Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nandhanin Anuragam..!
Nandhanin Anuragam..!
Nandhanin Anuragam..!
Ebook167 pages1 hour

Nandhanin Anuragam..!

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

புத்தம் புதிய அழகான காதல் கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

தோழிக்காகவும் நன்றிக்கடனாகவும் நினைத்து அவள் செய்த செயல் விபரிதமானது தான்! ஆனால்....

அவளுக்குள்ளும் காதல் முகிழ்த்து விட்டதே! அவளின் காதல் கைகூடுமா?

காதலி மகிழ்ச்சியாக இருக்க பொய் சொல்லி காதலியைப் பிரிந்த காதலன் அவளை எதிர்பாராமல் சந்தித்து விட... அங்கே நடந்ததுதான் என்ன?

நந்தனின் அநுராகம்

இசைக்குமே இனிமையாக...!

Languageதமிழ்
Release dateMay 2, 2022
ISBN6580135408382
Nandhanin Anuragam..!

Read more from J. Chellam Zarina

Related to Nandhanin Anuragam..!

Related ebooks

Reviews for Nandhanin Anuragam..!

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nandhanin Anuragam..! - J. Chellam Zarina

    https://www.pustaka.co.in

    நந்தனின் அநுராகம்..!

    Nandhanin Anuragam..!

    Author:

    ஜே. செல்லம் ஜெரினா

    J. Chellam Zarina

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chellam-zarina

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ராகம் - 1

    ராகம் - 2

    ராகம் - 3

    ராகம் - 4

    ராகம் - 5

    ராகம் - 6

    ராகம் - 7

    ராகம் - 8

    ராகம் - 9

    ராகம் - 10

    ராகம் - 11

    ராகம் - 12

    ராகம் - 13

    ராகம் - 14

    ராகம் - 15

    ராகம் - 16

    ராகம் - 17

    ராகம் - 18

    ராகம் - 19

    ராகம் - 20

    ராகம் - 21

    ராகம் - 22

    ராகம் - 23

    ராகம் - 1

    அடைக்கலம் மருத்துவமனை காலைநேர அவசரகதியில் சுழன்று கொண்டிருந்தது. இரவு ட்யூட்டி முடித்த அனு ரிலீவர் ஸிஸ்டர் சுகந்தாவின் வருகைக்காக காத்திருந்தாள்.

    ஸாரி! ஸாரி! அனு! ராத்திரியெல்லாம் குழந்தை தூங்கவே விடலை. காய்ச்சலில் அனத்திட்டேயிருந்தான். விடியுற நேரம் கண்ணசந்துட்டேன். ஸாரிமா

    பேசியபடியே வேகமாக வந்தாள் சுகந்தா ஸிஸ்டர்.

    ஹேய் சுகா! ரிலாக்ஸ். ஒன்னும் ப்ரச்னையில்லை. இப்போ குழந்தை எப்படியிருக்கான் பரவாயில்லையா

    தேவலை அனு மருந்து கொடுத்தேன். மாமியார் பார்த்துக்கிடுவாங்க. நீ என்பதாலேதான் மூச்சே வருது. வேறயாருமாயிருந்தால் அவ்ளோதான்.

    அதற்குள் கண் கலங்கி விட்டது சுகந்தாவுக்கு.

    ஓக்கே! ஓக்கே பை!

    என்றபடியே விடைபெற்றவள் வழக்கம் போலவே லிப்ட்டைத் தவிர்த்துவிட்டு படிகளின் வழியே இறங்கினாள்.

    இரண்டாம் தளத்தின் திருப்பத்தில் அந்த ஈனஸ்வரமான குரல் கேட்டது.

    ஸிஸ்டர்! நர்ஸ் நர்ஸ்

    ஒருநிமிடம் நிதானித்து இடதுபக்க அறையிலிருந்து யாரோ அழைப்பதை கணித்தவள் வேகமாய் எட்டு வைத்து திரும்பி அந்த அறைக் கதவைத் தள்ளித் திறந்தாள்.

    என்னம்மா வேணும்?

    யாராவது நர்ஸை கூப்பிடும்மா. எனக்கு பாத்ரூம் போகனும்

    "ஒரு நிமிஷம் என்றவன் குனிந்து பெட்போனை எடுத்து போர்வையை விலக்க முயன்றாள்.

    அவரோ

    நீ நர்ஸ் ஆயா யாரையாவது கூப்பிடுமா போதும் என்று பதறினார்.

    நானும் நர்ஸ் தான்மா என்றபடியே வேண்டுவதை செய்து முடித்தாள். காலில் கட்டுப் போட்டிருந்தது.

    சிவந்த நிறம் நெற்றியில் அரக்கு நிற குங்குமம் விசாலமான நயனங்கள் மூக்கிலிருந்த பேசரியும் காதிலிருந்த தோடும் நாங்கள் வைரங்களாக்கும் என்று டாலடித்தன. கழுத்திலும் பட்டையாக சங்கிலி கைகளில் வளையல்கள்...

    கேஸ்ஷீட்டைப் படித்தாள். எலும்பு முறிவு.

    லேசான க்ராக் தான்மா மனசை ரிலாக்ஸா வச்சுகிட்டு நாங்க தர்ர மெடிசன்ஸை கரெக்டா எடுத்துகிட்டு சின்னசின்ன உடற்பயிற்சி செய்தாலே போதும். ஆறே மாதத்துலே நீங்க ரன்னிங் ரேசுல கலந்துகிடலாம்.

    சரிங்ம்மா. நான் கிளம்புறேன். ஏதேனும் அவசரம்னா அந்த சிவப்பு பட்டனை அழுத்துங்க. உடனே உதவிக்கு வந்திடுவாங்க என்று திரும்பியவள்

    அம்மா ஒரு விஷயம் சொல்றேன் தப்பா நினைக்காதீங்க. விலையுயர்ந்த நகைகளா போட்டிருக்கீங்க அதையெல்லாம் உங்க அட்டென்டர் கிட்ட கொடுத்திடுங்க அடைக்கலம் ஹாஸ்பிடல் அருமையான ஹாஸ்பிடல்தான் ஆனா நிறைய பேர் வந்துபோற இடம். நாமே ஏன் துன்பத்தை வரவழைச்சுக்கனும். சரிம்மா நான் சாயந்திரம் ட்யூட்டிக்கு வருவேன். வரும்போது பார்க்கிறேன்.

    கதவைத் திறக்கப்போக வெளியிலிருந்தும் யாரோ தள்ளிக்கொண்டுவர வந்தவன் மேலே மோதிக்கொண்டு தடுமாறினாள்.

    ஹலோ! யார் நீங்க? உங்களுக்கு இங்கே என்ன வேலை?

    படபடவென பொறிந்தவனை அதிர்ந்து போய் பார்த்தாள் அனு.

    அந்த ஆறடிக்கும் மேலாக வளர்ந்திருந்த இளைஞனின் சிவந்த முகம் கோபத்தில் இன்னும் சிவப்பேறியிருந்தது. தீர்க்கமான நாசியும் விழிகளும் கூட சிவந்து கிடந்தன இதழ்களின் வளைவில் அழுத்தமும் எள்ளலுமிருந்தது. அவன் பார்வை தீக்ஷண்யமாக அவளை தழுவியதில் உடம்பே சிலிர்த்தது.

    ஏய் சொடக்கிட்டு அழைத்தவன்

    ஏய்! யார் நீன்னு கேட்டேன். ஊமையா நீ? உலகத்திலேயே முதல்முறையா இப்போதான் ஒரு ஆம்பளையை பார்க்கிறியா? இப்படி வெட்கங்கெட்டதனமா வெறிச்சு பார்க்கிறே! வாயைத் திறந்து பேசப் போறியா இல்லையா?

    முரட்டுத்தனமாய் அவளின் தோளை அழுத்திப்பிடித்து திருப்பியதில் வலியிலும் கோபத்திலும் முகம் சுருக்கி ஏதோ பேச வாயைத் திறந்த சமயம் கட்டிலிலிருந்த பெண்மணி

    நந்து! இதென்ன முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம் இப்படித்தான் நடப்பதா? மட்டுமரியாதையின்றி அநாகரிகமா பேசுறே

    அத்தை! உங்களுக்கு ஒன்னும் தெரியாது. இது நம்ம ஊர் இல்லை. இது சென்னை. அதோடு நம்பி நம்பி நாம் கெட்டதெல்லாம் போதாதா?

    அனு சீற்றத்தோடு பேசத்துவங்கிய நொடியில் கதவைத்திறந்து கொண்டு ஒரு வைத்தியர் குழாமே நுழைந்தது. ஸிஸ்டர் சுகந்தாவுடன் டாக்டர் ஜோசப் டாக்டர் மரியம் ஜோசப் ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் துர்காப்ரசாத் இரண்டு ஜுனியர்கள் என்று...

    'சட்' டென்று தன் கோபத்தை விழுங்கிக் கொண்டு

    குட்மார்னிங் டாக்டர் என்றாள் புன்னகையோடு.

    ஹாய்! குட்மார்னிங் அனு! நானே சொல்லனும்னு இருந்தேன். நீயே இங்கே நிற்கிறே. இவங்க...

    கேஸ் ஷீட்டை படிச்சுட்டேன் டாக்டர்

    "ஸ்மார்ட் கேர்ள்.! சாயந்திரம் நீ இவங்களோடு நான் சொல்ற டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு ரிப்போர்ட் தரனும். அவங்களுக்கு கணுக்கால் எலும்பிலும் பிரச்னையிருக்கு ஸோ... அவர் சொல்ல சொல்ல கவனமாக தன் மொபைலில் குறித்துக் கொண்டதோடு சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொண்டாள்.

    'அடக்கடவுளே! இவள் நர்ஸா?' தன்னையே நொந்து கொண்டான். ஒரு பக்கமாய் ஒதுங்கி நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

    மருந்துக்கும் மேக்கப்பில்லாத முகம். தூக்கிக் கட்டிய கூந்தலினின்றும் ஓரிரு கேச இழைகள் முகத்தில் ஓடிப்பிடித்து விளையாடின... வில்லாய் வளைந்த புருவங்களுக்கு கீழே ஈரமினுமினுப்புடன் லேசான களைப்புடன் விழிகள் மிதந்தன. கவிழ்த்து ஒட்டவைத்த ஆரஞ்சு சுளைபோன்ற அதரங்களுக்கு மேலே எள்ளுப்பூவின் கூர்மையுடனாக இறங்கும் நாசி அதில் ஒளிரும் சின்ன சிவப்பு ஒற்றைக்கல் மூக்குத்தி வெண்ணையாய் வழிந்த பூரிப்பான கன்னக் கதுப்புகள். மோவாயருகில் உதட்டுக்கு மிக அருகில் கறுப்பு முத்து போல சிறுமச்சம் அந்த வதனத்துக்கே எழிலை கூட்டித் தருவது போலிருந்தது.

    சாம்பல் வண்ணப் பின்னணியில் மஜண்டா நிறப்பூக்கள் அள்ளித் தெளித்திருந்த சாதாரண காட்டன் ஸாரி. ஆனால் நேர்த்தியாக கட்டியிருந்ததில் தனியான ஒயில் தெரிந்தது. இடது கையில் வாட்ச் வலது கை வெறுமையாயிருக்க தங்கநூலாய் மின்னும் செயினும் காதுகளில் சின்னஞ்சிறு பொட்டுக்களாய் மினுக்கும் தங்க முத்து

    இயல்பான உணர்வுத் தாக்கத்தில் அவனை நிமிர்ந்து பார்த்தாள் அனு. சரேலென்று ஒருவிதக் குற்றவுணர்வோடு பார்வையைத் தழைத்துக் கொண்டான். சங்கடத்துடன் நெளிந்தான்

    சலங்கை பொதிந்த பூஜையறைக் கதவைத் திறக்கையில் உண்டாகும் சுநாதம் மனசுள் ஒலிக்க இந்தப்பெண் சுவாதீனமாக அவனுடைய உள்ளத்தில் நுழைந்து சம்மணமிட்டு உட்காருவது போல தோன்ற. புத்தம்புதிய உணர்வலைகளில் நந்து திக்கு முக்காடிப் போனான்.

    ராகம் - 2

    பலவிதமான உணர்வுக்கலவைகளினால் சங்கடத்தை வெளிப்படுத்தியது டாக்டர் மரியம் ஜோசப்பின் முகம். எதிரிலிருந்த அனுவின் முகமோ இறுகிக் கிடந்தது.

    டாக்டர்! எனக்கு இவளைப் பார்க்கவோ பேசவோ சுத்தமாப்பிடிக்கலை. எனக்கு வர கோபத்துக்கு...

    அனு... ப்ளிஸ்டீ! நான் செய்தது பேசுனது எல்லாமே தப்புதான். நீயே என்னைப் புரிஞ்சுகிடலைன்னா நான் என்னடி செய்வேன். ஸாரி!... ஸாரி... என் வாழ்க்கையே உன் கையிலதான்டி இருக்கு. ப்ளீஸ்டீ

    நீ யாரோ! நான் யாரோ! உன் வாழ்க்கையைப் பத்திய கவலையும் இல்லை. உன்னைப் பார்க்கக்கூட எனக்கு அருவருப்பா இருக்கு. தயவு செஞ்சு கிளம்பு.

    அந்தப் பெண் ஸ்வேதா இருவரையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு வெளியேறினாள். அதற்கு முன்பு அனுவை குருரமாகப் பார்த்தாள்.

    டேபிளில் தலை கவிழ்ந்து அழ ஆரம்பித்த அனுவின் தலையை வருடினார் டாக்டர் மரியம் ஜோசப்.

    நாங்கள் எங்களிடம் இருப்பவர்களை அப்படி அனுப்புவதில்லை மிஸ்டர் நந்து. பெண்துணையில்லாத வீடுன்னு சொல்றீங்க. ஆனாலும் குறிப்பாக அனுவை அனுப்பித் தரும்படி கேட்கக் காரணம்.

    எனக்கு யாரானாலுமே சரிதான் டாக்டர். என் அத்தைக்குத்தான் அனு மேடத்தைப் பிடித்துப் போய்விட்டது. அத்தை கொஞ்சம் கேர்லெஸ்மனுஷி. மருந்து கட்டாயமா சாப்பிட வைக்கனும். நான் பார்த்த வரையும் அனு அத்தையை ஸ்மூத்தா அழகா ஹேண்டில் பண்றாங்க. ப்ளிஸ் டாக்டர். அங்க எங்க வீட்டுலே எந்தக் குறையுமே வராம பார்த்துக்கிடுறேன். சம்பளமும் ரெண்டு மடங்கா தந்திடுறேன்

    ஆனா..

    யாரோ கதவைத் தட்டினார்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1