசையா கல்யாணம் பண்ணி வச்சிருவேன்! என்று சிரித்தாள் புனிதவதி.

    மலர்க்கொடியும் சுப்பையாவும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள். உங்க மகனுக்குப் பிடிச்சிருக்கறது ரொம்ப சந்தோஷம். எங்களுக்கும் இருக்கறது ஒரே பையன், ஒரே பொண்ணு. ஏதோ கொஞ்சம் வசதி இருக்கு. கொஞ்சம் நில, புலன் இருக்கு அதனால நான் நல்லாவே பண்ணுவேன்! என்றார்.

    இல்லைங்க, நான் அதைப் பத்தி பேசலை நான் வேற ஒரு விஷயம் சொன்னேனே? அதைக் கேட்கறேன்! என்றார் புனிதவதி.

    ஒரு நிமிடம் விழித்த சுப்பையா ‘என்ன?’ என்பது போல் மலர்க்கொடியைப் பார்க்க ‘அதாங்க அந்த விஷயம்?" என்றாள் மலர்க்கொடி.

    ஓஹோஹோ! அதுவா அது இப்போதைக்கு நாங்க சொல்லலைம்மா. கல்யாணம் நடக்கட்டும் ஏன்னா பையன் அருமையான பையன். பொண்ணை உங்களுக்குப் பிடிச்சிருச்சு இது ஒரு பெரிய விஷயமே இல்லை. கல்யாணத்துக்கு அப்புறம் மெதுவா சொல்லிக்கலாம்! என்றார் சுப்பையா.

    எனக்கொன்னும் பிரச்சினை இல்லை. அப்புறம் இதனாலே எந்தப் பிரச்சினையும் வந்தரக் கூடாது. ஏன்னா படிச்ச பொண்ணு! என்றார் குமுதா.

    படிச்ச பொண்ணுதான். அதனாலதான் இப்பச் சொன்னா மனசு வருத்தப்படுவா. வேண்டாம் கல்யாணம் முடியட்டும். ரெண்டு பேரும் கொஞ்சம் பழகினதுக்கு அப்புறம் மெதுவா சொல்லிக்கலாம்! என்றார் சுப்பையா.

    அதாங்க, நான் மறுபடியும் சொல்றேன். இப்போ சொல்லி பிரச்சினையை முடிச்சிட்டா நல்லதுன்னு எனக்குத் தோணுது. அப்புறம் கல்யாணத்துக்கு அப்புறம் சொல்லி அதனால எந்த மன வருத்தமும் வரக் கூடாது! என்றாள் புனிதவதி.

    அப்போது மலர்க்கொடி இல்லைங்க அம்மா, எங்க பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு பொறுப்பானவ சூழ்நிலையை புரிஞ்சுப்பா. இங்கேயே எல்லாத்துக்கும் விட்டுக் கொடுத்துத்தான் போவா. அதனாலே அவளால எந்தப் பிரச்சினையும் வராது! என்றாள்.

    பிரச்சினை வராது சரிங்க. மனசு வருத்தம் எதுவும் வந்தரக் கூடாது.எங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் அவ சந்தோஷமா இருக்கணும்! என்றாள் புனிதவதி மறுபடியும்.

    சரிங்க, இதை நாம ஆலோசிக்கலாம்! என்றார் சுப்பையா.

    ஆமா, எல்லாரும் காத்துக்கிட்ருக்காங்க. நான் கிளம்பறேன். நான் மறுபடியும் போய் ஃபோன் பண்றேன்! என்றார் புனிதவதி.

    கிளம்பிவிட்டார்கள். உறவினர்களெல்லாம் போனதற்குப் பிறகு வித்யாவும் சுரேஷும் கூட உறங்கப் போய் விட்டார்கள்.

    மலர்க்கொடியும் சுப்பையாவும் தங்கள் வீட்டுக்கு முன்னாலே இருக்கக் கூடிய அந்த சின்னத் தோட்டத்துக்கு நடுவிலே சேரைப் போட்டுக் கொண்டு அமர்ந்தார்கள்.

    ஏங்க சொல்லிரலாமா? என்றார் மலர்க்கொடி.

    இத பாரு! இப்ப சொன்னா உம் மகளுக்கு வருத்தம் தான் ஆகும். வருத்தத்தோடு போய் மணவறையில் உட்காருவா வேண்டாம் இது ஒண்ணும் ஒரு பெரிய பிரச்சினை இல்லை. அங்கே வேணுங்கற வசதி கிடக்குது. அதனால கல்யாணம் முடியட்டும். நான் விசாரிச்ச வரைக்கும் புனிதவதி அம்மா எவ்வளவுக்கெவ்வளவு கண்டிப்பாப் பேசறாங்களோ? அவ்வளவுக்கவ்வளவு அன்பானவங்கவன்னு சொல்றாங்க. வீட்டுக்காரர் போனதுக்கப்புறம் அந்த அம்மா நிர்வாகம் பண்றதுக்கு கொஞ்சம் கெடுபிடியா இருந்துதான் ஆகணும். அதனால இருந்திருக்காங்க. அதனால நான் என்ன சொல்றேன்னா கல்யாணத்துக்கு அப்புறமாவே சொல்லிக்கலாம்! என்று இறுதியாக சொல்லி விட்டார் சுப்பையா.

    சரிங்க, அவ ஏத்துக்குவா. ஆனாலும், மனசுல ஒரு சங்கடம்?! என்று இழுக்க

    அதெல்லாம் ஒண்ணும் வராது. அது என் பொறுப்பு! என்று சொல்லி விட்டார் சுப்பையா. பெண்ணுக்கு அருமையான வரன் அமைந்த மகிழ்ச்சி எந்த அளவுக்கு மலர்க்கொடிக்கு இருந்ததோ அதே அளவுக்கு இந்த ஒரு சின்ன நெருடல் இருக்கிறதே என்பதும் கவலையாகத்தான் இருந்தது.

    2

    சிந்தனையுடனே நடமாடிக் கொண்டிருந்தார் புனிதவதி. என்னது பெண்ணின் பெற்றோர்கள் இரண்டு பேருமே இந்த விசயத்தைப் பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்கிறார்கள். ஆனால் பின்னால் அந்தப் பெண் ஏதாவது பிரச்சினை செய்வாளோ. ஆனால் அந்தப் பெண்ணின் நடவடிக்கைகளைப் பார்த்தால் அப்படியெல்லாம் பிரச்சினை செய்யக்கூடிய பெண்ணாகத் தெரியவில்லை.

    மனதுக்குள் வருத்தம் இருக்குமோ? அதற்கெல்லாம் என்ன செய்வது. பெண்ணாகப் பிறந்தாலே நிறைய விட்டுக் கொடுக்க வேண்டித்தான் இருக்கிறது. பெண்ணுக்குத் தனக்கென்று ஆசைகளே இருக்க முடியாதே. அப்படித்தானே இந்தச் சமூகம் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டார். வேண்டாம் இதைப் போட்டு இப்போது பேசிக் குழப்பி காரியம் நல்லபடியாக நடப்பதை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டாள்.

    விவேகானந்தனிடம் சொல்லலாமா என்று நினைத்தாள். பிறகு "வேண்டாம். அவன் வேண்டாம்மா அப்படியெல்லாம் செய்ய வேண்டாம். எல்லாத்தையும் கிளியர்கட்டா சொல்லிடுங்க அப்படிம்பான். அதுக்கப்புறம் சொல்லி மறுபடியும் இந்த சம்பந்தம் தகையாமப் போச்சுன்னா அவனுக்கும் ரொம்ப வருத்தம் இருக்கும்ல. இப்பவே அந்தப் பொண்ணோட ஃபோட்டோவை டேபிள் மேலே வச்சுகிட்டி ருக்கான். அது நமக்கெல்லாம் தெரியக் கூடாதுன்னு அதுக்கு முன்னாடி வேற ஏதோ படம் வச்சு கொஞ்சம் மறைவா பின்னாலே வச்சிருக்கான். நாம நடமாடும் போது பார்த்தா தெரியக்கூடாதாம். அன்னைக்கு மிருணா தானே பார்த்துட்டு வந்து சொன்னா. அதனால அவனோட ஆசையைக் கெடுக்க வேண்டாம். அப்புறமா ஒரு சின்ன சண்டையே வந்தாக் கூட பிறகு எப்படியோ சமாதானம் ஆயிருவாங்க. பிரச்சினை தீர்ந்து விடும் என்று எண்ணிக் கொண்டாள் புனிதவதி.

    அது அவளுடைய மாமியார் காலத்தில் இருந்து வந்த நம்பிக்கை. ‘பொட்டப் புள்ளை சம்பாதித்து சாப்பிட வேண்டுமா?" என்பார் மாமியார். மாமனாரும் புள்ளைங்களெல்லாம் வேலைக்குப் போகக் கூடாது என்பார். அதனாலேயே அவளுக்கும் அந்த எண்ணம் தோன்றி விட்டது.

    ‘நம்ம பரம்பரையில ஒத்துக்கறது இல்லை. நாம மட்டும் எப்படி? ஆனால் காலம் மாறிட்டுதான் இருக்குது. இப்ப மிருணாவை நாம காலேஜுக்கு அனுப்பறது இல்லையா?" என்று அவளே

    Enjoying the preview?
    Page 1 of 1