Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nesa Veli
Nesa Veli
Nesa Veli
Ebook316 pages2 hours

Nesa Veli

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

இது ஒரு நிஜ தம்பதியரைப் பற்றி சொல்லும் கதை. படிக்கும் வயதில் கல்யாணமா...? என நெற்றியை யோசனையில் சுருங்க வைத்தாலும், கொண்டவனின் அன்பிருந்தால் வாழ்க்கையில் எதுவும் சுலபமே என்பதை நேசத்தால் சொல்லும் கதை. நாயகன் இலக்கியனின் நேசம் நாயகி யாழினியின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது என்பதைக் கதையில் படிக்கலாம். ரொமான்ஸ் பிரியர்களுக்கு நிறைய காட்சிகள் காத்திருக்கிறது...

Languageதமிழ்
Release dateAug 14, 2021
ISBN6580134407380
Nesa Veli

Read more from Latha Baiju

Related to Nesa Veli

Related ebooks

Reviews for Nesa Veli

Rating: 4 out of 5 stars
4/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nesa Veli - Latha Baiju

    https://www.pustaka.co.in

    நேச வேலி

    Nesa Veli

    Author:

    லதா பைஜூ

    Latha Baiju

    For more books

    https://www.pustaka.co.in/home/author/latha-baiju

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் – 6

    அத்தியாயம் – 7

    அத்தியாயம் – 8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் – 10

    அத்தியாயம் – 11

    அத்தியாயம் – 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் – 14

    அத்தியாயம் – 15

    அத்தியாயம் – 16

    அத்தியாயம் – 17

    அத்தியாயம் – 18

    அத்தியாயம் – 19

    அத்தியாயம் – 20

    அத்தியாயம் – 21

    அத்தியாயம் – 22

    அத்தியாயம் – 1

    மாலை நேரத்து சூரியன், அலுவலகம் முடிந்து புதுப் பொண்டாட்டியைக் காணப் போகும் புது மாப்பிள்ளை போல் வேகமாய் விரைந்து கொண்டிருந்தது. அதற்கு இடைஞ்சலாய் மாலை நேரத்து டிராபிக் போல மேகம் குறுக்கே குறுக்கே வந்து கொண்டிருக்க, தனது கனல் சிறகுகளால் அதை விலக்கி மேற்கில் தன் இல்லம் நோக்கி விரைந்து கொண்டிருந்தான் ஆதவன்.

    யாழினி... நில்லு நானும் வரேன்... பின்னில் கேட்ட தோழியின் குரலைக் கேட்டு திரும்பினாள் யாழினி.

    கறுப்போடு களையாய் இருந்த அழகான வட்ட முகம்... நின்று திரும்பியவள் தோழியை நோக்கி சிரிக்க அழகான பல் வரிசை பளீரிட்டது. இரட்டை சடையை ரிப்பன் வைத்து பின்னலிட்டு மடக்கிக் கட்டியிருந்தாள். மெல்லிசான உடம்பை யூனிபார்ம் தழுவி இருக்க, முதுகில் புத்தகப் பை தொங்கிக் கொண்டிருந்தது.

    உன்ன மாதிரி வளைஞ்சு நெளிஞ்சு நடந்திட்டு இருந்தா எப்ப வீடு போயி சேர்றது... சீக்கிரம் வாடி...

    இவ்ளோ அவசரமா ஸ்கூல் விட்டதும் வீட்டுக்குப் போயி என்னடி பண்ணப் போறோம்... கொஞ்சம் மெதுவாதான் போவமே... உமா சலித்துக் கொண்டாள்.

    உனக்கென்ன உமா, வீட்டுக்கு ஒரே புள்ள... உன் வீட்டுல நீ வச்சது தான் சட்டம்... எனக்கு அப்படியா... நான் போகும்போது பால்காரண்ணன் வீட்டுல பால் வாங்கிப் போய் கடைல கொடுக்காட்டி என் அம்மா திட்டுமே...

    சரி, சரி புலம்பாத... நான் வேகமா நடக்கறேன்... சொல்லிவிட்டு வேகமாய் எட்டெடுத்து வைத்தாள் உமா.

    இருவரும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தனர். இன்னும் சில நாளில் முழு ஆண்டுப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். சின்ன வயதில் இருந்தே ஒன்றாய் படிக்கும் தோழிகள்.

    யாழினி... இன்னைக்கு என் வீட்டுக்கு வரியா, படிக்கலாம்...

    எனக்கும் ஆசைதான்... ஆனா, அம்மா விடமாட்டாங்க...

    எதுக்கெடுத்தாலும் அம்மா, அம்மான்னே சொல்லிட்டு இரு... நாளைக்குக் கல்யாணம் ஆகி, புள்ள பெத்துக்கக் கூட அம்மாவைக் கேட்டுதான் பண்ணுவியோ... உமா கிண்டலாய் கேட்க, பின்ன, அவங்க சொல்லாமலா நான் கல்யாணம் பண்ணிப்பேன்... என்றாள் சிரிப்புடன்.

    சரிடி, நான் வரேன்... பால்காரர் வீடு வந்ததும் யாழினி சொல்ல அங்கிருந்து பிரிந்த தெருவில் நுழைந்தாள் உமா.

    பாலை வாங்கிக் கொண்டு கையிலிருந்த குட்டி கை கடிகாரத்தைப் பார்த்தவள், ஆத்தீ... இன்னும் அஞ்சு நிமிஷத்துல நான் கடைக்குப் போகலேன்னா அம்மா திட்டத் தொடங்கிருமே... என பாலை வாங்கிக் கொண்டு அடுத்த தெருவில் இருந்த தங்கள் டீக்கடையை நோக்கி விரைந்தாள். அவள் நினைத்தபடி வாசலில் காத்திருந்தார் வசந்தா.

    வந்துட்டியா கண்ணம்மா, சீக்கிரம் போயி மேலுக்கு ஊத்திட்டு நல்ல டிரஸ்ஸாப் போட்டுக்க...

    ஏன்மா, நாம எங்காச்சும் வெளிய போறமா... குழந்தைத்தனம் மாறாமல் இருந்த மகளின் முகத்தை அன்போடு தடவியவர், அதெல்லாம் அப்புறம் சொல்லறேன்... அம்மா சொன்னபோல சீக்கிரம் குளிச்சு டிரஸ் மாத்திக்கமா... எனவும், சரிம்மா... என்றவள் மறுபேச்சுப் பேசாமல் பின்னால் இருந்த வீட்டுக்குள் நுழைந்தாள்.

    ஏய் மாலினி, சின்னவ வந்துட்டா பாரு... அவளுக்கு காப்பித் தண்ணி எதுவும் வச்சுக் குடு... என்று வீட்டுக்குள் குரல் கொடுத்தார் வசந்தா.

    சின்னக்கா, என்ன விசேஷம்... அம்மா எதுக்கு என்னை குளிச்சு புது டிரஸ் போடச் சொல்லுச்சு...

    அதுவா... உன்னைக் கட்டிட்டுப் போக தேசிங்கு ராஜன் குதிரைல வராகளாம்... என்று சொல்லியபடி பூவைக் கட்டி எடுத்து வைக்க, இந்தக்காக்கு என்ன கேட்டாலும் எகத்தாளம் தான்... ஒழுங்கா பதில் சொல்லுதா பாரு... முனங்கிக் கொண்டே பாத்ரூமுக்குள் நுழைந்தவள் குளித்து, தனக்குப் பிடித்த அரக்கு கலர் தாவணியும் வெந்தயக் கலர் பாவாடையும் அணிந்து கொண்டு, தலையை சீவி நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டை வைத்துக் கொண்டு அதற்கு மேல் விபூதி இட்டுக் கொண்டு ஸ்கூல் பாகுடன் அமர்ந்தாள்.

    அம்மா வரதுக்குள்ள கொஞ்சமாச்சும் ஹோம் வொர்க் முடிச்சிருவோம்... நாளைக்கு ரெகார்டு நோட்டை சப்மிட் பண்ணலன்னா அந்த கண்ணாடி வாத்தி கஷாயம் குடிச்ச போல மூஞ்ச வச்சிட்டு கத்துவார்....

    காப்பியுடன் வந்த மாலினி, என்னடி, அதுக்குள்ள புஸ்தக மூட்டையைப் பிரிச்சு உக்கார்ந்துட்ட... இதெல்லாம் எடுத்து வச்சிட்டு வா... அப்பா கூப்பிடறாக... எனவும், நிறைய எழுதக் குடுத்துருக்காக... அதான் எடுத்து வச்சேன்க்கா... அப்பா, என்ன நேரமா வீட்டுக்கு வந்துட்டாக...... என்றவள் அதை மூடி வைத்துவிட்டு தந்தையைத் தேடி சென்றாள்.

    கண்ணம்மா, வாடா கண்ணு... காபி குடிச்சியா... கடைக்குட்டி மகளை வாஞ்சையுடன் அருகே அழைத்தார்.

    குடிச்சுட்டேன்ப்பா... இன்னைக்கு என்னப்பா, நம்ம வீட்டுல விசேஷம்... நீங்களும் நேரமா வந்துட்டிங்க...

    எல்லாம் நல்ல விஷயம் தான் கண்ணம்மா... அவர் சொல்லத் தொடங்க உள்ளே வந்த வசந்தா, என்னங்க, அவுக கிளம்பிட்டாங்களாம்... சின்னவன் போன் பண்ணான்... என்று சொல்ல நடேசன் பரபரப்பானார்.

    என்ன கண்ணம்மா, தலைல பூ வச்சுக்காம இருக்க... மாலினி, இவ தலைல பூ வச்சுவிடு... என்று வெளியே செல்ல குழப்பமாய் நின்று கொண்டிருந்தாள் யாழினி.

    என்னடா, நடக்குது இங்க... அப்பாவும், அம்மாவும் யாரோ முதலமைச்சர் வீட்டுக்கு வரப் போற போல பரபரப்பா இருக்காங்க... சரி, வெயிட் பண்ணிப் பார்ப்போம்... என்றபடி மாலினி தலையில் பூ வைக்க அசையாமல் நின்றாள்.

    யாழினியின் உடன் பிறந்தவர்கள் முதலில் மூன்று ஆண்கள் அடுத்து மூன்று பெண்கள் ரூபினி, மாலினி, யாழினி. இவள்தான் கடைக்குட்டி. தந்தை நடராசன் சின்னதாய் ஒரு ஹோட்டல் நடத்தி வந்தார். மூத்த அண்ணன்கள் இருவரும் கல்யாணமாகி அடுத்த ஊர்களில் இருக்க இளைய அண்ணன் குடும்பம் மட்டும் அடுத்த தெருவில் இருந்தது. அவர்தான் ஹோட்டலைப் பார்த்துக் கொள்கிறார்.

    ரூபினியை மூத்த அண்ணியின் பெரியப்பா மகனுக்கு கல்யாணம் முடித்திருக்க அவரும் அந்த அண்ணன் வீட்டுக்குப் பக்கத்து தெருவில் குடியிருந்தார். மாலினிக்கும் அடுத்த ஊரில் இருந்த சொந்தகாரப் பையனுக்கு நிச்சமாகி இருக்க கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாதமே இருந்தது.

    அவர்கள் குடும்பத்தில் எல்லாருமே பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்திருக்க யாழினிக்கு எப்படியாவது கல்லூரிப் படிப்பை முடிக்க வேண்டும் என்று மிகவும் ஆசை. எனவே விருப்பத்தோடு படித்துக் கொண்டிருந்தாள்.

    சிறிது நேரத்தில் சின்ன அண்ணனின் வண்டி வாசலில் வந்து நிற்க உடன் அண்ணியும் அவர்களின் மகன் இரண்டு வயது வசந்தும் உள்ளே வந்தனர்.

    மாலினி தங்கையின் தலையில் பூ வைத்துவிட்டு உள்ளே அழைத்துச் சென்று, இங்கயே இருடி... நான் கூப்பிடவும் வந்தாப் போதும்... என்றுவிட்டு வெளியே செல்ல, ஆஹா, ஆளை விடுங்கடா சாமி... ரொம்ப சந்தோசம்... என்றபடி இவள் மூடி வைத்த ரெகார்டு நோட்டைத் திறந்து எழுதத் தொடங்கினாள். சில நிமிடங்களில் வாசலில் ஏதேதோ வண்டி நிற்கும் சத்தமும், ஹாலில் யார் யாரோ பேசும் சத்தமும் கேட்க அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இவள் பாட்டுக்கு எழுதிக் கொண்டிருந்தாள்.

    இந்த உமா கழுதை எழுதி முடிச்சுட்டா பரவால்ல... இல்லேன்னா நாளைக்கு ஸ்கூல்ல வந்து என்னை எழுதித் தர சொல்லுவா... என யோசித்தபடி எழுதிக் கொண்டிருந்த யாழினி சூதுவாது தெரியாத வெகுளிப் பெண். என்ன மனதில் நினைக்கிறாளோ அதை அப்படியே சொல்லி விடுவாள்.

    கண்ணம்மா... இங்க வா கண்ணு... புன்னகையுடன் உள்ளே வந்த வசந்தா மகளை அழைக்க, எதுக்கு மா... எனக்கு நிறைய எழுதறதுக்கு இருக்கு... நீங்களே பார்த்துக்கங்க... என்று சொல்ல அவர் சிரித்தார்.

    அடியே, நானெல்லாம் எப்பவோ உங்கப்பாவைப் பார்த்து கல்யாணம், முடிஞ்சு தான குழந்தையைப் பெத்துகிட்டோம்... இப்ப உன் கல்யாணத்துக்கு உன்னைப் பார்க்க தான மாப்பிள வீட்டுல வந்திருக்காங்க... என்றதும் அதிர்ந்து போனாள்.

    என்னம்மா சொல்லறீங்க, எனக்கு கல்யாணமா...

    ஆமா கண்ணம்மா, அப்பாவும் அம்மாவும் உன் நல்லதுக்கு தான பண்ணுவோம்... நம்மள விட வசதியான நல்ல இடத்து சம்மந்தம்... நம்ம வீட்டுல பொண்ணு இருக்கறது தெரிஞ்சு கேக்கவும் மறுக்கத் தோணல... மாப்பிள்ளைய வந்து பாரு... ராசா கணக்கா இருக்கார்... உனக்கு நிச்சயம் பிடிக்கும்... என்று சொல்ல அவள் தலையை இட வலமாய் ஆட்டி கண்ணீர் நிறைந்த கண்களுடன் மறுத்தாள்.

    போங்கம்மா, படிக்கிற புள்ளைக்கு கல்யாணத்தப் பண்ணி வைக்குறாங்களாம்... ம்ஹூம், நான் மாட்டேன்... எனக்கு நிறைய படிக்கணும்... ப்ளீஸ்மா, இப்ப இந்த கல்யாணம் வேண்டாம்... என்றாள் வருத்தத்துடன். அதற்குள் அவள் அண்ணியும், மாலினியும் அங்கே வந்தனர்.

    என்னத்தை, என்ன சொல்லுறா உங்க கண்ணம்மா...

    என்னத்த சொல்லுவா... இப்ப கல்யாணம் வேண்டாம், படிக்கப் போறேன்னு தான் சொல்லுறா... இவங்க அப்பா மனசுல உள்ள கவல இவளுக்கு எங்க தெரியப் போகுது... முன்ன மாதிரி அவருக்கும் முடியல... பட்டுன்னு ஏதாச்சும் ஆக முன்ன புள்ளைகளை கரை சேர்த்துடனும்னு நினைக்கறாரு.. இவ என்னடான்னா அதைப் புரிஞ்சுக்காம பிரசங்கம் பண்ணிட்டு இருக்கா... வசந்தா சற்று கடுப்புடன் சொல்ல அன்னையை பாவமாய் ஏறிட்டாள் யாழினி.

    அம்மா, அப்பாக்கு உடம்புக்கு முடியலைனு என்னை அவசரமா கல்யாணம் பண்ணிக் கொடுப்பீங்களா...

    இங்க பாரு யாழினி... இது ஒண்ணும் நாங்களாப் பார்த்த சம்மந்தம் இல்ல... மாப்பிள வீடு நல்ல வசதிக்காரங்க... ரெண்டு தெரு தள்ளி தான் அவங்க வீடு இருக்கு... நம்ம சாதி சனத்துல நல்ல பொண்ணு இருக்கான்னு பார்த்திட்டு இருந்தவங்க மாலினிக்கு கல்யாணம் நிச்சயமானது தெரியாம அவளைத்தான் முதல்ல கேட்டாங்க... அப்புறம் விஷயம் தெரிஞ்சு வேற யாரும் நம்ம சொந்தத்ததுல பொண்ணுக இருக்கான்னு கேக்கவும் தான் மாமாக்கு உன்னை அவங்க வீட்டுக்கு கொடுக்கணும்னு யோசனை... நாங்க என்ன, உனக்கு கெடுதலா பண்ணிடப் போறோம்... பேசாம கண்ணைத் துடைச்சுட்டு அவங்க முன்னால வந்து நில்லு... சொல்லிவிட்டு கடமை முடிந்தது போல் அவள் ஹாலுக்கு சென்றுவிட யாழினியின் சின்ன இதயம் பொருமியது.

    என் ஆசையைப் பத்தி யாருமே நினைச்சுப் பார்க்க மாட்டாங்களா... என்னோட விருப்பம் இவங்களுக்கு முக்கியம் இல்லையா...

    முகம் சுருங்க யோசித்துக் கொண்டிருந்தவளின் கையை வசந்தா ஆதரவுடன் பற்றிக் கொண்டார்.

    கண்ணம்மா, அவள விடு... நானும், அப்பாவும் உனக்கு நல்லது தான் பண்ணுவோம்னு நீ நம்பறியா இல்லியா...

    என்னமா, நான் உங்கள நம்பாம யாரை நம்புவேன்... நீங்க எனக்கு கல்யாணம் பண்ணனும் நினைச்சதை நான் தப்புன்னு சொல்லலை... இப்ப பண்ணனுமான்னு தான் கேக்கறேன்...

    கல்யாணம் முடிவாகறது எல்லாம் நம்ம கைல இல்ல கண்ணு... எப்ப, யாருன்னு கடவுள் முடிச்சு போட்டு வச்சிருக்காரோ அது படி தான் எல்லாம் நடக்கும்... நீ இப்படி பேசிட்டு இருக்கறதைப் பார்த்தா அப்பா வருத்தப்படுவாங்க... நல்ல புள்ளயா கண்ணைத் துடைச்சிட்டு எழுந்து வா... அப்புறம் மத்ததைப் பேசிக்கலாம்... அன்னை சொல்லவும், மாலினி, அம்மா தான் இவ்வளவு சொல்லறாங்கள்ள... நீ என்ன படிச்சு கலக்டரா ஆகப் போற... எழுந்து சொன்ன பேச்சைக் கேளு... என்று அதட்ட முறைத்தாள்.

    இருந்தாலும் அன்னையின் பரிதாபப் பார்வையைத் தாங்கிக் கொள்ள முடியாமல், ம்ம்... நான் வரேன்... ஆனா, என்னை இந்த வருஷம் பரீட்சையாவது எழுத விடணும்... என்றாள்.

    சரி டா கண்ணு... அதுக்கு நான் பொறுப்பு... அப்புறம் மேல படிக்கறது எல்லாம் நீ மாப்பிள்ளய கேட்டுப் படிச்சுக்க... என்று சந்தோஷமாய் எழுந்த வசந்தா, மாலினி, காப்பி எடுத்திட்டு வந்து கண்ணம்மா கிட்ட கொடு... என்றவர் மகளது கண்ணைத் துடைத்துவிட்டு லேசாய் பவுடர் போட்டு விட்டு அழைத்து வர மாலினி அவள் கையில் காபித் தட்டைக் கொடுக்க தயக்கத்துடன் முன்னே நடந்தாள்.

    ஹாலில் ஆண்களும், பெண்களுமாய் ஜமுக்காளத்திலும், நாற்காலியிலும் அமர்ந்திருந்தனர். மனதின் விருப்பமின்மை முகத்தில் தெரிய ஒருவித கலக்கத்துடன் அனைவருக்கும் காபி கொடுத்து முடிக்க, பெரியவங்களுக்கு நமஸ்காரம் பண்ணிக்க மா... என்றார் வசந்தா. இவள் குனிந்த தலையுடன் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் பொத்தாம் பொதுவாய் ஒரு நமஸ்காரத்தை வைத்தாள்.

    மாப்பிளையை நல்லாப் பார்த்துக்க மா... அப்புறம் பார்க்கலைன்னு சொல்லிடக் கூடாது... பையனின் அன்னை பர்வதம் சொல்லவும் இவள் படபடக்கும் இதயத்தோடு அப்படியே குனிந்து நின்றாள்.

    சின்னப் புள்ளயா இருக்குல்ல, அதான் வெக்கம் போலருக்கு... டேய் இலக்கியா... நீயாச்சும் பொண்ணை நல்லாப் பார்த்துக்க... என்று மகனிடமும் சொன்னார்.

    என்னது இலக்கியா வா... இதென்ன, பொண்ணு பேரை வச்சிருக்காங்க... என நினைத்தாலும் அவள் நிமிரவில்லை.

    படிச்சிட்டு இருக்குற பொண்ணுல்ல... அதான் கூச்சப் படறா... வசந்தா சொல்ல, ம்ம்... இவ கொஞ்சம் கலரு கம்மி போலருக்கு... மூத்தவ நல்ல சிவப்பா இருப்பாளே... இவளும் அப்படிதான் இருப்பான்னு நினைச்சோம்... உடம்பும் ஒல்லியா இருக்கு... என்றாள் மாப்பிள்ளையின் அக்கா கிருபா.

    குரல் வந்த திசையில் ஓரக்கண்ணால் பார்த்தாள் யாழினி.

    அப்ப அப்படியே எந்திரிச்சு ஓடிப் போயிருங்க... உடம்பு ஒல்லியா இருந்தா, பூஸ்ட், ஹார்லிக்ஸ்னு வாங்கிக் கொடுக்கறது தான... கறுப்பா இருக்கேனாம்... அந்தப் பெண்ணிடம் மனதுக்குள் சொல்லிக் கொண்டிருந்தாள்.

    எங்க தம்பி, நல்ல கலரு... அவன் அழகுக்கு வெளியூர்ல பார்த்தா நிறையப் பொண்ணுங்க கிடைப்பாங்க... அவன்தான் உள்ளூர்லேயே பொண்ணைப் பாருங்கன்னு பிடிவாதமா நிக்குறான்... என்றாள் பையனின் ரெண்டாவது அக்கா பிரபா.

    ஓ... உங்க தொம்பி அவ்ளோ அழகுன்னா மியூசியத்துல வச்சுப் பார்த்துக்க வேண்டியது தான... யாரு என்னைக் கட்டிக்கோன்னு இங்க தவம் கிடக்குறா... அடுத்து அவளைப் பார்த்து மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் யாழினி.

    நாங்க பெரிய குடும்பம்... அப்பா மறைவுக்குப் பின்னாடி அண்ணன், தம்பிங்க மூணு பேரும் ஒண்ணாத் தொழில் பண்ணிட்டு இருக்கோம்... குடும்பத்தோட நெளிவு, சுளிவு தெரிந்து அனுசரிச்சுப் போற பொண்ணு தான் எங்களுக்கு முக்கியம்... என்றார் மூத்த அண்ணன். மாப்பிள்ளையின் தம்பியும், சின்னக்கா சுபாவும் மட்டும் எதுவும் சொல்லாமல் இருக்க, அவர்களையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

    யாழினியின் விலாவில் இடித்த மாலினி, அடியே... ஓவரா பிகு பண்ணாம மாப்பிள்ளையைக் கொஞ்சம் பாரு... ரொம்ப அழகாருக்கார்... ஹூம், கொஞ்சநாள் முன்னாடி என்னைக் கேட்டு வந்திருந்தா நான் கட்டிட்டுப் போயிருப்பேன்... இப்ப உனக்கு லக் அடிச்சிருக்கு... என்றாள் கிசுகிசுப்புடன்.

    ஹூக்கும்... அப்படி என்ன பெரிய ஆணழகன்... படிக்கிற புள்ளைய கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு கூடத் தெரியாத மாங்கா மடையன்... இதுல இந்த லொக்கா ரொம்பத்தான் ஓவராப் பேசுறா... என அக்காவையும் விட்டு வைக்கவில்லை.

    ஆனாலும் வீம்புடன் மாப்பிள்ளையைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் நின்று கொண்டிருந்தவளை இலக்கியனின் பார்வை ஆவலுடன் கவனித்துக் கொண்டிருந்தது.

    யாழினி, கறுப்புதான்... ஆனாலும், அட்டக்கறுப்பு கிடையாது... களையாக இருந்தாள். அடர்த்தியான வளைந்த புருவம், கண்மை கூடப் போடாத மேக்கப்பே இல்லாத முகம்... மருண்ட விழிகள்... அழகான நெற்றி... நீண்ட கூந்தல் என இருந்தாலும் முகத்தில் குழந்தைத்தனம் மிச்சமிருந்தது.

    ஒவ்வொருத்தரும் தன்னைப் பற்றி பெருமையுடன் சொல்லும்போதும் அவள் முகத்தில் குறும்போடு ஒரு நக்கல் தெரிவதை ரசித்துக் கொண்டிருந்தான். ஒரே ஒரு முறை அவள் தன்னைப் பார்க்க மாட்டாளா எனப் பார்த்துக் கொண்டிருந்த இலக்கியனுக்கும் வயது அதிகமில்லை. இருபத்து மூன்று வயது மட்டுமே ஆகியிருந்தது.

    சிவந்த நிறம், அளவான உயரம், அலைபாயும் தலை முடி, கச்சிதமான உடம்பு என நிமிர்வாய் இருந்தாலும் அமைதியாய் அமர்ந்திருந்தான். இளவட்டப் பையன்களுக்கே உரித்தான கல்யாணம் பற்றிய ஆவல் கண்களில் தெரிந்தது. அவன் வீட்டிலும் மூன்று பெண்கள், மூன்று ஆண்கள்... தந்தை தவறியிருந்தார்.

    பெண்கள் இருவரை அடுத்த தெருவில் மணமுடித்துக் கொடுத்திருக்க ஆண்கள் மூவரும் ஒரே தெருவில் இருந்தனர். மூத்த அண்ணன் அதே தெருவில் வேறு வீட்டில் இருக்க அன்னையும் இளைய இரண்டு மகன்களும் பெரிய வீட்டில் இருந்தனர். தந்தை தொடங்கிய சவுண்டு சர்வீஸ், மண்டபம், கோவில் விஷேஷங்களுக்கு சீரியல் லைட்ஸ் அலங்காரம் செய்யும் தொழிலை சகோதரர்கள் மூவரும் பெரிய அளவில் செய்து வந்தனர். அந்த ஊரிலேயே எல்லா பெரிய விசேஷங்களுக்கும் அவர்களின் பர்வதம் சவுண்டு சர்வீஸ் தான் பிரபலமாக இருந்தது.

    சரி, நாங்க வீட்டுக்குப் போயி கலந்து பேசிட்டு விவரம் சொல்லறோம்... பர்வதம் சொல்ல எல்லாரும் எழுந்து கொண்டனர்.

    கருவாச்சியப் பிடிக்கலன்னு இப்பவே சொல்லிட்டுப் போறது தான... அதுக்கு எதுக்கு பொறவு சொல்லறோம்னு பில்டப்பு... என அதுக்கும் மனதுக்குள் கவுன்ட்டர் கொடுத்தாள் யாழினி.

    அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு வந்தனர்.

    கண்ணம்மா... இங்க வாடா, மாப்பிள்ளைய பார்த்தியா... உனக்குப் பிடிச்சிருக்கா... தந்தை நடேசன் பரிதவிப்போடு மகளிடம் கேட்க திகைத்தாள்.

    அதெல்லாம் அவளுக்கு அவரைப் பிடிக்காமலா இருக்கும்... கடவுளே, அவங்களுக்கு இவளைப் பிடிக்கணுமேன்னு தான் என் வேண்டுதல் எல்லாம்... என்றார் வசந்தா.

    கடவுளே... அவங்களுக்கு என்னைப் பிடிக்கக் கூடாது... நான் உன்னை ஸ்பெஷலா கவனிச்சுக்கறேன்... கடவுளிடம் டீல் பேசிக் கொண்டிருந்தவளிடம், அப்பாக்கு இந்த சம்மந்தம் ரொம்பப் பிடிச்சிருக்கு கண்ணம்மா... உனக்கு இதுல விருப்பம் தானே... என மீண்டும் கேட்டார் தந்தை.

    அவரிடம் மறுக்க

    Enjoying the preview?
    Page 1 of 1