Explore 1.5M+ audiobooks & ebooks free for days

From $11.99/month after trial. Cancel anytime.

Veera Thalapathy
Veera Thalapathy
Veera Thalapathy
Ebook197 pages2 hours

Veera Thalapathy

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Gauthama Neelambaran was born on 14th-June 1948, and left this world on 14'th September 2015 is an Eminent Journalist & Novelist rendering unprecedented service for more than forty years in Tamil literary world. His contributions to Tamil Literature starts with his first work “Buddharin Punnagai” - a Tamil short story. This story was published in “Swadesamitran” – Tamil daily newspaper during the year 1970. He had penned over 200 short stories on history and social genre, poems, articles and 65 Historical Novels and Dramas. Many of his historical plays has been broadcasted in “All India Radio” and telecasted in Chennai Doordharsan TV Channel. He had also penned down over 10 Spiritual books on Hindu Religion & Philosophy. He had worked in various famous & Prestigious Tamil Journals like Deepam, Idhayam Pesugiradhu, Gnana Bhoomi, Mayan, Maniyan Matha Ithazh, Ananda Vikatan, Kungumam, Muththaram and Kunguma Chimizh for over 40 years and retired from his journalist job in October 2014. Some of his significant works in Historical Novels includes, Sethu Banthanam, Chozha Vengai, Raja Ganganam(Ezhavendhan Sangili), Mohini Kottai, Vijaya Nandhini, Masidoniya Maaveeran, Nila Mutram, Kalinga Mohini, Nayana Dheepangal, Maruthanayagam, Sanakiyarin Kadhal, Vetri Thilagam, Vengai Vijayam, Kochadayan, Suthanthira Vengai ( History of King Poolithevan, a foremost freedom fighter in South India). Driven by his interest toward “Gautama Buddha” he had penned down the detailed Life History of Buddha which was published in “Mutharam Tamil Weekly” as weekly episodes for nearly 3 ½ years. This work was later compiled & published as a book “BuddharPiran”. He was survived by his wife, K Akila and his son Vijaya Sankar.K who works in an IT organization.
Languageதமிழ்
PublisherPustaka Digital Media
Release dateAug 12, 2019
ISBN6580102004173
Veera Thalapathy

Read more from Gauthama Neelambaran

Related to Veera Thalapathy

Related ebooks

Related categories

Reviews for Veera Thalapathy

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Veera Thalapathy - Gauthama Neelambaran

    http://www.pustaka.co.in

    வீரத் தளபதி

    (மருதநாயகத்தின் வீர வரலாறு)

    Veera Thalapathy

    (Maruthanayagathin Veera Varalaru)

    Author:

    கெளதம நீலாம்பரன்

    Gauthama Neelambaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/gauthama-neelambaran-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    ‘அதோ அந்த மலைத் தொடரில் எத்தனை நதிகள் உற்பத்தியாகின்றன. அந்தப் பக்கமாகச் சில. இந்தப் பக்கமாகச் சில பாய்ந்தோடுகின்றன, அந்தப் பக்கம் மலையாள பூமியும் இந்த மேற்கு மலைத் தொடரில் உற்பத்தியாகிப் பாயும் நதிகளால் தான் வளம் கொழிக்கிறது; இந்தப் பக்கம் செந்தமிழ் நாடும் இதே மலைத் தொடரிலிருந்து பிரவாகிக்கும் அருவிகளாலும் ஆறுகளாலும்தான் நில மங்கைக்குப் பயிர்ப் பச்சை ஆடை வனைந்து வளம் காண்கிறது. மலைத் தொடர் என்னவோ பொதுவாகத்தான் நிற்கின்றது; மனிதர்கள்தான் தொடர்புகளைச் சிக்கலாக்கிச் சிதைந்தும் பிரிந்தும் கிடக்கின்றனர், ஏனிப்படி?'

    இந்த எண்ணங்கள்தான் அதோ ஆற்றில் படகோட்டுகிறானே, அந்த இளைஞனின் உள்ளத்தில் அப்போது உதயமாகிக் கொண்டிருந்தன.

    அந்திப் போல் உதித்த அழகிய எண்ணங்கள்.

    அதைவிட அழகிய பெண் ஒருத்தி ஆற்றின் கரையோரம் நடந்து கொண்டிருந்தாள், பார்வையும் எண்ணங்களும் அவளைப் பின் தொடரக் கூடாது என்பதற்காகத்தான் அவன், சிரமப்பட்டு சிந்தையை மலைகளை நோக்கிச் செலுத்தினான்.

    ஆயினும் பார்வைக் குழந்தை அடம் பிடித்து நழுவி அந்த அழகியின் இடுப்பேறிக் கொள்வதை அவனால் தடுக்க முடியாமலும் இருந்தது.

    'அட! இவள் யார்? எதற்காக இப்படித் தன்னந்தனியே ஆற்றங்கரை மீது நடக்கிறாள்? அதுவும் இந்தப் பக்கம் குடியிருப்பு எதுவும் இருப்பதாகப் புலப்படவில்லையே... அடர்ந்த காடுதான் இருக்கிறது. அங்கே இவளுக்கு என்ன வேலை? அவள் எங்கேயோ எதற்காகவோ போய்த் தொலையட்டும்; என் கண்ணில் படுவது போல் ஏன் நடக்க வேண்டும்?' என்ற எண்ணங்கள் எழுந்தபோது, அவனுக்கே தன் கண்களின் கட்டுப்பாடின்மை பற்றிச் சிரிப்பு வந்தது.

    அவன் வேகமாகத் துடுப்பை வீசியிருந்தால், அந்தப் பெண்ணைப் பின் தள்ளிவிட்டு அவனுடைய படகு எப்போதோ விரைந்திருக்கும் எதனாலோ அவன் கைகள் துடுப்பு தள்ள முனையவே இல்லை ஆற்றின் போக்கில் அந்த நீண்ட வள்ளம் தானாகவேதான் சென்று கொண்டிருந்தது. துடுப்பைச் சிறிது அசைத்தாலும் அதன் வேகம் அம்பின் பாய்ச்சலாகும்.

    அவனும் இலக்கின்றிதான் அப்போது அந்தப் படகிலேறி தன்னந்தனியே வந்து கொண்டிருந்தான், சிறிது தொலைவு சென்று விட்டு, உடனே திரும்புவதுதான் அவனுடைய துவக்க எண்ணமாய் இருந்தது. 'அப்படிச் செய்யாமல், இன்னமும் நாம் ஏன் படகைச் செலுத்துகிறோம்' என்ற கேள்விக்கு அவனிடம் அப்போது பதில் ஒன்றுமில்லை.

    இவள்தான் காரணமா? இவள் அழகு என் புத்தியைப் பேதலிக்கச் செய்கிறதா....?

    சந்தனச் சிற்பம் போலிருக்கிறாள்! இன்னும் முகம் பார்க்க முடியவில்லை. பின்னழகுதான் சித்தம் குழப்புகிறது. எப்போதோ ஒன்றிரண்டு தூறல் விழுந்ததும், ஒரு வாழை இலையைக் கிள்ளித் தலைமீது ஏந்தியபடி நடக்கத் துவங்கியிருக்கிறாள், இன்னும் அதை அப்படியே பிடித்தபடி, மழை வரதுக்கு முன் போய்ச் சேரும் பாவனையில் உடல் முன்புறம் சாய, வேகம் காட்டி நடக்கிறாள், அது பொய் வேகமாக இருக்கிறது. நடையின் கதிக்கேற்ப, அந்தப் பின்னெழில் போடும் தாளம் அவனை நோக்கி, 'ஏய்... இந்தா......ஏய் இந்தா' என்று விளிப்பது போலிருக்கிறது.

    சுற்றிலும் யாருமில்லை என்ற துணிவில் அவன் உள்ளத்தில் குறும்பு துள்ள, அந்த எழிற் திரட்சியபின் அசைவை ஏளனம் செய்வதே போன்று அவன் தன் தோள்களைக் குலுக்கி, ஏற்ற இறக்கமாய் அசைத்து உதடுகளைச் சுழித்தான் அந்தக் குறும்பால் வள்ளமும் ஆடிக் குலுங்கியது. நல்ல வேளை, நழுவ இருந்து துடுப்புகளை லாகவமாக அவன் பற்றிக் கொண்டான்.

    அதற்கு மேல் அவன் பித்தம் பிடித்தவன் போல் சேட்டை செய்து கொண்டிருக்கத் தான் காரணமாகி விடக்ககூடாது என்று நினைப்பவள் போன்று அவள் சட்டென ஆற்றங்கரையோரம் புலப்பட்ட ஓர் ஒற்றையடித் தடத்தில் இறங்கி நடக்கலானாள்.

    அந்தப் பிரதேசத்திலேயே அப்போது அவர்கள் இருவர் தவிர வேறு மனித சஞ்சாரமில்லை என்பதால், ஆற்றில் ஒரு படகு வருவதையும், அதில் தன்னந்தனியே ஒருவன் வருபதையும் அவள் கவனித்தே இருந்தாள்.

    படபடவென நாலைந்து மழைத்துளிகள் வெள்ளத்தில் பட்டுத் தெறித்தன. ஆற்றில் விழுந்த துளிகள், புது விதமான நீர்ப் பூக்களாய் மலர்வது போன்றிருந்தன.

    'சரி, இன்னும் அதிக தொலைவு செல்வதற்கான காரணம் ஒன்று மில்லை. தோழர்கள் வேறு பரிதவிப்புடன் இருப்பர், கடுமையான எதிர்ப்பை மீறியே புறப்பட வேண்டியதாய் இருந்தது. உடனே திரும்புவதே உத்தமம்' என்று எண்ணிய அந்த இளைஞன். வள்ளத்தைத் திருப்ப உத்தேசித்தபோது, ஆற்றுக்கு அப்பால் கரைச் சரிவிலிருந்து, 'வீல்' என்ற பெண் ஓலம் கேட்டது.

    'அந்த வாழை இலைக்காரி, ஈர மண்ணில் சறுக்கி விழுந்திருக்கலாம், எழுந்து நடக்கட்டும்; அது பற்றி நாம் ஒன்றும் கவலை கொள்ளத் தேவையில்லை' என்று அவன் எண்ணும்போதே அவள், 'ஐயோ...! ஆபத்து..! காப்பாத்துங்க!' என்று அலறினாள்.

    'இது ஜாலக்கோ? நம்மைக் கரைக்கு இழுத்து, ஆபத்தில் சிக்க வைக்கும் சதி முயற்சியோ?' என்றெல்லாம் புத்தியில் முன்னெச்சரிக்கை ஒலித்தாலும், உள்ளே ஏதோ ஒன்று, 'பாதகமில்லை; துணிந்து செல் - பதுமை போன்ற பாவை ஒருத்தியை ஆபத்தில் காக்காது செல்வது அறமல்ல' என்று அறிவுறுத்தவே, அவன் கரை ஒதுங்கி, நாணற்புதர் ஒன்றில் வள்ளத்தைப் பிணைத்து விட்டு, சப்தம் வந்த திக்கில் விரைந்தான்.

    அங்கே அந்த மங்கையை ஒரு மலைப்பாம்பு சுற்றி வளைத்துக் கொண்டிருந்தது. இன்னும் ஒரு நொடி தாமதித்திருப்பினும் நிலைமை விபரீதமாகியிருக்கும், அந்தப் பாம்பின் வாயில் மட்டும் அவள் தலை சிக்கி விட்டிருந்தால், அவளை மீட்பது துர்லபமாகியிருக்கும்.

    இப்போதும் அவள் குப்புறக் கிடந்ததால் அவள் முகம் காண முடியவில்லை. சற்று முன் அவன் ரசித்த பின்னெழில் பிரதேசங்கள் மீது மலைப்பாம்பின் கனத்த உடல் இறுகிக் கொண்டிருந்தது, அவள் அலறலும் அடங்கிக் கொண்டிருந்தது. ஒரு நொடித் தாமதமும் உயிர் அபாயம் ஏந்தி நிற்கும் நிலை.

    மரக்கிளை மீது கொடி படரலாம்; எங்கேனும் கொடி மீது மரக் கிளை படருமா? அங்கே அப்படியொரு காட்சியாக இருந்தது. மரக்கிளை வண்ணமும், பெருந்தொடைப் பருமனுமாய் தோன்றியது அந்த மலைப் பாம்பு.

    இளைஞன் கையில் வாள் இருந்தது. அதை அவன் பாம்பின் மீது ஓங்கி வீசவும் செய்தான் ஆனால், அதன் கனத்த உடலில் செருகிய வாளை மறுபடி உருவு முன், பாம்பு நெளிந்து அதை அவன் பிடியிலிருந்து அப்புறப்படுத்தி விட்டது. அவன் சற்றும் தயங்காமல், அதன் மீது பாய்ந்து, இறுகும் பிடியைத் தளர்த்தி அவளை மீட்க முனைந்தான். அதன் விளைவாக அவனும் பாம்பின் பிடிக்குள் சிக்க நேர்ந்தது.

    கையெட்டும் தூரத்தில்தான் அந்த வாள் கிடந்தது. ஆனால் விரலால் தொடவும் முடியவில்லை. பாம்பின் உடல் முழுக்க கண்ணா? அதன் அசைவும் இயக்கமும் அசுரத்தனமாய் இருந்தது. நொடியில் அவன் உடலைப் புரட்டித் தன் வளைவுக்குள் சிக்க வைத்து நெருங்கியது - நொறுக்கியது என்றே சொல்லலாம்.

    'மல்யுத்தம் பழகிய தனக்கே இத்தனை இம்சை என்றால், பாவம் இந்தப் பெண் இதை எப்படித் தாங்குவாள்?'

    முல்லைப் பூக்கள் மீது சம்மட்டி அடி விழுவது போலிருக்கும்;

    மல்லிகை மீது மலைப்பாறை உருள்வது போலிருக்கும்!

    அந்த நிலையிலும் அவள் முகம் தேடினான். காணமுடியவில்லை, மெலிதான முக்கல் முனகல் மட்டுமே அவள் படும் மரண அவஸ்தையைப் புலப்படுத்தியபடி இருந்தது.

    நல்லவேளை, உயிர் இருக்கிறது!

    அவன் விரைந்து செயல்பட்டான். பாம்பின் போக்கு புரிந்து, அதன் நெளிவுகளுக்கு இணங்குவது போல் தன் புஜங்கள், மெல்ல உள் நுழைந்தான். பிறகு சுவாச கோசங்கள் முழுக்கப் புடைப்பது போல் காற்றை உள்ழிழுத்து, முழு ஆற்றலையும் பிரயோகித்துப் புஜங்களை அகற்றி உருண்டான், அதைச் சமாளிக்கும் விதமாகப் பாம்பு சற்று நெகிழ்ந்து, அவன் மீதான இறுக்கலை அதிகரிக்க முனைந்த வேளையில் அவள் விடுபட்டாள். அந்த வளைவும், இப்போது அவனை ஆக்ரமித்தது

    இளைஞனின் இரு கரத்துக் கட்டை விரல்களும் இலுப்பைக் கொட்டையின் ஓடு களைச் செருகி வைத்தது போன்று கடின நகங்களுடன் இருந்தன. அவன் அந்த விரல்களை மற்ற விரல்களின் உட்புறமாய் மடக்கி, முஷ்டியை ஓங்கிப் பலம் கொண்ட மட்டும் பாம்பின் உடலில் பாய்ச்சிக் கிழித்தான் வெறும் கரத்தால் ஆட்டுக் குடலுருவிப் பழகியவன் அவன், ஏக காலத்தில் இரண்டு குறுவாள்கள் பாயும் அவதியைப் பாம்பு அனுபவித்தது. முன்பே வாட்காயம் வேறுபட்டிருந்ததால், அது வலி தாளாத சீற்றம் காட்டிச் சுழன்றது. வாயைப் பிளந்து அவன் தலையைக் கவ்வ முடியுமா என்று முயன்றது: முடிய வில்லை.

    அவன் போக்கு காட்டி, நொடிப்போது நெகிழ்வில் தன் உடலை விடுவித்துக் கொண்டு எழுந்தான். மறுகணம் வாள் அவன் கைக்கு அகப்பட, அதைக் குனிந்து எடுத்துக் கொண்டு இரு கரத்தாலும் பற்றிச் சுழற்றியபடி அவன் நிமிரவும், வாயைப் பிளந்தபடி பாம்பு அவன் தளை நோக்கிப் பாயவும் சரியாக இருந்தது. வாள் வீச்சில் அதன் வாய் கிழிபட, உதிரம் பெருகி அவன் முகத்தில் தெறித்து வழிந்தது. மாறி மாறி வாட்கோலம் வரைந்தான் அதன் உடலில் பிறகு தலையை அறுத்தெறிந்தான்.

    வாளை வீசியெறிந்து விட்டு, கசக்கி எறிந்த கதம்ப மாலை போல் மூர்ச்சித்துக் கிடந்த அந்த அழகிய பெண்ணருகே ஓடி, அவள் உடலைப் புரட்டிப் போட்டான். அந்த முக தரிசனம் இப்படியா கிடைக்க வேண்டும்? மண்ணும் மரண பீதியும் ஒன்றாகப் படிந்து கிடந்தன. அவள் முகத்தில், செஞ்சந்தன முகம் வெளுத்துக் கிடந்தது. யாரோ ஓர் அசுரன் முகில்களோடு நிலவைப் பிடுங்கி மண்ணில் எறிந்தது போலிருந்தது அந்தக் கோலம். கரிகுழல்களும் அழுக்கும் மண்ணும் ஒட்டிக் கிடந்தாலும் அந்த சுந்தர வதனத்தின் அழகு, அவன் கடின இதயத்தையும் கரைத்தது; கலைத்தது.

    முக தரிசனம் காண மட்டுமே முனைப்போடிருந்த அவன் இப்போதுதான் இன்னொன்றையும் கவனித்தான். ஒரேயொரு முண்டு மட்டுமே உடுத்தியிருந்தாள், அவள் மார்பிலிருந்து முழந்தாள் முட்டு வரையே மறைந்திருந்த அந்த ஈர ஆடை, இப்போது பெரிதும் குலைந்திருந்தது. மார்பருகே முடிச்சும் அவிழ்ந்திருந்தது.

    அவள் மேனி எழில் முழுக்கப் பெரும்பாலும் ஆங்காங்கே விலகிப் புலப்பட்டாலும், தன் பார்வையை அவள் மீது ஒட்ட அவன் துணியவில்லை.

    மூர்ச்சித்துக் கிடப்பவளின் மேனியெழிலைப் பார்வையால் மேயும் மூர்க்கனில்லை அவன். ஆனாலும் அவளுக்கு உதவ வேண்டும், அங்கு அவள் மேனியைத் தொட வேண்டும், முகம் திருப்பத் தொட்டபோது இருந்த துணிவு இப்போது அறவே அவனை விட்டு விலகியிருந்தது. அதுதானே எந்த நிலையிலும் விலகாத பண்பு!

    அவன் கரையேறி ஓடி வந்தபோது, தன் கருநீல வண்ணத் தலைப்பாகையை அவிழ்த்து எறிந்திருந்தான், சட்டென்று தாவி அதை எடுத்து, உதறிப் பிரித்து அவள் மீது போர்த்தி அவளைத் தன் இரு கரங்களில் அள்ளி ஏந்திக் கொண்டு ஆற்றங்கரை சென்றான், வட்டப்பாறைக் கல் ஒன்றில் அவளைக்

    Enjoying the preview?
    Page 1 of 1