Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Appavin Dairy
Appavin Dairy
Appavin Dairy
Ebook152 pages1 hour

Appavin Dairy

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

எல்லாக் கதைகளிலும் அன்னையின் அன்பைப் பற்றியே அதிகம் சொல்லி இருப்பார்கள்... தந்தையின் அன்பு அன்னையின் அன்புக்கு சற்றும் சளைத்ததில்லை... ஒரு தந்தைக்கும் மகளுக்கும் நடுவிலுள்ள அன்பையும் பந்தத்தையும் சொல்லும் கதை. அவள் வாழ்வில் சந்தோஷச் சாரலாய் வருகிறான் நாயகன்... இருவர் வாழ்விலும் வரும் பிரச்சனையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே அப்பாவின் டைரி கதை.

Languageதமிழ்
Release dateJul 15, 2020
ISBN6580134405625
Appavin Dairy

Read more from Latha Baiju

Related to Appavin Dairy

Related ebooks

Reviews for Appavin Dairy

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Appavin Dairy - Latha Baiju

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    அப்பாவின் டைரி

    Appavin Dairy

    Author :

    லதா பைஜூ

    Latha Baiju

    For more books

    https://www.pustaka.co.in/home/author/latha-baiju

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    கைகள் நடுங்க கண்கள் பனிக்க

    உன்னை அள்ளி அணைத்தபோது

    என் நெஞ்சை முத்தமிட்ட உன்

    பிஞ்சுபாதம் சொன்னது – எனை

    ஆசிர்வதிக்க வந்த தேவதை நீயென்று…

    சங்கமித்ரா அலைபேசியில் மகன் அகிலனுடன் பேசிவிட்டு கணவனைத் தேடி அறைக்கு வந்தார். அந்தமாத செலவு கணக்கை நோட்டில் எழுதி வைத்துக் கொண்டிருந்த அகத்தியன் கண்ணாடியுடன் நிமிர்ந்தார். அன்பும் அறிவும் போட்டியிடும் தீட்சண்யமான கண்கள். அழுத்தமான முகம். அரசாங்கப் பள்ளியில் ஆசிரியராய் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அகத்தியன் சங்கமித்ரா தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவன் அகிலன், அடுத்து ஆதித்தியன், கடைக்குட்டி ஆதிரை. அகிலன், ஆதித்தியன் இருவருக்குமே மணமாகிவிட்டிருந்தது.

    அகிலனுக்கு ஒரு வயதில் மகனும் இருந்தான். அவன் மனைவி அம்பிகாவும் வேலைக்கு செல்வதால் அவளது அலுவலகத்திற்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து இருந்தனர். இப்போது சொந்தவீடு கட்டும் ஆசையில் வீட்டைத் தொடங்கியிருக்க, பணம் போதாததால் வங்கி லோனுக்காய் முயற்சி செய்து கொண்டிருந்தான்.

    ஆதித்தியன் உடன் வேலை செய்த கவிதாவை விரும்புவதாகக் கூறவும் அவளையே மணமுடித்து வைத்தனர். வீட்டுக்கு ஒரே மகளான அவன் மனைவி அம்மாவை தனியே விட்டுவிட்டு வரமுடியாது என்று கூறிவிட்டதால் அவளது வீட்டிலேயே வீட்டோடு மாப்பிள்ளையாய் ஆதித்தியன் சேர்ந்துகொண்டான்.

    மூன்றாவது பிறந்த அவரது செல்லப்பெண், அல்ல தேவதை… அப்படித்தான் அவர் மகளை சொல்லிக் கொண்டிருப்பார். ஆதிரை பி.காம் முடித்து வங்கித்தேர்வில் பாஸாகி ஒரு வங்கியில் தற்காலிகமாய் வேலைக்கு சென்று கொண்டிருந்தாள்.

    மனைவியை கனிவோடு ஏறிட்ட அகத்தியன், மித்ரா… ரொம்ப நேரமா மகனோட பேசிட்டு இருந்தே… உன் பையன் என்ன சொன்னான்… என்றார்.

    அதென்னது… உன் பையன் என் பையன்னு பிரிச்சுப் பேசிட்டு… நம்ம பையன் என்ன சொன்னான்னு கேளுங்க…

    சரி சரி… என்ன சொன்னான்மா…

    அவன் வீடுகட்ட பாங்கு லோனுக்கு ஏற்பாடு பண்ணிட்டு இருக்கான்ல… பாஸ்புக் இங்கே இருக்குதாம்… தேடி எடுத்துவைக்க சொன்னான்…

    ஓ… அவனோட பாஸ்புக் இங்கேயா இருக்கு…

    ஆமாங்க… அன்னைக்கு ஒருநாள் பாங்குக்கு போயிட்டு நேரா இங்க வந்திருந்தான்… பாஸ்புக் மறந்துட்டுப் போயிட்டான்னு நான்தான் எடுத்து வச்சேன்… ஆனா எங்க வச்சேன்னு மறந்துபோயிருச்சு… கொஞ்சம் தேடிக்குடுங்களேன்…

    ம்ம்… சரி பார்க்கறேன்… நீயும் பாரு… என்றவர் அங்கிருந்த செல்பில் தேடிவிட்டு மேசை வலிப்பில் தேடத் தொடங்க அவர் கண்ணில் அந்த பழுப்புநிற பழைய டைரி விழவும், ஆசையோடு எடுத்தவர் முதல் பக்கத்தில் எழுதியிருந்த வரிகளைப் படித்ததும் சிரித்துக்கொண்டார். இன்னொரு வலிப்பில் தேடிக் கொண்டிருந்த சங்கமித்ரா அதைக் கண்டதும் தலையைக் குலுக்கிக்கொண்டார்.

    போச்சு… உங்க மகளோட புராணத்தை ஓபன் பண்ணிட்டிங்களா… இன்னைக்கு அந்த பாஸ்புக் கிடைச்ச மாதிரிதான்… அலுத்துக்கொண்டே அவர் செல்ல, டைரியுடன் கட்டிலில் அமர்ந்தார் அகத்தியன். அவரது கண்கள் அந்த நாளைய நினைவுக்கு செல்ல கைகள் நெகிழ்ச்சியோடு அந்த எழுத்துகளை வருடிக் கொண்டிருந்தது.

    அகத்தியனுக்கு பெண்குழந்தை என்றால் மிகவும் பிரியம். அகிலன், ஆதித்யன் என இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தாலும் ஒரு பெண் குழந்தையைக் கொஞ்ச அவர் மனம் ஏங்கியது. பெண் குழந்தைதான் வீட்டின் ஐஸ்வர்யம் என்பது அவர் எண்ணம். அகிலன் நான்காம் வகுப்பிலும், ஆதித்யன் இரண்டாம் வகுப்பிலும் படிக்கும்போது அகத்தியனின் மனைவி சங்கமித்ரா மூன்றாவது முறையாய் கர்ப்பவதியானார்.

    இந்தக் குழந்தையாவது பெண் குழந்தையாய் இருக்க வேண்டும் என்று பிடித்த தெய்வங்களுக்கு எல்லாம் நேர்ந்துகொண்டு மனைவியின் பிரசவத்துக்காய் காத்திருந்தார் அகத்தியன். அவரது எண்ணம் போலவே ஒரு புதுவருடத்தின் அன்று இந்த உலகத்தில் தனது வரவை உறுதி செய்தாள் அவரது மகள் ஆதிரை. பெண் குழந்தை பிறந்ததும் தலைகால் புரியாத சந்தோஷத்துடன் மருத்துவமனையில் எல்லாருக்கும் எனக்கு தேவதை பிறந்திருக்கா… என்று கூறி இனிப்பு கொடுத்து மகிழ்ந்தவரை அங்கிருந்தவர்கள் ஆச்சர்யமாய் பார்த்தனர்.

    பெண் குழந்தை பிறந்தா செலவுன்னு நினைச்சு பொறந்ததுமே கொல்ல நினைக்குற ஆளுங்களும் இருக்காங்க… அவங்களுக்கு மத்தியில நீங்க இப்படி சந்தோசப்படறீங்களே… என்று அதிசயமாய் கேட்ட டாக்டரிடம், பெண்தான் ஒரு வீட்டின் சந்தோஷம், பலம் எல்லாம்… பெண் குழந்தையோட அருமை தெரியாம சிலர் இப்படி பண்ணுறாங்க… எனக்கு அதிர்ஷ்ட தேவதை பிறந்திருக்கா… குழந்தையின் பிஞ்சுக்காலில் முத்தமிட்டு சந்தோஷமாய் சொன்னவரை திகைப்புடன் பார்த்தனர்.

    அகிலன், ஆதித்தியனுக்கும் ரோஜாப்பூபோல இருந்த தங்கச்சி பாப்பாவை மிகவும் பிடித்திருந்தது. கணவனின் சந்தோஷம் கண்டு சங்கமித்ராவின் மனமும் ஒரு பெண்ணாய் உவகை கொண்டிருந்தது. அவள் வளரவளர அவரது நேசமும் வளர்ந்தது. எப்போதும் மகளை மடியில் வைத்து கொஞ்சிக்கொண்டு இரவில் மனைவி அசந்து உறங்கிக் கொண்டிருக்கதான் உறங்காமல் மகளது தொட்டிலை ஆட்டிக்கொண்டு அவளைத் தன் உயிராய் பார்த்துக்கொண்டார் அகத்தியன். ஆண் பிள்ளைகளின் மீது பிரியம் இருந்தாலும் பெண்மகளை தேவதையாய் தாங்கினார். அழகு மகளுக்கு ஆதிரை என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

    கை வளர்ந்ததோ, கால் வளர்ந்ததோ என்று பார்த்துப் பார்த்து பூரித்துப் போனார். மஞ்சத்தில் அவள் உறங்கியதைவிட தந்தையின் நெஞ்சத்தில் உறங்கியதே அதிகம். கணவனுக்கு மகள் மீதுள்ள பிரியம் கண்டு சங்கமித்ராவுக்கே திகைப்பாய் இருந்தது.

    மகளுக்கு காய்ச்சல், ஜலதோஷம் வந்தால் அகத்தியனின் முகம் வாடிப்போகும்… இரவில்கூட உறங்காமல் அவளை கவனித்துக் கொள்வார். முதலில் எல்லாக் குழந்தைகளும் அம்மா என்று அழைக்குமானால் ஆதிரையோ அப்பா என்றுதான் சொன்னாள். அவர் அதில் இன்னும் பூரித்துப் போனார்.

    நாட்கள் அழகாய் செல்ல குழந்தைகளும் பெரிதாகத் தொடங்கினர். அகிலனும், ஆதித்தியனும் சற்று பெரியவர்கள் ஆனதால் அவர்களும் தங்கையைக் கொண்டாடினர். அந்த வீட்டு இளவரசியாய் ஆதிரை வலம் வந்தாள். சங்கமித்ரா எதற்காவது மகளைக் கடிந்து கொண்டால் தந்தையின் நேசக்கரமே அவளுக்கு பாதுகாப்பாய் மாறும். மகள் விருப்பமறிந்து செயல்படும் தந்தை… தந்தைக்கு பிடித்ததை மட்டும் செய்யும் மகள்.

    ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ஆதிரை கவிதைப் போட்டியில் பரிசு பெற்று அந்தக் கவிதையை வீட்டில் வந்து படித்துக்காட்ட அவரது கண்கள் கலங்கியது. சங்கமித்ராவின் மனமும் மகளுக்கு தந்தை மேல் உள்ள நேசம் கண்டு விம்மியது.

    தத்திதத்தி நடந்தபோது

    தங்க கொலுசணிவித்தாய்…

    தவறி நான் விழுந்தாலோ

    தாங்கித்தான் பிடித்திட்டாய்…

    உன் விழிவழியே உலகை கண்டேன்…

    நீயோ எனை சுற்றியே உன் உலகை

    அமைத்துக் கொண்டாய் அப்பா…

    என்றும் உன் இதய மாளிகையில்

    இளவரசியாய் நான்…

    கண்கலங்க அமர்ந்திருந்த தந்தையின் கன்னத்தில் தன் சின்ன இதழால் முத்தமிட்டவள், அப்பா. உன்னைப் பத்தி இன்னும் நெறயா எழுதணும்னு நினைச்சேன்… சின்னதாதான் எழுதணும்னு ஸ்கூல்ல சொல்லிட்டாங்க… வருத்தத்தோடு கூறிய மகளின் வார்த்தையில் நெகிழ்ந்தவர் அவள் நெற்றியில் முத்தமிட்டார்.

    அதைப் பார்த்துக்கொண்டே அங்கு வந்த சங்கமித்ரா, ஏண்டி ஆதி… எப்பப் பார்த்தாலும் உனக்கு உன் அப்பாதான் உசத்தியா… எப்பவாவது என்னைப் பத்தி நாலு வார்த்தை எழுதணும்னு தோணுதா… உனக்கு இந்த அம்மாவைப் பிடிக்கறதே இல்லை… வருத்தத்தோடு முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்தவரின் அருகில் சென்று அணைத்துக் கொண்டாள்.

    அய்யோ மண்டு அம்மா… அப்பாவைப் பத்தி கவிதை எழுத சொன்னா அம்மாவைப் பத்தி யாராவது எழுதுவாங்களா… என்று கேட்க முழித்தார்.

    "இருந்தாலும் உனக்கு எல்லாத்துலயும் உன் அப்பாதாண்டி உசத்தி… நான்

    Enjoying the preview?
    Page 1 of 1