Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Celluloid Kanavugal
Celluloid Kanavugal
Celluloid Kanavugal
Ebook439 pages3 hours

Celluloid Kanavugal

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

திரைப்பட உலகம் ஒரு மாயை... அங்கே உள்ளவர்களின் கனவைப் பற்றியும் அதற்கு அவர்கள் கொடுக்க வேண்டிய விலையைப் பற்றியும் இந்தக் கதையில் சொல்லியிருக்கிறேன்... ஒரு திருநங்கை இந்த உலகத்தில் நேரிடும் இன்னல்களைப் பற்றியும் ஒரு கதாபாத்திரத்தின் மூலம் சொல்லி இருக்கிறேன்... நேசம் கொண்டநெஞ்சங்கள் காலத்தின் பிடி தளர்ந்து ஒன்றாய் இணைந்ததா என்பதே செல்லுலாய்டு கனவுகள்.

Languageதமிழ்
Release dateJun 30, 2020
ISBN6580134405617
Celluloid Kanavugal

Read more from Latha Baiju

Related to Celluloid Kanavugal

Related ebooks

Reviews for Celluloid Kanavugal

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Celluloid Kanavugal - Latha Baiju

    http://www.pustaka.co.in

    செல்லுலாய்டு கனவுகள்

    Celluloid Kanavugal

    Author:

    லதா பைஜூ

    Latha Baiju

    For more books

    http://www.pustaka.co.in/home/author/latha-baiju

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கனவுகள் – 1

    கனவுகள் – 2

    கனவுகள் – 3

    கனவுகள் – 4

    கனவுகள் – 5

    கனவுகள் – 6

    கனவுகள் – 7

    கனவுகள் – 8

    கனவுகள் – 9

    கனவுகள் – 10

    கனவுகள் – 11

    கனவுகள் – 12

    கனவுகள் – 13

    கனவுகள் – 14

    கனவுகள் – 15

    கனவுகள் – 16

    கனவுகள் – 17

    கனவுகள் – 18

    கனவுகள் – 19

    கனவுகள் – 20

    கனவுகள் – 21

    கனவுகள் – 22

    கனவுகள் – 23

    கனவுகள் – 24

    கனவுகள் – 25

    கனவுகள் – 26

    கனவுகள் – 27

    கனவுகள் – 28

    கனவுகள் – 29

    கனவுகள் – 30

    கனவுகள் – 31

    கனவுகள் – 32

    கனவுகள் – 33

    கனவுகள் – 34

    கனவுகள் – 35

    கனவுகள் – 36

    கனவுகள் – 1

    பெரிய அந்தத் தியேட்டரின் முன்னில் ரசிகர்கள் கூட்டமாய் கூடியிருக்க கூச்சலும் கொண்டாட்டமுமாய் இருந்தது. உயர்ந்து நின்ற பேனர்களிலும், கட் அவுட்டிலும் ஸ்டைலாய் சிரித்துக் கொண்டிருந்தான் மக்களின் மனம் கவர்ந்த இளம் நாயகன் அஜய் கிருஷ்ணா.

    அங்கங்கே கட்டப்பட்டிருந்த தோரணங்களும், ஆகோஷக் கூச்சல்களும் திருவிழா போலத் தோன்ற வைத்தன. புதுப்பட வெளியீட்டின் முதல் காட்சிக்கு அஜய் கிருஷ்ணா அந்தத் தியேட்டருக்கு வருவதாகக் கூறியிருந்ததால் தங்கள் கனவுநாயகனின் தரிசனத்திற்காய் அவனது ரசிகர்கள் பரபரப்புடன் காத்திருந்தனர்.

    அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் கறுப்பு நிற வெளிநாட்டுக் காரொன்று கூட்டத்தை விலக்கிக் கொண்டு கேட்டின் முன் நின்றதைத் தொடர்ந்து படபடவென்று ஒலித்த பட்டாசுச் சத்தமும் கூடி இருந்தவர்களின் உற்சாகக் கோஷமும் அந்த இடத்தையே அதிர வைத்தது.

    கேட்டுக்குள் கார் வருவதற்காய் சற்று ஒதுங்கி நின்று வழி விட்டவர்கள் கடவுளைக் கண்ட சந்தோஷத்துடன் கூப்பாடு போட்டனர். தியேட்டரின் முன்பு கார் நிற்கவும் நான்கைந்து பாதுகாவலர்கள் அஜய்க்கு சுற்றிலும் வந்து நிற்க கண்ணில் கறுப்பு நிறக் கண்ணாடியும் கறுப்பு நிற ஜிப்பாவுமாய் பளிச்சென்ற நிறத்துடன் கம்பீரமாய் இறங்கினான் அஜய் கிருஷ்ணா.

    வாயில் அசை போட்டுக் கொண்டிருந்த சுவிங்கத்துடன் இறங்கி ரசிகர்களை நோக்கி கையை அசைக்க அங்கே சந்தோஷ ஆரவாரம் எழும்பியது. அதற்குமேல் அங்கு நிற்காமல் அலட்சிய நடையுடன் நடந்தவன் வேகமாய் திரையரங்கத்துள் நுழைந்தான். நடிகனை கடவுளாய் நினைத்து அவன் உருவத்துக்கு பாலபிஷேகம் செய்து நடிகைக்கு கோவில் எடுக்கும் உலகத்தில் தானே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...

    தியேட்டர் உரிமையாளர் பவ்யமாய் அவனை அழைத்துச் சென்று பிரத்யேகமான நாற்காலியில் அமர வைத்து குளிர்பானம் கொண்டு வரச் செய்து சிறப்பாய் கவனித்துக் கொண்டார்.

    ரசிகர்களின் கூச்சலும் விசில் சத்தமும் அரங்கையே அதிர வைக்க அனைத்தையும் உதட்டில் உறைந்த ஒரே புன்னகையுடன் பார்த்துக் கொண்டு கைகளை அசைத்து உற்சாகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான் திரைத் துறையில் அனைவராலும் செல்லமாய் AK என்று அழைக்கப் படும் அஜய் கிருஷ்ணா.

    ஒருவழியாய் முதல் காட்சி திரையிடப்பட ரசிகர்களின் உற்சாக வரவேற்பை முகத்தில் சிரிப்புடனும், மனதில் பெருமையுடனும் நோக்கிக் கொண்டிருந்தான் AK. பெரிய வெள்ளித் திரையில் அனைவரும் விரும்பும் கம்பீர நாயகனாய் தோன்றிய தன் உருவத்தை நினைத்து சிரித்துக் கொண்டான்.

    கண்ணில் காணும் காட்சியை உண்மையாய் நினைத்து கனவு நாயகனை கடவுளாய் கொண்டாடும் புத்தி இல்லாப் பதர்கள் இந்த மனிதர்கள்... என்ற ஏளனச் சிரிப்பும் அவன் இதழ்களில் அரும்பியது.

    படம் முடிந்து கிளம்பியவனை, தலைவா... நீதான் இனி தமிழ்நாட்டைக் காப்பாத்தனும்... சீக்கிரமே ஒரு கட்சியைக் தொடங்கிரு தலைவா... என்று ஒருத்தன் ஓடிவந்து அவன் காலில் விழுந்தான்.

    படம் சூப்பர்... வழக்கம் போல கலக்கிட்டீங்க தலைவா... என்றும், கண்டிப்பா நூறுநாள் ஓடும்... என்றும், சும்மா பிச்சு உதறிட்டிங்க... என்றும் ஆளாளுக்கு கூட்டத்தில் முன்னில் வந்து பாராட்ட, அவனுடன் செல்பி எடுப்பதற்காய் சிலர் முயற்சி செய்யத் தொடங்கினர். இதழில் மாறாத அதே சிரிப்புடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தவன் அனைவரின் பாராட்டையும் சின்ன தலையசைப்பில் ஏற்றுக் கொண்டு நகர, பாதுகாப்புடன் காருக்கு அழைத்துச் சென்றனர்.

    ரொம்ப நன்றி AK சார்... என்று கைகூப்பி அனுப்பி வைத்த தியேட்டர் உரிமையாளருக்கும் ரசிகர்களுக்கும் கையை அசைத்துக் கொண்டே காருக்குள் அமர்ந்தவன் முகம் சிரிப்பைத் தொலைத்து கடினப்பட்டிருந்தது.

    திலீப், ஹோட்டலுக்கு போ...

    ஓகே சார்... அவனது உதவியாளனும் மேனேஜருமான திலீபன் ஐந்து நட்சத்திர அந்தஸ்துள்ள அந்தப் பெரிய ஹோட்டலை நோக்கி காரை செலுத்த AK கண்களை மூடி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். மனம் ஒருவித சலிப்பை உணர்ந்தது. இந்தப் புகழ், பெருமை எல்லாம் திகட்டுவது போல் தோன்றியது. எல்லாம் இருந்தும் ஏதுமில்லா அனாதையாய் மனம் விம்மியது.

    சட்டென்று தன் எண்ண ஓட்டத்தை சரி செய்து கொண்டு அலட்சியமாய் நிமிர்ந்தவன் வெளியே பார்வையைப் பதித்தான்.

    சந்தோஷத்தை மட்டுமே அனுபவிக்கப் பிறந்தவன் நான்... இந்த மாய லோகத்தின் மாயாஜாலகக் கதவுகள் எனக்காய் திறக்கப் பட்டிருக்கின்றன... எனது மந்திரத்துக்கு மடத்தனமாய் அடிபணியும் ரசிகர் கூட்டங்கள்... இந்தப் புகழும் போதையும் என்றும் எனக்கு அடிமைகள்... மனதுக்குள் உச்சரித்துக் கொண்டவன் இதழ்கள் ஒரு அலட்சியப் புன்னகையை உதிர்த்தன.

    சிறிது நேரத்தில் பெரிய அந்த ஹோட்டல் முகப்பில் கார் நுழைய பழக்கமான காரைக் கண்டதும் செக்யூரிட்டி சல்யூட் வைத்தான். அவனை இறக்கிவிட்டு திலீபன் காரைப் பார்க் செய்ய செல்ல பளபளப்பும் படோடோபமுமாய் இருந்த பெரிய கட்டிடத்தின் உள்ளே நுழைந்தவன் ரிசப்ஷனில் பரிச்சயமாய் சிரித்தவர்களை சட்டை செய்யாமல் லிப்டை நோக்கி நகர்ந்தான்.

    லிப்ட் மேன் கதவைத் திறந்து கொடுக்க உள்ளே நுழைந்தவன் அவனுக்காய் எப்போதும் ஒதுக்கப் பட்டிருந்த அந்த விஐபி சூட்டுக்குள் நுழைந்தான்.

    கதவைத் திறந்து கொடுத்து, ஏதாவது வேண்டுமா... என்று பணிவோடு கேட்டவனிடம், அலட்சியமாய் தலையாட்டி மறுத்துவிட்டு உள்ளே சென்றான். அந்த பிரம்மாண்டமான அறையில் சகல வசதிகளும் இருக்க பிரிட்ஜைத் திறந்து உயர்ரக மதுக்குப்பி ஒன்றைக் கையில் எடுத்தவன் அந்தப் பொன்னிற திரவத்தை சில மிடறுகள் வாயில் சரித்துக் கொண்டு கட்டிலில் சாய்ந்தான்.

    சோர்ந்திருந்த மனதுக்கு சற்று புத்துணர்ச்சி வந்தது போல் இருந்தது. மெதுவாய் குப்பியிலிருந்த மதுபானத்தின் அளவு குறையத் தொடங்க அவனது போதையின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது.

    சரியாய் அந்த நேரத்தில் கதவு தட்டப்பட, மெல்ல எழுந்து சென்று கதவைத் திறக்க திலீபன் நின்றிருந்தான்.

    அவனைக் கேள்வியுடன் ஏறிட, அந்தப் பொண்ணு மாயா வந்திருக்கு சார்... என்றான் அவன்.

    AK வின் முகம் கோபத்தில் சிவக்க, நான்தான் அவளைப் பார்க்க விரும்பலைன்னு போன்ல சொன்னனே... என்றான் கோபத்தில் வார்த்தைகளைக் கடித்துக் கொண்டு.

    நான் சொன்னா போக மாட்டேங்குது சார்... நீங்களே ஒரு வார்த்தை சொல்லிடுங்களேன்... என்றான் திலீபன்.

    சற்று யோசித்தவன், ம்ம்... அனுப்பு... என்றுவிட்டு கட்டிலில் சென்று அமர்ந்தான்.

    சில நிமிடத்தில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் அழகான பெண்ணொருத்தி. அவள் உபயோகித்திருந்த உயர்தர பர்ப்யூமின் மணம் இதமாய் அறையை நிறைத்தது. அவளது நாகரிக உடையும் உடம்பில் தெரிந்த செழிப்பும் செல்வச் செருக்கைக் காட்டின. உடலை மறைக்க வேண்டிய இடங்களில் துணியில் பஞ்சத்தைக் காட்டியிருந்தாள். உடலை இறுக்கமாய் கவ்வியிருந்த உடை எப்போது வேண்டுமானாலும் தெறித்து விழுந்துவிடுவேன் என்று மிரட்டிக் கொண்டிருந்தது. அழகாய் மஸ்காரா போடப் பட்டிருந்த கருவிழிக் கண்ணிலேயே அழைப்பை சுமந்திருந்தவள் அவனை ஆசையுடன் நோக்கினாள். உதட்டு சாயத்துடன் ஈரம் கலந்து மினுமினுத்த உதடுகள் என்னைக் கொஞ்சம் பாரேன்... என்றது. அலை பாயும் கூந்தலை காற்றில் அலைய விட்டிருந்தாள்.

    ஹாய் ஹாண்ட்சம்... என்று சொல்லிக் கொண்டே அவனுக்கு அருகில் இழைந்து கொண்டு அமர்ந்தவளை வெறுப்புடன் நோக்கினான் AK.

    என்ன டார்லிங், நான் வந்தது பிடிக்கலையா... கேட்டுக் கொண்டே அவனது தோளில் கை வைத்தவளை கையைத் தட்டிவிட்டு கனலான பார்வையுடன் நோக்கியவன், எதுக்கு என்னைப் பார்க்கணும்னு சொன்னே... என்றான் கோபமான குரலில்.

    உனக்கு தெரியாதா டார்லிங்... கொஞ்சலுடன் கேட்டவளை எரிச்சலுடன் பார்த்தான்.

    லுக் மாயா... இந்தக் காதல், கருமாந்திரத்தில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை... உனக்கு என்னைப் பிடிச்சிருந்தா அதுக்குப் பேர் காதல் இல்லை... வெறும் கவர்ச்சி தான்... சினிமாவை சினிமாவா மட்டும் பாருங்க... அதுல உள்ள நாயகனை வாழ்க்கைல நாயகனா நினைச்சா உருப்புடாம தான் போவிங்க... சிடுசிடுத்தான்.

    AK, அப்ப என் காதல் பொய்னு சொல்லுறியா... அவளும் கோபத்துடன் கேட்டாள்.

    காதலே பொய்ன்னு சொல்லறேன்...

    ப்ளீஸ்... என்னைப் புரிஞ்சுக்க, எனக்கு நீ வேணும் AK... நான் உன் மேல ரொம்ப ஆசைப் பட்டுட்டேன்... என்னைப் பார், எங்கிட்ட அழகில்லையா... பணம் இல்லையா... எனக்கு வேற ஆள் தான் கிடைக்காதா... உன்னைப் பிடிச்சதால தானே சுத்தி வரேன்... எதுக்கு என்னை விலக்கி வைக்கிறே... என்றவள் அவன் கையைப் பிடிக்க உதறினான்.

    இங்க பாரு மாயா, உன்னோட அழகும் பணமும் என்னை எந்த விதத்திலும் பாதிக்கலை... நீ பெரிய ப்ரொட்யூசர் பொண்ணா இருக்கலாம்... அதுக்காக எனக்குப் பிடிக்காத விஷயத்தை என்னால பண்ண முடியாது...

    அவளுக்கு முதுகைக் காட்டி நின்று கூறியவனின் உடற்பயிற்சி செய்து உரமேறிய அழகான தோள்களையும் பரந்த முதுகையும் வெறித்தவள் தனது அழகால் அவனை இளக வைக்க முயல எண்ணி சட்டென்று பின்னில் இறுக அணைத்துக் கொண்டாள்.

    அவளது உடலின் மென்மையான பாகங்கள் அவன் மீது அழுத்தமாய் அழுந்தியிருக்க வெறுப்புடன் வேகமாய்த் திரும்பியவன் அவளை முன்னுக்கு இழுத்து கட்டிலில் தள்ளினான்.

    ச்சீ... இதுக்குப் பேர்தான் காதலா... காமம் தலைக்கேறி இங்க வந்திட்டு காதல்னு கதை பேசறியா... மொதல்ல வெளியே போ... என்றவனின் கண்கள் கோபத்தில் கொவ்வைப் பழமாய் சிவந்து மின்னின.

    சற்று மிரண்டு கூசிப் போனவள், AK, நான் யார்னு தெரிஞ்சுமா என்னை இப்படிக் கேவலமா பேசறே... நான் அப்பாகிட்ட சொன்னா என்னாகும்னு தெரியுமா... சற்று மிரட்டலாய் ஒலித்தது அவளது குரல்.

    உன் அப்பாகிட்ட என்ன சொல்லுவ... AK வை படுக்கைக்கு வான்னு கூப்பிட்டேன்... அவன் முடியாதுன்னு திருப்பி அனுப்பிட்டான்னு சொல்லப் போறியா... அவன் ஆவேசத்துடன் கேட்கவும் அந்த வார்த்தைகளின் அர்த்தத்தில் முகத்தைச் சுளித்தவள் வேகமாய் எழுந்து முறைத்துக் கொண்டு அமர்ந்தாள். கட்டிலில் விழுந்ததால் கசங்கிய உடைகளை சரி செய்து கொண்டு வெறுப்புடன் அவனைப் பார்த்துவிட்டு கோபமாய் வெளியேறினாள்.

    கதவை அடித்துச் சாத்திவிட்டு நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவன் அலையடிக்கும் மனதை அடக்க ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான். அறையின் பக்கவாட்டுக் கதவைத் திறந்து பால்கனிக்கு வந்தான். இரவின் வெளிச்சத்தில் நகரமே ஜொலித்துக் கொண்டிருக்க சந்திரன் ஆகாசத்தில் இருந்து கடமையாற்றிக் கொண்டிருந்தான். சிலுசிலுவென்று தழுவிய சுகமான காற்று மனதை சற்று சமன் செய்தது.

    ஆழமாய் புகையை உள்ளிழுத்து வளையங்களாய் வெளியேற்றியவன் அதன் முனையில் இருந்த சாம்பலை விரலால் சுண்டிவிட்டு வெளியே வெறித்தான். இன்று புகழையும் செல்வத்தையும் விலக்கி ஏகாந்தம் தேடும் மனது சந்தோஷத்துடன் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த நாட்களை எண்ணிப் பார்க்கத் தொடங்கியது.

    அஜய் கிருஷ்ணாவின் தந்தை சுரேஷ் கிருஷ்ணா மிகப் பெரிய சினிமா தயாரிப்பாளர். அவரது மனைவி ரேவதி. தாமதமாய் கல்யாணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்ற பெரும் மனக்கவலையைப் போக்க பல மருத்துவர்களைக் கண்டு, கோவில்களுக்கு வேண்டியதன் பலனாய் கடவுள் கொடுத்த அழகான வரம் அவர்களின் மகன் அஜய் கிருஷ்ணா. அவன் பிறக்கையில் தந்தைக்கு வயது நாற்பது.

    தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாங்காத குறையாய் மகனை எந்தக் குறையும் இல்லாமல் வளர்த்தனர். கண்டிப்பும் கறாரும் இல்லாமல் வேண்டியதெல்லாம் கிடைத்து வளரும் பிள்ளைகளுக்கு இயல்பாய் இருக்கும் பிடிவாதமும் பணத்திலேயே புரண்டு வளர்ந்ததால் வந்த திமிரும் அஜய்க்கும் மிகவும் அதிகமாகவே இருந்தது.

    அவனது வாயிலிருந்து வார்த்தை வர மட்டுமே தாமதம் அடுத்த நிமிடம் அது நிறைவேற்றப்படும். வாழ்வில் எந்தக் கவலையையும், ஏமாற்றத்தையும் அறியாமல் சுகத்தையும் சந்தோஷத்தையும் மட்டுமே அறிந்து வளர்ந்தவனை விதி பலமாய் புரட்டிப் போட அதன் சுழலில் சிக்கி கரையேறத் தெரியாமல் தவித்தான்.

    வசதி, வாய்ப்புகள், குரல் கொடுத்தால் வேலை செய்யப் பணியாளர்கள், எதையும் சாதித்துக் கொடுக்கும் பெற்றோர், மனதுக்குப் பிடித்த காதலி என்று அவன் பூமியில் சொர்கத்தை உணர்ந்திருந்தான்.

    வாலிப வயதில் அழகாய் மிடுக்குடன் இருந்தவனைக் கண்டு தந்தை சுரேஷ் கிருஷ்ணாவிடம் டைரக்டர் ரத்தினம் மகனை சினிமாவில் கதாநாயகனாய் அறிமுகப் படுத்தலாமே... என்று கேட்ட போதும் எனக்கான வழி அதுவல்ல, நான் பிசினஸில் சாதனைகளை செய்யப் போகிறேன் என்று எஞ்சினியரிங் முடித்து சொந்தமாய் AK பில்டர்ஸ் என்று கம்பெனியைத் தொடங்கியதோடு தந்தையின் பைனான்ஸ் நிறுவனத்தையும் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

    அவன் காதலித்த ரியாவும் ஒரு தயாரிப்பாளரின் மகள். சினிமாவில் தந்தையின் உதவியோடு அறிமுகமாகி இளம் கதாநாயகியாய் வலம் வந்து கொண்டிருந்தாள். பணம் பணத்தோடு சேர்ந்தாலும் குணத்தோடு சேரவில்லை.

    காலச்சக்கரத்தின் மாற்றம் அஜய் குடும்பத்தின் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டது. அவனது பெற்றோர் ஒரு கலை நிகழ்ச்சிக்காய் மலேஷியா சென்று திரும்பும் வழியில் ஏற்பட்ட விமான விபத்து காரணமாய் உயிரை விட பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானவனுக்கு அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் பேரதிர்ச்சியைக் கொடுத்தன.

    அவனது தந்தை இறுதியில் பிரம்மாண்டமாய் எடுத்த படத்துக்காய் நிறைய கடன்பட்டிருக்க அந்தப் படம் சரியான வசூலையும் தந்திருக்கவில்லை. அவருக்கு பணம் கொடுத்தவர்கள் வீட்டில் வந்து நிற்க எதுவும் புரியாமல் திகைத்துப் போனவனை காக்க அந்த நேரத்தில் தந்தையின் நண்பர் ரத்தினம் மட்டுமே உடனிருந்தார்.

    தந்தை வாங்கிய கடனை அடைக்க முயன்றதில் இருந்த வீட்டைத் தவிர மற்ற எல்லா சொத்துகளும் கைவிட்டுப் போயின. அந்த நேரத்தில் அவனுடன் துணை இருக்க வேண்டிய ரியா ஒரு திரைப்பட ஷூட்டிங்கிற்காய் வெளிநாடு சென்றவள் அங்கு நடந்ததை அறிந்தபிறகு நமக்கு செட் ஆகாது அஜய்... பிரேக் அப் பண்ணிக்கலாம்... என்று சர்வ சாதாரணமாய் கூறி விலகி விட்டாள். சொந்தம், சொத்து இழந்து வாழ்க்கை தலை கீழாய் மாறிப் போன வலியுடன் சட்டென்று யாருமில்லாத அனாதையாய் மாறிப் போன அதிர்ச்சியும் சேர்ந்து கொள்ள பைத்தியம் பிடித்த நிலைக்கு தள்ளப்பட்டான் AK.

    தனிமையையும் வேதனையையும் மறக்க குடிக்கத் தொடங்கினான். எந்நேரமும் வீட்டுக்குள் அடைந்து கிடந்த நண்பனின் மகனை அப்படிக் காணப் பொறுக்காமல் ரத்தினம் கூறிய வழிதான் சினிமாவில் கதாநாயகனாய் அறிமுகமானது. அவனது வாழ்வில் அது ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது.

    எந்தப் பணம் தன் கைவிட்டுப் போனதால் தனை விட்டுப் போனாளோ அந்தப் பணத்தை வேகமாய் சம்பாதித்து அவள் முகத்தில் கரியைப் பூசும் எண்ணத்துடன் பணம், புகழுக்குப் பின்னால் ஓடத் தொடங்கினான். ரத்தினம் இயக்கிய படத்தில் நாயகனாய் அறிமுகமான முதல் படமே வெற்றி வாகை சூட வெற்றி நாயகனாய் உலா வந்தவனுக்கு அடுத்தடுத்து நல்ல படங்கள் அமைந்தன. ஐந்து வருடத்தில் அசுர வளர்சியடைந்தவன் இழந்த சொத்துடன் புகழும் சேர்ந்து கிடைக்க விலகிய சொந்தங்களும், நட்புகளும் நெருங்க முயன்றனர்.

    அனைவரையும் எட்டவே நிறுத்தி வைத்தவன் தனக்காய் ஒரு வளையத்தை அமைத்துக் கொண்டான். சினிமாவில் நடிக்கத் தொடங்கியவன் வாழ்க்கையிலும் அது சம்மந்தமான நிகழ்சிகளில் மட்டும் செயற்கையாய் ஒரு புன்னகையைக் காட்டினான்.

    வெளியே வர்ணமயமான சினிமா உலகம் நெருங்க நெருங்க அரிதாரப் பூச்சுடன் மேலும் கசந்தது. யாரையும் நெருங்க விடாமல் தனது வலையதுக்குள்ளேயே கிடந்தான். பெருமையும் பணமும் கூடிக் கொண்டே போனாலும் வாழ்க்கையில் ஏதோ இல்லாதது போல் பிடிப்பின்றி செய்தது. அவனது முன்னேற்றம் கண்டு மீண்டும் நெருங்கி வந்த ரியாவையும் வெறுப்புடன் விலக்கி விட்டான். கையில் வைத்திருந்த சிகரெட் கரைந்து அவன் விரலைச் சுடவும் பழைய நினைவுகளின் சுழலில் நின்றவன் அதைக் கீழே எறிந்துவிட்டு அறைக்குள் வந்து கட்டிலில் விழுந்தான்.

    கடந்து வந்த பின்தான் புரிகிறது

    இன்னும் அழகாய்

    வந்த பாதையை

    கடந்திருக்கலாமோ என்று...

    மீண்டும் நடக்க நினைக்கையில்

    பயணம் முடிவடைந்து விடுகிறது...

    நடக்கும்போதே

    அழகாய் கடந்திடுவோம்

    நமக்கான பாதைகளில்...

    கனவுகள் – 2

    ஆசையும், எதிர்பார்ப்புமே மனிதனின் சகல துன்பத்துக்கும் காரணம்... எதிர்பார்ப்பு இருக்கும் இடத்தில் ஏமாற்றமும் இருக்கிறது... ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத மனம் அதை நினைத்து துயரப்படுகிறது. எதிலும் பற்றில்லாமல் இருக்க முயற்சி செய்வதும் ஒருவித எதிர்பார்ப்பு தானோ...

    குளித்து தலையைத் துவட்டிக் கொண்டிருந்த அஞ்சனாவின் மனம் மேசையின் மீதிருந்த குட்டி புத்தர் சிலையைக் கண்டதும் என்றும் எண்ணுவதையே இன்றும் எண்ணியது. அழகான அந்த சிலையை சிறு முறுவலுடன் நோக்கிவிட்டு கண்ணாடி முன் நின்றாள்.

    கண்ணாடி அவள் உருவம் கண்டு, எந்த மேக்கப்பும் இல்லாமலே நீ பேரழகி... என்று சொல்லாமல் சொல்லியது. துடைத்து வைத்த வெண்கல சிலை போல் பளிச்சென்று நின்றவளின் இயற்கையான அழகு கண்டு கண்ணாடியும் பொறாமை கொண்டது.

    தலையைப் பின்னி கண்ணுக்கு மையிட்டுக் கொண்டவள் இதழ்களில் உதட்டு சாயத்தைப் பட்டும் படாமலும் தேய்த்துக் கொண்டாள். வெறுமையான பார்வையை நெற்றியில் பதித்து எப்போதும் போல அன்றும் ஒரு பெருமூச்சை வெளியிட்டவள் சின்ன ஸ்டிக்கர் பொட்டை எடுத்து அதில் ஒட்டிக் கொள்ள, ம்மா... பின்னிலிருந்து ஒலித்த குரலைக் கேட்டு புன்னகையுடன் திரும்பினாள்.

    நான் மரணத்தை

    முத்தமிட்ட நொடியில் – என்

    செவிப்பறையைத் தீண்டி

    சிலிர்க்க வைத்த சங்கீதமாய்

    சிணுங்கும் உன் அழுகை...

    பேபி கண்ணா... வந்துட்டியா செல்லம்... கை நீட்டிய அன்னையிடம், தாவினான் குழந்தை அதிபன். அவனது நெற்றியில் முத்தமிட்டு நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள், கையில் காய்கறிக் கூடையுடன் அவர்களைப் புன்னகையுடன் நோக்கி நின்ற பாரதியிடம், சமத்தா இருந்துகிட்டானா அக்கா... என்றாள்.

    என் செல்லம் எப்ப எனக்கு தொந்தரவு கொடுத்திருக்கு... நீ வெளிய கிளம்பிட்ட போலருக்கு... என்ற பாரதியின் ஒவ்வொரு வார்த்தைகளும் நீட்டி நெளித்து கரகரவென்ற கட்டிக் குரலில் வந்தது. கம்பீரமான உயரத்துடன் வாட்ட சாட்டமாய் சேலையில் புறப்பட்டு நின்றவரைக் காண ஆணுக்கு சேலை சுற்றியது போலத் தோன்றியது.

    பாரதி ஆணும், பெண்ணுமல்லாத மூன்றாவது பாலினத்தை சேர்ந்த திருநங்கை.

    ஆமாக்கா, ஷூட்டிங்க்கு டைம் ஆச்சு... நான் போயிட்டு வந்திடறேன்... பேபி கண்ணா, பெரியம்மாகிட்ட சமத்தா இருக்கணும், சரியா... அவன் குண்டுக் கன்னத்தில் மீண்டும் முத்தமிட்டு குழந்தையை பாரதியிடம் நீட்டினாள்.

    என்ன அஞ்சு... அதுக்குள்ள கிளம்பிட்ட... கொஞ்சம் நில்லு, காப்பியாச்சும் குடிச்சிட்டுப் போ... என்றவர் வேகமாய் சமையலறைக்குள் நுழைய இனி மறுத்தும் பிரயோசனமில்லை என்பதால் மகனைக் கொஞ்சிக் கொண்டு நின்றிருந்தாள்.

    ஐந்தே நிமிடத்தில் காபி குடித்து முடித்தவள் ஸ்கூட்டி சாவியை எடுத்துக் கொண்டு பாரதியிடம் விடைபெற வழக்கம் போல கண்கள் சுவரிலிருந்த ராஜ்குமாரின் புகைப்படத்தைத் தழுவி மீண்டன. ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு ஸ்டுடியோவுக்கு விரைந்தாள் அஞ்சனா.

    அஞ்சனாவின் அன்னை ஷோபனாவும் துணை நடிகையாய் நிறையப் படங்களில் நடித்தவர். சிறுவயதில் நாடகம், சினிமாவின் மீது வெறித்தனமான ஈடுபாடு கொண்டவர். பள்ளி நாடகத்தில் பங்கு பெற்றாலே கண்டபடி திட்டும் கட்டுப்பாடான தந்தை கனவுத் தொழிற்சாலையில் கால் பதிக்க முயன்றால் காலையே வெட்டிவிடுவார் எனப் பயந்து தனது நடிப்பின் மீதிருந்த ஆசையால் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாய் சென்னைக்கு வந்தவர். வந்தபின்பு அவருக்குக் கிடைத்தது மிகவும் கசப்பான அனுபவங்கள்.

    ஒரு உதவி இயக்குனரின் உதவியால் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவருக்கு இயக்குனரிடம் கூறி கதாநாயகி சான்ஸ் வாங்கித் தருவதாய் அழைத்துச் சென்று மயக்க மாத்திரை கொடுத்து அவர்களின் உடல் இச்சையைத் தீர்த்துக் கொண்டனர். மயக்கம் தெளிந்து எழுந்த பின்பு இழக்க கூடாததை இழந்து விட்டதை உணர்ந்தவர் அதற்குப் பிறகு துணிந்து விட்டார்.

    அவரது முயற்சியால் சில படங்களில் துணை கதாநாயகியாய் வலம் வரத் தொடங்கினார். கனவுத் தொழிற்சாலையின் போதையான புகழுக்கும் மாயைக்கும் அடிமையாகி தான் செய்வது தவறு என்பதைக் கூட உணர மறுத்தார். பணம், கார் என்று கையில் புழங்கத் தொடங்கவும் அழகின் மீதுள்ள கர்வமும் கூடியது. நிறைய ஆண் நண்பர்களுடன் பழகத் தொடங்கியவர் மதுவுக்கும் அடிமையானார். அது மெல்ல மெல்ல அவரை உருக்குலைக்கத் தொடங்கியது.

    ஒருநாள் அவருக்கு அதிர்ச்சியான அந்த உண்மை தெரிய வந்தபோது காலம் கடந்திருந்தது. எத்தனையோ பாதுகாப்புடன் இருந்தும் அவர் கருவுற்றிருந்தார். நான்கு மாதம் ஆகிவிட்டதால் இனி கலைக்க முடியாது... என்று டாக்டர் கைவிரித்துவிட, குழந்தையின் தந்தையிடம் சென்று நின்றார். அவர் அசிங்கமாய் கேவலப்படுத்தி திட்டி அனுப்பவும் வேறு வழியில்லாமல் சற்றுக்காலம் விலகியிருந்து குழந்தையைப் பெற்றுக் கொண்டார்.

    அவள்தான் அஞ்சனா. அதற்குப் பிறகு ஷோபனாவுக்கு நல்ல சான்ஸ் கிடைக்கவில்லை. ஏதேனும் சின்ன சின்ன கதாபாத்திரங்களே கிடைத்தன. அது வயிற்றுப் பசியைப் போக்கியதேயன்றி அவரது கனவுகளின் பசியைத் தீர்த்து வைக்கவில்லை. மீண்டும் பழையது போல நடக்கத் தொடங்கினார். அஞ்சனா வளரத் தொடங்கியிருந்தாள். அவளைப் பார்த்துக் கொள்ள ஒரு பெண்மணியை ஏற்பாடு செய்திருந்த ஷோபனா மகளை அவர் இருக்கும் இடத்துக்கு விடாமல் விலக்கியே வைத்திருந்தார்.

    விவரம் புரியத் தொடங்கிய அஞ்சுவுக்கு தாயின் நடத்தை பிடிக்கவில்லை. எந்நேரமும் வீட்டுக்கு வந்து செல்லும் ஆண்களும், வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் மதுவருந்தி போதையில் இருக்கும் தாயையும் மிகவும் வெறுத்தாள். தனது தந்தை யாரென்று கேட்டு ஒருநாள் மிகவும் அழுது மன்றாடிய பிறகு ஒரு இயக்குனரின் பெயரைச் சொன்ன தாயை வேதனையுடன் நோக்கினாள். அந்த வயதான இயக்குனர் சற்றுநாள் முன்புதான் இறந்திருந்தார். அதோடு சகலமும் வெறுத்துப் போனவள் ஒதுங்கி விட்டாள்.

    அம்மா, எதுக்கும்மா, இப்படிலாம் கஷ்டப்பட்டு சினிமாவில் நடிக்கணும்... நாம எங்காச்சும் வேற ஊருக்குப் போயிடலாம்... சாதாரணமா எதாச்சும் வேலை செய்து பிழைச்சுக்கலாம்... என்ற மகளை வேதனையுடன் பார்த்தார் ஷோபனா. தலைக்கு மேல போன பின்னால யோசிச்சு என்ன பண்ணுறது... என் வாழ்க்கை இப்படியே முடிஞ்சிடட்டும்... இனி இதைத் திருத்தி எழுத முடியாது...

    விரக்தியுடன் ஒலித்த ஷோபனாவின் குரல் அடுத்த நாள் ஒலிக்கவில்லை. அளவுக்கு அதிகமாய் மதுவருந்தி உறக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருந்தார்.

    பிடிக்குமோ இல்லையோ தாயென்ற உறவின் நிழலில் ஓரளவு பாதுகாப்பாய் இருந்தவளுக்கு அதும் இல்லாமல் போக தனித்து நின்றாள் அஞ்சனா. அப்போது பனிரெண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள்.

    சொந்தமும், பந்தமும் இல்லாத அவளுக்குத் தெரிந்தது எல்லாம் சினிமா உலகத்தினர் சிலரை மட்டுமே. ஏதாவது வேலைக்குப் போக நினைத்தவளுக்கு உடனே எதுவும் சரியாய் அமையவில்லை. அந்த நேரத்தில் கதாநாயகிக்கு தோழியாய் நடிக்க ஒரு அழகான இளம் பெண் வேண்டும் என்று அவளது அன்னையின் தோழி ஒருத்தி இவளிடம் நடிக்குமாறு கூற முதலில் தயங்கியவள் பிறகு அவரது பாதுகாப்பிலேயே நடிக்க சம்மதித்தாள்.

    ஹாஸ்டலில் தங்கி சினிமாவில் சின்ன சின்ன காட்சிகளில் தலை காட்டத் தொடங்கியவள் கிடைத்த வருமானத்தில் தொடர்ந்து படிக்க முயன்றாள். அப்படி வாழ்க்கையில் தனக்கென்று யாருமில்லாத அவளுக்கு எல்லாமாய் ஒருத்தன் அறிமுகமானான். அவன் பெயர் தான் ராஜ்குமார்.

    அஞ்சனா செல்வதை இடுப்பில் அதிபனுடன் வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்த பாரதி உள்ளே சென்றார். அவரது பார்வை சுவரில் புகைப்படமாய் தொங்கிக் கொண்டிருந்த ராஜ்குமாரின் மீது விழ ஒரு பெருமூச்சை வெளியேற்றிக் கொண்டே குழந்தையை விளையாட விட்டுவிட்டு அடுக்களையில் வேலையை கவனிக்கத் தொடங்கினார்.

    அயிகிரி நந்தினி நந்தித மேதினி

    விஸ்வ வினோதினி நந்தநுதே

    கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி

    விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே

    பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி

    பூரிகுடும்பினி பூரிக்ருதே

    ஜய ஜய ஹே மஹிஷாசூர மர்தினி

    ரம்ய கபர்த்தினி சைலசூதே...

    ஒலிபெருக்கியில் சன்னமாய் இசைத்துக் கொண்டிருந்த தேவிபாடலை உடன் சேர்ந்து வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே கை கூப்பி நின்றிருந்த அஞ்சனாவின் அழகான முகம் கவலையில் வாடியிருந்தது.

    அழகான நிலவை கிரகணங்கள் சூழ்ந்தது போல் கவலை மேகம் முகத்தின் அழகை மறைக்க முயன்றாலும் அவள் மனதுக்குள் உள்ள நிமிர்வு தேஜசாய் ஒளிவிட்டது. அவளது மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்க, கருணை வழியும் கண்களுடன் சர்வ அலங்காரத்தில் நின்ற அம்பிகையையே பார்த்து நின்றவள் ஒரு தீர்மானத்துடன் நிமிர்ந்தாள்.

    அவளது கண்களில் ஒரு உறுதி வெளிப்பட்டது. அர்ச்சகர் கொடுத்த பிரசாதத்தை நெற்றியில் இட்டுக் கொண்டவளின் முகம் மேகம் விலகிய பூரண நிலவாய் ஜொலித்தது.

    அஞ்சு... பின்னில் கேட்ட குரலில் திரும்பினாள். இடுப்பில் குழந்தையுடன் நின்றிருந்த பாரதியை நோக்கிப் புன்னகைத்தவள் எழுந்து அவரிடம் செல்ல கையிலிருந்த குழந்தை தாவிக் கொண்டு வந்தான். பிரசாதத்தை அவரிடம் கொடுத்து மகனுக்கும் வைத்து விட்டாள்.

    "எவ்ளோ

    Enjoying the preview?
    Page 1 of 1