Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Elakkia Munnodigal
Elakkia Munnodigal
Elakkia Munnodigal
Ebook176 pages1 hour

Elakkia Munnodigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறுகதை, கவிதை போன்றவற்றை இன்னும் பலர் எழுத முடியும். ஆனால் நான் சந்தித்துப் பழகிய இலக்கியவாதிகளைப் பற்றிய என் அனுபவப் பதிவை வேறு யாரும் எழுத இயலாது அல்லவா? என்மேல் அன்பைச் சொரிந்த அந்த இலக்கியவாதிகளைப் பற்றிப் பதிவுசெய்ய வேண்டியது தார்மீக ரீதியாக நானே வகுத்துக்கொண்ட என் இலக்கியக் கடமையும்கூட.
ஏராளமான உயர்தர இலக்கியவாதிகளுடன் நெருங்கிப் பழகும் பெரும்பேறு எனக்கு இயற்கையில் கிடைத்த உன்னதமான வாய்ப்பு. அந்த வாய்ப்பின் பயனை எல்லா வாசகர்களும் அடையும் வகையில் அவர்களைப் பற்றிய என் அனுபவப் பதிவை எழுதுவதில் மிகுந்த திருப்தி அடைகிறேன்.
இந்த மனநிறைவை எனக்குச் சாத்தியமாக்கியிருக்கிறது ‘இலக்கிய முன்னோடிகள்’ என்ற இந்நூல்.
‘இலக்கிய முன்னோடிகள்’ என்ற இந்நூல் 31 இலக்கியவாதிகளைப் பற்றிய தனித்தனிக் கட்டுரைகளின் தொகுப்பு. கு.அழகிரிசாமி எழுதிய ‘நான் கண்ட எழுத்தாளர்கள், அறிஞர் வ.ரா. எழுதிய ‘தமிழ்ப் பெரியார்கள்’, வையாபுரிப்பிள்ளை எழுதிய‘தமிழ்ச் சுடர்மணிகள்’என்று இதே பாணியில் அமைந்த சில நூல்கள் முன்னரே தமிழில் உண்டு. அந்த நூல்களையெல்லாம் படித்து அனுபவித்து வியந்த நான், இப்படியொரு நூலை எழுதவேண்டும் என்று தீவிரமாக எண்ணி வந்ததுண்டு.
இந்நூலில் எழுதப்பட்டுள்ள இலக்கிய முன்னோடிகளைத் தவிர இன்னும் பலருடனும் நெருங்கிப் பழகியிருக்கிறேன். சந்தர்ப்பம் நேரும்போது அவர்களைப் பற்றிய என் நினைவுகளையும் பதிவுசெய்வேன்.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580139006266
Elakkia Munnodigal

Read more from Dr. Thiruppur Krishnan

Related to Elakkia Munnodigal

Related ebooks

Reviews for Elakkia Munnodigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Elakkia Munnodigal - Dr. Thiruppur Krishnan

    http://www.pustaka.co.in

    இலக்கிய முன்னோடிகள்

    Elakkia Munnodigal

    Author:

    டாக்டர். திருப்பூர் கிருஷ்ணன்

    Dr. Thiruppur Krishnan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/dr-thiruppur-krishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கடமையை ஆற்றிய நிறைவு!

    1. மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவர்...

    2. எழுத்துலகில் பழுத்த பழம்...

    3. தவறு செய்தோர் மீதும் பரிவுகாட்டும் மேதை...

    4. தற்கால இலக்கியத்தில் ஓர் ஆன்மிகவாதி...

    5. அன்புமயமான தேசீயவாதி...

    6. பத்திரிகைத் துறையில் ஒரு சகாப்தம்

    7. சிலேடைச் செல்வர்

    8. எளிமையின் வடிவம்...

    9. இலக்கிய உலகில் ஓர் ஓவியர்...

    10. பாசத்தைப் பொழிந்த முதியவர்

    11. பல்துறைச் சாதனையாளர்

    12. கண்ணியமான குடும்பக்கதை எழுத்தாளர்...

    13. அபாரமான சாதனையாளர்...

    14. மற்றவர்களை உயரவைத்த ஏணி...

    15. அன்பு மயமான நண்பர்...

    16. தத்துவக் கவிதையில் தனியிடம் பெற்றவர்...

    17. மூதறிஞர் ராஜாஜியின் பக்தர்...

    18. பாவேந்தர் நந்தவனத்தில் பூத்த முல்லை...

    19. அன்பே வடிவானவர்...

    20. தமிழுக்குக் கல்கி கொடுத்த கொடை...

    21. எழுத்தாளர்களை ஒருங்கிணைத்த எழுத்தாளர்...

    22. சொல்லாமல் சொல்லிப் புரியவைப்பவர்...

    23. இருவரில் ஒருவர்...

    24. மொழிபெயர்ப்புத் துறையில் ஒரு மாணிக்கம்...

    25. எல்லோரையும் நேசித்த பண்பாளர்...

    26. வளர்ந்த குழந்தை...

    27. படிப்பதையே வாழ்வாகக் கொண்டிருந்தவர்...

    28. சரத் சந்திரரைத் தமிழில் தந்தவர்...

    29. எளிமைக்கு ஓர் இலக்கணம்...

    30. அன்புக்கு ஏங்கும் மனிதர்...

    31. வரலாறு படைத்து வரலாறானவர்

    சமர்ப்பணம்

    அம்மாவுக்கும் அப்பாவுக்கும்...

    திருமதி கே. ஜானகி, அமரர் பி.எஸ். சுப்பிரமணியம்

    முன்னுரை

    கடமையை ஆற்றிய நிறைவு!

    முழுநேர எழுத்தாளனாக இயங்கும்போது எத்தனையோ விஷயங்களை எழுத வேண்டியிருக்கிறது.

    நமக்கு மகிழ்ச்சி தராத விஷயங்களை நாம் எழுதப் போவதில்லை. நமக்கே பிடிப்பில்லாத துறைகளைப் பற்றி நாம் கருத்துக் கூறப் போவதில்லை.

    அவரவரும் அவரவர் வகையில் அவரவர் பாணியில் எழுத்தாளர்களாக இயங்கி வருகிறார்கள். அவரவர் கொள்கை சார்ந்து. கோட்பாடு சார்ந்து.

    நான் காந்திய நெறிகளில் நாட்டமுள்ளவன். இலக்கியம் சார்ந்தும் ஆன்மீகம் சார்ந்தும் எழுதி வருபவன். இலக்கியத்திலும் கவிதை, சிறுகதை, நாவல் எனப் படைப்பிலக்கியமாகவும் படைப்பிலக்கியம் அல்லாத கட்டுரைகளாகவும் நிறைய எழுதுகிறேன்.

    ஒவ்வொன்றை எழுதி முடித்தபிறகும் ஒவ்வொரு வகையான மன உணர்வு தோன்றுகிறது. ஒன்றைப் போல் இன்னொன்று இராது.

    சிறந்த சிறுகதையை எழுதியதாக உணரும் போது ஒரு மகிழ்ச்சி தோன்றும். சிறந்த கவிதையை எழுதியதாக உணரும்போது ஓர் ஆனந்தம் தோன்றும். இவையெல்லாம் படைப்பிலக்கியத்தைப் படைப்பதால் விளையும் பரவசங்கள்.

    ஆனால் படைப்பிலக்கியம் அல்லாத பல கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதுகிறேன். அத்தகைய எழுத்தில், நான் சந்தித்துப் பழகிய இலக்கியவாதிகளைப் பற்றி எழுதும் போது ஏற்படும் உணர்வு வித்தியாசமானது. அது இன்பம், ஆனந்தம், மகிழ்ச்சி என்றெல்லாம் சொல்லப்படும் உணர்வல்ல. ஒரு கடமையை ஆற்றிய நிறைவு அது.

    சிறுகதை, கவிதை போன்றவற்றை இன்னும் பலர் எழுத முடியும். ஆனால் நான் சந்தித்துப் பழகிய இலக்கியவாதிகளைப் பற்றிய என் அனுபவப் பதிவை வேறு யாரும் எழுத இயலாது அல்லவா? என்மேல் அன்பைச் சொரிந்த அந்த இலக்கியவாதிகளைப் பற்றிப் பதிவுசெய்ய வேண்டியது தார்மீக ரீதியாக நானே வகுத்துக்கொண்ட என் இலக்கியக் கடமையும்கூட.

    ஏராளமான உயர்தர இலக்கியவாதிகளுடன் நெருங்கிப் பழகும் பெரும்பேறு எனக்கு இயற்கையில் கிடைத்த உன்னதமான வாய்ப்பு. அந்த வாய்ப்பின் பயனை எல்லா வாசகர்களும் அடையும் வகையில் அவர்களைப் பற்றிய என் அனுபவப் பதிவை எழுதுவதில் மிகுந்த திருப்தி அடைகிறேன்.

    இந்த மனநிறைவை எனக்குச் சாத்தியமாக்கியிருக்கிறது‘இலக்கிய முன்னோடிகள்’என்ற இந்நூல். கல்கியில் தொடராக வெளிவந்த‘சுவடுகள்’ நூலை எழுதியபோது ஏற்பட்ட அதே வகையான நிறைவை இந்த நூலை எழுதியபோதும் அடைந்திருக்கிறேன்.

    ‘சுவடுகள்’ தனித்தனியே நேர்ந்த பல சம்பவங்களைத் தொடுத்து எழுதப்பட்ட தொடர். அதிலும் ஏராளமான இலக்கியவாதிகள் வருகிறார்கள். என்றாலும் அந்நூல் சம்பவங்களின் தொகுப்பே அன்றி தனித்த இலக்கியவாதிகளைப் பற்றிய தனிக் கட்டுரைகளின் தொகுப்பல்ல.

    ‘இலக்கிய முன்னோடிகள்’ என்ற இந்நூல் 31 இலக்கியவாதிகளைப் பற்றிய தனித்தனிக் கட்டுரைகளின் தொகுப்பு. கு.அழகிரிசாமி எழுதிய ‘நான் கண்ட எழுத்தாளர்கள், அறிஞர் வ.ரா. எழுதிய ‘தமிழ்ப் பெரியார்கள்’, வையாபுரிப்பிள்ளை எழுதிய‘தமிழ்ச் சுடர்மணிகள்’என்று இதே பாணியில் அமைந்த சில நூல்கள் முன்னரே தமிழில் உண்டு. அந்த நூல்களையெல்லாம் படித்து அனுபவித்து வியந்த நான், இப்படியொரு நூலை எழுதவேண்டும் என்று தீவிரமாக எண்ணி வந்ததுண்டு.

    என்றாலும் வாழ்வின் அன்றாடப் பரபரப்பில் யாராவது எழுதச்சொல்லிக் கேட்டுக்கொண்டாலன்றி நூல் எழுத அவகாசம் ஏது? என் இனிய நண்பரும் சிறந்த சிறுகதை எழுத்தாளருமான ஆர்.வெங்கடேஷ் தமிழ் ஸிஃபி டாட் காமில் சிறிதுகாலம் ஆசிரியராய் இருந்தார். அப்போது அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் ஸிஃபி டாட்காம் என்ற இணைய தளத்தில், வாரம் ஒரு கட்டுரை வீதம் பல மாதங்கள் தொடர்ந்து நான் எழுதியவற்றின் நூலாக்கம் இது.

    உலகின் பல பாகங்களிலிருந்தும் இந்தக் கட்டுரைகளை வாசித்துவிட்டு எனக்கு மின்னஞ்சல்கள் வந்தன. ஆனால் தமிழகத்துப் பத்திரிகை வாசகர்களில் எத்தனைபேர் கணிப்பொறி மூலம் இந்தக் கட்டுரைகளை ஏற்கெனவே படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இந்நூலைப் படிக்கும் தமிழ்ப் பத்திரிகை வாசகர்கள் தங்கள் கருத்துகளை எனக்கு எழுதுவார்களானால் மகிழ்வேன்.

    நான் விரும்பிய துறையில் இயங்கவும் அந்தத் துறைசார்ந்த சாதனையாளர்களுடன் நெருங்கிப் பழகவும் கிடைத்த என் வாழ்வே எனக்கொரு பேறு. அந்தப் பேற்றின் பெருமையைத் தொடர்ந்து எனக்கு உணர வைப்பவர்கள் என் எழுத்தின் வாசகர்கள். அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

    இந்நூலில் எழுதப்பட்டுள்ள இலக்கிய முன்னோடிகளைத் தவிர இன்னும் பலருடனும் நெருங்கிப் பழகியிருக்கிறேன். சந்தர்ப்பம் நேரும்போது அவர்களைப் பற்றிய என் நினைவுகளையும் பதிவுசெய்வேன்.

    என் நூல்களைத் தொடர்ந்து வாங்கி உற்சாகப்படுத்தும் இலக்கிய அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த அன்பும் நன்றியும்.

    அன்புமறவாத, திருப்பூர் கிருஷ்ணன்.

    1. மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவர்...

    சி.சு. செல்லப்பா

    சி.சு.செல்லப்பா சென்னை திருவல்லிக்கேணியில், திருவட்டீஸ்வரன் பேட்டையில் வசித்துவந்த காலம். தன்னந்தனிக் குடித்தனம். அவரே சமையல். அவரது மனைவி பெங்களூரில் மகனுடன் வசித்து வந்தார்.

    நான் வழக்கம்போல் செல்லப்பாவைப் பார்க்கப் போயிருந்தேன். மாலை நாலு நாலரைக்குப் போனால் இரவெல்லாம் பேச்சு, பேச்சு, பேச்சுத்தான். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மேல் இரவுப் பேருந்து பிடித்து வீடுவந்து சேர்வேன். எழுதுவதில் அவருக்கு ஈடுபாடு இருந்தது போலவே உரையாடுவதிலும் கடைசிவரை அவருக்கு வற்றாத ஈடுபாடு இருந்தது.

    அன்று பி.எஸ்.ராமையாவைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். ராமையாவைப் பற்றிச் சொல்லும்போது அவர் முகமெல்லாம் பளபளவென ஜொலிக்கும். ராமையாவிடம் அவர் கொண்டிருந்த அன்பு மட்டுமல்ல, ராமையாவின் இலக்கியத்தின் மேல் அவர் வைத்திருந்த மதிப்பும் கூட விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது.

    ராமையா படைப்புகள் அத்தனையையும் ஒன்றுவிடாமல் புத்தகமாக வெளியிட வேண்டும் என்றார் என்னிடம். ராமையா உன்னதமான எழுத்தாளர் என்பதையும் ஆகச் சிறந்த படைப்புகள் பலவற்றையும் எழுதியிருக்கிறார் என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் ‘குங்குமப்பொட்டுக் குமாரசாமி’என்றெல்லாம் அவர் எழுதிய படைப்புகள் சாதாரணமானவை, அவரின் பொருளாதாரத் தேவைக்காக அவர் எழுதிக் குவித்தவை. அவற்றை நீக்கிவிட்டு, காலத்தை வென்று நிற்கும் மற்ற ராமையா படைப்புகளைச் செல்லப்பாவே தேர்வு செய்து தொகுக்க வேண்டும் என்பது என் வாதம்.

    திடீரென்று செல்லப்பா சுவரைப் பார்த்துத் திரும்பி உட்கார்ந்துகொண்டு விட்டார். அறையில் ஏற்கெனவே இரண்டு பேர் இருந்தோம். இப்போது மூன்று பேர் ஆகிவிட்டோம். நான், அவர், சுவர்.

    ஏன் சுவரைப் பார்த்து உட்கார்ந்துவிட்டீர்கள்?

    ஏ சுவரே...வந்திருக்கும் இந்த ஆளுடன் பேசுவதை விட எனக்கு உன்னுடன் பேசுவது திருப்தியாக இருக்கிறது.

    ஆமாம். ஏனென்றால் சுவருக்கு அபிப்ராயங்கள் கிடையாதல்லவா?

    ராமையாவை விமர்சிக்கும் நபருடன் எனக்குப் பேச்சு வார்த்தை கிடையாது.

    நாம் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்வோம். பி.எஸ்.ராமையாவை விட்டுவிட்டு மற்றவற்றைப் பற்றி மட்டும் இனிமேல் பேசுவோம்.

    சரி என்று சொல்லிவிட்டு செல்லப்பா மறுபடி என் பக்கமாகத் திரும்பி உட்கார்ந்துகொண்டார். என் உதட்டோரத்தில் சிரிப்பு ஒளிந்து கொண்டிருந்ததை அவர் கவனித்திருக்க வேண்டும். என்னடா பண்ணுவேன். உன்னோட பேசாம என்னால் இருக்க முடியாதேடா என்றார். என் மனம் நெகிழ்ந்தது.

    எழுத்து பத்திரிகையை விடாப்பிடியாக நடத்திய பெருமைக்குரியவர். ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்ட வாடிவாசல், நனவோடை உத்தியில் வளரும் ஜீவனாம்சம் போன்ற குறிப்பிடத்தக்க நாவல்களைத் தமிழுக்குத் தந்தவர். ஸரஸாவின் பொம்மை, மணல் வீடு, அறுபது, சத்யாக்ரகி போன்ற மணிமணியான சிறுகதைகளை உள்ளடக்கிய பற்பல சிறுகதைத் தொகுதிகளின் ஆசிரியர். தினமணிகதிர் என்ற பெயரைக் கதிருக்குச் சூட்டியவர் அவர்தான். தினமணியின் முன்னாள் துணையாசிரியர். ஜெயபாரதி, தமிழ்நாடு, பாரத தேவி, சந்திரோதயம் ஆகிய இதழ்களிலும் பணிபுரிந்தவர். மணிக்கொடி எழுத்தாளர். நவீன கவிதை இயக்கத்திற்கு முன்னோடி, ஆனாலும் பிடிவாதமும் முரட்டுத்தனமும் உள்ள வளர்ந்த குழந்தை அவர். அப்பழுக்கற்ற தூய

    Enjoying the preview?
    Page 1 of 1