Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pallava Sundari
Pallava Sundari
Pallava Sundari
Ebook139 pages47 minutes

Pallava Sundari

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வணக்கம்.

வேளிர்குலச் செல்வி, மித்ரஹாசினி, சேரமான் வஞ்சிக்கு பின்னான "பல்லவ சுந்தரி" என்னுடைய நான்காவது வரலாற்றுப் புனைவு நாவல் ஆகும். இதுவும் உங்களுக்குப் பிடிக்கும்... ஏகோபித்த ஆதரவைபெறும் என்ற நம்பிக்கையோடு உங்கள்முன் சமர்ப்பிக்கின்றேன்.

புஸ்தகா நிறுவனத்துக்கும் என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து என் எழுத்தை அழகுற அச்சிலும் இ-புக் வடிவிலும் கொண்டு வந்து ஆதரவு தரும் நேர்த்திக்கும் அர்ப்பணிப்புக்கும் எத்துணை நன்றி சொன்னாலும் தகும்.

இம்முறை ராஷ்டிரக்கூடம் பல்லவ அரசுகளுக்கிடையே உண்டான சிறு பொறியை ஊதி பெரிதாக்கியிருக்கிறேன். வாசித்து விட்டு சொல்லுங்கள்.

அன்புடன்

ஜே. செல்லம் ஜெரினா

Languageதமிழ்
Release dateAug 28, 2023
ISBN6580135410023
Pallava Sundari

Read more from J. Chellam Zarina

Related to Pallava Sundari

Related ebooks

Related categories

Reviews for Pallava Sundari

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pallava Sundari - J. Chellam Zarina

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பல்லவ சுந்தரி

    Pallava Sundari

    Author:

    ஜே. செல்லம் ஜெரினா

    J. Chellam Zarina

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chellam-zarina

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. அனர்த்தங்களின் அஸ்திவாரம்!

    2. சித்திரமும் சித்திரப்பாவையும்

    3. சொற்சிற்பமும் கற்சிற்பமும்

    4. விதியின் எழுத்து

    5. பல்லவ மல்லன்

    6. நிகழ்ந்த விபரீதம்

    7. சீலையில் ஒரு ஓவியம்

    8. காமினியின் காதலன்!

    9. ரங்கபதாகை தேவி

    10. வனபோஜனம்

    11. வனதுர்க்கைக் கோயில் விபரீதம்

    12. கீர்த்திவர்மனின் சாகசம்

    13. குறுவாளும் ஓவியப்பாவையும்

    14. வேண்பை யுத்தம்

    15. கல்யாண வைபோகம்

    முன்னுரை

    வணக்கம்.

    வேளிர்குலச் செல்வி மித்ரஹாசினி சேரமான் வஞ்சிக்கு பின்னான பல்லவ சுந்தரி என்னுடைய நான்காவது வரலாற்றுப் புனைவு நாவல் ஆகும்.

    இதுவும் உங்களுக்குப் பிடிக்கும். ஏகோபித்த ஆதரவைபெறும் என்ற நம்பிக்கையோடு உங்கள்முன் சமர்ப்பிக்கின்றேன்.

    புஸ்தகா நிறுவனத்துக்கும் என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து என் எழுத்தை அழகுற அச்சிலும் இ-புக் வடிவிலும் கொண்டு வந்து ஆதரவு தரும் நேர்த்திக்கும், அர்ப்பணிப்புக்கும் எத்துனை நன்றி சொன்னாலும் தகும்.

    இம்முறை ராஷ்டிரக்கூடம் பல்லவ அரசுகளுக்கிடையே உண்டான சிறு பொறியை ஊதி பெரிதாக்கியிருக்கிறேன். வாசித்து விட்டு சொல்லுங்கள்.

    அன்புடன்

    ஜே. செல்லம் ஜெரினா

    1. அனர்த்தங்களின் அஸ்திவாரம்!

    அந்தக்கொடி, வீட்டினுள்ளிருந்த பஞ்சணையில் படுத்திருந்த இளவரசன் கீர்த்திவர்மனின் மனம் அனலிடை மெழுகாய் கொதித்துக்கிடந்தது.

    கொடி வீட்டைச் சுற்றியிருந்த பூங்கொடிகளில் பூத்திருந்த பூக்களோ அருகிலிருந்த செயற்கை வாவியோ தலைதடவி சென்ற தென்றல் காற்றோ எதுவுமே அவன் மனதை குளிரச் செய்யவில்லை. நெஞ்சு உலைக்களனாகக் கொதித்தது.

    அருகிலிருந்த பாவையின் வெற்றிடையை அவன் கரம் பிடித்து அழுத்தியதில் வலி பொறுக்காது அலறினாள். அவனுடைய சினத்தையும் காட்டாற்று வெள்ளம் போன்ற வேகத்தையும் தாங்க மாட்டாது கதறினாள். சக்கையாகிப் போனாள் அவள்.

    கீர்த்திவர்மனின் திரைமறைவு லீலைகள் அனைத்துக்குமே அந்தக்கொடி வீடுதான் மௌனசாட்சி.

    ச்சீ! மூடு வாயை என் கண் முன்னே நிற்காதே ஓடு இங்கிருந்து.

    என்ற கர்ஜனையில் விட்டால் போதுமென களைந்து மூலைக்கொன்றாய் வீசப்பட்டுக் கிடந்ததை அள்ளிக்கொண்டு தாறுமாறாய் சுற்றிக்கொண்டு இருளில் மறைந்தாள்.

    ச்சே! எத்துணை ஆணவம் அந்த தந்தி துர்க்கனுக்கு

    கையை வேகமாக மஞ்சத்தில் குற்றினான். சிறு மரபீடத்தின் மேலிருந்த யவனத் தேறலை அப்படியே வாயில் கவிழ்த்துக் கொண்டான்.

    ஓரிரு வாரங்களுக்கு முன்பாக நடந்தவை உள்ளத்துள் வலம் வந்தன.

    அன்று...

    மதிய நேரம்!

    இளவரசரை உடனடியாகக் காணவேண்டுமென சக்ரவர்த்தி கூறுவதாக காவலன் உரைத்ததுமே வேகமாக புறப்பட்டான். சக்ரவர்த்தி சயனமண்டபத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாகக் கூறவும் ‘என்னவாயிருக்கும்’ என்ற சம்சயத்தோடே அனுமதி பெற்று மண்டபத்தினுள் நுழைந்தான். பெரும் அலங்காரமான சப்ரமஞ்சத்தில் ஒரு மத்தகஜம் போலே படுத்திருந்தார் சாளுக்கிய நாட்டின் சக்ரவர்த்தி இரண்டாம் விக்ரமாதித்யர். பாதத்தினருகே திரைலோக்யாமாதேவி அமர்ந்துபாதங்களை பிடித்தபடி சேவை செய்ய அவருக்கு வாகாக அருகிலமர்ந்து உதிர்த்த மாதுளை முத்துக்களை சிறு பொற்கரண்டியினால் அள்ளி தன் மன்னவனின் வாயிலிட்டுக் கொண்டிருந்தார் லோகமாதேவி.

    தோள்வரை சரிந்து கிடந்தது சக்ரவர்த்தியாரின் குழல்கள். பட்டு உத்தரியம் அலட்சியமாய் மார்பில் நழுவிக்கிடந்தது. உத்தரியம் மறைக்காத நெஞ்சிலும் தோளிலும் ஏராளமான வீரத்தழும்புகள் அவரின் வீரத்தை பறைசாற்றிக் கொண்டிருந்தன.

    கீர்த்திவர்மா! வா...வா...

    அன்னையர் இருவருமே பூரிப்போடு அழைத்தனர்.

    வா மகனே! இருக்கையில் உட்கார். முக்ய விஷயம் ஒன்று பேசவே அழைப்பு விடுத்தோம்.

    கூறுங்கள் தந்தையே!

    தேவி! அந்த திரைச்சீலைகளை கொண்டுவா!

    அன்னை நீட்டிய சீலைகளை பெற்றுக் கொண்டவன். வினாவுடன் மூவரையும் பார்க்க,

    லோகமாதேவி, அவற்றை விரித்து பார் கண்ணா! எல்லாமே உனக்காக பார்த்திருக்கிற பெண்களின் ஓவியங்கள். அவர்களின் பேரும் விவரமும்கூட உள்ளது. உனக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்து சொன்னால் மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களிடம் பேசலாம்.

    ஆமாம் கீர்த்திவர்மா! உனக்கு திருமண அகவை வந்தாயிற்று. சுபஸ்ய சீக்கிரம் என்று உன் அன்னையர் விரும்புகின்றனர் தேர்வு செய்.

    அதை அப்படியே அருகில் வைத்தவன்,

    தந்தையே! நான் ஒரு பெண்ணரசியிடம் மனதை பறி கொடுத்துவிட்டேன். அவளையே மணமுடிக்கவும் விரும்புகிறேன்.

    விக்ரமாதித்யர் மேலே சொல் என்பது போல பார்க்க தேவியர் இருவரும் வியப்புடனும், தவிப்புடனும் பார்த்தனர். அரண்மனை திருமணங்களில் காதலைவிட அரசியல் லாபம் அல்லவோ முக்யம்?

    தந்தையே! நான் அவளை தாயாரின் பூஜாக்கிருஹத்தில் தான் வைத்துப் பார்த்தேன். ஒரேமுறைதான் கண்டிருக்கிறேன். முதன்முறை பார்த்ததுமேயே மனதை கொள்ளை கொண்டுவிட்டாள். அவள் வேறு யாருமல்ல. நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும் ராஷ்ட்ரகூட இளவரசி ரேவா தேவிதான்...

    அவளா? அந்தப்பெண் மமதை பிடித்தவளாயிற்றே!

    ஆமாம் கீர்த்திவர்மா பூஜை முடிந்த மறுநாளே விடியலிலேயே புறப்பட்டு விட்டாள். நானும், அக்கையும் இரு நாட்கள் தங்கி பிறகு செல்லலாம் என எவ்வளவோ எடுத்துகூறியும் பிடிவாதமாய் புறப்பட்டுவிட்டாள். பிடிவாதக்காரி. மகாராணியாரின் வார்த்தைகளை சற்றும் மதிக்காதவள். ஏனைய இளவரசிகள் ஓரிரு நாட்கள் தங்கி பரிசில்களைப் பெற்றுக்கொண்டு போனார்கள். இவள் மட்டும் சொற்பேச்சு கேளாமல் புறப்பட்டு விட்டாள்

    ரேவா தேவி! தந்திதுர்க்கனின் மகள். கல்வி கேள்விகளில் சிறந்தவள். அரசியல் அறிவும் உடையவள். சிறந்த மதியூகி. எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்திருந்தாலும் ஒன்றுமே அறியாதவள் போலவே அழுத்தமான அமைதியோடிருப்பாள். அவள் உன்னுடைய பட்டமகிஷியானால் அது பெரிய பாக்யமே! ஆனால், உன் தாயார் சொல்வது போல பிடிவாதம் நிறைந்த முரட்டு குதிரை!

    புன்னகை ததும்ப...

    தந்தையே! முரட்டு குதிரையை அடக்கி ஆள்வதில்தானே சுவாரஸ்யமே அடங்கியுள்ளது. பெண்ணுக்கு எதற்கு அரசியலும், மற்றவையும் அந்தப்புர பதுமையாக இருந்தால் மட்டும் போதும்.

    திரைலோக்ய மாதேவி சீறினார்.

    இதென்ன பண்பாடற்ற பேச்சு! உன்னை பெற்றவளும், வளர்த்தவளுமே பெண்கள்தாம் என்பதை மறந்து போனாயா? இல்லை எங்கள் வளர்ப்பின் முறைதான் தவறா? உன்னிடம் இப்படிப்பட்ட சொற்களை எதிர்பார்க்கவில்லை. பெண்களை மதியாதவனிடம் தலைமை வருமானால் அதோகதிதான் அந்த தேசம்.

    இப்படியோர் சீறலைத் தன் இளைய பத்தினியிடம் எதிர்பாராத பேரரசரும் பட்டமகிஷியுமே அதிர்ந்தனர் எனில் அதைவிட அதிகமாக விதிர்விதிர்த்துப் போய்விட்டான் இளவரசன்.

    ஆம்...

    உள்ளத்தினடியிலிருந்த கசடு அவனையுமறியாது வெளியாகிவிட்டது. உடனே சுதாரித்து கொண்டவனாய் தாயிடம் நெருங்கி சமாதானப்படுத்தும் விதமாய் கெஞ்சி கொஞ்சி பேசலுற்றான்.

    தாயுள்ளமல்லவா? அவனுடைய நடிப்பு புரியாது உண்மையைப் பொய்யென்றும், பொய்யை உண்மையென்றும் நம்பியது.

    "தாயே! நான் உங்களின்,

    Enjoying the preview?
    Page 1 of 1