Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Raja Nayagi Part 2
Raja Nayagi Part 2
Raja Nayagi Part 2
Ebook376 pages2 hours

Raja Nayagi Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எம்.ஏ. (எகனாமிக்ஸ்), எம்.ஏ. (பாலிடிக்ஸ்), எம்.ஏ. (ஹிஸ்டரி), பி.எல். பட்டங்கள் பெற்று வேலைவாய்ப்புத்துறையில் இணை இயக்குனராய் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இலக்கியத்தின் மீது அதீத ஆர்வம் கல்லூரி நாட்கள் முதல் உண்டு. அலுவல் பணி காரணமாய் எழுத முடியாமல் போனாலும், மனைவி லட்சுமி ராஜரத்னத்தை எழுத ஊக்கப்படுத்தினார்.

மகள் ‘ராஜஸ்யாமளா’ பெயரில் 1970களில் இவர் எழுதிய சிறுகதைகள் இருமுறை கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசினை வென்றுள்ளன. இரண்டு சரித்திர நாவல்கள் எழுதியுள்ளார்.

பணி ஓய்வு பெற்ற பின், சொந்த பெயரில் நிறைய ஆன்மீக கட்டுரைகள் எழுதினார்.

மனைவி மற்றும் மகள் எழுத்துப் பணிக்கு பக்க பலமாய் இருந்தார். 2011ல் இறைவனடி சேர்ந்தார்.

Languageதமிழ்
Release dateNov 23, 2019
ISBN6580129004759
Raja Nayagi Part 2

Read more from G.S. Rajarathnam

Related to Raja Nayagi Part 2

Related ebooks

Related categories

Reviews for Raja Nayagi Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Raja Nayagi Part 2 - G.S. Rajarathnam

    http://www.pustaka.co.in

    ராஜ நாயகி

    இரண்டாம் பாகம்

    Raja Nayagi

    Part-2

    Author:

    ஜி.எஸ். ராஜரத்னம்

    G.S. Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/gs-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    1

    ஆவணி மாதத்துப் பௌர்ணமி நிலவு, தன்னுடைய பொற்கரங்களால் இந்த உலகைத் தழுவத் துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்தால், பகலில் பிறர் பார்த்து விடுவார்களே என்று பயந்த காதலி, இரவு வந்தவுடன், துடிக்கும் இதயத் தாபத்துடன், துள்ளும் உவகை பொங்கக் காதலனை அணைக்க வருவதுபோல் இருந்தது. அதேபோல் தான் காஞ்சி சுந்தரி, தன்னுடைய காதலன் சந்திரனின் அழகை அள்ளிப் பருகிக்கொண்டிருந்தாள். வெண்ணிறமான பொன் மாளிகையின் மாட மாளிகைகள் எல்லாம் பொன்வண்ணம் தரித்து அழகின் சிகர உச்சியிலே உலாவிக் கொண்டிருந்தது.

    அந்த மாளிகையின் அணி மாடங்களும், மணி மண்டபங்களும், ஏனோ ஓர் அலாதியான அமைதியுடன் விளங்கிக் கொண்டிருந்தது. ஆம், அங்கே பல வெண் மதிகள் தங்கள் ஒளிபிரவாகத்தை வீணாக்கிக்கொண்டு இருந்தன. காஞ்சி சுந்தரி தன்னுடைய மணி மாடங்களை அழகு முத்துப் பற்களென மதித்து, வானத்துக் காதலன் சந்திரனைப் பார்த்து மோகனப் புன்முறுவல் பூத்துக் கொண்டிருக்க அந்த மணிமாடங்களில் ஒயிலாய் ஓவிய மெனத் திகழ் பொற்கொடிகள் மட்டும் பட்டுத் திரைகளைத் தழுவிக்கொண்டு இருந்தன. மோன இரவின் தாபத்துடன், வெண்மதியின் குளுமையும், தென்றலின் இனிமையும், சேர்ந்து அவர்களின் மோக வெறியை இன்பத்தின் உச்சிக்கே கொண்டுபோய் விட்டிருந்தன. ஆனால் ஏங்கி நின்ற அந்த இன்பம், அணைய விரையும் ஒரு துடிப்பு, இவைகள் நிறைவேறிற்றா என்றால் அதுதான் இல்லை. ஆம், அந்தப் பொற் கொடிகள் தழுவும் கொடி மரங்கள் எல்லாம் காஞ்சியில் உள்ள பல்லவ மாளிகையில் முக்கிய அலுவல் நிமித்தம் கூடியிருந்தது.

    ஆம். அன்றைய பல்லவ சேனாபதி, சோழ நாட்டில் புகுந்து, சோழ மண்டலத்தின், வடதிசை மாதண்ட நாயகான் ஓலையை எடுத்துச் சென்ற ராஜமல்ல முத்திரைவனைக் குத்திக் கொல்ல முயன்ற குற்றத்திற்காக, விசாரணை நடக்கப்போகிறது அந்த விசாரணைக்காக சோழ மண்டலத்தின் இளவல் மதுராந்தகத் தேவரும் வரப் போகிறார்.

    ஆனால் ஒரேயொரு மாளிகையில் மட்டும் அமைதி நிலவுவதற்குப் பதில் ஆவேசம் பொங்கிக் கொண்டிருந்தது. ஆம், அது சோழர்களின் பாசறைக்கு அருகே இருந்த பொன் மாளிகைதான்.

    செம்பியா, இந்த ஓலையைக் கொண்டு வந்தவன் யாரென்பதைச் சொல். இதை என்னால் நம்ப முடியவில்லையே! மதுராந்தகனின் முகத்தில் நிராசையின் வெறியும், சமயம் கை நழுவிப் போகிறதே என்ற துக்கமும் பொங்கிக் கொண்டிருந்தது.

    ஆம், இளவரசே! என்னாலேயே நம்ப முடிய வில்லை அதுவும் இந்த இக்கட்டான நேரத்தில் தாங்கள் ஏன் தஞ்சையில் இருக்க வேண்டும் என்பதும் புரியவில்லையே?

    என்ன எழுதியிருக்கிறார் என்பதைப் படி!

    "இளவரசர் மதுராந்தகனுக்கு, அன்புத் தந்தையின் ஆசை கட்டளை இப்பவும் உன்னை சோழ சைன்யத்தின் தென் திசை மாதண்ட நாயகராய் நியமித்திருப்பதால் சோழ மண்டலத்தின் மன்னர் என்ற முறையில் எண்பேராயத்தின் ஆலோசனைப்படி ‘பஞ்சவன் மாராயன்’ என்ற பட்டத்தைக் கொடுத்து, உன்னை இப்பொழுதே தஞ்சைக்குச் சென்று பதவியை ஏற்குமாறு உத்தரவு இடுகிறேன். இந்த ஓலையைக் கொண்டு வருபவன், உன்னைச் சந்தித்த இரண்டு நாழிகைக்குள் நீ காஞ்சியை விட்டுக் கிளம்பியிருக்க வேண்டும். தந்தை என்ற முறையில் உன் பதவி உயர்வைக் கண்டு ஆனந்த மடைகிறேன்.

    ஒப்பம்,

    அருண்மொழி வர்மர்.

    செம்பியா, இது வந்த இரண்டு நாழிகைக்குள் நான் காஞ்சியை விட்டுக் கிளம்பிவிட வேண்டும் என்று எழுதியிருக்கிறாரே? இன்று விசாரணை மண்டபத்திற்கு யார் செல்வார்கள்?

    இளவரசே, மாதண்ட நாயகர் செல்லலாமே?

    அது முடியாது செம்பியா; நானே வருகிறேன் என்று கூறியிருக்கிறேன். முதன் முதலில் பல்லவ நாட்டில் நடக்கும் ஒரு முக்கியமான விசாரணையில் நான் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு நான் எப்படிப் போகாமல் இருக்க முடியும். எங்கே, அந்த ஓலையைக் கொண்டு வந்த தூதனைக் கூப்பிடு! என்று ஆணையிட்டான்.

    அந்த ஓலை கொண்டு வந்தவன் உள்ளே வந்தவுடன் ஒன்றுமே பேசாமல் நின்று கொண்டிருந்தான். அவன் செம்பியன் இருப்பதை உற்றுப் பார்த்தான். அவன் எண்ணப் போக்கை உணர்ந்த இளவரசர், செம்பியா, கொஞ்ச நேரம் வெளியே சென்றிரு என்று கூறவும், செம்பியன் வெளியே போனான்.

    உன்னுடைய பெயரென்ன? புலி இலச்சினை பதித்த இந்த ஓலை உனக்கு எப்படிக் கிடைத்தது? உண்மையைச் சொல் என்று துரிதப்படுத்தினான்.

    இளவரசே! இலாடப் பேரரையரிடம் வேவு பார்க்கும் பணியை மேற்கொண்ட நான், மாமன்னரைச் சந்திக்க நேர்ந்த சமயத்தில் தங்களிடம் இந்த ஓலையைத் தருமாறு கூறினார்.

    இதைத் தந்துவிட்டு வேறு ஏதாவது கூறச் சொன்னாரா?

    இளவரசே! இதைத் தந்துவிட்டுக் கட்டாயம் இதை மதித்து நடக்கவேண்டும் என்றார்.

    இதை ஏற்றுக் கொள்ள மறுத்தால், அல்லது தயங்கினால், ஏதாவது ஒரு காரணத்தைக் கூறுமாறு கூறினாரா?

    இளவரசே, தாங்கள் இப்படிக் கேட்டால் நான் என்ன பதில் சொல்லுவேன் என்று கூறியவன் தொடர்ந்து, சோழர் மரபிலேயே தந்தையின் வாக்கைத் தனயன் மீறி நடந்ததில்லையே? அப்படியிருக்கத் தாங்கள் மட்டும்...?

    இல்லை, இது நாள் வரை நடைபெற்று வந்த வழக்கத்திற்கு மாறாகப் புதுமையைச் செய்யப் போகிறேன். இதுவரைத் தந்தையின் கட்டளையைத் தனயன் மீறி நடந்ததில்லை. ஆனால் இப்பொழுது மீறித்தான் நடக்கப் போகிறேன். இங்கேயே தங்கியிருந்து, பல்லவ சக்ரவர்த்தியின் படையும், சாளுவர் படையும், அலை கடலென ஆர்த்து வரும் பொழுது, அதில் குதித்து வெற்றி என்னும் அமுதத்தைக் கடைந்தெடுத்துக் கொண்டு வரப் போகிறேன். இது உறுதி. தந்தையின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, எல்லா வெற்றியையும் அவரே அடைய வேண்டும்; எல்லாப் பட்டத்தையும் அவரே அடைய வேண்டும்; அவரே எல்லாப் புகழையும் பெற வேண்டும் என்று நினைக்காமல், அவருக்கு வரும் பட்டம் எல்லாம் நான் அடைந்த வெற்றியால் வரவேண்டும் என்பதே என் ஆசை, திட்டம்.

    "மாமன்னர் படையெடுத்துப் போர்க்களம் சென்று வெற்றி மாலை சூடி வரும் பொழுது, அந்தப்புரத்து மாந்தர்கள் எல்லாம் ஆரத்தி எடுத்து வரவேற்கும் பொழுது, பட்டத்து யானையின் மீது வந்து நானும் பெண்களுடன் வரவேற்க வேண்டுமா? தந்தையே, இது இருக்கிறதே, பெயருக்கேற்றாற்போல் வழுக்கியோடும் தைலப்பனின் மகன் சத்யாஸ்ரயனின் முடி; இதுதான் கோழை சுந்தரப் பாண்டியன் ஈழநாட்டிலே அடகு வைத்த பாண்டிய வைர முடியும், இந்திரன் அணிவித்த மாலையும். அதோ ஒளி வீசுகிறதே, அதுதான் நமது சூரிய குலத்திலேயே, தலைசிறந்த நாராயணனின் அம்சமான ரகுராமன், அகம்பாவத்தால், அந்தணர் என்பவர் யாவர் என்பத் தமிழ்ப் பெருமகன் வள்ளுவப் பெருந்தகை வகுத்த வழி முறையையும், அந்தணராயிருந்தாலும் மறந்து, மானுடப்பிறவி எடுத்துவிட்டதால் இகத்தையும் அகந்தையால் பரத்தையும் மறந்து, தன்னுடைய சுய நலத்திற்காகப் பாடுபட்டு வெறி கொண்டு வந்த பரசுராமனை, தன்னுடைய மற்றோர் நாராயண அம்சமாயினும் வென்றாரோ, அதேபோல், தன்னுடைய நண்பராக இருக்கிறார் என்பதையும் மறந்து, சகாயம் செய்வதாகக் கூறி, சேரனின் மணி முடியைக் கொண்டுபோய் சாந்தரத் தீவில் வைத்தாரே, அவருடைய அகம் மேலும் அழியும் வகையில் இங்கு வீற்றிருக்கிறதே அதுதான் சேரனின் முடி.

    தந்தையே! இதோ இருக்கிறது மும்முடிகள்! இதை அணிந்து மும்முடிச் சோழன் என்ற பட்டத்தைத் தாங்கிக் கொள்ளுங்கள் என்று பணிவாகக் கூற வேண்டும். அப்பொழுது ஆனந்த வாரிதியில் ஆழ்ந்து போய்த் தந்தை என்னைக் கண்களில் நீர் ததும்ப ஒரே ஒருதரம் பரிவுடன் நோக்கினால் போதும்."

    இளவரசே! எனக்குக் கூடத் தாங்கள் கூறுவது நியாயமாகத்தான் படுகிறது. ஆனால்...

    என்ன ஆனால்?

    எதிரியானவன் போரில் நேரே படையுடன் வந்தால், அப்பொழுது, தாங்கள் படை திரட்டிக் கொண்டு போரிடப் போவது தான்... தங்கள் புகழை அதிகரிக்குமேயொழிய சதிச் செயலும், காட்டிக்கொடுக்க தயாராக உள்ள இடத்தில் தாங்கள் போரிட்டால் தங்கள் புகழ் பெருகுமா என்பது சந்தேகம் தான்.

    ஏன் இங்கே பல்லவர்களும், சாளுக்கியர்களும் சேர்ந்து தானே போரிடப் போகிறார்கள்?

    மதுராந்தகன், செம்பியன் சாளுவ நாட்டிலிருந்து கொண்டு வந்த செய்தியை அவனுக்குக் கூறலாமா என்று பார்த்தான். ஆனால் அதைச் சொல்லவேண்டாம் என்று மனத்திற்குள்ளேயே அடக்கிக் கொண்டான்.

    இளவரசே! தங்கள் முடிவென்ன என்பதைக் கூறுகிறீர்களா?

    முடிவா, அது தான் கூறிவிட்டேனே? இந்தக் காஞ்சியைவிட்டுப் பல்லவர்களின் கொட்டம் அடக்காமல் கிளம்பமாட்டேன்.

    அப்பொழுது நான் செய்யத் தயங்குவதைச் செய்து தான் தீர வேண்டும் போல் இருக்கிறது.

    என்ன செய்யத் தயங்குகிறாய்? உண்மையைக் கூறி விடு!

    உம்மை மாமன்னரின் உத்தரவை மீறியதற்காகக் கைது செய்ய வேண்டியதுதான்.

    அவ்வாறு கண்டவனுக்கெல்லாம் அதிகாரத்தைத் தர, அதுவும் இலாடப் பேரரையனின் வேவுக்காரனுக் கெல்லாம் சோணாட்டு இளவரசனைக் கைது செய்ய அதிகாரம் தர என் தந்தை ஒரு நாளும் உடன்பட மாட்டார்.

    ஏன் உங்கள் தந்தையை, உங்கள் பாட்டனார் ஈழத்திலிருந்து கைது செய்து கொண்டு வரும்படி கட்டளை இடவில்லையா? அவரும் கைதாகி வர மனம் ஒப்பி வந்தாரே?

    அப்பொழுது என் பாட்டனார் சுந்தர சோழ சக்ரவர்த்தி சித்தம் சரியில்லாமல் தானே அவ்வாறு கூறி அனுப்பினார்?

    இப்பொழுது உங்கள் தந்தையும் அவ்வாறுதான் இருக்கிறார்.

    என்ன, என் தந்தை சித்தம் தவறி இருக்கிறாரா? ஜாக்கிரதை. மாமன்னரைப் பழித்துப் பேசும் அளவுக்கு உன் நா வளர்ந்துவிட்டதா? அது வளர்ந்துவிட்ட பாபத்திற்காகத் துண்டிக்கப்படும்.

    "இளவரசே, இந்த விஷயத்தில் தாங்களும் என்னைப் போல்தான் என்பதை மறந்துவிட்டீர்கள்... மாமன்னரை நான் இளக்காரமாகப் பேசுவது குற்றம். ஆனால், மாமன்னரின் உத்தரவைக் கீழ்படிய மறுப்பது அதை விடக் குற்றமே, ஆக இருவருமே ஒரே தராசில் இருந்தாலும், உங்கள் தட்டின் கனம் அதிகம். மேலும் நான் பேசுவதற்குச் சான்று கிடையாது. நீங்கள் பேசுவதற்குச் சான்று உண்டு. ஆக இருவருமே மாமன்னர் மேல் குற்றம் சுமத்துவதால், என் நாக்கைத் துடிப்பதற்கு முன்னால் சொல்ல வேண்டியவைகளைச் சொல்லி விடுகிறேன்.

    சோழ நாட்டைத் தெற்கேயிருந்து பாண்டியர்களும், ஈழத்து மகிந்தனும், சேரனுடன் சேர்ந்து கொண்டு தாக்க முயற்சிக்கிறார்கள் வடக்கே பல்லவர்களுடன் சேர்ந்து கொண்டு, மேலைச் சாளுக்கியர்களும், நசுக்கப் பார்க்கிறார்கள். வேங்கியில் தெலுங்கு சோழன், ஜடா சோட வீமன் கலிங்க நாட்டையும், கவர்ந்து கொண்டு, மூத்தப் பரம்பரையில் வந்த தானார்வைனனின் மக்கள் சக்திவர்மனையும், விமலாதித்தனையும் காடு, காடாகத் துரத்துகிறார்கள். இந்நிலையில் மாமன்னர் தக்கோலத்தில் விண்ணகரம் எழுப்ப வேண்டும் என்கிறார். இப்பொழுது உத்திரமேரூரில் வந்து தங்கி இருப்பார் என்று நினைக்கிறேன். எப்படி சுந்திர சோழ சக்ரவர்த்தி உங்கள் தந்தையைக் கைது செய்து கொண்டு வரும்படி அனுப்பினாரோ, அவ்வாறேதான் தாங்களையும் காஞ்சியை விட்டு வெளியே வரும்படி சொல்லி இருக்கிறார்."

    அப்பொழுது பழுவேட்டரையர்களின் தூண்டுதலின் பேரில் தான் என் தந்தையைக் கைது செய்யும்படிக் கூறினாராம் என்றவன் இதை என் அத்தை சொல்லி இருக்கிறார் என்றான் மதுராந்தகன்.

    இப்பொழுது மாத்திரம் என்ன? சின்னப் பழுவேட்டரையருக்காகத்தான் தங்களை வரச் சொல்லி இருக்கிறார்! அதிகம் பேசமுடியாது. தங்கள் முடிவென்ன?

    முடிவு இரண்டு கிடையாது. நான் காஞ்சியை விட்டுக் கிளம்ப முடியாது.

    அப்படியானால் இளவரசே, தங்களைக் கைது செய்யப் போகிறேன். மன்னித்துக் கொள்ளவும் என்று ஓரடி எடுத்து முன்னால் சென்றவன் மதுராந்தகனின் குத்தைத் தாங்க முடியாமல் பின்னால் விழுந்தான். உடனே வேகமாய் ஆவேசத்துடன் எழுந்திருந்து மதுராந்தகனின் முகத்தில் ஒரு குத்து விட்டான். ஆனால் மதுராந்தகனின் முகத்தில் ஏற்பட்ட வலியை விட தூதுவனின் முகத்தில் தான் வலியின் வேதனை அதிகம் தெரிந்தது. பலத்த யுத்தம் அங்கே ஆரம்பமாகி விட்டது. முகத்திற்கு முகம் மோதின.

    கைகளும் கைகளும் பின்னி வளைந்து நிமிர்ந்து முறுக்கின கால்கள் ஒன்றையொன்று பின்னி வளைத்தன. இவ்வளவு வயதை அடைந்தவனுக்கு இவ்வளவு பலமோ என்று ஒரு கணம் அதிசயித்தது மதுராந்தகனின் உள்ளம்.

    இந்த ‘இளைய பிள்ளைக்கு இத்தனைச் சாதுர்யமா? புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?’ என்று அதிசயித்தது தூதனின் உள்ளம். மதுராந்தகன் தூதுவனின் மேல் ஏறிக் கொண்டு அழுத்துகிறானே! ஆ... இதென்ன? மதுராந்தகனல்லவா இப்பொழுது அடியில் கிடக்கிறான்? ஐயோ, என்ன இது? மதுராந்தகன் இரண்டு கைகளாலும் தூதுவனின் கழுத்தை நெரிக்கிறானே?

    தன் கழுத்தை விடுவித்துக் கொள்ள தூதன் மதுராந்தகனின் கழுத்தை நெரிக்கிறானே? ஐயோ, இதன் முடிவென்ன? இளவரசனின் கைப்பிடி நழுவுகிறதே! மதுராந்தகா, கண்ணே! யாருடைய அலறல். அந்த தூதன் அல்லவா அலறுகிறான்? மதுராந்தகனின் தளர்ந்த பிடி ஓங்குவதற்குள் அந்தத் தூதன் கத்திவிட்டதால் மதுராந்தகனின் பிடி இறுகவில்லை அதற்கு மாறாக, ‘தந்தையே’ என்று இறுகத் தழுவிக் கொள்கிறான் ஆம், அந்த தூதன் வேடத்தில் அருண்மொழி வர்மர் தான் தின்று கொண்டிருந்தார்.

    தந்தையே, என்னை மன்னிப்பீர்களா?

    கண்ணே, மதுராந்தகா! உன்னை எதற்காக மன்னிக்க வேண்டும்? நீயல்லவா என்னை மன்னிக்க வேண்டும்? தன் தாய்நாட்டுப் பற்றும், பாசமும், வீரமும் உள்ள உன்னைச் சமீபத்தில் வெளியேறச் சொன்னேன் அல்லவா? அது என் தவறல்லவா?

    இதை ஒரு நாளும் ஒப்புக் கொள்ள முடியாது. தங்களுடனேயே துவந்த யுத்தம் செய்திருக்கிறேன். இதற்குப் பிராயச் சித்தம் கிடையாது. தங்களை அடித்த கைகளை வெட்ட வேண்டும். கண்களில் நீர் துளிக்க நின்றான்; அவர் கண்களுக்குச் சிறு குழந்தையாகி நின்றான் வாலிப மதுராந்தகன்.

    மதுராந்தகா, கவலைப்படப் பிறந்தவனில்லை நீ... இதோ பார்; உன் அழகு முகத்தைக் காட்டு! மகனே, புலி தன்னுடைய வித்தையைக் குட்டிக்குக் கற்றுத் தரும் பொழுது சண்டை போடத்தான் செய்யும். அதற்குக் குட்டி, தாய் புலியுடன் சண்டை போடமாட்டேன் என்று சொல்ல முடியுமா?

    தந்தையே, கற்றுச் தரும் பொழுது செய்யும் சண்டை முறை வேறு இது வேறு சண்டை. மிருகம் கூடவல்லவா தன் தந்தை, தாயை அறிந்து கொள்கிறது? நான் மிருகத்திற்கும் கேடானவனாகி விட்டேன். இதற்கு ஏதாவது தண்டனை தந்து தான் ஆக வேண்டும்.

    சரி, நான் தண்டனை தருகிறேன். நீ என்னுடன் கிளம்ப வேண்டும். நேராகத் தஞ்சை சென்று படைகளைச் சேகரித்துக் கொள். அதில் மூன்றில் ஒரு பகுதியை, உபசேனாதிபதி பரமன் மழபாடியான் தலைமையில் அனுப்பி வை. அவனை வட திசை மாதண்ட நாயகனாக்கி இருப்பதாக உத்தரவிட்டு, நீ சேனாபதி கிருஷ்ணன் ராமனுடன் சேரநாட்டை நோக்கிச் செல்!

    தந்தையே, சேர நாட்டில் என்ன நடந்தது’ அங்கு படையெடுக்க வேண்டிய அவசியம் என்ன? ஒரே நாளபழகி விட்டாலும், ஆயுள் பூராவும் மறக்க முடியாத அளவுக்கு நண்பனாகிவிட்ட விக்ரமனுக்கு ஏதாவது ஆபத்தா? அல்லது பழுவூர் பாட்டனுக்கு ஏதாவது நேர்ந்து விட்டதா? உடல் துடிக்கிறது.

    ஆம், என் உடலும் தான் துடிக்கிறது. பழுவூர் பாட்டன் உதகைக் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார்.

    தமிழ்நாட்டின் பெருமகன், சோணாட்டின் தூதராகச் சென்ற பிரதிநிதி சிறை வைக்கப்பட்டார். அறதெறியை இழந்து விட்டு, தறுதலையாகத் திரியும் பாஸ்கர ரவிவர்மன், சோணாட்டை, ஏன் தமிழகத்தை இல்லை, தூதனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வள்ளுவப் பெருந்தகை கூறிய முறை மறந்து தலைகுனிய வைத்து விட்டார். தான் சொல்லிய சொல் மாறாக இப்படி ஒரு மன்னன் நடப்பதை வள்ளுவப் பெருந்தகை இருந்திருந்து பார்த்திருந்தால், தற்கொலை செய்து கொண்டிருப்பார்.

    மகனே, இந்தத் தவற்றைத் துடைக்க முற்படுவாயா? முதல் முதல் போருக்குச் செல்லும் உனக்குத் தஞ்சை வந்து வாழ்த்தி விடை கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் உன் பெரியப்பா கட்டிய மாளிகையிலே, உன் பாட்டனும், பாட்டியும் பயிர் நீத்த மாளிகையிலே, உனக்கு விடை தருகிறேன் உன் பெரியப்பா போல் வீரத்திலும், மும்முடிச் சோழன் என்ற பெயரை நீ விரும்பியதுபோல் எனக்கு வாங்கித் தரவும் முயற்சி செய். போகும் முன் ராசமல்ல முத்திரையனை வந்து என்னைப் பார்க்கச் சொல் என்று கூறி ஆர்வத்துடன் மகனை அணைத்துக் கொண்டார்.

    மேரு பர்வதமும், மலைய பர்வதமும் ஒன்று சேர்வது போல் இருந்தது அந்தக் காட்சி. மாமன்னரின் பிடி கொஞ்சம் தளர்ந்தது மதுராந்தகன் விடைபெற்றுக் கொள்ள முன் வந்த பொழுது, மகனே! ஒரு வார்த்தை, இங்கே நமக்குள் நடந்த யுத்தத்தை உன் அத்தையிடம் கூறிவிடாதே. அப்புறம் நான் சோணாட்டிற்குத் திரும்பி வர முடியாது. மகனே, எங்கே கொஞ்சம் சிரி, பார்க்கலாம். பாண்டிய நாட்டுடன் போரிட்டாலும், கடல் கடந்து கலம் செலுத்திக் கொண்டிருந்தாலும், நீ சிரிப்பதை மட்டும் என்னால் மறக்கவே முடியாது. இப்பொழுது பெரியவனாகி நீ சிரிப்பதைப் பார்த்தால், கடல் கடந்து நான் செல்லும் பொழுது, உன் அன்னை படமும், அத்தையிடமும் விடைபெறப் போன பொழுது, அத்தையின் இடுப்பில் இருந்து கொண்டு, நீ என் மேல் தாவினாய், அதை என்றும் என்னால் மறக்க முடியாது.

    இதைக் கேட்ட மதுராந்தகனின் முகம் அத்தனை வீரக்களையிலும் கொஞ்சம் நாணம் கலந்து சிவந்தது. ஆனால் அப்பொழுது அவனுக்கு ஞாபகம் வந்தது. குழந்தை பருவத்து நிகழச்சியல்ல. அது அவனுக்கு ஞாபகமில்லை. இப்பொழுது ஞாபகத்தில் இருந்தது. அன்றொரு நாள் தடாகத்துக் கரையில் வீரமா தேவியின் சிரிப்பைப் பற்றித்தான் நினைவில் இருந்தது. கொஞ்ச நேரத்தில் தூதன் வேடத்தில் மாமன்னரும், மதுராந்தகனும் போவதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே. மறைவிலிருந்து விலகி பல்லவ அரண்மனையை நோக்கிக் குதிரையைச் செலுத்தினான் திரைலோக்ய முத்திரையன்!

    2

    மகேந்திவர்மரும், நரசிம்மப் பல்லவரும் இருந்த காலத்தின்போது பொலிந்த அழகு இப்பொழுது இல்லாத போதும், அந்தக் காஞ்சி சுந்தரியின் அழகு மட்டும் இளமை மாறாமல், குறையாமல் இருந்தது. எங்கு பார்த்தாலும், ஆலயங்களும், மணிமாடங்களும் நிறைந்து இருந்தன. சைவ சமயத்தின் கற்றளிகளின் கருமை, பௌத்த பள்ளிகளின் வெண்மை, விண்ணகரங்களின் மாட கோபுரங்கள், இவை அனைத்தும் அந்தப் பொன்னொளியில் வெண்மதியென்கின்ற குழந்தையை அள்ளி அணைக்க, தன் கைகளை விரித்து, பூமித்தாய் வீசுவதுபோல் இருந்தது. இவைகள் எல்லாவற்றையும் விட உயரமான இடத்தில் இருந்தது பல்லவனீச்சரம்.

    பல்லவன் பார்த்திபேந்திரனும் சிறந்த ரசிகன்; அதிக பக்தி கொண்டவன். புதிய கற்றளிகள் அமைக்க முடியாவிடினும் பல கோயில்களுக்கு, வழிபாடுகளுக்காக நிவந்தங்கள் விட்டிருந்தான். பல பாழடைந்த கோயில்களைப் புதுப்பிப்பதில் ஈடுபட்டிருந்தான். எப்பாடு பட்டாகிலும் சோழர்களிடமிருந்து பல்லவ நாட்டை விடுதலை பெறச் செய்து, அதைத் தனி நாடாக்கித் தானே, புதிய பரம்பரையைத் தோற்றுவிக்க வேண்டுமென்ற பேராவலை உடையவன்.

    அந்தப் பல்லவனீச்சரத்தில் உள்ள மாளிகையில் இரண்டே இரண்டு பேர் தான் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள். பல்லவ மன்னர் பார்த்திபேந்திரரும், அவர் மகன் மல்லவர்மனும் தான்.

    தந்தையே; பொழுது புலர்ந்ததும் சபை கூடி விசாரணை நடக்கப் போகிறது. என்ன நடக்குமோ என்று பயமாக இருக்கிறது.

    நீ ஒரு கோழை; அதனால் தான் பயப்படுகிறாய்! இன்று தான் அஸ்தமித்துப் போன பல்லவ சாம்ராஜ்யம் உ.தயமாகப் போகும் நன்னாள். அதையும் என் கண் முன்னாலேயே, அதற்குக் காரண பூதனாக நானே இருக்கப் போவதை என் கண்ணாலேயே காணப் போகிறேன். பார்த்துக் கொண்டேயிரு...

    தந்தையே எனக்கு இன்னும் தங்களின் போக்குப் புரியவில்லையே!

    நான் தான் சொன்னேனே, உனக்கு அவ்வளவு போதாதென்று. உண்மையிலேயே பார் மல்லவர்மா! அந்த வெறி பிடித்த மதுராந்தகன் என்ன பாடுபடப் போகிறான் என்று! என்னுடைய சேனாபதியை சபையில் நிறுத்தி வைத்து அவமானப்படுத்தி நிரூபிக்க வேண்டும் என்றான் பார், அந்த சோழன்? அவனுடைய மகனையே சபையில் நிறுத்தி வைத்து அவமானப்படுத்தப் போகிறேன், பார்.

    அதை எப்படியப்பா செய்யப் போகிறீர்கள்?

    "சபை கூடியவுடன் திகம்பரமாயன் கூண்டிலே எற்றப்படுவான். உடனே நான் எழுந்து, ‘சபையோர்களே! இன்று புது மாதிரியான வழக்கு ஒன்றை பார்க்கப் போகிறீர்கள். குற்றம் புரிந்தவராகக் கூறப்படுபவர் பல்லவ சேனாபத திகம்பரமாயன் அவர் புரிந்த குற்றம் என்ன என்றால் பல்லவ நாடு சுதந்திரமடைய வேண்டும் என்றார். தவறு; ஆசைப்பட்டார். பல்லவ நாட்டு மக்களின் சுதந்திர தாகத்தை அறியாத, உணர முடியாத வடதிசை மாதண்ட நாயகர், கந்தன் மாராயர் ஓர் ஒற்றனிடம் ஓலையைக் கொடுத்து, அதை மாமன்னாடம் கொடுத்து பல்லவ நாட்டின் மீது படையெடுத்து அதை அழிக்குமாறு கேட்டுக் கொண்டார். சோழர்களின் படை பலமோ மிகப் பெரியது; பல்லவ நாட்டின் சுதந்திர தாகம் அதிகமானாலும், இன்னும் பூரண ஏற்பாடுகள் முடியவில்லை.

    இந்தச் சமயத்தில் சோழ சைன்யம் தொண்டை நாட்டிற்குள் புகுந்து விட்டால், பல்லவ நாட்டில் கிளம்பிய சுதந்திர தாகம் முளையிலேயே வளராமல் கிள்ளி எறியப் பட்ட துளிராகும். இந்தப் போரைத் தடுக்கவே ஓலை கொண்டு செல்லும் ராஜமல்ல முத்திரையனைத் தடுக்கப் பார்த்தார். இருவருக்கும் நடந்த சண்டையில் பல்லவ சேனாபதியின் முன் படைத் தலைவனால் நிற்க முடியவில்லை. உடனே சோணாட்டின் சேனாபதி கிருஷ்ணன் ராமன் தன்னுடைய ஆட்களை அழைத்து வந்து, பல்லவ சேனாபதியைப் பிடித்துக் கொண்டு போய் அரசவையில் நிறுத்தி நம்மையும், பல்லவ சேனாபதியையும் அவமானப் படுத்தினாராம்.

    Enjoying the preview?
    Page 1 of 1