Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Raja Nayagi Part-1
Raja Nayagi Part-1
Raja Nayagi Part-1
Ebook417 pages3 hours

Raja Nayagi Part-1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வரலாற்றுப் படிப்பினைகளை உணர்த்த வரலாற்று நூல்கள் தேவை. வரலாற்று உண்மைகளை உணர்த்தவல்ல இலக்கியவாதிகள் தேவை. பொதுவாக இந்தியர்களுக்குச் சரித்திர உணர்வு கிடையாது என்றும், அதனாலேயே இந்திய சரித்திரத்தின் பல மகோன்னதங்கள் கண்டுபிடிக்காமலேயே அழிந்துவிட்டன என்று கூறுவோர் உள்ளனர். அவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று “வெள்ளையர்கள் செய்த அகழ்வாராய்ச்சிகள் தான் நமது சரித்திர வெளிப்பாடுகளுக்கு ஆதாரம்” என்றும் சொல்வார்கள். கங்கை கொண்ட சோழபுரத்துக் கோவிலில் இடிபாடுகளைக் கொண்டு கல்லணை கட்டியவர்கள் ஆங்கிலேயர்கள் தான் என்பதை மறந்து விட்டனர்.

இந்தியர்களுக்குச் சரித்திர உணர்வு உண்டு என்பது மெய்க் கீர்த்திகளாலும், கல்வெட்டுக்களாலும் தெரிய வருகின்றது. இராம காவியத்தைச் செய்த வால்மீகி - அதை ‘சீதாயாஸ் சரிதம் இதம்’ என்றார். கண்ணகியின் வரலாற்றைச் சொல்லும் வகையில் சிலப்பதிகாரம் சேர, சோழ, பாண்டியர்களின் மாண்பினைச் சொன்னது. பதிற்றுப் பத்து சேர மன்னர்களின் வரலாற்றையும், நாயன்மார்களின் வரலாற்றைப் பெரிய புராணமும், திரு அரங்கத்தின் வரலாற்றை திவ்யசூரி சரிதமும் தெளிவாக்க வில்லையா?

அண்மை காலத்தில் வரலாற்று நூல்களுக்கு வித்திட்டவர் அமரர் கல்கி தான். ஆங்கில இலக்கியத்தில் சர் வால்டர் ஸ்காட், கிப்பன் போன்றவர்களின் பாணியில் காவியங்களைப் படைத்தார். வரலாற்று நவீனங்கள் அரசர்களைப் பற்றியே இருந்தாலும் அவரின் பரஞ்சோதி, படகோட்டி பொன்னன், வந்தியத் தேவன் ஆகியோர் சாமானியர்கள் தான். உழைப்பால் உயர்ந்தவர்கள்.

அவ்வகையில் கடல் கடந்த வெற்றிக் குவியலைக் காட்டிலும் “தி கிரேட் ஆல்மடா” என்ற மேலை நாட்டுக் கடல் போருக்கு சமமான காந்தளூர்ச் சாலை கல மறுத்தருளியதைக் காட்டிலும், ஏன், வான் மூட்டும் ராசராசேச்சரத்தைக் காட்டிலும் கூட, சிறப்பான செயலைச் செய்து தமிழர் நெஞ்சமெல்லாம் இனிக்கச் செய்தவர், திருமறைகண்ட செல்வர் ராசராசன்.

அந்தத் திருமறைகண்ட செல்வர் தேவாரப் பதிகங்களுக்குப் பண் அமைக்க முடியாமல் தவித்தபோது, இறைவன் ஆணையின்படி அதனைச் செய்து முடித்தவள் தான் இந்த “ராஜ நாயகி.” தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்து வந்த இவளால் தான் தேவாரத்துக்குப் பண அமைக்க முடிந்தது. போற்றுதற்குரிய இப்பேற்றினை இன்றும் நாம் உணர்ந்து மிகவும் கடமைப் பட்டுள்ளோம்.

அன்புடன், ராஜரத்னம்.

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580129004656
Raja Nayagi Part-1

Read more from G.S. Rajarathnam

Related to Raja Nayagi Part-1

Related ebooks

Related categories

Reviews for Raja Nayagi Part-1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Raja Nayagi Part-1 - G.S. Rajarathnam

    http://www.pustaka.co.in

    ராஜ நாயகி

    முதற் பாகம்

    Raja Nayagi

    Part-1

    Author:

    ஜி.எஸ். ராஜரத்னம்
    G.S. Rajarathnam

    For more books

    http://pustaka.co.in/home/author/gs-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    என்னுரை

    வரலாற்றுப் படிப்பினைகளை உணர்த்த வரலாற்று நூல்கள் தேவை. வரலாற்று உண்மைகளை உணர்த்தவல்ல இலக்கியவாதிகள் தேவை. பொதுவாக இந்தியர்களுக்குச் சரித்திர உணர்வு கிடையாது என்றும், அதனாலேயே இந்திய சரித்திரத்தின் பல மகோன்னதங்கள் கண்டுபிடிக்காமலேயே அழிந்துவிட்டன என்று கூறுவோர் உள்ளனர். அவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று வெள்ளையர்கள் செய்த அகழ்வாராய்ச்சிகள் தான் நமது சரித்திர வெளிப்பாடுகளுக்கு ஆதாரம் என்றும் சொல்வார்கள். கங்கை கொண்ட சோழபுரத்துக் கோவிலில் இடிபாடுகளைக் கொண்டு கல்லணை கட்டியவர்கள் ஆங்கிலேயர்கள் தான் என்பதை மறந்து விட்டனர்.

    இந்தியர்களுக்குச் சரித்திர உணர்வு உண்டு என்பது மெய்க் கீர்த்திகளாலும், கல்வெட்டுக்களாலும் தெரிய வருகின்றது. இராம காவியத்தைச் செய்த வால்மீகி - அதை ‘சீதாயாஸ் சரிதம் இதம்’ என்றார். கண்ணகியின் வரலாற்றைச் சொல்லும் வகையில் சிலப்பதிகாரம் சேர, சோழ, பாண்டியர்களின் மாண்பினைச் சொன்னது. பதிற்றுப் பத்து சேர மன்னர்களின் வரலாற்றையும், நாயன்மார்களின் வரலாற்றைப் பெரிய புராணமும், திரு அரங்கத்தின் வரலாற்றை திவ்யசூரி சரிதமும் தெளிவாக்க வில்லையா?

    அண்மை காலத்தில் வரலாற்று நூல்களுக்கு வித்திட்டவர் அமரர் கல்கி தான். ஆங்கில இலக்கியத்தில் சர் வால்டர் ஸ்காட், கிப்பன் போன்றவர்களின் பாணியில் காவியங்களைப் படைத்தார். வரலாற்று நவீனங்கள் அரசர்களைப் பற்றியே இருந்தாலும் அவரின் பரஞ்சோதி, படகோட்டி பொன்னன், வந்தியத் தேவன் ஆகியோர் சாமானியர்கள் தான். உழைப்பால் உயர்ந்தவர்கள்.

    அவ்வகையில் கடல் கடந்த வெற்றிக் குவியலைக் காட்டிலும் தி கிரேட் ஆல்மடா என்ற மேலை நாட்டுக் கடல் போருக்கு சமமான காந்தளூர்ச் சாலை கல மறுத்தருளியதைக் காட்டிலும், ஏன், வான் மூட்டும் ராசராசேச்சரத்தைக் காட்டிலும் கூட, சிறப்பான செயலைச் செய்து தமிழர் நெஞ்சமெல்லாம் இனிக்கச் செய்தவர், திருமறைகண்ட செல்வர் ராசராசன்.

    அந்தத் திருமறைகண்ட செல்வர் தேவாரப் பதிகங்களுக்குப் பண் அமைக்க முடியாமல் தவித்தபோது, இறைவன் ஆணையின்படி அதனைச் செய்து முடித்தவள் தான் இந்த ராஜ நாயகி. தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்து வந்த இவளால் தான் தேவாரத்துக்குப் பண் அமைக்க முடிந்தது. போற்றுதற்குரிய இப்பேற்றினை இன்றும் நாம் உணர்ந்து மிகவும் கடமைப் பட்டுள்ளோம்.

    அன்புடன்,

    ராஜரத்னம்.

    1

    செங்கதிரோன் சேர நாட்டின் வளத்தைக் காண மேற்கே ஆனைமலைக் காட்டினுள் புக முயற்சி செய்து கொண்டிருந்தான். கருமுகில் ஒன்று, பிரியப்போகும் காதலனை அணையத் துடிக்கும் காதலியைப் போல் ஆதவனைத் தழுவியது. கதிரோனின் செங்கதிர் கறறைகள் முகில் மறைப்பைத் தாண்டி மேலைச் சார்வைச் சாய்ந்து விழுந்தபொழுது அதன் செவ்வண்ணம், எத்தர்களின் உள்ளத்தைக் கண்டு சிரிப்பதைப் போலத் தோன்றியது. கருமுகிலையும் தாண்டி சில ஒளிக் கதிர்கள் நொய்யலாற்றின் மேல் விழுந்து, அதன் மேல் பரப்பைத் தங்கப் பாளமாய் எடுத்துக் காட்டியது. கணுக்கால் அளவு ஆழமே இருந்த தெளிந்த தண்ணீரில் மணற் பரப்பின் மேல் கிடக்கும் கூழாங்கற்கள், சிறு பருக்கைக் கற்கள் எல்லாம் பொன் முலாம் பூசியது போலத் தோற்றமளித்து வண்ண நிறங்களை வாரிக் கொட்டியது.

    நொய்யலாற்றங்கரை ஓரமாக நாணற் புதர்கள் மண்டிக் கிடந்தன. ஆற்றின் கரையோரமாக அமைந்த அந்தப் பாதையில் ஒரு குதிரை விரைந்து சென்று கொண்டிருந்தது. இடக்கு செய்த குதிரையை அடக்க அந்த வாலிபப் பிரயாணி செய்த முயற்சிகளைப் பார்த்தால், அவனுக்கு அவ்வளவாகக் குதிரைப் பயிற்சி போதாது என்பதை அறிய முடிந்தது. அவன் பட்ட சிரமங்கள் முகத்தில் வியர்வைத் துளிகளாய் அரும்பி ஒன்றுபட்டு மாலைக் கதிரோனின் ஒளியால் செம்மையாக்கப்பட்ட முகத்தில் வழிந்தது. அவன் கைவீச்சினால் மக்களின் உயிரைக் குடிக்கும் பணிகளில் ஈடுபடாதவன்; அக்கலைகளில் பயிற்சியும் இல்லாதவன். ஆனால் மக்களின் இதயங்களைக் கவருவதற்கு ஏற்ற திறமையை இயற்கை அன்னையிடமிருந்து தன் கரங்களின் வழியே செயலாற்றப் பரிபூரணமாகப் பெற்றிருக்கிறான் ஆம்! அவன் தான் கைதேர்ந்த சிற்பி அருளப்பரின் மகன் இளஞ் சிற்பியான விக்ரம சிங்கன்!

    அவனுடைய உள்ளம் ஆனந்தக் கடலில் மிதந்து சென்றது. இன்னும் ஒரு காததூரம் சென்றால், கொங்கு நாட்டின் தலைநகரான கருவூரை அடைந்து விடுவான். மாட மாளிகைகளையும், கூட கோபுரங்களையும், அணி மாட, அத்தாணி மண்டபங்களையும் பெற்றிருந்த அந்த நகரைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் என்று சொல்கிறார்களே! அமராவதி காவிரி ஆற்றுடன் இணையும் அழகையும், கொங்கு நாட்டரசர்கள் அமைத்த ஏரிகளைப் பற்றியும் அவன் பலவாறு கேள்விப்பட்டிருக்கிறான். நெற் கதிர்கள், மாலையிளம் தென்றலில் சாய்ந்தாடும் அழகும், பச்சைப் பட்டாடையாக ஆடும் சாய்வும் அவனுக்குக் களிப்பைக் கொடுத்தன. ஆங்காங்கே வயல்களில் வேலை செய்துவிட்டுத் திரும்பும் இளங்காளையர்கள் தங்கள் குடிசைகளை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். எதிரே வரும் அறிமுகமான இளம் கன்னியர்களைக் கண்டவுடன் குறும்புடன் தேனொழுகும் தெம்மாங்கை சிருங்கார ரசம் ததும்பப் பாட ஆரம்பித்தார்கள். இந்தக் காட்சியைக் கண்டவுடன் அவன் சிந்தனை பெண்கள் பக்கமாகச் சென்றது. இந்த அழகுக் கலைக்கு இலக்கணமான பெண்கள் அந்தப் பாடலுக்கு ஏற்றவாறு நடையில் நளினம் ததும்பச் சென்றார்கள். பெண்களைப் பற்றி நினைத்தவுடன் அவன் தாய் கூறிய அறிவுரைகள் நினைவில் வந்து மோதிற்று.

    "விக்ரமா! நீ வாலிப வயதை அடைந்துவிட்ட போதிலும் உலக அனுபவம் அதிகமில்லாதவன். நெடுந் தொலைவு பிரயாணம் வேறு செய்யப் போகிறாய். இடையிலே எத்தனையோ தடங்கல்கள் நேரலாம். இவை அனைத்திலிருந்தும் செங்கோட்டு வேலவன் உன்னைக் காப்பாற்றுவான். உன் மனதை மட்டும் அதிகம் தளர விடாதே அதிலும் பெண்கள் விஷயத்தில் மட்டும் உன் மனம் சலனமே அடையக் கூடாது. உன் மாமன் மகள் தேன்மொழி வயது வந்தவளாக இருப்பாள் இப்பொழுது. உன் மாமன் மனம் நோகாமல் நடந்து கொள். அவர்கள் உன்னைப் பற்றித் தப்பாக எதுவும் நினைக்கக் கூடாது. எதோ தம்பியாக எழுதியதால் உன்னை அனுப்புகிறேன். சோழ நாட்டுப் பெண்கள் அழகிகள். அதிலும் நல்ல கலாரசிகைகள். உன் கைத் திறமையைக் கண்டு மெய் மறக்கக்கூடும்

    சிலர் தங்கள் சிலைகளை வடித்துத் தரும்படிக் கூட கேட்கலாம். கேட்கும் சந்தர்ப்பங்கள் நேரிடலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் அநித்யமான மாதர்களின் சிலைகளை நீ செதுக்கக் கூடாது. இதை நீ மீறினால் எனக்கும் சிற்பத் திலகமான உன் தந்தைக்கும் மகத்தான துரோகம் செய்தவனாவாய். இதைவிட உன் கைகளைத் துண்டிப்பதே மேல்."

    தன் உள்ளத்து உணர்ச்சிகளை வார்த்தைகளாக்கிக் கொட்டியவள், சொற்களின் வேகம் தாங்காமல் ‘ஓ’ வென்று கதறிவிட்டாள். மகனே! தொலை தூரப் பிரயாணம் செய்யப்போகும் உன்னிடம் இப்படிக் கடிந்து பேசியிருக்கக் கூடாது. ஆனால் என ஆணைகள் மட்டும் உன் மனதை விட்டு நீங்காது இருக்கட்டும் என்று கூறி பாசம் பொங்கத் தலையை வருடினாள்.

    "இல்லையம்மா, தாங்கள் தவறாக ஒன்றுமே கூற வில்லை. சிவநேசர் செலவரான அருளப்பரின் மகன் என்பதை மனதில் இருத்திக் கொண்டே பழகுவேன். பெண்களிடம் பழகும் பொழுது பலரும் எப்பேர்ப்பட்ட

    ‘மகளை ஈன்ற தாய்’ என்று உங்களைப் புகழும்படியாக நடந்து கொள்வேன். அருங்குணங்களை உணவுடன் கலந்து ஊட்டிய என் அன்னை இட்ட ஆணையின்படியே நான் நடந்து கொள்வேன் அம்மா! எனக்கு விடை தருகிறீர்களா, நேரமாகிறது" என்று அன்னையிடம் விடை கேட்டு நின்றான் விக்ரமன்.

    உன் உள்ளத்திலிருந்து வரும் கள்ளமில்லாத இந்த வார்த்தைகளே உன்னைப் பற்றி, எனக்கு நம்பிக்கையை அளிக்கிறதடா மகனே... உன் நடத்தையிலும் அதை நீ கடைபிடிப்பாய் என்று நான் நம்புகின்றேன். அவனை மார்போடணைத்து சிகை வருடி முகத்தை ஆர்வத்தோடு உற்று நோக்கி, உச்சி மோந்து தொடர்ந்து கூறினாள் அவள்.

    மகனே, இங்கிருந்து புறப்பட்டுத் திருநணாவை அடைந்தால் அங்கே உன் தந்தையின் நண்பர் செழியன் கூற்றுவனார் நியாயத்தாராக இருக்கிறார். அவரைப் பார்த்து அவருடைய யோசனையின்படி நீ திருபுவனம் போய்ச் சேர். அங்கே உன் மாமன் சொன்னபடி கேட்டு, உன் அத்தை மனம் நோகாதபடிக்கு நீ நடந்து கொள். தேன்மொழிக்கு என் ஆசியைக் கூறு என்றாள்.

    அம்மா, நீயும் என்னுடன் வந்து விட்டால் நல்லது என்று தோன்றுகிறது. பலமுறை கூறி அலுத்த அந்த வார்த்தைகளையே திரும்பவும் ஒருமுறை கூறினான் விக்ரமன்.

    எனக்கு மட்டும் என் பிறந்த நாட்டைப் பார்க்க வேண்டும் போல் இருக்காதா, என்ன? மாமன்னர் உத்தம சோழ மன்னரின் கட்டளையின் பெயரில் தானே இங்கே வந்தோம். அவரின் பெயர் ஞாபகார்த்தமாகத்தானே உத்தம சோழ புரமே ஏற்பட்டது. அதெல்லாம் இப்பொழுது எதற்கு? அங்கு நான் வருவதைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி, தன் கண்களின் பார்வையில் மறையும் மட்டும் நின்று வழியனுப்பி வைத்த வயோதிக அன்னையின் உருவத்தை அவனால் மறக்கவே முடியவில்லை. அதை நினைத்தவுடன் அவன் கண்களில் நீர் நிறைந்து பார்வையை மறைத்தது.

    நன்றாக இருட்டி விட்டது. ஆங்காங்கே தெருவில் விளக்குகள் பளிச்சிட ஆரம்பித்தன. அவற்றின் ஒளி பகலாகவே ஒளிர்ந்தது. ஆதவன் இருள் என்னும் திரையுள் மறைந்த போதிலும், மக்களின் நடமாட்டம் குறையவேயில்லை. ஆங்காங்கே ஒருவித பரபரப்பும், மகிழ்ச்சியின் ரேகையும் கலந்து மக்களின் முகத்தில் குடி கொண்டிருந்தது. யாரைக் கேட்டால் இதன் காரணத்தை அறியலாம் என்று சிந்தித்துக் கொண்டு இருந்த பொழுதே தான் வந்து கொண்டிருந்த இடத்தற்கு எதிரேயே ஒரு பணியாரக் கடை இருப்பதைக் கண்டான். அங்கேயே இறங்கி சாப்படவும் நினைத்தான். அன்றைய பகல் திருப்பாண்டிக் கொடுமுடியில் சாப்பிட்டது. அகோர பசி, உணவை பசியின் வேகத்தில் அவசரமாகத் தின்றவனின் கவனத்தை அருகே பேசிக் கொண்டிருந்த இருவரின் உரையாடல் கவர்ந்தது.

    ஆமாம், மாமன்னர் இங்கு எதற்காக வருகிறாராம்? அவர் முடி சூட்டிக்கொண்ட பின்னர் முதல் தடவையாக இப்பொழுது தானே வருகிறார்?

    ஆமாம், முதல் முறையாக இப்பொழுது தான் வருகிறார். அதுவும் கொடுமுடி ராயர் வீட்டில் தங்கப் போவதில்லையாம். பெருமான் கருவூர் தேவர் அவர்களின் இல்லத்தில் தான் தங்கப் போகிறாராம். அதிலும் ஒரு விசேஷம் என்னவென்றால், இன்னும் நான்கு நாட்கள் எந்தவிதமான பொதுக் காரியங்களிலும், நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளப் போவதில்லையாம்.

    உலக அறிவு சிறிதும் இல்லாத அவன் உள்ளத்தில் பலவகைப்பட்ட உணர்ச்சிகள் தோன்றின. அவன் தங்கப் போவதும் கருவூர் தேவர் அவர்களின் இல்லத்தில்தான் என்பது அவன் நினைவில் முதலில் வந்து நின்றது. அங்கு தங்குவதற்குத்தான் செழியன் கூற்றுவனார் ஓலை ஒன்று கொடுத்தனுப்பியிருக்கிறார். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் மன்னரை, நாடு போற்றும் காவலனை, மக்களின் உள்ளம் கவர்ந்த மகேசனை, அவர் தங்கியுள்ள இடத்திலேயே அவன் காணப் போகிறான். என்னே அவன் பாக்கியம். அவன் அவருடன் பேச முடியுமா? இவ்வாறு சிந்தித்துக் கொண்டே வந்தவனின் சிந்தனைக் குதிரை தடைப்பட்டதற்குக் காரணம் எதிரில் நின்ற மாளிகை தான். ஆம், அது தான் தமிழ் கூறும் நல்லுலகின் நாவரசர் கருவூர் தேவர் அவர்களின் இல்லம்.

    2

    அன்று கரூரானிலையில் கருவூர் தேவர் அவர்கள் இல்லத்தில் விசேடங்கள் நடப்பதற்கான ஏற்பாடுகளை கருவூர் தேவர் அவர்களின் பணியாட்களும் சிஷ்யர்களும் செய்து வந்தனர். வைகாசி மாதத்து மூல நட்சத்திரம் ஆகையால், சைவம் தழைத்தோங்கச் செய்த சைவசமயக் குரவர்களில், நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தரின் ஞானப்பால் உற்சவம் கொண்டாடப் போகிறது. விசேட ஆர்பாட்டம் ஆரவாரங்களைப் பெரிய உடையார் விரும்பவில்லை என்பதினாலும், எல்லா ஏற்பாடுகளிலும் ஓர் அடக்கம் கலந்த அமைதி காணப்பட்டது. விஸ்தாரமான மண்டபத்திலே கிழக்கு மூலையில் ‘பொன்னார் மேனியனின்’ செம்பொன்னாலான சிலை வைக்கப்பட்டிருந்தது. அதன் மேல் சர்வாலங்கார அணிகலன்களான கண்ட, நான், பாச மாலை, அரதன் மோதிரம், திருகைச் சாறை, வயிர உழுத்து - முதலிய மணிகளாலான வகைகளும், திருமுடி, வீரபட்டம், திருக்களாவம், திருமகரம் முதலிய ஆபரணங்களும் அணி விக்கப்பட்டிருந்தன.

    அருகே உள்ள தங்கத் தட்டில் தாம்பூலாதி வகைகளும், முக்கனிகளும், சுண்டக் காய்ச்சி ஏலம், குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் போட்ட ஆவின் பாலும், ஆனை மலைத் தேன் பாகும் வைக்கப்பட்டிருந்தன. மற்றும் பல வெள்ளித் தட்டுகளில் முல்லை, இருவாட்சி, மல்லிகை, செவ்வரளி - இவைகள் தத்தம் பாக்கியத்தை நினைத்து பெருமைப்படுவது போல வண்ணங்களில் கொட்டி குவிந்திருந்தன. அதன் அருகே எளிய தோற்றமுள்ளவனாயினும், அரிய வாய்ப்பை உடையவன் என்பதைத் தெரிவிக்கும் வகையில் பூக்குடலைகளில் வில்வ தளங்கள் பறைசாற்றிக் கொண்டிருந்தன.

    கோயிலின் முதல் ஜாம பூஜை முடிந்து ‘தோடுடைய செவியனின்’ திருவீதி உலா புறப்பட்டு விட்டதென்பதை முரசொலி அறிவித்தது. இரு நாழிகைப் பொழுதிற்கெல்லாம் வாயிற்புரத்தில் கலகலவென்ற பரபரப்பு ஏற்பட்டது. முதலில் கொங்கு நாட்டு நாவரசர், தமிழ் வளர்த்த செம்மல், மறையவர் போற்றும் மாமுனிவர், கருவூர் தேவர் அவர்கள் எதிர் கொண்டழைக்க, சைவம் வளர்க்கும் தண்முகில், திருமுறை போற்றும் செவிலி, நித்ய விநோதர், சிவபாதசேகரர், பெருவுடையார், மேன்மை மிகு குந்தவைப் பிராட்டியாரின் அருமைத் தம்பி, அருண்மொழித் தேவர் வந்து கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் சோழப் பேரரசின் உடன் கூட்டத் தலைவரும், சாமந்த நாயகரும், தற்காலம் வரை உத்தம் சோழ மன்னரின் தென்திசை மாதண்ட நாயகரும், குந்தவைப் பிராட்டியாரின் காதல் கணவருமான வாணர் குல மாவீரர் வல்லவரையர் வந்தியத் தேவர், வந்து கொண்டிருந்தனர்.

    இவர்களுக்குப் பின்னால் ஆலவட்டம், பரிவட்டம், ஆரவாரம், அறிமுகம் எதுவுமின்றி வந்து கொண்டிருந்த ஒருவனைப் பற்றி இங்கே கூறாவிட்டால் வாசக நேயர்கள் நம்மை மன்னிக்கவே மாட்டார்கள். ஆம் அவன் தான் செங்குன்றூர்கருகில் இருக்கும் உத்தம சோழ பிரம்மாதயத்தில் இருந்து முதலிலிருந்தே நாம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நம்முடைய வாலிப சிற்பி விக்ரமன்.

    கொங்கு நாட்டில் சைய மலைக்கருகே தற்காலம் கொள்ளே காலம் என்றழைக்கப்படுகின்ற இடத்தில் நெய்யப்பட்டபட்டு விதானத்தின் மேல் போடப்பட்ட இருக்கைகளின் மேல் பெரிய உடையார் அமர்ந்திருக்க, அவருக்கு வலப்புறத்தில் வல்லவரையரும், இடப்புறத்திலே கருவூரானிலையின் சிற்றரசரான கொடுமுடி ராயர் அமர்ந்திருந்தார். இடது பாதம் தூக்கியாடும் சிவகாமி மணாளனின் சிலையருகே போடப்பட்டிருந்த சற்றே உயர்வான பீடத்தின் மேல் கருவூர் தேவர் அவர்கள் அமர்ந்து சிவபூஜையில் ஈடுபட்டிருந்தார். அவருக்கருகே வெகு விநயத்துடன் விக்ரமன் அமர்ந்து கொண்டிருந்தான். பூஜை முடிந்தபிறகு கருவூர் தேவர் அவர்களின் சிஷ்யன் தேவாரப் பதிகங்கள் சிலவற்றைப் பாடினான். கடைசியாக,

    ‘போகமார்த்தப் பூண் முலையாள் தண்ணோடும் பொன்னகலப்

    பாகமார்த்தப் பைங்கன் வெள்ளேற்றண்ணல் பரமேட்டி

    ஆகமார்த்தத் தோலுடையான் கோவணாடையின் மேல்

    நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே!’

    என்று பாடியவுடன், அங்கு நிலவிய அமைதியான மோன நிலையைக் கிழித்துக்கொண்டு பெருவுடையாரின் குரல் கணீரென்று ஒலிக்கத் தொடங்கியது.

    சிவநேசச் செல்வரே, திருஞான சம்பந்த பெருமான் பாண்டிய நாட்டிலே இருந்த பொழுது, சோழவள நாட்டின் தல மூர்த்தியைப் பாடி, அங்குள்ள திரு ஆலவாயனைப் பாடாமல் வாளாவிருந்தது ஏன் என்பதை விளக்க வேண்டும்.

    ‘சைவ சமய விவாதமா!’ என அங்கு கூடியிருந்தவர்கள் வியப்புற்ற வண்ணம் கேட்பதற்காக நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார்கள்.

    மன்னர் பெரும! சிறியேனுக்குத் தெரிந்த அளவில் கூற முற்படுகிறேன் என்று அவையடக்கத்துடன் கூற ஆரம்பிக்கும் முன் கொடுமுடி ராயர் இடையில் குறுக்கிட்டு, மாமன்னர் மன்னித்தருள வேண்டும். கருவூர் தேவர் அவர்கள் அந்தப் பாடல் வந்த வரலாற்றையும் கூறினால் எம் போன்றோர்களுக்கும் எளிதாயிருக்கும் என்றார்.

    கொடுமுடிராயர் தம்மை மிகவும் சிறுமைப்படுத்திப் பேசிக் கொள்கிறார் என்று நினைக்கிறேன் என்றார் மன்னர்.

    ஆதவன் இருக்கும் பொழுது நிலவு பகலைப் போல ஒளியைச் சிந்தினாலும் அது பிரகாசிக்காது அல்லவா, மன்னா?

    ஆயினும் நிலவின் அழகைத்தானே எல்லோரும் பார்க்க முடிகிறது? கவிகளும் புகழ்கின்றனர்; காதலர்கள் கண்டு களிக்கின்றனர். ஆனால் ஆதவனைப் பார்க்க முடிவதில்லை. அதன் கொடுமையைப் பற்றியே பேசுகிறார்கள்.

    மன்னிக்க வேண்டும் மாமன்னா! ஞானிகளும், மகரிஷி போன்றவர்களும், அறிவாளிகளும் ஆதவனைத் தான் வணங்கி ஏற்றுகிறார்கள். இன்னும் வணங்குகிறார்கள். போற்றித் துதி பாடுகிறார்கள். வெறும் உணர்ச்சி வசப்பட்டு புகழப்படுவதைவிட அறிவின் தெளிவில் போற்றப்படுவது சாலச் சிறந்தது அல்லவா? அதுவுமின்றி வஞ்சகர்களும், தீயோரும், ஏன் விஷ ஜந்துக்களும் கூட பயப்படுவது ஆதவனைக் கண்டு தானே? மற்றும் சந்திரனின் ஒளிகூட ஆதவனிடமிருந்து பெறுவது தானே? அப்படியிருக்க ஆதவனைக் கொடுமையாகக் கூறவே முடியாது. ஆதவனால் உயிரினங்கள், தாவர இனங்கள் பயனடைவது போல, மாமன்னரால் இந்த உலகமே பெருமை அடைகிறது என்றான் விக்ரமன்...

    அடிகளே, இவ்வளவு அழகாக உண்மைகளை உவமானத்துடன் கூறும் இந்த வாலிபன் யார்? நம்முடனேயே இருக்கிறான். ஒருவேளை உங்கள் சிஷ்யர்களில் ஒருவனோ?

    இவன் என் சிஷ்யன் அல்ல. இந்த வாலிபன் பெயர் விக்ரம சிங்கன். கொடி மாடச் செங்குன்றூரர்க்கருகில் இருக்கும் உத்தம சோழ புரத்திலிருந்து வந்திருக்கிறான். உத்தம் சோழ புரத்தைக் கற்றளியாக்கச் செய்ய மாமன்னரின் சிறிய தகப்பனார் அனுப்பிய சிற்பி அருளப்பரின் மகன். திருநணாவில் இருக்கும் நம்முடைய நியாயத்தார் செழியன் கூற்றுவனார் இங்கே தங்கிப் போகும்படிச் சொல்லியிருக்கிறார்.

    ஓகோ, சிற்பி அருளப்பரின் மகனா நீ? இப்பொழுது உன் மாமன் திருபுவனம் சிற்ப மாராயர் மருதவாணர் அவர்களின் வீட்டிற்குத்தானே செல்கிறாய்? என்று கேட்டார் வல்லவரையர்.

    உடனே மாமன்னர் பக்கம் திரும்பி, மன்னவா. தஞ்சை தனிக் குளத்தார் ஆலயத்தை இந்த உலகமே கண்டும் கேட்டும் இராத வகையில் மாபெரும் கற்றளியாக்க வேண்டுமென்ற தங்களின் மகோன்னதமான எண்ணத்தை நிறைவேற்றுவதற்கு நாடெங்கிலிருந்தும் சிற்பிகளை அழைத்து வரச் சொல்லி இருக்கிறேன்.

    வல்லவரையரே மிகவும் நன்று அந்தப் பணியை நிறைவேற்ற வேண்டும் என்று எனது சிறிய தகப்பனார் மதுராந்தக உத்தம சோழர் எவ்வளவோ ஆசைப்பட்டார். அவர் மட்டும் இப்பொழுது இருந்தால்....! அவர் குரல் தழுதழுத்து கம்மியது. அவர் மனதை மாற்ற விரும்பிய வல்லவரையர்.

    மன்னா எங்கோ ஆரம்பித்து எங்கோ பேசிக் கொண்டே இருந்து விட்டோம். அடிகளார் காத்துக் கொண்டு இருக்கிறார்.

    ஆம்... மன்னிக்க வேண்டும் அடிகளே! இப்பொழுது அந்தப் பாடல் வரலாற்றைத் தாங்கள் கூற வேண்டும்.

    தொண்டையைக் கனைத்துக் கொண்டு கருவூர் தேவர் சொல்ல ஆரம்பித்தார். "மகான்களும், யோகிகளும் வாழ்ந்து வந்த இந்தப் புண்ணிய பூமியில் தான் போதிசத்வரும், மஹாவீர வர்த்தமானரும் அவதரித்தார்கள். புராதனமான இந்து மதத்தின் அஹிம்சா முறையைப் பற்றியும், பற்றற்ற வாழ்க்கை நடத்த வேண்டும் என்று உபதேசித்த அந்த மகான்களின் சிஷ்யர்கள், அவைகளை தங்கள் மதகுருமார்கள் கண்டும், கேட்டும் இராத அளவுக்கு கொண்டு போய் விட்டார்கள். இந்து சமயத்தின் சில அஞ்ஞானமான பழக்க வழக்கங்களை எதிர்த்த அந்த ஆச்சார்யர்களின் பக்த கோடிகள், இந்து சமயத்தையே எதிர்த்து வேறு சமயங்களையே உண்டாக்கி விட்டார்கள். ஆனால் உத்திரபாரதத்தில் இந்த மதங்கள் நாளடைவில் நலியத் தொடங்கி விட்டன.

    நம் பாரதத்திற்கு வடக்கேயிருந்து பல மூர்க்க சாதியினர் படையெடுத்து வந்ததால் இவர்கள் தெற்கு திசையை நோக்கித் திரும்ப வேண்டியதாயிற்று. இவ்வாறு நம் தமிழ் நாட்டை நோக்கி வந்த அவர்களுக்குக் காஞ்சியும், மதுரையும் இடம் கொடுத்தது. எங்கு பார்த்தாலும் ரோமம் நீக்கிய தலையும், பாயை படுக்கையாகவும், ஓரளவே கடலை மறைக்கும் துணிகளுடன் மக்கள் வாழத் தலைபட்டார்கள்.

    ஆனால் நம் சோழ வளநாடு மட்டும் என்றுமே அருகதத்திற்கோ, சாக்கிய மதத்திற்கோ இடம் கொடுத்ததில்லை. இப்படிப்பட்ட மரபிலிருந்து உதித்தவர் தான் பாண்டிய மாதேவியான மங்கையர்க்கரசியார். தமிழ்த் திருநாடு முழுவதும் பரவி எங்கே சைவ சமயத்திற்கே கேடு வந்து விடுமோ என்று பல்லவேந்திரன், மகேந்திரப் பல்லவனை நல்வழிப்படுத்திய நாவுக்கரசரும் புகழ்ந்து பின் தொடரும் ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தரைப் பற்றிக் கேள்விப்பட்டார்.

    வேதாரண்யத்தில் ஓர் பதிகம் ‘இரக்க மொன்றிலீர்’ என்று பாடிய பிறகே அபிமுகத் திருவாயில் திறக்க அது அடைக்கப்பட வேண்டி திருஞான சம்பந்த மூர்த்தி ‘சதுரம் மறை’ என்ற முதல் திருப்பாட்டு பாடிய உடனேயே வாயில் மூடிக் கொண்டதை பாண்டிமா தேவி மங்கையர்க்கரசி கேள்வியுற்றாள். உடனே அவருக்குச் சொல்லி அனுப்பி சைவம் தழைத்தோங்க, சங்கம் வளர்த்த மதுரை பங்கம் அடையாதிருக்க வேண்டி ஆளுடைப் பிள்ளையார் திருவாலவாய்க்கு வரவேண்டும் எனறிறைஞ்ச அவ்வாறே ஆளுடைப் பிள்ளையார் திருவாலவாய்க்கு எழுந்தருளினார்.

    அருகதர்களின் தூண்டுதலினால் பாண்டிய மன்னன் திருமடத்திலே அக்கினி பற்றும்படிச் செய்தான். ஆனால் ‘பாலனா வாயரோ செய்யனே திருவாலவாய்’ என்னும் திருப்பதிகத்திலே ‘அமணர் கொளுவுஞ் சுடர் பையவே சென்று பாண்டியர்க்காகவே’ என்று பாடியதும் பாண்டியன் வெப்பு நோயினால் பீடிக்கப்பட்டான். மறுநாள் பாண்டியனுடைய தவற்றை எடுத்துரைத்து பாண்டிமா தேவியும், மந்திரிகுலச் சிறை நாயனாரும் இறைஞ்ச திருஞான சம்பந்தப் பெருமான் மந்திரமாவது நீறு" என்னும் திருப்பதிகத்தைப் பாடியருளினார்.

    அதனால் பாண்டியன் வெப்பு நோய் நீங்கின போதிலும் சமணர்கள் சைவத்தின் மேன்மையை ஏற்றுக் கொள்ளவேயில்லை. அதனால் இரு சமயத்தாரும் தங்கள் தங்கள் சமய உண்மையையே ஏட்டில் எழுதி அக்னியில் இடவேண்டும் என்று எரியாமல் இருக்கும் சமய உண்மையே சாலச் சிறந்தது என்றும் விரும்பினார்கள். பிறகு ஆளுடைப் பிள்ளையார் ‘தாம் சிவமே சத்தியம்’ எனக் கூறிப் புனைந்த பதிகங்களின் ஏடுகளை அடுக்கி, அவற்றுள் இறைவன் பெயரைச் சொல்லி ஏடு ஒன்றை எடுக்க, அது திருநள்ளாற்றில் பாடிய ‘போக மார்த்தப் பூண் முலையாள்’ என்ற இப்பாடலாக அமைந்தது.

    உமா தேவியாரின் இரு ஸ்தனங்களும், பரம், அபரம் என்ற ஞானஸ்தானத்தைக் காட்டுவதாலும், அந்த லோக மாதாவையே தன்னுள் கொண்டவரான பரமேஸ்வரனைக் குறிப்பதாலும், மேலும் அக்னியில் கருகாமல் பிரகாசித்தது. சமணரின் ஏடோ சாம்பலாயிற்று. மற்றும் மொருமுறை சோதித்துப் பார்க்கவே வேண்டுமென சமணர்கள் விரும்ப, எத்தனை தடவைக்கும் தாம் தயார் என ஆளுடைப் பிள்ளையார் சம்மதத்தைத் தெரிவித்ததின் பேரில், கடலை நோக்கிப் பிரவாகிக்கும் வைகை நதியில் எந்த சமயத்தின் உண்மையை விளக்கும் ஏடு, எதிர்நோக்கிச் செல்கிறதோ, அச்சமயமே சிறந்ததென முடிவாயிற்று. அருகதர்கள் அத்தி நாத்தி என்ற தமது உண்மை எழுதிய ஏட்டை நதியில் போட அது ஆற்றின் வேகத்தைவிட அதிவேகமாகக் கடலை நோக்கி ஒட ஆரம்பித்தது.

    ஆனால் திருஞான சம்பந்தர் ‘வாழ்க அந்தணர்’ என்ற பதிகத்தைப் பாடி அதை ஏட்டில் எழுதி வைகை நதியில் விட, அத்திரு ஏடு நதியை எதிர்த்து நீரை கிழித்துக் கொண்டு ஓடிற்று. அத்திருப் பதிகத்திலே வேந்தனும் ஓங்குக என்றவுடன் பாண்டியனுடைய கூனும் நிமிர்ந்தது’, என்று சொல்லி முடித்தார். தொடர்ந்து.

    மன்னா, அன்றும் பாண்டிய நாட்டைக் காக்க ஒரு சோழ நாட்டுப் பெருமகன் தேவையாயிருந்தது இன்றும் பாண்டிய நாடு அவ்வாறே தங்களை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறது என்றார்.

    ஆனால் இன்றைக்கும் திருஞான சம்பந்தர் இருந்திருந்தால் வைகைக் கரை பரீட்சை நடத்தியே இருக்க முடியாது என்றான் விக்ரமன்.

    ஏன் தம்பி அப்படிச் சொல்லுகிறாய்?

    ஆமாம், குடிக்கவே தண்ணீர் இல்லாத வைகை நதியில் எப்படி ஏடு இட முடியும்? என்றான் வக்ரமன்.

    கடகடவென நகைத்த மாமன்னர், வந்தியத் தேவரே இந்தப் பிள்ளை புத்திசாலியாய் காணப்படுகிறான். இவனும் நம்முடன் இருக்கட்டும் என்று கூறினார்.

    நானும் அதைத்தான் சொல்ல இருந்தேன். எப்பொழுதும் புன்னகை தவழும் தங்கள் வதனம் அரச பதவி ஏற்றதில் இருந்து கலகல வென்று சிரித்தே, பார்த்ததில்லை. இன்றுதான் அந்தப் பாக்கியம் கிடைத்தது என்று கூறிய வல்லவரையர் விக்ரமனின் கையைப் பிடித்துக் கொண்டார். அப்பொழுது அங்கு இருந்த ஒரு காளாமுக சைவனின் முகத்தை உற்றுப் பார்த்தார். பிறகு சற்றே ஒதுக்குப்புறமாக இருந்த இடத்தை நோக்கிச் சென்றார். அந்தக் காளாமுகனும் அவரைப் பின் தொடர்ந்து சென்றான். வந்தியத் தேவர் பிடித்திருந்த கையை விடாமல் இருந்தபடியால் விக்ரமனும் வந்தியத் தேவகுடன் செல்ல வேண்டியதாயிற்று.

    3

    விக்ரமனுக்குத் தான் இருப்பது மண்ணுலகில் தானா அல்லது தேவர்கள் நடுவில் இருக்கிறோமா என்ற ஐயம் ஏற்பட்டது. அதுவும் மாமன்னர் சொன்னதைக் கேட்டபொழுது அவனுக்கு நிலைகொள்ளவேயில்லை, கருவூரில் யானைகள் இருக்கின்றன வென்றும், அவைகள் பலவகை வேடிக்கைகள் செய்து காட்டுவதற்குப் பழக்கப்

    Enjoying the preview?
    Page 1 of 1