Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sri Annai
Sri Annai
Sri Annai
Ebook124 pages43 minutes

Sri Annai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

ஸ்ரீ அன்னையின் அருளை வேண்டி... அரவிந்த அமுதம் என்ற தொடரைக் கல்கியில் எழுதினேன். ஸ்ரீ அன்னை என்ற இந்த நூலாக்கத்திற்குக் காரணமான தொடர் மங்கையர் மலரில் வெளிவந்தது. ஸ்ரீ அன்னை ஒரு மங்கை என்பதால் மங்கையர் மலரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார் போலும்! ஏதேனும் ஒரு பத்திரிகையில் தொடராக எழுதும் நிர்பந்தம் இருந்தாலன்றி இப்படிப்பட்ட நூல்களை எழுத சாத்தியம் இல்லை. மங்கையர் மலர் ஆசிரியர் திருமதி லட்சுமி நடராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தத் தொடரை நான் எழுதும் காலங்களில் மங்கையர் மலர் பொறுப்பாசிரியர் திருமதி அனுராதா சேகர் அடிக்கடி என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டார். அடுத்தடுத்த இதழ்களில் எந்தெந்த மலர்களைப் பற்றிய குறிப்பை நான் எழுதப் போகிறேன் என்பதை முன்கூட்டியே விசாரித்தறிந்தார். அந்த மலரின் வண்ணப்படம் தொடரில் இடம்பெறுமாறு பார்த்துக்கொண்டார். அன்னையின் பொருத்தமான பல புகைப்படங்களைத் தேடித் தேடி வெளியிட்டார். ஸ்ரீஅன்னைக்கு இந்தத் தொடரை எழுதியதன் மூலம் நான் செய்த சேவையை விட, அக்கறையோடு இத்தொடரை வெளியிட்டதன் மூலம் அவர் செய்த சேவை இன்னும் பெரிது. அவருக்கு ஸ்ரீஅன்னையின் பூரண கடாட்சம் கிட்டட்டும். நாம் எழுதும் விஷயங்கள் மிகுந்த கவனத்தோடு வெளியிடப்படுவதை உணரும் போது நம்மையறியாமல் ஓர் உற்சாகம் தோன்றுவது இயல்பு. இந்தத் தொடரின் வெற்றிக்கு சகோதரி அனுராதா சேகர் அளித்துவந்த உற்சாகம் ஒரு முக்கியக் காரணம். அவருக்கு என் சிறப்பு நன்றி.

நான் அரவிந்தர் மையங்களில் சொற்பொழிவாற்றி வருகிறேன். இந்தத் தொடர் வெளிவந்த காலங்களில் நான் சொற்பொழிவாற்றச் சென்ற இடங்களிலெல்லாம் பல வாசகர்கள் என்னிடம் ஸ்ரீ அன்னை சரிதம் தொடர்பாகப் பல விஷயங்களைப் பற்றிக் கேட்டுத் தெளிவு பெற்றார்கள். சிலர் திடீர் திடீர் என இரவுநேரங்களில் கூட தங்கள் குடும்பப் பிரச்னைகளைச் சொல்லி எந்த மலரை வைத்து ஸ்ரீஅன்னையை வழிபட வேண்டும் என்று கேட்டதுண்டு. அப்போதெல்லாம் மகிழ்ச்சியோடும் நெகிழ்ச்சியோடும் அவர்களுக்கு நான் சில அறிவுரைகளைச் சொன்னதும் உண்டு. இதற்கெல்லாம் எந்தத் தகுதியும் எனக்கில்லை. என்னிடம் கேள்வி கேட்ட வாசகர்களைப் போல நானும் ஸ்ரீ அன்னையின் சக அடியவன், அவ்வளவே.

வெவ்வேறு மதங்களைச் சார்ந்த கணவனும் மனைவியும் வழிபாட்டிற்காக இரு வீடுகளிலும் தடை சொல்லாத ஒரே கோயிலுக்கு இணைந்து வர விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட ஓர் ஆன்மீகக் கடவுளும் ஆன்மீகக் கோயிலும் இன்று அவசியமாகிறது. ஸ்ரீஅன்னை நெறி ஜாதி மத வேறுபாடுகளைப் பொருட்படுத்தாதது. ஸ்ரீஅன்னையும் அரவிந்தரும் போதித்த நெறி மதங்கடந்த ஆன்மீக நெறி. அவர்கள் எல்லா மதங்களுக்கும் பொதுவான கடவுளர்கள். அரவிந்தர் மையங்கள் அனைத்து மக்களுக்குமான வழிபாட்டுத் தலங்கள். எதிர்காலத்தில் ஸ்ரீ அன்னை நெறியின் தேவை இன்றுள்ளதை விட இன்னும் அதிகமாகும். ஸ்ரீஅன்னையைத் தேடிவரும் அடியவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகுவதை இப்போது காண்கிறோம். இந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகமாவதை எதிர்காலம் காணும்.

மதங்கள் ஆன்மிகத்தின் பாதைகளே. ஒவ்வொரு மதமும் அதனதன் அளவில் உயர்ந்தனவே. இலக்கை விட்டுவிட்டுப் பாதையைப் பற்றிச் சண்டை போட்டுக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள் மக்கள். இப்போது மனம் சண்டையில் மயங்கி பயணம் மேற்கொள்ளாமல் தங்கள் தங்கள் பாதைகளில் நின்ற இடத்திலேயே நிற்கிறது. இதுவா ஆன்மிகம்? இது ஆன்மிகமல்ல. ஆன்மிகத்திற்கும் மதச் சண்டைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அடுத்தவர் மதத்தை விடத் தன் மதம் தான் உயர்ந்தது என்று எவனொருவன் நினைத்தாலும் அவன் ஆன்மிகவாதியே அல்ல. எல்லா நதிகளும் கடலில் கலக்கின்றன. எல்லா மதங்களும் இறுதியில் இறைவனைச் சென்று சேர்கின்றன என்று பரமஹம்சர் தெளிவாக அறிவித்துவிட்டார். பரமஹம்சர் அவதரித்து இத்தனை காலம் சென்ற பின்னும் இன்னமும் மதக் கலவரங்கள் தோன்றுகின்றன என்றால், ஜாதிச் சண்டைகள் ஏற்படுகின்றன என்றால் நம் மக்களின் மதியீனத்தை என்ன சொல்ல? ஒவ்வொரு புத்தகத்தைப் படிப்பதற்கும் ஒரு தகுதி இருக்க வேண்டும். விஞ்ஞானப் புத்தகத்தைப் படிக்க ஒருவனுக்கு விஞ்ஞான அடிப்படைகள் தெரிந்திருக்க வேண்டும். அதுபோல இந்தப் புத்தகத்தை யாரெல்லாம் படிப்பதற்குத் தகுதி உடையவர்கள்? ஜாதி மதங்களில் ஏற்றத் தாழ்வு காணாதவர்கள், தீண்டாமை ஒரு கொடிய பாவம் என்பதை உணர்ந்தவர்கள், பெண்களும் ஆன்மிகத்தில் ஆணுக்கு நிகராகவும் மேலாகவும் உயரலாம் என்ற கோட்பாட்டை ஏற்பவர்கள் என இவர்களெல்லாம் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் தகுதி படைத்தவர்கள். அப்படிப்பட்டவர்களின் இதயங்களில் இந்தப் புத்தகம் மேலும் வெளிச்சம் ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். ஸ்ரீஅன்னையின் பரிபூரண அருள் இந்த நூலின் வாசகர்களுக்குக் கிட்டுமாக. என்றும் ஸ்ரீஅன்னையின் நல்லருளை வேண்டி, திருப்பூர் கிருஷ்ணன்.

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580139006264
Sri Annai

Read more from Dr. Thiruppur Krishnan

Related to Sri Annai

Related ebooks

Reviews for Sri Annai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    ஆன்மீகமே சிறப்பு .அதிலும் திருப்பூர் குமரன் எழுத்து சிறப்பு.அதிலும் ஸ்ரீ அன்னை மிக மிகச் சிறப்பு???

Book preview

Sri Annai - Dr. Thiruppur Krishnan

http://www.pustaka.co.in

ஸ்ரீ அன்னை

Sri Annai

Author:

டாக்டர். திருப்பூர் கிருஷ்ணன்

Dr. Thiruppur Krishnan

For more books

http://www.pustaka.co.in/home/author/dr-thiruppur-krishnan

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

சமர்ப்பணம்

முன்னுரை

அனுப்புங்கள் ஸ்ரீஅன்னைக்கு ஒரு மின்னஞ்சல்!

அன்னை அவதரித்தார்!

தெய்வம் தந்த பாதுகாப்பு!

மனக்கப்பலில் வீசும் புயல்!

ஸ்ரீ அன்னையைச் சந்தித்தார் தாகூர்!

ஸ்ரீ அரவிந்தருக்குக் கடிதங்கள் எழுதினார் அன்னை!

அரவிந்தரைச் சந்தித்தார் அன்னை!

பிரான்ஸ் திரும்பினார் ஸ்ரீஅன்னை!

புதுச்சேரியில் நிரந்தரமாய்த் தங்கினார் ஸ்ரீ அன்னை!

10.கைவனுக்கும் அருளிய நெஞ்சம்!

மனித உருவெடுத்த பராசக்தியே ஸ்ரீ அன்னை!

எங்கும் நிறைந்தார் ஸ்ரீஅன்னை!

ஸ்ரீ அன்னையின் புனித வாழ்வு: சில முக்கிய நிகழ்ச்சிகள்:

அரவிந்த ஆசிரமத்தின் விசேஷ தினங்கள்:

சமர்ப்பணம்

அம்மா திருமதி கே.ஜானகி அவர்களுக்கும்...

அப்பா அமரர் பி.எஸ்.சுப்பிரமணியம் அவர்களுக்கும்...

*****

முன்னுரை

ஸ்ரீ அன்னையின் அருளை வேண்டி...

அரவிந்த அமுதம் என்ற தொடரைக் கல்கியில் எழுதினேன். ஸ்ரீ அன்னை என்ற இந்த நூலாக்கத்திற்குக் காரணமான தொடர் மங்கையர் மலரில் வெளிவந்தது. ஸ்ரீ அன்னை ஒரு மங்கை என்பதால் மங்கையர் மலரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார் போலும்!

ஏதேனும் ஒரு பத்திரிகையில் தொடராக எழுதும் நிர்பந்தம் இருந்தாலன்றி இப்படிப்பட்ட நூல்களை எழுத சாத்தியம் இல்லை. மங்கையர் மலர் ஆசிரியர் திருமதி லட்சுமி நடராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

இந்தத் தொடரை நான் எழுதும் காலங்களில் மங்கையர் மலர் பொறுப்பாசிரியர் திருமதி அனுராதா சேகர் அடிக்கடி என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டார். அடுத்தடுத்த இதழ்களில் எந்தெந்த மலர்களைப் பற்றிய குறிப்பை நான் எழுதப் போகிறேன் என்பதை முன்கூட்டியே விசாரித்தறிந்தார். அந்த மலரின் வண்ணப்படம் தொடரில் இடம்பெறுமாறு பார்த்துக்கொண்டார். அன்னையின் பொருத்தமான பல புகைப்படங்களைத் தேடித் தேடி வெளியிட்டார்.

ஸ்ரீஅன்னைக்கு இந்தத் தொடரை எழுதியதன் மூலம் நான் செய்த சேவையை விட, அக்கறையோடு இத்தொடரை வெளியிட்டதன் மூலம் அவர் செய்த சேவை இன்னும் பெரிது. அவருக்கு ஸ்ரீஅன்னையின் பூரண கடாட்சம் கிட்டட்டும்.

நாம் எழுதும் விஷயங்கள் மிகுந்த கவனத்தோடு வெளியிடப்படுவதை உணரும் போது நம்மையறியாமல் ஓர் உற்சாகம் தோன்றுவது இயல்பு. இந்தத் தொடரின் வெற்றிக்கு சகோதரி அனுராதா சேகர் அளித்துவந்த உற்சாகம் ஒரு முக்கியக் காரணம். அவருக்கு என் சிறப்பு நன்றி.

இந்தப் புத்தகத்தின் அட்டையில் இடம்பெற்றிருக்கும் ஸ்ரீஅன்னையின் அழகிய வண்ணப் படத்தை வரைந்தவர் என் இனிய நண்பரான ஓவியர் வேதா. சூதுவாது ஏதும் அறியாத குழந்தை மனம் படைத்த ஒரு விந்தையான மனிதர் அவர். வணிக மயமாகிவிட்ட உலகில் வணிக நோக்கின்றி வாழும் நல்லவர். எந்த ஓவியத்தை வரைந்தாலும் அதைத் தன் அதிகபட்ச உழைப்பைக் கொடுத்து வரையும் சிரத்தை அவரிடம் எப்போதும் உண்டு. ஏனோதானோ என்று தன் எந்தக் கலைப்படைப்பையும் அவர் உருவாக்கியதில்லை. ஓவியர் மணியம்செல்வனின் சீடர்.

ஆன்மிக நூலுக்கு அட்டைப்படம் வரைய வேண்டுமானால் அதற்குப் பண்பு ரீதியாகவும் அந்த ஓவியருக்குத் தகுதி வேண்டும் என்று கருதுபவன் நான். இதுபோன்ற ஓர் ஆன்மிக நூலுக்குப் படம் வரைய கலைத்தகுதி மட்டுமல்லாமல் குணத்தகுதியும் முழுமையாகக் கொண்டவர் அவர். அவரே ஓர் அன்னை அடியவர். அவருக்கும் என் நன்றி.

நான் அரவிந்தர் மையங்களில் சொற்பொழிவாற்றி வருகிறேன். இந்தத் தொடர் வெளிவந்த காலங்களில் நான் சொற்பொழிவாற்றச் சென்ற இடங்களிலெல்லாம் பல வாசகர்கள் என்னிடம் ஸ்ரீ அன்னை சரிதம் தொடர்பாகப் பல விஷயங்களைப் பற்றிக் கேட்டுத் தெளிவு பெற்றார்கள். சிலர் திடீர் திடீர் என இரவுநேரங்களில் கூட தங்கள் குடும்பப் பிரச்னைகளைச் சொல்லி எந்த மலரை வைத்து ஸ்ரீஅன்னையை வழிபட வேண்டும் என்று கேட்டதுண்டு. அப்போதெல்லாம் மகிழ்ச்சியோடும் நெகிழ்ச்சியோடும் அவர்களுக்கு நான் சில அறிவுரைகளைச் சொன்னதும் உண்டு. இதற்கெல்லாம் எந்தத் தகுதியும் எனக்கில்லை. என்னிடம் கேள்வி கேட்ட வாசகர்களைப் போல நானும் ஸ்ரீ அன்னையின் சக அடியவன், அவ்வளவே.

எட்டாம் வகுப்புப் படிக்கும் பெண் தூங்கிக் கொண்டிருக்கிறாள். அப்படித்தான் நினைத்தார்கள் அந்தப் பெண்ணின் அப்பாவும் அம்மாவும். நள்ளிரவில் அந்தத் தந்தை மெல்லிய குரலில் தன் வியாபாரம் நொடித்துப் போனதைத் தன் மனைவியிடம் சொல்லி வருந்தியிருக்கிறார். நம் ஒரே மகளை எப்படி வளர்த்துப் படிக்கவைத்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போகிறோம்!என்று உருகிய அந்தப் பாசமிக்க குரலைக் காது கொடுத்துக் கேட்டுவிட்டாள் அந்தப் பெண். பக்குவமும் முதிர்ச்சியும் அற்ற அந்தப் பெண்‘உங்களுக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை’என்று கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டு விட்டாள்.

அந்தப் பெற்றோரின் மனம் என்ன பாடுபடும்? தங்கள் ஒரே மகளை இழந்தாலும் கூட தங்கள் உயிர் இருக்கும் வரை அவர்கள் தொடர்ந்து வாழ்ந்தாக வேண்டுமே? குற்றக் குறுகுறுப்பிலிருந்து தப்பிப்பது எப்படி? 

இப்போது நொடித்த வணிகம் மறுபடி செழித்துவிட்டது. ஆனால் தங்கள் பெண்ணின் மரணத்திற்குத் தாங்களே தான் காரணமோ என்று அவர்கள் மனம் அனலில் பட்ட புழுவாய்த் துடிக்கிறது. கழுவாய் உண்டா இதற்கு? என்ன பிராயச்சித்தம் செய்யலாம்? அவர்கள் விழிகளில் அருவியாய் நீர்கொட்டக் கேட்கும்போது மனம் பதறுகிறது. 

நடந்த சம்பவத்திற்கு நீங்கள் காரணமில்லை. அது முதிர்ச்சியற்ற அந்தப் பெண்ணின் விதி. போகட்டும். உங்கள் பெண்ணின் வயதேயுள்ள ஓர் ஏழைப் பெண்ணை உங்கள் பெண்ணாய்க் கருதுங்கள். அந்தப் பெண்ணின் கல்விச் செலவு முழுவதையும் நீங்களே ஏற்று அவளைப் படிக்க வையுங்கள். உங்களுக்கு மனச் சமாதானம் கிட்டும்! இதுதான் அன்னை காட்டும் நெறி! என்று பதில் சொல்லும்போது அவர்கள் மனம் மெல்லச் சமனப்படுகிறது. அவர்கள் கண்களில் ஏதோ ஒரு பிராயச்சித்தத்தைக் கண்டுகொண்டுவிட்ட நிறைவு.

ஓர் ஏழைப்

Enjoying the preview?
Page 1 of 1