Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maravarman Kaadhali
Maravarman Kaadhali
Maravarman Kaadhali
Ebook371 pages3 hours

Maravarman Kaadhali

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சரித்திரப் பேராசிரியர் திரு சாண்டில்யன் அவர்கள் ஒரு நாள் என்னை அழைத்தார்கள். 'உடனே ஒரு சரித்திரக் கதைக்கான கதைச் சுருக்கம் வேண்டும், பிரபல வாரப் பதிப்பினர், உங்கள் தொடர்கதையை வெளியிட விரும்புகிறார்கள்' என்றார். அவரது அன்புக் கட்டளையைச் சிரமேற்கொண்டு உடனே தலைப்பையும் கொடுத்து, முதலிதழுக்கான அத்தியாயத்தையும் எழுதிக் கொடுத்தேன். பிறகு வாரா வாரம் வளர்ந்தவள்தான், 'மாறவர்மன் காதலி.'

'வீரபாண்டியனால் சோழ அரசகுமாரர்களுள் ஒருவன் கொல்லப்பட்டான்' என்ற சரித்திரச் சான்றின் சிறு துரும்பு ஒன்றைப் பற்றிக்கொண்டு மாறவர்மன் காதலியை எழுதத் தொடங்கினேன்.

சோழர்கள் பாண்டிய நாட்டை அடிமைப்படுத்தியிருந்த காலம். அடிமைத் தளையிலிருந்து சுதந்திர வேட்கை உடையவர்கள் கிளர்ந்து எழுவது இயற்கைதானே. நாட்டின் விடுதலைக்காகத் தங்களைத் தியாகம் செய்து கொள்ள முன் வந்த நால்வரின் சாகசங்களைக் கற்பனை வண்ணத்தால் தீட்டி எழுதப்பட்ட ஓவியமே மாறவர்மன் காதலி.

சரித்திரத் தொடர்கதை ‘மாறவர்மன் காதலி' முற்போக்குக் கருத்தினைக் கொண்ட இதல், நாட்டு விடுதலையை உயிரெனக் கருதிய கதாபாத்திரங்களைக் கொண்ட கதை ஒன்று வெளி வந்தது மிகச்சிறந்ததே!

- விக்கிரமன்

Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580103205310
Maravarman Kaadhali

Read more from Vikiraman

Related to Maravarman Kaadhali

Related ebooks

Related categories

Reviews for Maravarman Kaadhali

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maravarman Kaadhali - Vikiraman

    http://www.pustaka.co.in

    மாறவர்மன் காதலி

    Maravarman Kaadhali

    Author:

    விக்கிரமன்

    Vikiraman

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vikiraman-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. எங்களுக்கு நீந்தத் தெரியாது

    2. முதல் பலி

    3. அரசியின் பதக்கம்

    4. மறுபிறவி

    5. போகாதீர்கள், போகாதீர்கள்!

    6. அரசியின் ஆபரணங்கள்

    7. யாதும் ஊரே!

    8. திகிரி போல் சுழன்றது

    9. பொற்றகடு!

    10. என் மீது விருப்பமில்லையா?

    11. குமுதம் குமுறினாள்

    12. பிள்ளையா, மாப்பிள்ளையா?

    13. அரச மருத்துவர்

    14. விடிவதற்குள் ஒரு முடிவு

    15. சிரிப்பும் சிந்தனையும்

    16. சிவ சிவ

    17. சந்திரஹாம்

    18. பாண்டியன் தந்த பரிசு

    19. மாயமில்லை மந்திரமில்லை

    20. எப்படித்தான் நம்புவதோ?

    21. அதிர்ஷ்ட தளபதி

    22. மதியும் தோளும்

    23. இருவருக்கும் பரிசு!

    24. அடிகளாரை எப்படி நம்புவது?

    25. பெருமையும் பொறாமையும்

    26. கூடாது. திருமணம் கூடாது!

    27. மோதிரத்தைப் பறித்துவிடு!

    28. அவன் என் மகன்

    29. வெற்றி உறுதி

    30. 'யார் உங்களுடைய காதலி?'

    31. அவன் காதலித்த பெண்

    முன்னுரை

    சரித்திரப் பேராசிரியர் திரு சாண்டில்யன் அவர்கள் ஒரு நாள் என்னை அழைத்தார்கள். 'உடனே ஒரு சரித்திரக் கதைக்கான கதைச் சுருக்கம் வேண்டும், பிரபல வாரப் பதிப்பினர், உங்கள் தொடர்கதையை வெளியிட விரும்புகிறார்கள்' என்றார். அவரது அன்புக் கட்டளையைச் சிரமேற்கொண்டு உடனே தலைப்பையும் கொடுத்து, முதலிதழுக்கான அத்தியாயத்தையும் எழுதிக் கொடுத்தேன். பிறகு வாரா வாரம் வளர்ந்தவள்தான், 'மாறவர்மன் காதலி.'

    'வீரபாண்டியனால் சோழ அரசகுமாரர்களுள் ஒருவன் கொல்லப்பட்டான்' என்ற சரித்திரச் சான்றின் சிறு துரும்பு ஒன்றைப் பற்றிக்கொண்டு மாறவர்மன் காதலியை எழுதத் தொடங்கினேன்.

    சோழர்கள் பாண்டிய நாட்டை அடிமைப்படுத்தியிருந்த காலம். அடிமைத் தளையிலிருந்து சுதந்திர வேட்கை உடையவர்கள் கிளர்ந்து எழுவது இயற்கைதானே. நாட்டின் விடுதலைக்காகத் தங்களைத் தியாகம் செய்து கொள்ள முன் வந்த நால்வரின் சாகசங்களைக் கற்பனை வண்ணத்தால் தீட்டி எழுதப்பட்ட ஓவியமே மாறவர்மன் காதலி.

    சரித்திரத் தொடர்கதை ‘மாறவர்மன் காதலி' முற்போக்குக் கருத்தினைக் கொண்ட இதல், நாட்டு விடுதலையை உயிரெனக் கருதிய கதாபாத்திரங்களைக் கொண்ட கதை ஒன்று வெளி வந்தது மிகச்சிறந்ததே!

    இந்தச் சரித்திரக் கதை எழுதக் காரணமாயிருந்த பேராசிரியர் திரு. ‘சாண்டில்யன்' அவர்கள் என்பால் கொண்டுள்ள அன்பை என்றுமே மறக்க முடியாது.

    விக்கிரமன்

    சென்னை.

    *****

    1. எங்களுக்கு நீந்தத் தெரியாது

    முருகபிரான் மயில் வாகனத்தின் மீதமர்ந்து வருவது போல் கீழ் வானில் செவ்வட்டக் கதிரவன் மெல்ல மெல்ல எழுந்து கொண்டிருந்தான். நீலவானம் செம்பொன் நிறங்கொண்டது. குங்குமச் சிவப்பும் இடையிடையே புலப்பட்டது. கருநீல நிறக் கடலில் தங்கச் சரிகைகள் கோத்தது போன்று செம்பொன் வண்ணம் படரத் தொடங்கியது.

    அதோ, அதோ... என்று படகிலிருந்தவர்களுள் சற்று வயது முதிர்ந்த காங்கேயன் ஏதோ காணாததைக் கண்டு விட்டது போல் கூவினார். படகு மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.

    எங்கே, எங்கே? கரை தெரிகிறதா? என்று இளைஞன் மாறவர்மன், பரபரப்புடன் கேட்டான்.

    மாறன் மேற்குத் திசையையே இரவு முழுவதும் கரையைக் காண்பதற்காக நோக்கிக் கொண்டிருந்தான். இப்போது கண்களை மேலும் கசக்கிக்கொண்டு உற்று நோக்கினான். படகு மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.

    கரைத் தேற விரும்புபவர்களுக்குக் கையில் நெடு வேலுடன் காட்சி தரும் முருகபிரானை, செந்திலம்பதி வாழ் தேவயானைக் கணவனைத்தான் நான் சொல்கிறேன். அதோ பாருங்கள், கிழக்கே வானக் கோடியில், கடலினின்று வட்டச் சூரியன் எழுவது நீலமயில் மீது முருகன் அமர்ந்து வருவது போலிருக்கிறது. நான் சொல்லவில்லை சிறையிலிருந்து தேவர்களை மீட்ட நக்கீரன் சொல்கிறார்.

    "உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு

    பலர்புகழ் ஞாயிறு கண்டாங்கு..."

    என்று இனிய குரலுடன் துதிபாடத் தொடங்கிவிட்டார்.

    அந்தப் படகு மெல்ல மெல்லக் கடலில் வந்துகொண்டிருந்தது.

    அலைகள் குறைந்து நீர்த்தேக்கம் போல அலைகாற்று இருக்கும் அந்த இடத்தில் துடுப்புப் போடுவதைப் படகோட்டி நிறுத்தி விட்டான்.

    ஹும்... என்று அழுத்தமாகக் குரல் கொடுத்த படகோட்டி, ஒவ்வொருவராகப் படகிலிருந்து குதியுங்கள் என்று கட்டளையிட்டான்.

    ***

    பாண்டிய நாட்டுத் தொண்டித் துறைமுகத்திலிருந்து அந்தப் படகை நான்கு பேரும் வாடகைக்குப் பேசிக் கொண்டு புறப்பட்டார்கள். காங்கேயன் என்ற அந்த முதியவர், மாறவர்மன் என்ற இளைஞன் இருவரையும் தவிர இரண்டு பேர் அந்தப் படகில் இருந்தனர். அதிகத் தொலைவு பயணஞ் செய்யும் திட்டத்தில் அவர்கள் வரவில்லை. காவிரிப்பூம்பட்டினம் அருகே கரையிறங்குவது அவர்கள் எண்ணம். ஆனால் எதிர்க்காற்றை எதிர்த்து மிகவும் கஷ்டப்பட்டே படகோட்டி துடுப்பைப் போட்டான். முதல் நாள் இரவு, பகல் என்று கடலில் படகு சென்றுகொண்டிருந்தது. பொழுது புலரும் வேளையில் படகோட்டி அங்கே படகை நிறுத்திவிட்டான். அது எந்த இடம் என்று யாருக்கும் தெரியாது.

    இங்கேயா இறங்கச் சொல்கிறாய்? நடுக்கடலிலா? என்று படகிலிருந்த பராக்கிரமப் பெருமாள் தன் சந்தேகத்தைத் தெரிவித்தான்.

    இங்கே இறங்கச் சொல்லவில்லை. குதிக்கச் சொல்கிறேன் என்று கூறிய படகோட்டியைக் குறுக்கிட்ட, படகோட்டியின் உதவியாள், நான்தான் சொன்னேனே நடுக்கடலிலேயே இறக்கி விட்டிருக்க வேண்டும். போனால் போகிறதென்று இவ்வளவு தூரம் கொண்டு வந்தோமே, அதற்கு நன்றி சொல்லக்கூடத் தோன்றவில்லை இவர்களுக்கு என்றான்.

    பராக்கிரமப் பெருமாள் தோளில் சாய்ந்து தூங்கி வழிந்து கொண்டிருந்த செங்குமுதம் திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள். கண்களில் தூக்கக் கலக்கம் நிறைந்திருந்தாலும், புலரும் புதிய பொழுது புதுத் தெம்பை அவளிடம் ஊட்டிவிட்டது.

    கரை தெரிகிறதா? என்று அவள் சோம்பல் நீக்க இரு கைகளையும் உயரே தூக்கி நடன பாவத்தில் உடலை ஒரு முறை பாதித் திருப்பி நெளியவும், ஏற்கெனவே தூக்கத்தின் போது கடல் காற்றின் சதியாலும், படகின் ஆட்டத்தாலும் தட்டிக் கேட்க ஆளில்லாததால் தமது கடமையை மறந்திருந்த மேலாடை மேலும் சரியவும் அருகே இருந்த பராக்கிரமப் பெருமாள் விழிகளில் கோபத்தணலை உமிழ்ந்து, ஹும்... கவனி... நேற்று முன்தினம் தலைவர் சொன்னதையெல்லாம் மறந்துவிட்டாயா? என்று கடிந்து கொண்டான்.

    தன் விழிகளுக்குச் சிறிது நேரம் கிடைத்த அரிய விருந்தைத் தடுத்து மாற்றும் பெருமாள் மீது மாறவர்மனுக்குச் சற்றுக் கோபம்தான். நேற்று முன்தினம் படகில் ஏறியதிலிருந்து பெருமாள் அருகேயே நெருங்கி அவள் அமர்ந்திருப்பது தனக்கு ஒருபெரும் இழப்பு என்று திகைத்து பெருமூச்சுவிட்டவாறிருந்தான் அவன். படகு ஒருபுறம் சாயும்போது, ஆடும் போது எல்லாம் குமுதம், பெருமாள் தோள்களை பலமாகப் பிடித்துக் கொள்வதைப் பார்க்கும் போது பெருமாள் இருக்குமிடத்தில் தானிருந்திருக்கக் கூடாதா என்று தோன்றும். ஆனால் எதிரே இருந்து ரசிக்கும் ஒரு வாய்ப்பாவது கிடைத்திருக்கிறதே என்ற திருப்தியில் ஒரு பகலைக் கழித்தான். பிறகு இருள்; சரியான அமாவாசை இருள். கடந்த முப்பது நாழிகையாக குமுதத்தின் குளிர் முகத்தைக் காண முடியாது செய்த இருளை நொந்து கொண்ட அவனுக்கு, அந்த இளங்காலை வெளிச்சத்தில் மின்னலெனத் தோன்றிய செங்குமுத அழகை பெருமாள் ரசிக்க முடியாமல் தடுக்கிறாரே என்று கோபம் வராமலிருக்குமா?

    குமுதம், மாறவர்மனைப் பார்த்து மெல்ல நகைத்தாள். பரபரப்புடன் அவள் கரங்கள் இயங்கின. இடுக்கண்களையும் நண்பரைப் போல் கரங்கள் ஆடையைச் சரி செய்தன.

    படகோட்டி மீண்டும் குரல் கொடுத்தான். உடனே குதியுங்கள். ஐயன்மீர். நன்றாக வெளிச்சம் வந்த பிறகு நீங்கள் படகிலிருந்து குதிப்பதை யாராவது பார்த்துவிட்டால்? பெரியவர் பாடவும் ஆரம்பித்துவிட்டார் என்று படகோட்டி கடுமையாக எச்சரித்தான்.

    கோல் தள்ளும் உதவியாள் பேசாமல் கைகட்டி நின்று கொண்டிருந்தான். படகு அசைந்து கொண்டிருந்தது. மெல்ல ஆடிக்கொண்டிருந்தது. அலை அதிகமற்ற அந்த இடத்தில் சிறு சிறு அலைகள் மட்டும் படகின் பக்கங்களில் மோதுவதால் 'சளக் சளக்' என்ற சப்தம் எழுந்து கொண்டிருந்தது. குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது.

    வைகறை வேளைக்கு முன்பே வைகை ஆற்றில் நீராடிப் பழக்கப்பட்ட காங்கேயனுக்கு அப்போதே கடலில் குதித்துவிட வேண்டும் என்ற ஆவல்.

    பராக்கிராமப் பெருமாள் - பெயருக்கு ஏற்ப பலசாலிதான். உலைக்கூடத்தில் சம்மட்டி எடுத்து அடித்துக் கைகள் காய்ச்சி இருந்தன. கரங்களில் எஃகின் வலிமை இருந்தது. இருபாறையை வைத்தாற் போன்ற மார்புகள், விரிந்து பரந்த தோள்கள்; அடர்ந்த தலைமயிரை மறைக்கும் முண்டாசு. முறுக்கிய மீசை - தோற்றமே பெயருக்கு மேலும் உயர்வை ஏற்றும். ஆனால் அவனுக்குத் தண்ணீர் என்றால் சற்று வெறுப்புத்தான். ஒரு நாளைக்கு ஆயிரம் முறை அரும்பும் வியர்வையே அவன் நீராடும் நதி.

    மாறவர்மன், அது போன்ற இருள் பிரியும் வேளைகளில் போர்வைக்குள் புகுந்து கொண்டு சுக நித்திரையில் ஆழ்ந்திருப்பான். நித்திரைக்கன்னி அப்போதுதான் அவனை அன்புடன் கன்னத்தை வருடுவாள். வயதான தாய் பல முறை குரல் கொடுத்த பிறகே அவன் துயிலெழுவான். அவன் செய்ய வேண்டிய வேலை என்று எதுவுமில்லை. அவனுடைய வீட்டிற்கு அருகே வசிக்கும் வல்லபன் இளைஞர்களுக்கு வேல் எறிதல், வாள் வீசுதல், சிலம்பம் சுழற்றல் ஆகியவற்றைக் கற்றுக் கொடுப்பார். மாறவர்மனை அவருக்குப் பிடித்திருந்தது. அவனுடைய சுறுசுறுப்பும் துடிப்பான பேச்சும் அவனுக்கு வருங்காலம் உண்டு என்பதை அவருக்கு உணர்த்தியிருக்க வேண்டும். போர்ப் பயிற்சிகள் பல பெற்றிருந்த அவன் நீந்தக் கற்றுக் கொள்ளவில்லை.

    இப்போது கடலில் குதிக்குமாறு படகோட்டி சொல்கிறார். மற்றவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்களே தவிர, படகோட்டியை அதட்டிக் கேட்க அவர்களுக்குத் தோன்றவில்லையே. அவன் குமுதத்தை ஒரு தடவை பார்த்தான். அவள் என்ன செய்யப் போகிறாள்? அவளுக்கு நீந்தத் தெரியுமா? ஒரு பெண்ணை இப்படி நடுக்கடலில் திண்டாட விடலாமா?

    காங்கேயன் பாடுவதை நிறுத்தி விட்டார். அவருக்கு நீந்தத் தெரியும். ஆனால், இப்படி நடுக்கடலில் இந்தப் படகோட்டி நிறுத்தி, 'இங்கேயே இறங்கு என்கிறாரே, என்ன நியாயம். பாண்டிய நாட்டைச் சேர்ந்தவன்தானே; இவர்களைப் போன்ற உழைப்பாளிகளின் அடிமை நிலை நீங்கத்தானே நாம் பயணம் மேற்கொண்டிருக்கிறோம். நாம் கொண்டிருக்கும் பயணம் மிக முக்கியமானது - மகத்தானது என்பது படகோட்டிக்குத் தெரியாதா?' என்று அவர் நினைத்தார்.

    என்ன ஐயா, இப்படி எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்? என்று படகோட்டி மீண்டும் கேட்டான்.

    இப்படியே உட்காராமல் எழுந்து நிற்பதால் ஒன்றும் பலனில்லையே; அதனால் தான் உட்கார்ந்திருக்கிறோம் என்றான் மாறவர்மன்.

    அவனது சொற்களில் நகைச்சுவை இருந்ததோ என்னவோ குமுதம் 'கொல்'லென்று சிரித்தாள். காலை வேளையில் அவள் நகைத்தது மல்லிகைக் கொடியில் குப்பென்று மெல்லரும்புகள் பூத்துவிட்டன போல் தோன்றியது.

    குமுதா! தலைவர் என்ன சொல்லியிருக்கிறார்? என்று பெருமாள் குரலில் கடுமை மிகக் கேட்டான்.

    என்ன சொல்லியிருக்கிறார்? வில்போன்ற புருவம் மேலும் வளைந்தது.

    இப்படிச் சிரிக்கக் கூடாது என்று அவர் சொல்லவில்லையா? உனக்குக் கூறப்பட்ட உறுதிகளுள் அதுவும் ஒன்றில்லையா? பெருமாள் குரலில் கடுமையும், அடக்கும் சுபாவமும் இருந்தன.

    இப்படி நடுக்கடலில் படகோட்டி இறக்கிவிடுவார் என்று சொல்லவில்லையே என்று குமுதம் மீண்டும் மெல்ல நகைத்தவாறு சொன்னாள்.

    ஆமாம்; ஆமாம். நடுக்கடலில் எப்படி இறங்குவதாம்? என்று மாறன் குமுதாவின் முகத்தைப் பார்த்தபடியே கேட்டான்.

    காங்கேயன் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். அப்பா, பெருமாள்! உன்னிடம் தலைவர் சில செய்திகளைக் கூறியிருக்கிறார். என்னிடம் சில செய்திகளை கூறியிருக்கிறார். சோழ நாட்டில் இறங்கியவுடன் நாமெல்லாம் தனித்தனியே பிரிந்து போய்விடப் போகிறோம். அப்படியிருக்கும் போது தலைவரின் கட்டளையை அவரவர்கள் கடைப்பிடித்தால் நமது இலட்சியம் வெற்றியடையும். இல்லாவிடில் நாமெல்லோரும் சோழ நாட்டிலேயே சமாதி ஆகி ஊர் பேர் தெரியாமல் போய்விட வேண்டியதுதான். அதனால் தலைவர் நம் ஒவ்வொருவரிடமும் சொல்லியிருப்பது என்ன என்பதை இப்போது விவாதிக்காமல் மேலே நடக்க வேண்டியதை யோசிப்போம் என்று நீண்ட சொற்பொழிவாற்றினார்.

    மேலே நடக்க வேண்டியது என்ன - கீழே கடலில் குதிக்க வேண்டியதைப் பற்றி யோசிப்போம் என்று மாறன் கூறவும் மீண்டும் குமுதம் நகைத்தாள்.

    மாறவர்மன் மிக நன்றாகப் பேசுகிறாரே! என்று பாராட்டுதலும் வழங்கினாள்.

    அப்பாடி! என் வாழ்நாளிலேயே என்னைப் பாராட்டிய குரலை இப்போதுதான் கேட்டேன் என்று மாறன், அவள் விழிகளை நோக்கியவாறு கூறவும், பெருமாளுக்குக் கோபங் கோபமாக வந்தது.

    குமுதத்திடம் அதிக அக்கறை கொண்டவன் பெருமாள். மற்ற இருவரையும் விட பெருமாள்தான் குமுதத்தைப் பற்றி நன்கு அறிந்தவன்.

    குமுதம் ஓர் அனாதை. அவளுடைய சிறு வயதிலேயே தாய் இறந்துவிட்டாள். சமீபத்தில்தான் போர்க்களத்தில் அவளுடைய தந்தையும் இறந்துவிட்டார். தந்தை இறந்ததற்குக் காரணமான சோழர்கள் மீது அவளுக்கு வெஞ்சினம் அதிகமாகியது. இயற்கையாகவே துடுக்குத்தனமும் அச்சமின்மையும் மிகுந்த அவள் உள்ளத்தில் எழுந்த கோபத்தால் மிகவும் கடின நெஞ்சுடையவளானாள்.

    பராக்கிரமப் பெருமாளின் உலைக் கூடத்திற்குக் குமுதத்தின் தந்தை அடிக்கடி வருவார். குமுதமும் அவருடன் வருவாள். பெருமாளின் தாயிடம் அவள் நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருப்பாள். உலைக் கூடத்திற்குப் பாண்டிய நாட்டுப் படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் வருவார்கள். அவர்களுடன் பேசிப் பாண்டிய நாட்டின் பழம் பெருமைகளைக் கேட்டறிவாள். இப்போது சோழ நாட்டின் பிடியில் பாண்டிய நாடு சிக்கிச் சீரழிந்து கொண்டிருப்பதைக் கேட்டறிவாள். அவற்றைக் கேட்கக் கேட்க அவளுள்ளத்தில் சினத் தீ கொழுந்து விட்டெரியும். பாண்டிய நாட்டிற்காக நடந்த யுத்தத்தில் அவளுடைய தந்தை அநியாயமாகக் கொல்லப்பட்டதால் பாண்டிய நாட்டு அரசுத் தலைவர்கள் அனைவரும் குமுதத்தினிடம் அனுதாபம் மிகக் கொண்டார்கள்.

    பாண்டிய மன்னர் வீரபாண்டியனிடமும் ஒருமுறை அழைத்துச் சென்றார்கள். பாண்டிய நாட்டின் விடுதலைக்காக வல்லபன் மேற்கொண்ட இரகசிய முயற்சியில் குமுதமும் பங்கு கொள்ள முன்வந்தாள். பராக்கிரமப் பெருமாளும் துடித்தெழுந்து வந்தான். அதனால் குமுதத்தினிடம் மற்றவர்களைவிட அதிக அக்கறை காட்டினான் பெருமாள். குமுதம் மாறவர்மனின் பேச்சைக் கேட்டுச் சிரிப்பது கண்டு அவன் கண்டிக்க முற்பட்டதில் ஆச்சரியமில்லை.

    படகோட்டிக்கு ஆத்திரமும் எரிச்சலும் அதிகமாயின. என்ன ஐயா, நான் சொல்லச் சொல்ல இப்படிச் சும்மாயிருக்கிறீர்களே. சீக்கிரம் குதியுங்கள் ஐயா என்று கூவினான்.

    இப்போது காங்கேயன் பேசினார்: தம்பி! உன்னிடம் என்ன ஒப்பந்தம் செய்து கொண்டோம்?

    படகில் உங்கள் அனைவரையும் அழைத்துச் செல்ல...

    சரி; எங்கே எங்களை இறக்க வேண்டும் என்று பேச்சு?

    சோழ நாட்டுக் கடற்கரையில்.

    சரி, சோழ நாட்டுக் கடற்கரையில். இது கடற்கரையா? நடுக்கடலில் இறங்கு என்கிறாயே?

    காங்கேயனது பேச்சைக் கேட்டு கோல் போடுபவன் சிரித்தான்.

    இது நடுக்கடல் இல்லை ஐயன்மீர். கடற்கரை வந்து விட்டது. இது சுழிமுகம். அலை இருக்காது.

    ஆழமிருக்குமல்லவா?

    ஆழமும் இருக்காது. இன்னும் சிறிது சென்றால் படகு சேற்றில் சிக்கிவிடும் - அதனால் நீங்கள் இங்கேயே குதித்து நீந்திச் செல்லுங்கள்.

    படகோட்டியின் இந்தப் பேச்சில் நியாயம் இருப்பது போல் தோன்றியது.

    இப்போது மீண்டும் மாறனே பேசினான்: எங்களுக்கு நீந்தத் தெரியாதே!

    பெருமாள் அவனைச் சுட்டெரிப்பது போல் பார்த்து, எங்களுக்கு என்று யாரை சேர்த்துச் சொல்கிறாய்? என்றார்.

    உங்களிருவருக்கும் நீந்தத் தெரிந்திருக்கலாம். ஆனால் எங்களிருவருக்கும் தெரியாது. நான் கற்றுக் கொள்ளவில்லை. இவளோ பெண்... என்று குமுதத்தை நோக்கி மெல்ல நகைத்தபடி சொன்னான்.

    ஓ! எனக்கு நீந்தத் தெரியும். பெண்ணென்றால் நீந்தத் தெரியாது என்று யார் சொன்னார்கள்? என்று குமுதம் கூறியவுடன் மாறனுக்கு வெட்க உணர்ச்சி மேலிட்டது.

    அது மட்டுமில்லை, ஐயன்மீர்! வெளிச்சம் நன்றாகப் பரவிவிட்டால் சோழ நாட்டுப் படகுகள், கட்டுமரங்கள், இந்தப் பக்கம் வரத் தொடங்கிவிடும். உங்களை எல்லாம் அவர்கள் பார்த்துவிடுவார்கள். அதற்குள் நான் படகை வெகுதூரம் கொண்டு சென்றுவிட வேண்டும்.

    மீண்டும் படகோட்டியின் சொல்லில் நியாயம் இருப்பது போல் காங்கேயனுக்குத் தோன்றியது. அவர் பராக்கிரமப் பெருமாளைப் பார்த்து, படகோட்டி சொல்வது நியாயம்தான். இனியும் தாமதிப்பது சரியன்று. வெளிச்சம் ஏறுகிறது. நாம் குதித்துவிடுவோம். கரையேறிய பிறகு ஓரிடத்தில் உட்கார்ந்து பேசிவிட்டுப் பிரிவோம் என்று கூறி, ஆடையை இழுத்துக் கட்டிக் கொண்டு கடலில் தொப்பென்று குதித்து நீந்தத் தொடங்கினார்.

    குமுதா நீயும் குதித்து விடு என்று சொல்லிக் கொண்டே பராக்கிரமப் பெருமாளும் குதித்தான்.

    படகோட்டிகள் ஏனோ கைகொட்டிச் சிரிக்கத் தொடங்கினர். குமுதம் குதிப்பதற்கு ஆயத்தமானாள். மேல் தலைப்பை இழுத்துச் செருகிக் கொண்டாள். சேலையை முழங்கால் வரை தூக்கி ஒரு முனையை அழுத்தமாகப் பிணைத்தாள் இடுப்புப்புறம்.

    செழுமையான அவளுடைய முழங்கால் வனப்பும், பாதங்கள் வரை புலப்பட்ட பகுதிகளும் மாறவர்மனை நிலை தடுமாறச் செய்தன ஒரு கணம்.

    குமுதம், நில், ஒரு முக்கியச் செய்தி என்று அவளது கரத்தைப் பிடித்துத் தடுத்து இழுத்தான். குமுதம் நிலை தடுமாறினாள். படகு ஆடியது.

    நீங்களும் கடலில் குதித்துவிடுங்கள் என்று படகோட்டி கூவினார்.

    இல்லை, நாங்கள் குதிக்கப் போவதில்லை - உங்களிருவரையும்தான் கடலில் தள்ளப் போகிறேன் என்று கூறி, கண் இமைக்கும் நேரத்தில் அருகே இருந்த துடுப்பைப் பலமாகச் சுழற்றி படகோட்டையையும் கோல் போடுபவனையும் மூர்க்கத்தனமாகத் தாக்கிக் கடலில் பிடித்துத் தள்ளிவிட்டான் வியப்பும் அச்சமும் நிலவ குமுதா பார்த்துக் கொண்டிருந்தாள்.

    காங்கேயனும் பராக்கிரமப் பெருமாளும் நீந்திச் சென்று கொண்டிருப்பது தெரிந்தது.

    *****

    2. முதல் பலி

    துடுப்பினால் தாக்கப்பட்டு, படகோட்டியும் அவன் உதவியாள் கோல் தள்ளுபவரும் கடலில் வீழ்ந்ததைக் கண்டு பதறிப்போய் குமுதம், 'ஐயோ' என்றலறிவிட்டாள். மாறவர்மன் சிரித்துக் கொண்டே கோலை எடுத்து ஊன்றிப் படகைத் தள்ள முற்பட்டவன் குமுதத்தை நோக்கி, ஏன் இப்படிக் கத்துகிறாய், பயமா? என்றான்.

    என்ன காரியம் செய்துவிட்டீர்கள்?

    ஏன் மிக நல்ல காரியம் செய்து விட்டேன். விரோதிகளைத் தாக்குவதில் பாரபட்சம் பார்க்கக் கூடாது.

    விரோதியா? நம்மைப் படகில் இரவோடு இரவாக ஏற்றி வந்த இவர்கள் விரோதிகளா? மாறா, உங்களுக்கு யார் விரோதி, யார் நண்பர்கள் என்று புரியாதா?

    மிக நன்றாகப் புரியும். பார்த்தவுடன் தெரிந்து கொண்டு விடுவேன். அந்தத் திறமை ஒன்றுக்காகத்தான் தலைவர் என்னைத் தேர்ந்தெடுத்தார்.

    அதைத் தவறாகப் பயன்படுத்தி விட்டீர்கள்.

    குமுதா! படகோட்டிகள் பாண்டிய நாட்டவர்கள் என்றா நீ நினைக்கிறாய்? என்று கேட்ட மாறன், குமுதாவை நோக்கி, நீ துடுப்பைப் போடு, நான் கோல் கொண்டு தள்ளினால் தான் படகு நகரும். கொஞ்சம் துடுப்பைப் போடுகிறாயா? என்றான்.

    படகை எங்கே செலுத்துவதாக உத்தேசம். உங்கள் போக்கே பிடிபடவில்லையே. தலைவரின் கட்டளைக்கு மாறுதலாகச் செய்கிறீர்களே என்று குமுதா கவலை நிறைந்த குரலில் கேட்டாள்.

    மீண்டும் மாறன் சிரித்தான். படகைக் கரையை நோக்கிச் செலுத்துவதாக உத்தேசம். இல்லாவிடில் நீ என்ன செய்வதாக இருந்தாய்? மாறன் கேட்டவுடன் குமுதம் உடனே மறுமொழி கூறவில்லை. மாறனின் விழிகளையே அவள் நோக்கிக் கொண்டிருந்தாள்.

    என் விழிகளில் என்ன தெரிகிறது குமுதம்? மாறன் கேட்டான்.

    படகு இப்படியும் அப்படியும் ஆடத் தொடங்கியது. குமுதம் பரபரப்புடன், துடுப்பைப் போடத் தொடங்கினாள். படகு மெல்ல நகர்ந்தது. ஆனால் அவளுக்கும் பயம் பிடித்தது. ஆம் படகைத் திருப்புவதற்கு என்ன செய்ய வேண்டும்? படகு இப்படியே வடக்கு நோக்கிச் சென்றுகொண்டேயிருந்தால் கரை மேற்கே அல்லவா இருக்கிறது? - குமுதம் கேட்ட பிறகுதான் மாறனுக்கே தன் தவறு புரிந்தது

    ஆமாம் என்ன செய்வது? மாறன் கோலிடுவதை நிறுத்திவிட்டுக் கேட்டான்.

    உங்களுக்கும் படகோட்டத் தெரியாதா? - குமுதம் கேட்டாள் குரலில் பயம் துடிக்க.

    உங்களுக்கும் என்றால்? உனக்கும் தெரியாதா? மாறன் மீண்டும் நகைத்தவாறு கேட்டான்.

    மாறனின் பேச்சைக் கேட்க எரிச்சல் ஏற்பட்டது குமுதத்திற்கு. இதென்ன, 'இவர் அசட்டுத்தனமாகப் பேசுகிறாரா? அறியாமையா?' என்று எண்ணியவள், எனக்குத் தெரியுமா? தெரியாதா என்று நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? என்றாள்.

    எனக்குக் கவலை இருக்க நியாயமில்லையா? என்று கேட்டவன், குமுதத்தின் முகம் மாறுவதையும் வெறுப்பும் கோபமும் அவள் முகம் பிரிதிபலிப்பதையும் கண்டு கொண்ட மாறன், நாம் இருவரில் ஒருவருக்காவது படகோட்டுவது தெரிந்திருந்தால் நன்றாயிருக்குமே என்பதற்காகக் கேட்டேன் என்றான்.

    குமுதம் சீற்றத்துடன், எனக்குத் தெரிந்திருந்தாலும் உங்களுக்கு லாபமில்லை என்றாள்.

    மீண்டும் மாறன் சிரித்தான்.

    சிரிக்காதீர்கள் என்று கூவிய குமுதம், எனக்கு நீந்தத் தெரியும். உங்களுக்குத் தெரியுமா? என்றாள்.

    மாறன் திடுக்கிட்டான். ஆம் அவனுக்கு நீந்தத் தெரியாது; தெரியாது என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்தான்.

    நான் கடலில் குதித்து நீந்தி கரை சேர்ந்து விடுகிறேன். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நீந்தவும் தெரியாது; படகையும் ஓட்டத் தெரியாது. ஆனால் முன் யோசனையின்றிக் காரியங்களைச் செய்வீர்கள். உங்களை எப்படித் தலைவர் தேர்ந்தெடுத்தார் என்றே எனக்குப் புரியவில்லை என்று சரமாரியாகப் பொழிந்தாள்.

    தலைவர் என்னை எப்படித் தேர்ந்தெடுத்தார் என்பதைக் கேட்க இவள் யார் - இப்படிக் கேட்டுவிட அவன் வாயெடுத்து விட்டான்.

    ஆனால் அவன்

    Enjoying the preview?
    Page 1 of 1