Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sarithiram Pottrum Sambavangal
Sarithiram Pottrum Sambavangal
Sarithiram Pottrum Sambavangal
Ebook276 pages1 hour

Sarithiram Pottrum Sambavangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இத்தொகுப்பில் உள்ள கதைகள் சரித்திரக் கதைகள். அறியப்படாத பல சரித்திர நிகழ்வுகளை இத்தொகுப்பில் அழகாகக் கோர்த்துள்ளார். ஒரு கைதேர்ந்த ஒளிப்பதிவாளரும் இசைக் கலைஞரும் கைகோர்த்து எழுதியுள்ளதைப்போல் காட்சிப் பூர்வமாகவும் துள்ளலான மொழியிலும் இக்கதைகள் நம்மைக் கடந்த காலத்தின் நதிக்கரைக்கு அழைத்துச் செல்கின்றன.

மழை விட்டும் மரக்கிளைகள் தூறிக்கொண்டு இருப்பதைப்போல் படித்து முடித்த பிறகும் நம் மனதை விட்டு இக்கதைகள் இறங்க மறுக்கின்றன. இக்கதைகளின் வழி கால இயந்திரத்தில் ஏற்றிக் கடந்த காலத்திற்கு அழைத்துச் சென்ற பெருமை நீலாம்பரன் அவர்களுக்கு!

நா. முத்துக்குமார்

Languageதமிழ்
Release dateNov 14, 2023
ISBN6580102009648
Sarithiram Pottrum Sambavangal

Read more from Gauthama Neelambaran

Related to Sarithiram Pottrum Sambavangal

Related ebooks

Related categories

Reviews for Sarithiram Pottrum Sambavangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sarithiram Pottrum Sambavangal - Gauthama Neelambaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சரித்திரம் போற்றும் சம்பவங்கள்

    Sarithiram Pottrum Sambavangal

    Author:

    கெளதம நீலாம்பரன்

    Gauthama Neelambaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gauthama-neelambaran-novels

    பொருளடக்கம்

    மழைவிட்ட மரக்கிளைகள்

    தொடர்ந்து சரித்திரம் படைக்கட்டும்!

    என்னுரை...

    1. காவிரியை மீட்ட இரண்டாம் இராஜராஜன்

    2. வீரபாண்டிய கட்டபொம்மனிடம் முருகன் கேட்ட வைரமாலை!

    3. அந்தப்புரம் ஒழிக்கப்பட்டது...! சிறைக்கைதிகளுக்கு விடுதலை...!!

    4. உல்லாச வாழ்வுக்காகத் தந்தையை சிறையில் தள்ளிய சிங்கள மன்னன்!

    5. மன்னரின் பட்டாடையைப் பிச்சைக்காரிக்குப் போர்த்திய தாயுமானவர்

    6. அவுரங்கசீப்பின் இராஜ நீதி!

    7. திருடன் தளபதியான கதை!

    8. வாயிற்காவலன் மன்னனான கதை!

    9. சந்திரகுப்தனின் சரித்திரத்தைப் புரட்டிப் போட்ட வணிகன்!

    10. துறவி வேடத்தில் மாவீரன்...!

    11. நாட்டிற்கு ஆபத்தை அழைத்த அழகியின் சிரிப்பு!

    12. கிருஷ்ணதேவராயரின் கனவில் எழுந்த மாயக்குரல்!

    13. மன்னரின் பட்டாடைக்கு ஆசைப்பட்ட ஏழைச்சிறுமி!

    14. சாவா மருந்து கேட்ட சீன மன்னன்!

    15. இலங்கை இளவரசனுக்கு ஆட்சியை மீட்டுத்தந்த இளநி!

    16. நட்புக்காக உயிர்துறந்த மன்னன்!

    17. விபூதியால் வெள்ளையரை விரட்டிய தாயுமானவர்!

    18. சிவாஜி மன்னரின் மனத்தை ரணமாக்கிய மகன்...!

    19. குப்பிச்சியின் சதியால் கவிழ்ந்த வன்னிய சிற்றரசு!

    20. ராஜசிம்மன் கண்ட சமரசக் கனவு!

    21. புத்தருக்குத் தந்தை இட்ட கட்டளை!

    22. மதவித்தியாசம் பாராத மகாராணி எழுப்பிய திருமால் கோயில்!

    23. பாஜிராவின் புரட்சிக் காதல்!

    24. பூலித்தேவனும் மாபூஸ்கானும்...!

    25. அன்ன சத்திரம்கட்டிய மகாராணி மங்கம்மாள் பட்டினியாய் சிறைக்குள்ளே...!

    26. அம்பிகாபதியின் காதல்!

    27. தூதுப் புறா...!

    மழைவிட்ட மரக்கிளைகள்

    கௌதம நீலாம்பரன் வண்ணத்துப் பூச்சிகள் இறகைப்போல மென்மையான மனதிற்குச் சொந்தக்காரர். வார்த்தைகளுக்கும் வலிக்காமல் பேசுபவர். தேர்ந்த ரசிகர். வானவில்லிடம் கடன் வாங்கிய வசீகர மொழிநடைக்குரியவர்.

    என் பள்ளி நாட்கள் தொட்டு என் கவிதைகளின் விமர்சகராகவும், வழிகாட்டியாகவும் இருந்து என்னை உற்சாகப்படுத்தியவர். தொடக்க காலத்தில் குங்குமச்சிமிழ் இதழில் என் ஹைக்கூ கவிதைகள் பலவற்றை வெளியிட்டு என் படைப்பின் திரி தூண்டியவர்.

    இத்தொகுப்பில் உள்ள கதைகள் சரித்திரக் கதைகள். அறியப்படாத பல சரித்திர நிகழ்வுகளை இத்தொகுப்பில் அழகாகக் கோர்த்துள்ளார். ஒரு கைதேர்ந்த ஒளிப்பதிவாளரும் இசைக் கலைஞரும் கைகோர்த்து எழுதியுள்ளதைப்போல் காட்சிப் பூர்வமாகவும் துள்ளலான மொழியிலும் இக்கதைகள் நம்மைக் கடந்த காலத்தின் நதிக்கரைக்கு அழைத்துச் செல்கின்றன.

    மழை விட்டும் மரக்கிளைகள் தூறிக்கொண்டு இருப்பதைப்போல் படித்து முடித்த பிறகும் நம் மனதை விட்டு இக்கதைகள் இறங்க மறுக்கின்றன.

    இக்கதைகளின் வழி கால இயந்திரத்தில் ஏற்றிக் கடந்த காலத்திற்கு அழைத்துச்சென்ற பெருமை நீலாம்பரன் அவர்களுக்கு!

    வாழ்த்துகளுடன்

    நா. முத்துக்குமார்

    தொடர்ந்து சரித்திரம் படைக்கட்டும்!

    தீபத்தில் நா.பார்த்தசாரதி எழுதிய இலக்கிய மேடை கேள்வி பதில் பகுதிக்கு ஒரு கேள்வி வந்தது. பல்லாண்டுகள், முன்னால் வெளிவந்த ஏதோ ஒரு படைப்பின் நகல் கேட்டு! நா.பா. ‘தீபம் அலுவலகத்தில் இரண்டு மலைகள் இருக்கின்றன. அசைத்துப் பாருங்கள் கிடைக்கலாம்’ என்று பதில் எழுதினார். அந்த இருமலைகளில் ஒரு மலை திருமலை! இன்னொரு மலை கைலாசம் என்கிற கௌதம நீலாம்பரன்!

    நான் தீபத்தில் துணையாசிரியனாகச் சேருவதற்கு முன்பே அவர் தீபத்திலிருந்து விலகி, மணியனின் ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகையில் சேர்ந்துவிட்டார். தற்போது குங்குமச்சிமிழில் பொறுப்பாசிரியராகப் பணிபுரியும் அவர், அடுத்தடுத்து விகடன் உள்படப் பல பத்திரிகைகளில் பணியாற்றினார்.

    நான் தீபத்திற்குப் பின் தினமணியில் சேர்ந்தேன். கதிர் வார இதழில் சுமார் கால் நூற்றாண்டுக் காலம் பணிபுரிந்தேன். இவ்விதம் ஒரே பத்திரிகையில் பல்லாண்டுகள் பணிபுரியும் நீடித்த வாய்ப்பு கௌதம நீலாம்பரனுக்குக் கிட்டவில்லை.

    முழு நேர எழுத்தாளராகவும் முழுநேரப் பத்திரிகையாளராகவும் இருப்பவர்களுக்கு இருக்கக்கூடிய எல்லாவிதப் பொருளாதார சிரமங்களும் அவருக்கும் இருந்தன. வேலையில்லாத இடைப்பட்ட காலங்களில் அத்தகைய சிரமங்களையெல்லாம் தோளில் சுமந்துகொண்டே அவற்றால் பாதிக்கப்படாமல் எழுத்துப் பணி ஆற்றவேண்டிய சவாலை அவர் தொடர்ந்து வெற்றிகரமாகச் சந்தித்து வந்தார். கடின உழைப்பு ஒன்று மட்டுமே அவரது பலம். ‘பாண்டியன் உலா, ஈழவேந்தன் சங்கிலி’ போன்ற பல முக்கியமான வரலாற்று நாவல்களையும் பற்பல வரலாற்றுச் சிறுகதைகளையும் அவர் தொடர்ந்து எழுதி வந்தார்.

    வெகுளி! தன் மனத்தில் பட்ட கருத்துக்களைத் தயங்காமல் யாரிடமும் தாட்சண்யமின்றி முகத்துக்கு நேரேயே சொல்லிவிடும் பண்புகொண்டவர். ‘டிப்ளமசி’ என்று சொல்லப்படும் உலகியல் நாகரிகத் தந்திரங்கள் அவர் கற்றறியாதவை! தமக்கு குரு நிலையில் இருப்பவர்களிடம்கூட சமதையான தொனியில் அவர்களது குற்றம் குறைகளை அவர்களிடமே சொல்லத் தயங்காதவர். இத்தகைய வெளிப்படைப் பேச்சால் விளையும் பாதிப்புகளை அவர் பொருட்படுத்தியதில்லை. உழைப்பையே மூலதனமாய்க் கொண்டு மெல்ல மெல்ல உழைத்து மேலே வந்தவராகையால் அத்தகையவர்களுக்கே உரிய நெஞ்சுரம் அவரிடம் அபரிமிதமாய் உண்டு. வாழ்வைக் கண்டு அவர் அஞ்சியதில்லை. வாழ்க்கைதான் அவரிடம் அஞ்சி அடிபணிந்திருக்கிறது.

    ஆனந்தவிகடன் சரித்திர நாவல் போட்டி ஒன்று நடத்தியது. நடுவர்கள் அகிலன், நா. பார்த்தசாரதி, மு. கருணாநிதி ஆகியோர். நீலாம்பரனின் ‘சேதுபந்தனம்’ நாவல், போட்டிக்கு வந்த ஏராளமான நாவல்களில் இரண்டாம் நிலைக்கு உரியதாய்க் கருதப்பட்டுப் பிரசுர வாய்ப்புப் பெற்றது. எடுத்தால் கீழே வைக்க இயலாத நாவல்களையும் எழுத்தாளர்களின் பெயர்கள், பாத்திரங்களின் விறுவிறுப்போடு அந்நாவல் எழுதப்பட்டிருந்தது. (எல்லா பெயர்கள் உள்பட நினைவில் வைத்திருந்து விவாதித்த கருணாநிதியின் அபார ஞாபக சக்தியைப் பற்றி நீதிபதிகளின் கூட்டம் முடிந்தபின் நா.பா. என்னிடம் வியந்து பேசினார். நா.பா., ஜெயகாந்தன், சோ போன்றோர் காமராஜ் அணியில் ஒன்று திரண்டு திராவிடக் கட்சிகளைக் கடுமையாக மேடைகளில் விமர்சித்துக் கொண்டிருந்த காலம் அது).

    என்னைப் போலவே தீபத்தில் பணிபுரிந்தவர் என்பதாலோ என்னவோ, அதிகப் பரிச்சயம் இல்லாமலே கௌதம நீலாம்பரன் மேல் மிகுந்த அன்பு கொண்டிருந்தேன். பின்னால் இயற்கை அவருடன் நிறையப் பழகவும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தது. நானும் வல்லிக்கண்ணனும் குறிஞ்சிவேலன் மணிவிழாவை ஒட்டி குறிஞ்சிப்பாடி சென்றோம். அப்போது நெய்வேலியில் தங்கினோம். நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் பரிசு பெற வந்த கௌதம நீலாம்பரனும் எங்களுடன் தங்கினார். நிறைய இலக்கிய விஷயங்களை அவருடன் பரிமாறிக்கொள்ள முடிந்தது, அப்போதுதான். பிறகு நெய்வேலி கண்காட்சியில் அவர் வழங்கிய ஏற்புரை என்னை ஆச்சரியப்படவைத்தது. அவர் நல்ல பேச்சாளர் என்பதைப் புரிந்து கொண்டேன். அவரது அந்த ஆற்றல் வெளியே தெரியாமலே இருந்தது.

    ‘சரித்திர நாவல்கள்’ என்ற தலைப்பில் அவர் இலக்கியச் சிந்தனையின் மாதாந்திரக் கூட்டமொன்றில் சிறப்பாகப் பேசினார். அதைக்கேட்டு வியந்த நான், எல்லாத் தகவல்களும் அவர் மனத்திலிருந்து நழுவி விடுவதற்குள் அந்தப் பேச்சைக் கட்டுரையாக்கி விடுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டேன். அது ஒரு நல்ல ஆய்வுக் கட்டுரையாக அமைந்தது. விக்கிரமன் அந்தக் கட்டுரையை அமுதசுரபி தீபாவளி மலரில் எல்லாச் சரித்திரக் கதாசிரியர்களின் புகைப்படங்களோடும் வெளியிட்டுப் பெருமைப்படுத்தினார்.

    பி.எஸ். ராமையா பல நல்ல கதைகளை எழுதியிருப்பதோடு கூடவே சில சுமாரான படைப்புகளையும் எழுதியிருக்கிறார். (இதைச் சொல்லப் போய்த்தான் சி.சு. செல்லப்பாவோடு ஒருமுறை எனக்குச் சிக்கல் வந்தது. ராமையா இலக்கியத்தை ஆராதிக்கும் செல்லப்பா ஒரு வளர்ந்த குழந்தை போன்றவர். ராமையாவின் எந்தக் கதையையும் ஒருமாற்றுக் குறைத்து மதிப்பிடுவதைக்கூடச் சகியாதவர்). பத்திரிகைகளில் பணிபுரிபவர்கள், பத்திரிகைகளையே தங்கள் பொருளுக்கு ஆதாரமாகக் கொண்டிருப்பவர்கள் போன்றோரின் எழுத்துக்கு இத்தகைய விபத்து நேர்வது தவிர்க்க இயலாதது. பத்திரிகை ராட்சஸன் படைப்புக் கேட்டு அதட்டும்போது, எல்லாவகைப் படைப்புகளையும் உற்பத்தி செய்து தரவேண்டிய நிர்பந்தம் பத்திரிகைப் பணியாளர்களுக்கு நேர்ந்து விடுகிறது.

    சக்கையாகவேனும் அந்த அச்சு இயந்திரத்திற்கு அவசரத் தீனி போடும் வல்லமை இல்லாவிட்டால், பத்திரிகைப் பணி நிலைக்காது.

    கௌதம நீலாம்பரனும் பத்திரிகைத் தேவைக்காக ஏராளமாக எழுதிக் குவித்தவர். குவிப்பவர். அவைகள் அவரது சரித்திரப் படைப்பிலக்கியத்தைப் போலக் காலத்தை ஜெயிக்கப் போவதில்லை. ஆனால் காலத்தை வெல்லும் ஆற்றல் நிறைந்த உந்துசக்தியை ஒரு பொறி போல் எப்போதும் அவர் தன்வசம் சேமித்து வைத்திருக்கிறார். வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் அந்தப் படைப்புச் சக்தி தனக்கிருப்பதைத் தன் எழுத்தின் மூலம் நிரூபித்து வருகிறார். அப்படி ஒரு படைப்பு வேகத்தோடு எழுதப்பட்ட சரித்திரச் சிறுகதைகள்தான் இந்த ‘சரித்திரம் போற்றும் சம்பவங்கள்’ தொகுதியில் உள்ள கதைகள். கௌதம நீலாம்பரன் எழுத்துகளின் முக்கியப் பண்பான விறுவிறுப்பு, இந்தக் கதைகளிலும் குன்றாமல் வெளிப்பட்டிருப்பதை வாசகர்கள் வாசித்துப் புரிந்து கொள்ளலாம்.

    கல்கி, ஜெகசிற்பியன், அரு. ராமநாதன், அகிலன், நா.பா., சாண்டில்யன், கோவி. மணிசேகரன், கௌசிகன், ஸ்ரீவேணு கோபாலன், அய்க்கண் என்றிப்படி இன்னும் பலர் சரித்திரப் படைப்பிலக்கியத் துறையைத் தமிழில் வளப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களிலும் சரித்திர நாவல்கள் எழுதியவர்களே அதிகம்! சரித்திரச் சிறுகதைகள் எழுதியவர்கள் குறைவு. அதிக எண்ணிக்கையில் சரித்திரச் சிறுகதைகளை எழுதியவர் என்று ஸ்ரீவேணுகோபாலனைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. அதிலும் அவரது முகமதியக் காதல் கதைகள் தனி வசீகரம் நிறைந்தவை. ஆனால் அவரது எல்லாச் சரித்திரச் சிறுகதைகளும் புத்தகமாகிவிடவில்லை. கௌசிகனின் ‘அடிமையின் காதல்’ என்ற தலைப்பிலான ஒரு சிறுகதைத் தொகுதி முக்கியமான தொகுதியாய்க் கவனத்தில் வருகிறது. மற்றவர்களைப் பற்றி நினைக்கும்போது அவர்களது சரித்திர நாவல்கள் தான் நினைவுக்கு வருகின்றன. சிறுகதைகள் நினைவு வரவில்லை.

    பெ.கருணாகரன் பொறுப்பில் ஜங்ஷன் இதழில் தொடராக இந்த ‘சரித்திரம் ஜோர்’ என்ற தலைப்பிலான சிறுகதைகள் வெளிவந்தன. அவை வெளிவரும்போதே சுடச்சுட வாசித்து வந்த நான், தொடர் ஆசிரியர் பல்லாண்டுகளாகச் சேகரித்து வைத்த குறிப்புகளின் உதவியோடு கடின உழைப்பின் பேரில் தொடரை எழுதுகிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். இப்போது அந்தக் கதைகளெல்லாம் தொகுக்கப்பட்டுப் புத்தகமாக வெளிவருவது பற்றி அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    இந்தத் தொகுதியில் ராணி மங்கம்மாள் போன்று பலருக்கும் தெரிந்த கதைகள் சில உண்டு. (நா. பார்த்தசாரதி ‘ராணி மங்கம்மாள்’ என்ற தலைப்பிலேயே அற்புதமான ஒரு சரித்திர நாவல் எழுதியிருக்கிறார். அதுதான் அவரது கடைசி சரித்திர நாவல்) மற்றபடி பரவலாகத் தெரியாத கதைகளே பெரும்பாலானவை!

    பல்லவ சைன்யம் இலங்கையில் இறங்கி, அநுராதபுரத்தை மீட்டு, மானவர்மனுக்கு அளித்ததன் பின்னணியில் உப்புக் கரிக்கும் ஓர் இளநீர் இருந்தது பற்றிய இலங்கைச் செய்தி; ஒரு நாட்டியக்காரியால் யூ என்ற சீன மன்னனின் ஆட்சி அழிந்ததைச் சொல்லும் சீன வரலாறு; ஒரு முத்துமாலை சந்திரகுப்தனின் வாழ்வையே மாற்றிய விந்தை; மாற்றான் மனைவியைக் கடத்திய உறவினருக்குச் சிறைத்தண்டனை கொடுத்த ஔரங்கசீப்பின் நீதி உணர்வு என்றிப்படி வரலாற்றுச் சிப்பிக்குள் மறைந்திருந்த முத்துகளைத் தேடித் தேடி ஒன்றாகக் கோத்து இலக்கிய மாலையாக்கியிருக்கிறார் நூலாசிரியர்.

    இத்தொகுதியில் உள்ள பல படைப்புகள் சிறுகதைக்கே உரிய வடிவ நேர்த்தியோடு, அதிகம் வளவளக்காமல் கச்சிதமாக எழுதப்பட்டவை. ஒவ்வொரு கதையின் முடிவும் நம் மனத்தில் பலவகையான தத்துவச் சிந்தனைகளை எழுப்பும் ஆற்றல் கொண்டவை. கற்பனையை விடவும் நம்பக் கடினமான உண்மைகள் காலக் காற்றில் சாட்சியங்களோடு பதிவாகியிருப்பதை நினைத்தால் பிரமிக்காமல் இருக்க இயலாது. அச்சம், பழிவாங்கல், வீரம், தோல்வி, காதல், வஞ்சகம் என்று எத்தனை எத்தனை மன உணர்வுகள்! எழுத்தாளர் இந்த உணர்வுகளின் பின்னணியில் மூடிக் கிடக்கும் தத்துவச் சாளரங்களைத் தூசிதட்டி, நம் கண் முன்னால் திறந்து வைக்கிறார். அவர் காட்டும் வெளிச்சத்தில் இந்தக் கதைச் சாளரங்கள் வழியே பார்க்கும்போது வரலாற்றுக்கு ஒரு புதிய பரிமாணம் கிடைக்கிறது. இன்றைய மனிதன் தன் மனத்தின் உணர்வுகளைச் சமன் செய்துகொள்ள இந்தக் கடந்தகால வரலாறு கைகொடுக்கிறது. அன்பு, மன்னித்தல், சகிப்புத் தன்மை, பொறுப்பு, வருவதைப் பணிவோடு ஏற்றல் போன்ற நற்குணங்களே என்றும் மனிதனை வாழ வைப்பவை என்ற உண்மையை, இந்தக் கதைகள் மறைமுகமாய் மனத்தில், பதியச் செய்கின்றன.

    சரித்திரப் படைப்பிலக்கியத்துறை பலவீனப்பட்டிருக்கும் கால கட்டம் இது. கடின உழைப்பும் தனிவகையான மொழிநடையும் அதற்குத் தேவைப்படுவதால் பலரும் தொடத் தயங்குகிற துறையும் கூட! தற்கால இலக்கியத்தின் சரித்திரத் துறையை நிரந்தரமாய் மூடிவிடாமல் காப்பாற்றுபவர்கள் இந்த நூலாசிரியரைப் போன்றவர்களே! அருகி வரும் உயிரினங்களைக் காப்பாற்றுவதைப் போல, தமிழில் பெரிதும் அருகிவரும் சரித்திரப்படைப்பிலக்கியத் துறையையும் போஷித்துக் காப்பாற்ற வேண்டியது இன்று வாசகர்களின் கடமை.

    கௌதம நீலாம்பரன் இன்னும் இதுபோன்ற சுவாரஸ்யமான வரலாற்றுப் படைப்புகள் பலவற்றைத் தொடர்ந்து எழுதி சரித்திரம் படைப்பாராக! அவரது எழுத்தாற்றல் மேலும் வளருமாக!

    மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    டாக்டர். திருப்பூர் கிருஷ்ணன்,

    57.பி.பத்மாவதி நகர்,

    விருகம்பாக்கம், சென்னை-92.

    தொலைபேசி : 23771473.

    என்னுரை...

    ‘கதைகள் என்பதா? கட்டுரைகள் என்பதா? இந்த நூலின் கண் தொகுக்கப் பெற்றுள்ள விஷயங்களை’ என்றொரு வினா எழக்கூடும்.

    நான் சிறுகதைகள் பலவும் எழுதியுள்ளேன், கட்டுரைகள் பலவும் எழுதியுள்ளேன். இரண்டிற்கும் தனித்தனி எழுத்து நடைகள் உண்டு. அப்படி எழுதப்பட்டவை அல்ல இதன்கண் உள்ள விஷயங்கள்.

    கதைகளாக எழுதியிருந்தால், ‘சரித்திரச் சிறுகதைகள்’ என்றும், கட்டுரைகளாக எழுதியிருந்தால், ‘சரித்திரக் கட்டுரைகள்’ என்றும் குறிப்பிட்டிருக்கலாம். இவை அப்படி எழுதப்பெற்றவை அல்ல.

    இதை இத்தனை விளக்கமாகச் சொல்வதற்குக் காரணம் உண்டு.

    வரலாற்று நூல்களை வாசிக்கும்போது, மனம் தொட்ட சம்பவங்களை மையமாகக்கொண்டு நான் நூற்றுக்கும் மேற்பட்ட வரலாற்றுச் சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். பிறகு ஒரு சந்தர்ப்பத்தில், என் சிறுகதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் உள்ள மிகை மற்றும் கற்பனை அலங்காரங்களை அகற்றிவிட்டு, அருமையும் உண்மையும் ஒருங்கமைந்த சம்பவங்களை மட்டும் அவற்றின் முக்கியத்துவம் கருதி எடுத்துக்கொண்டு, சுவைபட எழுதித்

    தொகுத்தேன். அப்படி எழுதப் பெற்றவைதான் இவை. இவற்றில் பெரும்பாலானவை குமுதம் ‘ஜங்ஷன்’ இதழில் வெளியானவை. வேறு சில ஏடுகளில் வெளியானவையும் உண்டு.

    சரித்திரத்தைக் கட்டுரையாக எழுதினால், ஒரு வறட்சித் தன்மை ஏற்பட்டு விடுகிறது. படிக்க சுவாரஸ்யம் குன்றி விடுகிறது. கதைகளாக எழுதினால், ‘ஹ.... இதெல்லாம் வெறும் கற்பனை’ என்று சிலரால் புறம்தள்ளப்பட்டு விடுகின்றன. அதற்காகத்தான் இப்படியொரு மாற்று யோசனை செய்து எழுதினேன்.

    இவற்றை வாசிக்கும்போது ‘அட! இப்படியெல்லாமா நிகழ்ந்திருக்கிறது?’ என்கிற வியப்பும், வினாவும் நிச்சயம் வாசகர் மனங்களில் எழும். அப்படி எழ வேண்டும் என்பதுதான் என் அவா!

    ‘சரித்திரம் தேர்ச்சி கொள்’ என்று கட்டளையிட்டான் மகாகவி பாரதி. சரித்திரத்தை ‘வெறும் கடந்த கால நிகழ்வுகள்தானே’ என்று அலட்சியப்படுத்தும் போக்கும், ஏளனமாக விமரிசிக்கும் போக்கும் நம்மில் பலரிடையே இன்று உண்டு. இது தவறான போக்கு. சரித்திரத்தையே புரட்டிப் போட்ட எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவை மனித சமுதாயத்திற்கு என்றும் பாடமாகத் திகழ்பவை. அவற்றை நம் அடுத்த தலைமுறைகள் அறிவது மிகமிக அவசியம். பயனுள்ளவையும் கூட. மனிதகுணங்கள் எப்படியெல்லாம் இருந்திருக்கின்றன என்கிற உன்னத உண்மைகளைத்தான் அந்தச் சம்பவங்கள் நமக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1